Thursday, April 08, 2010

பையா - க‌.மை.லா......

சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்புதான் சுசி.க‌ணேச‌ன் அரை கிலோ 'சிவாஜி'யையும், அரை கிலோ 'ர‌ம‌ணா'வையும் க‌ல‌ந்து க‌ட்டி ஒரு கிலோ 'க‌ந்த‌சாமி'யாக‌ த‌ந்தார். It's Lingusamy's turn now. 'ர‌ன்', 'ச‌ண்ட‌க்கோழி' ஹாங்ஓவ‌ரிலிருந்து வெளியே வ‌ர‌முடியாம‌ல், இர‌ண்டையும் க‌ல‌ந்து ஒரு காக்டெயிலாக‌ கொடுத்திருக்கிறார் லிங்கு.

'ர‌ன்' ப‌ட‌ம் வ‌ந்த‌ புதிதில் சில‌ காட்சிக‌ளை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது என் த‌ம்பி சொன்னான் "யார் தெரியுமா இந்த‌ ப‌ட‌த்துக்கு டைர‌க்ட‌ர்....லிங்குசாமி". உண்மையாக‌வே நான் அச‌ந்துபோனேன். 'ஆன‌ந்த‌ம்' பட‌ம் எடுத்த‌ இய‌க்குன‌ரின் ப‌ட‌மா இது? அதுவும் அந்த‌ ச‌ப்வே சீன் ந‌ச்! அடுத்து 'ஜி'யில் ஏமாற்றினாலும், 'ச‌ண்ட‌க்கோழி'யை நான் மிக‌வும் ர‌சித்தேன். கார‌ண‌ம், மீரா ஜாஸ்மின் & கிட்ட‌த‌ட்ட‌ முத‌ல் நாற்ப‌து நிமிட‌ங்க‌ளுக்கு விஷாலின் ட‌ய‌லாக் வெறும் ப‌த்து வ‌ரிக‌ள்தான் இருக்கும். அத‌னாலேயே லிங்குசாமி இய‌க்கியிருக்கிறார் என்ற‌வுட‌ன், 'பையா'வுக்கு கொஞ்ச‌ம் எதிர்பார்ப்பு அதிக‌ரிக்க‌த்தான் செய்த‌து.

க‌தை ரொம்ப‌ சிம்பிள். பார்த்த‌வுட‌ன் த‌ம‌ன்னாவை கார்த்திக்கு பிடித்துவிடுகிற‌து (யாருக்குத்தான் பிடிக்காது?...;))) பின்பு ஒரு சில‌ இட‌ங்க‌ளில் மீண்டும் அவ‌ரை பார்த்தும் பேச‌முடியாம‌ல் போகிற‌து. த‌ற்செய‌லாக‌ த‌ம‌ன்னாவே கார்த்தியின் காரில் ப‌ய‌ண‌ம் செய்ய‌வேண்டிய‌ சூழ்நிலை. பின்பு எப்ப‌டி அவ‌ர்க‌ளுக்குள் கெமிஸ்ட்ரி, மேத்ஸ், சோஷிய‌ல் ச‌யின்ஸ் எல்லாம் ஒர்க்அவுட் ஆகிற‌து என்ப‌தை ப‌ட‌த்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்க‌ள்..

கார்த்தி இந்த‌ ப‌ட‌த்தில் ப‌டு ஸ்மார்ட். அழுக்கு பைய‌னாக‌வே இர‌ண்டு ப‌ட‌ங்க‌ளிலும் வ‌ல‌ம் வ‌ந்த‌ கார்த்தியை அழ‌கு பைய‌னாக‌ காட்டியிருக்கிறார்க‌ள். வித‌வித‌மான‌ காஸ்ட்யூம்க‌ளில் அச‌த்துகிறார். ச‌மீப‌ வ‌ருட‌ங்க‌ளில் அறிமுக‌மான‌ ஹீரோக்க‌ளில் இவ‌ர‌ள‌வுக்கு காமெடியில் க‌ல‌க்குவ‌து வேறு யாரும் இல்லை. விஷால் நெளிந்து, குழைந்து சிரிப்ப‌தை நினைத்துப்பாருங்க‌ள். க‌ண்டிப்பாக‌ கார்த்தி எவ்வ‌ள‌வோ பெட்ட‌ர் என்ப‌தை ஒத்துக்கொள்வீர்க‌ள். அறிமுக‌க்காட்சியில் ம‌ட்டும் ஏன் இவ்வ‌ள‌வு சொத‌ப்ப‌ல் என்று தெரிய‌வில்லை. அவ‌ரின் தோழி "அவ‌ன் நிக்க‌ற‌ ப‌ஸ்ல‌ ஏற‌மாட்டானாம்" என்று சொல்ல‌, ப‌ஸ் கிள‌ம்பும்போது கார்த்தி ஓடி வ‌ந்து ஏறுகிறார். அட‌ப்போங்க‌ பாஸ், வ‌டிவேலு இதை 'காத‌ல் தேச‌ம்' ப‌ட‌த்திலேயே ப‌ண்ணிட்டார் :)

ந‌டிப்ப‌த‌ற்கு அதிக‌ம் ஸ்கோப் இல்லாவிட்டாலும்....ஹுக்கும், அதுதான் இப்ப‌ முக்கிய‌மா? 'துளி துளி ம‌ழையாய் வ‌ந்தாளே' பாட‌லில் ஒரு வ‌ரி, 'தேவ‌தை அவ‌ள் ஒரு தேவ‌தை' என்று வ‌ரும். ப‌ட‌ம் முழுவ‌தும் அப்ப‌டித்தான் இருக்கிறார் த‌ம‌ன்னா. ஹும்ம்ம்ம்ம்....என்ன‌த்த‌ சொல்ல‌! த‌முவுக்கு ஒரு த‌ம்ஸ் அப்! த‌ம‌ன்னாவின் முக‌த்திலேயே, அழ‌கு, குழ‌ந்தைத்த‌ன‌ம், மாட‌ர்ன், க்ளாம‌ர் எல்லாம் இருக்கிற‌து. எத‌ற்கு அவ‌ரை ஸ்கின் எக்ஸ்போஷ‌ருக்கு உட்ப‌டுத்துகிறார்க‌ள் என்றே தெரிய‌வில்லை. ஸ்கின் ஷோ வேண்டுமென்றால் போய் ம‌ல்லிகா ஷெராவ‌த்தை புக் ப‌ண்ணுங்க‌ய்யா!

லிங்குசாமியின் ப‌ட‌ங்க‌ளில் எப்போதும் சில் க்யூட் வ‌ச‌ன‌ங்க‌ள் இருக்கும். 'ர‌ன்'னில், மீரா ஜாஸ்மினுக்கு எழுத‌ பென் கொடுக்கும்போது 'ஹீரோ பென்னுங்க‌' என்பார் மாத‌வ‌ன். அதுபோல‌ இந்த‌ ப‌ட‌த்திலும் சில‌ க்யூட் வ‌ச‌ன‌ங்க‌ள் (வ‌ச‌ன‌ம் - பிருந்தா சார‌தி)....ப‌ட‌ம் முடியும்போது த‌ம‌ன்னா சொல்லும் ட‌ய‌லாக் உட்ப‌ட...ப‌ட‌த்திற்கு மேலும் ப‌ல‌ம் சேர்ப்ப‌வ‌ர்க‌ள் ஒளிப்ப‌திவாள‌ர் ம‌தி & யுவ‌ன் ஷ‌ங‌க‌ர் ராஜா. சில‌ காட்சிக‌ளில் பாட‌ல்க‌ள் திணிக்க‌ப்ப‌ட்ட‌து போல் தோன்றினாலும், அனைத்து பாட‌ல்க‌ளுமே சூப்ப்ப்ப‌ர்!

ச‌ண்டைக்காட்சிக‌ள் ம‌ட்டும்தான் ஓவ‌ர் பில்ட‌ப். சுற்றி 20, 25 பேர் நின்றாலும், ச‌ளைக்காம‌ல் பின்னி எடுக்கிறார் கார்த்தி. இரும்பு ராடால் அவ‌ரை அடிக்கும்போது 'ண‌ங்' 'ண‌ங்'கென்று பிண்ண‌ணி இசை. அதை கேட்கும்போது ந‌ம‌க்கே வ‌லிக்கும் போலிருக்கிற‌து. ஆனால் டைனோச‌ர் மேல் ஏறிய‌ எறும்பாய் அதை கார்த்தி பொருட்ப‌டுத்த‌வேயில்லை. யாருப்பா அது ஸ்ட‌ண்ட் மாஸ்ட‌ர்?

இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் ப‌ட‌த்தை பார்த்து என்ஜாய் ப‌ண்ண‌வே தியேட்ட‌ருக்கு செல்கிறேன். அத‌னாலேயே 'அங்காடித் தெரு' ப‌க்க‌ம் எட்டிப் பார்க்க‌வே ப‌ய‌மாக‌ இருக்கிற‌து. நான் சாதார‌ண‌ சினிமா ர‌சிக‌ன். என‌க்கு ஒல‌க‌ சினிமாவும் வேண்டாம், அழ‌ வைக்கும் உள்ளூர் சினிமாவும் வேண்டாம். என்னைப் போல‌ வெறும் entertainmentஐ ம‌ட்டும் எதிர்பார்த்து போகும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு, 'பையா' ந‌ல்ல‌ சாய்ஸ்தான். என்ன‌........ச‌ண்டைக் காட்சிக‌ளில் ம‌ட்டும்.....க‌டுப்பேத்த‌றான் மை லார்ட்!


21 comments:

 1. ஹாஹாஹா சூப்பர் விமர்சனம்.

  தமன்னாவை வழியுறது தான் உவ்வே...

  ReplyDelete
 2. தலைப்பு - ஹிஹிஹி... சூப்பரப்பு.

  ReplyDelete
 3. பையா - அய்யா வுடு ஜூட்........
  பாத்திட்டேன் பாஸ்.

  ReplyDelete
 4. ரைட்டுங்கோ ரகு ..நல்லா எழுதிருக்கீங்க.

  விக்னேஷ்வரி said...
  //தமன்னாவை வழியுறது தான் உவ்வே...//

  அல்லோ !! இதை வன்மையா கண்டிக்கிறேன்!!

  ReplyDelete
 5. பட்... உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 6. விமர்சனம் நல்லா இருக்கு படம் பார்த்துவிடுவோம்

  ReplyDelete
 7. நானும் படம் பார்த்தேன். பொறுமையை சோதிக்குற மாதிரி சண்டை காட்சிகள்...கொஞ்சம் கூட நல்லாவே இல்லாத ஸ்கின் எக்ஸ்போஷ‌ருக்கு உட்ப‌டுத்தபட்ட தமனா.... எதுவுமே எனக்கு பிடிக்கல. ஆனா இதற்கு முன் அழுக்காகவே பார்த்த கார்த்தி இந்த படத்தில சோ ஸ்மார்ட்.


  உங்க விமர்சனம் நைஸ்!

  ReplyDelete
 8. விமர்சனம் சிறப்பு நண்பரே ! இன்னும் படம் பார்க்கவில்லை . பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன் . பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
 9. எல்லாம் உங்கள மாதிரி ரசிகர்கள நம்பி நம்ம தம்பி லிங்கு எடுத்த ங்கொய்யாதான்... பாருங்க பாத்துட்டு பொலம்புங்க...

  ReplyDelete
 10. ஆர்டர் ஆர்டர்.... தீர்ப்பு சொல்ல அங்கி வேணும்....

  ReplyDelete
 11. ந‌ன்றி விக்கி, என்ன‌ உவ்வே?...உங்க‌ளுக்கு ர‌ச‌னையே இல்ல‌ போங்க‌..;)

  ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, வெயிட் ;)

  ReplyDelete
 12. //அல்லோ !! இதை வன்மையா கண்டிக்கிறேன்!!//

  ந‌ன்றி மோக‌ன், நானும் நானும் :))

  ஹி..ஹி..ந‌ன்றி வான்முகில‌ன்

  ReplyDelete
 13. ந‌ன்றி சாருஸ்ரீராஜ், பாருங்க‌

  ந‌ன்றி ப்ரியா, த‌ம‌ன்னாவை ப‌த்தி சொன்ன‌து க‌ரெக்ட்டுதான், ம்ம்...கார்த்தியா ;)

  ReplyDelete
 14. வ‌ருகைக்கு ந‌ன்றி, பார்த்துட்டு சொல்லுங்க‌ ச‌ங்க‌ர்

  ந‌ன்றி அண்ணாம‌லையான், ஏன் நீங்க‌ பார்க்க‌மாட்டீங்க‌ளா?...;)

  ReplyDelete
 15. ந‌ன்றி ஜெட்லி, அங்கியெல்லாம் எதுக்கு மை லார்ட், அப்ப‌டியே சொல்லுங்க‌ :))

  ReplyDelete
 16. ரகு..!
  முதல்ல உங்க விமர்சனத்தைவிட உங்க Labels நல்லாயிருக்கு... //"ஆமா, நான் பெரிய‌ சுப்புடு, விம‌ர்ச‌ன‌ம்னு லேபிள் போட்டுக்க‌!"//
  என்ன இதெல்லாம்?

  தமன்னா ஹீரோயின்னவுடனே..! 'பையா'ங்கிற டைட்டில்கூட 'ஹையா..'ன்னுதான் தெரியுது! ஆனா இன்னும் படம் பாக்கலை. உங்க விமர்சனம் படக்குழுவினரையும் படத்தையும் பாதிக்காம, ரசிகர்களையும் சென்றடையிற மாதிரி, சிம்பிளா... டீசன்ட்டா இருக்கு!

  -
  DREAMER

  ReplyDelete
 17. ragu sir

  neenga karthika polavey erukkenga..

  nisama cholren..

  first time vasikeren...

  annal thamanavai ellam eppdi site adikka pidiathu..

  enga sangathu alugangalku pidikkathu..

  yarium punpaduthatha unga vimarsam style enaku sorry enga sangathuku pidithu eruku..

  nandri valga valamudan.
  Varuthapadtha Vassippor sangam
  Complan surya

  ReplyDelete
 18. ந‌ன்றி ஹ‌ரீஷ், ஹி..ஹி..இதையெல்லாம் விம‌ர்ச‌ன‌ம்னு போட‌ணுமான்னு உறுத்த‌லா இருந்த‌து, அதான் ;)

  ந‌ன்றி காம்ப்ளான் சூர்யா, ஏன் பாஸ் இப்ப‌டி? ப‌ய‌ப்ப‌டாதீங்க‌, வேணும்னா போட்டோ மாத்திட‌றேன்....உங்க‌ ச‌ங்க‌த்து ஆளுங்க‌ளுக்கு யாரை சைட் அடிச்சா பிடிக்கும்?....:)

  ReplyDelete
 19. ந‌ன்றி இர‌சிகை :)

  ReplyDelete
 20. வர வர தமிழ் படங்களையெல்லாம் பார்க்கவே முடிவதில்லை....
  எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க

  ReplyDelete