Sunday, January 31, 2010

த‌மிழ்ப்ப‌ட‌மும், எர்ணாகுள‌மும்


ப‌ட‌த்துக்கு போய் முத‌ல் சீன்ல‌ சிரிக்க‌ ஆர‌ம்பிச்ச‌வ‌ன், இதோ இப்போ கொஞ்ச‌ நேர‌ம் முன்னாடிதான் வீட்டுக்கு வ‌ந்து சாப்ட்டேன், சாப்பிடும்போதும் சிரிப்பா வ‌ருது. நேத்தே சில‌ ப‌திவ‌ர்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் எழுதியிருந்தாங்க‌, ஆனா அத‌ பாத்த‌வுட‌னே, ந‌ம‌க்கு அந்த‌ சுவார‌ஸ்ய‌ம் போயிட‌க்கூடாதுன்னு ப‌டிக்காம‌ விட்டுட்டேன்.

ப‌ட‌த்துல‌ ஹீரோவோட‌ ஓப்ப‌னிங் சாங் வ‌ரும்போது "இந்த‌ பாட‌லை பாடிய‌வ‌ர் உங்க‌ள் சிவா"ன்னு போட்டுட்டு, அடுத்த‌ ரெண்டே செக‌ண்ட்ல‌ "இந்த‌ பாட‌லை பாடிய‌வ‌ர் உங்க‌ள் சிவா என்று போடும்ப‌டி அவ‌ர் கேட்டுக்கொண்டார்"னு போடுறாங்க‌. அட‌ப்பாவிங்க‌ளா, உங்க‌ கலாய்த்த‌லுக்கு ஒரு அள‌வே இல்லியா! த‌ள‌ப‌தி ர‌சிக‌/ர‌சிகைக‌ள் க‌வ‌னிக்க‌:)) "ஓ ம‌க‌சீயா" பாட்டுல‌ "லாலாக்கு டோல் ட‌ப்பிமா"ன்னு வ‌ரும்போது சிவாவோட‌ ரியாக்ஷ‌ன் பாக்க‌ணுமே, தாங்க‌முடிய‌ல‌டா சாமி! இதுக்கு மேல‌ நான் எதுவும் சொல்ல‌ல‌, ப‌ட‌த்தை பாத்து என்ஜாய் ப‌ண்ணுங்க‌.

நீங்க‌ ப‌ட‌ம் பாக்க‌ற‌தா இருந்தா த‌ய‌வு செய்து விம‌ர்ச‌ன‌ம் ப‌டிச்சுட்டு பாக்காதீங்க‌. நிறைய‌ விஷ‌ய‌ம் தெரிஞ்சுடுச்சுனா, அந்த‌ சுவார‌ஸ்ய‌ம் போயிடும். இந்த‌ ப‌ட‌த்துல‌கூட‌ சில‌ர் குறை க‌ண்டுபுடிக்க‌லாம். அம்மா ச‌மைய‌லையே குறை சொல்ற‌வ‌ங்க‌ நாம‌, அத‌னால‌ யாராவ‌து நெக‌ட்டிவா விம‌ர்சிச்சா க‌ண்டுக்காதீங்க‌.

தியேட்ட‌ர்ல‌ சிரிப்பு ச‌த்த‌த்துல‌ சில‌ வ‌ச‌ன‌ம்லாம் கேக்கவேயில்ல‌, ம‌றுப‌டியும் அடுத்த‌ வார‌ம் போக‌ணும். ந‌ம‌க்கு என்ன‌‌ பிர‌ச்னைன்னாலும், இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் அதெல்லாம் ம‌ற‌ந்துபோற‌ அள‌வுக்கு சிரிக்க‌ வைக்கிறாங்க‌. சும்மா பில்ட‌ப்புக்காக‌ சொல்ல‌ல‌, எவ்வ‌ளோ காமெடி ப‌ட‌ங்க‌ள் பாத்துருக்கேன், ஆனா இப்ப‌டி க‌ண்ணுல‌ த‌ண்ணி வ‌ர்ற‌ அள‌வுக்கு சிரிச்ச‌தில்ல‌:))) ந‌ன்றி "த‌மிழ்ப்ப‌ட‌ம்".

ச‌ரி, எர்ணாகுள‌ம் விஷ‌ய‌த்த‌ முடிச்சிடுறேன்.

எங்கேயுமே ரூம் கிடைக்காம‌ அலைஞ்சு திரிஞ்சு, ஒரு லாட்ஜ்ல‌ ரூம் கிடைச்சுது. ஆட்டோ டிரைவ‌ரே ரிச‌ப்ஷ‌ன்ல‌ போய் விசாரிச்சு ரூம் இருக்குதுன்னு வ‌ந்து சொன்னார். இவ்வ‌ளோ சுத்த‌ன‌துக்கு அவ‌ர் எவ்வ‌ளோ கேட்டார் தெரியுமா, வெறும் 30 ரூபாய். இதுவே ந‌ம்மூரா இருந்திருந்தா மினிம‌ம் 180 இல்ல‌ 200 வாங்கியிருப்பாங்க‌. அவ‌ருக்கு காசோட‌ ஒரு தேங்க்ஸையும் குடுத்துட்டு வ‌ந்தேன்.

லாட்ஜ் ரிச‌ப்ஷ‌ன்ல‌ செக்யூரிட்டி யூனிஃபார்ம்ல‌ ஒருத்த‌ர் உட்கார்ந்திருந்தார். நான் "ரூம் வேணும்"னு சொல்ல‌, அவ‌ர் என்னை கொஞ்ச‌ம் வெயிட் ப‌ண்ண‌ சொல்லிட்டு வேற‌ ஒருத்த‌ர‌ கூட்டிட்டு வ‌ந்தார். அவ‌ருக்கு 60 வ‌ய‌சு இருக்க‌லாம். என‌க்கு எப்ப‌டி பேச‌ற‌துன்னே தெரியல‌. வேற‌ வ‌ழியில்லன்னு கேட்டேன்.

"டூ யூ நோ த‌மில் ஆர் இங்கிலீஷ்?"

ம‌லையாள‌ம் தெரியாதாங்க‌ற‌ மாதிரி அவ‌ர் ம‌லையாள‌த்துல‌யே கேட்டார். நான் "நோ"ன்னு சொன்னேன்.

"ஓகே த‌மில் த‌மில்"னார்.

"ரூம் வேணும், ஒன் டே"
(பேசுன‌ நாலு வார்த்தையில‌ மூணு இங்கிலீஷ் வார்த்தை, வாழ்க‌ த‌மிழ்!)

ப‌க்க‌த்துல‌ இருந்த‌ செக்யூரிட்டிகிட்ட‌ சாவி குடுத்து ரூம் காமிக்க‌சொன்னார். நானும் செக்யூரிட்டி பின்னாடியே போனேன். போகும்போது என‌க்குள்ள‌ ஒரு சின்ன‌ ஈகோ எட்டிப்பாத்துது, சே அவ‌ர்கிட்ட‌ ம‌லையாள‌ம் தெரியாதுன்னுட்டோமே, ம‌ம்முட்டி ந‌டிச்சு எத்த‌னை த‌மிழ் ப‌ட‌ங்க‌ளை பாத்திருக்கோம், அதே ஸ்லாங்ல‌யே அடிச்சுவிட்டிருக்க‌லாமே. மிஸ் ப‌ண்ணிட்டேன், இரு இந்த‌ செக்யூரிட்டிகிட்ட‌ டிரை ப‌ண்ணி பாப்போம்னு முடிவு ப‌ண்ணி, கொஞ்ச‌ம் தைரிய‌த்தை வ‌ர‌வ‌ழைச்சுகிட்டு கேட்டேன்.

"இவ்விட‌ ஓட்ட‌ல் உண்டோ?"

அதுக்கு அவ‌ர் மெயின் ரோட்கிட்ட‌ இருக்குன்னு சொல்லி, ம‌லையாள‌மே தெரியாதுன்னு சொன்னியேன்னு கேட்டார். நாம‌ யாரு, இப்ப‌வும் அச‌ருவோமா?

"கொறைச்சு அறியும்"னேன்

"ஓவ்வ் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம்"ன்னு சொல்லி கிண்ட‌லா ம‌ம்முட்டி மாதிரியே த‌லையாட்டிட்டு போனார். அட‌ச்சே, என்ன‌டா இது ஊரு விட்டு ஊரு வ‌ந்து இப்ப‌டி ப‌ல்பு வாங்குறோமேன்னு ஃபீல் பண்ணி அப்ப‌டியே தூங்கிட்டேன். அப்புற‌ம் அதிகாலை 9:30 ம‌ணிக்கு எழுந்து குளிச்சுட்டு சாப்பிட‌ ஒரு ஓட்ட‌லுக்கு போனேன். டிப‌ன் சாப்ட்ட‌துக்க‌ப்புற‌ம் அந்த‌ வெயிட்ட‌ர் கேட்டார்.

"சார், டீ, காபி?"

செக்யூரிட்டி குடுத்த‌ ப‌ல்பு ஞாப‌க‌த்துக்கு வ‌ர‌, இப்போ பார்றான்னு

"ஒரு சாயா"ன்னேன்.

"ஓ சாயாவோ"ன்னு சொல்லிகிட்டே த‌லையாட்டிகிட்டே போனார். யேய், என்னாங்க‌ய்யா இது ஒரு வார்த்தை பேசி முடிச்சுட்டு எல்லாரும் த‌லையாட்டிகிட்டே இருக்க‌றீங்க‌, இது என்ன‌ கேர‌ளாவோட‌ மேன‌ரிச‌மா?

அதுக்க‌ப்புற‌ம் கேபிஎன் டிராவ‌ல்ஸ்ல‌ சென்னைக்கு புக் ப‌ண்ணிட்டு(எர்ணாகுள‌ம் டூ சென்னை 950 ரூபாய்), போட்டிங் போயிட்டு, ம‌திய‌ம் சாப்பிட‌ வேற‌ ஒரு ஓட்ட‌லுக்கு போனேன். அரிசிலாம் பாத்தா ந‌ல்லா குண்டு குண்டா இருந்த‌து. மைண்ட்ல‌ மோக‌ன்லால், ஜெய‌ராம்லாம் வ‌ந்துட்டு போறாங்க‌. சாத‌ம் போட்டுட்டு கார‌க்குழ‌ம்பு ஊத்திட்டு ப‌க்க‌த்துல‌ ஒரு சைட் டிஷ் வெச்சாங்க‌. சாப்ட்டு பாத்தா ந‌ல்லா இருந்த‌து. அடுத்த‌ வாய் சாப்பிடும்போதுதான் உறைச்சுது, "அட‌ப்பாவிங்க‌ளா! இது மீனா" (அவ‌ங்க‌ இல்ல‌). நான் முட்டை ம‌ட்டும் சாப்பிடுற‌ ப்யூர் வெஜிட்டேரிய‌ன்.

என‌க்கு அதுக்க‌ப்புற‌ம் சாப்பிட‌ பிடிக்க‌ல‌. கை க‌ழுவிட்டு பில்லுக்கு 100 ரூபாய் குடுத்தா, 50 ரூபாய் திருப்பி குடுத்தார். ரெண்டே ரெண்டு வாய் சாத‌த்துக்கு 50 ரூபாய் குடுத்த‌வ‌ன் நான் ஒருத்த‌னாதான் இருப்பேன். அப்புற‌ம் ஒரு ப‌ப்ஸ், கேக்குன்னு உள்ள‌ த‌ள்ளி அப்ப‌டியே ரோட்டோர‌மா சுத்துனா போத்தீஸ், சென்னை சில்க்ஸ் ரேஞ்சுக்கு ஒரு பெரிய‌ டெக்ஸ்டைல் ஷோரூம்.

உள்ள‌ போன‌ப்புற‌ம்தான் தெரிஞ்சுது, ஏன் இப்ப‌ல்லாம் மும்பையை விட்டுட்டு கேர‌ளாவுல‌ இருந்து ஹீரோயின்ஸ இற‌க்கும‌தி ப‌ண்றாங்க‌ன்னு. என‌க்கு அங்க‌யிருந்த‌ ஷ‌ர்ட்ஸ் டிசைன் எதுவும் பிடிக்க‌ல‌. கொஞ்ச‌ நேர‌ம் எல்லாத்தையும் பாத்துட்டு (ஷ‌ர்ட்ஸைத்தான் சொல்றேன்) எதுவும் வாங்காம‌ திரும்பிட்டேன்.

அதுக்க‌ப்புற‌ம்.................என்ன‌து போதுமா? ச‌ரி இதோட‌ மொக்கைய‌ ஸ்டாப் ப‌ண்ணிக்க‌றேன். ப்பா, என்னாவொரு ச‌ந்தோஷ‌ம்! இந்த‌ அனுப‌வ‌த்துல நான் க‌த்துகிட்ட‌து தாய்மொழிய‌யும், இங்கிலீஷை‌யும் வெச்சுகிட்டு இந்தியாவுல‌ ச‌மாளிக்க‌ற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம். அத‌னால‌ உங்க‌ளால‌ முடிஞ்ச‌ அள‌வு நிறைய‌ மொழிக‌ளை க‌த்துக்குங்க‌. நீ க‌த்துக்கிட்டியான்னா கேக்குறீங்க‌? ம‌லையாள‌ம் க‌த்துக்க‌லாம்னுதாங்க‌ நினைக்குறேன். ஆனா நாந்தான் க‌த்துக்குடுப்பேன்னு அசின், பாவ‌னா, ந‌ய‌ன்தாரால்லாம் ச‌ண்டை போட்டுட்டு இருக்காங்க‌. நீங்க‌ளே சொல்லுங்க‌, இப்ப‌டி இருந்தா நான் எப்ப‌டி ம‌லையாள‌ம் க‌த்துக்க‌ற‌து:(

Sunday, January 24, 2010

எர்ணாகுள‌த்தில்‌ ஞான்...

டிஸ்கி: டார்டாய்ஸோ, மார்ட்டீனோ அது உங்க‌ இஷ்ட‌ம், நீங்க‌ எதை வேணும்னாலும் கொளுத்திக்க‌லாம், ஆனா நான் சொல்ல‌விருப்ப‌து ஒரு கொசுவ‌த்தி என்ப‌தை ம‌ட்டும் ச‌ஞ்ச‌ய் ராம‌சாமி/சிங்கானியா போலில்லாம‌ல் ச‌ற்று நினைவில் கொள்க‌:)

தேதிலாம் ஞாப‌க‌ம் இல்ல‌ (இதென்ன‌ கெள‌த‌ம் ப‌ட‌மா, துணி காய‌போட்டாகூட‌ தேதிலாம் போட‌ற‌துக்கு), ஆனா ம‌ணி சுமாரா (அல்ல‌து) சூப்ப‌ரா காலை 10:30

கொஞ்ச‌ நாள் முன்னாடி த‌ம்பிக்கு ஒரு எக்ஸாம் எழுத‌ற‌துக்காக‌ எர்ணாகுள‌ம் போக‌வேண்டியிருந்த‌து. ட்ரெயின் டிக்கெட்லாம் ரிச‌ர்வ் ப‌ண்ணியாச்சு, ப‌ட் வெயிட்டிங் லிஸ்ட்ல‌ இருந்த‌து. ஆனா க‌ரெக்டா அந்த‌ நாள்ல‌ வேறு சில‌ கார‌ண‌ங்க‌ளால‌ அவ‌னால‌ போக‌முடிய‌ல‌. ச‌ரி டிக்கெட்ட‌ கேன்ச‌ல் ப‌ண்ண‌லாம்னு ரிச‌ர்வேஷ‌ன் சென்ட‌ருக்கு நான் போனா, அங்க‌ க‌வுண்ட்ட‌ர்ல‌ இருந்த‌வ‌ர், "சார், வெயிட்டிங் லிஸ்ட்னுலாம் பாக்காதீங்க‌, இதுக்கு க‌ண்டிப்பா சீட் கிடைக்கும்"னார்.

புக் ப‌ண்ண‌து செக‌ண்ட் க்ளாஸ் ஏசி. ம‌ன‌சுக்குள்ள‌ ஒரு சின்ன‌ ஆசை, எப்ப‌வும் வீடு to ஆஃபிஸ், ஆஃபிஸ் to வீடுன்னு இருக்கோமே, நாம‌ போனா என்ன‌? அப்பாகிட்ட‌ சொன்னா அதெல்லாம் த‌ப்புடா, அவ‌ன் பேர்ல‌ ரிச‌ர்வ் ப‌ண்ணிட்டு நீ போக‌கூடாதுன்னார். சில‌ ப‌ல‌ talkக‌ளுக்கு அப்புற‌ம் ச‌ரி போய் தொ(ல்)லைன்னு விட்டுட்டார்.


பூ + நார் 4:00

சென்ட்ர‌ல் வ‌ந்து ட்ரெயின்ல‌ லிஸ்ட் பாத்தா சீட் க‌ன்ஃப‌ர்ம்! ஹேஹேய்! உட‌னே சீட் தேடி ட்ரெயின் உள்ள‌ ஓடிட்டேன். ஃப்ரெண்டுக்கு கால் ப‌ண்ணி சொன்னா, "செக‌ண்ட் க்ளாஸ் ஏசியா? நெறைய‌ ஃபிக‌ரா வ‌ரும், அப்போ செம‌ க‌ட‌லைதான், என்ஜாய் ப‌ண்ணு"ன்னு ப‌ய‌புள்ள‌ ந‌ம்ம‌ ஒட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மாக்குறான். ஆனா நான் அப்ப‌டிப‌ட்ட‌வ‌ன் கிடையாது, அதையெல்லாம் எதிர்பார்த்து நான் போக‌ல(ன்னு சொன்னா ந‌ம்ப‌வா போறீங்க‌..ஹி..ஹி..). உள்ள‌ போய் உக்காந்தா எதிர் சீட்ல‌ ஒரு தாத்தா, அவ‌ரோட‌ பேர‌ன், பேத்தியோட‌ உக்காந்துகிட்டு இருக்க‌றார். ரெண்டும் ச‌ரியான‌ வாண்டுங்க‌! யோவ், நியாயமாயா இதுன்னு ம‌னசுக்குள்ளே பிள்ளையாரை (நானும் பிள்ளையாரும் கொஞ்ச‌ம் க்ளோஸ்) லேசா திட்டிகிட்டே நான் என் பெர்த்ல‌ போய் ப‌டுத்துட்டேன்.

கீழ் பெர்த்ல‌ இருந்த‌ பைய‌ன்கிட்ட‌ டிடிஆர் டிக்கெட் செக் ப‌ண்ண‌ வ‌ந்த‌ப்போ, ஏதாவ‌து ஃபோட்டோ ப்ரூஃப் காட்ட‌ சொல்ல‌, அந்த‌ பைய‌னும் அவ‌ர்கிட்ட‌ டிரைவிங் லைசென்ஸ‌ எடுத்து காமிச்சான். அப்போதான் என‌க்கு கொஞ்ச‌ம் உத‌ற‌ ஆர‌ம்பிச்சுது. உஷாரா நான் த‌ம்பியோட‌ எலெக்ஷ‌ன் ஐடி கார்டையும் எடுத்துட்டுபோயிட்டேன். ஆனா அதுல‌ இருக்க‌ற‌துக்கும் உன‌க்கும் வித்தியாச‌மாயிருக்கேன்னு (அவ‌ன் என்னைவிட‌ கொஞ்ச‌ம் க‌ல‌ர்) சொன்னா என்ன‌ ப‌ண்ற‌து? ஆனா ந‌ல்ல‌வேளை அவ‌ர் கேக்க‌ல‌, டிக்கெட் ம‌ட்டும்தான் செக் ப‌ண்ணார்.(ஆன்லைன்ல‌ ரிச‌ர்வ் ப‌ண்ணாதான் கேப்பாங்க‌ன்னு அப்புற‌ம் ந‌ண்ப‌ர் ஒருத்த‌ர் சொன்னார்).

ந‌டுராத்திரியில‌ ரொம்ப‌ குளிரா இருந்த‌து. ச‌ரி கொஞ்ச‌ நேர‌ம் வெளியே நிப்போம்னு க‌த‌வுகிட்ட‌ வ‌ந்தா ஏற்க‌ன‌வே இன்னொருத்த‌ர் வ‌ந்து நின்னுட்டிருந்தார். அவ‌ர் என்கிட்ட‌ கேட்டார்.

"எத்த‌னை ம‌ணிக்கு சார் எர்ணாகுள‌ம் (அட‌ நாம‌ போற‌ ஊருதான்டோய்!) ரீச் ஆகும்?"

ம்ஹும்..நான் அப்ப‌டியே நாலு நாளைக்கு ஒருத‌ட‌வை எர்ணாகுள‌ம் போய் வ‌ந்துட்டு இருக்க‌றேன், ந‌ம்ம‌ள‌ கேக்குறாரு டீட்டெயிலு‌......ஆனாலும் ந‌ம‌க்குன்னு ஒரு 'கெத்' இருக்குல்ல‌ அத‌ விட‌முடியுமா?

"ஹாஃப் அன் ஹ‌வ‌ர் லேட்டா போகுதுன்னு நினைக்குறேன் (எல்லாம் ந‌ம்ம‌ ர‌யில்வேஸ் மேல‌ இருக்க‌ற‌ ஒரு ந‌ம்பிக்கைதான்), எப்ப‌டியும் ஃபோர் டு ஃபோர் த‌ர்ட்டிக்குள்ள‌ ரீச் ஆயிடும்" (IRCTC வெப்சைட்ல‌ 4:15ன்னு போட்டிருந்துது)

"ஓ, அவ்ளோ நேர‌ம் ஆகுமா?"

"ஆமாங்க‌"
.....பார்றா, நான் சொல்ற‌த‌யும் ஒரு ம‌னுஷ‌ன் ந‌ம்புறாரு.

ம‌றுநாள் கையை...ர்ர்ர்ர்...சாரி....காலை 4:15

ர‌யில்வேஸ்ல‌ ந‌ல்லாவே வேலை செய்யுறாங்க‌ப்பா! ட்ரெயின் க‌ரெக்ட் ட‌ய‌த்துக்கே எர்ணாகுள‌த்தில் ரீச் ஆச்சு. இற‌ங்கி எப்ப‌டி வெளியே போகுற‌துன்னு தெரிய‌ல‌. ந‌ம்ம‌ மேல் மாடியில‌தான் ஆடு குடியிருக்கே, ச‌ரி எல்லாரும் எப்ப‌டி போறாங்க‌ளோ அப்ப‌டியே நாமும் போவோம்னு ஜ‌ன‌ங்க‌ பின்னாடியே போனேன்.

வெளியே போனா ஒரு ப்ரீபெய்டு ஆட்டோ பூத் இருந்த‌து. இப்போதான் மேல் மாடியில‌ ஆடுங்க‌ வெளியே போய், நானே போய் குடியேறி யோசிக்க‌ ஆர‌ம்பிச்சேன், த‌மிழ்ல‌ பேச‌லாமா இல்ல‌ பீட்ட‌ர் விட‌லாமா? அங்க‌ உக்காந்துகிட்டிருக்க‌ற‌வர் பீட்ட‌ர் விட‌ல‌னா அவ‌ர‌ அசிங்க‌ப்ப‌டுத்த‌ற‌ மாதிரி இருக்கும், ச‌ரி வேணாம்னு ('ச‌ரி' - 'வேணாம்'......இது முற‌ண்தொடையா??? என்ன‌து? ர‌ம்பா...........ஹ‌லோ வேணாம், ந‌ம்ம‌ ப்ளாக் கொஞ்ச‌ம் க‌ம‌ர்ஷிய‌ல்னாலும் அனைவ‌ரும் குடும்ப‌த்துட‌ன் ப‌டிக்க‌க்கூடிய‌ ப்ளாக்.....இங்க‌ மானும் ஆடாது, ம‌யிலும் ஆடாது) முடிவு ப‌ண்ணி, த‌மிழ்ல‌யே கேட்டேன்.

"சென்னை ப‌ஸ்லாம் இருக்க‌ற‌ ப‌ஸ் ஸ்டாண்ட் ப‌க்க‌த்துல‌யே ஒரு ஹோட்ட‌லுக்கு போக‌ணும்"

அவ‌ர் உட‌னே பில் போட்டு குடுத்துட்டார். ப‌க்க‌த்துல‌ ஆட்டோவும் ரெடியா இருக்க‌, ஏறி உட்கார்ந்தேன். முத‌ல் முறையா மொழி தெரியாத‌ ஊர்ல‌ என் ப‌ய‌ண‌ம். அந்த‌ ஆட்டோக்கார‌ரும், அப்ப‌டி இப்ப‌டி சுத்தி, ஒரு இட‌த்துல‌ நிறுத்தி "அப்ப‌டி போங்க‌"ங்க‌ற‌ மாதிரி ம‌லையாள‌த்துல‌ ஏதோ சொன்னார். ஓகே, தேங்க்ஸ்னு சொல்லிட்டு கொஞ்ச‌ம் உள்ள‌ ந‌ட‌ந்தா அது ப‌ஸ் ஸ்டாண்ட்!

ப‌ஸ் ஸ்டாண்ட் ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌ ஒரு ஹோட்ட‌லுக்கு போக‌ணும்னு சொன்னா அந்த‌ அறிவுகொழுந்து ப‌ஸ் ஸ்டாண்டுக்கே போற‌துக்கு ஆட்டோவ‌ ஏற்பாடு ப‌ண்ணியிருக்கு. த‌ப்பு என் மேல‌யும் இருக்கு, நான் இன்னும் கொஞ்ச‌ம் புரிய‌ற‌ மாதிரி சொல்லியிருக்க‌ணும். ப‌ஸ் ஸ்டாண்ட்ல‌ சுத்திட்டு வெளியே வ‌ந்து, நான் வ‌ந்த‌ ஆட்டோ இருக்குதான்னு பாத்தேன். அண்ண‌ன் அப்ப‌வே எஸ்ஸாயிட்டிருக்காரு. வேற‌ ஒரு ஆட்டோக்கார‌ரை பார்த்து "ஸ்டே ப‌ண்ண‌ணும், ஏதாவ‌து ஒரு லாட்ஜுக்கு போக‌ணும்"னேன். அவ‌ருக்கு த‌மிழ் தெரியும் போல‌. சிரிச்சுகிட்டே "போலாம் சாரே"ன்னார்.

ஒருவேளை 'லாட்ஜ்'ன்னு சொன்ன‌தால‌ அவ‌ரு ந‌க்க‌லா சிரிச்சாரோன்னு என‌க்கு தோண‌, ம‌னசுக்குள்ளேயே "ஓய் சேட்டா, ஞான் அவ‌ன் இல்லா"ன்னு சொல்லிகிட்டேன். அந்த‌ நேர‌ம் அங்க‌ ஏதோ திருவிழா நேர‌மாம், அத‌னால‌ த‌ங்க‌ற‌துக்கு எங்கேயுமே ரூம் காலி இல்ல‌ன்னு சொல்லிட்டாங்க‌. ரொம்ப‌ நேர‌ம் அலைஞ்சு திரிஞ்சு ஒரு லாட்ஜ்ல‌ ரூம் கிடைச்சுது. அதுக்க‌ப்புற‌ம்........


ப‌ய‌ப்ப‌டாதீங்க‌, பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3ன்னுலாம் இழுக்க‌ மாட்டேன். அடுத்த‌ ப‌திவுல‌ முடிச்சிடுறேன். என்ன‌............அதுக்குள்ள‌ அங்க‌ "அப்பாடா"ன்னு ஒரு பெருமூச்சு............ஒரு டெர‌ராத்தான் இருக்கேனோ????

.

Friday, January 15, 2010

இளைய‌ த‌ள‌ப‌தியும், சேத்த‌ன் ப‌க‌த்தும்

ரெண்டு, மூணு வார‌ம் (ரெண்டா? மூணா? ஏதாவ‌து 'ஒண்ணு' சொல்லு) முன்னாடி 'லேண்ட்மார்க்' போயிருந்த‌ப்போ, ரொம்ப‌ நேர‌ம் பாத்துட்டிருந்தேன் (ந‌ம்புங்க‌, புத்த‌க‌ங்க‌ளைத்தான்). வாங்க‌ற‌து ஒண்ணோ, ரெண்டோதான் (ம‌றுப‌டியும் பார்றா! ஒண்ணா? ரெண்டா? கரெக்டா சொல்லு). ஆனாலும் எவ்ளோ வேணும்னாலும் அங்கேயே ப‌டிக்க‌லாம்னு அனும‌திக்கும்போது ந‌மக்கு க‌ச‌க்குமா என்ன‌? லேண்ட்மார்க்க‌ர்க‌ளே, நீங்க‌ ந‌ல்லா இருக்க‌ணும்!உள்ளே நுழைஞ்ச‌ முத‌ல் வ‌ரிசையிலேயே சேத்த‌ன் ப‌க‌த் எழுதின‌ புத்த‌க‌ங்க‌ளைத்தான் வெச்சிருந்தாங்க‌. '2 ஸ்டேட்ஸ்' நல்லாருக்குன்னு நிறைய‌ பேரோட‌ ப‌திவுக‌ள்ல‌ ப‌டிச்ச‌துனால‌, அத‌ வாங்கலாம்னு எடுத்து வெச்சுகிட்டேன். அடுத்து 'ஒன் நைட் அட் த‌ கால் சென்ட‌ர்'னு அவ‌ரோட‌ புக் டைட்டிலே ந‌ல்லா இருந்த‌து. ச‌ரி, எப்ப‌டி இருக்குதுன்னு கொஞ்ச‌ நேர‌ம் புர‌ட்டி பாத்தேன்.

ய‌ப்பா சாமீக‌ளா! இந்தாளு அப்ப‌டி என்ன‌ சூப்ப‌ரா எழுத‌றாருன்னு எல்லாரும் த‌லைல‌ தூக்கிவெச்சுகிட்டு ஆடுறீங்க‌? இதுக்கு நீங்க‌ 'உங்க‌ளில் யார் அடுத்த‌ பிர‌புதேவா?"ல‌ ஆடியிருந்தா, அதுல‌ ஜெயிச்சுருக்க‌லாம். சேத்த‌ன் எழுத‌ற‌து ரொம்ப‌ எளிமையா புரிய‌ற‌ மாதிரி இருக்கு. அதுக்காக‌ அவ‌ரை ரொம்ப‌வே கொண்டாடுற‌ மாதிரி என‌க்கொரு ஃபீலிங். என்னை கேட்டா, ப‌திவ‌ர்க‌ள் முய‌ற்சி ப‌ண்ணாலே சேத்த‌னைவிட‌ பிர‌மாதமா எழுதுவாங்க‌. ஆனா நிறைய‌ பேர் க‌விதை வெளியிடுற‌தோட‌ நிறுத்திட‌றாங்க‌:(

விஜ‌ய் ப‌ட‌ம்னா குருவி, வில்லு மாதிரி வித்தியாச‌மான‌ ப‌ட‌ங்க‌ளாத்தான் இருக்கும். நீங்க‌ விஜ‌ய் ப‌ட‌ம் போயிட்டு 'தாரே ஸ‌மீன் ப‌ர்' மாதிரி இல்லையேன்னு சொன்னா, த‌ப்பு விஜ‌ய் மேல‌ இல்ல‌, உங்க‌ மேல‌தான். ச‌ர‌வ‌ண‌ ப‌வ‌ன் போயிட்டு "இங்க‌ Egg பிரியாணி கூட‌ இல்ல‌, இதுக்கு அஞ்ச‌ப்ப‌ரே போயிருக்க‌லாம்"னு சொன்னா, அது ந‌ம்ம‌ த‌ப்பா இல்ல‌ ச‌ர‌வ‌ண‌ ப‌வ‌ன் த‌ப்பா?அதென்ன‌வோ, ஏற‌க்குறைய‌ (நான் உட்ப‌ட‌) எல்லா பதிவ‌ர்க‌ளும் எழுத‌ன‌த‌ ப‌டிச்சா, அவ‌ங்க‌ எழுதின‌துல‌ ஒரு வ‌ரியாவ‌து விஜ‌ய்யை கிண்ட‌ல் ப‌ண்ணி எழுதியிருக்காங்க‌. அவ‌ரோட‌ ரூட்ல‌ இருந்து அவ‌ர் மாறுவ‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்ங்க‌. போலிஸ் டிர‌ஸ் போட்டாலும் 'பெல்' பாட்ட‌ம்தான் போடுவார். ச‌ட்டைல‌ அஞ்சு ப‌ட்ட‌ன் இல்ல‌, அம்ப‌து ப‌ட்ட‌ன் இருந்தாலும் ப‌ட்ட‌ன் போட‌ மாட்டார். யாருக்கும் புடிக்காட்டியும், ப‌ஞ்ச் ப‌ஞ்ச்சா அடிப்பார். ஆனாலும் இதையும் மீறி, ர‌ஜினிக்கு அப்புற‌ம் விஜ‌ய்ய‌த்தான் பெரும்பாலான‌ குழ‌ந்தைக‌ளும், பெண்க‌ளும் ர‌சிக்க‌றாங்க‌.

ந‌ண்ப‌ர் திரும‌ண‌த்துக்கு போயிட்டு சேல‌த்துல‌ருந்து வரும்போது, 'சிவ‌காசி'ன்னு நினைக்குறேன், ப‌ஸ்ல‌ போட்டாங்க‌. என்னால‌ முடிய‌ல‌! ப‌ஸ்ஸ‌ விட்டு குதிச்சுட‌லாம் போல‌ இருந்த‌து. ஆனா என‌க்கு 'போக்கிரி' புடிச்சிருந்த‌து (க்ளைமேக்ஸ் த‌விர்த்து). த‌வ‌று விஜ‌ய் மேல‌ இல்ல‌, அவ‌ர் தேர்ந்தெடுக்கிற‌ இய‌க்குன‌ர்க‌ள்தான். என்ன‌தான், அம்மா செண்டிமென்ட், காத‌லியோட‌ டூய‌ட், வில்ல‌னை ப‌ழிவாங்கற‌துன்னு ஒரே ப்ளாட் இருந்தாலும், எம்ஜிஆரோட‌ ப‌ட‌ங்க‌ளில் திரைக்க‌தையும், பாட‌ல்க‌ளும் ந‌ம‌க்கு அத‌ ம‌ற‌க்க‌டிச்சுடும். இப்போதான் கொஞ்ச‌ நாளைக்கு முன்னாடி 'சிவாஜி' ச‌ட்டைய‌ போட்டுகிட்டு, 'ர‌ம‌ணா' பேண்ட்டை போட்டுகிட்டு, 'க‌ந்த‌சாமி'யா ஒருத்த‌ர் வ‌ந்தாரு. அத‌ ம‌ற‌க்க‌ற‌துக்குள்ள‌, 'வேட்டைக்கார‌னையும்', 'திருப்பாச்சி'யில‌ இருந்து வ‌ந்த‌ 'சிவாஜி'யா ஆக்கினா என்னாங்க‌ய்யா அர்த்த‌ம், நாங்க‌ என்ன‌ அத்வானியா? ("அத்வானிக்கு செல‌க்ட்டிவ் அம்னீஷியா" - ந‌ன்றி: நிர‌ந்த‌ர‌ முன்னாள் முத‌ல்வ‌ர்.....கிர்ர்ர்ர்ர்ர்....நிர‌ந்த‌ர‌ க‌ழ‌க‌ப் பொதுச் செய‌லாள‌ர் ஜெயல‌லிதா அவ‌ர்க‌ளுக்கு! இதுக்காக‌ல்லாம் ஆட்டோ அனுப்பாதீங்க‌ப்பா, நான் அந்த‌ள‌வுக்கு வொர்த் இல்ல‌!)

அத‌னால‌ நாட்டாமை சொம்புல‌ கொப்புளிச்சுட்டு, குடுமிய‌ க‌ட்டிகிட்டு (அவ‌ரோட‌ குடுமிய‌த்தாங்க‌) என்ன‌ தீர்ப்பு சொல்றாருன்னா, "என்ட்றா க‌ண்ணு, த‌ப்பு விச‌ய் த‌ம்பி மேல‌ இல்ல‌, இந்த‌ டைர‌க்ட‌ர் ப‌ய‌லுவ‌தான், முன்ன‌ல்லாம், இங்கிலீபிஸு ப‌ட‌த்த‌ காப்பி அடிச்சாங்க‌, இப்ப‌ல்லாம், த‌மிழ் ப‌ட‌த்தையே காப்பி அடிக்க‌றாங்க‌, அத‌னால‌ அவ‌ங்க‌ டைர‌க்ட் ப‌ண்ண‌ ப‌ட‌த்தையே அவ‌ங்க‌ளே அம்ப‌து த‌ட‌வை பாக்க‌ணும், ஆனா அழ‌க்கூடாது. இத்தான்டா இந்த‌ நாட்டாமையோட‌ தீர்ப்பு! ச‌ம்முவ‌ம், எட்றா வ‌ண்டிய‌!"

எதுக்கு சேத்த‌ன் ப‌க‌த்தை ப‌த்தி எழுதிட்டு, விஜ‌ய் ப‌த்தி எழுத‌றேன் தெரியுமா? மேட்ட‌ருக்கு வ‌ர்றேன் (ஸ்ஸ்ஸ்....இப்பவாவ‌து வ‌ந்தியே!). ப‌த்து பேர் ப‌டிச்சிட்டு அதுல‌ எட்டு பேர் ந‌ல்லா இருக்குன்னு சொல்லி, நாம‌ ந‌ல்லா இல்ல‌ன்னு சொன்னா, ந‌ம்ம‌ள‌ ஆட்ட‌த்துல‌ சேத்துக்கமாட்டாங்க‌ளோன்னு நாமும் "ஆமா, ஆமா, ந‌ல்லா இருந்த‌துன்னு" ம‌ண்டைய‌ ஆட்டிவெக்குறோம். என‌க்கென்ன‌மோ இந்தாளு, "நான் ரொம்ப‌ ம‌ண்டைக்கார‌ன்"னு பீத்திக்க‌ற‌ மாதிரி இருக்கு.

விஜ‌ய் ப‌ட‌மா? அய்ய‌ய்யோ செம‌ மொக்கை, தாங்க முடிய‌ல‌டா, கொடுமை - இப்ப‌டிலாம் எழுதியே ஆக‌ணும்னு ப‌திவ‌ர்க‌ள் மன‌சுல‌ ப‌திஞ்சுட்ட‌ மாதிரி ஒரு ஃபீல். 'வேட்டைக்கார‌ன்'ல‌கூட‌ முத‌ல் பாதியில‌ அனுஷ்கா பாட்டியோட‌...ஸாரி...அனுஷ்காவின் பாட்டியோட‌ விஜ‌ய் வ‌ர்ற‌ காமெடி சீன்லாம் நல்லாத்தான் இருந்த‌து. ஆனா இதை ப‌த்தி நிறைய‌ பேர் எழுத‌ல‌. கார‌ணம், போன‌ ப‌த்தியில் எழுத‌ன‌ லாஜிக்தான் இதுல‌யும். "எல்லா‌ரும் விஜ‌ய்யை க‌லாய்ச்சுதான் எழுதுவாங்க‌. அத‌னால‌ நாம‌ளும் அப்ப‌டியே எழுதிடுவோம்". ஏன் பாஸ்? ம‌த்த‌வ‌ங‌க‌ க‌ருத்தையே நாம‌ளும் எழுத‌ற‌துக்கு நாம‌ ஏன் எழுத‌ணும்? ந‌ம‌க்குன்னு ஒரு இது இருக்க‌ணும்ல‌. எது? ஆங்ங்....அஜித் சொல்வாரே 'அது!'

டிஸ்கி: ப‌ட‌ம் ரிலீசான‌ முத‌ல் நாளே ஓடிப்போய் 'த‌லைவா'ன்னு க‌த்த‌ற‌ அள‌வுக்கு நான் யாருக்கும் ர‌சிக‌ன் இல்லீங்க‌. ர‌ஜினி, க‌ம‌ல் புடிக்கும். இப்போ சூர்யா, அவ்ளோதான்!

டிஸ்கியோட‌ ம‌க‌ன்/ம‌க‌ள் டிஸ்கி: விஜ‌ய்லாம் ந‌ம்ம‌ வூட்டு புள்ளைங்க‌, நாம‌ க‌லாய்க்காம‌ வேற‌ யார் கலாய்க்க‌ற‌து? (அட‌ப்பாவி அப்போ இவ்ளோ நேர‌ம் நீ புழிஞ்ச‌து எல்லாம்????) இப்ப‌கூட‌ பாருங்க‌, விஜ‌ய்ய‌த்தான் ந‌ம்ம‌ வூட்டு புள்ளை‌ன்னு சொல்றேன், அந்த‌ 'அறிவு ஜீவி'ய‌ ந‌ம்ம‌ வூட்டு (மாப்)புள்ளை‌ன்னு சொல்ற‌துக்கு ம‌ன‌சே வ‌ர‌ல‌!

டிஸ்கியோட‌ பேர‌ன்/பேத்தி டிஸ்கி: ரொம்ப‌ போர‌டிச்சுது, அதான் இன்னைக்கொரு வித்தியாச‌மான‌ மொக்கைய‌ போட்டுட்டு போவோம்னு எழுதிட்டேன். ஹ‌லோ...என்னாதிது? இப்ப‌டியா மானிட்ட‌ர் மேல‌யே துப்ப‌ற‌து? ஒரு பேச்சுக்கு 'வித்தியாச‌ம்'னு சொன்னா.........ரொம்ப‌த்தான் கோவ‌ம்!

Sunday, January 10, 2010

சினிமா துணுக்ஸ்!

டிஸ்கி: நாடு முன்னேறுவ‌த‌ற்கோ, நாட்டின் பொருளாதார‌ம் முன்னேறுவ‌த‌ற்கோ இந்த‌ ப‌திவு எந்த‌ ப‌ய‌னும் த‌ராது. இதுல‌ மூணே விஷ‌ய‌ம்தான் இருக்கு, சினிமா, சினிமா & சினிமா!

ஏக‌ப்பட்ட‌ எச்ச‌ரிக்கைக‌ளுக்கு அப்புற‌மும் போன‌ வார‌ம் "வேட்டைக்கார‌ன்" பாக்க‌ போயிருந்தேன். ப‌ட‌த்தை ப‌த்தி ஏற்க‌ன‌வே எல்லாரும் அல‌சி, பிழிஞ்சு, காய‌ப்போட்டு, அய‌ர்ன் ப‌ண்ணி ம‌டிச்சே வெச்சுட்டாங்க‌. இதுல‌ நான் வேற‌ புதுசா என்ன‌த்த‌ சொல்ற‌து. ஆனா ப‌ட‌ம் பாக்கும்போது ந‌ட‌ந்த‌ ஒரு விஷ‌ய‌ம் இன்ட்ர‌ஸ்டிங்!

என்னோட சீட் ப‌க்க‌த்துல‌ ஒரு க‌ண‌வ‌ன் ம‌னைவி அவ‌ங்க‌ குழ‌ந்தைக‌ளோட‌ வ‌ந்திருந்தாங்க‌. குழ‌ந்தைக‌ளுக்கு அஞ்சு இல்ல‌ ஆறு வ‌ய‌சிருக்கும். விஜ‌ய்யோட‌ ஒடி வ‌ர்ற‌ அந்த‌ முத‌ல் சீன்ல‌ என்னா ஒரு கைத்த‌ட்ட‌ல் தெரியுமா? அந்த‌ குழ‌ந்தைங்க‌ இல்லீங்க‌, அவ‌ங்க‌ அம்மா. அவ‌ங்க‌ த‌ட்ட‌ற‌து ப‌த்தாதுன்னு, அவ‌ங்க‌ க‌ண‌வ‌ரை "க‌ம்முன்னு பாக்குறீங்க‌ளே, கைத்த‌ட்டுங்க‌ளேன்"னு சொல்றாங்க‌ (ஒட்டு கேக்க‌ல‌, அவ‌ங்க‌ குர‌ல் அந்த‌ள‌வுக்கு கேட்டுது). ண்ணா, க‌ண்டிப்பா ர‌ஜினிக்கு அப்புற‌ம் நீங்க‌தாணுங்ணா! மாஸ் ஹீரோவேதான், ட‌வுட்டே இல்லீங்ணா!

**************************************

ச‌மீப‌ நாட்க‌ள்ல‌ FM கேக்கும்போது இந்த‌ பாட‌ல்க‌ள் ரொம்ப‌ புடிச்சுபோச்சு.


கோவா - வாலிபா வா வா - இளைய‌ராஜா, எஸ்பிபி & சித்ரா

பாட‌ல் கேக்கும்போதே, பிக்ச‌ரைசேஷ‌ன்ல‌ வெங்க‌ட்பிர‌பு பொள‌ந்துக‌ட்டுவாருன்னு தெரியுது. ரொம்ப‌ நாளைக்க‌ப்புற‌ம் சித்ராவோட‌ வாய்ஸ் கேக்குற‌ மாதிரி ஒரு ஃபீல். மூணு லெஜ‌ன்ட்ஸ் பாடின‌ பாட்டு, கேக்க‌வா வேணும்....சே, கேக்க‌த்தான் வேணும்!

கோவா - கோவா - கிரிஷ், ர‌ஞ்சித், த‌ன்வி, சுசித்ரா, சின்க் ஷோடைம் (என்ன‌ பேரோ!), பாவ் ப‌ண்டி (என்னாங்க‌ய்யா பேர் வெக்குறீங்க‌, ஏதோ பாவ் ப‌ஜ்ஜிங்க‌ற‌ மாதிரி)

முத‌ல் த‌ட‌வை கேக்கும்போது துளியும் புரிய‌ல‌, ஈஸியா சொல்ல‌ணும்னா, இது த‌னுஷ் வ‌கை பாட்டு. கேட்டா புடிக்காது, கேக்க‌ கேக்க‌தான் புடிக்கும்.

அச‌ல் - ஹே துஷ்ய‌ந்தா - சுர்முகி, கும‌ர‌ன்

இப்ப‌வே சொல்றேன், இந்த‌ பாட்டு க‌ண்டிப்பா ஹிட்! ப‌ல்ல‌வி கேக்கும்போதே ஓர‌ள‌வுக்கு புடிச்சிடுச்சு. கார‌ண‌ம், "ஜ‌ப் வி மெட்" ப‌ட‌த்துல‌ க‌ரீனா வீட்டை விட்டு ஓடும்போது ஒரு பாட்டு வ‌ருமே, அதே மாதிரி இருந்த‌து. ச‌ர‌ண‌ம் வ‌ரும்போது, "புதிய‌ ப‌ற‌வை"ல‌ வ‌ர்ற‌ "பார்த்த‌ ஞாப‌க‌ம் இல்லையோ" பாட‌லில் இருந்து "அந்த‌ நீல‌ ந‌திக்க‌ரை ஓர‌ம்" எடுத்திருக்காங்க‌. சாதார‌ண‌மா ரீமிக்ஸ் ப‌ண்ணும்போது மோஸ்ட்லி ப‌ழைய‌ பாட்டை கொத்து ப‌ரோட்டாவா போட்டுட‌றாங்க‌. ஆனா இந்த‌ பாட்டு ரிய‌லி சூப்ப‌ர்ப்! பி.சுசீலா க‌ண்டிப்பா சுர்முகியை பாராட்ட‌வே செய்வாங்க‌!

இந்த‌ பாட்டு கேட்டு முடிச்ச‌ப்புற‌ம் "ஹே துஷ்ய‌ந்தா"வை விட‌ "அந்த‌ நீல‌ ந‌திக்க‌ரை ஓர‌ம்"தான் ஹ‌ம் ப‌ண்ணிகிட்டேயிருக்கேன்!

**************************************

இப்ப‌தான் ரீச‌ன்டா பொங்க‌லுக்கு வ‌ர்ற‌ ப‌ட‌ங்க‌ள் டிரெய்ல‌ர்லாம் பார்த்தேன். அனேகமா எல்லாரோட‌ ஃப‌ர்ஸ்ட் சாய்ஸும் "ஆயிர‌த்தில் ஒருவ‌ன்"தான்.

ஆனா என்னோட‌ சாய்ஸ் "த‌மிழ் ப‌ட‌ம்"தான். இது மாதிரி ஸ்பூஃப் ப‌ட‌ம் த‌மிழுக்கு புதுசுன்னு நினைக்குறேன். இது ந‌ல்லா ஓடுச்சுனா, இந்த‌ ட்ரெண்டில் நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ர‌லாம். ப‌ட‌த்தோட‌ பெரிய‌ ப்ள‌ஸ் நீர‌வ் ஷா. இதுல‌, சிவா "ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட‌ சொல்றாங்க‌"ன்னு கேக்கும்போது, பாஸ்க‌ர், "இனிமே எல்லாம் அப்ப‌டித்தான்"னு சொல்லுவார். அப்போ நாய‌க‌ன் பிஜிஎம் போட‌றாங்க‌ பாருங்க‌, சூப்ப‌ர‌ப்பு!
http://www.youtube.com/watch?v=KgEoIGeKbuw

செக‌ண்ட் சாய்ஸ், க‌ண்டிப்பா, "ஆயிர‌த்தில் ஒருவ‌ன்"தான். ட்ரெயில‌ர் ஆர‌ம்ப‌த்திலேயே ரீமாவும், ஆண்ட்ரியாவும் கெட்ட‌ கெட்ட‌ வார்த்தைக‌ள்ல‌ திட்டிக்க‌றாங்க‌. இதெல்லாம் ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ள்ல‌தான் பார்த்த‌து (கேட்ட‌து!). செல்வ‌ராக‌வ‌ன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு போயிட்டாருங்க‌. கார்த்தியோட‌ வாய்ஸ் மாடுலேஷ‌ன் ப‌ருத்தி வீர‌னை அவ‌ர் இன்னும் ம‌ற‌க்க‌ல‌ன்னு சொல்லுது. ஃப்ரெண்ட்ஸ் சில‌ பேர் "ம‌ம்மி" ப‌ட‌ம் மாதிரி இருக்கும்னு சொல்றாங்க‌. என‌க்கு "இண்டியானா ஜோன்ஸ்"தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது. என்ன‌ வேணும்னாலும் சொல்ல‌லாம், ஆனா செல்வ‌ராகவனுக்காக‌வே இந்த‌ ப‌ட‌ம் பாக்க‌ணும்!
http://www.youtube.com/watch?v=rFG1Ak49agk

லாஸ்ட், "இரும்புக் கோட்டை முர‌ட்டு சிங்க‌ம்". இந்த‌ ப‌ட‌த்தை நான் பாக்க‌ணும்னு நினைக்க‌ற‌துக்கு ரெண்டே கார‌ண‌ங்க‌ள்தான். ஒண்ணு, ரொம்ப‌ வ‌ருஷ‌த்துக்க‌ப்புற‌ம் த‌மிழ்ல‌ ஒரு கெள‌பாய் ப‌ட‌ம். அடுத்த‌து, சிம்புதேவ‌ன். இம்சை அர‌சனை வைத்து கோட்டை க‌ட்டிய‌ சிம்புதேவ‌ன், அறை எண் 305ல் இருந்த‌ க‌ட‌வுளுக்கு ச‌ரியா கோயில் க‌ட்ட‌லைன்னுதான் சொல்ல‌ணும். இந்த‌ சிங்க‌ம் ந‌ல்லாவே க‌ர்ஜிக்கும்னு நினைக்குறேன், பாக்க‌லாம்!
http://www.youtube.com/watch?v=e17PRxFhkaw

**************************************

சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேனே! டைர‌க்ட‌ர் ஷ‌ங்க‌ரும் க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டார், போய் பாருங்க‌ http://www.directorshankaronline.com/

எல்லாருக்கும் அட்வான்ஸ் (இதை த‌மிழ்ல‌ எப்ப‌டி சொல்ற‌து?) பொங்க‌ல் வாழ்த்துக்க‌ள்!


மூன்று குற்ற‌ங்க‌ள்

போன‌ வார‌ம் புத்த‌க‌ க‌ண்காட்சியில‌ருந்து வீட்டுக்கு வ‌ந்த‌ப்புற‌ம் உட‌னேயே எடுத்த‌ புக், தலைவர் சுஜாதா எழுதிய "மூன்று குற்ற‌ங்க‌ள்".

1. மேற்கே ஒரு குற்ற‌ம்
2. மீண்டும் ஒரு குற்ற‌ம்
3. மேலும் ஒரு குற்ற‌ம்

இந்த‌ மூணு கணேஷ்-வசந்த் க‌தைக‌ளையும் தொகுத்து ஒரே புத்தக‌மா வெளியிட்டிருக்காங்க‌, விசா ப‌ப்ளிகேஷ‌ன்ஸ். புத்த‌க‌ விலை Rs.130. ச‌த்திய‌மா குடுக்க‌ற‌ காசு வொர்த். அனேக‌மா 1980க‌ள்ல‌ இந்த கதைகள் வந்திருக்கலாம், ஆனா இப்போ படிச்சாலும் துளிகூட‌ இன்ட்ர‌ஸ்ட் குறையல. ஒரே ஒரு குறை - முத‌ல் சில‌ பக்க‌ங்க‌ளில் நிறைய‌ எழுத்துப்பிழை. ப்ரூஃப்ரீட‌ர்க‌ளே, கொஞ்ச‌ம் பாத்து ப‌ண்ணுங்க‌ப்பா, த‌லைவ‌ர் எழுதின‌து, அதுக்காக‌வாவ‌து....


மேற்கே ஒரு குற்றம்

கோர்ட்ல இருக்கும்போது கணேஷ்கிட்ட வ‌ந்து, உங்க‌ளோட‌‌ பேசணும்னு ஒரு பொண்ணு சொல்றா. ஆனா இப்போ முடியாது கொஞ்சம் பிஸி, சாயந்தரம் ஆபீஸ்ல வந்து பாருன்னு சொல்லிடறார். சாயந்தரம் ஆபீஸுக்கு வந்தப்புறம், ஆபீஸ்ல வேலை செய்யற பையன் "உங்களுக்காக ஒரு அம்மா வெயிட் ப‌ண்ணிகிட்டிருந்தாங்க‌, நீங்க‌ கூட்டிட்டு வ‌ர‌சொன்ன‌தா ஒருத்த‌ர் வ‌ந்து கார்ல‌ கூட்டிட்டு போயிட்டார்"னு சொல்ல‌, க‌ணேஷுக்கும், வ‌ச‌ந்துக்கும் அதிர்ச்சி. ம‌றுநாள் அந்த‌ பொண்ணு விப‌த்தில் ப‌லின்னு பேப்ப‌ர்ல‌ நியூஸ் வ‌ருது. அந்த‌ பொண்ணு என்ன‌வோ சொல்ல‌ வ‌ந்தா, ஆனா கேக்காம‌ த‌விர்த்துட்டோமேன்னு க‌ணேஷுக்கு குற்ற‌ உண‌ர்ச்சி தாக்க‌, அந்த‌ பொண்ணோட‌ வீட்டுக்கு போய் கணேஷும், வ‌ச‌ந்தும் அவ‌ங‌க‌ம்மாகிட்ட‌ விசாரிக்க‌றாங்க‌.

விசாரிக்கும்போது அந்த‌ பொண்ணு க‌ண்டிப்பா கொலைதான் செய்ய‌ப்ப‌ட்டிருக்க‌ணும்னு ஊர்ஜித‌ம் ஆகுது. இதுக்கப்புறம் க‌ணேஷ் கொலையாளிக்கு ஒரு சின்ன‌ பொறி வெச்சு ஆர‌ம்பிக்க‌றார். அது சென்னையில‌ ஆர‌ம்பிச்சு ஜெர்ம‌னிவ‌ரை அவ‌ங்க‌ள‌ கூட்டிட்டுபோகுது. அதுக்க‌ப்புற‌ம்.........

அடிச்சு சொல்ல‌லாம், இந்த‌ ம‌னுஷ‌ன் ம‌ட்டும் இங்கிலீஷ்ல‌ நாவ‌ல் எழுதியிருந்தா இவ‌ரோட‌ எல்லா நாவ‌ல்க‌ளுமே ஹாலிவுட்ல‌ ப‌ட‌மா வ‌ந்திருக்கும். ஒரு சின்ன‌ முடிச்சு, அத‌ வெச்சு என்ன‌மா பின்னியிருக்கார்! அதுவும் க‌ணேஷுக்கும் வ‌ச‌ந்துக்கும் இடையில‌ ந‌ட‌க்க‌ற‌ கான்வ‌ர்சேஷ‌ன்....நான் என்ன‌த்த‌ சொல்ற‌து. ப‌ய‌புள்ள‌ வ‌ச‌ந்து அநியாய‌த்துக்கு குறும்புக்கார‌ன், ஒரு பெண்பித்த‌ன் மாதிரி இருந்தாலும், பெண்க‌ளே ர‌சிக்க‌ற‌ மாதிரி பேச‌ற‌து வச‌ந்தோட‌ ஸ்பெஷாலிட்டி!

மீண்டும் ஒரு குற்ற‌ம்

காலை 10:30 ம‌ணிக்கு ஒரு பெரிய‌ மிடில் ஏஜ் பிஸின‌ஸ்மேன் க‌ணேஷுக்கு கால் ப‌ண்ணி என்னை கொலை செய்ய‌ ச‌தி ப‌ண்ணிட்டிருக்காங்க‌, உங்க‌ள‌ சீக்கிர‌ம் மீட் ப‌ண்ண‌னும்னு சொல்றார். 'க‌'வும், 'வ‌'வும் 11:30க்கு அவ‌ர் வீட்டுக்கு போனா அவ‌ர் கொலை செய்ய‌ப்ப‌ட்டுகிட‌க்கிறார். அவ‌ர் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ இருந்த‌ ஒரு லேடி மேல‌ ச‌ந்தேக‌ம் ஆர‌ம்பிச்சு, அவ‌ரோட‌ உற‌வின‌ர்க‌ள் வ‌ரைக்கும் போகுது.

திடீர்னு போலீஸ் அவ‌ரோட‌ உற‌வின‌ர் ஒருத்த‌ரை அரெஸ்ட் ப‌ண்ணிட‌றாங்க‌. கார‌ண‌ம், அவ‌ர் கொலை ந‌ட‌ந்த‌ அன்னைக்கு வீட்டுக்கு வ‌ந்து, அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா கிள‌ம்பி போன‌துக்கு வாட்ச்மேன் சாட்சி. கொலை ந‌ட‌ந்த‌ முன் தின‌ம் இவ‌ர், அந்த‌ பிஸின‌ஸ்மேனோட‌ வாக்குவாத‌ம் ப‌ண்ணி, ச‌ண்டை போட‌ற‌ அள‌வுக்கு போயிருக்கு. இதெல்லாம் வெச்சு, போலீஸ் அவ‌ரை அரெஸ்ட் ப‌ண்ணிட‌றாங்க‌.

ஆனா அவ‌ரோ இதெல்லாம் உண்மைதான், ஆனா நான் போகும்போதே அவ‌ர் செத்துக்கிட‌ந்தார், அத‌ பாத்த‌வுட‌னே போலீஸ்ல‌ சொல்லாத‌துதான் நான் செஞ்ச‌ த‌ப்புனு புல‌ம்ப‌றார். இங்கேதான் ந‌ம்மாளுங்க‌ க‌ள‌த்துல‌ இற‌ங்கி, யாரு உண்மையான‌ கொலையாளின்னு க‌ண்டுபிடிக்க‌றாங்க‌. இந்த‌ க‌தைல‌ யாரு கொலையாளின்னு ஓர‌ள‌வு guess ப‌ண்ண‌முடியுது. ஆனாலும் க‌தையோட‌ ஃப்ளோ ந‌ல்லாவே இருக்கு!

மேலும் ஒரு குற்ற‌ம்

இந்த‌ க‌தைய‌ ப‌டிச்சு பாருங்க‌, என‌க்கு ரொம்ப‌ புடிச்சிருந்த‌து. ஆனா எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரிய‌ல‌. ரொம்ப‌ சாதார‌ண‌மா ஆர‌ம்பிக்‌குது க‌தை. எப்போவும் ந‌ட்பாக‌வே இருக்க‌ற‌ க‌ணேஷும், வ‌ச‌ந்தும் இதுல‌ கொஞ்ச‌ம் ச‌ண்டை போட்டு பிரிய‌ற‌ அள‌வுக்கு போறாங்க‌. கார‌ண‌ம் க‌ணேஷின் டென்ஷ‌ன் அவ‌ரோட‌ உட‌ல் ந‌ல‌த்தை பாதிக்க‌, வ‌ச‌ந்தோட‌ ச‌ண்டை போட‌, ஆனாலும் வெகு சீக்கிர‌ம் ஈகோ இல்லாம‌ ரெண்டு பேரும் சீக்கிர‌ம் சேர்ந்துட‌றாங்க‌.

அதுக்க‌ப்புற‌ம் டாக்ட‌ர் அட்வைஸ்ப‌டி கொஞ்ச‌ நாள் வேலையில‌யிருந்து ரெஸ்ட் எடுக்க‌லாம்னு முடிவெடுக்க‌றாங்க‌. ரெஸ்ட் எடுக்க‌ வேற‌ ஊர் போற‌ இட‌த்துல‌யும் ஒரு விஷ‌ய‌த்தை க‌ண்டுபிடிக்க‌ ஆர‌ம்பிக்க‌றாங்க‌. ம்ம்ம்...இதுக்கு மேல‌ நான் சொல்ல‌கூடாது. ப‌டிச்சு பாருங்க‌, க்ளைமேக்ஸை நீங்க‌ guess ப‌ண்ணா, ச‌த்தியமா கால‌ரை தூக்கி விட்டுகிட்டு சொல்லிக்க‌‌லாம், "நான் ஒரு ப்ரில்லிய‌ண்ட்"னு (ர‌வுண்ட் நெக் டிஷ‌ர்ட் போட்டிருந்தா க‌ழ‌ட்டி க‌ங்குலி மாதிரி சுத்திகிட்டே சொல்லிக்கோங்க‌). அந்த‌ள‌வுக்கு எதிர்பார்க்காத‌ க்ளைமேக்ஸ்! நீ guess ப‌ண்ணியான்னு கேக்குறீங்க‌ளா? ம்ம்ம்...யா....ப‌ட்...ம்ம்ம்...அது வ‌ந்து....ஹி..ஹி..

த‌லைவ‌ர‌ விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ற‌ அள‌வுக்கு நான் பெரிய‌ ஆளும் இல்ல‌, சித்தாளும் இல்ல‌. இது எல்லாமே இந்த‌ புத்த‌த்தை பற்றிய‌ என்னோட‌ க‌ருத்துதான். ப‌டிச்சு பாருங்க‌, நிச்ச‌ய‌மா உங்க‌ளுக்கு புடிக்கும்!

Friday, January 01, 2010

2010 புத்த‌க‌ க‌ண்காட்சி


ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளுக்கும் இனிய‌ புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்க‌ள்!

சென்னைல‌ 33வ‌து புத்த‌க‌ க‌ண்காட்சி தொட‌ங்கிடுச்சு (டிச‌ம்ப‌ர் 30, 2009 - ஜ‌ன‌வ‌ரி 10, 2010). ஆர்வ‌ம் தாங்க‌ல‌, அத‌னால‌ ரெண்டாவ‌து நாளான‌ நேத்தே ஒரு விசிட் அடிச்சுட்டேன். இத்த‌னை வ‌ருஷ‌ம் காணும் பொங்க‌ல்வ‌ரை ந‌ட‌ந்த‌ க‌ண்காட்சியை, "சென்னை ச‌ங்க‌ம‌ம்" விழாவோடு க்ளாஷ் ஆக‌கூடாதுன்னு ஜ‌ன‌வ‌ரி 10தோட‌ முடிச்சிட‌றாங்க‌. வாழ்க‌ க‌னிமொழி!

ம‌திய‌ம் சாப்பிட‌ல‌, அத‌னால‌ க‌ண்காட்சி உள்ளே நுழைஞ்ச‌துமே ஏதாவ‌து ஸ்நாக்ஸ் விக்க‌றாங்க‌ளான்னுதான் பாத்தேன். Sri Krishna Sweets - Food Courtனு ஒரு போர்டு போட்டிருக்க‌, போய் பார்த்தா....அநியாய‌ம்...ரூபாய் 30, 35 & 50. இந்த‌ மூணு கேட்ட‌க‌ரியில‌ அயிட்ட‌ங்க‌ள‌ (சாப்புட‌ற‌ அயிட்ட‌ங்க‌ள‌‌ சொன்னேன்) லிஸ்ட் ப‌ண்ணியிருக்காங்க‌. ரெண்டே ரெண்டு குட்டி ப‌ரோட்டா இல்ல‌ன்னா ச‌ப்பாத்தி 35 ரூபாய். இத‌ சாப்ட்டா சாப்புட்டு கை க‌ழுவ‌ற‌துக்குள்ள‌ ஜீர‌ண‌ம் ஆயிடும். அத‌னால‌ நான் ஒரு வெஜ் பிரியாணி வாங்க‌, அது கொஞ்ச‌ நேர‌த்துக்கு தாக்குபுடிச்சுது. உள்ளே போய் கொஞ்ச‌ நேர‌ம் க‌ழிச்சு குடிச்ச‌ ஆப்பிள் ஜுஸ் (ர‌ஸ்னா?) இன்னும் நிறைய‌ ஸ்டால்க‌ளில் சுத்தற‌துக்கு கொஞ்ச‌ம் தெம்பு குடுத்த‌து. அத‌னால‌ நாட்டாமை என்ன‌ தீர்ப்பு சொல்றார்னா, சும்மா டேஸ்ட் ப‌ண்ண‌ணும்னா போய் சாப்புடுங்க‌, ப‌சியோட‌ போகாதீங்க‌, ப‌ர்ஸ் ட‌ர் ஆயிடும், நீங்க‌ளும் ட‌ரிய‌ல் ஆயிடுவீங்க‌.
எப்ப‌வும் கிழ‌க்கு ப‌திப்ப‌கம் என்னோட‌ ஃபேவ‌ரைட். அத‌னால‌ அங்க‌ கொஞ்ச‌ம் அள்ளிகிட்டு போன‌துக்க‌ப்புற‌ம், திரும‌க‌ள் நிலைய‌த்தில் புக் க‌வ‌ரை பார்த்த‌வுட‌னே என‌க்கு தோணுன‌து, "சே இந்த‌ ம‌னுஷ‌ன் இன்னும் கொஞ்ச‌ வ‌ருஷ‌ம் இருந்திருக்கலாம்". ஹும்..என்ன‌ ப‌ண்ண‌......."மூன்று குற்ற‌ங்க‌ள்"னு ஒரே புத்த‌க‌த்திலேயே மூணு க‌ணேஷ்-வ‌ஸ‌ந்த் க‌தைக‌ள். ஒன் ஸ்டோன் த்ரீ மேங்கோஸ். இந்த‌ வ‌ருஷ‌ம் நான் வாங்கின‌து இந்த‌ புத்த‌க‌ங்க‌ளைத்தான்.


மூன்று குற்ற‌ங்க‌ள் - சுஜாதா - விசா ப‌ப்ளிகேஷ‌ன்ஸ் - நான் வாங்கிய‌து திரும‌க‌ள் நிலைய‌ம் ஸ்டாலில்

திக்...திக்...திக்! ஒரு ஏப்ர‌ல் புத்திசாலி - இந்திரா செள‌ந்த‌ர்ராஜ‌ன் - திரும‌க‌ள் நிலைய‌ம்

மீதி எல்லா புத்த‌க‌ங்க‌ளுமே கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் (New Horizon Media) ஸ்டாலில் வாங்கின‌து

இர‌ண்டாம் உல‌க‌ப் போர் - ம‌ருத‌ன்

இந்திரா - ஆர்.முத்துக்குமார்

ஹியூகோ சாவேஸ்: மோதிப்பார் - ம‌ருத‌ன்

யூத‌ர்க‌ள் - வ‌ர‌லாறும் வாழ்க்கையும் - முகில்

கே ஜி பி - அடி அல்ல‌து அழி - என்.சொக்க‌ன்

கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வ‌ர‌லாறு - என்.சொக்க‌ன்

முடிவில் ஒரு திருப்ப‌ம் - ஜெஃப்ரி ஆர்ச்ச‌ர் - த‌மிழில்: ப‌வித்ரா

தி.மு.க‌. உருவான‌து ஏன்? - ம‌ல‌ர்ம‌ன்ன‌ன்

நீங்க‌ என்னென்ன‌ வாங்க‌லாம்னு/வாங்கி இருக்கீங்க‌?