Sunday, June 21, 2009
ஹாப்பி பர்த்டேங்ணோவ்!
ண்ணா, ஹாப்பி பர்த்டேங்ணா, ம்..கட்சி ஆரம்பிக்கபோறீங்களாம், பத்திரிக்கைகள்ல படிச்சேன். நமக்கு ஏன்ணா இதெல்லாம். உங்க ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்னு நெனச்சா, கில்லி, போக்கிரி மாதிரி ஹிட் படங்கள குடுக்க முயற்சி பண்ணுங்க. அதவிட்டுட்டு கட்சி, அரசியல்னு காமெடி பண்ணிகிட்டு...
நம்ம பயபுள்ளைகள பத்தி உங்களுக்கு தெரியாதுன்ணா, உங்கள பாக்குறதுக்கு கூட்டமா வருவாங்க. ஆனா சூரியனோ, இலையோதான் ஓட்டு போடும்போது அவங்க கண்ணுக்கு தெரியும். நீங்களோ பயங்கர ரிசர்வ்ட் டைப். அரசியல்ல அடுத்தவன நாகரிகமா காறிதுப்புனாதான் வேலைக்காகும். சோ, யோசிச்சு முடிவுபண்ணுங்க.
மொதல்ல இந்த மாதிரில்லாம் உங்களுக்கு யோசனை சொல்றவங்கள அடக்கிவைங்க. ஏன்னா இப்போ உங்கள மறைமுகமா கவுக்கறதே அவங்கதான். தெலுங்கு படங்கள் டிவிடி வாங்கி குடுக்கறதோட அவங்க வேலை முடிஞ்சுபோச்சுன்னு சொல்லிவைங்க. போயி, மகேஷ்பாபு நடிச்ச படத்தோட ரைட்ஸ் வாங்கற வேலைய பாருங்ணா!
Labels:
விஜய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment