இந்த பதிவுல நான் சில அநாகரிகமான வார்த்தைகள யூஸ் பண்ணிருக்கேன்னு உங்களுக்கு தோணுச்சுன்னா, ஐ'ம் ரியலி ஸாரி. என் மனசுல தோணுனத அப்படியே எழுதறேன்.
போன வாரம் விகடன்ல விஜய் அரசியலுக்கு வர்றது, கட்சி ஆரம்பிக்கப்போறதுன்னு பயங்கர பில்டப்போட ஒரு ஆர்ட்டிகிள் போட்டிருந்தாங்க. அதுக்கு போட்டியா இந்த வாரம் குமுதத்துல "ரசிகர்களுக்கு அஜித் அன்புக்கட்டளை"ன்னு ஒரு ஆர்ட்டிகிள் போட்டிருக்காங்க.
விஜய்யும் அவர் அப்பாவும் எடுக்கற ஸ்டெப்லயிருந்தே அவங்க ஏதோ ப்ளான்ல இருக்காங்கன்னு புரியுது. ஆனா இதுவரைக்கும் அரசியல் பத்தி எதுவுமே பேசாம இருக்கற அஜித்தை ஏன் வம்புக்கு இழுக்கறாங்கன்னே தெரியல. ஒரு மாஸ் ஹீரோவா இருந்தும் இந்த நொடி வரைக்கும் அரசியல் ஆசை இல்லாம இருக்கறது சினிமாவுல ரெண்டே பேர்தான். ஒண்ணு கமல், இன்னொன்ணு அஜித்.
அய்யய்யோ ஆனந்த விகடன்ல தளபதிய பத்தி போட்டுட்டாங்களே. சரி நாம தலயை பத்தி போட்ருவோம்னு நமீதாத்துல...ஸாரி குமுதத்துல முடிவு பண்ணிட்டாங்க போல!
போட்டி போடணும்னா புத்திசாலித்தனமா போட்டி போடுங்கய்யா! ரசிகர்களையும், வாசகர்களையும் மடையனுங்க மாதிரி ட்ரீட் பண்றீங்களே, இதுதான் ஜர்னலிஸமா? அஜித வந்து சொன்னாரா, நான் அரசியலுக்கு வரப்போறேன்னு. ஜூராஸிக் பார்க்ல டைனோசர் வந்தா, பனகல் பார்க்லயும் வரும்னு அர்த்தமா? அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதான்னு சினிமாவுல ஜெயிச்சவங்க சிஎம் ஆயிட்டா, அடுத்து வர்ற ஹீரோஸும் சிஎம் ஆயிடுவாங்களா?
என்னை கேட்டா, ஹீரோக்களுக்கு தலைக்கனத்தை ஏத்தறதே இந்த மாதிரி ஆர்ட்டிகிள்ஸ்தான். அஜித் ரசிகர்களாயிருந்தாலும், விஜய் ரசிகர்களாயிருந்தாலும் நான் சொல்லுறது ஒண்ணே ஓண்ணுதான். உங்க தலைவர் படத்தை முதல் நாளே, முதல் ஷோவே போய் பாருங்க. கைதட்டி ரசிங்க. விசில் அடிங்க. உங்க ரூமுல தலைவர் ஃபோட்டோவ ஒட்டிவைங்க. ஆனா அவர் சிஎம் ஆகணும்னுலாம் கனவு காணாதீங்க. அரசியல்ல ஈடுபடுறது அவங்களோட விருப்பம். நீங்க ஃபோர்ஸ் பண்ணி அவங்க வர்றதுனால உங்களுக்கு என்ன லாபம். சிம்பிள், என்னைக்காவது உங்க தலைவர் வெச்சிருக்கற கார் மாதிரி நாமும் வாங்கணும்னு ஆசப்பட்டிருக்கீங்களா. ஸோ, உங்க குடும்பத்தையும் கொஞ்சம் கவனிங்க.
இன்னொன்னு, நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு நான் சொல்லல. பட், அவங்களுக்கு நேச்சுரலாவே அந்த இன்ட்ரஸ்ட் இருக்கணும். இன்னொருத்தர் ஃபோர்ஸ் பண்ணி அவங்க வரக்கூடாது. அததான் நான் சொல்ல வரேன். எனக்கு பில்லாவும் புடிச்சிருந்தது, போக்கிரியும்(90%) புடிச்சிருந்தது. ஏகன் சுத்தமா புடிக்கல, குருவி சகிக்கல (வில்லு நான் பாக்கல).
மை டியர் குமுதமே! இந்த மாதிரி டுபாக்கூர் ஆர்ட்டிகிள் போட்டு மூணு பக்கத்த வேஸ்ட் பண்ணினதுக்கு பேசாம நமீதா ஃபோட்டோவையே மூணு பக்கத்துலயும் போட்டிருக்கலாம்!
No comments:
Post a Comment