Sunday, June 28, 2009

ச்ச்ச்ச்சீ(ப்) ஜ‌ர்ன‌லிஸ‌ம்


இந்த‌ ப‌திவுல‌ நான் சில‌ அநாக‌ரிக‌மான‌ வார்த்தைக‌ள‌ யூஸ் ப‌ண்ணிருக்கேன்னு உங்க‌ளுக்கு தோணுச்சுன்னா, ஐ'ம் ரிய‌லி ஸாரி. என் ம‌ன‌சுல‌ தோணுன‌த‌ அப்ப‌டியே எழுத‌றேன்.

போன வார‌ம் விக‌ட‌ன்ல‌ விஜ‌ய் அர‌சிய‌லுக்கு வ‌ர்றது, க‌ட்சி ஆர‌ம்பிக்கப்போற‌துன்னு ப‌ய‌ங்க‌ர பில்ட‌ப்போட‌ ஒரு ஆர்ட்டிகிள் போட்டிருந்தாங்க‌. அதுக்கு போட்டியா இந்த‌ வார‌ம் குமுத‌த்துல‌ "ர‌சிக‌ர்க‌ளுக்கு அஜித் அன்புக்க‌ட்ட‌ளை"ன்னு ஒரு ஆர்ட்டிகிள் போட்டிருக்காங்க‌.

விஜ‌ய்யும் அவ‌ர் அப்பாவும் எடுக்க‌ற‌ ஸ்டெப்ல‌யிருந்தே அவ‌ங்க‌ ஏதோ ப்ளான்ல‌ இருக்காங்க‌ன்னு புரியுது. ஆனா இதுவ‌ரைக்கும் அர‌சிய‌ல் ப‌த்தி எதுவுமே பேசாம‌ இருக்க‌ற‌ அஜித்தை ஏன் வ‌ம்புக்கு இழுக்க‌றாங்க‌ன்னே தெரிய‌ல. ஒரு மாஸ் ஹீரோவா இருந்தும் இந்த நொடி வ‌ரைக்கும் அர‌சிய‌ல் ஆசை இல்லாம‌ இருக்க‌ற‌து சினிமாவுல‌ ரெண்டே பேர்தான். ஒண்ணு க‌ம‌ல், இன்னொன்ணு அஜித்.

அய்ய‌ய்யோ ஆன‌ந்த‌ விகட‌ன்ல‌ த‌ள‌ப‌திய‌ ப‌த்தி போட்டுட்டாங்க‌ளே. சரி நாம‌ த‌ல‌யை ப‌த்தி போட்ருவோம்னு ந‌மீதாத்துல‌...ஸாரி குமுதத்துல‌ முடிவு ப‌ண்ணிட்டாங்க‌ போல‌!

போட்டி போட‌ணும்னா புத்திசாலித்த‌ன‌மா போட்டி போடுங்க‌ய்யா! ர‌சிக‌ர்க‌ளையும், வாச‌க‌ர்க‌ளையும் ம‌டைய‌னுங்க‌ மாதிரி ட்ரீட் ப‌ண்றீங்க‌ளே, இதுதான் ஜ‌ர்ன‌லிஸ‌மா? அஜித‌ வ‌ந்து சொன்னாரா, நான் அர‌சிய‌லுக்கு வ‌ர‌ப்போறேன்னு. ஜூராஸிக் பார்க்ல‌ டைனோச‌ர் வ‌ந்தா, ப‌ன‌க‌ல் பார்க்ல‌யும் வ‌ரும்னு அர்த்த‌மா? அண்ணா, க‌லைஞ‌ர், எம்ஜிஆர், ஜெய‌ல‌லிதான்னு சினிமாவுல‌ ஜெயிச்ச‌வ‌ங்க‌ சிஎம் ஆயிட்டா, அடுத்து வ‌ர்ற‌ ஹீரோஸும் சிஎம் ஆயிடுவாங்க‌ளா?

என்னை கேட்டா, ஹீரோக்க‌ளுக்கு த‌லைக்க‌ன‌த்தை ஏத்த‌ற‌தே இந்த‌ மாதிரி ஆர்ட்டிகிள்ஸ்தான். அஜித் ர‌சிக‌ர்க‌ளாயிருந்தாலும், விஜ‌ய் ர‌சிக‌ர்க‌ளாயிருந்தாலும் நான் சொல்லுற‌து ஒண்ணே ஓண்ணுதான். உங்க‌ த‌லைவ‌ர் ப‌ட‌த்தை முத‌ல் நாளே, முத‌ல் ஷோவே போய் பாருங்க‌. கைத‌ட்டி ர‌சிங்க‌. விசில் அடிங்க‌. உங்க‌ ரூமுல‌ த‌லைவ‌ர் ஃபோட்டோவ‌ ஒட்டிவைங்க‌. ஆனா அவ‌ர் சிஎம் ஆக‌ணும்னுலாம் க‌ன‌வு காணாதீங்க‌. அர‌சிய‌ல்ல‌ ஈடுப‌டுற‌து அவ‌ங்க‌ளோட‌ விருப்ப‌ம். நீங்க‌ ஃபோர்ஸ் ப‌ண்ணி அவ‌ங்க‌ வ‌ர்ற‌துனால‌ உங்க‌ளுக்கு என்ன‌ லாப‌ம். சிம்பிள், என்னைக்காவ‌து உங்க‌ த‌லைவ‌ர் வெச்சிருக்க‌ற‌ கார் மாதிரி நாமும் வாங்க‌ணும்னு ஆச‌ப்ப‌ட்டிருக்கீங்க‌ளா. ஸோ, உங்க‌ குடும்ப‌த்தையும் கொஞ்ச‌ம் க‌வ‌னிங்க‌.

இன்னொன்னு, ந‌டிக‌ர்க‌ள் அர‌சிய‌லுக்கு வ‌ர‌க்கூடாதுன்னு நான் சொல்ல‌ல‌. ப‌ட், அவ‌ங்க‌ளுக்கு நேச்சுர‌லாவே அந்த‌ இன்ட்ர‌ஸ்ட் இருக்க‌ணும். இன்னொருத்த‌ர் ஃபோர்ஸ் ப‌ண்ணி அவ‌ங்க‌ வ‌ர‌க்கூடாது. அததான் நான் சொல்ல வ‌ரேன். என‌க்கு பில்லாவும் புடிச்சிருந்த‌து, போக்கிரியும்(90%) புடிச்சிருந்த‌து. ஏக‌ன் சுத்த‌மா புடிக்க‌ல‌, குருவி ச‌கிக்க‌ல‌ (வில்லு நான் பாக்க‌ல‌).


மை டிய‌ர் குமுத‌மே! இந்த‌ மாதிரி டுபாக்கூர் ஆர்ட்டிகிள் போட்டு மூணு ப‌க்க‌த்த‌ வேஸ்ட் ப‌ண்ணின‌துக்கு பேசாம‌ ந‌மீதா ஃபோட்டோவையே மூணு ப‌க்க‌த்துல‌யும் போட்டிருக்க‌லாம்!


Sunday, June 21, 2009

ஹாப்பி ப‌ர்த்டேங்ணோவ்!


ண்ணா, ஹாப்பி ப‌ர்த்டேங்ணா, ம்..க‌ட்சி ஆர‌ம்பிக்க‌போறீங்க‌ளாம், ப‌த்திரிக்கைக‌ள்ல‌ ப‌டிச்சேன். ந‌ம‌க்கு ஏன்ணா இதெல்லாம். உங்க‌ ர‌சிக‌ர்க‌ளுக்கு ஏதாவ‌து செய்ய‌ணும்னு நென‌ச்சா, கில்லி, போக்கிரி மாதிரி ஹிட் ப‌ட‌ங்க‌ள குடுக்க‌ முய‌ற்சி ப‌ண்ணுங்க‌. அதவிட்டுட்டு க‌ட்சி, அர‌சிய‌ல்னு காமெடி ப‌ண்ணிகிட்டு...


ந‌ம்ம‌ ப‌ய‌புள்ளைக‌ள‌ ப‌த்தி உங்க‌ளுக்கு தெரியாதுன்ணா, உங்க‌ள‌ பாக்குற‌துக்கு கூட்ட‌மா வ‌ருவாங்க‌. ஆனா சூரிய‌னோ, இலையோதான் ஓட்டு போடும்போது அவ‌ங்க‌ க‌ண்ணுக்கு தெரியும். நீங்க‌ளோ ப‌ய‌ங்க‌ர‌ ரிச‌ர்வ்ட் டைப். அர‌சிய‌ல்ல‌ அடுத்த‌வ‌ன‌ நாக‌ரிக‌மா காறிதுப்புனாதான் வேலைக்காகும். சோ, யோசிச்சு முடிவுப‌ண்ணுங்க‌.


மொத‌ல்ல‌ இந்த‌ மாதிரில்லாம் உங்க‌ளுக்கு யோச‌னை சொல்ற‌வ‌ங்க‌ள‌ அட‌க்கிவைங்க‌. ஏன்னா இப்போ உங்க‌ள‌ ம‌றைமுக‌மா க‌வுக்க‌றதே அவ‌ங்க‌தான். தெலுங்கு ப‌ட‌ங்க‌ள் டிவிடி வாங்கி குடுக்க‌ற‌தோட‌ அவ‌ங்க‌ வேலை முடிஞ்சுபோச்சுன்னு சொல்லிவைங்க‌. போயி, ம‌கேஷ்பாபு ந‌டிச்ச‌ ப‌ட‌த்தோட‌ ரைட்ஸ் வாங்க‌ற‌ வேலைய பாருங்ணா!



Saturday, June 20, 2009

ம‌ன்னிக்க‌ வேண்டுகிறேன்



இதுக்கு முன்னாடி ஒரு ப‌திவுல‌, சிம்புவ‌ ப‌த்தி விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ணிண‌துக்கு நான் குருவா ம‌திக்க‌ற‌ என் ந‌ண்ப‌ர், "அது த‌ப்பு! என்ன‌தான் உங்க‌ளுக்கு புடிக்காட்டாலும் இப்ப‌டி ப‌ப்ளிக்கா சிம்ப‌ன்ஸிங்க‌ற வார்த்தையெல்லாம் யூஸ் ப‌ண்ணியிருக்கக்கூடாது"ன்னார். ம்...அவ‌ர் சொல்ற‌தும் ச‌ரிதான். பட்...சிம்புவ‌ என‌க்கும் சின்ன‌ வ‌ய‌சுல‌ ரொம்ப‌வே புடிச்சிருந்த‌து.

ஒரு சின்ன பைய‌ன் சூப்ப‌ர் ஸ்டார் மாதிரி ஸ்டைல் ப‌ண்ற‌து நல்லாயிருந்த‌து. ஆனா அதையே 22 வ‌யசுல‌யும் ப‌ண்ணா...ஐயையோ! ம‌றுப‌டியும் விம‌ர்சன‌ம் ப‌ண்ண‌ ஆர‌ம்பிக்கறேன்.

ஓகே, அந்த‌ உல‌க‌ உத்த‌ம‌ர்கிட்டே (ந‌க்க‌ல் போகுதா பாருங்க‌..ஹி..ஹி)என‌க்கு புடிச்ச‌து ப‌த்தி எழுதி விமோச‌ன‌ம் தேடிக்க‌றேன். ம்ம்ம்ம்...பாட்டு விஷ‌ய‌த்துல‌ சிம்பு குட். ந‌ல்ல மியுசிக் சென்ஸ் ப்ள‌ஸ் ந‌ல்ல‌ வாய்ஸ்!

ச‌மீப‌த்துல‌ நான் ர‌சிச்சு கேட்ட‌ சிம்பு பாடிய‌ பாட்டு, "குளிர் 100" ப‌ட‌த்துல‌ வ‌ரும் "ம‌ன‌செல்லாம் உன்னிட‌ம் கொடுத்தேன் என் உயிர் தோழா" பாட்டு. ஐ திங்க், சிம்பு இதுவ‌ரைக்கும் பாடின‌துலேயே இதுதான் பெஸ்ட்!

அந்த‌ பாட்ட‌ கேக்க‌ணும்னு விரும்ப‌ற‌வ‌ங‌க‌ளுக்கு http://thenkinnam.blogspot.com/2009/06/100.html

Sunday, June 14, 2009

எம்.ஜி.ஆர் & எம்.ஆர்.ராதா


நேத்து ஏதாவ‌து சிடி வாங்க‌லாம்னு போயிருந்த‌ப்போ திடீர்னு ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ள் ஏதாவ‌து வாங்க‌லாம்னு தோணுச்சு. கொஞ்ச‌ம் அல‌சி(சோப் போடாம‌) ஆராய்ஞ்ச‌துல‌, நான் வாங்கின‌ ப‌ட‌ங்க‌ள்...

1. ர‌த்த‌க்க‌ண்ணீர்
2. நாடோடி ம‌ன்ன‌ன்

ர‌த்த‌க்க‌ண்ணீர்: எப்ப‌டி இந்த‌ ப‌ட‌த்த‌ இவ்வ‌ள‌வு நாளா பாக்காம‌ இருந்தேன். சே! என்ன‌ ஒரு க்ளாஸ் ஆக்டிங். இந்த‌ ப‌ட‌த்துக்காக‌ எம்.ஆர்.ராதாவுக்கு அவார்ட் கெடைச்சுதான்னு தெரிய‌ல‌. ஆனா ர‌சிக‌ர்க‌ளோட‌ ம‌ன‌சுல‌ இட‌ம்பிடிக்க‌ற‌த‌விட‌ பெரிய‌ அவார்ட் இருக்கா என்ன‌? குஷ்ட‌ம் வ‌ந்த‌ப்ப‌றமும் ம‌னுஷ‌ன் ப‌ண்ற‌ ந‌க்க‌ல் இருக்கே! சும்மா சொல்ல‌க்கூடாது, இட்ஸ் அப்ஸொல்யூட்லி சூப்ப‌ர்ப்! இந்த‌ ப‌ட‌த்த‌ப‌த்தி நான் சொல்ற‌த‌விட‌ ஒரு த‌ட‌வ‌ நீங்க‌ளே பாருங்க‌. த‌மிழ்ல‌ க‌ண்டிப்பா பாக்க‌வேண்டிய‌ ப‌ட‌ங்க‌ள்ல‌ இந்த‌ ப‌ட‌த்துக்கு நிச்ச‌ய‌மா ஒரு இட‌ம் இருக்கு. ஒரு சின்ன‌ இன்ஃப்ர்மேஷ‌ன், இந்த‌ ப‌ட‌த்துக்கு இசை, சித‌ம்ப‌ர‌ம் ஜெய‌ராம‌ன். பிண்ணணி இசை யாரு தெரியுமா? விஸ்வ‌நாத‌ன் ராம‌மூர்த்தி.
நாடோடி ம‌ன்ன‌ன்: இது ஒரு ப‌க்கா எம்ஜிஆர் இமேஜுக்கான‌ க‌தை. எம்ஜிஆர் வ‌ராத‌ சீன்க‌ள் ரொம்ப‌ க‌ம்மி. "இந்த‌ கூட்ட‌த்துக்கு இவன்தான் த‌லைவ‌ன்", "இந்த‌ நாட்டை காப்பாத்த‌ இனிமே உங்க‌ள‌ விட்டா யாரு இருக்கா"ன்னு எல்லாமே எம்ஜிஆர் ஃபார்முலாதான். ம‌ன்ன‌ன் மாதிரியே நாடோடி இருக்க‌றாருன்னு காவ‌லாளிக‌ளுக்கும், ம‌க்க‌ளுக்கும் தெரியுது. ஆனா ம‌ன்ன‌ராட்சிய‌ எதிர்க்க‌ற‌தா சொல்ற‌ பானும‌திக்கு தெரிய‌ல‌. இப்ப‌டி சில‌ ப‌ல‌ லாஜிக் இடிச்சாலும், வேக‌மான‌ திரைக்க‌தை அதையெல்லாம் ம‌ற‌க்க‌டிக்குது. அது எப்ப‌டிதான் ச‌ந்திர‌பாபு வாயில‌ இருந்து குருவி வ‌ர்ற‌ காட்சிய‌ எடுத்தாங்க‌ளோ தெரிய‌ல! ஆல்மோஸ்ட் 75% ப்ளாக்&ஒயிட்ல‌ வ‌ர்ற‌ ப‌ட‌ம் க‌டைசில‌ ச‌ரோஜாதேவி வ‌ர்ற‌ப்போ க‌ல‌ர்ல‌ மாறிடுது. க்ளைமாக்ஸ் ச‌ண்டைகாட்சி இந்த‌ ப‌ட‌ம் வ‌ந்த‌ கால‌க‌ட்ட‌த்துல‌ ரொம்ப‌வே பர‌ப‌ர‌ப்பா பேச‌ப்ப‌ட்டிருக்கும்னு நென‌க்குறேன். இந்த‌ ப‌ட‌த்துக்கு இசை எஸ்.என்.சுப்பையா. ஆங்..இன்னொரு விஷ‌ய‌ம் ர‌வீந்த‌ர்ங்க‌ற‌வ‌ரோட‌ சேர்ந்து இந்த‌ ப‌ட‌த்துக்கு வ‌ச‌ன‌ம் எழுதுன‌வ‌ர் க‌விய‌ர‌சு க‌ண்ண‌தாச‌ன். ஆனா இந்த‌ ப‌ட‌த்துல‌ அவ‌ர் ஒரு பாட்டுகூட‌ எழுத‌ல‌.


இந்த‌ ப‌ட‌த்துல‌ என‌க்கு புடிச்ச‌ ப‌ன்ச் ட‌ய‌லாக்: "என்னை ந‌ம்பாம‌ல் கெட்ட‌வ‌ர் நிறைய‌பேர் உண்டு, ந‌ம்பி கெட்ட‌வ‌ர் இதுவ‌ரை இல்லை"

ஒரு கோஇன்சிட‌ன்ஸ் பாத்திங்களா நான் பாத்த‌ ப‌ட‌ங்க‌ளோட‌ ஹீரோக்க‌ள் எம்ஜிஆர் & எம்.ஆர்.ராதா. இதுல‌ என்ன‌ கோஇன்சிட‌ன்ஸ்னு கேக்க‌ற‌வ‌ங்க‌ளுக்கு த‌லைல‌ ஒரு குட்டு!

ச‌ரி ஓகே ம‌றுப‌டியும் அடுத்த‌ வார‌ம் எழுத‌றேன். ஸியூ டாட்டா பபை!

விஜ‌ய‌காந்துக்கு புடிக்காத‌ வார்த்தை

ஹும்...கொஞ்ச‌ம் இடைவெளிவிட்டு எழுத‌றேன்..என்ன ப‌ண்றது, கொஞ்ச‌ம் இட‌ப்பெய‌ர்ச்சி ந‌ட‌ந்துடுச்சு. ஒரு 15 நிமிஷ‌ம்கூட உக்காந்து ஒரு ப‌திவ‌போடமுடிய‌ல‌. சே..என்ன‌ உல‌க‌ம‌டா இது, பார‌தியார் ம‌ட்டும் இப்போ இருந்திருந்தா "த‌னிம‌னித‌னுக்கு ஒரு "ப்ளாக்" இல்லையேல் இண்ட‌ர்நெட்டையே அழித்திடுவோம்"னு சொல்லியிருப்பார்(ஹிஹி..டிய‌ர் பார‌தியார் ஃபேன்ஸ், சும்மா த‌மாஸுக்கு, சீரிய‌ஸா எடுத்துக்காதீங்க‌)

ஏன் "ப்ளாக்" எழுத‌ல‌ன்னு என் த‌ம்பியும், ந‌ண்ப‌ர்க‌ளும் கேட்ட‌போது, வ‌டிவேலு சொன்ன‌மாதிரி, "என‌க்கு ரெம்ப பெருமையா இருந்துது". அட‌ நாம‌ எழுத‌ற‌த‌கூட ப‌டிக்க‌ற‌துக்கு ஆள் இருக்காங்க‌ளேன்னு கொஞ்ச‌ம் ச‌ந்தோஷ‌ம்தான். இனிமே வீக்எண்ட்ல‌ வீட்ல‌ இருந்துதான் எழுத‌ணும். கொஞ்ச‌ம் இந்தியாவோட பொருளாதார‌ம் ச‌ரியாக‌ட்டும். ஒரு லேப்டாப் வாங்கி தின‌மும் ஒரு ப‌திவ‌ போட்டுட‌றேன்.

நான் எழுத‌ற‌துக்கும், இந்தியாவோட‌ பொருளாதார‌த்துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்னு யோசிக்க‌றீங்க‌ளா? ஹுஹும்..இதெல்லாம் ம‌ட்டும் க‌ரெக்டா யோசிங்க‌. ஆனா _________________ (நீங்க‌ளே உங்க‌ள‌ விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ணிக்குங்க‌!)

Tuesday, June 09, 2009

க‌லைஞானியைப் ப‌ற்றி வெறும் ஞாநி


நேத்தே இந்த‌ ப‌திவ‌ எழுத‌ணும்னு நென‌ச்சேன், சில‌ த‌விர்க்க‌முடியாத‌ கார‌ண‌ங்க‌ளால‌ எழுத‌முடிய‌ல‌. மே 28ல‌ருந்து ஜூன் 3 வ‌ரைக்கும் திரைக்க‌தை எழுத‌ற‌த‌ப‌த்தி க‌ம‌ல் த‌ன்னோட‌ ராஜ்க‌ம‌ல் ஃபிலிம்ஸ் மூல‌மா சென்னை ஐஐடில‌ ஒரு ஒர்க் ஷாப் ந‌ட‌த்துனார். போன‌வார‌ம் குமுத‌த்துல‌ ஞாநி "இந்த‌ ப‌யில‌ர‌ங்க‌த்தை த‌மிழில் ந‌ட‌த்தாம‌ல் ஆங்கில‌த்தில் ந‌ட‌த்திய‌த‌ற்காக‌ க‌ம‌லுக்கு ஒரு குட்டு"ன்னு எழுதியிருந்தார்.

க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌ம், காலேஜ்னு க‌ட்டாம‌ ஏதோ இந்த‌ மாதிரி, தான் சார்ந்திருக்க‌ற‌ துறையை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு கொண்டுபோக‌ த‌ன்னால் ஆன‌த‌ அவ‌ர் ப‌ண்றார். அதுக்குள்ள‌ த‌மிழ், இங்கிலீஷ்னு ஏன்யா குறை சொல்ற‌துக்கு ஆர‌ம்பிக்க‌றீங்க‌. என‌க்கென்ன‌வோ ஞாநி மாதிரியான‌ அறிவுஜீவிங்க‌ள்ளாம், நாம‌ என்ன‌ ப‌ண்ணாலும் ஏதாவ‌து குறை க‌ண்டுபுடிச்சுக்கிட்டே இருப்பாங்க‌ன்னுதான் தோணுது.


ஒர்க் ஷாப் முடிவுல‌ க‌ம‌ல் சொன்ன‌து "இது ஒரு மிக‌ப்பெரிய‌ வெற்றின்னு சொல்றாங்க‌. ஆனா நான் இது ஒரு ஆர‌ம்ப‌ம்னுதான் சொல்வேன்"

இப்போதான் இலைய‌ விரிச்சுவெச்சுருக்காங்க‌. அதுக்குள்ள‌ சாம்பார்ல‌ உப்பு இல்ல‌ன்னுலாம் ஓவ‌ரா க‌த்தாதீங்க‌. தமிழ்ல‌யும் இந்த‌ ஒர்க் ஷாப்பை க‌ண்டிப்பா ந‌ட‌த்துவாங்க‌ன்னுதான் நென‌க்குறேன். அவ‌ங்களுக்கு கொஞ்ச‌ம் டைம் குடுப்போம். தொட‌ர்ந்து இங்கிலீஷ்லேயே ந‌ட‌த்துனாங்க‌ன்னா அப்போ நாம‌ சொல்ல‌லாம் "நீங்க‌ ப‌ண்ற‌து த‌ப்பு, த‌மிழ்ல‌யும் ந‌ட‌த்தணும்"னு. அதுக்குள்ள‌ பெரிய‌ இதுவாட்ட‌ம், இது நொள்ள‌ அது மொக்க‌ன்னு பேசிகிட்டு. அட‌போங்க‌ய்யா நீங்க‌ளும் உங்க‌ விம‌ர்ச‌ன‌மும்!

இத‌ எழுத‌ற‌த‌னால‌ என்னை, த‌லைவான்னு க‌த்திகிட்டு, ப‌ட‌ம் ரிலீஸாகுற‌ முத‌ல் நாளே தியேட்ட‌ருக்குபோய், க‌ட்அவுட்டுக்கு பாலாபிஷேக‌ம் ப‌ண்ற‌ ஒரு வெறித்த‌னமான‌ ர‌சிக‌ன்னு நெனச்சுடாதீங்க‌. ப‌ட‌ம் ந‌ல்லாயிருக்குன்னு கேள்விப‌ட்டா அது ர‌ஜினி, க‌ம‌ல், அஜித், விஜ‌ய், சூர்யான்னு யார் ப‌ட‌மாயிருந்தாலும் போய்பாப்பேன். ந‌ல்லாயில்லாட்டாலும் ர‌ஜினி, க‌ம‌ல், சூர்யா ப‌ட‌ங்க‌ள‌ பாப்பேன். கார‌ண‌ம்லாம் சொல்ல‌ணுமா என்ன‌?

ந‌ல்லாயிருந்தாலும் பாக்க‌புடிக்காத‌து, சிம்பு, விஷால், ப‌ரத் மாதிரியான‌ ஹீ(ஜீ)ரோக்க‌ளோட‌ ப‌ட‌ங்க‌ள். இத‌ப‌த்தி இன்னொரு நாள் கொஞ்ச‌ம் விவ‌ர‌மா எழுத‌ணும்னு நென‌க்குறேன். ரொம்ப‌ நாளாவே என‌க்கு டி.ராஜேந்த‌ர‌ பாத்தா கேக்க‌ணும்னு நென‌ச்சிட்டிருக்க‌ற‌ ஒரு கேள்வி "ஏன் சார், உங்க பைய‌ன் பேரு சில‌ம்ப‌ர‌சன், சுருக்க‌மா சில‌ம்புன்னு கூப்புடாம‌ ஏன் சிம்புன்னு கூப்புட‌றீங்க‌?". ஒரு வேளை சிம்ப‌ன்ஸியோட‌ சுருக்க‌மோ? ஹி...ஹி...


Friday, June 05, 2009

உல‌க‌ சுற்றுப்புறச்சூழ‌ல் தினம்!



இன்னைக்கு உல‌க‌ சுற்றுப்புறச்சூழ‌ல் தினம். ந‌ம்ம‌ சுற்றுப்புற‌த்த‌ எந்த‌ள‌வுக்கு நாம‌ சுத்த‌மா, பாதுகாப்பா வெச்சுக்க‌றோம்? யோசிச்சு பாருங்க, அதிக‌ள‌வு ப்ளாஸ்டிக் பொருள்க‌ள‌ ப‌ய‌ன்ப‌டுத்த்ற‌து, குப்பைக‌ள‌ க‌ண்ட‌ இட‌த்துல‌ போட‌ற‌து, தொழிற்சாலைக‌ள், வாக‌ன‌ங்க‌ளோட‌ புகைன்னு இப்ப‌டி நிறைய‌ இருக்கு.

மால்தீவ்ஸ்னு ஒரு தீவு ப‌த்தி கேள்விப‌ட்டிருப்பீங்க‌, ரொம்ப‌ பிரப‌ல‌மான‌ டூரிஸ்ட் ஸ்பாட்(காசு அதிக‌மா வெச்சிருக்க‌ற‌வ‌ங்க‌ளுக்கு ம‌ட்டும்). க‌ட‌ல் நீர்ம‌ட்ட‌ம் அதிக‌மாகி அதிக‌மாகி 2030க்குள்ள‌ இந்த‌ மால்தீவ்ஸ் க‌ட‌லுக்க‌டியில‌ மூழ்கிடும்னு சொல்றாங்க‌(யார் சொன்ன‌துனுலாம் கேக்ககூடாது, எதில‌யோ ப‌டிச்ச‌து). ந‌ம்மூரு இந்த‌ மாதிரிலாம் ஆகாம‌ த‌டுக்க‌ற‌துக்கு நாம‌ என்ன‌ செய்ய‌றோம்? ட‌க்குன்னு ப‌தில் சொல்ல‌ முடிய‌ல‌ பாத்திங்க‌ளா(ஏன்னா ந‌ம்ம‌ ட‌க் அவ்வ‌ள‌வுதான்)

இன்னைக்கும் நான் நேர‌டியா பாத்த‌து, ப‌ஸ்ல‌ இருந்து இற‌ங்கின‌துக்க‌ப்புற‌ம், ரெண்டு மூணு பேர் சாதார‌ண‌மா அந்த‌ ப‌ஸ் டிக்கெட்டை ரோடுலேயே போட்டுபோறாங்க‌. அது ஒரு சின்ன‌ துண்டுசீட்தான். இல்ல‌ன்னு சொல்ல‌ல‌. ஆனா இதே மாதிரி எல்லோரும் ரோடுலேயே டிக்கெட்ட‌ தூக்கியெறிய‌ ஆர‌ம்பிச்சா...(அன்னிய‌ன் எஃபெக்ட் டோய்!) இனிமேலாவ‌து த‌ய‌வுசெய்து அதை குப்பைத்தொட்டில‌ போடுங்க‌. நாம‌ இந்த‌மாதிரி இருந்துகிட்டு கார்ப்ப‌ரேஷ‌ன் சரியில்ல‌, க‌வ‌ர்ன்மெண்ட் சரியில்ல‌ன்னு ம‌த்த‌வ‌ங்க‌ மேல‌ ப‌ழிபோட‌வேண்டிய‌து.

முடிஞ்ச‌வ‌ரைக்கும் ப்ளாஸ்டிக் பொருள்க‌ள‌ அவாய்ட் ப‌ண்ணுங்க‌. வீட்டுல‌ சாதார‌ன‌ 40வாட்ஸ் ப‌ல்புக்கு ப‌தில் சிஎஃப்எல் லேம்ப் ப‌ய‌ன்ப‌டுத்துங்க‌. வீட்டை சுத்தமா வெச்சுக்குங்க‌, அக்க‌ம்ப‌க்க‌த்துல‌ சொல்லி உங்க‌ தெருவையும் சுத்த‌மா வெச்சுக்க‌ முய‌ற்சி ப‌ண்ணுங்க‌. அப்ப‌டி உங்க‌ தெருவும் சுத்த‌மாயிடுச்சுன்னா, ப‌க்க‌த்து தெருவுல‌ இருக்க‌ற‌ உங்க‌ ந‌ண்ப‌ர்கிட்ட‌ போய் உங்க‌ தெருவ‌ ப‌த்தி பெருமையா பேசுங்க‌. அவ‌ருக்கும் அவ‌ங்க‌ தெருவ‌ சுத்த‌மா வெச்சுக்க‌ற‌ எண்ண‌ம் வ‌ர‌லாம்ல‌.

இது சினிமாத்த‌ன‌மாகூட‌ உங்க‌ளுக்கு தோண‌லாம். ஒருத‌ட‌வ‌ முய‌ற்சிப‌ண்ணிதான் பாருங்க‌ளேன்...ஸாரி முய‌ற்சிப‌ண்ணிதான் பாப்போமே!

Thursday, June 04, 2009

ப‌ட்ட‌ர்ஃபிளை எஃபெக்ட்



என்ன‌தான் வார்ம்அப் மேட்ச்சா இருந்தாலும், ஆடுன‌து(மோதுன‌து?) இந்தியா பாகிஸ்தானாச்சே. லேசுல‌ விட்ற‌முடியுமா? ப‌ச‌ங்க‌ பின்னிபெட‌லெடுத்துட்டாங்க‌ல்ல‌!

ஒண்ணு க‌வ‌னிச்சீங்க‌ளா, த‌சாவ‌தார‌ம் ப‌ட‌த்துல‌ வ‌ந்த‌ "ப‌ட்ட‌ர்ஃபிளை எஃபெக்ட்" நேத்து மேட்ச்ல‌ ஒர்க்அவுட் ஆகியிருக்கு. எப்ப‌டி தெரியுமா? இந்திய‌ன் கிரிக்கெட் லீக்(ஐசிஎல்) ஆர‌ம்பிச்சு க‌பில்தேவ‌ சேர்மனா போட்டு 2020 போட்டிக‌ள் ந‌ட‌த்தி விள‌ம்ப‌ர‌ம், வ‌ருமான‌ம்னு ந‌ல்லாவே போச்சு. இத‌பாத்த‌ பிசிசிஐகார‌ங்க‌ சும்மா இருப்பாங்க‌ளா? அவ‌ங்க‌ளும் ப‌திலுக்கு இந்திய‌ன் பிரிமீய‌ர் லீக்(ஐபிஎல்)னு ஆர‌ம்பிச்சு 2020 போட்டிக‌ள ந‌ட‌த்த‌ ஆரம்பிச்சாங்க‌. டெக்கான் சார்ஜ‌ர்ஸ் டீமுக்காக‌ ரோஹித் ஷ‌ர்மா செல‌க்ட் ஆனார். இந்த‌ வ‌ருஷ‌ம் நட‌ந்த‌ ஐபிஎல்ல‌ செம‌ ஃபார்ம்ல‌ இருந்த‌ ரோஹிததும் டெக்கான் சார்ஜ‌ர்ஸ் சாம்பிய‌ன் ஆன‌துக்கு ஒரு முக்கிய‌மான‌ கார‌ண‌ம்னு சொல்ல‌லாம்.

இப்ப‌டி செம‌ ஃபார்ம்ல்‌ இருக்க‌ற‌ ரோஹித் ஷ‌ர்மாதான் நேத்து க‌வுத‌ம் க‌ம்பீரோட‌ ஓப்ப‌னிங் இற‌ங்கினார். சேவாக்குக்கு இன்னும் தோள்ப‌ட்டை காய‌ம் ச‌ரியாக‌லையாம். 159 ரன் டார்கெட், அதுல‌ பாதிய‌ ரோஹித்தே(80 ரன், 53 ப‌ந்துக‌ள், 9ஃபோர்ஸ், 4சிக்ஸ‌ர்ஸ்) அடிச்சு, ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு வேலைய‌ குறைச்சுட்டாரு.

ஐசிஎல் ஆர‌ம்பிச்சு, ஐபிஎல் ஆர‌ம்பிச்சு, டெக்கான் சார்ஜர்ஸ் டீமுல‌ செல‌க்ட் ஆகி, இந்த‌ வ‌ருஷ‌ம் ஐபிஎல்ல‌ ந‌ல்லா ஆடி, அந்த‌ ஃபார்ம‌ நேத்து மேட்ச்ல‌யும் தொட‌ர்ந்தார் இல்லையா. இதுதான் ஐசிஎல் டூ ரோஹித் ஷ‌ர்மா ப‌ட்ட‌ர்ஃபிளை எஃபெக்ட். எப்ப்புடி? ஹி..ஹி...

Wednesday, June 03, 2009

ப‌ர்த்டே பேபி!



குடும்ப‌ அர‌சிய‌ல், ப‌த‌வி ஆசை..என்ன‌ வேணும்னாலும் சொல்லுங்க‌. 86 வ‌ய‌சுல‌ இந்த‌ மாதிரி ந‌ம்மால‌ க‌ண்டிப்பா ஆக்டிவா செய‌ல்ப‌டமுடியாது. அதுக்காக‌வே ஹாட்ஸ் ஆஃப் அண்ட் ஹாப்பி ப‌ர்த்டே டூ க‌லைஞ‌ர்! (இதுக்கும் "வாழ்த்தை தமிழில் சொல்ல‌டா த‌ம்பி"ன்னு சொல்லுவார்)

நேர‌மின்மை கார‌ண‌மா என்னால‌ அதிக‌மா இன்னைக்கு எழுத‌முடிய‌ல‌. அத‌னால‌ தேர்த‌ல்ல‌ தோல்வியே காணாத‌ இந்த‌ திமுக‌ த‌லைவ‌ர் ஜெயிச்ச‌ தொகுதிக‌ளை இங்க‌ ப‌ட்டிய‌லிட‌ற‌தோட‌ இன்னையோட‌ என் க‌ட‌மைய‌ முடிச்சுக்க‌றேன். நாளைக்கு கொஞ்ச‌ம் அதிக‌மா எழுத‌ முய‌ற்சிப‌ண்றேன்!

1957 குளித்த‌லை
1962 த‌ஞ்சாவூர்
1967 சைதாப்பேட்டை
1971 சைதாப்பேட்டை
1977 அண்ணா ந‌க‌ர்
1980 அண்ணா ந‌க‌ர்
1989 துறைமுக‌ம்
1989 துறைமுக‌ம்
1996 சேப்பாக்க‌ம்
2001 சேப்பாக்க‌ம்
2006 சேப்பாக்க‌ம்


குறிப்பு: ச‌த்திய‌மா நான் திமுக‌ க‌ட்சியில‌ உறுப்பினரால்லாம் இல்லீங்க‌! வ‌ய‌சுக்கும் உழைப்புக்கும் ம‌ரியாதை த‌ர்றேன். அவ்வ‌ள‌வுதான். இன்னும் ச‌ந்தேகமா இருந்தா மே மாச‌ம் இவ‌ர‌ விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ணி எழுதின‌ ப‌திவு இருக்கு. பாருங்க‌!

Tuesday, June 02, 2009

ச‌பாநாய‌க‌ர் மீரா!


இன்னைக்கு காலைல‌ ரேடியோஒன் 94.3எஃப்எம் கேட்டுட்ருந்தேன். ஒரு எஸ்எம்எஸ் போட்டிக்கான‌ கேள்வி கேட்டாங்க‌(வேற‌ யாரு சுச்சிதான்!). பாராளும‌ன்ற‌ ச‌பாநாய‌க‌ரா யார‌ தேர்ந்தெடுக்க‌ப்போறாங்க‌? ஆப்ஷ‌ன் ஏ: மீரா குமார், ஆப்ஷ‌ன் பீ: மீரா ஜாஸ்மின்(அப்பாடா! மீரா ஜாஸ்மின் ப‌ட‌த்த‌ ந‌ம்ம‌ "ப்ளாக்"ல‌ போடுற‌துக்கு கார‌ண‌ம் கெடைச்சிடுச்சு). சரியான‌ ப‌திலுக்கு ஞாயிறு அன்னைக்கு ச‌த்ய‌ம்ல‌ திரையிட‌ற‌ ஒரு அனிமேஷ‌ன் ப‌ட‌த்துக்கு 2 டிக்கெட்.

இது என்ன‌ பொது அறிவ‌ வ‌ள‌ர்க்க‌றாங்க‌ளா, இல்ல‌ நாம‌ சுத்த‌ டுபாக்கூர், இந்த‌ மாதிரி ஈஸியா கேட்டாத்தான் ப‌தில் சொல்வோம்னு நென‌ச்சுட்டாங்க‌ளான்னு தெரிய‌ல‌. மீரா குமாரா இல்ல‌ சோனியா காந்தியான்னு கேட்டிருந்தாகூட‌ நியாய‌மா இருந்திருக்கும். பேரு கொஞ்ச‌ம் ஒண்ணா இருந்துட்டா, இந்த‌ மாதிரி கேட்டு காமெடி பண்ண‌வேண்டிய‌து.

நீங்க‌ வேண்ணா பாருங்க‌, சுத‌ந்திர‌ தின‌ம் அன்னைக்கு ஒரு கேள்வி கேப்பாங்க‌

ந‌ம்ம‌ நாட்டோட‌ பிர‌த‌ம‌ர் பேர் என்ன‌?
ஆப்ஷ‌ன் ஏ: ம‌ன்மோக‌ன் சிங்

ஆப்ஷ‌ன் பீ: ஹ‌ர்ப‌ஜ‌ன் சிங்
ஆப்ஷ‌ன் சி: யுவ்ராஜ் சிங்

இந்த‌ வார‌ம் க‌டைசில‌ விஷாலோட‌ ரோத‌னை...ஹிஹி...ஸாரி...தோர‌ணை ப‌ட‌ம் பாக்க‌லாமான்னு ஒரு யோச‌னையில‌ இருந்தேன். ந‌ல்ல‌வேள‌ ஒரு ந‌ண்ப‌ன் என்னை காப்பாத்திட்டான். மறுப‌டியும் ப‌ஸ் ஸ்டாண்ட், எட்றா வ‌ண்டிய‌, அவ‌ன‌ தூக்குடா, கேம‌ராவ‌ பாத்து ப‌ஞ்ச் வ‌ச‌ன‌ங்க‌ள், லூசு ஹீரோயின், 50 பேர் வ‌ந்தாலும் அடிச்சு தூள கெள‌ப்புற‌து...அய்ய‌ய்யோ போதும்டா சாமி...இன்னொரு விஜ‌ய் ஆக‌ணும்னு முய‌ற்சி பண்ணா விஜ‌ய் ப‌ட‌ங்க‌ள் மாதிரிதான் ரிசல்ட்டும் வ‌ரும்.

பாஸு ஒண்ணு புரிஞ்சுக்குங்க‌, இப்ப‌ல்லாம் ப‌ட‌ம் ந‌ல்லால்ல‌ன்னா, அது ர‌ஜினி ப‌ட‌மாயிருந்தாலும்(பாபா, குசேல‌ன்) ஜ‌ன‌ங்க‌ ஃப்ளாப் ஆக்கிடுறாங்க‌. ஹும்...இது எப்போதான் உங்க‌ளுக்கெல்லாம் புரிய‌ப்போகுதோ??? அய்யோ...அய்யோ!

Monday, June 01, 2009

ச‌ர்வ‌ம்


ச‌னிக்கிழ‌மை (மே 30) ச‌ர்வ‌ம் ப‌ட‌ம் பாக்க‌லாம்னு போயிருந்தேன். ப‌ட‌த்தோட‌ ரிச‌ல்ட் ஏற்க‌னவே தெரிஞ்சுபோச்சு. இருந்தும் நான் போன‌துக்கான‌ கார‌ண‌ம்...க‌ண்டிப்பா த்ரிஷா இல்லீங்க‌, நீர‌வ்ஷாவோட‌ ஒளிப்ப‌திவு(டெக்னிக்க‌லா வாட்ச் ப‌ண்றாராம்!). ஆர‌ம்ப‌மே அச‌த்த‌லாத்தான் இருந்துச்சு. ஆனா திரைக்க‌தை சொத‌ப்பும்போது, ஒளிப்ப‌திவாள‌ரால‌ என்ன‌ ப‌ண்ண‌முடியும்?

"21 க்ராம்ஸ்"ங்க‌ற‌ இங்கிலீஷ் ப‌ட‌த்த‌ தமிழுக்கேத்த‌ மாதிரி கொஞ்ச‌ம் மாத்தி கொடுக்க‌ முய‌ற்சி ப‌ண்ணியிருக்கிறார் விஷ்ணுவ‌ர்த‌ன். இற‌ந்துபோன‌ த‌ன் காத‌லியோட‌ இத‌ய‌ம் ஒரு சின்ன‌ பைய‌னுக்கு பொருத்த‌ப்ப‌டுது. அந்த‌ பைய‌னை கொலை ப‌ண்ண‌ இன்னொருத்த‌ர் துடிச்சிட்டிருக்கார். அவ‌ர் ஏன் ஒரு சின்ன‌ பைய‌னை கொலை ப‌ண்ண‌ணும்னு நென‌க்குறார், அவ‌ர்கிட்ட‌யிருந்து ஹீரோ அந்த் பைய‌னை எப்ப‌டி காப்பாத்துறார்ங்க‌ற‌துதான் க‌தை. கேக்கும்போதே ந‌ம‌க்குள்ள‌ ஒரு சுவார‌ஸ்ய‌ம் எகிறுதுல்ல‌? ஆனா அத‌ புஸ்ஸுனு ஆக்கிட்டார் இய‌க்குன‌ர்.

ஆர்யா-த்ரிஷா காட்சிக‌ள் குறும்புத்த‌ன‌மா இருந்தாலும் முழுக்க‌ முழுக்க சினிமாத்த‌ன‌ம். ஒரு பொண்ண‌ தொட‌ர்ந்து ல‌வ் ப‌ண்ணு ல‌வ் ப‌ண்ணுண்னு டார்ச்ச‌ர் ப‌ண்ணா அவ‌ளுக்கு ல‌வ் வ‌ந்துடுமா? நிஜ‌த்துல‌ இந்த‌ மாதிரி ப‌ண்ணா போலீஸ்தான் வ‌ரும். இது ப‌த்தாதுன்னு ஜே.டீ.ச‌க்ர‌வ‌ர்த்தி அடிக்க‌டி "என் வ‌லி உன‌க்கு புரிய‌ணும்"னு சொல்லி க‌டுப்பேத்த‌றார். ராஜாவா, ர‌ஹ்மானாங்க‌ற‌ கேள்விலாம் தேவையில்லாத‌து. இதெல்லாம் பாக்குற‌துல‌ ந‌மக்கு ஏற்ப‌டுற‌ வ‌லிய‌ யாருக்கு புரிய‌வ‌க்குற‌து?

ஒரு அப்பாவோட‌ த‌விப்பை இய‌ல்பா வெளிப்ப‌டுத்தியிருக்கிறார் இந்திர‌ஜித். ம‌லையாள‌ ந‌டிக‌ர் பிருத்விராஜோட‌ அண்ண‌ணாம்ல‌! ந‌ல்லாவே ப‌ண்ணியிருக்கார். ச‌க்ர‌வ‌ர்த்தி முக‌த்துல‌ நார்ம‌லாவே ஒரு சோக‌ம் இருக்கும். அதுக்கேத்த‌ கேர‌க்ட‌ர்தான் அவ‌ரும் ப‌ண்ணியிருக்கார், ஆனா இய‌க்குன‌ர் அவ‌ர‌ புரொஜ‌க்ட் ப‌ண்ணியிருக்க‌ற‌வித‌ம்தான்.....ச‌ரி விடுங்க‌! பொதுவா ம‌ணிர‌த்ன‌ம் ப‌ட‌ங்க‌ள்ல‌ வ‌ர‌ சின்ன‌ ப‌ச‌ங்க‌ வ‌ய‌சுக்கு மீறின‌ பேச்சு பேசும்போது என‌க்கு(ந‌ம‌க்கு?) கொஞ்ச‌ம் எரிச்ச‌ல்தான் வ‌ரும். அந்த‌ வ‌கையில‌ பாத்தா, இந்த‌ ப‌ட‌த்துல‌ வ‌ரும் அந்த‌ சின்ன‌ பைய‌ன் கொஞ்ச‌ம் ஆறுத‌ல்தான்.

ப‌ட‌த்தோட‌ ப்ள‌ஸ்னு பாத்தா, நீர‌வ்ஷாவோட‌ ஒளிப்ப‌திவு & இளைய‌ராஜாவோட‌ பாட்டை பிண்ண‌ணி இசையா யூஸ் ப‌ண்ணியிருக்க‌ற‌து (யாரோட‌ ஐடியாங்க‌ இது? ரிய‌லி சூப்ப‌ர்ப்!)

ஸ்டைலிஷா ப‌ண்ண‌து ந‌ல்லாருக்கு. ஆனா திரைக்க‌தையும் கொஞ்ச‌ம் ஸ்ட்ராங்கா இருந்திருந்தா விஷ்ணுக்கு இது சூப்ப‌ர்ஹிட்டா இருந்திருக்கும்!