டைட்டில் போட்டு முடிக்கறதுக்குள்ளேயே, என்னடா இது அவசரப்பட்டு வந்துட்டோமோன்னு தோணுச்சு. ஓவர் பில்டப். சரி போகப்போக சரியாயிடும்னு பாத்தா, காமெடி பண்றேன்னு சொல்லி விஷால் பண்றது இருக்கே! அய்யோ நான் என்னத்த சொல்றது. இடைவேளையில வர்ற அந்த ஒரு ட்விஸ்ட் தவிர படத்துல ஒண்ணுமே இல்ல.
சத்தியமா சொல்றேன். இதுவரைக்கும் தியேட்டருக்கு போய் ஒரு படத்த ஃபுல்லா பாக்காம நான் எழுந்துவந்ததில்ல. குருவி படம்கூட ஃபுல்லா பாத்தேன். ஆனா இந்த படம்....இன்டர்வெல்லுக்கு அப்புறம் ஒரு 10 நிமிஷம் பாத்தேன். என்னால உக்காரமுடியல. இன்னாங்கடா இது, ஆனா வூன்னா, சண்டை போடுறதுக்கு பின்னி மில்லுக்கு ஓடிப்போயிடுறீங்க. சண்டைக்காட்சிகள் எடுக்குமிடம்னு அங்க போர்டா போட்டுவெச்சிருக்கு? பத்தாததுக்கு ஆளாளுக்கு "தோரணையா பேசிட்டு போற", "என் தோரணைய காட்றேன்டா"ன்னு படத்தோட பேர அடிக்கடி சொல்லி நம்ம உயிர வாங்குறாங்க.
ஏன் இதையெல்லாம் எழுதறேன்னா, இன்னும் கொஞ்ச நாள்ல இந்த படத்த "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, புத்தம் புதிய அதிரடித் திரைப்படம்"னு சொல்லி டிவில போடுவாங்க. தயவுசெய்து பாருங்க. அப்பதான் இன்டர்வெல்லுக்கு அப்புறம் நான் ஏன் எழுந்துவந்தேன்ங்கறது புரியும்.
No comments:
Post a Comment