Thursday, June 03, 2010

ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா

ப‌திவுல‌கில் கால‌டி எடுத்து வைத்து கிட்ட‌த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌மாகிவிட்ட‌து. எழுத‌ ஆர‌ம்பித்த‌ புதிதில், விஷ‌ய‌மே இல்லாத‌ விஷ‌ய‌ங்க‌ளையெல்லாம் எழுதி ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் ப‌டிக்க‌ச் சொல்லி இம்சை செய்த‌தை, இப்போது நினைத்து பார்க்கையில் சிரிப்புதான் வ‌ருகிற‌து. என்ன‌ எழுத‌வேண்டும், எப்ப‌டி எழுத‌வேண்டும் என்று எந்த‌ யோச‌னையும், ப‌யிற்சியும் கிடையாது. அவ்வ‌ப்போது என்ன‌ தோன்றுகிற‌தோ, அதை அப்ப‌டியே கிறுக்கியிருக்கிறேன். உண்மையில் சொல்ல‌ப்போனால், சென்ற‌ வ‌ருட‌த்தில் எழுதிய‌ ப‌ல‌ ப‌திவுக‌ளை, ப‌திவு என்று சொல்வ‌த‌ற்கே ம‌ன‌சாட்சி உறுத்துகிற‌து.

ஏதாவ‌து உருப்ப‌டியா எழுத‌லாம்ல‌ என்று ந‌ட்புக‌ள் அக்க‌றையுட‌ன் இடிந்துரைக்கும்போது உண‌ர்கிறேன், நாம்‌ இன்னும் உருப்ப‌டியாக‌ எழுத‌ ஆர‌ம்பிக்க‌வில்லை என்று. அச‌ர‌ வைக்கும் வார்த்தை பிர‌யோக‌ங்க‌ள் எல்லாம் கைகூடாம‌லிருக்கிற‌து இன்னும். என்னுடைய‌ புத்த‌க‌ வாசிப்ப‌னுப‌வ‌ம் அப்ப‌டி. சுஜாதா. இல்லையென்றால் குமுத‌ம், ஆன‌ந்த‌ விக‌ட‌ன். இதைத் தாண்டி வேறேதும் வாசிக்க‌ விரும்பிய‌தில்லை. இன்னும் கூட‌ நிறைய‌ குறைக‌ளிருக்கிற‌து. அவ‌சிய‌ம் முய‌ற்சி செய்கிறேன், கொஞ்ச‌மாவ‌து என்னை மாற்றிக்கொள்ள‌....

*************************

2011 ச‌ட்ட‌ச‌பை தேர்த‌லில் எங்க‌ளையும் கூட்ட‌ணியில் சேர்த்துக்கொண்டு, வ‌ர‌விருக்கும் மாநில‌ங்கள‌வைத் தேர்த‌லில் எங்க‌ள் வேட்பாள‌ருக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டும் என்று க‌லைஞருக்கு க‌டித‌ம் எழுதியிருக்கிறார் ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ். மாநில‌ங்க‌ள‌வை வேட்பாள‌ர்? வேறு யார், அன்பும‌ணி ராம‌தாஸ்தான்.

த‌ற்போதிருக்கும் அர‌சிய‌ல் சூழ்நிலையில், அதிமுக‌வுட‌ன் விஜ‌ய‌காந்த் கூட்ட‌ணி அமைப்ப‌த‌ற்கான‌ வாய்ப்பிருப்ப‌தாக‌த் தெரிகிற‌து. அத‌னால் எப்ப‌டியும் அதிமுக‌ அணியில் பாம‌க‌ சேர‌முடியாது. இப்போதைக்கு பாம‌க‌வின‌ருக்கு ஒரே ஆப‌த்பாந்த‌வ‌ன் திமுக‌தான். இதை உண‌ர்ந்து கொண்ட‌ க‌லைஞர், 2011 ச‌ட்ட‌ச‌பை தேர்த‌லுக்கு கூட்ட‌ணியில் சேர்த்துக்கொள்கிறோம், ஆனால் அத‌ன்பின் வ‌ர‌விருக்கும் மாநில‌ங்க‌ள‌வைத் தேர்த‌லில்தான் உங்க‌ள் வேட்பாள‌ருக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ முடியும் என்று ம‌ருத்துவ‌ருக்கே அதிர்ச்சி வைத்திய‌ம் கொடுத்துவிட்டார். சாண‌க்கிய‌த்த‌ன‌ம் - ச‌த்திய‌மாக‌ க‌லைஞருக்கு பொருந்த‌க்கூடிய‌ வார்த்தைதான்.

*************************

ஜிம்பாப்வேயிட‌ம் தோற்கும் அள‌வுக்கு, 'திற‌மையுட‌ன்' இருக்கின்ற‌ன‌ர் ந‌ம் இந்திய‌ கிரிக்கெட் அணியின‌ர். என்ன‌தான், இது இர‌ண்டாம் நிலை அணிதானே என்று ச‌ப்பைக் க‌ட்டு க‌ட்டினாலும், தோற்ற‌தென்ன‌ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக‌வா? இதுக்கே இப்ப‌டி என்றால், அடுத்த‌ வ‌ருட‌ம் உல‌க‌க் கோப்பை. என்ன‌ செய்ய‌ப்போகின்ற‌ன‌ர்?

இன்றைய‌ நில‌வ‌ர‌ப்ப‌டி, லியாண்ட‌ர் ப‌ய‌ஸ் & லோஹி ஜோடி, ஃபிரெஞ்ச் ஓப்ப‌ன் ஆட‌வ‌ர் இர‌ட்டைய‌ர் பிரிவில், அரையிறுதிக்கு த‌குதி பெற்றுள்ள‌ன‌ர். காலிறுதியில், வெகு சுல‌ப‌மாக‌ நேர் செட்க‌ளில் வென்றிருக்கின்ற‌ன‌ர். லியாண்ட‌ர் லோஹியின் இதே‌ ஆட்ட‌ம் தொட‌ருமேயானால், இறுதிப்போட்டியில் கோப்பை நிச்ச‌ய‌ம்! பார்ப்போம் என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்று...

*************************ஞாயிற‌ன்று 'சிங்க‌ம்' பார்த்தேன். சூர்யா ப‌க்க‌ம் பக்க‌மாக‌ வ‌ச‌ன‌ம் பேசுகிறார். அவ‌ர் ஓங்கி விடும் ஒரு குத்திலேயே அடியாட்க‌ள் முப்ப‌த‌டி த‌ள்ளி போய் விழுகிறார்க‌ள். 'அனுஷ்கா அழ‌காயிருக்கிறார்' இவ்விர‌ண்டு வார்த்தைக‌ளுக்கு ந‌டுவே 'மிக‌' என்ப‌தை சேர்க்காம‌ல் விட்டால் பெரும் த‌வ‌று செய்த‌வ‌னாவேன். அதனால் 'மிக‌'வை சேர்த்து ப‌டித்துவிடுங்க‌ள். அதிலும் 'காத‌ல் வ‌ந்தாலே' பாட‌லில் முக‌த்தில் ரியாக்ஷ‌ன் இல்லாம‌ல் ஆடும் காட்சி 'வாவ்'வென‌ ர‌சிக்கும் ர‌க‌ம். பிர‌காஷ்ராஜ் வ‌ழ‌க்க‌ம் போல். பாட‌ல் ம‌ற்றும் காத‌ல் காட்சிக‌ளில் சூர்யா அனுஷ்கா உய‌ர‌ வித்தியாச‌ம் தெரிய‌த்தான் செய்கிற‌து. ஆனால் உருவ‌ அமைப்பை வைத்து கிண்ட‌ல‌டிப்ப‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. அப்ப‌டி கிண்ட‌ல‌டிக்க‌ ஆர‌ம்பித்தால், த‌மிழ் ந‌டிக‌ர்க‌ளில், க‌ம‌ல்ஹாச‌ன், அஜித் த‌விர‌ ம‌ற்ற‌ எல்லோரையும் வ‌றுத்தெடுக்க‌லாம். ஏன், க‌ம‌லை கூட‌ நால‌டி தூர‌த்தில் அருகே பார்த்திருக்கிறேன், அலுவ‌ல‌க‌ம் அருகில் த‌சாவ‌தார‌ம் ப‌ட‌ப்பிடிப்பு நட‌ந்த‌போது. க‌ம‌லும் ச‌ற்று உய‌ர‌ம் க‌ம்மிதான். அவ‌ர் உய‌ர‌மான‌ சிம்ர‌னோடு ந‌டிக்க‌வில்லையா என்ன‌?


ப‌ட‌த்தின் முத‌ல் பாதி கொஞ்ச‌ம் இழுவை. இர‌ண்டாம் பாதி, பல‌ லாஜிக் மீற‌ல்க‌ள் இருந்தாலும் செம‌ விறுவிறு. விஜ‌ய்யின் ஐம்பதாவ‌து ப‌ட‌த்திற்காக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌தையாம் இது. ஒரு வெற்றிப்ப‌ட‌த்தை விஜ‌ய் இழ‌ந்துவிட்டார் என்றே சொல்வேன். 'சிங்க‌ம்' உறுமுவ‌தை தைரிய‌மாக‌ ஒரு முறை பார்க்க‌லாம். ஒரு முறைதான்.


*************************


உசுரே போகுதே உசுரே போகுதே, உத‌ட்டை நீ கொஞ்ச‌ம் சுழிக்கையில‌ என்று உசுரை எடுக்கிறார் கார்த்திக். பாட‌ல் கேட்கும்போதே ப‌ட‌த்தை எப்ப‌டா பார்ப்போம் என்று ஏங்குகிற‌து ம‌ன‌ம். ஜுன் 18 அன்று ரிலீஸ். எப்ப‌டியாவ‌து முத‌ல் மூன்று நாட்க‌ளுக்குள் பார்த்துவிட‌ வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கிறேன். ம்ம்ம்....ச‌த்ய‌ம் ஆண்ட‌வ‌ர் ஆன்லைனில் வ‌ர‌ம‌ளிக்க‌ வேண்டும்.


*************************


விளையாட்டு வினையாகும் என்ப‌த‌ற்கு ச‌ரியான‌ உதார‌ண‌ம், ச‌மீப‌த்திய‌ ப‌திவுல‌க‌ நிகழ்வு. விளையாட்டாய் கிண்ட‌ல் செய்து ஒரு ப‌திவு, ப‌திலுக்கு ஒரு க‌தை என‌ ஆர‌ம்பித்து, இப்போது ஆணாதிக்க‌ம், ஜாதி வெறி, ந‌ம்பிக்கை துரோக‌ம் என்று திசை மாறி ப‌ய‌ணித்துக்கொண்டிருக்கிற‌து.


ந‌ர்சிம் அவ‌ர்க‌ளின் க‌தை மிக‌ மிக‌ மிக‌ மிக‌த் த‌வ‌று. அத‌ற்கு அவ‌ர் இப்போது ப‌திவ‌ர் ச‌ந்த‌ன‌முல்லையிட‌ம் ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பும் கேட்டுள்ளார். இன்னும் என்ன‌ வேண்டும்? அவ‌ர் எழுதிய‌ வார்த்தைக‌ளை விட‌ இப்போது அவ‌ரைப் ப‌ற்றி எழுதுகையில் ப‌ல‌ர் உப‌யோகிக்கும் வார்த்தைக‌ள் ப‌டு கீழ்த்த‌ர‌மான‌து.


நான‌றிந்த‌வ‌ரை ந‌ர்சிம் அக்க‌தையில் எழுதிய‌து போன்ற‌ இழிசொற்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர‌ல்ல‌ர். அவ‌ரை அவ்வார்த்தைக‌ளை பிர‌யோகிக்கும் அள‌வுக்கு தூண்டிய‌து யார், என்ன‌ என்ப‌தெல்லாம் விடுத்து, இது நாள் வ‌ரை காத்திருந்து இப்போது இரை சிக்கிய‌து போல், ஜாதியை கையிலெடுத்திருக்கின்ற‌ன‌ர் அவ‌ரின் எதிர்ப்பாள‌ர்க‌ள். இதில் எங்கெய்யா வ‌ந்த‌து ஜாதி? அவ‌ர் உப‌யோகித்த‌ வார்த்தைக‌ளை அவ‌ர் சார்ந்த‌ ஜாதியின‌ர் ம‌ட்டும்தான் உப‌யோகிக்கின்ற‌ன‌ரா? உங்க‌ள் ஜாதியின‌ர் உப‌யோகித்த‌தே இல்லையா?


ப‌திவுல‌க‌ம் அறிமுக‌மான‌போது, மிக்க‌ ப‌டித்த‌வ‌ர்க‌ளும், த‌மிழ் ஆர்வ‌ல‌ர்க‌ளும் நிறைந்திருக்கின்ற‌ன‌ர் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிற‌து, நாக‌ரீக‌ம‌ற்ற‌வ‌ர்க‌ளும், ஜாதி வெறி பிடித்த‌வ‌ர்க‌ளும் உட‌ன் இருக்கின்ற‌ன‌ர் என்று. 2010ல் இருக்கிறோம், ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா என்று சொன்ன‌ ம‌னித‌னின் பிற‌ந்த‌ நாள் நூற்றாண்டு விழாவையே கொண்டாடி முடித்துவிட்டோம். ஆனால் இன்னும்..........திருந்தி தொலைங்க‌ய்யா!


13 comments:

 1. பண்ணறது எல்லாம் பண்ணிட்டு மன்னிப்பு கேட்ட சரியாய் விடுமா தலை?
  சொன்ன வார்த்தையே திரும்பி வாங்கிக் கொள்ள முடியாத நிலையில் எவ்வளவு கீழா யோசிச்சு இருந்தா இப்படி எழுதி இருக்க தூண்டும்?
  மனிதன் எப்ப தெரியுமா மனிதனா தெரியமுடியும்? தன்னை ஒருவன் தரம் தாழ்த்தி பேசினாலும் தன் நாவை அடக்கி உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும்போது தான்!
  ஒரு வேளை பாதிக்கப்பட்ட பெண் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முனைந்தால் அதை வரவேற்கிறேன்!

  ReplyDelete
 2. // ச‌த்ய‌ம் ஆண்ட‌வ‌ர் ஆன்லைனில் வ‌ர‌ம‌ளிக்க‌ வேண்டும்//
  ரெம்ப கஷ்டம்.. :) அஞ்சு நிமிஷம்தான்.. ஃபுல் ஆகிடும்.. வேற ஏதாவது ஆன்லைன் புக்கிங் இல்லாத குட்டி தியேட்டர் போங்க..

  // 2010ல் இருக்கிறோம், ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா என்று சொன்ன‌ ம‌னித‌னின் பிற‌ந்த‌ நாள் நூற்றாண்டு விழாவையே கொண்டாடி முடித்துவிட்டோம். ஆனால் இன்னும்..........திருந்தி தொலைங்க‌ய்யா! //
  நச்.. ஜாதி வேறுபாடு போகணும்னா, முதல்ல நாம எல்லாரும் நம்ம ஜாதியை மறக்கணும்.. வெளியே சொல்லிக்கறதை நிறுத்தணும்.. நாலு வருஷமா என்னோட ரூம் மேட்டா இருக்கற நண்பனோட ஜாதி சத்தியமா தெரியாதுங்க..

  ReplyDelete
 3. "ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா"

  thevaiyaana pathivuu.

  http://sirippupolice.blogspot.com/
  ithaiyum padinga.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. நச்.. ஜாதி வேறுபாடு போகணும்னா, முதல்ல நாம எல்லாரும் நம்ம ஜாதியை மறக்கணும்.. வெளியே சொல்லிக்கறதை நிறுத்தணும்.. நாலு வருஷமா என்னோட ரூம் மேட்டா இருக்கற நண்பனோட ஜாதி சத்தியமா தெரியாதுங்க..
  வாழ்த்துக்கள் ஜெய்.அப்படியே தொடருங்கள்.

  ReplyDelete
 6. ஐயா
  பார்ப்பானி பார்ப்பானி என்று ஒவ்வொரு பதிவிலும் பிளிறிப் பிளிறித் திரியும் வக்கிரங்கள் தான் ஜாதி வளர்ப்பின் ஊற்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  மற்ற ஜாதிகளை சொல்வது தவறென்றால் இந்த ஜாதியையும் சொல்வது தவறு தான்.

  மற்ற ஜாதியை சொல்லும் போது கவலையுறும் நீங்கள் இவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதேன்.

  அவர்களுக் ஒரு சட்டம்
  இவர்களுக்கு ஒரு சட்டமா? ஏன் இந்த மாற்றாந்தாய் மனம்?

  பார்ப்பானத் திட்டு வக்கிரங்கள் இருக்கும் வரை மற்ற ஜாதிகளும் இருந்தே தீரும், தவிர்க்கர் முடியாது.

  ReplyDelete
 7. அருமை... ரகு


  //நான‌றிந்த‌வ‌ரை ந‌ர்சிம் அக்க‌தையில் எழுதிய‌து போன்ற‌ இழிசொற்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர‌ல்ல‌ர். அவ‌ரை அவ்வார்த்தைக‌ளை பிர‌யோகிக்கும் அள‌வுக்கு தூண்டிய‌து யார், என்ன‌//

  ReplyDelete
 8. ந‌ன்றி ஷ‌ர்புதீன், நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்

  ந‌ன்றி நாளும் ந‌ல‌மே விளைய‌ட்டும், அப்போ த‌வ‌றை உண‌ர்ந்து ம‌ன்னிப்பு கேட்டாலும் விட‌மாட்டீங்க‌ இல்லியா? ந‌ல்லாருக்கு சார் உங்க‌ அப்ரோச்

  கை கொடுங்க‌ ஜெய், உங்க‌ ரூம் மேட் க‌ண்டிப்பா புண்ணிய‌ம் ப‌ண்ணிய‌வ‌ர் இப்ப‌டியொரு ந‌ண்ப‌ன் கிடைச்ச‌துக்கு :)

  ந‌ன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா), அவ‌சிய‌ம் வாசிக்கிறேன்

  ReplyDelete
 9. ந‌ன்றி சிவா

  அனானி ஐயா, நான் ஜாதியே தேவையில்லைன்னு சொல்றேன், நீங்க‌ ஒரு ஜாதியின‌ரையே குறை சொல்லிட்டு இருக்கீங்க‌. இத‌ ப‌த்தி மேலும் பேச‌ணும்னா, உண்மையான‌ பெய‌ரோட‌ வாங்க‌

  ந‌ன்றி ரியாஸ்

  ReplyDelete
 10. அரசியல், விளையாட்டு, சினிமா, பதிவுலகம் என்று எல்லாம் கலந்த கலவையாய் எழுதி இருந்தாலும் பதிவின் தலைப்பும்.... அதை முடிக்கும் கடைசி வரிகளும்... ம்ம் என்ன சொல்ற‌து அதைப்பற்றி?

  உசுரே போகுதே பாடலை பார்க்க நானும் காத்திட்டு இருக்கேன் ரகு.லவ்லி சாங்!

  ReplyDelete
 11. ரகு.உங்கபக்கம் வந்துபார்வையிட்டாச்சி.

  சா[ஜா]திகள் இல்லையடி பாப்பா

  ”மீண்டும் வேண்டுமோ” என்ற தலைப்பில் நானும் ஒரு கவியெழுதினேன் அதுதான் நினைவுக்கு வந்தது..
  http://niroodai.blogspot.com/2010/02/blog-post_20.html

  ReplyDelete
 12. Sujatha kathaikal niraya padipeerkala raghu? Kathayum Kathapathirangalin peyarkalum athanai prathibalikirathu, Nandro thodarungal ungal ezhuthu paniyai.

  ReplyDelete