இதுக்கு முன்னாடி ஒரு பதிவுல, சிம்புவ பத்தி விமர்சனம் பண்ணிணதுக்கு நான் குருவா மதிக்கற என் நண்பர், "அது தப்பு! என்னதான் உங்களுக்கு புடிக்காட்டாலும் இப்படி பப்ளிக்கா சிம்பன்ஸிங்கற வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணியிருக்கக்கூடாது"ன்னார். ம்...அவர் சொல்றதும் சரிதான். பட்...சிம்புவ எனக்கும் சின்ன வயசுல ரொம்பவே புடிச்சிருந்தது.
ஒரு சின்ன பையன் சூப்பர் ஸ்டார் மாதிரி ஸ்டைல் பண்றது நல்லாயிருந்தது. ஆனா அதையே 22 வயசுலயும் பண்ணா...ஐயையோ! மறுபடியும் விமர்சனம் பண்ண ஆரம்பிக்கறேன்.
ஓகே, அந்த உலக உத்தமர்கிட்டே (நக்கல் போகுதா பாருங்க..ஹி..ஹி)எனக்கு புடிச்சது பத்தி எழுதி விமோசனம் தேடிக்கறேன். ம்ம்ம்ம்...பாட்டு விஷயத்துல சிம்பு குட். நல்ல மியுசிக் சென்ஸ் ப்ளஸ் நல்ல வாய்ஸ்!
சமீபத்துல நான் ரசிச்சு கேட்ட சிம்பு பாடிய பாட்டு, "குளிர் 100" படத்துல வரும் "மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா" பாட்டு. ஐ திங்க், சிம்பு இதுவரைக்கும் பாடினதுலேயே இதுதான் பெஸ்ட்!
அந்த பாட்ட கேக்கணும்னு விரும்பறவஙகளுக்கு http://thenkinnam.blogspot.com/2009/06/100.html
சொல்ல வந்த விஷயத்தை நாகரீகமாக யார் மனசையும் புண்படுத்தாம சொல்வது பத்திரிகா தர்மத்துல முக்கியமான ஒன்று. (பத்திரிகா தர்மம் என்ற வார்த்தை தமிழ் நாட்டில் முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்ட ஒன்று) தெரியாம சொன்ன விஷயத்துக்கு மன்னிப்பு கேட்டு பத்திரிகா தர்மத்தை நிலை நாட்டியதுக்கு நன்றி.
ReplyDeleteAlways,
தினேஷ் சரவணன்