Sunday, December 27, 2009

க‌வுண்ட‌ம‌ணியும், ப்ரியாம‌ணியும் - பார்ட் 3

இந்த‌ இம்சைகாவிய‌த்தை முத‌ன்முத‌ல் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் மேலும் த‌ங்க‌ளை இம்சைப‌டுத்திக்கொள்ள‌ இவ்விர‌ண்டையும் ப‌டிப்ப‌து இம்சைப‌ய‌க்கும்.

க‌வுண்ட‌ம‌ணியும், ப்ரியாம‌ணியும் - பார்ட் 1

க‌வுண்ட‌ம‌ணியும், ப்ரியாம‌ணியும் - பார்ட் 2

க‌: அ..திஸ் ஈஸ் பெட்ட‌ர்...ஐ அப்ரிஸியேட் யூ.....மேட்ட‌ருக்கு வ‌ர்றேன், ஏண்டா இந்த‌ பொண்ண‌ வேணாண்ட்ற‌?

கா: சும்மாரு சித்த‌ப்பா, எதுவானாலும் சிந்திச்சு செய்ய‌ணும்டின்னு இவ‌ளுக்கு சொன்னா, என் முன்னாடி வ‌ந்து மூக்கை சிந்திட்டு, இந்த‌ள‌வுக்கு சிந்துனா போதுமான்னு கேக்குறா. இவ‌ள‌ போய் எப்ப‌டி க‌ட்டிக்க‌ற‌து?

க‌: நீ கேக்க‌ற‌தும் ஐ பீல் க‌ரெக்ட். (ப்ரியாம‌ணியிட‌ம்) ஏம்மா, உன‌க்கு அறிவே இல்லியா? அவ‌ன் முன்னாடி போய் மூக்கை சிந்த‌றியே? எப்ப‌டிம்மா உம்மேல‌ அவ‌னுக்கு ரொமான்ஸ் வ‌ரும். (போனில்) ச‌ரிப்பா, அவ‌ ஏதோ சின்ன‌பொண்ணு வெவ‌ர‌ம் தெரியாம‌ வ‌ள‌ர்ந்துட்டா, நீ கொஞ்ச‌ம் அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணிக்க‌கூடாதா?

கா: யாரு அவ சின்ன‌பொண்ணா? அவ‌ இங்க‌ இருக்கும்போதுதான் சித்த‌ப்பா இப்டி இருக்க‌றா, ஆந்திரா போனா அவ‌ சின்ன‌பொண்ணுங்க‌ போட‌ற‌ டிர‌ஸ்தான் போட‌றா

க‌: அப்போ க‌டைசியா உன‌க்கு புடிக்க‌ல‌ன்னு சொல்ற‌?

கா: யோவ் அததான்யா முத‌ல்ல‌ருந்தே நான் அவ‌கிட்ட‌ சொல்லிட்ருக்கேன்

க‌: யேய், என்ன‌ நீ இதுவ‌ரைக்கும் சித்த‌ப்பா, சித்த‌ப்பான்னு பாச‌ ம‌ழையா பொழிஞ்ச. இப்போ யோவ்ங்க‌ற‌, ரெஸ்ப‌க்ட் மேன் ரெஸ்ப‌க்ட்

கா: ச‌ரி விடு சித்த‌ப்பா, ஒரு ஃப்ளோல‌ வ‌ந்துடுச்சு

க‌: ஓகே, அப்போ இந்த‌ பொண்ணுக்கு ந‌ல்ல‌ ஒரு அழ‌கான‌ மாப்ளையா நானே பாத்து கல்யாண‌ம் ப‌ண்ணிவெச்சுட‌றேன், உன‌க்கு ஒண்ணும் பிர‌ச்னையில்லையே?

கா: தொல்லை ஒழிஞ்சுதுனு நாலு குவார்ட்ட‌ர் அடிச்சுட்டு நிம்ம‌தியா தூங்குவேன், வாழ்க‌ அந்த‌ ம‌கராசி!

(க‌வுண்ட‌ம‌ணி செந்திலிட‌ம் சிரித்த‌ மாதிரி ஸ்டைலாக‌ போஸ் குடுக்குமாறு சொல்ல‌, அவ‌ர் க‌ண்ணைப் பெருசாக்கி ஒண்டிப்புலி ஸ்டைலில் "ஊஊ"ன்னு க‌த்துகிறார். அதை த‌ன் செல்போன் கேமிராவில் ப‌திவு செய்து கார்த்தியின் செல்போனுக்கு அனுப்புகிறார்....அவ‌ங்க‌ளுக்கு எப்ப‌டி இதுலாம் தெரியும்னா கேக்குறிங்க‌, ஹிஹி...அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம்.....)

கா: ன்னா சித்தப்பா, இந்த‌ போட்டோவ‌ ப்ரிண்ட் எடுத்து வீட்டு வெளியே திருஷ்டிக்கு மாட்ட‌வா?

க‌: ஆ....இவ‌ரு அப்படியே அம்பானி ப‌ர‌ம்ப‌ரை, 27 மாடியில‌ வூடு க‌ட்டிக்குறாரு, திருஷ்டிக்கு மாட்ட‌ற‌துக்கு...அடேய், அந்த‌ போட்டோல‌ இருக்க‌ற‌வ‌ன்தான்டா இவ‌ள‌ க‌ட்டிக்க‌ப்போறான்

கா: (கோப‌த்துட‌ன்) யோவ் உன‌க்கே இது நியாயமா இருக்கா? (சில‌ நொடிக‌ள் மெள‌ன‌ம்...பிற‌கு) ச‌ரி நானே அவ‌ள‌ க‌ட்டிக்க‌றேன், ஆனா வாழ்க்கை குடுத்த‌ வ‌ள்ள‌ல்னு பீச் ரோட்ல‌ என‌க்கு ஒரு சிலை வெக்க‌ணும் சொல்லிப்புட்டேன் ஆமா!

க‌: ய‌ம்மா..அவ‌ன் உன்ன‌ க‌ட்டிக்க‌ ச‌ம்ம‌திச்சுட்டான்மா!

(ப்ரியாம‌ணி ச‌ந்தோஷ‌த்தில் 'உன்ன‌ என‌க்கு புடிக்குண்டா, ரொம்ப‌ புடிக்குண்டா'ன்னு கத்திக்கொண்டே கார்த்தியை பார்க்க‌ அங்கிருந்து ஓடுகிறார்)

க‌: அதாண்டி, பிர‌ச்னைன்னு வ‌ருவீங்க‌, நாங்க‌ தீர்த்துவெச்சுட்டா எங்க‌ள‌ ம‌ற‌ந்துட்டு க‌ண்டுக்காம‌ ஓடிடுங்க‌....ட‌ர்ட்டி பீப்புள், நெவ‌ர் ஸே தேங்க்ஸ், வாட் எ பிட்டி! (செந்திலிட‌ம்) அ...மிஸ்ட‌ர் ப‌ஃப‌லோ பேபி, எப்படியோ அவ‌ங்க‌ள‌ சேத்துவெக்குற‌துக்கு நீங்க‌ ஒரு முக்கிய‌மான‌ கார‌ண‌மா இருந்துருக்கீங்க‌, டேங்க் யூ வெரி ம‌ச்! உங்க‌ளுக்கு ரெண்டு சிடி ஃப்ரீ, என்ன‌ ப‌ட‌ம் வேணும், சொல்லுங்க‌

செ: என்ன‌ன்ணே நீங்க‌, அதான் முத‌ல்ல‌யே சொன்னேனே ம‌ருத‌நாய‌க‌ம் வேணும்னு...

க‌: (க‌டையின் ஷ‌ட்ட‌ரை இழுத்து மூடிக்கொண்டே) பார்ட் 1ல‌ கேக்க‌ ஆர‌ம்பிச்ச‌ நாயி பார்ட் 3ல‌யும் கேக்குது பாரு, இன்னைக்கு ஒரு கொலை ந‌ட‌ந்தே தீரும்டா!

இத‌ற்குள் செந்தில் ப‌த்த‌டி தள்ளி ஓட‌, க‌வுண்ட‌ர் அவ‌ரைத் துர‌த்த‌...இருவ‌ரும் ஓடுவ‌து 'காக்க‌ காக்க‌' ப‌ட‌த்தில் 'உயிரின் உயிரே' பாட‌லில் சூர்யாவும் ஜோதிகாவும் ஓடுவ‌து போலிருந்த‌து என்று அந்த‌ க‌ண்கொள்ளாகாட்சியை நேரில் க‌ண்ட‌வ‌ர்க‌ள் க‌ருத்து தெரிவித்துள்ள‌‌ன‌ர்....

டிஸ்கி: த‌ பாருங்க‌..இப்ப‌வே சொல்லிட்டேன், இந்த‌ க‌தைய‌ ஆஸ்க‌ருக்கு அனுப்புற‌துக்குலாம் ரெக‌ம‌ண்ட் ப‌ண்ணி க‌வ‌ர்ன்மெண்டுக்கு லெட்ட‌ர் அனுப்ப‌க்கூடாது. ஏன்னா, என‌க்கு ப‌ப்ளிகுட்டிலாம் புடிக்காது....சொல்லிகிட்டேயிருக்கேன், அதுக்குள்ள‌ லெட்ட‌ர் எழுத‌ ஆர‌ம்பிக்குறிங்க‌ளே...ஹிஹி...ச‌ரி அப்புற‌ம் உங்க‌ இஷ்ட‌ம்..!

Tuesday, December 22, 2009

க‌வுண‌ட‌ம‌ணியும், ப்ரியாம‌ணியும் - ‍பார்ட் 2


க: ஐ, லேடீஸ் லேடீஸ்!!

ப்.ம‌: (அழுதுகொண்டே செல்போனில்) உன்ன‌ என‌க்கு புடிக்குண்டா, ரொம்ப‌ புடிக்குண்டா, ஏண்டா உன‌க்கு அது தெரிய‌மாட்டேங்குது?

க‌: (செந்திலிட‌ம்) அ..ஆப்பிரிக்க‌ன் பிர‌த‌ர், லேடீஸ் வ‌ராங்க‌, நீங்க‌ கொஞ்ச‌ம் ஓர‌மா நில்லுங்க‌

செ: (த‌ன் த‌லைமுடியை கோதிக்கொண்டே) சே, அழ‌கா ஒருத்த‌ன் வ‌ர‌கூடாதே, உட‌னே தேடி வ‌ந்துடுவாங்க‌

க‌: அய்ய்யோ, இந்த‌ பேச்ச‌ல்லாம் கேக்க‌வேண்டிய‌தா இருக்குதே, டேய் ப‌டுவா, ஓர‌மா போய் நில்லுடா.......அ.....ஹேஹேய் ஹேஹேய், தாவ‌ணி போட்ட‌ தீபாவ‌ளி வ‌ந்த‌து என்னோட க‌டைக்கு....மேட‌ம், வெல்க‌ம் மேட‌ம், ஏதாவ‌து சிடி வாங்க‌றீங்க‌ளா மேட‌ம், நீங்க‌ ஒண்ணு வாங்குனா, ப‌த்து ஃப்ரீ மேட‌ம்

ப்.ம: இல்ல‌ண்ணே, நான் சிடி வாங்க‌ வ‌ர‌ல‌

க‌: என்ன‌து அண்ண‌னா???

செ: ஹிஹி...ஹிஹி...அண்ணே, அண்ணே!

(க‌வுண்ட‌ம‌ணி டென்ஷ‌னாக‌ முறைக்கிறார்)

ப்.ம‌: அண்ணே, என் மொற‌ப்பைய‌ன் என்னை க‌ண்டுக்க‌வே மாட்டேங்க‌றான், என் ஃப்ரெண்டுகிட்ட‌ சொன்ன‌போது அவ‌தான் உங்க‌ பேர‌ சொன்னா, நீங்க‌தான்னே என‌க்கு ஹெல்ப் ப‌ண்ண‌ணும்

க‌: ய‌ம்மா, இந்த‌ "ஷாஜ‌ஹான்" வேல‌ல்லாம் நான் ப‌ண்ற‌து இல்ல‌ம்மா, ச‌ட்டைல‌ எத்த‌னை ப‌ட்ட‌ன் இருந்தாலும் ஒண்ணுத்த‌கூட‌ போடாம‌ ஒருத்த‌ன் சுத்திகிட்டிருப்பான், அவ‌ன‌ போய் பாரு

ப்.ம‌.: அவ‌ர்கிட்ட‌யும் சொன்னேன்ணே, ஆனா நான் என்ன‌ சொன்னாலும், அவ‌ர் மூஞ்சில‌ ரியாக்ஸ‌னே காட்ட‌ மாட்டேங்க‌றாரு. அதான் உங்ககிட்ட‌ வ‌ந்தேன்.

க‌: அய்யோ, இந்த‌ நேர‌த்துல‌ வ‌ந்திருக்கியேம்மா, நான் வேற‌ சாய‌ங்கால‌ம் டெல்லி போறேன். பிர‌த‌ம‌ர் வாஜ்பாயி என்னை வ‌ந்து பாக்க‌முடியுமான்னு எஸ்எம்எஸ் அனுப்பிருக்காரு. வெரி கிரிட்டிக‌ல் சிச்சுவேஸ‌ன், வாட் டு டூ?

ப்.ம‌: அண்ணே, இப்போ பிர‌த‌ம‌ர், ம‌ன்மோக‌ன் சிங், வாஜ்பாய் இல்ல‌

க‌: (ம‌ன‌துக்குள்) ம்ஹூம், இதெல்லாம் க‌ரெக்டா சொல்லு...ச‌ர்ரி ச‌ர்ரி அர‌சிய‌ல்லே இதெல்லாம்...

செ: சாதார‌ண‌ம‌ப்பா...அதானே?

க‌: டே, ப்ளூ ரே ம‌ண்டையா, அது என் ட‌ய‌லாக்டா! ச‌ரிம்மா...உன் மொற‌ப்பைய‌னுக்கு கால் ப‌ண்ணு, நான் பேச‌றேன். ஐய்யோ...எங்கிட்ட‌ உண்டான‌ கெட்ட‌ ப‌ழ‌க்க‌மே இதான், பிர‌ச்ச‌னைன்னு ஒருத்த‌ர் வ‌ந்துட்டா, அத‌ தீர்க்காம‌ நான் சோறு த‌ண்ணிய‌கூட‌ நின‌க்குற‌தில்ல‌. ஹா.....ஜென்ர‌லா என்னை ப‌த்தி நானே பெருமையா பேசிக்க‌மாட்டேன்‌. உன‌க்கு உத‌வி ப‌ண்றேன், ஆனா ஒரு க‌ண்டிச‌ன்

ப்.ம‌: என்ன‌ண்ணே?

க‌: அட‌ச்சே, நிறுத்தும்மா, அதென்ன‌ வார்த்தைக்கு வார்த்தை என்ன‌ண்ணே, நொன்ன‌ண்ணேன்னிகிட்டு, (ச‌ற்று ஃபீலிங்ஸுட‌ன்) heart hurt ஆகுதும்மா...இனிமே, என்ன‌ சார்ர்ர், வாங்க‌ சார்ர்ர், போங்க‌ சார்ர்ர்னுதான் கூப்புட‌ணும், ஓகேவா?

(த‌லையாட்டிவிட்டு, ப்ரியாம‌ணி த‌ன் முறைப்பைய‌னுக்கு (ப‌ருத்திவீர‌ன் கார்த்தி) கால் ப‌ண்ணி செல்போனை க‌வுண்ட‌ம‌ணியிட‌ம் த‌ருகிறார்)

க‌: அல்லோ, நான் அகில‌ உல‌க புக‌ழ் சிடி க‌டை சின்ராசு பேச‌றேன், ஒரு ப‌ர்ச‌ன‌ல் மேட்ட‌ர், உங்க‌கிட்ட‌ கொஞ்ச‌ம் பேச‌லாமா?

கா: என்ன‌ மாமா ச‌வுக்ய‌மா?

க‌: டேய், நீ இன்னும் இந்த‌ ட‌ய‌லாக‌ வுட‌வேல்லியா, ப‌ட‌த்துல‌ பேச‌ன‌ ச‌ரி, எந்த‌ மேடையில‌ ஏறுனாலும் இதையேதான் பேச‌ற‌, இப்போ போன்ல‌யும் இதையேதான் பேச‌ற‌, நீ திருந்த‌வே மாட்டியா?

கா: என்ன‌ மாமா ச‌வுக்ய‌மா?

க‌: டேய் நிறுத்துடா, அதென்ன‌ ஹீரோ எல்லாருக்கும் நான் மாமாவா? அந்த‌ வ‌ள‌ர்ந்த‌வ‌ன் (ச‌த்ய‌ராஜ்) வ‌ந்தாலும் மாமான்னுதான் கூப்புட‌றான், வெத்த‌லை போட்ட‌ மாதிரி பேச‌ற‌வ‌னும் (இது யாருன்னு சொல்ல‌ணுமா என்ன‌?) மாமான்னுதான் கூப்புட‌றான். ரெண்டு பேருக்கும் என்னை விட‌ ஒரு நாலு வய‌சு க‌ம்மி, ரெண்டு பேரும் என்னை மாதிரியே 'விக்' வெக்குறானுங்க‌, அப்புற‌ம் என்ன‌ என்னை எப்போ பாத்தாலும் மாமா நோமான்னுட்டு?

கா: ச‌ரி விடு சித்த‌ப்பா

க‌: அ..திஸ் ஈஸ் பெட்ட‌ர்...ஐ அப்ரிஸியேட் யூ.....மேட்ட‌ருக்கு வ‌ர்றேன், ஏண்டா இந்த‌ பொண்ண‌ வேணாண்ட்ற‌?

கார்த்தியின் ப‌தில் என்ன‌? க‌வுண்ட‌ர் பேச்சு வார்த்தையில் வெற்றி பெற்று, வர‌லாற்றில் நிர‌ந்த‌ர‌ மாமாவாக‌ இட‌ம் பிடித்தாரா?

முடிவு அடுத்த‌ ப‌திவில்! (சீக்கிர‌ம் முடிச்சு தொலைடான்னு நீங்க‌ திட்ட‌ற‌து தெரியுது...கோல‌ங்க‌ளையே பொறுத்துகிட்டீங்க‌, இத‌ கொஞ்ச‌ம் பொறுத்துக்க‌மாட்டீங்க‌ளா)

டிஸ்கி: மேலே இருக்க‌ற‌ ப‌ட‌த்துக்கும் இந்த‌ க‌தையோட‌ சிச்சுவேஷ‌னுக்கும் ச‌ம்ப‌ந்த‌மே இல்லியேன்னுலாம் க‌மெண்ட் போட‌க்கூடாது...அப்புற‌ம் அடுத்த‌ ப‌திவுல‌ மேக்க‌ப் போடாத‌ ப்ரியாம‌ணி ஃபோட்டோ போட்டுடுவேன் ப‌ரவாயில்லியா...ஹாங்..அது!

Thursday, December 17, 2009

க‌வுண்ட‌ம‌ணியும், ப்ரியாம‌ணியும்


டிஸ்கி: இக்க‌தையில் வ‌ரும் பாத்திர‌ங்க‌ள், டேபிள்க‌ள், சேர்க‌ள் எல்லாம் உண்மைதான். ஆனா க‌தை மட்டும் க‌ற்ப‌னை. இத‌ன் மூல‌ம் யார் ம‌ன‌மாவ‌து புண்ப‌ட்டால் ந‌ல்ல‌ ஒரு மெடிக்க‌ல் ஷாப்பில் ஆயின்மெண்ட் வாங்கி த‌ட‌விக்கொள்ளுமாறு அன்புட‌ன் கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்

தலைப்பு பாத்து ஏதோ "கிளுகிளு"ன்னுலாம் நினைக்க‌கூடாது. அது ச்சும்மா ஒரு பில்ட‌ப்புக்காக‌. இன்னைக்கு தூங்கிட்ருந்த‌ப்போ க‌ன‌வுல‌ க‌வுண்ட‌ர் வ‌ந்து "ஏண்டா குருமா (குறும்ப‌னைத்தான்!), உன் போட்டோக்கு கீழே 'க‌வுண்ட‌ம‌ணியின் மான‌சீக‌ சிஷ்ய‌ன்'னு போட்டிருக்கியே, என்னைக்காவ‌து என்னை ப‌த்தி எழுதியிருக்கியாடா"ன்னு கேக்க‌, "ம‌ன்னிச்சுக்க‌ த‌ல‌ (என‌க்கு த‌ல‌ க‌வுண்ட‌ருதாங்க‌), இன்னைக்கு எழுதிட‌றேன்"னு சொல்லிட்டேன்.

டிய‌ர் சாந்தாக்க‌ளே, இந்த‌ ப‌திவு என்னும் இம்சை ஆற்றில் நீந்த‌ ஓடோடி வ‌ந்த‌ உங்க‌ள் அனைவ‌ரையும் இப்பொழுது ப‌ர்மா ப‌ஜார் ஏரியாவுக்கு அழைத்துகொண்டு போகிறேன், வாருங்க‌ள்!

ப‌ர்மா ப‌ஜார் ஏரியா, சிடி க‌டை வெச்சிருக்கறார் க‌வுண்ட‌ம‌ணி. அவர் க‌டைக்கு வ‌ர்றார் ஒரு க‌ஸ்ட‌ம‌ர். யாரா? ஹும்...அப்துல் கலாமா வ‌ருவாரு? "ஊஊ" ஒண்டிப்புலி கெட்ட‌ப்புல‌, ப்ளீச்சிங் ஹேர் ஸ்டைலோடு ந‌ம்ம‌ செந்தில்தாங்க‌.




க: சார், வாங்க‌ சார், வாங்க‌ சார்...அர்ர்ருமையான‌ ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ள் சார், ஒரிஜின‌ல் சிடி வெறும் ப‌தின‌ஞ்சு ரூபாதான் சார். ஒரு மொக்க‌ ப‌ட‌ம் வாங்குனீங்க‌ன்னா இன்னொரு மொக்க‌ ப‌ட‌ம் ஃப்ரீ சார்

செ: என்ன‌ன்ணே நீங்க‌, ப‌ழைய‌ ப‌ட‌ம்னு சொல்றீங்க‌, புது ப‌ட‌ம்லாம் இல்லியா?

க‌: யார்ரா அவ‌ன்...ஏண்டா கார‌ குழ‌ம்பு த‌லையா, புது ப‌ட‌ம் விக்க‌ற‌த‌லாமாடா ச‌த்த‌ம் போட்டு வியாபார‌ம் ப‌ண்ண‌ முடியும்

செ: இருக்க‌ற‌த‌ சொல்ல‌ணும்ணே, வியாபார‌த்துல‌ ஒரு நேர்மை வேணாமா?

க: ஓ..தோடா...வ‌ந்துட்டாரு சசிகுமாரு, நேர்மைய‌ ப‌த்தி பேச‌ற‌துக்கு..ப‌தின‌ஞ்சு ரூபா குடுத்து வாங்குற‌ நாயி பேசுற‌ பேச்சு பாரு

செ: ஹ‌லோ பிர‌த‌ர்..கிவ் ரெஸ்ப‌க்ட் டேக் ரெஸ்ப‌க்ட்..நான் ஒரு ப‌த்து ப‌ட‌ம் வாங்குலாம்னு நினைக்குறேன். உங்க‌ளுக்கு எப்ப‌டி வ‌ச‌தி? நான் வேண்ணா ப‌க்க‌த்து க‌டைக்கு போயிட‌வா?

க: நோ மிஸ்ட‌ர் ஆப்பிரிக்க‌ன் ம‌ங்கி, சும்மா த‌மாஸ் ப‌ண்ணா, அதுக்குள்ள‌, இல்லாத‌ சூடு சொர‌ணைய‌ இருக்க‌ற‌ மாதிரி காட்டுறீங்க‌...(ம‌ன‌துக்குள்) நீ வாங்கி முடிடீ அப்ப‌ற‌ம் இருக்கு உன‌க்கு

செ: என்ன‌து ம‌ங்கியா? என்னை பாத்து க‌ழுதைன்னா திட்ட‌றீங்க‌? நான் ப‌க்க‌த்து க‌டையிலேயே...

க‌: (ம‌ன‌துக்குள்) அட‌ங்கொன்னியா, இத்த‌ சொல்லியே மெர‌ட்ட‌றானே.....நோவ் நோவ், உங்க‌ள‌ நான் கிங்குன்னு சொன்ன‌து உங்க‌ காதுல‌ ம‌ங்கின்னு கேட்டுருக்கும்..ஆ...நீங்க‌ சிடி பாருங்க‌ சார்..என்ன‌ வேணுமோ பாருங்க‌

செ: ஹிஹி..என‌க்கு ம‌ருத‌நாய‌க‌ம் ப‌ட‌ம் வேணும்ணே

க‌: ர்ர்ர்ர்ர்...ஏண்டா எரும‌நாய‌க‌ம், இன்னும் அந்த‌ ப‌ட‌ம் எடுக்க‌வே ஆர‌ம்பிக்க‌ல‌....(ச‌ற்று பொறுமையாக‌) வேணாம் த‌ம்பி, வ‌ந்தோமா, இருக்க‌ற‌ ப‌ட‌த்த‌ வாங்குனோமோ போனோமான்னு இருக்க‌ணும், அனாவ‌சிய‌மா என்னை கொலைகார‌னா ஆக்காத‌

செ: ம்ஹூம், உங்க‌கிட்ட‌ இல்ல‌ன்னு சொல்லுங்க‌, அத‌விட்டுட்டு எடுக்க‌ல‌ன்னு சொல்லிகிட்டு.. நான் ப‌க்க‌த்து க‌டையிலேயே...

க: (ம‌ன‌துக்குள்) அய்யோ ராமா! இந்த‌ க‌ழிச‌டைகிட்ட‌ இருந்து என்னை காப்பாத்த‌ மாட்டியா? ஆப்பிரிக்க‌ன் பிர‌த‌ர், ம‌ருத‌நாய‌க‌ம் இல்ல‌, ஆனா உங்க‌ சைஸ்ல‌ இருக்க‌ற‌ ஒருத்த‌ர் ந‌டிச்ச‌ "நாய‌க‌ன்"னு ஒரு பட‌ம் இருக்கு, அத‌ வேண்ணா பாக்குறீங்க‌ளா...

செ: என்ன நீங்க‌ வியாபார‌ம் ப‌ண்றீங்க‌? எத‌ கேட்டாலும் இல்ல‌ இல்ல‌ன்னுட்டு...ச‌ரி ஏதோ ஒண்ணு குடுங்க‌

(க‌வுண்ட‌ம‌ணி, வீர‌த்த‌ள‌ப‌தி ஜேகேஆர் MP ந‌டித்த‌ நாய‌க‌ன் ப‌ட‌ டிவிடியை எடுத்து குடுக்கிறார். செந்தில் டிவிடி க‌வ‌ரை பார்த்துக்கொண்டிருக்க‌, நாலு க‌டை முன் ப்ரியாம‌ணி செல்போனில் பேசிக்கொண்டே க‌வுண்ட‌ம‌ணியின் க‌டையை நோக்கி வ‌ந்து கொண்டிருக்கிறார்)

க: ஐ, லேடீஸ் லேடீஸ்!!

ப்.ம‌: (அழுதுகொண்டே செல்போனில்) உன்ன‌ என‌க்கு புடிக்குண்டா, ரொம்ப‌ புடிக்குண்டா, ஏண்டா உன‌க்கு அது தெரிய‌மாட்டேங்குது?

இதோட‌ பார்ட் 1 முடியுது...என்ன‌து இதுல‌ கூட‌ பார்ட்லாம் இருக்குதான்னு கேக்காதீங்க‌. ஜீவ‌ன் ந‌டிச்ச‌ 'நான் அவ‌ன் இல்லை'லாம் பார்ட் பார்ட்டா வ‌ருது. க‌வுண்ட‌ர் எந்த‌ வித‌த்துல‌ ஜீவ‌னுக்கு கொறைஞ்சுட்டாரு? சோ, வெயிட் ஃபார் க‌வுண்ட‌ம‌ணியும், ப்ரியாம‌ணியும் பார்ட் 2....


Tuesday, December 15, 2009

நாங்க‌ளும் ர‌வுடிதான், நாங்க‌ளும் ர‌வுடிதான்!



விருதுக்கு ந‌ன்றி விக்கி:) பாத்துக்கோங்க‌ப்பா ந‌ம்ம‌ளையும் ம‌திச்சு விருது குடுத்துட்டாங்க‌, இனிமே நாங்க‌ளும் ர‌வுடிதான், நாங்க‌ளும் ர‌வுடிதான்! ஒரு மாச‌ம் முன்னாடி ஈ ம‌ட்டும் இல்ல‌, இருக்க‌ற‌ எல்லா பூச்சிக‌ளும் அடிச்சிட்டிருந்த‌ வ‌லைப்பூ இது. த‌மிழிஷ்ல‌ 'என்னையும் ஆட்ட‌த்துல‌ சேத்துக்கோங்க‌ப்பா'ன்ன‌ப்புற‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ந‌ம்ம‌ ச‌‌ன‌ங்க‌ த‌லையும் தெரிய‌ ஆர‌ம்பிச்சிடுச்சு. ந‌ல்ல‌வேளை ப்ளாக‌ர்ல‌யோ, த‌மிழிஷ்ல‌யோ எலிஜிபிலிட்டியா மினிம‌ம் இவ்ளோ ஃபாலோவ‌ர்ஸ் இருக்க‌ணும்னு இல்ல‌. அப்ப‌டி இருந்த‌துன்னா நான் எப்ப‌யோ க‌டைய‌ க‌ட்டிருப்பேன்.

இந்த‌ விருதை நானும் ரெண்டு பேருக்கு குடுக்க‌ணும்னு நினைக்குறேன். ஆக்சுவ‌லா நிறைய‌ பேருக்கு குடுக்க‌ணும்னுதான் ஆசை. ஆனா அவ‌ங்க‌ள்லாம் ஏற்க‌ன‌வே வாங்கிட்டாங்க‌. அப்ப‌டி வாங்குன‌வ‌ங்க‌ளுக்கும் ம‌றுப‌டியும் குடுக்க‌லாமான்னு தெரியல‌. 'லாம்'னா பின்னூட்ட‌த்துல‌ தெரிவிச்சிடுங்க‌. அடுத்த‌ ப‌திவுல‌ குடுத்துடுவோம்.

ப்ரியா - இவ‌ங்க‌ளோட‌ ஓவிய‌ங்க‌ளுக்காக‌வே தாராள‌மா இந்த‌ விருதை குடுக்க‌லாம். இவ‌ங்க‌ளும் என்னை போல் ப‌திவுல‌க‌த்துக்கு புதிய‌வ‌ர்ங்க‌ற‌தால‌ இந்த‌ விருது அவ‌ங்க‌ளுக்கு உற்சாக‌த்தை குடுக்கும்னு ந‌ம்புறேன்.

மோக‌ன் - கொஞ்ச‌ நாளா இவ‌ரோட‌ ப‌திவுக‌ளை ஒரு சைல‌ண்ட் ரீட‌ராக‌த்தான் ப‌டிச்சிட்டு வ‌ந்தேன். இப்போதான் பின்னூட்ட‌ ஆர‌ம்பிச்சிருக்கேன். இவரோட‌ எளிமையான‌ ந‌டை (அவ‌ர் ந‌ட‌க்கும்போது நீ பாத்தியான்னுலாம் கேக்க‌கூடாது) ரொம்ப‌வும் அருமையா இருக்கும். ப‌திவுல‌க‌த்துல‌ நீங்க‌ என‌க்கு சீனிய‌ர்தான், இருந்தாலும் ப‌ர‌வால்லைன்னு (விஜ‌ய் கையால‌ சிற‌ந்த‌ ந‌டிக‌ர் விருதை க‌ம‌ல் வாங்கின‌ மாதிரி) கொஞ்ச‌ம் அட்ஜஸ்ட் ப‌ண்ணி வாங்கிக்கோங்க‌ சார்.

****************

வ‌ர்ற‌ வெள்ளிகிழ‌மை "வேட்டைக்கார‌ன்" த‌விர்த்து இன்னும் ரெண்டு முக்கிய‌மான‌ விஷ‌ய‌மும் சினிமால‌ இருக்கு. ஒண்ணு ஜேம்ஸ் கேம‌ரூன் இய‌க்கிய‌ "அவ‌தார்" ரிலீஸ், இன்னொண்ணு "விண்ணை தாண்டி வ‌ருவாயா" ஆடியோ ரிலீஸ். கெள‌த‌ம் - ஏ.ஆர்.ர‌ஹ்மான் காம்பினேஷ‌ன்ங்க‌ற‌தால‌ பெரிய‌ ஹைப் க்ரியேட் ஆயிருக்கு. ல‌ண்ட‌ன்ல‌தான் ஆடியோ ரிலீஸாம். ஏன்யா, உங்க‌ளுக்குலாம் ரிஸ‌ஷ‌ன்னா என்ன‌ன்னே தெரியாதா?

*****************

போன‌ வார‌ம் "Phone Booth"னு ஒரு ப‌ட‌ம் டிவிடில‌ பாத்தேன் (ஒரிஜின‌ல் டிவிடின்னு சொன்னா நீங்க‌ ந‌ம்ப‌வாபோறீங்க‌, அத‌னால‌தான் ஒரிஜின‌ல்ல‌ பாக்க‌ல‌). 2003ல‌ வ‌ந்த‌ ப‌ட‌ம். Phone Booth இருக்க‌ற‌ அந்த‌ ஒரே ஒரு லொகேஷ‌னை வெச்சுகிட்டு சும்மா ஒண்ணேகால் ம‌ணி நேர‌ம் பின்னி எடுத்துருக்காங்க‌. செம‌ த்ரில்ல‌ர்! அந்த‌ பூத்தை விட்டு வெளியே வ‌ந்தினா சுட்டுபுடுவேன்னு ஹீரோவ‌ மிர‌ட்டுறார் வில்ல‌ன். ஏன் வில்ல‌ன் அப்ப‌டி ப‌ண்றார்? எப்ப‌டி ஹீரோ த‌ப்பிக்க‌றார்? ப‌ட‌த்தை பாருங்க‌, ஆனா குழ‌ந்தைக‌ளை ப‌க்க‌த்துல‌ வெச்சுகிட்டு பாக்க‌வேணாம். வார்த்தைக்கு வார்த்தை ஹீரோ F*** வார்த்தைய‌ யூஸ் ப‌ண்றார்

******************

போன‌ ப‌திவுல‌ எழுதுன‌ க‌தைய‌ ப‌டிச்சிட்டு வோட்டு போட்ட‌, பின்னூட்ட‌மிட்ட‌ எல்லாருக்கும் என‌து ந‌ன்றிக‌ள். அடுத்த‌ க‌தை எப்போன்னுலாம் வேற‌ பின்னூட்டிருக்காங்க‌. க‌லாய்க்க‌றாங்க‌ளா இல்ல‌ உண்மையா கேக்குறாங்க‌ளான்னு தெரிய‌ல. இந்த‌ வ‌லைப்பூ ஆர‌ம்பிச்ச‌ப்போ நான் எழுதின‌ ரெண்டு க‌தைக‌ளோட‌ லிங்க் கீழே குடுக்க‌றேன். புடிச்சிருந்தாலும், புடிக்காட்டாலும் பின்னூட்டிடுங்க‌. அப்போதான் ஃப்யூச்ச‌ர்ல‌ உங்க‌ள‌ அதிக‌ம் சோதிக்காம‌ இருப்பேன்.

க‌தை ஒண்ணு க்ளைமேக்ஸ் ரெண்டு

ஏதோ ஒண்ணு எழுத‌ணுமேன்னு எழுதின‌‌ க‌தை

Friday, December 11, 2009

அந்த‌ ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள்!

இன்னைக்கு ஒரு க‌தை(ங்க‌ற‌ பேர்ல‌ ஏதோ ஒண்ணு) எழுதியிருக்கேன். கொஞ்ச‌ம் பெரிய‌ ம‌ன‌சோ, சின்ன‌ ம‌ன‌சோ ப‌ண்ணி ப‌டிச்சுடுங்க‌. அப்ப‌டியே ஒரு வோட்டையும் போட்டு பின்னூட்ட‌த்தையும் போட்டுடுட்டீங்க‌ன்னா உங்க‌ எதிர்கால‌த்துக்கு ந‌ல்ல‌து‌. இல்ல‌ன்னா அடிக்க‌டி இந்த‌ மாதிரி க‌தை எழுதியே டார்ச்ச‌ர் ப‌ண்ணுவேன், பீ கேர்புல்! இனி....

ப‌ஸ் வ‌ந்துது. ப்ப்பா, செம‌ கூட்ட‌ம். என்ன‌ ப‌ண்ற‌து, இப்ப‌டித்தான் தின‌மும் போக‌வேண்டிய‌தாயிருக்கு. 15 நிமிஷ‌த்துல‌ இற‌ங்கிடுவேன்னாலும் இந்த‌ இடிஅமீன்க‌ள்கிட்ட‌யிருந்து ந‌ம்ம‌ள‌ காப்பாத்திக்க‌ற‌தே பெரும்பாடாயிருக்கு. அதுவும் சில‌பேர் பாக்க‌ற‌து இருக்கே‌, பார்வையாலேயே...ச்சே சொல்ற‌துக்கே கூசுது.

சைட் அடிச்சாலும் டீச‌ன்டா சைட் அடிங்க‌டா. எங்க‌ அழ‌கை ர‌சிக்க‌ற‌த‌ நாங்க‌ வேணாம்னா சொல்றோம். அதுல‌ ஒரு க‌ண்ணிய‌ம் வேணாம்? ராஸ்க‌ல்ஸ்‍னு (ம‌ன‌சுக்குள்ளே) திட்டிகிட்டே கூட்ட‌த்துல‌ அடிச்சு புடிச்சு ஏறி ஓர‌ள‌வு(க்காவ‌து) சேஃப்டியா போய் நின்னுகிட்டேன்.

"டைட‌ல் பார்க் ஒண்ணு குடுங்க‌"

நான் 100 ரூபா எடுத்து குடுக்க‌, அதுவ‌ரைக்கும் சாதார‌ண‌மா இருந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் முக‌ம், ச‌ர‌வ‌ண‌ப‌வ‌ன்ல‌ வெறும் ரெண்டு தோசை சாப்ட்டு பில்லை பாத்து ஷாக் ஆன‌வ‌ர் மாதிரி சிடுசிடுன்னு ஆயிடுச்சு. ஆனாலும் வெளிப்ப‌டையா காட்டிக்காம‌, "4 ரூபா சில்ற‌ இல்லியா"ன்னு முன‌கிகிட்டே டிக்கெட்ட‌ குடுத்துட்டார் (மீதி காசோட‌தான்).

அடுத்த‌ ஸ்டாப் வ‌ந்த‌வுட‌னே ரெண்டு லேடீஸ் இற‌ங்க‌, நான் உக்கார‌துக்கு இட‌ம் கிடைச்சுது. அப்பாடா! என்ன‌தான் சீக்கிர‌மே இற‌ங்க‌போறேன்னாலும் கொஞ்ச‌ தூர‌மாவ‌து உக்காந்துகிட்டுபோனாதான் ம‌னசுக்கு கொஞ்ச‌ம் திருப்தி. க‌லைஞ்சிருந்த‌ த‌லைமுடியை (சைட்ல‌ நாலு முடி க‌லைய‌ற‌மாதிரி வார்ற‌துதான் என‌க்கு புடிச்ச‌ ஸ்டைல்) கொஞ்ச‌ம் ச‌ரிப‌ண்ண‌போதுதான் அவ‌னை பார்த்தேன்! அவ‌னும் என்னை பார்த்தான்.

அவ‌ன் ஸ்டாண்டிங்ல‌ வ‌ந்துட்டிருந்தான். ஹும்ம்ம், கொஞ்சூண்டு (ந‌ல்லாயிருந்தாலும் கொஞ்சூண்டுன்னுதான் சொல்லுவோம்) ஹேண்ட்ச‌மாத்தான் இருந்தான். ந‌ல்ல‌ ஹைட், ஜிம் பாடி, ஷார்ட்டான ஹேர் க‌ட், ந‌ல்லா ப‌ளீச்னு ஷேவ் ப‌ண்ண‌ முக‌ம், டார்க் ப்ர‌வுன் ஷ‌ர்ட், லைட் கல‌ர் பேண்ட். பாக்க‌ற‌துக்கு Software Guy மாதிரிதான் இருந்தான். என்ன‌, ஆள் கொஞ்ச‌ம் லேசா மாநிற‌ம். க‌ல‌ர் க‌ம்மின்னாலும் க‌ளையான‌ முக‌ம்தான். சில‌ பொண்ணுங்க‌ளுக்கு வெனிலா ஐஸ்க்ரீம் க‌ல‌ர்ல‌ இருக்க‌ற‌ ப‌ச‌ங்க‌‌ள‌ புடிக்கும், சில‌ பொண்ணுங்க‌ளுக்கு சாக்லேட் க‌ல‌ர்ல‌ இருக்க‌ற‌ ப‌ச‌ங்க‌ள‌ புடிக்கும். சே, ரொம்ப‌ வழிய‌ற‌னோ? ப‌ர‌வால்ல‌, சுவாமி வ‌டிவேலான‌ந்தாதான் சொல்லியிருக்காரே, "இது வாலிப‌ வ‌ய‌சு".

அவ‌னும் என்னை அடிக்க‌டி பாத்துகிட்டேயிருந்தான். ஏன்னா நானும் அழ‌காயிருக்கேன் (இப்போ கொஞ்சூண்டுன்னு சொல்ல‌மாட்டேன்) இல்லியா. ரைட் சைடுல‌ பாக்க‌ற‌து, கையில‌ இருக்க‌ற‌ மொபைல‌ பாக்க‌ற‌து, அப்புற‌மா லெஃப்ட் சைடுல‌ திரும்பி என்னை பாக்க‌ற‌து, நான் பாத்த‌வுட‌னே பார்வை என் பின்னாடி எங்கேயோ போற‌துன்னு இந்த‌ ப்ராச‌ஸ் தொட‌ர்ந்துகிட்டேயிருந்த‌து.

இது எல்லாமே ஒரு 15, 20 செக‌ண்ட்ஸ்ல‌ ந‌ட‌ந்த‌துதான். அதுக்க‌ப்புற‌ம் நான் திரும்பி ஜ‌ன்ன‌ல் வெளியே வேடிக்கை பாத்துட்டு வ‌ந்தேன். அப்ப‌ப்போ ஓர‌க்க‌ண்ணால‌ அவ‌ன் என்னை பாக்குறானான்னு அவ‌னுக்கே தெரியாம‌ பாத்துகிட்டுதான் இருந்தேன். ஹி..ஹி..அவ‌ன் இன்னும் அந்த‌ ப்ராஸ‌ஸை மெதுவா தொட‌ர்ந்துகிட்டேதான் இருந்தான்.

இன்னும் அஞ்சு நிமிஷ‌த்துல‌ நான் இறங்க‌ணும். என்ன‌ ப‌ண்ற‌து, அவ‌ன் குடுத்துவெச்ச‌து அவ்ளோதான். ச‌ரி க‌டைசியா நாம‌ளும் ஒரு லுக் விட்டுக்குவோம்னு அவ‌னை பாத்தேன். ஓ மை காட்!!! அவ‌ன் கையில‌ சைல‌ன்ச‌ர் பொருத்திய துப்பாக்கி! கூட்ட‌த்துல‌ யாருமே இத‌ க‌வ‌னிக்க‌ல‌. அத‌ பாத்த‌தும் ச‌ந்திர‌முகி ஜோதிகா ரேஞ்சுக்கு என‌க்கு க‌ண்ணு பெரிசாயிடுச்சே த‌விர‌ ப‌ய‌த்துல‌ வாயில‌ வார்த்தையே வ‌ர‌ல‌. அட‌ ம‌க்க‌ளே, உங்க‌ள்ல‌ யார் யார‌ சுட‌ப்போறான்னு தெரிய‌லையே!

அடுத்த‌ ஸ்டாப்கிட்ட‌ ப‌ஸ் ஸ்லோவாகும்போதே அவ‌ன் இற‌ங்கிட்டான். அதே நேர‌ம், அவ‌ன் ப‌க்க‌த்துல‌ ப‌ஸ்ல‌ நின்னுகிட்டிருந்த‌வ‌ர் திடீர்னு கீழே விழுந்தார். அவ‌ர் ச‌ட்டை பின்னாடி ர‌த்த‌ம்! என‌க்கு விய‌ர்த்து கொட்டி என்னோட‌ மேக்க‌ப்லாம் க‌லைஞ்சுகிட்டிருந்த‌து. ஜ‌ன்ன‌ல் வெளியே எட்டி பாத்தேன். அவ‌ன் இன்னொருத்த‌ன் பைக்ல‌ ஏறி உட்கார‌, அந்த‌ பைக் சீறி கிள‌ம்ப‌, அவ‌ன் திரும்பி பாத்தான். யெஸ் என்னைதான், என்னையேதான்! சிரிச்சுகிட்டே Bye சொன்னான். கையாலேயே 1 4 3ன்னு அவ‌ன் காமிக்க‌, என‌க்கு அப்ப‌டியே தூக்கிவாரிபோட்டுது!

நான் ட‌க்குன்னு திரும்பி த‌லைய‌ குனிஞ்சுகிட்டே ம‌னசுக்குள்ளே திட்ட‌ ஆர‌ம்பிச்சேன், "போடா வெள‌க்கெண்ண‌, ஒரு கொலைகார‌னை ல‌வ் ப‌ண்ணுற‌துக்கு நான் என்ன‌ சினிமால‌ வர்ற‌ ஹீரோயினா? ஐ'ம் எ சாஃப்ட்வேர் என்ஜினிய‌ர் ஃப்ர‌ம் ச‌வுத் த‌மில்நாடு, ந‌ல்லா ச‌ம்பாதிச்சிfying இன் சென்னை அண்ட் வொர்க்கிங் இன் எ வெள்ளைக்கார‌ன் க‌ம்பெனி"

இந்த‌ நேர‌த்துல‌ ப‌ஸ்ஸுல‌ எல்லாரும் ப‌ய‌த்துல கீழே இற‌ங்கிட்(டோம்)டாங்க‌. அதுக்குமேல‌ அங்க‌ நிக்க‌ ப‌ய‌ந்துகிட்டு நான் ந‌ட‌ந்தே ஆஃபிஸுக்கு வ‌ந்துட்டேன். ஆஃபிஸ் உள்ள‌ போற‌துக்கு முன்னாடி ரிச‌ப்ஷ‌ன்ல‌ இருக்க‌ற‌ அந்த‌ க‌ண்ணாடி க‌த‌வு வ‌ழியா பாத்தேன். ஓ மை காட்! அய்யோ! போச்சு, போச்சு...நான் இன்னிக்கு அவ்ளோதான். க‌ட‌வுளே, நீதான் என்னை எப்ப‌டியாவ‌து காப்பாத்த‌ணும்! என்ன‌ ப‌ண்ண‌ப்போறேன்னு தெரிய‌லையே! அட‌, நீங்க‌ ப‌த‌றாதீங்க‌, அங்க‌ ஒண்ணும் அந்த‌ கொலைகார‌ன் இல்ல‌. அந்த‌ க‌ண்ணாடில‌ பாத்த‌ப்புற‌ம்தான் தெரிஞ்சுகிட்டேன், என் மேக்க‌ப்லாம் சுத்த‌மா போச்சு...

நீதி: தாதா க‌தைல‌ வ‌ர்ற‌ ஹீரோவோட‌ ஃப்ரெண்ட்ஸுங்க‌தான் தோள் வ‌ரைக்கும் முடி வெச்சுகிட்டு நாலு ஃபுல் மீல்ஸ் சாப்ட்டு உட‌ம்ப‌ வ‌ள‌ர்த்து வெச்சுருப்பாங்க‌. ஆனா ஹீரோ ஹேர்லாம் ஷார்ட்டா வெட்டிகிட்டு, ஜிம்முக்கு போய் உட‌ம்ப ஏத்தி ஸ்மார்ட்டாதான் இருப்பாரு.
உதா: வ‌சூல்ராஜா-க‌ம‌ல், ஆறு-சூர்யா, ஜெமினி-விக்ர‌ம் இன்னும் எஜ்ஜ‌ட்ரா எஜ்ஜ‌ட்ரா....


Tuesday, December 08, 2009

டிய‌ர் ப்ளூ க்ராஸ் - இது நியாய‌மா?


இது கொஞ்ச‌ நாள் முன்னாடி என் ஃப்ரெண்டுக்கு ந‌ட‌ந்த ஒரு அனுப‌வ‌ம். இத‌ ப‌த்தி எழுத‌ணும், எழுத‌ணும், எழுத‌ணும்னு நினைச்சு இன்னைக்குதான் எழுத‌றேன். ஏன்னா எதையும் பிளான் ப‌ண்ணி ப‌ண்ண‌ணும்னு சுவாமி ச‌ங்கிம‌ங்கியார் சொல்லியிருக்க‌றார் இல்லியா, அதான். என் ஃப்ரெண்டு....ஹும்..அவ‌ர் பேர் வேணாம், Mr.100னு வெச்சுக்க‌லாம் (கொஞ்ச‌ நாள் Mr.எக்ஸ் ரெஸ்ட் எடுக்க‌ட்டுமே). அதென்ன‌ 100ன்னா கேக்குறீங்க‌? கேப்பீங்க‌ கேப்பீங்க‌, ஜேம்ஸ் பாண்ட் 007ன்னு வெச்சுக்க‌லாம். ஏன் என் ஃப்ரெண்டு 100னு வெச்சுக்க‌கூடாதா? எல்லாரும் ரைட் சைடு கொஞ்ச‌மா த‌லைய‌ திருப்பி மேல‌ பாருங்க‌. இனி ஒரு கொசுவ‌த்தி...

அன்னைக்கு புடுங்க‌ வேண்டிய‌ ஆணிங்க‌ கொஞ்ச‌ம் க‌ம்மியா இருந்த‌தால‌, ரிலாக்ஸா, த‌ம் அடிக்க‌ற‌ ஃப்ரெண்டுக்கு க‌ம்பெனி குடுக்க‌லாம்னு Mr.100 ஆஃபிஸ் கீழே இருக்க‌ற‌ டீக்க‌டைக்கு போயிருக்க‌றார். அங்க‌ ஓர‌த்துல‌ ஒரு சின்ன‌ புறா க‌ழுத்துல‌ அடிப‌ட்டு ர‌த்த‌ம் வ‌ந்து வ‌லியால‌ துடிச்சிட்டிருந்த‌து. அத‌ யாரும் பாக்க‌லியா இல்ல‌ பாத்தும் பாக்காத‌ மாதிரி இருந்துட்டாங்க‌ளான்னு தெரிய‌ல். ஆனா Mr. 100 அத‌ பாத்த‌ உட‌னே வேள‌ச்சேரி மெயின் ரோட்ல‌ இருக்க‌ற‌ ப்ளூக்ராஸுக்கு (செக்போஸ்ட்கிட்ட‌யிருக்கு, இதுதான் கிண்டில‌யிருந்து ப‌க்க‌ம், இன்னொன்னு ஆழ்வார்ப்பேட்டைல‌ இருக்கு) போன் ப‌ண்ணியிருக்க‌றார். அங்க‌ ஃபோன் அட்டெண்ட் ப‌ண்ண‌வ‌ர் சொன்னார். அவ‌ர் சொன்ன‌ வார்த்தைக‌ளை அப்ப‌டியே இங்க‌ எழுத‌றேன். ரொம்ப‌வும் அசால்ட்டான‌ டோனில்...

"இப்போதைக்கு வ‌ந்து எடுத்துட்டு போக‌முடியாது. நீங்க‌ளே எடுத்துட்டு வ‌ந்துடுங்க‌"

ப்ளூக்ராஸுங்க‌ற‌து வில‌ங்கு, ப‌ற‌வைக‌ளுக்கான அமைப்புதானே? அங்க‌ வேலை செய்ய‌ற‌வ‌ரே இப்ப‌டி சொல்ற‌து ச‌ரியா? இப்போதைக்கு வ‌ர‌முடியாதுன்னா என்ன‌ அர்த்த‌ம்? அந்த‌ புறா இறந்த‌துக்க‌ப்புற‌ம் வ‌ந்து எடுத்துகிட்டு போய் முறையான‌ ச‌ட‌ங்குக‌ளோட‌ கொள்ளி வெப்பாரா, புதைப்பாரா இல்ல‌ அட‌க்க‌ம் ப‌ண்ணுவாரா? ஏன் அவ‌ருக்கு அங்க‌ ச‌ம்ப‌ள‌ம் ஒழுங்கா த‌ர்ற‌‌தில்லையா? ஒருவேளை உண்மையாவே அவ‌ர் அங்க‌ பிஸியா இருந்திருந்தா அத‌ சொல்லியிருக்க‌லாமே? ஏன் வேற‌ ஆளுங்க‌ளே இல்லியா? இப்ப‌டி ஏக‌ப்ப‌ட்ட‌ ?க‌ள்தான் ம‌ன‌சுல‌ தோணுது.

ஆனா அவ‌ர்தான் அப்ப‌டி சொல்லிட்டாரேன்னு விடாம‌, Mr.100ம் இன்னொரு ந‌ண்ப‌ரும்‌ ஆஃபிஸ்ல‌ இன்ஃபார்ம் ப‌ண்ணிட்டு ஆட்டோ (கிண்டி‌ ஒலிம்பியால‌ருந்து வேள‌ச்சேரி செக்போஸ்ட் போய்வ‌ர‌ ஆட்டோ டிரைவ‌ர் அப்-அண்ட்-ட‌வுண் 150 ரூபா கேட்டார்) அரேஞ்ச் ப‌ண்ணி அந்த‌ ப்ளூக்ராஸுக்கே எடுத்துட்டு போய் விட்டுட்டு வ‌ந்தாங்க‌.

கொஞ்ச‌ம் யோசிச்சு பாருங்க‌, அன்னைக்குன்னு பாத்து நிறைய‌ ஆணிங்க‌ இருந்திருந்து, "புறா அடிப‌ட்டிருக்கு, ப்ளூக்ராஸ் வ‌ரைக்கும் போக‌ணும்"னு சொல்லியிருந்தா க‌ண்டிப்பா ஆஃபிஸ்ல‌ ப‌ர்மிஷ‌ன் குடுத்துட்டிருக்க‌மாட்டாங்க‌. அவ‌ரும் போகமுடியாத‌ சூழ்நிலைல‌ மாட்டியிருப்பார். ந‌ல்ல‌வேளை அதிர்ஷ்ட‌வ‌ச‌மா அதுமாதிரி ந‌ட‌க்க‌ல‌. ப்ளூக்ராஸ்ல‌ இருக்க‌ற‌வ‌ங்க‌ளால‌ டைமுக்கு வ‌ர‌முடியாதுன்னா இதுமாதிரி உயிர்க‌ள‌ காப்பாத்த‌ணும்னா கால் ப‌ண்ணுங்க‌ன்னு ஏன் நிறைய‌ இட‌த்துல‌ விள‌ம்ப‌ர‌ம் ப‌ண்றாங்க‌.

சொன்னா எத்த‌னை பேரு ந‌ம்புவீங்க‌ன்னு தெரிய‌ல‌. கிண்டி ஒலிம்பியால‌ருந்து வேள‌ச்சேரி செக்போஸ்ட் அப்-அண்ட்-ட‌வுணுக்கு 150 ரூபா கேட்ட‌ ஆட்டோ டிரைவ‌ர், அந்த‌ புறாவை விட்டுட்டு வ‌ந்த‌துக்க‌ப்புற‌ம் 100 ரூபாயே போதும்னு சொல்லிட்டார். தின‌மும் due க‌ட்ட‌ வேண்டிய‌ நிலையில‌ இருக்க‌ற‌ ஒரு ஆட்டோ டிரைவ‌ருக்கு இருந்த‌ அந்த‌ ம‌ன‌சு, ம‌னிதாபிமான‌ம்...ப்ளூக்ராஸுல‌ ஃபோன் அட்டெண்ட் ப‌ண்ண‌வ‌ரோட‌ அல‌ட்சிய‌ம்...என்ன‌த்த‌ சொல்ற‌து, ஆட்டோகார‌ர்க‌ள் எல்லாரும் மோச‌மான‌வ‌ங்க‌ன்னு சொல்ல‌‌முடியாது. அதே மாதிரி ப்ளூக்ராஸ்ல‌ இருக்க‌ற‌வ‌ங்க‌ எல்லாரும் உயிரின் ம‌திப்பு தெரிஞ்ச‌வ‌ங்க‌ன்னும் சொல்ல‌‌முடியாது.

ப்ளீஸ் த‌ய‌வுசெஞ்சு புறாவுக்காக‌ல்லாம் ஒரு ப‌திவான்னு நென‌ச்சுடாதீங்க‌. அப்புற‌ம் அந்த‌ ப்ளூக்ராஸ் உத்த‌ம‌ருக்கும் ந‌மக்கும் ஒரு வித்தியாச‌மும் கிடையாது.

Friday, December 04, 2009

த‌மிழ் சினிமாவில் ஒரு Paranormal Activity - இரா








த‌மிழ் சினிமாவில் ஒரு Paranormal Activity - இரா

என் ந‌ண்ப‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிருக்க‌ற‌துனால‌ சொல்ல‌ல‌, ஆனா இது உண்மை. Paranormal Activity எந்த‌ள‌வுக்கு ப‌ர‌ப‌ர‌ப்பு உண்டாக்குச்சோ, எந்த‌ள‌வுக்கு ர‌சிக‌ர்க‌ளை ஈர்த்துச்சோ அத‌விட‌ அதிக‌மா இந்த‌ ப‌ட‌ம் எல்லோரையும் க‌வ‌ர‌ப்போகுதுங்க‌ற‌து ம‌ட்டும் உண்மை.

ப‌ட‌த்துக்கு ஒட்டாத‌ காமெடி ட்ராக், நமீதா க்ளாம‌ர், குத்து பாட்டு இப்ப‌டி எதுவுமில்லாம‌லும் ஆடிய‌ன்ஸை உக்கார‌வைக்க‌முடியும்ங்க‌ற‌துக்கு எடுத்துக்காட்டு இந்த‌ ப‌ட‌ம்.

இந்த‌ ப‌ட‌த்த‌ பார்த்த‌ த‌யாரிப்பாள‌ர் க‌லைப்புலி தாணு சொன்ன‌து, "த‌மிழ் சினிமாவோட‌ ஜீனிய‌ஸ்னு சொல்ற‌ எல்லாருக்கும் இந்த‌ ப‌ட‌த்த‌ போட்டுகாட்டுங்க‌".

இந்த‌ ப‌ட‌த்த‌ ப‌த்தி தெரிஞ்சுக்க‌ விரும்ப‌ற‌வ‌ங்க‌ இந்த‌ மின்ன‌ஞ்சலுக்கு உங்க‌ கேள்விக‌ளை/க‌ருத்துக‌ளை/ச‌ந்தேக‌ங்க‌ளை அனுப்ப‌லாம் - moveemaker@gmail.com

இதுக்கு மேல‌ நான் எதுவும் சொல்ல‌ விரும்ப‌ல‌. இனிமே இந்த‌ ப‌ட‌ம் பேச‌ட்டும். வெகு விரைவில்...வெள்ளித்திரையில்!

Wednesday, December 02, 2009

அஜித், விக்ர‌ம், சூர்யா வ‌ரிசையில்...

டிஸ்கி: மேலே பட‌த்துல‌ இருக்க‌ற‌ பாட்டில்ல‌ என்ன‌ இருக்குன்னுலாம் என்னை கேக்காதீங்க‌. என‌க்கு தெரியாது. ஹும்...may be இள‌நீரா இருக்க‌லாம்.

அஜித், விக்ர‌ம், சூர்யா - இவ‌ங்க‌ளுக்கு அப்புற‌ம் த‌ன்ன‌ம்பிக்கைக்கு உதார‌ண‌மா என்னையும் சொல்ல‌லாம். என்ன‌டா இவ‌ன் திமிரா சொல்றானேன்னு நினைக்காதீங்க‌. யோசிச்சி பாருங்க‌, இப்ப‌ கொஞ்ச‌ நாள் முன்னாடிதான் ப்ளாக்வோட‌ ஃபாலோவ‌ர்ஸ் ந‌ம்ப‌ர் ட‌புள் டிஜிட்ட‌ தொட்டுது. இதுவ‌ரைக்கும் எல்லா ப‌திவுக‌ளுக்கும் சேர்த்து போட்டிருக்க‌ற‌ க‌மெண்ட் எண்ணிக்கை 30, 35கூட‌ தாண்டாது.

என்ன‌தான் சொல்ல‌வ‌ர்றேன்னு புரியுதா? மேலே இருக்க‌ற‌ ப‌ட‌த்த‌ பாத்து புரிஞ்சுட்டிரூப்பிங்க‌ளே. அட‌, இது 50வ‌து ப‌திவுங்கோ! ஹே ஹே ஜுஜும் டாக் ஹே ஹே ஜுஜும் டாக்..ஒண்ணுமில்ல‌, 50வ‌து ப‌திவுன்னு சொல்லும்போது ஒரு BGM வேணுமில்ல‌. இப்போ ம‌றுப‌டியும் மேல‌ இருக்க‌ற‌ பாராவை ப‌டிச்சிட்டு அடுத்த‌ பாராவை ப‌டிங்க‌‌.

இதுக்க‌ப்புற‌மும் ந‌ம‌க்கும் ஒரு வாச‌க‌ர் வ‌ட்ட‌மோ, ச‌துர‌மோ, செவ்வ‌க‌மோ உருவாகும்ங்க‌ற‌ நினைப்புல‌ எழுதிட்டிருக்கேனே, இப்போ சொல்லுங்க‌ என்னையும் அந்த‌ த‌ன்ன‌ம்பிக்கை லிஸ்ட்ல‌ சேத்துக்க‌லாமில்ல‌? Yesனு சொல்ற‌வ‌ங்க‌ள ஐ'ம் அப்ரிசியேட்(ம‌யில்சாமி ஸ்டைலில்). Noன்னு சொல்ற‌வ‌ங்க‌ளுக்கு ஒரு கேள்வி. Noக்கு எதிர்ப்ப‌த‌ம் என்ன‌? ஆங்..நீங்க‌ளும் Yes சொல்லிட்டீங்க‌ பாத்தீங்க‌ளா...(இது த‌ல‌ ஸ்டைலில்) அதேய்... (சே, என்னாவொரு அறிவுடா, ISROவும், NASAவும் உன்னை மிஸ் ப‌ண்ணிட்டாங்க‌).

நிறைய‌ ப்ளாகுக‌ளை ப‌டிச்சிட்டிருந்த‌ப்ப‌தான் என‌க்கு நாம‌ளும் ஒண்ணு ஆர‌ம்பிப்போமேன்னு தோணுச்சு. உண்மையாவே கேபிளார் என‌க்கு ஒரு மிக‌ப்பெரிய‌ இன்ஸ்பிரேஷ‌ன். சினிமா விம‌ர்ச‌ன‌ம், சினிமா வியாபார‌ம், கொத்து ப‌ரோட்டான்னு பொள‌ந்துக‌ட்றார் ம‌னுஷ‌ன்.

ப்ளாக்னு ஒண்ணு ஆர‌ம்பிச்சிட்டேனே த‌விர‌ என்ன‌த்தை எழுத‌ற‌துன்னு தெரியாம‌ ஏதேதோ எழுதிகிட்ரு(க்கேன்)ந்தேன். நான் ஆர‌ம்ப‌த்துல‌ எழுதுன‌த‌லாம் இப்ப‌ ப‌டிச்சா என‌க்கே செம‌ மொக்கையா இருக்கு (ஆமா, இப்ப‌ எழுத‌ற‌து ம‌ட்டும் என்ன‌வாம், என்ன‌மோ சுஜாதாதான் ஆவியா உன் உட‌ம்புல‌ புகுந்துகிட்டு எழுத‌வெக்குற‌ மாதிரி, எதுக்குடா ஓவ‌ர் சீன்?)

என்ன‌டா எவ்ளோ எழுதினாலும் யாரும் க‌மெண்ட் போட‌மாட்டேங்குறாங்க‌ளேன்னு புல‌ம்பிட்டிருந்த‌ப்போ ஃப்ரெண்டு சொன்னார்.

"நீங்க‌ எழுத‌ற‌த‌ த‌மிழ்ம‌ண‌த்திலும், த‌மிழிஷ்லயும் போடுங்க‌"

"அப்டின்னா?"

"என்ன‌ நீங்க‌, ப்ளாக் எழுதுறீங்க‌, த‌மிழ்ம‌ண‌ம்லாம் தெரிஞ்சுக்காம‌ இருக்க‌றீங்க‌ளே"ன்னு ப‌ளிச்சுன்னு ஒரு ப‌ல்பு குடுத்தார்.

நாம‌ வாங்காத‌ ப‌ல்பா, இதுக்கெல்லாம் அச‌ருவோமா என்ன‌? அவ‌ரே விள‌க்க‌ம் குடுத்தார். அதுக்க‌ப்புற‌ம் ஒரு த‌ட‌வை த‌மிழ்ம‌ண‌த்தை முக‌ர்ந்துகிட்டிருந்த‌ப்போ "குறும்ப‌ன்"ங்க‌ற‌ பேர்ல‌ இன்னொருத்த‌ர் இருக்க‌ற‌த‌ பாத்தேன். என்ன‌டா இது, ந‌ம‌க்கு இப்ப‌டி ஒரு சோத‌னையான்னு ஃபீல் ப‌ண்ண‌ப்போதான் தோணுச்சு. நான் 10th ப‌டிக்கும்போது க்ளாஸ்ல‌ A.ச‌திஷ், B.ச‌திஷ், R.சதிஷ், S.ச‌திஷ்னு மொத்த‌ம் நாலு ச‌திஷுங்க‌ இருந்தாங்க‌. அதுபோல‌ நாம‌ளும் இருந்துட்டுபோவோம்னு விட்டுட்டேன்.

உண்மையான‌ பெய‌ர்க்கார‌ண‌ம் சொல்ல‌ட்டுமா? ஒரு த‌ட‌வை மைலாப்பூர் க‌பாலீசுவ‌ர‌ர் கோயில் போயிருந்த‌ப்போ அங்க‌ வ‌ரிசையா சாமி சிலைங்க‌ பின்னாடி த‌மிழ் மாத‌‌மும், ந‌ட்ச‌த்திர‌மும் வெச்சு, அந்தந்த‌ சாமி பேர் போட்டிருந்த‌த‌ பாத்தேன். அப்ப‌டி நான் பொற‌ந்த‌ மாத‌மும், ந‌ட்ச‌த்திர‌மும் வெச்சு போட்டிருந்த‌ பெய‌ர் "பெரும‌ழிசைக் குறும்ப‌ர்". நாம‌ என்ன‌த்த‌ சாதிச்சுட்டோம், ந‌ம‌க்கு எதுக்கு இப்ப‌டி ம‌ரியாதை. சோ, "ர்"ர‌ out ப‌ண்ணி "ன்"ன‌ in ப‌ண்ணி "குறும்ப‌ர்"ருக்கு ப‌தில் "குறும்ப‌ன்"னு ஆயிட்டேன்.

ஓகே ஒகே, 50க்கே ரொம்ப‌ ஆடாத‌, நிறைய‌ பேர் 100, 200னுலாம் தாண்டி போயிட்டிருக்காங்க‌ன்னு நீங்க‌ நினைக்க‌ற‌து புரியுது. இப்போ வேண்ணா, 100 அடிக்க‌ற‌து ச‌ச்சினுக்கு சாதார‌ண‌மா இருக்க‌லாம், ஆனா அவ‌ரோட‌ முத‌ல் 50 அவ‌ருக்கு ரொம்ப‌ ஸ்பெஷ‌லாத்தானே இருக்கும் (பார்றா, இதான் சாக்குனு ச‌ச்சினோட‌ க‌ம்பேர் ப‌ண்றான், டேய் இதெல்லாம்...). ச‌ரி இதோட‌ என்னோட‌ சுய‌புராண‌த்த‌ ஸ்டாப் ப‌ண்ணிக்குறேன் (அப்பாடா!).

இப்போ அப்டியே ச‌ம‌த்து புள்ளையா பின்னூட்ட‌த்த‌ போட்டுட்டு, த‌மிழிஷ்ல‌ ஒரு வோட்டையும் போட்டுடுவீங்க‌ளாம், ஓகேவா? குழ‌ந்தைய‌ (இது 200 ம‌ச்!) என்க‌ரேஜ் ப‌ண்ண‌னுமில்ல‌. ஹேய் ஹேய் யாருப்பா அது, அதுக்குள்ள‌ இந்த‌ விண்டோவ‌ க்ளோஸ் ப‌ண்ற‌து!