Sunday, April 18, 2010

ப‌தின்ம‌ வ‌ய‌து குறும்புக‌ள்


உண்மையாக‌ சொன்னால் எப்ப‌டி ஆர‌ம்பிப்ப‌து, எதை சொல்வ‌து என்றே தெரிய‌வில்லை. அழ‌கான‌ மாலைப்பொழுதில் அந்த‌ ஜில் நினைவுக‌ளை மீண்டும் மீட்டெடுக்க‌வைத்த‌ தோழி விக்னேஷ்வ‌ரிக்கு ந‌ன்றி.

சின்ன்ன்ன‌ வ‌ய‌சுல‌ எவ்வ்வ்வ‌ளோ போராட்ட‌ம்!

முத‌லில் ப‌டிப்பு என‌க்கு வாழைத்த‌ண்டு பொறிய‌லாய் காட்சிய‌ளிக்க‌ ஆர‌ம்பித்த‌து ('உட‌ம்புக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌துடா' என்று அம்மா சொன்னாலும், இன்றும் என‌க்கென்ன‌வோ வாழைத்த‌ண்டு பொறிய‌ல் ம‌ட்டும் உவ்வ்வ்வே!). டிவிதான் உல‌க‌ம் என்றான‌து. ராமாய‌ண‌ம், ம‌ஹாபார‌த‌ம் தொட‌ங்கி, டாம் & ஜெர்ரி, ஹீமேன், சார்லி சாப்ளின், ர‌ஜினி, க‌ம‌ல், ஒளியும் ஒலியும், சித்ர‌ஹார், சித்ர‌மாலா, சூப்ப‌ர் ஹிட் முகாப்லா என‌ ப‌டிப்பை த‌விர‌ ம‌ற்ற‌ அனைத்திலும் ஆர்வ‌ம் காட்ட‌ தொட‌ங்கினேன்.

போன‌ ஜென்ம‌த்தில் காந்தி தாத்தாவுக்கு பிஏவாய் இருந்தேனோ என்ன‌வோ, போராடுவ‌து என்ப‌து ர‌த்த‌த்தில் ஊறிய‌தாய் இருந்த‌து. ஆம், இள‌வ‌ய‌திலேயே என் போராட்ட‌ம் ஆர‌ம்ப‌மான‌து. அதுவும் என் பெற்றோருக்கு எதிராக‌. போராட்ட‌த்தின் கார‌ண‌ம்....சைக்கிள். ப‌தினொரு வ‌ய‌தில் அப்பாவின் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்த‌போது ஒரு சிறு விப‌த்து(!) ஏற்ப‌ட்டு ப‌த்து நாட்க‌ள் ப‌ள்ளிக்கு "As I am suffering from........Thanking You, Yours Obediently...." என்று சொல்லிவிட்டு, வீட்டில் டிவியை காத‌லித்துக்கொண்டிருந்தேன். டீ விள‌ம்ப‌ர‌த்தில் சொல்வ‌து போல் 'ட‌புள் ஸ்ட்ராங்'காக‌ ஒரு த‌ழும்புவையும் முட்டிக்கு கீழே அந்த‌ விப‌த்து ஏற்ப‌டுத்திய‌தால், என‌க்கான‌ ஒரு சைக்கிளுக்கு நான் மிக‌வும் போராட‌ வேண்டிய‌தாயிருந்த‌து. ப‌ல‌ சுற்று பேச்சுவார்த்தைக‌ளுக்கு பின்பு ம‌ன‌மிற‌ங்கிய‌ மேலிட‌ம், 'ஸ்கூல் விட்டா நேரா வீட்டுக்கு வ‌ர‌ணும், மெயின் ரோட்லலாம் போக‌க்கூடாது' என்ற‌ சில‌ ப‌ல‌ நிபந்தனைக‌ள் போட‌ ச‌ரியென்று ஒப்புக்கொண்டேன். 'கேப்ட‌ன்' வீட்டிற்கு வ‌ந்தார். 'என் சைக்கிள் கேப்ட‌ன்டா'ன்னு பெருமை அ‌டித்துக்கொள்ள‌லாமே என்று, பெய‌ருக்காக‌வே இந்த‌ சைக்கிளை தேர்வு செய்தேன்...:)

ப‌தின்ம‌ வ‌ய‌தில் பெண்க‌ளுக்கு வேண்டுமானால், ரெட்டை ஜ‌டை, ரிப்ப‌ன், க‌ல‌ர் க‌ல‌ராய் ஸ்டிக்க‌ர் பொட்டு, தாவ‌ணி, தாவ‌ணிக்கு மேட்சிங்காய் வ‌ளைய‌ல்க‌ள் என்று ஏக‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் இருக்க‌லாம். ஆனால் என‌க்கு, எப்போதுதான் டிர‌வுச‌ரிலிருந்து பேண்ட்டுக்கு மாற‌ப்போகிறோமோ என்றிருந்த‌து. அப்பாவிட‌ம் கேட்ட‌த‌ற்கு 'நீயா ஆசைப்ப‌ட்டா கூட‌ ஒரு ஸ்டேஜுக்கு அப்புற‌ம் டிர‌வுச‌ர் போட‌ முடியாது' என்றார். பிற‌கு 'அவ‌ன் போட்டிருக்கான் தெரியுமா, இவ‌ன் போட்டிருக்கான் தெரியுமா' என்று மீண்டும் சில‌ பேச்சு வார்த்தைக‌ள் நட‌த்தி, பேண்ட்டுரிமையை போராடி பெற்றேன். முத‌ல் முறை பேண்ட் அணிந்து ப‌ள்ளிக்கு சென்ற‌போது, அந்த‌ த்ரில் இருக்கிற‌தே...வாவ்...ஏனோ கொஞ்ச‌ம் கூச்ச‌மாய் கூட‌ இருந்த‌து. ஆனாலும் ம‌ன‌துக்குள் ஒரு ச‌ந்தோஷ‌ம் "நான் பெரிய‌ ஆளாயிட்டேன்டா"!

ந‌ட்பு

அப்பாவின் ந‌ண்ப‌ரின் ம‌க‌னும் என்னுட‌ன் ப‌டித்தான். ரொம்ப‌வே ப‌டிப்ஸ் என்ப‌தால் அவ‌ன் இன்னொரு 'வாழைத்த‌ண்டு பொரிய‌ல்' என‌க்கு. ஒவ்வொரு தேர்வு முடிவின்போதும், ஒவ்வொரு ச‌ப்ஜெக்டிலும் அவ‌ன் மார்க் என்ன‌, அவ‌ன் மார்க் என்ன‌ என்று கேட்டு வீட்டில் க‌டுப்பேத்துவாங்க‌ மை.லா.:( அத‌னால் அவ‌ன் ந‌ட்பை டிவோர்ஸ் செய்த‌பின், பெஸ்ட் ஃப்ரெண்ட் என்ற‌ வார்த்தைக்கு அர்த்த‌மாய் 'ச‌ர‌வ‌ண‌ன்' கிடைத்தான். ச‌ர‌வ‌ண‌னும் ப‌ய‌ங்க‌ர‌ ப‌டிப்ஸ்தான். பொதுவாக‌ ப‌டிப்ஸ்க‌ள் எல்லாம் என்னைப் போன்ற‌ அர‌ட்டைய‌ர்க‌ளுட‌ன் க‌ல‌க்காம‌ல் சாமியார் (நோ பேட் இமே‌ஜினேஷ‌ன் ப்ளீஸ்) போல‌ இருப்பார்க‌ள். ஆனால் ச‌ர‌வ‌ண‌ன் ப‌க்கா க‌ம‌ர்ஷிய‌ல் டைப். ப‌டிப்ப‌திலும் ச‌ரி, என்னுட‌ன் அர‌ட்டை அடிப்ப‌திலும் ச‌ரி...ஹி வாஸ் த‌ பெஸ்ட்!கிரிக்கெட்டை ர‌சிக்கும் அள‌வுக்கு என‌க்கு ஆட‌த்தெரிய‌வில்லை அப்போது. அத‌னால் எப்போதும் லாஸ்ட் பேட்ஸ்மேனாக‌வே க‌ள‌மிற‌க்க‌ப்ப‌ட்டேன். ப‌ள்ளி விட்ட‌பின், வ‌ய‌சுப் பெண் ப‌த்திர‌மாக‌ வீட்டிற்கு செல்கிறாளா என்று பின்னாடியே போவ‌துபோல், ஃபீல்டிங்கில் ப‌வுண்ட‌ரிக் கோட்டை தாண்டுகிற‌தா என்று ப‌ந்தின் பின்னாடியே ஓடி கோட்டை விடுவ‌தில் நான் அப்போதே ஒரு அனில் கும்ப்ளே. கேட்ச் பிடிப்ப‌திலும் சொங்கியாக‌ இருந்திருக்கிறேன்.

"ச‌ர‌வ‌ணா, நான் அடுத்த‌ மேட்ச் வ‌ர‌ல‌டா"

"ஏன்?"

"ம‌ணி திட்ட‌றான்டா, நான் என்ன‌ வேணும்னேவா கேட்ச் வுட்டேன்...நான் வ‌ர‌ல‌"

"அது ல‌ட்டு கேட்ச்டா, நீ புடிச்சிருந்தினா இன்னும் ஈஸியா ஜெயிச்சிருக்க‌லாம், ம‌வ‌னே தோத்திருந்தோம்னா நானே உன‌க்கு ரெண்டு குடுத்திருப்பேன்"

"இதுக்குத்தான்...நான் வ‌ர‌ல‌"

"ஒழுங்கா கேட்ச் ப்ராக்டிஸ் ப‌ண்ணு....டீம் லிஸ்ட்டை ம‌ணி எங்கிட்ட‌ காட்டும்போது நான் சொல்லிக்க‌றேன்"

இப்போது நினைத்துப் பார்க்கும்போது இது ஒரு சாதார‌ண‌ நிக‌ழ்வாக‌ தோன்றுகிற‌து. ஆனால் ஒரு திறமையும் இல்லாம‌லிருந்த‌ என்னை எப்ப‌டியும் டீமுக்குள் கொண்டுவ‌ர‌ அவ‌ன் முய‌ற்சித்த‌து, ந‌ட்பேய‌ன்றி வேறென்ன‌? அவ‌ன் சொன்ன‌போது என் க‌ண்க‌ளில்.... ந‌ல்ல‌வேளையாக‌ அடுத்த‌ மேட்சில் கேட்ச் எதுவும் என‌க்கு வ‌ர‌வில்லை. ஃபார்வார்டில் நின்று சில‌ சிங்கிள்ஸை ம‌ட்டும் த‌டுத்தேன். ஒவ்வொரு முறை த‌டுக்கும்போதும் கைத்த‌ட்ட‌லுட‌ன் ஒரு குர‌ல் கேட்கும் "ஃபீல்டிங்டா ஃபீல்டிங்டா". ஒருவ‌ழியாய் ப‌டிப்ப‌டியாக‌ இம்ப்ரூவ் ஆகி என‌க்கு என் மேல் ந‌ம்பிக்கை பிற‌ந்த‌ ச‌ம‌ய‌த்தில் ச‌ர‌வ‌ண‌ன் சொன்னான்...

"டேய் இந்த‌ வ‌ருஷ‌ம் +2, ஒழுங்கா ப‌டிக்க‌ற‌ வேலைய‌ பாப்போம், இனிமே கிரிக்கெட்லாம் வேணாம்"

"இருக்க‌ட்டும்டா, அதுக்காக‌? அப்போ பி.டி பீரிய‌ட்ல‌கூட‌ கிர‌வுண்டுக்கு போகாம‌ க்ளாஸ்ல‌ உக்காந்து ப‌டிக்க‌ணுமா?

"கிர‌வுண்டுக்கு போலாம், ம‌த்த‌ க்ளாஸ் ப‌ச‌ங்க‌ மேட்ச் ஆடுற‌து பாக்க‌லாம், நாம‌ விளையாடினா ந‌ம‌க்கு கான்ச‌ன்ட்ரேஷ‌ன் அதுல‌யே இருக்கும்"

இப்ப‌டி ஒரு இடியை தூக்கி போட்டு, இந்திய‌ அணிக்கு ஒரு ஜான்டி ரோட்ஸ் கிடைக்காம‌ல் செய்த‌தினால் ம‌ட்டும் ச‌ர‌வ‌ண‌னின் அக்க‌வுண்ட்டில் பாவ‌க்க‌ண‌க்கு ஒன்று கூடிய‌து! எம்.ஈ முடித்து இப்போது அவ‌ன் பெங்க‌ளூரில் ப‌ணிபுரிந்துகொண்டிருக்கிறான். ஆறு மாத‌ம் முன்பு வ‌ரை ஜாலியாக‌ ச‌ந்தோஷ‌மாக‌த்தான் இருந்தான். யார் க‌ண் ப‌ட்ட‌தோ, அவ‌னுக்கு இப்போது திரும‌ண‌ம் ஆகிவிட்ட‌து ;)

'ச‌ர‌வ‌ண‌ ப‌வ‌ன்', 'ச‌ர‌வ‌ணா ஸ்டோர்ஸ்', ப‌ருத்தி வீர‌ன் டைட்டில் கார்டில் 'ச‌ர‌வ‌ண‌ன்', ப‌திவ‌ர்/ந‌ண்ப‌ர் ஜெட்லி ச‌ர‌வ‌ண‌ன், ந‌ண்ப‌ர் தினேஷ் ச‌ர‌வ‌ண‌ன் என்று ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் அவ‌ன் பெய‌ரை பார்க்கும்போதெல்லாம், ஒரு க‌ர்ஸ‌ர் ப்ளிங்க் ஆகும் நேர‌த்தில் அவ‌ன் முக‌ம் ம‌ன‌தில் தோன்றி போகும்......

டேக் ஒன்...காலேஜ்...ஃபிக‌ர்...ஆக்ஷ‌‌ன்!

ஆதி (அந்த‌ ப‌ட‌‌ம் இல்ல‌ங்க‌) கால‌த்திலிருந்தே சினிமாக்க‌ளில், க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளை த‌றுத‌லைக‌ளாக‌வே காண்பிப்ப‌து வ‌ழ‌க்க‌மாயிருக்கிற‌து. என் விஷ‌ய‌த்தில் இது அப்ப‌டியே உல்டா. க‌ல்லூரியில்தான் ப‌டிப்பு என‌க்கு 'உருளைக்கிழ‌ங்கு பொறிய‌ல்'ஆக‌ தெரிந்த‌து. இறுதியாண்டு ப‌டிக்கும்போது, ஹெச்ஓடி "என்ன‌டா, ர‌கு செட்டுதான் க்ளாஸ்லேயே டிஸிப்ளின்ல‌ பெஸ்ட்டுன்னு (ஷைல‌ஜா) மேம் ச‌ர்ட்டிஃபிகேட் த‌ர்றாங்க‌"ன்னு சொன்னபோது, ம‌கிழ்ச்சியாயிருந்த‌து. ஹி..ஹி..ந‌ம்புங்க‌, நான் கொஞ்ச‌ம் உருப்ப‌டியா மாறுன‌தே காலேஜ்ல‌தான்!

ஆண்க‌ள் ம‌ட்டுமே ப‌டிக்கும் க‌ல்லூரியில் என்னை சேர்க்க‌ எவ்வ‌ள‌வோ முய‌ற்சித்த‌ன‌ர் மை டிய‌ர் ப்ரொட்யூச‌ர்ஸ். ஆனால் விதிக்க‌ப்ப‌ட்ட‌தென்ன‌வோ ஒரு கோ-எட் க‌ல்லூரி! ஃபிக‌ர், க‌ல‌ர், டிக்கெட்டு, சைட்டு, கில்மா ('செம‌' என்ப‌து ம‌ட்டும் இந்த‌ ஐந்து வார்த்தைக‌ளுக்கும் முன்னாடி வ‌ர‌க்கூடிய‌ காம‌ன் வேர்ட்) என்று புதிய‌ புதிய‌ வார்த்தைக‌ள் ஹார்மோன்க‌ளின் த‌ய‌வினால் அறிமுக‌மாயின‌. ம‌கிழ்ச்சியுட‌ன் முத‌ல் நாள் க்ளாஸுக்கு சென்ற‌ பின்புதான் தெரிந்த‌து, க்ளாஸில் மொத்த‌மிருந்த‌ 39 பேரில், ஒரே ஒரு பெண்! க்ளாஸ் ஆர‌ம்பித்த‌ ஒரு வார‌த்திலேயே சேஃப‌ர் சைடுக்கு அந்த‌ பெண் எல்லாருக்கும் ராக்கி க‌ட்டிவிட‌, இதுக்கு மென்ஸ் காலேஜே சேர்ந்திருக்க‌லாம் என்று தோன்றிய‌து.


ந‌ம் க்ளாஸில் இல்லாவிட்டால் என்ன‌, சீனிய‌ர் எவ்வ்வ‌ள‌வு பேர் இருக்கிறார்க‌ள்! சீனிய‌ர்க‌ளில் ஆண்க‌ளை ம‌ட்டுமே ஆர‌ம்ப‌த்தில் 'அண்ணா' என்று அழைத்தோம் (பின்பு பெய‌ர் சொல்லி கூப்பிடும‌ள‌வுக்கு அவ‌ர்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் ஆனார்க‌ள்). சீனிய‌ர் பெண்க‌ளிட‌ம் "உங்க‌ ரெக்கார்ட் நோட் த‌ர்றீங்க‌ளா?" என்று கொஸ்டின் மார்க்கோடு முடித்துவிடுவோமே த‌விர‌, த‌ப்பித்த‌வ‌றி கூட‌ 'க்கா'வை சேர்த்துக்கொள்ள‌ மாட்டோம். அல‌ர்ட்ட்ட்டா இருப்போம்!..;) வ‌ய‌தில் மூத்த‌‌ பெண்க‌ளை சைட் அடிக்கிறோமே என்ற‌ குற்ற‌ உண‌ர்ச்சி வ‌ந்தபோது, எங்க‌ளை காத்த‌வ‌ர் ச‌ச்சின். "ஹே ச‌ச்சினை விட‌ ச‌ச்சின் ஒய்ஃபுக்கு அஞ்சு வ‌ய‌சு அதிக‌ம்டா" என்று ப‌க்காவான‌ லாஜிக்கை க‌ண்டுபிடித்து சீனிய‌ர்ஸை சைட் அடிக்கும் ப‌ணியை செவ்வ‌னே தொட‌ர்ந்தோம்..:)

இன்னும் நிறைய‌ சொல்ல‌லாம். ஆனால் இத‌ற்கு மேல் எழுதினால், ஃப்யூச்ச‌ரில் தொட‌ர் ப‌திவு எழுத‌ கூப்பிட‌ நினைப்ப‌வ‌ர்க‌ள், 'ஐயையோ அவ‌னா' என்று டெர‌ராகும் சாத்திய‌ம் இருப்ப‌தால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். பாவ‌ம், இத‌ற்கே விக்னேஷ்வ‌ரி எப்ப‌டியெல்லாம் ஃபீல் ப‌ண்கிறாரோ?!

இத்தொட‌ரை தொட‌ர‌ ந‌ட்புக‌ளை அழைக்கிறேன் (மாட்டினீங்க‌ளா?...;))

ப்ரியா
வித்யா
ஹ‌ரீஷ்
மோக‌ன்
ஜெட்லி

Thanking You,

Yours Obediently,

:)))


25 comments:

 1. Thankyou Sir.

  நானும் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு
  அழைத்துள்ளேன்.

  ReplyDelete
 2. heyyyyyyyyyyyy

  am the first to first apdina secondu artham

  erunga poi padichtu varen..

  eppudi..

  v.v.s.
  complan surya.

  ReplyDelete
 3. மை டியர் ப்ரடியூஸர்ஸ், உருளைக்கிழங்கு பொரியல்ன்னு டைமிங்ல கலக்குறீங்கண்ணே..!
  கலக்குங்க.

  ReplyDelete
 4. தேவா
  சூப்பரா இருந்தச்சு ..

  பல உண்மைகளை தைரியமா
  எங்கே எடுத்துக்கூறிய
  எங்கள் அண்ணன் ரகு என்ற தேவா அவர்களக்கு
  எங்கள் சங்கம்
  அஞ்ச சிங்கம்
  என்ற பட்டத்தை அளித்து
  மகிழ்கிறது.

  தமனவின் ரசிகர் மன்ற செயலராக
  என்று முதல்
  செயல்படுவர் எனுவும்
  அறிவிக்க படுகிறது..

  அதும் எண்ட கிரிக்கெட் பத்தி செம comedya இருந்துச்சுன
  என்னபோலதன நீங்களும்
  என்னயும் ஆட்டத்தில செக்கமட்டங்க..என்ன காரணம் கேட்ட உங்களைப்போலவே
  விளையாடுவேன்...ஹஹஅஹா

  நன்றி
  வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
  காம்ப்ளான் சூர்யா

  ReplyDelete
 5. Thankyou Sir.

  நானும் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு
  அழைத்துள்ளேன்.

  ---yen yen..epovey kanna kathu..sari sari nadakatum nasa velaigal...

  v.v.s
  complan surya

  ReplyDelete
 6. நல்லா ஹுயுமரா எழுதுதிருக்கீங்க; நம்மளை ரெகுலரா மாட்டி விடுறீங்களே?? :))

  ReplyDelete
 7. நல்லாயிருக்கு பதிவு..வீட்டிற்கு வரும் போது சொல்லுங்க வாழைத்தண்டு பொரியல் செய்யணும்..

  ReplyDelete
 8. // போன‌ ஜென்ம‌த்தில் காந்தி தாத்தாவுக்கு பிஏவாய் இருந்தேனோ என்ன‌வோ //

  // 'ட‌புள் ஸ்ட்ராங்'காக‌ ஒரு த‌ழும்புவையும் //

  // ஒரு க‌ர்ஸ‌ர் ப்ளிங்க் ஆகும் நேர‌த்தில் //

  அருமையா எழுதறீங்க ரகு.. இயல்பான நகைச்சுவை.. கலக்குங்க..

  ReplyDelete
 9. நல்லா இருக்கு

  ReplyDelete
 10. ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, அவ‌சிய‌ம் எழுத‌றேன் :)

  வாங்க‌ சூர்யா, ப‌டிச்சச‌தையே பேருக்கு பின்னாடி போட்டுக்க‌ற‌தில்ல‌, ந‌ம‌க்கு எதுக்குங்க‌ ப‌ட்ட‌ம்லாம்?..;) செய‌லாள‌ரா?! வேணாம்பா, நாம‌ ர‌சிக்க‌ற‌தோட‌ நிறுத்திக்குவோம் :)

  ReplyDelete
 11. வாங்க‌ ராஜு, ரொம்ப‌ ந‌ன்றிண்ணே :)

  ந‌ன்றி மோக‌ன், ஹி..ஹி..என்ன‌ சார் ப‌ண்ற‌து, ந‌ம்ம‌ ஃபேவ‌ரைட் ப‌திவ‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ராச்சே, அதான் ஒரு உரிமைல‌....:)

  ReplyDelete
 12. ந‌ன்றி அமுதா கிருஷ்ணா, வேணாங்க‌ மீ பாவ‌ம்!

  ந‌ன்றி அண்ணாம‌லையான், கார் ந‌ல்லாருக்கு ;)

  ReplyDelete
 13. ந‌ன்றி ஜெய் :)

  தொட‌ர் வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ந‌ன்றி சாருஸ்ரீராஜ் :)

  ReplyDelete
 14. போன‌ ஜென்ம‌த்தில் காந்தி தாத்தாவுக்கு பிஏவாய் இருந்தேனோ என்ன‌வோ, போராடுவ‌து என்ப‌து ர‌த்த‌த்தில் ஊறிய‌தாய் இருந்த‌து. //
  யோவ் காந்தி என்னய்யா பாவம் பண்ணாரு? அவரோட போராட்டத்தையும், உங்க போராட்டத்தையும் நீங்க கம்பேர் பண்றதைப் பார்க்க அவரில்லாதது மகிழ்ச்சி.

  ப‌தினொரு வ‌ய‌தில் அப்பாவின் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்த‌போது //
  பதினோரு வயசு பதின்ம வயசா...

  'அவ‌ன் போட்டிருக்கான் தெரியுமா, இவ‌ன் போட்டிருக்கான் தெரியுமா' என்று மீண்டும் சில‌ பேச்சு வார்த்தைக‌ள் நட‌த்தி, பேண்ட்டுரிமையை போராடி பெற்றேன். //
  ஹாஹாஹா

  சொங்கியாக‌ இருந்திருக்கிறேன். //
  சொங்கியாக‌ இரு(ந்திரு)க்கிறேன். இப்படிப் போட்டிருக்கணும். ;)

  அந்த‌ பெண் எல்லாருக்கும் ராக்கி க‌ட்டிவிட‌, இதுக்கு மென்ஸ் காலேஜே சேர்ந்திருக்க‌லாம் என்று தோன்றிய‌து. //
  ஹிஹிஹி... விதி வலியது....

  உங்க பேரு ரகுன்னு வெச்சதுக்குப் பதிலா அதை மாத்திப் போட்டு இன்னும் ரெண்டு எழுத்துகளை சேர்த்திருக்கலாம். என்னா சேட்டை.

  ReplyDelete
 15. ந‌ன்றி விக்கி, ஒவ்வொரு வ‌ரியில‌யும் ரெண்டு வார்த்தைக‌ள் டைப் ப‌ண்ணி, என்ட‌ர் த‌ட்டி, இருப‌து லைனுக்கு கொண்டு வந்த‌ப்புற‌ம், அத 'க‌விதை'ன்னு சொல்லிக்க‌ற‌தில்லையா...அதுபோல‌த்தான் காந்தி தாத்தா க‌ம்பேரிச‌ன் ;)

  என‌க்குன்னு ஒரு சைக்கிள் வாங்கின‌து ப‌தின்ம‌ வ‌யசு ஆர‌ம்ப‌த்துல‌, அதனால‌தான் அந்த‌ ப‌தினொரு வ‌ய‌தில் ந‌ட‌ந்த‌ சைக்கிள் ஆக்ஸிடெண்ட்(!)

  //உங்க பேரு ரகுன்னு வெச்சதுக்குப் பதிலா அதை மாத்திப் போட்டு இன்னும் ரெண்டு எழுத்துகளை சேர்த்திருக்கலாம். என்னா சேட்டை.//

  இதுவே சேட்டையா?! சொல்லாத‌து இன்னும் நிறைய‌ இருக்குங்க‌....பை த‌ வே நாம‌ எல்லாரும் ஆர‌ம்ப‌த்துல‌ அப்ப‌டி இருந்த‌வ‌ங்க‌தானே..ஓம் டார்வின் ந‌ம‌ஹ‌ ;)

  ReplyDelete
 16. //ப‌தின்ம‌ வ‌ய‌தில் பெண்க‌ளுக்கு வேண்டுமானால், ரெட்டை ஜ‌டை, ரிப்ப‌ன், க‌ல‌ர் க‌ல‌ராய் ஸ்டிக்க‌ர் பொட்டு, தாவ‌ணி, தாவ‌ணிக்கு மேட்சிங்காய் வ‌ளைய‌ல்க‌ள் என்று ஏக‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் இருக்க‌லாம்.///


  ஆஹா சார் , ஊருக்கு போய் நம்ம கேர்ள் பிரண்ட்ஸ்ச பாக்கனும்போல இருக்கு சார்

  ReplyDelete
 17. ரகு,
  வாழைத்தண்டு பொறியல் முதல் உருளைக்கிழங்கு வருவல்வரை நேர்ந்த பருவ மாற்றங்களை அருமையா எழுதியிருக்கீங்க..! ஷைலஜா மேடத்துக்கு மட்டும் ஒரு லிங்க் கொடுத்திருந்ததால், மறுபடியும் அந்த இடுகையை படித்தேன். காலேஜ் கலக்கல்களும் அருமை! தொடர்பதிவுக்கு என்னையும் அழைப்பிற்கு மிக்க நன்றி!!! கண்டிப்பா எழுதுறேன்.

  -
  DREAMER

  ReplyDelete
 18. அழைத்தமைக்கு நன்றி. விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 19. வாங்க‌ அமைச்ச‌ரே, போய் பார்த்துட்டு, 'ஆடி வா, ஓடி வா'ன்னு பாட்டே பாடிட்டு வாங்க‌ ;)

  ந‌ன்றி ஹ‌ரீஷ், க‌ண்டிப்பா எழுதுங்க‌...ச‌ந்துரு...ஹும்ம்ம்ம் ;)

  ந‌ன்றி வித்யா, முய‌ற்சிக்கிறீங்க‌ளா? அவ‌சிய‌ம் எழுதுங்க‌ :)

  ReplyDelete
 20. உங்க ஜில் நினைவுகள ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க.

  //சின்ன்ன்ன‌ வ‌ய‌சுல‌ எவ்வ்வ்வ‌ளோ போராட்ட‌ம்!//.....ஆனாலும் இத்த‌னை போராட்ட‌ங்க‌ளா???? பாவ‌ம்தான்;(

  ப‌தின்ம‌ வ‌ய‌தை க‌ட‌ந்த‌ப்பின்ன‌ரும் க‌ல‌ரை க‌ல‌ராக (பார்த்து) எழுதி இருக்கும் உங்கள‌ என்ன பண்ணலாம்???

  நல்லவேள அப்போ தமனா நடிக்க வரல... வந்திருந்தா மீண்டும் ஒருமுறை இந்த பதிவுல தமனா இடம்பெற்று இருப்பாங்க இல்ல?

  தொடர்பதிவு அழைப்பிற்கு நன்றி!கண்டிப்பா எழுதுறேன் ரகு.

  ReplyDelete
 21. கிரிக்கெட்டை ர‌சிக்கும் அள‌வுக்கு என‌க்கு ஆட‌த்தெரிய‌வில்லை ////

  ஆடத்தெரியனுமா வேணாமே விளையாட தெரிஞ்சா போதும்ல?
  //இந்திய‌ அணிக்கு ஒரு ஜான்டி ரோட்ஸ் கிடைக்காம‌ல் செய்த‌தினால் ம‌ட்டும் ச‌ர‌வ‌ண‌னின் அக்க‌வுண்ட்டில் பாவ‌க்க‌ண‌க்கு ஒன்று கூடிய‌து!

  நல்ல வேளை சரவணன் அவர்கள் தன் முந்திய பாவதை சரி செய்து கொண்டுள்ளார்கள்...


  // க‌ண் ப‌ட்ட‌தோ, அவ‌னுக்கு இப்போது திரும‌ண‌ம் ஆகிவிட்ட‌து ;)

  ரொம்ப ஃபீல் பண்றீங்களா

  ஆக முடிவாக மிக நன்று. இனி அடிக்கடி இப்படி வந்து கேள்விகள் கேட்பேன் பதில் சொல்லனும் ஓகே.......

  ReplyDelete
 22. ந‌ன்றி ப்ரியா, எந்த‌ வ‌ய‌சா இருந்தா என்ன‌ங்க‌, க‌ல‌ர் க‌ல‌ர்தானே ;)

  //நல்லவேள அப்போ தமனா நடிக்க வரல... வந்திருந்தா மீண்டும் ஒருமுறை இந்த பதிவுல தமனா இடம்பெற்று இருப்பாங்க இல்ல?//

  ஆமாங்க‌, ஹாட்ரிக் ப‌திவாயிருக்கும்...மிஸ் ஆயிடுச்சு ;(

  ந‌ன்றி ஏஞ்சல், உங்க‌ளுக்கு திருவிளையாட‌ல் த‌ருமின்னா ரொம்ப‌ புடிக்குமா?...;)

  ReplyDelete
 23. ந‌ன்றி இர‌சிகை :)

  ReplyDelete