நேத்து ஏதாவது சிடி வாங்கலாம்னு போயிருந்தப்போ திடீர்னு பழைய படங்கள் ஏதாவது வாங்கலாம்னு தோணுச்சு. கொஞ்சம் அலசி(சோப் போடாம) ஆராய்ஞ்சதுல, நான் வாங்கின படங்கள்...
1. ரத்தக்கண்ணீர்
2. நாடோடி மன்னன்
ரத்தக்கண்ணீர்: எப்படி இந்த படத்த இவ்வளவு நாளா பாக்காம இருந்தேன். சே! என்ன ஒரு க்ளாஸ் ஆக்டிங். இந்த படத்துக்காக எம்.ஆர்.ராதாவுக்கு அவார்ட் கெடைச்சுதான்னு தெரியல. ஆனா ரசிகர்களோட மனசுல இடம்பிடிக்கறதவிட பெரிய அவார்ட் இருக்கா என்ன? குஷ்டம் வந்தப்பறமும் மனுஷன் பண்ற நக்கல் இருக்கே! சும்மா சொல்லக்கூடாது, இட்ஸ் அப்ஸொல்யூட்லி சூப்பர்ப்! இந்த படத்தபத்தி நான் சொல்றதவிட ஒரு தடவ நீங்களே பாருங்க. தமிழ்ல கண்டிப்பா பாக்கவேண்டிய படங்கள்ல இந்த படத்துக்கு நிச்சயமா ஒரு இடம் இருக்கு. ஒரு சின்ன இன்ஃப்ர்மேஷன், இந்த படத்துக்கு இசை, சிதம்பரம் ஜெயராமன். பிண்ணணி இசை யாரு தெரியுமா? விஸ்வநாதன் ராமமூர்த்தி.
நாடோடி மன்னன்: இது ஒரு பக்கா எம்ஜிஆர் இமேஜுக்கான கதை. எம்ஜிஆர் வராத சீன்கள் ரொம்ப கம்மி. "இந்த கூட்டத்துக்கு இவன்தான் தலைவன்", "இந்த நாட்டை காப்பாத்த இனிமே உங்கள விட்டா யாரு இருக்கா"ன்னு எல்லாமே எம்ஜிஆர் ஃபார்முலாதான். மன்னன் மாதிரியே நாடோடி இருக்கறாருன்னு காவலாளிகளுக்கும், மக்களுக்கும் தெரியுது. ஆனா மன்னராட்சிய எதிர்க்கறதா சொல்ற பானுமதிக்கு தெரியல. இப்படி சில பல லாஜிக் இடிச்சாலும், வேகமான திரைக்கதை அதையெல்லாம் மறக்கடிக்குது. அது எப்படிதான் சந்திரபாபு வாயில இருந்து குருவி வர்ற காட்சிய எடுத்தாங்களோ தெரியல! ஆல்மோஸ்ட் 75% ப்ளாக்&ஒயிட்ல வர்ற படம் கடைசில சரோஜாதேவி வர்றப்போ கலர்ல மாறிடுது. க்ளைமாக்ஸ் சண்டைகாட்சி இந்த படம் வந்த காலகட்டத்துல ரொம்பவே பரபரப்பா பேசப்பட்டிருக்கும்னு நெனக்குறேன். இந்த படத்துக்கு இசை எஸ்.என்.சுப்பையா. ஆங்..இன்னொரு விஷயம் ரவீந்தர்ங்கறவரோட சேர்ந்து இந்த படத்துக்கு வசனம் எழுதுனவர் கவியரசு கண்ணதாசன். ஆனா இந்த படத்துல அவர் ஒரு பாட்டுகூட எழுதல.
இந்த படத்துல எனக்கு புடிச்ச பன்ச் டயலாக்: "என்னை நம்பாமல் கெட்டவர் நிறையபேர் உண்டு, நம்பி கெட்டவர் இதுவரை இல்லை"
ஒரு கோஇன்சிடன்ஸ் பாத்திங்களா நான் பாத்த படங்களோட ஹீரோக்கள் எம்ஜிஆர் & எம்.ஆர்.ராதா. இதுல என்ன கோஇன்சிடன்ஸ்னு கேக்கறவங்களுக்கு தலைல ஒரு குட்டு!
சரி ஓகே மறுபடியும் அடுத்த வாரம் எழுதறேன். ஸியூ டாட்டா பபை!
No comments:
Post a Comment