ஹும்...கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதறேன்..என்ன பண்றது, கொஞ்சம் இடப்பெயர்ச்சி நடந்துடுச்சு. ஒரு 15 நிமிஷம்கூட உக்காந்து ஒரு பதிவபோடமுடியல. சே..என்ன உலகமடா இது, பாரதியார் மட்டும் இப்போ இருந்திருந்தா "தனிமனிதனுக்கு ஒரு "ப்ளாக்" இல்லையேல் இண்டர்நெட்டையே அழித்திடுவோம்"னு சொல்லியிருப்பார்(ஹிஹி..டியர் பாரதியார் ஃபேன்ஸ், சும்மா தமாஸுக்கு, சீரியஸா எடுத்துக்காதீங்க)
ஏன் "ப்ளாக்" எழுதலன்னு என் தம்பியும், நண்பர்களும் கேட்டபோது, வடிவேலு சொன்னமாதிரி, "எனக்கு ரெம்ப பெருமையா இருந்துது". அட நாம எழுதறதகூட படிக்கறதுக்கு ஆள் இருக்காங்களேன்னு கொஞ்சம் சந்தோஷம்தான். இனிமே வீக்எண்ட்ல வீட்ல இருந்துதான் எழுதணும். கொஞ்சம் இந்தியாவோட பொருளாதாரம் சரியாகட்டும். ஒரு லேப்டாப் வாங்கி தினமும் ஒரு பதிவ போட்டுடறேன்.
நான் எழுதறதுக்கும், இந்தியாவோட பொருளாதாரத்துக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கறீங்களா? ஹுஹும்..இதெல்லாம் மட்டும் கரெக்டா யோசிங்க. ஆனா _________________ (நீங்களே உங்கள விமர்சனம் பண்ணிக்குங்க!)
No comments:
Post a Comment