Tuesday, June 08, 2010

டிச‌ம்ப‌ர் 2104....சென்னை

டிச‌ம்ப‌ர் 2104
சென்னை

சுன‌ந்த‌னின் ச‌ட்டைப் பையில் இருந்த குளிர் க‌ண்ணாடி, "க்ருபாள‌னி காலிங், க்ருபாள‌னி காலிங்" என்று அல‌றிய‌து. சுன‌ந்த‌ன் ஸ்பீக்க‌ர் இருந்த‌ அக்க‌ண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டான். க‌ண்ணாடி பெட்டியை திற‌க்க‌, அதிலிருந்த‌ திரையில் விஞ்ஞானி க்ருபாள‌னி பேச‌ ஆர‌ம்பித்தார்.

"சுன‌ந்த‌ன், எப்ப‌டி போயிட்டிருக்கு கிறிஸ்தும‌ஸ்லாம்?"

"இட்ஸ் வொண்ட‌ர்ஃபுல் மேம்"

"தேர் ஈஸ் எ கான்ஃபிட‌ன்ஷிய‌ல் திங், ஐ திங் உங்க‌ள ம‌ட்டும்தான் ந‌ம்பி சொல்ல‌முடியும். ஹ‌வ் லாங் இட் வுட் டேக் டூ ரீச் மை லேப்?"

"மேம், மை ஒய்ஃப் அண்ட் கிட் ஆர் ஹிய‌ர், தே வில் கில் மீ இஃப் ஐ க‌ம் டூ ஒர்க் டுடே"

"ஹாஹ்ஹா...இட்ஸ் ஓகே, அவ‌ங்க‌ளையும் கூட்டிட்டு வாங்க‌, மிட்டுவை பார்த்து ரொம்ப‌ நாளாச்சு"

க்ருபாள‌னி, வ‌ய‌து 56. சுன‌ந்த‌ன் ப‌ணிபுரிந்து கொண்டிருக்கும் ப்ராஜ‌க்ட்டின் சூப்ப‌ர்வைச‌ர். பொதுவாக‌ ஒருபோதும் விடுமுறை தின‌ங்க‌ளில் ப‌ணியாள‌ர்க‌ளை வ‌ர‌ச்சொல்லாத‌வ‌ர், இன்று ஏன் த‌ன்னை வ‌ர‌ச்சொல்கிறார்...அதுவும் குடும்ப‌த்தின‌ருட‌ன் இருக்கிறேன் என்று சொல்லியும். பொறுமையாக‌ நான்சிக்கு விஷ‌ய‌த்தைச் சொல்லி, அவ‌ளை ச‌மாதான‌ப்ப‌டுத்தி, குழ‌ந்தை மிட்டுவோடு சுன‌ந்த‌ன் கிள‌ம்பினான். காருக்குள் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்ய‌...டேஷ்போர்டில் பீப் பீப் என்ற‌ ஒலி வ‌ர‌ ஆர‌ம்பித்த‌து.

"வாட் நான்சி, காருக்கு பேட்ட‌ரி போட‌லியா, பாரு 'பேட்ட‌ரி லோ'ன்னு மெஸேஜ் டிஸ்ப்ளே ஆகுது"

"சுன‌ன், இட்ஸ் நாட் மை ஜாப், உங்க‌ கார்..நீங்க‌தான் பாத்துக்க‌ணும்..வேணும்னா வாங்க‌ என்னோட‌ கார்ல‌ ஃபுல் பேட்ட‌ரி இருக்கு"

"இட்ஸ் ஓகே, இப்போ இருக்க‌ற‌ பேட்ட‌ரி எப்ப‌டியும் டூ அவ‌ர்ஸ் வ‌ரும், க்ருபாள‌னி மேட‌ம் அபார்ட்மெண்ட் இங்க‌ருந்து ஹாஃப் அன் ஹ‌வ‌ர்தானே, வீ கேன் மேனேஜ்"

காரை கிள‌ப்பினான். விடுமுறை தின‌மாத‌லால், அன்று வானில் ட்ராஃபிக் குறைவாக‌வே காண‌ப்ப‌ட்ட‌து. 'யூ ஷுட் ஃப்ளை ஃபாஸ்ட‌ர் டேடி' என்று மிட்டு க‌த்த‌...ஏற‌க்குறைய‌ மிர‌ட்ட‌வே ஆர‌ம்பித்தாள். கார் சீறிப் ப‌ற‌ந்த‌து. சில நொடிக‌ளில் 'TOO FAST, FLY SLOW' என்று மெஸேஜ் டிஸ்ப்ளே ஆக‌, வேக‌த்தை குறைத்துக் கொண்டு மிட்டுவை பார்த்தான். அவ‌ள் முறைத்துக்கொண்டிருந்தாள்.

க்ருபாள‌னி வீட்டை அடைந்தார்க‌ள். வீடு என்று சொல்ல‌ முடியாது அதை. அறுநூற்றி ஐம்ப‌து ஃப்ளோர்க‌ள் கொண்ட‌ ஒரு அபார்ட்மெண்ட் அது. க்ருபாள‌னி 20.04 எண்ணுடைய‌ ஃப்ளோரில் த‌ங்கியிருந்தார். வ‌ர‌வேற்ப‌ரையில் பாதியை பிரித்து ஒரு ஆராய்ச்சிக்கூட‌த்தை அமைத்திருந்தார். "ஹ‌வ் லாங் இட் வுட் டேக் டூ ரீச் மை லேப்" என்ற‌ கேள்வியிலேயே ஏதோ ஒரு புதுவித‌மான‌ ஆராய்ச்சியைப் ப‌ற்றி பேச‌த்தான் த‌ன்னை அழைத்துள்ளார் என்ப‌தை சுன‌ந்த‌ன் புரிந்துகொண்டான். க்ருபாள‌னியே ஆர‌ம்பித்தார்.

"ஹாலிடேல‌ குடும்ப‌த்தோட‌ உங்க‌ள‌ வ‌ர‌வ‌ழைச்ச‌துக்கு ஸாரி, ப‌ட் இட்ஸ் ரிய‌லி இம்பார்ட்ட‌ண்ட்"

"ஐ கேன் அண்ட‌ர்ஸ்டேன்ட் மேம்"

"தேங்க்ஸ்....நான்சி, வான்ட் டூ ஹாவ் ச‌ம் காஸ்ட்லி ஹெச்2ஓ? யூ மிட்டு?" இருவ‌ரும் வேண்டாமென்று த‌லையாட்ட‌, அவ‌ர் தொட‌ர்ந்தார். "ஓகே, இன்றைய‌ தின‌ம் என்னோட‌ வாழ்க்கையில் ம‌ற‌க்க‌ முடியாத‌ தின‌ம். ரொம்ப‌ நாளா நான் ப‌ர்ச‌ன‌லா ஈடுப‌ட்டிருந்த‌ ஒரு ஆராய்ச்சி இன்னைக்கு ச‌க்ஸ‌ஸ் ஆகியிருக்கு. அதை உங்க‌ளோட‌ ஷேர் ப‌ண்ணிக்க‌ற‌துக்காக‌த்தான் உங்க‌ளை வ‌ர‌ச்சொன்னேன்"

"ரிய‌லி? என்ன‌ மேம் அது?"

"இட்ஸ் எ டைம் மெஷின்!"

சுன‌ந்த‌னும், நான்சியும் ஒரே குர‌லில் "டைம் மெஷின்?!" என்று ஒரு கேள்வியையும், ஆச்ச‌ரிய‌த்தையும் ஒரு சேர‌ வெளிப்ப‌டுத்தின‌ர்.

பின்பு இருப‌து நிமிட‌ங்க‌ள் டைம் மெஷினை ப‌ற்றி ஒரு நீண்ட‌ லெக்ச‌ரை க்ருபாள‌னி கொடுக்க‌, சுன‌ந்த‌னும், நான்சியும் ஆர்வ‌த்துட‌ன் கேட்டுக்கொண்டிருந்த‌ன‌ர். க‌டைசியாக சொன்னார்....

"முத‌ல் முறை டைம் மெஷினில் ட்ராவ‌ல் ப‌ண்ண‌க்கூடிய‌ அதிர்ஷ்ட‌ம் உன‌க்கு, நான்சிக்கு, மிட்டுக்கு கிடைச்சிருக்கு"

"மேம் ஆர் யு சீரிய‌ஸ்?"

"யெஸ்"

"நீங்க‌?"

"இல்ல‌, நான் இங்க‌ருந்து என்னோட் ஸ்க்ரீன்ல‌ நீங்க‌ ட்ராவ‌ல் ப‌ண்ற‌ தேதியையும், இட‌ங்க‌ளையும் பார்த்துகிட்டிருப்பேன், ஐ ஹாவ் டூ நோட் ஸ‌ம் ஸ்ட‌ஃப். ஆர் யூ ரெடி டூ கோ பேக் டூ தி பாஸ்ட் வித் யுவ‌ர் ஃபேமிலி?"

"வித் ப்ள‌ஷ‌ர் மேம், திஸ் ஈஸ் ரிய‌லி எக்ஸைட்டிங்!"

சுன‌ந்த‌னால் மிட்டுவுக்கு புரிய‌வைக்க‌ முடிய‌வில்லை. ஆனால் ஒரு டூர் போகிறோம் என்ற‌வுட‌ன் வ‌ருவ‌த‌ற்கு அவ‌ளும் ஆர்வ‌த்துட‌ன் த‌யாரானாள். மூவ‌ரும் உருளை வ‌டிவ‌த்திலிருந்த‌ அந்த‌ மெஷினில் ஏறி உள்ளே அம‌ர்ந்தார்க‌ள். நாளைய‌ அறிவிய‌ல் உல‌க‌ம், த‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌ வ‌ர‌லாறை ப‌திவு செய்யும் என்ற‌ ந‌ம்பிக்கையோடு ப‌ய‌ண‌ப்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். வெளியே த‌ன் அறையில் அம‌ர்ந்திருந்த‌ க்ருபாள‌னி மைக்கில் பேச‌, அது டைம் மெஷின் உள்ளேயிருந்த‌ ஸ்பீக்க‌ரில் கேட்ட‌து.

"சுன‌ந்த‌ன், டைம் மெஷினில் இது என்னுடைய‌ முத‌ல் முய‌ற்சி. உங்க‌ளோடு‌ ம‌னைவியும், குழ‌ந்தையும் இருப்ப‌தால் ரிஸ்க் எடுப்ப‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. அத‌னால் முத‌லில் 50 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால், அதாவ‌து 2054க்கு ப‌ய‌ண‌ம் செய்யுங்க‌. உங்க‌ளுக்கு முன்னாடி இருக்க‌ற‌ கீபோர்ட்ல‌ 2..0..5..4 டைப் ப‌ண்ணி 'GO' ப‌ட்ட‌னை ப்ர‌ஸ் ப‌ண்ணுங்க‌. உங்க‌ ப‌ய‌ண‌த்தை நான் இங்கிருந்து மானிட்ட‌ரில் பார்த்துகிட்டிருப்பேன்...ஆல் த‌ பெஸ்ட்"

"தேங்க்ஸ் மேம்"

2054 என்று டைப் செய்துவிட்டு, 'GO' ப‌ட்ட‌னை ப்ர‌ஸ் செய்தான் சுன‌ந்த‌ன். பெரிய‌ள‌வில் ச‌த்த‌மின்றி டைம் மெஷின் கிள‌ம்ப‌ ஆர‌ம்பித்த‌து...விரைவில் நிக‌ழ‌ப்போவ‌தை அப்போது யாரும் அறிந்திருக்க‌வில்லை....க்ருபாள‌னி உட்ப‌ட‌!

முடிவு அடுத்த‌ (10.06.2010) ப‌திவில்....


11 comments:

 1. விஞ்ஞானக் கதைகளெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா ரகு. கலக்குங்க.

  ReplyDelete
 2. நல்ல கதை.. முடிவுக்காக காத்திருக்கிறேன் ரகு...

  ReplyDelete
 3. காஸ்ட்லி H2O; ரசித்தேன். கடைசி பாராவில் சில வரிகள் ("அப்படி நடக்குமென")தேவையில்லை என நினைக்கிறேன் ; இதனை கொஞ்ச நாள் கழித்து நீங்களே சற்று rewrite செய்தால் சிறப்பாக வரும். Good attempt. Interesting. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வானத்துல டிராஃபிக் கம்மியா இருந்துச்சா..!

  ஹேய்...என்னா மேன் நடக்குது இங்க..?

  ReplyDelete
 5. //விக்னேஷ்வரி said...
  விஞ்ஞானக் கதைகளெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா ரகு. கலக்குங்க
  ..//

  கலக்குங்க !!!

  :)

  ReplyDelete
 6. ந‌ன்றி விக்கி

  ந‌ன்றி ஜெய், நாளைக்கே போஸ்ட் போட்டுட‌றேன்

  ReplyDelete
 7. ந‌ன்றி மோக‌ன், உங்க‌ள் க‌ருத்துக‌ள் நிச்ச‌ய‌மாக‌ ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும், க‌வ‌ன‌த்தில் கொள்கிறேன், மிக்க‌ ந‌ன்றி

  Thanks LK

  ReplyDelete
 8. ந‌ன்றி ராஜு, ந‌ட‌க்க‌ல‌ண்ணே, ப‌ற‌க்குது ;)

  ந‌ன்றி நேச‌மித்ர‌ன் :)

  ReplyDelete
 9. இப்போது ப‌டித்து பார்க்கையில், கொஞ்ச‌மும் சுவார‌ஸ்யம் இன்றி ரொம்ப‌வே போர‌டிக்கிற‌து இப்புனைவு. நான் ம‌ன‌தில் நினைத்த‌து ஒன்று, எழுத்தில் கொண்டு வ‌ந்த‌து ஒன்று. விஞ்ஞான‌ சிறுக‌தை என்ப‌து நான் இதுவ‌ரை முய‌ற்சி செய்திராத‌து. சுவார‌ஸ்ய‌த்தை கொடுக்க‌ வேண்டிய‌ இட‌த்தில் கொடுக்க‌ த‌வ‌றிவிட்ட‌தாக‌வே நினைக்கிறேன். மேம்ப‌டுத்திக்கொள்ள‌ நிறைய‌ இருக்கிற‌து. அவ‌சிய‌ம் முய‌ற்சிக்கிறேன்

  ReplyDelete
 10. நல்லாவேயிருக்கு ரகு

  ReplyDelete