Sunday, November 29, 2009

காலேஜ் க‌ட் அடித்து பார்த்த‌ ஒரே, முத‌ல் ம‌ற்றும் க‌டைசி திரைப்ப‌ட‌ம்


அனேக‌மா எல்லாருக்குமே காலேஜ் க‌ட் அடிச்சிட்டு ப‌ட‌ம் பாத்த‌ அனுப‌வ‌ம் இருக்கும்னு நினைக்கிறேன். நான் காலேஜ் ப‌டிக்கும்போது க‌ட் அடிச்சி பாத்த‌து ஒரே ஒரு ப‌ட‌ம்தான். அதுக்காக‌ என்னை ரொம்ப ப‌டிப்ஸ்னுலாம் க‌ற்ப‌னை ப‌ண்ணி அவ‌மான‌ப்ப‌டுத்திடாதீங்க‌. நான் ஒரு ஆவ‌ரேஜ் ஸ்டுட‌ண்ட்தான். ப்ப்பா, இத‌ சொல்லும்போதுதான் என்னா ஒரு பெருமை!

மேட்ட‌ருக்கு வ‌ர்றேன். காலேஜ் ப‌டிச்சிட்டிருந்த‌ப்போதான் "உயிரே" ப‌ட‌ம் ரிலீஸ் ஆச்சு. ப‌ட‌ம் ரிலீஸ் ஆக‌ற‌துக்கு முன்னாடியே ஆடியோ கேச‌ட் (அப்போலாம் CDன்னா என்ன‌ன்னு கேட்டா, ABக்கு அப்புற‌ம் வ‌ருமே, அதானேன்னு சொல்ற‌ ரேஞ்சுல‌ இருந்தேன்) வாங்கி வீட்டுல‌ போட்டு ப‌க்க‌த்துல‌ நாலு வீட்டுக்கு கேக்குற‌ மாதிரி ச‌வுண்டு வெச்சு, அராஜ‌க‌ம் பண்ணிகிட்டிருந்தேன்.

ம‌ணிர‌த்ன‌ம், ர‌ஹ்மான், ஷாருக்கான் - மூணு பேருமே என்னோட‌ ஃபேவ‌ரைட்ஸ். விட‌ முடியுமா இந்த‌ ப‌ட‌த்த‌. ப‌ஸ் ஸ்டாப்ல‌ காலேஜ் ப‌ஸ் வேற‌ நிக்குது. இன்னும் கொஞ்ச‌ நேர‌த்துல‌ ப‌ஸ் ஃபுல்லான‌வுடனே எடுத்துடுவாங்க‌. வ‌ர்ற‌ வ‌ழியில‌ "உயிரே" போஸ்ட‌ர்லாம் பாத்த‌து வேற‌ ம‌ன‌சு அடிச்சுக்குது. 'உயிர் காப்பான் தோழ‌ன்'னு சொல்லுவாங்க‌ இல்லியா, அதுபோல‌ 'உயிரே' பாப்போம் வாடான்னான் ஒரு தோழ‌ன்.

அவ்ளோதான், ஓகே இன்னைக்கு பாத்துடுவோம்னு முடிவு ப‌ண்ணேன். எடுத்துட்டு போன‌ நோட், டிப‌ன் பாக்ஸ் ரெண்டுத்தையும் காலேஜ் போற‌ இன்னொரு ஃப்ரெண்டுகிட்ட‌ குடுத்துட்டேன். அப்புற‌ம்தான் உறைச்சுது. காலேஜ் ப‌டிக்கும்போதும் எங்க‌ளுக்கு யூனிஃபார்ம் உண்டு. இப்ப‌டியே தியேட்ட‌ருக்கு போனா ந‌ம்ம‌ள‌ க‌ட் அடிச்சிட்டு வ‌ந்துருக்கானுங்க‌ன்னு க‌ண்டுபுடிச்சிட‌மாட்டாங்க‌? ஆமா, க‌ண்டுபுடிக்க‌ட்டுமே, என்ன‌ ந‌ம்ம‌ள‌ கைது ப‌ண்ணி விசார‌ணை க‌மிஷ‌னா வெக்க‌போறாங்க‌.

தியேட்ட‌ருக்கு காலேஜ் யூனிஃபார்ம்லேயே போயாச்சு. அங்க‌ போனா ஊர்ல‌ இருக்க‌ற‌ எல்லா காலேஜ்ல‌யிருந்தும் ப‌ச‌ங்க‌ வ‌ந்துருக்காங்க‌. கூட்ட‌த்துல‌ எப்ப‌டியோ என் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச‌வ‌ர் ஒருத்த‌ர் நின்னுட்டிருந்தார். அவ‌ர் கைல‌ காசு குடுத்து டிக்கெட் வாங்கிகிட்டு தியேட்ட‌ர் உள்ள‌ போறோம். ம‌னசுக்குள்ளே செம த்ரில்லிங்! ஃப‌ர்ஸ்ட் டைம் காலேஜ் க‌ட் அடிச்சிட்டு வ‌ந்துருக்கோம்ல‌. நாங்க‌ போகும்போதுதான் "தையா தையா" பாட்டு ஆர‌ம்பிச்சுது. கிட்ட‌த‌ட்ட‌ 30, 40 செக‌ண்ட் பாட்டே கேக்க‌ல‌. ப‌ச‌ங்க‌ விசில் ச‌த்த‌ம்தான். வாவ்! ப‌ச‌ங்க‌ சும்மா என்ன‌மா என்ஜாய் பண்ணுறாங்க‌!

அதுக்க‌ப்புற‌ம்தான், என்ன‌டா இது ம‌றுப‌டியும் தீவிர‌வாத‌மான்னு ஆயிடுச்சு. ஆனாலும் ப‌ட‌ம் ஒர‌ள‌வுக்கு ஓகேங்க‌ற‌ மாதிரிதான் இருந்த‌து. ஆனா நிறைய பேருக்கு புடிக்க‌ல‌. ப்ட‌ம் முடிஞ்ச‌தும் அவ‌ன‌வ‌ன் க‌மெண்ட்டா அடிச்சு த‌ள்றானுங்க‌.

ப‌ட‌ம் முடிச்சு வெளியே வ‌ந்தா அடுத்த‌ ஷோவுக்கு டிக்கெட் வாங்குற‌துக்கு என்னோட‌ மாமா ஒருத்த‌ர் லைன்ல‌ நிக்குறார். அவ‌ரும் என்னை பாத்துட்டார். அதான் எங்க‌ யூனிஃபார்மே காட்டி குடுக்குதே. 'ச‌ரி போ போ'ன்னு அவ‌ரும் த‌லைய‌ ஆட்ட‌, 'அப்பாடா க்ரேட் எஸ்கேப்'னு கொஞ்ச‌ம் ம‌ன‌சு ச‌மாதான‌ம் ஆச்சு. வெளியே வ‌ந்தா என் ஏஜ் குரூப்லேயே இருக்க‌ற‌ என்னோட‌ ரிலேட்டிவ் பைய‌ன் அடுத்த‌ ஷோவுக்கு போற‌துக்காக‌ என்ட்ரி குடுக்க‌றார். அவ‌ர் ப‌டிப்ஸ் வேற‌, அத‌னால‌ எங்க‌ ரிலேட்டிவ்ஸ்கிட்ட சாருக்கு ந‌ல்ல‌ பேர்.

என‌க்கு அவ‌ர‌ (இப்போ க‌ல்யாண‌ம் ஆகி செட்டில் ஆயிட்டார், அத‌னால‌ 'அவ‌ன்' வேணாம், 'அவ‌ர்'னே வெச்சுக்குவோம்) பாத்த‌துமே சாக்க்காயிட்டேன். "நீயா நீயா நீயா" ம‌ன‌சுக்குள்ளே echo எஃபெக்ட். அவ‌ர் கூலா கேக்குறார், "ப‌ட‌ம் ந‌ல்லாருக்கா?". "ஆங், ப‌ர‌வால்ல‌"ன்னேன்.

ப‌ட‌ம் விட்ட‌தும் நேரா வீட்டுக்கு வ‌ந்துட்டேன். என்னை தியேட்ட‌ர்ல‌ பாத்த‌வ‌ங்க‌ வீட்ல‌ போட்டுகுடுத்துட்டா என்ன‌ ப‌ண்ற‌து? ச‌ரி நாம‌ளே ஒத்துக்குவோம்னு அம்மாகிட்ட‌ சொல்லிட்டேன். "என்ன‌ப்பா நீ இந்த‌ மாதிரிலாமா ப‌ண்ற‌து?"ன்னு நான் ஏதோ இந்திய‌ ராணுவ‌ ர‌க‌சிய‌த்த‌ பாகிஸ்தானுக்கு சொல்லிட்ட‌ மாதிரி ரியாக்ச‌ன் குடுத்தாங்க‌. ச‌ரி மேட்ட‌ர் எப்ப‌டியும் அப்பாகிட்ட‌ போகும்னு கூலா விட்டுட்டேன். ம‌றுநாள் அப்பா அம்மாகிட்ட‌ சொல்லியிருக்க்கார், "அவ‌ன் வாரா வார‌ம் ஞாயித்துக்கிழ‌மை ஒரு ப‌ட‌ம் போக‌ட்டும், வேணாம்னு சொல்ல‌ல‌, ஆனா இந்த‌ மாதிரி காலேஜுக்கு லீவு போட்டுட்டு போக‌வேணாம்னு சொல்லு". ம்ம்ம், என்ன‌ ப‌ண்ற‌து, செண்டிமெண்ட‌ல் அட்டாக். நானும் ச‌ரின்னு விட்டுட்டேன். இதுதான் நான் காலேஜ் க‌ட் அடிச்சு பாத்த‌ ஒரே, முதல் ம‌ற்றும் க‌டைசி அனுப‌வ‌ம்!


9 comments:

 1. enna kodumai sir idhu. college cut adichituttu bayandhutte patheengala. romba kastam sir. collegela ungala padika vittadhe thappunu nenaikaren.

  ReplyDelete
 2. நீங்களாவது பரவாயில்லை , நாங்கள் போன படம் 7G Rainbow colony படம் ஓடுகிற theatre பெயர் மட்டுமே தெரியும் , இடம் தெரியாது ஆனாலும் எங்கள் விடாமுயற்சியினால் படம் பார்த்தோம் . (boys கிளாஸ் ல இறுக்காங்க நாங்க பொண்ணுங்க கிளாஸ் கட்டடிச்சு படத்துக்கு போனோம் .)

  ReplyDelete
 3. ரகு, நானும் மணிசாரோட 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தை காலேஜை கட் அடிச்சிட்டு பாத்தேன். மிகவும் நல்ல அனுபவம். ஆனா, அப்போ படம் புடிக்கலை... இப்போ, எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள்ல 'கன்னத்தில் முத்தமிட்டால்'-உம் ஒண்ணு.

  ReplyDelete
 4. //collegela ungala padika vittadhe thappunu nenaikaren//

  காலேஜ்ல‌ யூனிஃபார்ம்னு சொல்லியிருக்கேனே, அப்ப‌வே நீங்க‌ புரிஞ்சிருந்துருக்க‌ணும் அனானி, அது காலேஜ் இல்ல‌ காலேஜ் மாதிரி

  //boys கிளாஸ் ல இறுக்காங்க நாங்க பொண்ணுங்க கிளாஸ் கட்டடிச்சு படத்துக்கு போனோம் //

  க‌ட் அடிக்க‌ற‌துன்னு முடிவான‌துக்க‌ப்புற‌ம் boys என்ன‌, girls என்ன‌ ம‌தார்
  But உங்க‌ நேர்மை என‌க்கு புடிச்சிருக்கு:)

  //இப்போ, எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள்ல 'கன்னத்தில் முத்தமிட்டால்'-உம் ஒண்ணு//

  ந‌ன்றி ஹ‌ரீஷ், "க‌ன்ன‌த்தில் முத்த‌மிட்டால்" எனக்கு அப்ப‌வே புடிச்சிருந்த‌து. இன்னைக்கு பாத்தாலும் நெகிழ‌ வைக்கும் க்ளைமேக்ஸ். ஆனா என் ஃப்ரெண்ட்ஸுங்க‌தான் புல‌ம்பி த‌ள்ளிட்டாங்க‌

  ReplyDelete
 5. நல்ல அனுபவம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சுவையாக எழுதியிருக்கலாம்..

  கேபிள் சங்கர்

  ReplyDelete
 6. உங்க நகைச்சுவையுடன் கூடிய நடை ரொம்ப நல்லாருக்கு குறும்பன். இன்னும் கொஞ்சம் செதுக்கினீங்கன்னா பிரமாதமா வரும்.

  நாங்களும் மாஸ் பங்க் பண்ணிட்டு நிறைய படங்கள் போயிருக்கோம். நினைவில் இருப்பவை கொஞ்சமே. எதிரி, சுக்ரன், எம்.குமரன், மன்மதன்,......

  ReplyDelete
 7. //இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் //

  வ‌ருகைக்கு ந‌ன்றி கேபிளாரே, இனி எழுத‌ற‌ ப‌திவுக‌ள்ல‌ க‌ண்டிப்பா மென‌க்கெட‌றேன்

  //உங்க நகைச்சுவையுடன் கூடிய நடை//
  வ‌ருகைக்கு ந‌ன்றி விக்கி, நான் ந‌ட‌க்க‌ற‌து சார்லி சாப்ளின் மாதிரியா இருக்கு? (ஹி..ஹி..த‌மாசு)

  //இன்னும் கொஞ்சம் செதுக்கினீங்கன்னா//
  க‌ண்டிப்பா செதுக்க‌றேங்க‌

  //எதிரி, சுக்ரன்//
  இதுக்கு நீங்க‌ க்ளாஸ்லேயே உக்காந்துருக்க‌லாம்

  ReplyDelete
 8. nan sikram college poganum apo than naanum ithu mathri post podalam

  ReplyDelete
 9. வாங்க‌ ஏஞ்ச‌ல், இந்த‌ மாதிரி போஸ்ட் போட‌ணுங்க‌ற‌துக்காக‌லாம் காலேஜ் போக‌ணுமா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....என்னை ரொம்ப‌வே ஃபீல் ப‌ண்ண‌ வெச்சுட்டீங்க‌

  ReplyDelete