Tuesday, June 02, 2009

ச‌பாநாய‌க‌ர் மீரா!


இன்னைக்கு காலைல‌ ரேடியோஒன் 94.3எஃப்எம் கேட்டுட்ருந்தேன். ஒரு எஸ்எம்எஸ் போட்டிக்கான‌ கேள்வி கேட்டாங்க‌(வேற‌ யாரு சுச்சிதான்!). பாராளும‌ன்ற‌ ச‌பாநாய‌க‌ரா யார‌ தேர்ந்தெடுக்க‌ப்போறாங்க‌? ஆப்ஷ‌ன் ஏ: மீரா குமார், ஆப்ஷ‌ன் பீ: மீரா ஜாஸ்மின்(அப்பாடா! மீரா ஜாஸ்மின் ப‌ட‌த்த‌ ந‌ம்ம‌ "ப்ளாக்"ல‌ போடுற‌துக்கு கார‌ண‌ம் கெடைச்சிடுச்சு). சரியான‌ ப‌திலுக்கு ஞாயிறு அன்னைக்கு ச‌த்ய‌ம்ல‌ திரையிட‌ற‌ ஒரு அனிமேஷ‌ன் ப‌ட‌த்துக்கு 2 டிக்கெட்.

இது என்ன‌ பொது அறிவ‌ வ‌ள‌ர்க்க‌றாங்க‌ளா, இல்ல‌ நாம‌ சுத்த‌ டுபாக்கூர், இந்த‌ மாதிரி ஈஸியா கேட்டாத்தான் ப‌தில் சொல்வோம்னு நென‌ச்சுட்டாங்க‌ளான்னு தெரிய‌ல‌. மீரா குமாரா இல்ல‌ சோனியா காந்தியான்னு கேட்டிருந்தாகூட‌ நியாய‌மா இருந்திருக்கும். பேரு கொஞ்ச‌ம் ஒண்ணா இருந்துட்டா, இந்த‌ மாதிரி கேட்டு காமெடி பண்ண‌வேண்டிய‌து.

நீங்க‌ வேண்ணா பாருங்க‌, சுத‌ந்திர‌ தின‌ம் அன்னைக்கு ஒரு கேள்வி கேப்பாங்க‌

ந‌ம்ம‌ நாட்டோட‌ பிர‌த‌ம‌ர் பேர் என்ன‌?
ஆப்ஷ‌ன் ஏ: ம‌ன்மோக‌ன் சிங்

ஆப்ஷ‌ன் பீ: ஹ‌ர்ப‌ஜ‌ன் சிங்
ஆப்ஷ‌ன் சி: யுவ்ராஜ் சிங்

இந்த‌ வார‌ம் க‌டைசில‌ விஷாலோட‌ ரோத‌னை...ஹிஹி...ஸாரி...தோர‌ணை ப‌ட‌ம் பாக்க‌லாமான்னு ஒரு யோச‌னையில‌ இருந்தேன். ந‌ல்ல‌வேள‌ ஒரு ந‌ண்ப‌ன் என்னை காப்பாத்திட்டான். மறுப‌டியும் ப‌ஸ் ஸ்டாண்ட், எட்றா வ‌ண்டிய‌, அவ‌ன‌ தூக்குடா, கேம‌ராவ‌ பாத்து ப‌ஞ்ச் வ‌ச‌ன‌ங்க‌ள், லூசு ஹீரோயின், 50 பேர் வ‌ந்தாலும் அடிச்சு தூள கெள‌ப்புற‌து...அய்ய‌ய்யோ போதும்டா சாமி...இன்னொரு விஜ‌ய் ஆக‌ணும்னு முய‌ற்சி பண்ணா விஜ‌ய் ப‌ட‌ங்க‌ள் மாதிரிதான் ரிசல்ட்டும் வ‌ரும்.

பாஸு ஒண்ணு புரிஞ்சுக்குங்க‌, இப்ப‌ல்லாம் ப‌ட‌ம் ந‌ல்லால்ல‌ன்னா, அது ர‌ஜினி ப‌ட‌மாயிருந்தாலும்(பாபா, குசேல‌ன்) ஜ‌ன‌ங்க‌ ஃப்ளாப் ஆக்கிடுறாங்க‌. ஹும்...இது எப்போதான் உங்க‌ளுக்கெல்லாம் புரிய‌ப்போகுதோ??? அய்யோ...அய்யோ!

No comments:

Post a Comment