Monday, June 01, 2009
சர்வம்
சனிக்கிழமை (மே 30) சர்வம் படம் பாக்கலாம்னு போயிருந்தேன். படத்தோட ரிசல்ட் ஏற்கனவே தெரிஞ்சுபோச்சு. இருந்தும் நான் போனதுக்கான காரணம்...கண்டிப்பா த்ரிஷா இல்லீங்க, நீரவ்ஷாவோட ஒளிப்பதிவு(டெக்னிக்கலா வாட்ச் பண்றாராம்!). ஆரம்பமே அசத்தலாத்தான் இருந்துச்சு. ஆனா திரைக்கதை சொதப்பும்போது, ஒளிப்பதிவாளரால என்ன பண்ணமுடியும்?
"21 க்ராம்ஸ்"ங்கற இங்கிலீஷ் படத்த தமிழுக்கேத்த மாதிரி கொஞ்சம் மாத்தி கொடுக்க முயற்சி பண்ணியிருக்கிறார் விஷ்ணுவர்தன். இறந்துபோன தன் காதலியோட இதயம் ஒரு சின்ன பையனுக்கு பொருத்தப்படுது. அந்த பையனை கொலை பண்ண இன்னொருத்தர் துடிச்சிட்டிருக்கார். அவர் ஏன் ஒரு சின்ன பையனை கொலை பண்ணணும்னு நெனக்குறார், அவர்கிட்டயிருந்து ஹீரோ அந்த் பையனை எப்படி காப்பாத்துறார்ங்கறதுதான் கதை. கேக்கும்போதே நமக்குள்ள ஒரு சுவாரஸ்யம் எகிறுதுல்ல? ஆனா அத புஸ்ஸுனு ஆக்கிட்டார் இயக்குனர்.
ஆர்யா-த்ரிஷா காட்சிகள் குறும்புத்தனமா இருந்தாலும் முழுக்க முழுக்க சினிமாத்தனம். ஒரு பொண்ண தொடர்ந்து லவ் பண்ணு லவ் பண்ணுண்னு டார்ச்சர் பண்ணா அவளுக்கு லவ் வந்துடுமா? நிஜத்துல இந்த மாதிரி பண்ணா போலீஸ்தான் வரும். இது பத்தாதுன்னு ஜே.டீ.சக்ரவர்த்தி அடிக்கடி "என் வலி உனக்கு புரியணும்"னு சொல்லி கடுப்பேத்தறார். ராஜாவா, ரஹ்மானாங்கற கேள்விலாம் தேவையில்லாதது. இதெல்லாம் பாக்குறதுல நமக்கு ஏற்படுற வலிய யாருக்கு புரியவக்குறது?
ஒரு அப்பாவோட தவிப்பை இயல்பா வெளிப்படுத்தியிருக்கிறார் இந்திரஜித். மலையாள நடிகர் பிருத்விராஜோட அண்ணணாம்ல! நல்லாவே பண்ணியிருக்கார். சக்ரவர்த்தி முகத்துல நார்மலாவே ஒரு சோகம் இருக்கும். அதுக்கேத்த கேரக்டர்தான் அவரும் பண்ணியிருக்கார், ஆனா இயக்குனர் அவர புரொஜக்ட் பண்ணியிருக்கறவிதம்தான்.....சரி விடுங்க! பொதுவா மணிரத்னம் படங்கள்ல வர சின்ன பசங்க வயசுக்கு மீறின பேச்சு பேசும்போது எனக்கு(நமக்கு?) கொஞ்சம் எரிச்சல்தான் வரும். அந்த வகையில பாத்தா, இந்த படத்துல வரும் அந்த சின்ன பையன் கொஞ்சம் ஆறுதல்தான்.
படத்தோட ப்ளஸ்னு பாத்தா, நீரவ்ஷாவோட ஒளிப்பதிவு & இளையராஜாவோட பாட்டை பிண்ணணி இசையா யூஸ் பண்ணியிருக்கறது (யாரோட ஐடியாங்க இது? ரியலி சூப்பர்ப்!)
ஸ்டைலிஷா பண்ணது நல்லாருக்கு. ஆனா திரைக்கதையும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்திருந்தா விஷ்ணுக்கு இது சூப்பர்ஹிட்டா இருந்திருக்கும்!
Labels:
விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment