நேத்தே இந்த பதிவ எழுதணும்னு நெனச்சேன், சில தவிர்க்கமுடியாத காரணங்களால எழுதமுடியல. மே 28லருந்து ஜூன் 3 வரைக்கும் திரைக்கதை எழுதறதபத்தி கமல் தன்னோட ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மூலமா சென்னை ஐஐடில ஒரு ஒர்க் ஷாப் நடத்துனார். போனவாரம் குமுதத்துல ஞாநி "இந்த பயிலரங்கத்தை தமிழில் நடத்தாமல் ஆங்கிலத்தில் நடத்தியதற்காக கமலுக்கு ஒரு குட்டு"ன்னு எழுதியிருந்தார்.
கல்யாண மண்டபம், காலேஜ்னு கட்டாம ஏதோ இந்த மாதிரி, தான் சார்ந்திருக்கற துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோக தன்னால் ஆனத அவர் பண்றார். அதுக்குள்ள தமிழ், இங்கிலீஷ்னு ஏன்யா குறை சொல்றதுக்கு ஆரம்பிக்கறீங்க. எனக்கென்னவோ ஞாநி மாதிரியான அறிவுஜீவிங்கள்ளாம், நாம என்ன பண்ணாலும் ஏதாவது குறை கண்டுபுடிச்சுக்கிட்டே இருப்பாங்கன்னுதான் தோணுது.
ஒர்க் ஷாப் முடிவுல கமல் சொன்னது "இது ஒரு மிகப்பெரிய வெற்றின்னு சொல்றாங்க. ஆனா நான் இது ஒரு ஆரம்பம்னுதான் சொல்வேன்"
இப்போதான் இலைய விரிச்சுவெச்சுருக்காங்க. அதுக்குள்ள சாம்பார்ல உப்பு இல்லன்னுலாம் ஓவரா கத்தாதீங்க. தமிழ்லயும் இந்த ஒர்க் ஷாப்பை கண்டிப்பா நடத்துவாங்கன்னுதான் நெனக்குறேன். அவங்களுக்கு கொஞ்சம் டைம் குடுப்போம். தொடர்ந்து இங்கிலீஷ்லேயே நடத்துனாங்கன்னா அப்போ நாம சொல்லலாம் "நீங்க பண்றது தப்பு, தமிழ்லயும் நடத்தணும்"னு. அதுக்குள்ள பெரிய இதுவாட்டம், இது நொள்ள அது மொக்கன்னு பேசிகிட்டு. அடபோங்கய்யா நீங்களும் உங்க விமர்சனமும்!இத எழுதறதனால என்னை, தலைவான்னு கத்திகிட்டு, படம் ரிலீஸாகுற முதல் நாளே தியேட்டருக்குபோய், கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ற ஒரு வெறித்தனமான ரசிகன்னு நெனச்சுடாதீங்க. படம் நல்லாயிருக்குன்னு கேள்விபட்டா அது ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யான்னு யார் படமாயிருந்தாலும் போய்பாப்பேன். நல்லாயில்லாட்டாலும் ரஜினி, கமல், சூர்யா படங்கள பாப்பேன். காரணம்லாம் சொல்லணுமா என்ன?
நல்லாயிருந்தாலும் பாக்கபுடிக்காதது, சிம்பு, விஷால், பரத் மாதிரியான ஹீ(ஜீ)ரோக்களோட படங்கள். இதபத்தி இன்னொரு நாள் கொஞ்சம் விவரமா எழுதணும்னு நெனக்குறேன். ரொம்ப நாளாவே எனக்கு டி.ராஜேந்தர பாத்தா கேக்கணும்னு நெனச்சிட்டிருக்கற ஒரு கேள்வி "ஏன் சார், உங்க பையன் பேரு சிலம்பரசன், சுருக்கமா சிலம்புன்னு கூப்புடாம ஏன் சிம்புன்னு கூப்புடறீங்க?". ஒரு வேளை சிம்பன்ஸியோட சுருக்கமோ? ஹி...ஹி...
No comments:
Post a Comment