என்னதான் வார்ம்அப் மேட்ச்சா இருந்தாலும், ஆடுனது(மோதுனது?) இந்தியா பாகிஸ்தானாச்சே. லேசுல விட்றமுடியுமா? பசங்க பின்னிபெடலெடுத்துட்டாங்கல்ல!
ஒண்ணு கவனிச்சீங்களா, தசாவதாரம் படத்துல வந்த "பட்டர்ஃபிளை எஃபெக்ட்" நேத்து மேட்ச்ல ஒர்க்அவுட் ஆகியிருக்கு. எப்படி தெரியுமா? இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐசிஎல்) ஆரம்பிச்சு கபில்தேவ சேர்மனா போட்டு 2020 போட்டிகள் நடத்தி விளம்பரம், வருமானம்னு நல்லாவே போச்சு. இதபாத்த பிசிசிஐகாரங்க சும்மா இருப்பாங்களா? அவங்களும் பதிலுக்கு இந்தியன் பிரிமீயர் லீக்(ஐபிஎல்)னு ஆரம்பிச்சு 2020 போட்டிகள நடத்த ஆரம்பிச்சாங்க. டெக்கான் சார்ஜர்ஸ் டீமுக்காக ரோஹித் ஷர்மா செலக்ட் ஆனார். இந்த வருஷம் நடந்த ஐபிஎல்ல செம ஃபார்ம்ல இருந்த ரோஹிததும் டெக்கான் சார்ஜர்ஸ் சாம்பியன் ஆனதுக்கு ஒரு முக்கியமான காரணம்னு சொல்லலாம்.
இப்படி செம ஃபார்ம்ல் இருக்கற ரோஹித் ஷர்மாதான் நேத்து கவுதம் கம்பீரோட ஓப்பனிங் இறங்கினார். சேவாக்குக்கு இன்னும் தோள்பட்டை காயம் சரியாகலையாம். 159 ரன் டார்கெட், அதுல பாதிய ரோஹித்தே(80 ரன், 53 பந்துகள், 9ஃபோர்ஸ், 4சிக்ஸர்ஸ்) அடிச்சு, மத்தவங்களுக்கு வேலைய குறைச்சுட்டாரு.
ஐசிஎல் ஆரம்பிச்சு, ஐபிஎல் ஆரம்பிச்சு, டெக்கான் சார்ஜர்ஸ் டீமுல செலக்ட் ஆகி, இந்த வருஷம் ஐபிஎல்ல நல்லா ஆடி, அந்த ஃபார்ம நேத்து மேட்ச்லயும் தொடர்ந்தார் இல்லையா. இதுதான் ஐசிஎல் டூ ரோஹித் ஷர்மா பட்டர்ஃபிளை எஃபெக்ட். எப்ப்புடி? ஹி..ஹி...
No comments:
Post a Comment