Friday, June 05, 2009
உலக சுற்றுப்புறச்சூழல் தினம்!
இன்னைக்கு உலக சுற்றுப்புறச்சூழல் தினம். நம்ம சுற்றுப்புறத்த எந்தளவுக்கு நாம சுத்தமா, பாதுகாப்பா வெச்சுக்கறோம்? யோசிச்சு பாருங்க, அதிகளவு ப்ளாஸ்டிக் பொருள்கள பயன்படுத்த்றது, குப்பைகள கண்ட இடத்துல போடறது, தொழிற்சாலைகள், வாகனங்களோட புகைன்னு இப்படி நிறைய இருக்கு.
மால்தீவ்ஸ்னு ஒரு தீவு பத்தி கேள்விபட்டிருப்பீங்க, ரொம்ப பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட்(காசு அதிகமா வெச்சிருக்கறவங்களுக்கு மட்டும்). கடல் நீர்மட்டம் அதிகமாகி அதிகமாகி 2030க்குள்ள இந்த மால்தீவ்ஸ் கடலுக்கடியில மூழ்கிடும்னு சொல்றாங்க(யார் சொன்னதுனுலாம் கேக்ககூடாது, எதிலயோ படிச்சது). நம்மூரு இந்த மாதிரிலாம் ஆகாம தடுக்கறதுக்கு நாம என்ன செய்யறோம்? டக்குன்னு பதில் சொல்ல முடியல பாத்திங்களா(ஏன்னா நம்ம டக் அவ்வளவுதான்)
இன்னைக்கும் நான் நேரடியா பாத்தது, பஸ்ல இருந்து இறங்கினதுக்கப்புறம், ரெண்டு மூணு பேர் சாதாரணமா அந்த பஸ் டிக்கெட்டை ரோடுலேயே போட்டுபோறாங்க. அது ஒரு சின்ன துண்டுசீட்தான். இல்லன்னு சொல்லல. ஆனா இதே மாதிரி எல்லோரும் ரோடுலேயே டிக்கெட்ட தூக்கியெறிய ஆரம்பிச்சா...(அன்னியன் எஃபெக்ட் டோய்!) இனிமேலாவது தயவுசெய்து அதை குப்பைத்தொட்டில போடுங்க. நாம இந்தமாதிரி இருந்துகிட்டு கார்ப்பரேஷன் சரியில்ல, கவர்ன்மெண்ட் சரியில்லன்னு மத்தவங்க மேல பழிபோடவேண்டியது.
முடிஞ்சவரைக்கும் ப்ளாஸ்டிக் பொருள்கள அவாய்ட் பண்ணுங்க. வீட்டுல சாதாரன 40வாட்ஸ் பல்புக்கு பதில் சிஎஃப்எல் லேம்ப் பயன்படுத்துங்க. வீட்டை சுத்தமா வெச்சுக்குங்க, அக்கம்பக்கத்துல சொல்லி உங்க தெருவையும் சுத்தமா வெச்சுக்க முயற்சி பண்ணுங்க. அப்படி உங்க தெருவும் சுத்தமாயிடுச்சுன்னா, பக்கத்து தெருவுல இருக்கற உங்க நண்பர்கிட்ட போய் உங்க தெருவ பத்தி பெருமையா பேசுங்க. அவருக்கும் அவங்க தெருவ சுத்தமா வெச்சுக்கற எண்ணம் வரலாம்ல.
இது சினிமாத்தனமாகூட உங்களுக்கு தோணலாம். ஒருதடவ முயற்சிபண்ணிதான் பாருங்களேன்...ஸாரி முயற்சிபண்ணிதான் பாப்போமே!
Labels:
என்னாவொரு அக்கறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment