Sunday, November 29, 2009

காலேஜ் க‌ட் அடித்து பார்த்த‌ ஒரே, முத‌ல் ம‌ற்றும் க‌டைசி திரைப்ப‌ட‌ம்


அனேக‌மா எல்லாருக்குமே காலேஜ் க‌ட் அடிச்சிட்டு ப‌ட‌ம் பாத்த‌ அனுப‌வ‌ம் இருக்கும்னு நினைக்கிறேன். நான் காலேஜ் ப‌டிக்கும்போது க‌ட் அடிச்சி பாத்த‌து ஒரே ஒரு ப‌ட‌ம்தான். அதுக்காக‌ என்னை ரொம்ப ப‌டிப்ஸ்னுலாம் க‌ற்ப‌னை ப‌ண்ணி அவ‌மான‌ப்ப‌டுத்திடாதீங்க‌. நான் ஒரு ஆவ‌ரேஜ் ஸ்டுட‌ண்ட்தான். ப்ப்பா, இத‌ சொல்லும்போதுதான் என்னா ஒரு பெருமை!

மேட்ட‌ருக்கு வ‌ர்றேன். காலேஜ் ப‌டிச்சிட்டிருந்த‌ப்போதான் "உயிரே" ப‌ட‌ம் ரிலீஸ் ஆச்சு. ப‌ட‌ம் ரிலீஸ் ஆக‌ற‌துக்கு முன்னாடியே ஆடியோ கேச‌ட் (அப்போலாம் CDன்னா என்ன‌ன்னு கேட்டா, ABக்கு அப்புற‌ம் வ‌ருமே, அதானேன்னு சொல்ற‌ ரேஞ்சுல‌ இருந்தேன்) வாங்கி வீட்டுல‌ போட்டு ப‌க்க‌த்துல‌ நாலு வீட்டுக்கு கேக்குற‌ மாதிரி ச‌வுண்டு வெச்சு, அராஜ‌க‌ம் பண்ணிகிட்டிருந்தேன்.

ம‌ணிர‌த்ன‌ம், ர‌ஹ்மான், ஷாருக்கான் - மூணு பேருமே என்னோட‌ ஃபேவ‌ரைட்ஸ். விட‌ முடியுமா இந்த‌ ப‌ட‌த்த‌. ப‌ஸ் ஸ்டாப்ல‌ காலேஜ் ப‌ஸ் வேற‌ நிக்குது. இன்னும் கொஞ்ச‌ நேர‌த்துல‌ ப‌ஸ் ஃபுல்லான‌வுடனே எடுத்துடுவாங்க‌. வ‌ர்ற‌ வ‌ழியில‌ "உயிரே" போஸ்ட‌ர்லாம் பாத்த‌து வேற‌ ம‌ன‌சு அடிச்சுக்குது. 'உயிர் காப்பான் தோழ‌ன்'னு சொல்லுவாங்க‌ இல்லியா, அதுபோல‌ 'உயிரே' பாப்போம் வாடான்னான் ஒரு தோழ‌ன்.

அவ்ளோதான், ஓகே இன்னைக்கு பாத்துடுவோம்னு முடிவு ப‌ண்ணேன். எடுத்துட்டு போன‌ நோட், டிப‌ன் பாக்ஸ் ரெண்டுத்தையும் காலேஜ் போற‌ இன்னொரு ஃப்ரெண்டுகிட்ட‌ குடுத்துட்டேன். அப்புற‌ம்தான் உறைச்சுது. காலேஜ் ப‌டிக்கும்போதும் எங்க‌ளுக்கு யூனிஃபார்ம் உண்டு. இப்ப‌டியே தியேட்ட‌ருக்கு போனா ந‌ம்ம‌ள‌ க‌ட் அடிச்சிட்டு வ‌ந்துருக்கானுங்க‌ன்னு க‌ண்டுபுடிச்சிட‌மாட்டாங்க‌? ஆமா, க‌ண்டுபுடிக்க‌ட்டுமே, என்ன‌ ந‌ம்ம‌ள‌ கைது ப‌ண்ணி விசார‌ணை க‌மிஷ‌னா வெக்க‌போறாங்க‌.

தியேட்ட‌ருக்கு காலேஜ் யூனிஃபார்ம்லேயே போயாச்சு. அங்க‌ போனா ஊர்ல‌ இருக்க‌ற‌ எல்லா காலேஜ்ல‌யிருந்தும் ப‌ச‌ங்க‌ வ‌ந்துருக்காங்க‌. கூட்ட‌த்துல‌ எப்ப‌டியோ என் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச‌வ‌ர் ஒருத்த‌ர் நின்னுட்டிருந்தார். அவ‌ர் கைல‌ காசு குடுத்து டிக்கெட் வாங்கிகிட்டு தியேட்ட‌ர் உள்ள‌ போறோம். ம‌னசுக்குள்ளே செம த்ரில்லிங்! ஃப‌ர்ஸ்ட் டைம் காலேஜ் க‌ட் அடிச்சிட்டு வ‌ந்துருக்கோம்ல‌. நாங்க‌ போகும்போதுதான் "தையா தையா" பாட்டு ஆர‌ம்பிச்சுது. கிட்ட‌த‌ட்ட‌ 30, 40 செக‌ண்ட் பாட்டே கேக்க‌ல‌. ப‌ச‌ங்க‌ விசில் ச‌த்த‌ம்தான். வாவ்! ப‌ச‌ங்க‌ சும்மா என்ன‌மா என்ஜாய் பண்ணுறாங்க‌!

அதுக்க‌ப்புற‌ம்தான், என்ன‌டா இது ம‌றுப‌டியும் தீவிர‌வாத‌மான்னு ஆயிடுச்சு. ஆனாலும் ப‌ட‌ம் ஒர‌ள‌வுக்கு ஓகேங்க‌ற‌ மாதிரிதான் இருந்த‌து. ஆனா நிறைய பேருக்கு புடிக்க‌ல‌. ப்ட‌ம் முடிஞ்ச‌தும் அவ‌ன‌வ‌ன் க‌மெண்ட்டா அடிச்சு த‌ள்றானுங்க‌.

ப‌ட‌ம் முடிச்சு வெளியே வ‌ந்தா அடுத்த‌ ஷோவுக்கு டிக்கெட் வாங்குற‌துக்கு என்னோட‌ மாமா ஒருத்த‌ர் லைன்ல‌ நிக்குறார். அவ‌ரும் என்னை பாத்துட்டார். அதான் எங்க‌ யூனிஃபார்மே காட்டி குடுக்குதே. 'ச‌ரி போ போ'ன்னு அவ‌ரும் த‌லைய‌ ஆட்ட‌, 'அப்பாடா க்ரேட் எஸ்கேப்'னு கொஞ்ச‌ம் ம‌ன‌சு ச‌மாதான‌ம் ஆச்சு. வெளியே வ‌ந்தா என் ஏஜ் குரூப்லேயே இருக்க‌ற‌ என்னோட‌ ரிலேட்டிவ் பைய‌ன் அடுத்த‌ ஷோவுக்கு போற‌துக்காக‌ என்ட்ரி குடுக்க‌றார். அவ‌ர் ப‌டிப்ஸ் வேற‌, அத‌னால‌ எங்க‌ ரிலேட்டிவ்ஸ்கிட்ட சாருக்கு ந‌ல்ல‌ பேர்.

என‌க்கு அவ‌ர‌ (இப்போ க‌ல்யாண‌ம் ஆகி செட்டில் ஆயிட்டார், அத‌னால‌ 'அவ‌ன்' வேணாம், 'அவ‌ர்'னே வெச்சுக்குவோம்) பாத்த‌துமே சாக்க்காயிட்டேன். "நீயா நீயா நீயா" ம‌ன‌சுக்குள்ளே echo எஃபெக்ட். அவ‌ர் கூலா கேக்குறார், "ப‌ட‌ம் ந‌ல்லாருக்கா?". "ஆங், ப‌ர‌வால்ல‌"ன்னேன்.

ப‌ட‌ம் விட்ட‌தும் நேரா வீட்டுக்கு வ‌ந்துட்டேன். என்னை தியேட்ட‌ர்ல‌ பாத்த‌வ‌ங்க‌ வீட்ல‌ போட்டுகுடுத்துட்டா என்ன‌ ப‌ண்ற‌து? ச‌ரி நாம‌ளே ஒத்துக்குவோம்னு அம்மாகிட்ட‌ சொல்லிட்டேன். "என்ன‌ப்பா நீ இந்த‌ மாதிரிலாமா ப‌ண்ற‌து?"ன்னு நான் ஏதோ இந்திய‌ ராணுவ‌ ர‌க‌சிய‌த்த‌ பாகிஸ்தானுக்கு சொல்லிட்ட‌ மாதிரி ரியாக்ச‌ன் குடுத்தாங்க‌. ச‌ரி மேட்ட‌ர் எப்ப‌டியும் அப்பாகிட்ட‌ போகும்னு கூலா விட்டுட்டேன். ம‌றுநாள் அப்பா அம்மாகிட்ட‌ சொல்லியிருக்க்கார், "அவ‌ன் வாரா வார‌ம் ஞாயித்துக்கிழ‌மை ஒரு ப‌ட‌ம் போக‌ட்டும், வேணாம்னு சொல்ல‌ல‌, ஆனா இந்த‌ மாதிரி காலேஜுக்கு லீவு போட்டுட்டு போக‌வேணாம்னு சொல்லு". ம்ம்ம், என்ன‌ ப‌ண்ற‌து, செண்டிமெண்ட‌ல் அட்டாக். நானும் ச‌ரின்னு விட்டுட்டேன். இதுதான் நான் காலேஜ் க‌ட் அடிச்சு பாத்த‌ ஒரே, முதல் ம‌ற்றும் க‌டைசி அனுப‌வ‌ம்!


Sunday, November 22, 2009

என்ன‌ மாமா ச‌வுக்கிய‌மா


ப‌ருத்திவீர‌ன் நிச்ச‌ய‌மா உல‌க‌த்த‌ர‌மான‌ பட‌ம்தான். சும்மா சொல்ல‌க்கூடாது கார்த்தியும் புது ஹீரோன்னே தெரியாம‌ ந‌ல்லா ந‌டிச்சிருந்தார். ஆனா அதுக்காக‌ எந்த‌ மேடை ஏறினாலும், 'என்ன‌ மாமா சவுக்கிய‌மா?'ன்னே பேச‌ ஆர‌ம்பிக்க‌ற‌து, கொஞ்ச‌ம் ஓவ‌ரா இருக்குது.

ர‌‌ஹ்மான் சொல்ற‌ 'எல்லா புக‌ழும் இறைவ‌னுக்கே'ங்க‌ற‌ ரேஞ்சுக்கு 'என்ன‌ மாமா ச‌வுக்கிய‌மா'ன்னு ந‌ல‌ம் விசாரிச்சுட்டிருக்க‌றாரு. அடுத்த‌ த‌ட‌வை அவ‌ர் மேடையில‌ பேச‌ வ‌ரும்போது, ஜ‌ன‌ங்க‌ளே 'மாப்ள‌, நான் ச‌வுக்கிய‌மாதான் க்குறேன்'னு கத்த‌போறாங்க‌.

ஹும்..அவ‌ரும் என்ன‌ ப‌ண்ணுவாரு பாவ‌ம், செல்வ‌ராக‌வ‌னை சொல்ல‌ணும். ப‌ட‌த்தை எடுத்தோமா, ரிலீஸ் ப‌ண்ணோமான்னு இல்லாம, ஏதோ ஆயுள் த‌ண்ட‌னை வாங்கின‌ கைதி மாதிரி உள்ளேயே வெச்சுட்டிருக்காரு. த‌யாரிப்பாள‌ர் பாவ‌ம்யா! கொஞ்ச‌ம் க‌ருணை காட்ட‌கூடாதா?

'பையா' நீயாவ‌து வ‌ந்து இந்த‌ ப‌ருத்திவீர‌னை காப்பாத்து. என்ன‌ பையா கேக்குதா...அட‌ச்சே, இதுகூட‌ என்ன‌ மாமா ச‌வுக்கிய‌மாங்க‌ற‌ மாதிரியே வ‌ருது.

கேபிள் ச‌ங்க‌ர்



ப‌திவை ப‌டிச்சுதான் தெரிஞ்சுகிட்டேன், கேபிள் ச‌ங்க‌ர் ஸாரோட‌ த‌ந்தை கால‌மாயிட்டார்னு. என‌க்கு என்ன‌ ஆறுத‌ல் சொல்ற‌துன்னே தெரிய‌ல‌ ஸார். இந்த‌ வ‌ருத்த‌த்துல‌ருந்து நீங்க‌ மீண்டு வ‌ர‌ க‌ட‌வுளை வேண்டிக்க‌றேன். நீங்க‌ எழுதின‌ காக்கை ஒண்ணு போதும், உங்க‌ அப்பா மேல‌ நீங்க‌ வெச்சிருக்க‌ற‌ அன்புக்கு அதுவே சாட்சி.
நீங்க‌ வாழ்க்கைல‌ வெற்றி பெற‌ உங்க‌ அப்பா க‌ண்டிப்பா ஆசிர்வாத‌ம் ப‌ண்ணுவார். இந்த‌ ப‌திவை உங்க‌ அப்பாவுக்கு நான் ச‌ம‌ர்ப்பிக்க‌றேன் கேபிள் ஸார்.

ம‌னித‌னும் ம‌ர்ம‌ங்க‌ளும்


நேத்துதான் இந்த‌ புக்கை ப‌டிச்சு முடிச்சேன். கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் எப்ப‌வும் என்னோட‌ ஃபேவ‌ரைட். அதுவும் 'ஹாய்' ம‌த‌ன் எழுதியிருக்கார்னா, க‌ண்டிப்பா ப‌டிக்க‌ணும்னு வாங்குனேன். புக்கோட‌ டைட்டில், மேல் அட்டை இதெல்லாமும் என்னை வாங்க‌ தூண்டிய‌துக்கு ஒரு கார‌ண‌ம். இந்த‌ மாதிரி விஷ‌ய‌ங்க‌ள்ல‌ ம‌த‌ன் எப்ப‌வும் வெளுத்து வாங்குவார். அவ‌ர் பேசும்போதுதான் வெத்த‌லைய‌ போட்டுட்டு பேச‌ற‌ மாதிரி கொஞ்ச‌ம் குத‌ப்பிகிட்டே பேசுவாரே த‌விர‌ (யாராயிருந்தாலும் பார‌ப‌ட்ச‌மின்றி கால் வார‌ப்ப‌டும்), ஹீ ஈஸ் ரிய‌லி எ ஜீனிய‌ஸ்.

நீங்க‌ கொஞ்ச‌ம் ப‌ய‌ந்த‌ சுபாவ‌ம்னா த‌ய‌வு செய்து இந்த‌ புக்கை ப‌டிக்காதீங்க‌. இப்ப‌டி சொன்னாதான் ப‌டிப்பீங்க‌, க‌ரெக்டா? ந‌ம்மாளுங்க‌ளுக்கு இத‌ செய்யாத‌ன்னா அத‌தான் செய்வாங்க‌. எச்சில் துப்பாதீர்னு சுவ‌த்துல‌ எழுதிவெச்சிருப்பாங்க‌. ஆனா அது மேல‌தான் ஏக‌ப்ப‌ட்ட‌ பாக்கு க‌றை இருக்கும்!

ஆஃபிஸ் விட்டு நைட் வீட்டுக்கு வ‌ந்து சாப்ட்டு முடிச்ச‌ப்புற‌ம், இந்த‌ புக்கை ப‌டிக்க‌ ஆர‌ம்பிக்கும்போது ம‌ணி 11:05 PM. யாருமேயில்லாம‌ ராத்திரி த‌னியா இந்த‌ புக்கை ப‌டிச்சு பாருங்க‌. அது ஒரு த‌னி த்ரில்! ஒவ்வொரு நாளும் 4 இல்ல‌ன்னா 5 ப‌க்க‌ங்க‌ள்தான் ப‌டிப்பேன். ப‌டிச்சு முடிச்சுட்டு ரூம் க‌த‌வு க‌ரெக்டா லாக் ஆகியிருக்கான்னு ஒரு ட‌புள் செக் வேற‌ ப‌ண்ண‌வேண்டிய‌தாயிருந்த‌து. நெத்தியில‌ விபூதி வெச்சுகிட்டு ப‌டுக்க‌ல‌, அது ஒண்ணுதான் குறை.

ஆவி, ம‌னித‌ர்க‌ளுக்கு இருந்த‌ (இருக்கிற‌?) அமானுஷ்ய ச‌க்தி, டெலிப‌தி, UFO - Unidentified Flying Objects (த‌மிழ்ல‌ ப‌ற‌க்கும் த‌ட்டுக‌ள்னு சொல்லுவோமே அதேதான்) - இப்ப‌டி எல்லாத்தையுமே ஆதார‌த்தோட எழுதியிருக்குறார். இதுல‌ குறிப்பா ஒரு லைன் ந‌ல்லாயிருந்த‌து, "ஒருவ‌ரைக் கொல்வ‌து ஆவிய‌ல்ல‌, அவ‌ரின் ப‌ய‌மே அவ‌ரைக் கொன்றுவிடுகிற‌து".

இதுவ‌ரைக்கும் என‌க்கு தெரிஞ்ச‌ ஆவி ஆன‌ந்த‌ விக‌ட‌னும், ஜ‌க‌ன்மோகினி ந‌மீதாவும்தான். ரெண்டு நாள் முன்னாடி, என் ஃப்ரெண்டுகிட்ட‌ (ஹ‌ரீஷ்) பேசி ரொம்ப‌ நாள் ஆச்சேன்னு வீட்ல‌ இருக்கும்போது நினைச்சுகிட்டு இருந்தேன். அதே நாள் ஆஃபிஸ்ல‌ வ‌ந்து அவுட்லுக் திற‌ந்தா அவ‌ர்கிட்ட‌யிருந்து மெயில் வ‌ந்திருக்கு! அன்னைக்கு நைட்டு அவ‌ர் callம் ப‌ண்ணார். இதுதான் டெலிப‌தியோ?

புக் ஃபுல்லா ஆவி ப‌த்தியே எழுதினா எங்க‌ போர‌டிச்சுடுமோன்னு முத‌ல்ல‌ ஒரு 50, 60 ப‌க்க‌ம் வ‌ரைக்கும்தான் எழுதியிருக்கார். அதுக்க‌ப்புற‌ம் அடுத்த‌டுத்து டாபிக் மாறிகிட்டே இருந்தாலும் அந்த‌ த்ரில் ம‌ட்டும் குறையாம‌ ஒரு ஃப்ளோல போய்கிட்டேயிருந்த‌து. ப‌டிச்சு பாருங்க‌, என‌க்கு புடிச்சிருந்த‌து, எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரிய‌ல‌!

Sunday, November 15, 2009

ச‌ச்சின் 20 நாட் அவுட்!


அந்த‌ கால‌ ச‌ச்சினும், இந்த‌ கால‌ பிராட்மேனும்
ஸ்டைல்ல‌யும் க‌ல‌க்குவோம்ல‌!

ந‌வ‌ம்ப‌ர் 15, 2009 - ச‌ச்சின் க‌ள‌த்துல‌ இற‌ங்கி இன்னையோட‌ 20 வ‌ருஷ‌ம் ஆகுது. ஒரே வேலைய‌ திரும்ப‌ திரும்ப‌ செஞ்சா (எவ்வ‌ள‌வுதான் ப‌ண‌ம் வ‌ந்தாலும்) யாருக்காயிருந்தாலும் க‌ண்டிப்பா அலுத்துதான் போகும். ஆனா இன்னைக்கும், க‌ண்டிப்பா டீமை ஜெயிக்க‌வெக்க‌ணும்ங்க‌ற‌ வெறியோட‌ ஆட‌ முடியுதுன்னா, அது ஸ‌ம்திங் கிரேட்....

ச‌மீப‌த்துல‌ யுவ‌ராஜ் சிங் ஒரு பேட்டியில‌ சொல்லியிருந்தார், "ச‌ச்சினை நாங்க‌ தாத்தான்னே கூப்பிட‌ ஆர‌ம்பிச்சிட்டோம், ஆனா இப்ப‌வும் தின‌மும் அவ‌ர் த‌ன்னோட‌ பேட்டிங்கை இம்ப்ரூவ் ப‌ண்ண‌னும்னுதான் நினைக்கிறார்". இதுவே ச‌ச்சினோட‌ ஆர்வ‌ம் இன்னும் குறைய‌ல‌ங்கற‌துக்கு சாட்சி.

ச‌ச்சின் ஆடின‌துல‌ இதுவ‌ரைக்கும் என‌க்கு புடிச்ச‌ கேம்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ரெண்டு ஷார்ஜா கேம்ஸ், 2003 வேர்ல்ட் க‌ப்ல‌ பாகிஸ்தானுக்கு எதிரா ஆடின‌து, 99 வேர்ல்ட் க‌ப்ல‌ அவ‌ரோட‌ அப்பா இற‌ந்த‌ப்போ இறுதி ச‌ட‌ங்குக‌ளை முடிச்சிட்டு ம‌றுப‌டியும் இங்கிலாந்து போய் கென்யாவுக்கு எதிரா அடிச்ச‌ செஞ்சுரி (கென்யாதானேன்னு சொன்னாலும் அந்த‌ ம‌ன‌நிலைல‌ ஆடின‌து ரொம்ப‌ பெரிய‌ விஷ‌ய‌ம்)...இன்னும் சொல்லிகிட்டே போக‌லாம். ஒரு ப‌திவு க‌ண்டிப்பா ப‌த்தாது.

ஷேன் வார்னேகிட்ட போய் கேட்டா அவ‌ரே சொல்லுவாரு, "ச‌ச்சின் - பேர கேட்டாலே ச்சும்மா உச்சா வ‌ருதுல்ல..."

ச‌ச்சின் நிறைய‌ ரெகார்ட் ப‌ண்ணியிருக்க‌லாம், ஆனா அவ‌ர் மேட்ச் வின்ன‌ர் கிடையாதுன்னு புல‌ம்புற‌வ‌ங்க‌ள‌, நான் ஒண்ணு கேக்குறேன். ச‌ச்சின் பெஸ்ட் ஃபினிஷ‌ர் கிடையாது, ஒத்துக்க‌றேன், ஆனா டீமோட‌ டார்கெட்ல‌ 40-50% ச‌ச்சின் அடிச்சிட‌றார். ஒவ்வொரு மேட்ச்ல‌யும் டோட்ட‌ல் டார்கெட்ல‌ 90% அடிக்க‌ற‌துக்கு அவ‌ர் என்ன‌ மெஷினா?

அவ‌ர் அடிச்ச‌ எத்த‌னையோ செஞ்சுரிஸ் ம‌த்த‌ விள‌ம்ப‌ர‌ ந‌டிக‌ர்க‌ளால‌...ர்ர்ர்...ஸாரி...ம‌த்த‌ ப்ளேய‌ர்ஸால‌ வேஸ்ட்டா போயிருக்குங்க‌ற‌துதான் உண்மை. ச‌ச்சினை ப‌த்தி பேசினா பேசிகிட்டே போலாம். இவ்வ‌ள‌வு சாத‌னைக‌ளுக்கு அப்புற‌மும், த‌லைக‌ன‌ம் இல்லாம‌ இருக்குறாரே, அதுக்கே ஒரு ராய‌ல் சல்யூட்.

ஏன் கிரிக்கெட்ட‌ர்க‌ளுக்குலாம் முத‌ல்வ‌ர் ஆசையே வ‌ர‌மாட்டேங்குது? த‌ல‌, உன‌க்குதான் சென்னை சேப்பாக்க‌ம் ஸ்டேடிய‌ம் ரொம்ப‌ ராசியாச்சே, த‌மிழ்நாட்டுல‌ வ‌ந்து நில்லு, 2011அ ஒரு கை பாத்துடுவோம்!


பேராண்மை



இது ப‌ட‌த்த‌ ப‌த்தின‌ விம‌ர்ச‌ன‌ம் இல்ல‌. ப‌ட‌ம் பாக்கும்போது என‌க்கு கிடைச்ச‌ அனுப‌வ‌ம்.

இந்த‌ ப‌ட‌த்துல‌ செக‌ண்ட் ஹாஃப்ல‌ ஒரு பொண்ணு த‌ம் அடிக்க‌ற‌ மாதிரி ஒரு சீன் வ‌ரும். அந்த‌ சீன் வ‌ரும்போது தியேட்ட‌ர்ல‌ "ஹோய்ய்ய்"னு ஒரு உற்சாக‌ கூச்ச‌ல். இன்னைக்கு ஒரு க‌ட்டிட‌ம் க‌ட்டுற‌ இட‌த்துல‌யிருக்கற‌ சித்தாள்ல‌யிருந்து, டீச்ச‌ர், டாக்ட‌ர், இன்ஜினிய‌ர், வ‌க்கீல், சாஃப்ட்வேர், பைல‌ட்..அவ்வ‌ள‌வு ஏன், முத‌ல்வ‌ர், பிர‌த‌ம‌ர், ஜ‌னாதிப‌தி ப‌த‌விலாம் வ‌கிக்க‌ற‌ அள‌வுக்கு பெண்க‌ள் எவ்வ‌ள‌வோ முன்னேறிட்டாங்க‌.

ஆனா இப்ப‌வும் ஒரு பொது இட‌த்துல‌, ஒரு பைய‌ன் சிரிக்க‌ற‌ மாதிரி, ச‌த்த‌ம் போட்டு ஒரு பொண்ணு சிரிச்சா, "ஒரு பொண்ணு மாதிரியா ந‌ட‌ந்துக்குது?" அப்ப‌டின்னு ஒரு க‌மெண்ட் க‌ண்டிப்பா வ‌ரும். ஏண்டா, டிர‌ஸ்ஸ‌‌ இப்ப‌டிதான் போட‌ணும், அப்ப‌டிதான் போட‌ணும்னு சொல்றீங்க‌, ச‌ரி சேஃப்டிக்குதானே சொல்றீங்க‌ன்னு இத‌கூட‌ ஒத்துக்க‌லாம். சிரிக்க‌ற‌துல‌கூட‌ ஏண்டா ரூல்ஸ் போடுறீங்க‌?

"பேராண்மை"ல‌ அந்த‌ பொண்ணு த‌ம் அடிச்ச‌போது "ஹோய்ய்ய்"னு க‌த்துன‌ எல்லாருமே என்னை பொருத்த‌வ‌ரைக்கும் Male Chauvinistங்க‌தான். ஆழ்ம‌னசுல‌, நாம‌ ப‌ண்ற‌த after all ஒரு பொண்(ணே)ணு ப‌ண்றாளேங்க‌ற‌ ஆச்ச‌ரிய‌ம். அதுதான் இந்த‌ கூச்ச‌ல்ல‌ வெளிப்ப‌ட்டுது. வ‌ருஷா வ‌ருஷ‌ம் 10thலயும், 12thல‌யும் ப‌ச‌ங்க‌ளவிட‌ பொண்ணுங்க‌ அதிக‌ம் பேர் பாஸ் ப‌ண்ணும்போதுலாம் விட்டுடுவானுங்க‌, ஆனா த‌ம் அடிச்சா ம‌ட்டும் வாய‌ பொள‌க்குறானுங்க‌.

பொண்ணுங்க‌ த‌ம், த‌ண்ணி அடிக்க‌ற‌த‌ நான் ச‌ரின்னு சொல்ல‌ல‌. த‌ம்மோ, த‌ண்ணியோ, ரெண்டுமே உட‌ல் ந‌ல‌த்த‌ பாதிக்க‌ற‌ விஷ‌ய‌ம்தான். பைய‌ன் தானே, சே! பாவ‌ம்னு செல்ல‌ம் குடுத்து ப‌ரிதாப‌ப்ப‌ட‌ த‌ம்மும், த‌ண்ணியும் என்ன‌ ந‌ம்ம‌ள‌ பெத்த‌ அப்பா, அம்மாவா?

ஸோ, த‌ம் அடிச்சாலும் த‌ண்ணி அடிச்ச்சாலும், பைய‌னோ, பொண்ணோ, யாராயிருந்தாலும், ரிச‌ல்ட் ஒண்ணுதான். ஆனா இந்த‌ Male Chauvinism (இதுதான் பேராண்மையோ?) இன்ன‌மும் இருக்குங்க‌ற‌த‌ அந்த‌ கூச்ச‌ல் வெளிப்ப‌டுத்தின‌போது, என‌க்கு கொஞ்ச‌ம் எரிச்ச‌லாதான் இருந்த‌து. டேய், திருந்துங்க‌டா!

Monday, November 09, 2009

ர‌ஸ்யாவில் விச‌ய‌காந்த்!


извините - ர‌ஸ்ய‌ மொலில என‌க்கு புடிக்காத‌ ஒரே வார்த்தை!

Sunday, November 08, 2009

த‌ம‌ன்னாவின் ஹாப்பி டேஸ்

இன்னைக்குதான் பேப்ப‌ர்ல‌ பாத்தேன், அசின், த்ரிஷாக்கு அப்புற‌ம், பாலிவுட் சான்ஸ் ந‌ம்ம‌(?!) த‌ம‌ன்னாவுக்கு அடிச்சிருக்கு. ஷாருக்கோட‌ அடுத்த‌ ப‌ட‌த்தோட‌ ஹீரோயின் அனேக‌மா த‌ம‌ன்னாவா இருக்க‌லாம். Farah Khan directionனு நினைக்கிறேன். Let's see...இப்ப‌டியே ஒவ்வொருத்த‌ரா ஹிந்திக்கு போயிட்டா, நாம‌ த‌மிழ்ல‌ என்ன‌ ப‌ண்ற‌து?

ச‌ரி ச‌ரி, அதுக்காக‌ நாம‌ சோக‌மா உக்காந்துட்டிருக்க‌ணுமா என்ன‌? Welcome (Back) அனுஷ்கா!

Saturday, November 07, 2009

ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன்





ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌னுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள்!

"நாய‌க‌ன்" ப‌ட‌த்தை த‌விர‌ ரொம்ப‌ வ‌ருஷ‌மா என‌க்கு க‌மல் ப‌ட‌ம்னாலே ரொம்ப‌ அல‌ர்ஜி. கார‌ண‌ம், அவ‌ரோட‌ ப‌ர்ச‌ன‌ல் லைஃப். ஆனா "அன்பே சிவ‌ம்" ப‌ட‌த்த‌ பாத்த‌ப்புற‌ம் க‌ம‌ல் மேல‌ என‌க்கு ஒரு பிர‌மிப்பே ஏற்ப‌ட்டுச்சு. அதுக்கப்புற‌ம்தான் உறைச்சுது, நாம‌ 100 ரூபா செல‌வு ப‌ண்ணி ப‌ட‌ம் பாத்துட்டு, அவ‌ர் வீட்டுக்குள்ளே எப்படி இருக்கார்னு எட்டிப்பாக்குறோமே அது எவ்ளோ கீழ்த்த‌ர‌மான‌ விஷ‌ய‌ம்.

ச‌மீப‌ நாட்க‌ள்ல‌ நான் ரொம்ப‌ ரசி க்கிற‌/ச்சுட்டிருக்கிற‌ க‌ம‌ல் பாட‌ல்க‌ள்

1. ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் - இள‌மை இதோ இதோ

கொஞ்ச‌ம் த‌ற்பெருமை அடிச்சுக்க‌ற‌ மாதிரி இருந்தாலும் அதுக்கு த‌குதியான‌வ‌ர்தானே. இளைய‌ராஜா, SPB & க‌ம‌ல் மூணு பேரும் பொள‌ந்து க‌ட்ன‌துனாலே இந்த‌ பாட்டு என‌க்கு ரொம்ப‌ புடிக்கும்

2. ச‌த்யா - வ‌ளையோசை க‌ல‌க‌ல‌க‌ல‌வென‌

இந்த‌ கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரிங்க‌றாங்க‌ளே, அது இந்த‌ பாட்டுல‌ க‌மலுக்கும், அம‌லாவுக்கும் சூப்ப‌ரா செட்டாயிருக்கும். என‌க்கென்ன‌வோ இந்த‌ பாட்ட‌ பாத்த‌ப்புற‌ம் வேறெந்த ஹீரோ ஹீரோயினுக்கும் (சூர்யா ஜோதிகா நிஜ‌த்துலேயே ஜோடி இல்லியா, அத‌னால‌ அவ‌ங்க‌ exception) கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக‌ல‌ன்னுதான் தோணுது.

இந்த‌ பாட்டு புடிச்ச‌துக்கான‌ இன்னொரு கார‌ண‌ம் இளைய‌ராஜா, SPB & ல‌தா ம‌ங்கேஷ்க‌ர்

பின்குறிப்பு 1: Kamal - SriDevi பாட்டுலாம் நான் நிறைய‌ பாத்த‌தில்ல‌, அப்போ நான் குட்டி பாப்பா ஹி...ஹி..

பின்குறிப்பு 2: 'கெமிஸ்ட்ரி'ங்க‌ற‌ வார்த்தைய‌ நான் யூஸ் ப‌ண்ணின‌துக்காக‌ மூணு பேர்கிட்ட‌ ம‌ன்னிப்பு கேட்டுக்க‌றேன், ஸாரி க‌லா மாஸ்ட‌ர், குஷ்பு & ந‌மீதா

3. என‌க்குள் ஒருவ‌ன் - மேக‌ம் கொட்ட‌ட்டும்

ம‌றுப‌டியும் இளைய‌ராஜா, SPB & க‌ம‌ல் காம்பினேஷ‌ன். இந்த‌ பாட்ட‌ ப‌த்தி நான் சொல்ல‌வே வேணாம் ஃப்ரீயா இருக்கும்போது நெட்ல‌ பாருங்க‌/கேளுங்க‌


சென்னையில் ஒரு ம‌ழைக்கால‌ம்




முன் எச்ச‌ரிக்கை: இது க‌விதை இல்ல‌, க‌விதை மாதிரி

அமுத‌த்தையே க‌ண்டிராத‌ ம‌னித‌ர்க‌ள்
சக‌ ம‌னித‌ர்க‌ளுக்காக‌ சொன்ன‌து
"அள‌வுக்கு மீறினால் அமுத‌மும் ந‌ஞ்சு"
அமுத‌த்தையே உண்டிருக்கும் அந்த‌
வ‌ருண‌ ப‌க‌வானுக்கு யார் சொல்வ‌து?

என் ம‌ன‌சாட்சி: அது என்ன‌டா த‌லைப்பு, "சென்னையில் ஒரு ம‌ழைக்கால‌ம்", கெள‌த‌ம்கிட்ட‌யிருந்து சுட்டுட்டா நீ கெள‌த‌ம் ஆயிடுவியா? கொய்யாலே, ந‌வ‌ம்ப‌ர் டிச‌ம்ப‌ர்லே த‌மிழ்நாட்டுக்கே ம‌ழைக்கால‌ம்தான்டா!

பின் எச்ச‌ரிக்கை: இத‌ ப‌டிச்சுட்டு க‌மெண்ட்ஸ் எதுவும் போடாம போனீங்க‌ன்னா இத‌ விட‌ மொக்கையா இன்னும் நிறைய‌ எழுதி, உங்க‌ள‌ ப‌டிக்க‌ச் சொல்லி டார்ச்ச‌ர் ப‌ண்ணுவேன், பீ கேர்புல்!

Monday, November 02, 2009

ஹாப்பி ப‌ர்த்டே ஷாருக்!




க‌ட‌ந்த‌ 15 வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ என‌க்கு பிடித்த‌ ஒரே ஹிந்தி ந‌டிக‌ர்!

Happy Birthday ShahRukh!