Thursday, October 29, 2009

டெர்ர‌ரா ஒரு எஸ்எம்எஸ்!



போன‌ வார‌ம் ஒரு நாள் ராத்திரி 8:45க்கு என் ஃப்ரெண்டுகிட்ட‌யிருந்து நாலு empty எஸ்எம்எஸ் வ‌ந்தது. என்ன‌டா இவ‌ன் கால் ப‌ண்ணாம‌, emptyயா எஸ்எம்எஸ் அனுப்ப‌றானேன்னு என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம். ச‌ரி நாம‌ளே கால் ப‌ண்ணுவோம்னு ப‌ண்ணா, ரிங் போகுது...போகுது...போய்கிட்டேயிருக்குது. அட்டெண்ட் ப‌ண்ண‌வேயில்ல‌. ச‌ரின்னு விட்டுட்டேன்.

கொஞ்சம் நேர‌ம் க‌ழிச்சு, என‌க்கு லேசா ப‌ய‌மும், ச‌ந்தேக‌மும் வ‌ர‌ ஆர‌ம்பிச்சுது. அவ‌னுக்கு ஏதாவ‌து ஆயிடுச்சோ...சே, ம‌னசுக்குள்ளே வேண்டிகிட்டேன், "பிள்ளையாரே, எந்த‌ த‌ப்பான‌ செய்தியும் என‌க்கு குடுத்துடாதே (ஏன் க‌ட‌வுளை எப்ப‌வும் ஒருமையிலேயே சொல்றோம்? இத‌ ப‌த்தியே ஒரு ப‌திவு எழுத‌லாம் போல‌..)"

ம‌ணி 10:30 ஆச்சு. இந்த‌ நேர‌ம் தூங்கிட்டிருப்பானோ? அப்புற‌ம் எதுக்கு நாலு வெத்து எஸ்எம்எஸ் அனுப்புனான்? வேணும்னே ந‌ம‌க்கு டெர‌ர் குடுக்குறானா? ம‌ன‌சு கேக்க‌ல‌, ம‌றுப‌டியும் கால் ப‌ண்ணேன். ஹுஹும், ரிங்தான் போய்கிட்டேயிருந்துது, சார் எடுக்க‌ற மாதிரியே தெரிய‌ல‌. ம‌றுப‌டியும் பிள்ளையாருக்கு ஒரு பெட்டிஷ‌ன், "ம‌றுப‌டியும் சொல்றேன், த‌ய‌வுசெய்து எந்த‌ த‌ப்பான‌ நியூஸும் என் காதுல‌ விழாம‌ நீதான் பாத்துக்க‌ணும்"

ம‌றுநாள் காலைல‌ 6:15. என்ன‌டா இவ‌ன் "வேட்டையாடு விளையாடு" ரேஞ்சுக்கு டைம் போட்டு, டைம் போட்டு டார்ச்ச‌ர் ப‌ண்றானேன்னு நீங்க‌ த‌ப்பா பீல் ப‌ண்ண‌க்கூடாது, ஓகேவா? "சித்தி"ய‌ல்ல‌ ம‌ட்டுமில்ல‌, "அர‌சி"ய‌ல்ல‌யும் இதெல்லாம் சாதார‌ண‌ம‌ப்பா...

அவ‌ன்கிட்ட‌யிருந்து கால் வ‌ந்த‌து ("கை" வ‌ர‌லியான்னுலாம் க‌டிக்காதீங்க‌).

"ஹ‌லோ, ன்ன‌டா, நைட் 10:30 ம‌ணிக்கு கால் ப‌ண்ணியிருக்க‌ற‌, ன்னாச்சு?"

"டேய் உங்கிட்ட‌யிருந்து நாலு empty எஸ்எம்எஸ் 8:45க்கு வ‌ந்துது. அத‌னால‌தான் கால் ப‌ண்ணேன், ஏன்டா எடுக்க‌ல‌?"

"மொபைல் சைல‌ண்ட்ல‌ போட்டுட்டேன், அத‌னால‌தான் கால் வ‌ந்த‌தே தெரிய‌ல‌"

"போடாங்ங்ங்ங்க, நான் என்ன‌மோ ஏதோன்னு ப‌ய‌ந்துட்டேன், ச‌ரி எதுக்கு emptyயா மெஸெஜ் அனுப்புன‌?"

"நான் எங்க‌டா அனுப்புனேன்?"

"டேய் நான் இன்னும் ஒரு மெஸெஜ‌ கூட‌ டெலிட் ப‌ண்ண‌ல‌, இந்த‌ வார‌ம் ஊருக்கு வ‌ரும்போது நீயே என் மொபைல பாரு"

"ச‌ரி வுட்றா, நைட் என் பைய‌ன் (5 வ‌ய‌சு) மொபைல‌ வெச்சு விளையாட்டிருந்தான், அவ‌ன் ஏதாவ‌து ப‌ட்ட‌ன‌ அமுக்கியிருப்பான், உன‌க்கு மெஸெஜ் வ‌ந்துருக்கும், இதெல்லாம் ஒரு மேட்ட‌ரா?"

அவ‌ன் சொன்ன‌த‌ கேட்ட‌தும் நான் அப்ப‌டியே "சாக்க்க்காயிட்டேன்"

தேவ‌ர் ம‌க‌ன் க்ளைமேக்ஸ்ல‌ க‌ம‌ல் பீல் ப‌ண்ண‌ ரேஞ்சுக்கு நானும் பீலிங்கோட‌ அவ‌ன்கிட்ட‌ சொன்னேன்.

"டேய் வேணாண்டா, போய் புள்ளைங்க‌ள‌ ப‌டிக்க‌ வைங்க‌டா, மொபைல்லாம் கைல‌ குடுக்காதீங்க‌டா, ஆ...ஆ..."

"அட‌ச்சே வெத்து மேட்ட‌ருக்கு ஓவ‌ரா சீன் போடாத‌, வீக்எண்ட் ஊருக்கு வ‌ந்தினா கால் ப‌ண்ணு, கால் ப‌ண்ண‌ல‌ன்னா, ம‌றுப‌டியும் எம் பைய‌ன்கிட்ட‌ மொபைல‌ குடுத்துடுவேன்"

"ங்ங்கொய்யாலே, அப்ப‌னும், புள்ளையும் வெளையாட‌ற‌தா இருந்தா பொம்மைய‌ வெச்சு வெளையாடுங்க‌டா, எதுக்கு என்னை வெச்சு வெளையாடுறீங்க‌" அப்ப‌டின்னு சொல்ல‌லாம்னு நென‌ச்சேன்.
ஆனா பாவி ப‌ய‌ அதுக்குள்ள‌ கால் க‌ட் ப‌ண்ணிட்டான். ந‌ட‌த்துங்க‌டா...நட‌த்துங்க‌
ச‌ரி நீயே ம‌றுப‌டியும் கால் ப‌ண்ணி திட்டிருக்க‌லாமேனு நீங்க் லாஜிக்கா கேக்க‌லாம், ஆனா என்ன‌ ப‌ண்ற‌து, அறியா பைய‌ன் தெரியாம‌ செஞ்சுட்டான். ச‌ரி பொழைச்சு போக‌ட்டும்னு விட்டுட்டேன். ஏன்னா நான் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்ன்ன்ன்ன்ன்ன், எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்னுதான‌ என‌க்கு மெஸெஜ் அனுப்புனான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................

Saturday, October 24, 2009

மீ த‌ எஸ்கேப்பு


இன்னைக்கு ஆஃபிஸ்ல‌ ப‌க்க‌த்து டீம்ல‌ இருக்க‌ற‌வ‌ர், ஏதோ ஒரு மொக்க‌ பாட்டு பாடிகிட்டிருந்தார். ஏழு, எட்டு அடி த‌ள்ளி உக்காந்துட்டிருந்த‌ என்னாலேயே அவ‌ர் இம்சைய‌ தாங்க‌முடிய‌ல‌. சே, அவ‌ர் ப‌க்க‌த்துல‌ உக்காந்துட்ருக்க‌ற‌வ‌ங்க‌ பாவ‌ம்னு ப‌ரிதாப‌ப்பட்டு க‌ள‌த்துல‌ இறங்குனேன்

(இந்த‌ இட‌த்துல‌ விஜ‌ய் ப‌ட‌த்துல‌ வ‌ர்ற‌ மாதிரி ஹே...ஹேன்னு பேக்கிர‌வுண்ட் மியூஜிக்.....ஓகே..ஓகே..ஓகே..இதெல்லாம் ஓவ‌ர்னு திட்டாதிங்க‌, மியூஜிக்க‌ க‌ட் ப‌ண்ணிடுறேன். சே, ஒரு வ‌ள‌ரும் க‌லைஞ‌னை என்க‌ரேஜ் ப‌ண்ணுவோம்னு நென‌ப்பீங்க‌ளா, அத‌ விட்டுட்டு...)

அவ‌ர்கிட்ட‌ போய் அவ‌ர் தோள்ல‌ கை வெச்சேன். நிமிர்ந்து பாத்தார்.

"வாழ்க்கைன்னா எல்லாருக்கும் ஏதாவ‌து க‌ஷ்ட‌ம் இருக்க‌த்தாங்க‌ செய்யும், அதுக்காக‌? எங்க‌ளையெல்லாம் பாருங்க‌, நாங்க‌ என்ன‌ அழுதுட்டா இருக்கோம்?"

2 செக‌ண்ட் என்னையே பாத்துகிட்டிருந்தார். ஏதோ கெட்ட‌ வார்த்தை யோசிச்சுட்டிருந்தாரு போல‌, அதுக்க‌ப்புற‌ம் நான் ஏன் அங்க‌ நிக்க‌றேன்?

மீ த‌ எஸ்கேப்பு!

அப்பாடா இப்போதான் ஆத்ம‌ திருப்தி, எப்ப‌டியோ இந்த‌ "மீ த‌ எஸ்கேப்பு"வ‌ நானும் யூஸ் ப‌ண்ணிட்டேன். "மைக்கேல் ம‌த‌ன காம‌ ராஜ‌ன்"ல‌ க‌ம‌ல் சொல்வாரே "ந‌ல்லாக்குதுபா இந்த‌ 'கேட்ச் மை பாய்ண்ட்', நானும் ச‌ம‌ய‌ம் வ‌ரும்போது யூஸ் ப‌ண்ணிக்க‌றேன்"னு, அதுமாதிரி ந‌மக்கு எப்போ சான்ஸ் கெடைக்கும்னு பாத்துகிட்டிருந்தேன். இதோ யூஸ் ப‌ண்ணியாச்சு:)

நிறைய‌ பேரோட‌ ப‌திவுக‌ள‌ ப‌டிக்கும்போது அதுல‌ என‌க்கு ரொம்ப‌ புடிச்ச‌ சொற்றொட‌ர் இந்த‌ "மீ த‌ எஸ்கேப்பு". இதுல‌ என்ன‌டா இருக்குன்னு நீங்க‌ கேக்க‌லாம். ஆனா என்ன‌ன்னு தெரிய‌ல‌, என‌க்கென்ன‌வோ........சிம்பிளா "த‌ள‌ப‌தி" ஷோப‌னா ஸ்டைல்ல‌ சொல்ல‌ணும்னா "புடிச்சிருக்கு"

Thursday, October 22, 2009

ஆப்புரைச‌ல்!



இட‌ம்: ஜில்ஜில் ஸ்வீட் ஸ்டால், சென்னை(யில‌ ஏதோ ஒரு ஏரியா...எங்க‌ளுக்கு வேறு கிளை, வேர், இலை, பூ, காய், ப‌ழ‌ம், திண்ணை, சொம்பு, ப‌ஞ்சாய‌த்து என்று எதுவும் கிடையாது)

நேர‌ம்: கூட்ட‌ம் இருந்தா க‌டை ஓன‌ருக்கு ந‌ல்ல‌ நேர‌ம், கூட்ட‌ம் இல்லினா 'ஈ'க்க‌ளுக்கு ந‌ல்ல‌ நேர‌ம்

த‌ம‌ன்னா சிரிக்கும் ச‌த்த‌ம்...

(எத்த‌னை நாளைக்குத்தான் டெலிபோன் ம‌ணி அடிச்ச‌துன்னா, ம‌னிஷா கொய்ராலா பாட்டி சிரிக்கும் ச‌த்த‌ம்னே சொல்லிட்டிருக்க‌ற‌து)

"ஹலோ ஜில்ஜில் ஸ்வீட் ஸ்டால்???"

எம‌ன் வாக‌ன‌ம் ரேஞ்சுக்கு இருக்க‌ற‌ ஒருத்த‌ர், ஓன‌ரா இருக்க‌ற‌தால‌ 'க‌ல்லா'ல‌ உக்காந்துகிட்டு ஃபோன் அட்டெண்ட் ப‌ண்றார்.

"ஆமா, நீங்க‌ யாரு?"


"நாங்க‌ கேக்கான்மேக்கான் மாக்கான் க‌ம்பெனில‌ இருந்து பேசுறோம், OMRல‌ இருக்கு, கேள்விப‌ட்டிருப்பீங்க‌"

"சொல்லுங்க‌"

"உங்க‌கிட்ட‌ ஸ்வீட்ஸ்லாம் ஃப்ரெஷ்ஷா இருக்கா?"

"(ஓன‌ர் த‌ன் ம‌ன‌துக்குள்) ஏண்டா நான் என்ன‌ ப‌ழ‌மா விக்க‌றேன், பிரெஸ்ஸா இருக்கா, அழுகிபோச்சான்னு கேக்க‌ற‌துக்கு"

"ஆங்....பிரெஸ்ஸாவே இருக்குதுங்க‌"

"த‌ட்ஸ் குட், ஒரு 1200 பேருக்கு வ‌ர்ற‌ மாதிரி, ஒவ்வொருத்த‌ருக்கும் அரைகிலோ ஸ்வீட், ஏதாவ‌து ஒரு அல்வா டைப்ல‌ குடுக்க‌ணும்"

"அதுக்கென்ன‌ சார், புதுசா 'பேக்கு' (Bekku) அல்வான்னு ஒண்ணு வ‌ந்திருக்கு, அதை குடுத்து உடுங்க‌, வெலையும் சீப்தான் சார்"

"அதென்ன‌ 'பேக்கு' அல்வா? Name புதுசா இருக்கே.."

"இந்த‌ அல்வா செய்யுற‌து 'பேக்கு' செடியோட‌ இலையில‌ருந்து சார். ந‌ம்ம‌ தோட்ட‌த்துல‌ இந்த‌ 'பேக்கு' செடிய‌ ந‌ட்டுவெச்சிட்டு, த‌ண்ணி கொஞ்சூண்டு ஊத்துனாபோதும், உர‌ம் வ‌ருஷ‌த்துக்கு ஒரு முறை கொஞ்சூண்டு போட்டா போதும். ஆனாலும் கொஞ்ச‌ம்கூட‌ சூடு சொர‌ணையே இல்லாம‌ ந‌ல்லா வ‌ள‌ர்ந்து, ந‌ம்ம‌ வியாபார‌த்துக்கு ஒத‌வியா இருக்கும். நாம‌ டெவ‌ல‌ப்பு ஆயிடுவோம், ஆனா இந்த‌ செடிங்க‌ அப்பு‌டியேதான் இருக்கும். அத‌னால‌தான் இதுக்கு பேரு 'பேக்கு' செடி"

"ஒகே, அல்வா'ஸ் ப‌ர்த் இன்ஃப‌ர்மேஷ‌ன் ஈஸ் நைஸ், நான் ஏற்க‌ன‌வே சொன்ன‌ மாதிரி, ஒவ்வொரு அரைகிலோவா, 1200 பேருக்கு குடுக்க‌ற‌ மாதிரி 'பேக்கு' அல்வாவை பேக் ப‌ண்ணிடுங்க‌"

"அதுக்கென்ன‌ சார், ப‌ண்ணிட‌லாம், ஆனா ஒரு ச‌ந்தேகம், தீபாவ‌ளிகூட‌ முடிஞ்சிடுச்சு, பொங்க‌லுக்கு இன்னும் நாள் இருக்குது, இப்போ என்ன‌ திடீர்னு எல்லாருக்கும் அல்வா குடுக்குறீங்க‌, க‌ம்பெனில‌ ஏதாவ‌து ஸ்பெஸ‌லா சார்?"

"யெஸ், எங்க‌ ஆஃபிஸ்ல‌ அப்ரைஸ‌ல் ஸ்டார்ட் ப‌ண்ண‌ப்போறோம்"

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........(இந்த‌ ப‌திவோட‌ த‌லைப்பை ம‌றுப‌டி பாருங்க‌)


Wednesday, October 21, 2009

Weekend


இன்னைக்கு ஆஃபிஸ் Pantryல‌ நானும் என் ஃப்ரெண்டும் உக்காந்துட்ருக்கும்போது எங்க‌ ப‌க்க‌த்து டீம்ல‌ இருக்க‌ற‌ ஒரு லேடி முக‌த்த‌ உம்முன்னு வெச்சுட்டு வ‌ந்தாங்க‌. தாய்க்குல‌ம் த‌லைகுனிந்தால் த‌மிழ்நாடு தாங்குமா???

"என்ன‌, உர்ர்ர்ர்னு வ‌ர்றீங்க‌?"

"அவ‌னுக்கு (வேற‌ யாரு, அவ‌ங்க‌ டீம் டேமேஜ‌ர்தான்...) கொஞ்ச‌மாவ‌து அறிவு இருக்கா? என் week offஅ Saturday, Sundayல‌ போடுறான்னா, Thursday, Fridayல‌ போட்டு வ‌ச்சிருக்க‌றான். அவ‌ருக்கு (Note this point your, our and everyone's honour, என்ன‌தான் வீட்ல‌ மொத்துனாலும், வெளியே சொல்லும்போது க‌ண‌வ‌னை...சேச்சே...க‌ண‌வ‌ரை "அவ‌ர்ர்ர்ர்", "இவ‌ர்ர்ர்ர்"னுதான் சொல்றாங்க‌) weekendல‌தான் off. இப்ப‌டி இருந்தா ஃபேமிலியோட‌ கொஞ்ச‌மாவ‌து டைம் ஸ்பெண்ட் ப‌ண்ண‌ முடியுமா? Married ப‌ர்ச‌னாச்சே, ஃபேமிலி இருக்குமேன்னு அவ‌னுக்கே (ம‌றுப‌டியும் டேமேஜ‌ர்தான்!) தெரிய‌வேணாம்?"

(அப்போ பேச்சுல‌ர் எல்லாம் டெஸ்ட் ட்யூப் பேபியா? எங்க‌ அப்பா, அம்மாவும் எங்க‌ளுக்கு ஃபேமிலிதானே?)

"ச‌ரி விடுங்க‌, அந்த‌ ரெண்டு நாளாவ‌து அவ‌ரு (அவ‌ங்க‌ளோட‌ க‌ண‌வ‌ர்ர்ர்ர்) ச‌ந்தோஷ‌மா, நிம்ம‌தியா இருக்க‌ட்டும்"

"என்ன‌ங்க‌, எல்லாரும்(!!!) இதையே சொல்றீங்க‌ளே!"

எல்லாருமா???? என்ன‌ ப‌ண்ற‌து, ச‌க‌ ம‌னித‌னுக்காக‌ ப‌ரிதாப‌ப்ப‌ட‌றோம்....ம்ம்ம்... ஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு க‌ஷ்ட‌ம்!



Tuesday, October 20, 2009

கலந்து அடி!


தீபாவ‌ளி எல்லாருக்கும் ந‌ல்ல‌ப‌டியா போச்சா? ஸ்வீட்டெல்லாம் சாப்புட்டு ந‌ல்லா என்சாய் ப‌ண்ணியிருப்பீங்க‌ளே...ந‌ல்லாருங்க‌ப்பு, ந‌ல்லாருங்க‌! ஏன் உன‌க்கு ஸ்டொம‌க் ப‌ர்னிங்னா கேக்க‌றீங்க‌? ஒரு ப‌ண்டிகையும் அதுவுமா உட‌ம்பு ச‌ரியில்லாம‌ 2 இட்லி, கொஞ்ச‌ம் ர‌ச‌ம் சாத‌ம்னு சாப்ட்டு பாருங்க‌, அப்போ தெரியும்.
ச‌ரி, இப்ப‌டி ஓரு தியாக‌த்துக்கு அப்புற‌மும் இந்த‌ ப‌ச்ச‌ம‌ண்ணு க‌ள‌த்துல‌ இற‌ங்கியிருக்குன்னு அப்ரிஷியேட் ப‌ண்ணி என‌க்கு விருதுலாம் எதுவும் குடுக்க‌ வேண்டாம் ப்ளீஸ்...ப்ளீஸ் சொன்னா கேளுங்க‌...ப்ச்...அய்யோ, அட‌ம் புடிப்பீங்க‌ளே! ச‌ரி, அப்புற‌ம் உங்க‌ இஷ்ட‌ம்!
***************************************************************************
நேத்து வி.சிறுத்தைக‌ள் திருமாவ‌ளவ‌னோட‌ பேட்டிய‌ ஜு.வில‌ ப‌டிச்சேன். அதுல‌ என‌க்கு புடிச்ச வ‌ரிக‌ள் "ப‌லியிடுவ‌து ஆடுக‌ளைத்தான், சிங்க‌ங்க‌ளை அல்ல‌" ப்பா...ந‌ல்ல‌ ப‌வ‌ர்ஃபுல்லான‌ வார்த்தைக‌ள். திருமா சார், எங்க‌யாவ‌து இந்த‌ இள‌வ‌ட்ட‌ ந‌டிக‌ர்க‌ள‌ பாத்தீங்க‌ன்னா ஒதுங்கிடுங்க‌. இல்ல‌ன்னா ப‌ஞ்ச் ட‌யலாக் எழுதித‌ர‌ சொல்லி, ப‌ய‌புள்ளைக‌, உங்க‌ள‌ வச‌ன‌கர்த்தாங்க‌ற‌ பேர்ல‌ காமெடிய‌னா ஆக்கிடுவாங்க‌.

***************************************************************************


ந‌டிக‌ர் விவேக்கை ஹீரோவா போட்டு ஆர‌ம்பிச்சா, அந்த‌ ப‌ட‌ங்க‌ளின் தயாரிப்பாள‌ர்க‌ள்லாம் ஏதாவ‌து ஒரு பிர‌ச்னையில‌ மாட்டிக்க‌றாங்க‌ன்னு கிசுகிசு பாணியில‌ "ந‌க்கீர‌ன்" செய்தி வெளியிட்டிருக்கு. அட‌, புவ‌னேஸ்வ‌ரி மேட்ட‌ர்ல‌ விவேக், ட‌வுச‌ர் பாண்டி ரேஞ்சுக்கு பேசுனார் இல்ல‌, அதுக்கான‌ ப‌ழிவாங்க‌ல் இது. இத‌ ப‌டிச்ச‌துல‌ருந்து இனிமே ந‌க்கீர‌ன் வாங்க‌கூடாதுன்னு முடிவு ப‌ண்ணிட்டேன்.


இவ்ளோ கோப‌ம் இருக்க‌ற‌வ‌ங்க‌ எதுக்கு இன்னும் சினிமா நியூஸை போட்டு ப‌த்திரிகை ந‌ட‌த்த‌றாங்க‌. ஏன்னா, த‌மிழ்நாட்டுல‌ துக்ள‌க் மாதிரி ஒண்ணு ரெண்டு ப‌த்திரிகைக‌ள் த‌விர‌ ம‌த்த‌து எல்லாம் சினிமாவ‌ ந‌ம்பிதான் இருக்கு. இவ‌ங்க‌ளுக்கு ஒரு ப‌க்க‌த்துல‌யாவ‌து சினிமா நியூஸை போட்டு ப‌க்க‌த்துலேயே‌ க‌வ‌ர்ச்சியா ஒரு ஹீரோயினோட‌ ஸ்டில் போட்டாதான் மோட்ச‌ம் கிடைக்கும் போல‌!

விவேக்கை வெச்சு இதே டைப் கிசுகிசுவை குமுத‌மும் வெளியிட்டிருக்கு. அட‌ ராமா! இதுல‌ கூட‌வா உங்க‌ ஒத்துமைய‌ காட்டுவீங்க‌? ரொம்ப‌ ஃபீல் ப‌ண்ண‌ வெக்குறீங்க‌...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

***************************************************************************


இய‌க்குன‌ர் பாலா அடுத்த‌து காமெடி ப‌ட‌ம் எடுக்க‌றாராம். ஓ காட், என்னால‌ ந‌ம்ப‌வே முடிய‌ல‌, பாலாவுக்கு ஏதாவ‌து ஆயிடுச்சா? முத‌ல் ப‌ட‌த்துல‌ருந்தே (ஒவ்வொரு ப‌ட‌த்துல‌யும்), க்ளைமேக்ஸ்ல‌ யார‌வ‌து ஒருத்த‌ரை போட்டு த‌ள்ளிகிட்டேதானே இருக்க‌றாரு. இப்போ காமெடின்னா என்ன‌ ப‌ண்ணுவாரு? சே! எப்பேர்ப்ப‌ட்ட‌ இய‌க்குன‌ருக்கு இப்ப‌டி ஒரு த‌ர்ம‌ச‌ங்க‌ட‌ம்!


இந்த‌ மேட்ட‌ருக்கும் மேல‌ இருக்க‌ற‌ ஃபோட்டோக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? ஆங்ங்...ப‌ம்ம‌ல் கே. ச‌ம்ப‌ந்த‌ம்..அட‌ நீங்க‌ வேற‌, நெட்ல‌ தேடி பாத்த‌துல‌ பாலா சிரிக்க‌ற‌ மாதிரி கிடைச்ச‌ ஒரே ஃபோட்டோ இதுதான்!

***************************************************************************

அதென்ன‌டா இந்த‌ ப‌திவுக்கு இப்ப‌டி ஒரு டைட்டில்னு நினைக்காதீங்க‌. ரெண்டு, மூணு மேட்ட‌ர் க‌ல‌ந்து குடுக்குறோம்ல‌, அதான்!

Friday, October 16, 2009

ஐ! தீபாவ‌ளி!


தீபாவ‌ளி வெள்ளிக்கிழ‌மைங்க‌றாங்க‌, இல்ல‌ல்ல‌ ச‌னிக்கிழ‌மைதாங்க‌றாங‌க‌. அட‌ இதுக்கு கூட‌ நீயா நானான்னு வ‌ந்து கோபிதான் க‌ருத்து சொல்ல‌ணுமா? வெள்ளிக்கிழ‌மை தீபாவ‌ளி, அத‌னால‌ ஆஃபிஸ் மூணு நாள் லீவு. ஸோ, ஆஃபிஸ‌ பொருத்த‌வ‌ரைக்கும் நாம‌ வெள்ளிக்கிழ‌மைதான் தீபாவ‌ளி கொண்டாடுறோம்.

அம்மாவை‌ கேட்டா ந‌மக்கு ச‌னிக்கிழ‌மைதான்டா தீபாவ‌ளிங்க‌றாங்க‌. ஸோ, வீட்ல‌ ச‌னிக்கிழ‌மைதான் தீபாவ‌ளி கொண்டாடுறோம். ஏதோ ஒண்ணு ந‌மக்கு லீவு வ‌ருதா, அதுதான் முக்கிய‌ம். என்ன‌தான் செவ‌ன் டாங்கீஸ் வ‌ய‌சு ஆனாலும், லீவுன்னு வ‌ந்தா ம‌ட்டும் ம‌னசு எல்கேஜி பைய‌ன் மாதிரிதான் இருக்குது.
இந்த‌ மாதிரி ப‌ண்டிகை டைம்ல‌ ப‌ஸ்ஸ‌ புடிச்சு நிம்ம‌தியா விண்டோ சீட்ல‌ உக்காந்துகிட்டு ஊருக்கு போனா, உண்மையாவே அது "இண்டியானா ஜோன்ஸ்" ரேஞ்சுக்கு ஒரு அட்வென்ச்ச‌ர்தான்.

பொங்க‌ல் அன்னைக்கு ஊருக்கு போன‌து பெரும் பாடு. மொத‌ல்ல‌ வேள‌ச்சேரில‌ இருந்து ஒரு ப‌ஸ்ஸ‌ புடிச்சு, கோய‌ம்பேடுக்கு போற‌துக்குள்ள‌, வ‌ழியில‌ செம‌ டிராஃபிக். இத்த‌னைக்கும் காலைல‌ 6:30 ம‌ணிக்கே. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ந‌க‌ர்ந்துகிட்டு இருந்த‌ வ‌ண்டி, கோய‌ம்பேடு கிட்ட‌ போகும்போது, என‌க்கு டைய‌ர்டா இருக்குன்னு சொல்லி அந்த‌ டிராஃபிக்க‌ கார‌ண‌ம் காட்டி நின்னுடுச்சு.

ச‌ரி, சிஎம்பிடிக்கு ந‌ட‌ந்தே போய், உள்ள‌ ப‌ஸ்ஸ‌ பாத்தா, ய‌ப்பா....எவ்வ்வ்வ்வ‌ளோ பேர்...அதுக்க‌ப்புற‌ம் ஸ்டாண்டிங்ல‌ போற‌ மாதிரிதான் ஒரு ப‌ஸ் கிடைச்சுது. மேல‌ கிடைக்குற‌ க‌ம்பிய‌ புடிக்கவே வேணாம், இந்த‌ ப‌க்க‌ம் ஒருத்த‌ர் நெருக்குறார், அந்த‌ ப‌க்க‌ம் ஒருத்த‌ர் நெருக்குறார். இந்த‌ மாதிரி கூட்ட‌த்துல‌ அது வ‌ரைக்கும் நான் போன‌தேயில்ல‌. இத‌ ப‌த்தி அப்புற‌ம் ஒரு ப‌திவ‌ (மொக்கைய‌???) போடுறேன்.

ப‌க‌வானே, இன்னைக்கு என்னை அந்த‌ மாதிரி க‌ஷ்ட‌ப்ப‌டுத்தாம‌ இருந்தா, இந்த‌ ச‌ண்டே அன்னைக்கு நான் ஆஃபிஸ்ல‌ ஸிக் லீவ் எடுக்க‌மாட்டேன்...இது ச‌த்திய‌ம்..ச‌த்திய‌ம்...ச‌த்திய‌ம்.
ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், அனைத்து ப‌திவ‌ர்களுக்கும் என‌து இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக‌ள்!

Thursday, October 15, 2009

ஸ்ஸ்ஸ்ஸ்....ஒரே டென்ஸ‌ன‌ப்பா!!!


போன‌ சன்டே ஒரு பேக்க‌ரிக்கு போய் ரெண்டு ப‌ப்ஸை உள்ளே த‌ள்ளிட்டு வ‌ரும்போது வீட்டுக்கு வாங்கிட்டு போக‌லாம்னு ஒரு மிரிண்டா ஹாஃப் லிட்ட‌ர் பாட்டில் கேட்டேன். 25 ரூபாய்னு சொன்னாங்க‌. ரொம்ப‌ நாளாவே தூங்கிட்டிருந்த‌ மூளை திடீர்னு எழுந்திடுச்சு. பாட்டில் வாங்கி எம்ஆர்பி பாத்தா 20 ரூபாய்னு போட்டிருந்த‌து.

"என்ன‌ங்க‌, இதுல‌ 20தான் போட்டிருக்கு, 25 சொல்றீங்க‌ளே"ன்னு கேட்டா, "25தான் சார்"னு ரொம்ப‌வே அல‌ட்சிய‌மா ப‌தில் வ‌ருது. என‌க்கு வேணாம்னு திருப்பி குடுத்துட்டேன். 5 ரூபா சாதார‌ண‌ விஷ‌ய‌மா இருக்க‌லாம். ஆனா இந்த‌ மாதிரி த‌ப்பு செய்ய‌ அவ‌ங்க‌ள‌ தூண்டுற‌தே நாம‌தான். ஒரு ப‌த்து பேர் இல்ல‌ இருப‌து பேர், இதே கார‌ண‌த்த‌ சொல்லி வாங்காம‌ இருந்தா, அவ‌ங்க‌ தானா 20 ரூபாய்க்கு குடுப்பாங்க‌. ஆனா நாம‌ வ‌ற‌ட்டு க‌வுர‌வ‌ம் பாத்து 5 ரூபாதானேன்னு க‌ம்முன்னு வாங்கிட்டு போய்ட்டா அவ‌ங்க‌ இதே த‌ப்பைதான் செய்வாங்க‌. அவ‌சிய‌ம்னா 1000 ரூபாய் செல‌வு ப‌ண்ண‌லாம், அனாவ‌சிய‌மா 1 ரூபாய் கூட‌ செல‌வு ப‌ண்ண‌கூடாது (வுட்டாண்டா ப‌ஞ்ச் ட‌ய‌லாக்!).

5 ரூபாய் எக்ஸ்ட்ராவா வாங்குற‌துலாம் த‌ப்பான்னு கேக்குற‌வ‌ங்க‌ளுக்கு, அந்நிய‌ன் பட‌த்துல‌ வ‌ர்ற‌ ஒரு ட‌ய‌லாக்கை ஞாப‌க‌ப்ப‌டுத்த‌ விரும்ப‌றேன் "த‌ப்பு என்ன‌ ப‌னிய‌ன் சைஸா? ஸ்மால், மீடிய‌ம், லார்ஜ்ன்னு இருக்க‌ற‌துக்கு?"

இது அந்த‌ பேக்க‌ரில‌ ம‌ட்டுமில்ல‌, எவ்ள‌வோ பேர் தின‌மும் வ‌ந்து போற‌ கோய‌ம்பேடு ப‌ஸ் ஸ்டாண்டுல‌யும் இப்ப‌டிதான் எம்ஆர்பிய‌ விட‌ அதிக‌மா வெச்சு விக்க‌றாங்க‌. அங்க‌ வாட‌கை அதிக‌ம்னா ஏன் கடை போடுறீங்க‌? எப்ப‌டியும் இந்த‌ மிடிள் கிளாஸ் கேனை ப‌ய‌லுக‌ வ‌ந்து வாங்குவாங்க‌ன்னுதானே?

இது எல்லாருக்கும் ந‌ட‌க்குதா, இல்ல‌ என‌க்கு ம‌ட்டுமா? எப்ப‌டி க‌ண்டுபுடிக்க‌றாங்க‌ன்னு தெரிய‌ல‌, ஒருவேளை இ.வா.ன்னு நெத்தியில‌ ப்ரிண்ட் ஆகுதோ????

Saturday, October 10, 2009

இங்கிட்டு இருந்து அங்கிட்டு


நைட் ஷிஃப்ட் ஒர்க் முடிச்சிட்டு நாம‌ளே(நான்தேன்!!) தூக்க‌ க‌ல‌க்க‌த்துல‌ போனா, ரோடு க்ராஸ் ப‌ண்ற‌துக்குள்ள‌, ஏதோ எதிரி நாட்டுக்குள்ள‌ நுழைய‌ற‌ மாதிரி பாத்து பாத்து போக‌வேண்டிய‌தாயிருக்குது. சிக்ன‌ல்ல‌ சிக‌ப்பா இருந்தா என்ன‌, ப‌ச்சையா இருந்தா என்ன‌, என் இஷ்ட‌த்துக்குதான் போவேன்னு ஒவ்வொரு வ‌ண்டியும் ப‌ற‌க்க‌ற‌ அழ‌க‌ பாக்க‌ணுமே. என்ன‌வோ இதுக்கு முன்னாடி இந்திய‌ன் ஏர்லைன்ஸ்ல‌ வேலை பாத்த‌ ரேஞ்சுக்கு, என்னா ஒரு வேக‌ம்!


க‌வ‌ர்ன்மெண்ட் ப‌ஸ், பிரைவேட் ப‌ஸ்னு இல்ல‌, டூவீல‌ர்ல‌ போற‌வ‌ங்க‌கூட‌ இப்ப‌டித்தான் போறாங்க‌. ஆட்டோ அண்ண‌ணுங்க‌ள‌ ப‌த்தி சொல்ல‌வே வேண்டிய‌தில்ல‌. த‌க‌வ‌ல் அறியும் உரிமை அடிப்ப‌டையில‌ ஒரு விவ‌ர‌த்த‌ கேக்க‌ணும். சென்னையில‌ ரோடு போட்ட‌போது, இந்த‌ ரோடுக‌ள‌ ஆட்டோ அண்ண‌ணுங்க‌ளுக்கே எழுதிவெச்சிட்டிருப்பாங்க‌ளோ??? இத‌ க‌ண்டிப்பா கேட்டு தெரிஞ்சிக்க‌ணும்.


ஏதோ அப்ப‌டி இப்ப‌டின்னு ந‌ம்ம‌ திற‌மையை முழுசா யூஸ் ப‌ண்ணி இந்த‌ பக்க‌த்துல‌ இருந்து, ந‌டுவுல‌ போய் நின்னுட்டோம்னு வைங்க‌, பாதி ச‌க்ஸ‌ஸ்தான். ஆனா இந்த‌ நேர‌த்துக்குள்ள‌, ந‌ம்ம‌ள‌ தாண்டி போன‌ வ‌ண்டிக‌ள்ள‌ ஒரு டிரைவ‌ராவ‌து ந‌ம்ம‌ளோட‌ குல‌ம், கோத்திர‌ம்லாம் கேக்காம‌லேயே ந‌ம‌க்கு அர்ச்ச‌னை ப‌ண்ணியிருப்பார், "ப‌ர‌தேசி, கொஞ்ச‌மாவ‌து உயிர்மேல‌ ப‌ய‌ம் இருக்குதா பாரு". இதோட‌ ஃப்ர்ஸ்ட் ஹாஃப் முடியுது.


இப்போ செக‌ண்ட் ஹாஃப். ச‌ரி நாம‌தான் ந‌டுவுல‌ வ‌ந்து நின்னுட்டோமே, க்ராஸ் ப‌ண்ணி ட‌க்ன்னு போயிட‌ முடியாது. ந‌ம்ம‌ ட‌க்கு அவ்ளோதான்! 'ச‌ச்சின்' விஜ‌ய் க‌ண‌க்கா ரைட் சைடுல‌ த‌லைய‌ மேல‌ திருப்பி சிக்ன‌ல பாத்தா, ஏதோ அஜித்க்கு ஃபேன் மாதிரி சிக்ன‌லும் 'ரெட்' காட்டிட்டிருக்கும். 'க‌ள‌த்துல‌ இற‌ங்குடா ம‌ச்சி'ன்னு ம‌ன‌சு சொல்லுற‌த‌ கேட்டு லெஃப்ட்ல பாக்காம‌ இற‌ங்குனோம்னு வெச்சுக்குங்க‌, அவ்ளோதான், அங்க‌ எம‌த‌ர்ம‌ன் லாரி டிரைவ‌ராக‌வோ, ப‌ஸ் டிரைவ‌ராகவோ கெட்ட‌ப் மாத்தி வ‌ந்துட்டிருப்பார். பாச‌க்க‌யிறுக்கு ப‌திலா ஸ்டீய‌ரிங்.


ஆனா நாம‌ யாரு? உண்மைய‌ சொன்னா லீவு கிடைக்காதுன்னு தெரிஞ்சு, வ‌ராத‌ வ‌யித்து வ‌லியும் வ‌ந்திருக்குன்னு சொல்லி ந‌ம்ம‌ டேமேஜ‌ருக்கே 'திருநெல்வேலி' மேட்ட‌ர் குடுக்க‌ற‌வ‌ங்க‌ளாச்சே. ஸோ, உஷாரா தூர‌ வ‌ண்டிங்க‌ வ‌ரும்போதே க்ராஸ் ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிட‌வேண்டிய‌து. ஆனா ந‌டுவுல‌ நின்னு பாக்கும்போது தூர‌ வ‌ந்த‌ வ‌ண்டி நாம இற‌ங்கி ந‌ட‌க்க‌ ஆர‌ம்பிச்சிருக்கும்போது கிட்ட‌ வ‌ந்திருக்கும். ச‌டார்ர்ர்ர்ர்னு ப்ரேக் போட்டு நிறுத்துவார், டிரைவ‌ர். அங்க‌ சிக்ன‌ல்ல‌ 'ரெட்' இருந்தாலும் ஏதோ நம்மாலதான் வ‌ண்டிய‌ நிறுத்த‌வேண்டிய‌தாபோச்சுங்க‌ற‌ அள‌வுக்கு ஃபீல் ப‌ண்ணி ந‌ம்ம‌ள‌ பாத்து லிப் மூவ்மெண்ட் குடுப்பார். அத‌ உத்து க‌வ‌னிச்சா தெரியும், அது என்ன‌ன்னா "ப‌ன்னாட‌ கால‌ங்காத்தாலேயே தூங்கி வ‌ழிஞ்சுக்குன்னு போது பார்", ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌வ‌ர்கிட்ட‌ ட‌ய‌லாக் க‌ன்டினியூ ஆகும் "இதெல்லாம் ஒழுங்கா வூடு போய் சேரும்ன்ட்ற‌?"


ஆனா இந்த‌ ட‌ய‌லாக், ரியாக்ஷ‌ன் எல்லாம் ஒன்லி ப‌ச‌ங்க‌கிட்ட‌தான். அதுவே லேடீஸா இருந்தா "ஏம்மா (வாய்ஸ் டோன் ரொம்ப‌வே குறைஞ்சு இருக்கும்), பாத்து போக்கூடாதா, இன்னாமா நீய்ய்". ஹும்ம்ம்ம்ம்......என்ன‌த்த‌ சொல்ல‌....எதுக்கு இதையெல்லாம் எழுதிட்டிருக்கேன்? அட‌, யாருமே ப‌டிக்காம‌ இருந்தாலும், ப‌திவு போட‌ணும்னு க‌ட‌மை ஒண்ணு இருக்குல்லே...விவேக்தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ர்றார் "யாருமே இல்லாத‌ க‌டையில‌ யாருக்குடா....." ஹி...ஹி...


Tuesday, October 06, 2009

இனிமே உம்பேச்சு கா!

குடும்ப‌த்தை முன்னிறுத்தி ந‌ட‌க்க‌ற‌ க‌ட்சின்னு பாத்தா த‌மிழ்நாட்டுல‌ எல்லாக் க‌ட்சியும் ஒரே ப‌ஸ்ல‌ போற‌ வெவ்வேற‌ பய‌ணிங்க‌தான். குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் உட்ப‌ட‌ சில‌ பேர் மேல‌ வ‌ழ‌க்கு போட்ட‌த‌னால‌ அதிமுக‌ கூட்ட‌ணியில‌யிருந்து வில‌க‌ற‌தா அறிவிச்சிருக்காரு டாக்ட‌ர் ராம‌தாஸ்.

எந்த‌ க‌ட்சியில‌யும் உத்த‌ம‌ருங்க‌ இப்போ இல்ல‌தான். ஆனா, அர‌சிய‌ல்லேயே நான் வெறுக்க‌ற‌ ஒரே அருவ‌ருப்பான‌ அர‌சிய‌ல்வியாதி இந்த‌ ஆள்தான்! எந்த‌ க‌ட்சியும் இந்த‌ ஆள‌ கூட்ட‌ணியில‌ சேக்காம‌ இருந்தா அடுத்து வ‌ர்ற‌ தேர்த‌ல்ல‌ இந்தாள் க‌ட்சியோட‌ ல‌ட்ச‌ண‌ம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும். ஏற்க‌ன‌வே 2009 பாராளும‌ன்ற‌த் தேர்த‌ல்ல‌ தோத்த‌துக்கு, ஓட்டு இய‌ந்திர‌ம்தான் கார‌ண‌ம்னு சொல்லிட்டு திரிய‌றாங்க‌. ப‌ழைய‌ சீட்டு முறையே கொண்டு வ‌ர‌ணுமாம்லே! ஏன் வேட்டி, ச‌ட்டை? பேசாம வாழை இலையிலேயே திரிய‌ வேண்டிய‌துதானே?

ஐயோ, இதுக்குமேல‌ நான் எழுத‌ ஆர‌ம்பிச்சா, இன்னும் அநாக‌ரிக‌மாதான் போய்முடியும். அத‌னால‌ இதோட‌ நிறுத்திக்க‌றேன்...