Sunday, March 28, 2010

லிவிங் டுகெத‌ர் - நீங்க‌ என்ன‌ சொல்றீங்க‌?

ஐ'ம் இன் ல‌வ் வித் யூ டீ

ஐ டூடா, நீயா வ‌ந்து சொல்வ‌ன்னு காத்துகிட்டு இருந்தேன்

சொல்லு, இன்னைக்கே வாழ‌ ஆர‌ம்பிக்க‌லாம். ஐ கேன்ட் வெய்ட் டு ஸ்டார்ட் எ லைஃப் வித் யூ

ஐ ல‌வ் யூடா. எப்ப‌ ந‌ம்ம‌ வீட்டுக்கு கூட்டிட்டுபோற‌?

அத‌ன்பின் அவ‌ர்க‌ள் ம‌கிழ்ச்சியாக‌ வாழ்க்கையை ஆர‌ம்பித்தார்க‌ள் என்று க‌தை முடியும். க‌ல்யாண‌ம்? எதுக்கு? இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து இந்த‌ கேள்வி ப‌ல‌ரிட‌ம் எழ‌லாம். அமெரிக்காவில் அல்ல‌, இந்தியாவிலேதான்...

ஒரு ஆணும், பெண்ணும் திரும‌ண‌மாகாம‌ல் ஒன்றாக‌ வாழ்வ‌து அவ‌ர்க‌ளின் உரிமை. அதை ச‌ட்ட‌ப்ப‌டி குற்ற‌ம் என்று ஏற்றுக்கொள்ள‌ முடியாது. புராண‌த்தில் கிருஷ்ண‌னுக்கும், ராதாவுக்கும் இருந்த‌ உற‌வும் ஏற‌க்குறைய‌ இதே போன்றுதான். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ளை நாம் குற்ற‌ம் புரிந்த‌வ‌ர்க‌ள் என்று கூறுகிறோமா? இது உச்ச‌ நீதிம‌ன்ற‌ நீதிப‌தியின் கூற்று. இது எந்த‌ள‌வில் ந‌ம்மிடையே சாத்திய‌ம்?

இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு டிஸ்கோதே, ப‌ப் என்றால் என்ன‌வென்றே தெரியாது. எப்போது மேற்க‌த்திய‌ க‌ம்பெனிக‌ள் இந்தியாவுக்கு வ‌ருகை த‌ந்த‌தோ, அப்போதே அவ‌ர்க‌ளின் கலாச்சார‌த்தையும் கூட‌வே கூட்டிக்கொண்டு வ‌ந்துவிட்டார்க‌ள். மேற்க‌த்திய‌ க‌ம்பெனிக‌ள் ந‌ம் நாட்டில் வ‌ந்த‌பின்பு பொருளாதார‌ம் முன்னேறியிருக்கிற‌து என்ப‌து ம‌றுக்க‌முடியாத‌ உண்மை. ஆக‌வே அவ‌ர்க‌ளிட‌த்தில் உன்னுடைய‌ வாழ்க்கை முறை ச‌ரிய‌ல்ல‌ என்ப‌து யாராலும் வாதிட‌முடியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளுடைய‌ க‌லாச்சார‌த்தால் ந‌ம‌க்கு ந‌ன்மை விளைந்திருக்கிற‌தா, தீமை விளைந்திருக்கிற‌தா என்ற‌ வாதத்திற்குள் செல்ல‌ நான் விரும்ப‌வில்லை. நினைத்துப்பாருங்க‌ள், 1970, 80க‌ளில் காத‌ல் திரும‌ண‌ங்க‌ள் எந்த‌ள‌வு ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌து? ஆனால் இப்போது வெகு சாதார‌ண‌ம். கால‌ம் செல்ல‌ செல்ல‌, ந‌ம் ம‌க்க‌ள் மாறிக்கொண்டே வ‌ருகிறார்கள் என்ப‌துதான் உண்மை.

ஏனென்று தெரிய‌வில்லை. ஒரு ஆணும் பெண்ணும் திரும‌ண‌மாகாம‌ல் ஒன்றாக‌ வாழ்கிறார்க‌ள் என்றாலே உட‌ன‌டியாக‌ ந‌ம் க‌ற்ப‌னை குதிரை கொஞ்ச‌மும் நாக‌ரிக‌மின்றி அவ‌ர்க‌ளின் ப‌டுக்கை அறையை‌த்தான் எட்டிப் பார்க்கிற‌து. அவ‌ர்க‌ள் இடையே இருப்ப‌து வெறும் காம‌ம் ம‌ட்டும்தானா? காத‌ல், புரிந்துண‌ர்வு, ந‌ட்பு ஆகிய‌வை எல்லாம் இல்லையா? ஒரு ஆணுக்கு வேண்டுமானால் பெண்ணை பார்த்த‌வுட‌ன் காம‌ உண‌ர்வு பொங்கி எழ‌லாம். ஆனால் ம‌ன‌தால் நெருங்காம‌ல், அவ‌ன் சிற‌ந்த‌ அழ‌க‌னே ஆனாலும், பெண் அவ‌னை ஏற்றுக்கொள்வ‌தில்லை.

ஆறு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு, அப்போது நான்காம் வ‌குப்பு ப‌டித்துக்கொண்டிருந்த‌ என் உற‌வின‌ரின் ம‌க‌ன் "அண்ணா, இன்னைக்கு க்ளாஸ்ல‌ விஜ‌ய், ஷீத்த‌ல்கிட்ட‌ ஐ ல‌வ் யூ சொல்லி கிஸ் ப‌ண்ணிட்டாண்ணா" என்றான். ச‌த்திய‌மாக‌ அப்போது இது என‌க்கு பேர‌திர்ச்சி! நான் நான்காம் வ‌குப்பு ப‌டிக்கும்போது ஐ ல‌வ் யூ என்றால் என்ன‌ அர்த்த‌ம் என்றே தெரியாது (ஹ‌லோ, என்ன‌ சிரிப்பு? ந‌ம்புங்க‌). அவ‌ன் சொன்ன‌த‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌த‌ன்றே என‌க்கு தெரிய‌வில்லை. ஏதேதோ பேச்சை மாற்றி ச‌மாளித்தேன். ஆனால் யோசித்து பார்த்த‌போது, ச‌முதாய‌ மாற்ற‌மும், மீடியாவுமே இத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் என்று தோன்றிய‌து. இன்று என் பெற்றோரிட‌ம் சென்று "நான் அவ‌ளுட‌ன் திரும‌ண‌ம் செய்துகொள்ளாம‌ல் வாழ‌ப்போகிறேன்" என்று சொன்னால், அவ‌ர்க‌ள் அதை க‌ண்டிப்பாக‌ ஏற்றுக்கொள்ள‌ மாட்டார்க‌ள். இதையே இன்னும் இருப‌து, இருப‌த்தைந்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து என் ம‌க‌ன்/ள் என்னிட‌ம் கூறி, அத‌ற்கு நான் ம‌றுத்தால், அவ‌ர்க‌ள் "ச‌ரிப்பா உங்க‌ இஷ்ட‌ம்" என்றா சொல்வார்க‌ள்? ஹுஹும், அப்ப‌டி சொல்வார்க‌ள் என்று என‌க்கு தோன்ற‌வில்லை.


இதெல்லாம் ந‌ம் நாட்டில் நட‌க்காது என்று வாதிடுப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வாழும் உதார‌ண‌ம் ந‌டிக‌ர் க‌ம‌ல்ஹாச‌ன். என்னைக் கேட்டால், இருப‌த்தைந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு பின் இருக்க‌வேண்டிய‌ சினிமா அறிவை, வாழ்க்கை முறையை க‌ம‌ல் இப்போதே பெற்றிருக்கிறார் என்றே கூறுவேன். நான் அறிந்த‌வ‌ரை ப‌ல‌ பெண்க‌ளுக்கு க‌ம‌லை மிக‌வும் பிடித்திருக்கிற‌து. ஆனால் அவ‌ருடைய‌ வாழ்க்கை முறையை அவ‌ர்க‌ள் க‌டுமையாக‌ விம‌ர்ச‌ன‌ம் செய்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்கு நான் சொல்ல‌ விரும்புவ‌து, "நூறு ரூபா செல‌வு ப‌ண்ணி ப‌ட‌ம் பாக்க‌றோம், ப‌ட‌ம் ந‌ல்லாருக்கா, அவ‌ர் ந‌ல்லா ந‌டிச்சிருக்காரா? அவ்ளோதான் ந‌ம‌க்கு பேச‌ற‌ உரிமை. யார்கூட‌ வாழ‌ணும்ங்க‌ற‌து அவ‌ரோட‌ விருப்ப‌ம். அதுல‌ த‌லையிட‌ நாம‌ யாரு?"

லிவிங் டுகெத‌ர் வாழ்க்கை முறை த‌ற்போதிருக்கும் திரும‌ண‌ வாழ்க்கை முறையை விட‌ சிற‌ந்த‌து என்று நான் கூற‌வில்லை. ஆனால் சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து இந்த‌ வாழ்க்கை முறைதான் அதிக‌ரித்து இருக்கும். அதை எதிர்க்க‌வும் முடியாத‌ சூழ்நிலையில்தான் நாமும் இருப்போம். இது க‌ண்டிப்பாக‌ க‌லாச்சார‌ சீர‌ழிவு கிடையாது. அப்ப‌டி பார்த்தால் 70க‌ளில் அதிக‌ம் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டாத‌ காத‌ல் திரும‌ண‌ங்க‌ள் கூட‌ இன்றைய‌ க‌லாச்சார‌ சீர‌ழிவுதான். அதை ம‌ட்டும் எப்ப‌டி இன்று ந‌ம்மால் ஏற்றுக்கொள்ள‌ முடிகிற‌து? நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நாளை ந‌ம் பிள்ளைக‌ள் இந்த‌ வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தால் ந‌ம்மால் என்ன‌ செய்ய‌ முடியும்? அப்போது அவ‌ர்க‌ள் "நான் இவ‌னு/ளுட‌ன் வாழ‌ப்போகிறேன்" என்று பெற்றோரிட‌ம் த‌க‌வ‌ல் சொல்வார்க‌ளே த‌விர‌, அனும‌தியை எதிர்பார்த்துக் காத்திருக்க‌ ‌மாட்டார்க‌ள். அடுத்த‌ த‌லைமுறையின் ஐடியால‌ஜியை ஏற்றுக்கொள்ளும் ம‌ன‌நிலையை நாம் இப்போதே உருவாக்கிக்கொள்வ‌தை த‌விர‌ ந‌ம‌க்கு வேறு வ‌ழியில்லை.

இப்ப‌திவைப் ப‌ற்றி ப‌ல‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் எழ‌லாம். ஆனால் விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்கு ப‌ய‌ந்தால் "யார் தெச்ச ச‌ட்டை, தாத்தா தெச்ச‌ ச‌ட்டை" என்றுதான் எழுதிக்கொண்டிருக்க‌ முடியும். அத‌னால், நாக‌ரிக‌மான‌ வார்த்தைக‌ள் இருக்கும் ப‌ட்ச‌த்தில், இப்ப‌திவைப் ப‌ற்றியோ, என்னைப் ப‌ற்றியோ வ‌ரும் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை வ‌ர‌வேற்கிறேன். முறைய‌ற்ற‌ வார்த்தைக‌ள் இருந்தால் டெலிட் செய்வ‌தை த‌விர‌ வேறு வ‌ழியில்லை, ம‌ன்னியுங்க‌ள் :)

36 comments:

  1. விமர்சனத்துக்குறிய இந்த விஷயத்தை முதலில் மிகவும் தைரியமா இடுகையிட்டதற்கு வாழ்த்துக்கள்.

    பரிணமித்துவரும் இந்த முறையில், ஆணும், பெண்ணும் மன ஒப்பந்த ரீதியில் வாழ்வது சரியா தவறா என்ற கருத்துக்கள் ஒருபுறமிருந்தாலும், ஒருவேளை எதிர்காலத்தில் இது சகஜமாக புழக்கத்தில் வருவதாக வைத்துக்கொண்டாலும், இந்த முறையில் ஒரு வயதுவரம்பு இருக்க வேண்டியது அவசியமாகிறது.

    இல்லையென்றால், நமது கஸின் பிரதர் யாராவது, 4வது படிக்கும்போதே "அண்ணா, இன்னைக்கு க்ளாஸ்ல‌ விஜ‌ய், ஷீத்த‌ல்கிட்ட‌ ஐ ல‌வ் யூ சொல்லி கிஸ் ப‌ண்ணிட்டாண்ணா. நாளைக்கே நோட்புக், பென்சில், ஜாமெட்ரி பாக்ஸ்லாம் எடுத்துட்டு எங்கூட தனியா வந்துடு-ன்னு சொல்லிவிட்டானண்ணா..!" என்று கேட்டபிறகும் நம் நெஞ்சுவெடிக்காமல் இருக்குமா..!

    -
    DREAMER

    ReplyDelete
  2. இது காலம் மாறும் போது சகஜமாகும் வாய்ப்பு இருக்கிறேதா இல்லை இல்லை நான் தெரியாம பண்ணிட்டேன் நீயாவது சரியான முறைப்படி திருமண வாழ்வை ஏற்றுக் கொள் என்று today's living together பெற்றவர்கள் நாளை சொல்்வார்களா? என்பதை பொருத்து இருந்து நாமும் பார்க்கலாம்

    நானும் இது குறித்து எழுதுகிறேன் ஒரு தொடர் பதிவாக

    http://www.virutcham.com

    ReplyDelete
  3. இது அவரவர் விருப்பம். யாரையும் எதற்கும் Compel செய்ய முடியாது.

    எனக்கு இந்த முறையில் தெரியும் சங்கடம் அதில் உள்ள "எப்போது வேண்டுமானால் பிரியலாம்" என்ற சுதந்திரம் தான். குறைகளுக்காக மனிதர்களை விட்டு விலக வேண்டும் என்றால் எந்த மனிதனுடனும் நட்பாக கூட இருக்க முடியாது. நமது traditional Indian திருமண முறையில் இதனை புரிந்து கொண்டு சண்டைகள், குறைகள் இவற்றை மறந்து வாழ்கிறார்கள். Living together முறையில் சிறு சண்டை- கருத்து வேறுபாட்டிற்கும் பிரிய வாய்ப்பு அதிகம். இது தான் Living together-ல் குறையாக தெரிகிறது

    ReplyDelete
  4. யோசிக்க வேண்டிய விசயம்தான்.

    ReplyDelete
  5. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. // நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நாளை ந‌ம் பிள்ளைக‌ள் இந்த‌ வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தால் ந‌ம்மால் என்ன‌ செய்ய‌ முடியும்? அப்போது அவ‌ர்க‌ள் "நான் இவ‌னு/ளுட‌ன் வாழ‌ப்போகிறேன்" என்று பெற்றோரிட‌ம் த‌க‌வ‌ல் சொல்வார்க‌ளே த‌விர‌, அனும‌தியை எதிர்பார்த்துக் காத்திருக்க‌ ‌மாட்டார்க‌ள். அடுத்த‌ த‌லைமுறையின் ஐடியால‌ஜியை ஏற்றுக்கொள்ளும் ம‌ன‌நிலையை நாம் இப்போதே உருவாக்கிக்கொள்வ‌தை த‌விர‌ ந‌ம‌க்கு வேறு வ‌ழியில்லை.//

    எப்படி நம்முடைய இந்த தலைமுறையினரின் வாழ்க்கை முறையினையும் திருமணத்தையும் போன தலைமுறையான நம் பெற்றோர் ஏற்றுக்கொண்டனரோ அதுபோலவே நம் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை முறையினையும் நாம் ஏற்றுக் கொள்ள பழகிக்கொள்ளத்தான் வேண்டும் . மாற்றங்கள் என்பது மாறாத ஒன்று . ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை .

    ReplyDelete
  7. Kamal is like Street Dog. He will any time change the partner. Dont justfy this idiots things.

    ReplyDelete
  8. இதைப் பற்றி பேச உங்களுக்கு எந்த தயக்கமும்தேவையில்லை. மிகவும் யதார்த்தமான உண்மை. யதார்த்த உண்மைகள் பல நமக்கு கசப்பவை. பழகியிருக்கிற... நம்பிவருகின்ற பொய்மைகள் பல இனிப்பவை. பகிரங்கமாக உண்மைகளை விவாதிக்காமல் எந்த தீர்வையும் எட்ட முடியாது தோழர்...

    ReplyDelete
  9. ithilanna thappuu

    ReplyDelete
  10. //ஒரு ஆணுக்கு வேண்டுமானால் பெண்ணை பார்த்த‌வுட‌ன் காம‌ உண‌ர்வு பொங்கி எழ‌லாம். ஆனால் ம‌ன‌தால் நெருங்காம‌ல், அவ‌ன் சிற‌ந்த‌ அழ‌க‌னே ஆனாலும், பெண் அவ‌னை ஏற்றுக்கொள்வ‌தில்லை.//........... நன்றி ரகு பெண்களை இந்த அளவிற்கு புரிந்து வைத்துள்ளமைக்கு!

    //மோகன் குமார் said...
    இது அவரவர் விருப்பம். யாரையும் எதற்கும் Compel செய்ய முடியாது//... நானும் இதை ஏற்றுக்கொள்கிறேன்.

    லிவிங் டுகெத‌ர் க‌லாச்சார‌த்தின் உச்சியில் இருக்கும் அமெரிக்க‌ர்க‌ளே ச‌மீப‌ கால‌மாக‌ திரும‌ண வாழ்க்கையினை மிக‌வும் விரும்புவ‌தாக‌ ஒரு ரிப்போர்ட் சொல்லுகிற‌து.

    ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன் இருந்த‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ள் இப்பொழுது இல்லை.
    இப்பொழுது இருப்ப‌து பிற்கால‌த்தில் இருக்க‌போவ‌தும் இல்லை.

    மாறி வ‌ரும் உல‌கில் மாற்ற‌ங்க‌ளை ஏற்றுக் கொள்வ‌து இய‌ல்புதானே!

    மிக‌வும் ந‌ல்ல‌தொரு ப‌திவு ர‌கு, வாழ்த்துக்க‌ள்!

    ReplyDelete
  11. அலசல் அருமை . தொடரட்டும் உங்களின் பணி .

    ReplyDelete
  12. //அதுபோல் லிவிங் டுகெத‌ர் போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை ப‌ற்றி எழுதும்போது இருக்கும் ஒரு ச‌ங்க‌ட‌ம், எழுதுப‌வ‌னும் அப்ப‌டித்தான் இருப்பான் என்று ப‌டிப்ப‌வ‌ர்க‌ளிடையே உருவாகும் ஒரு பிம்ப‌ம்.//


    நாம் இதை செயாவிட்டால் . காலப்போக்கில் நாம் காணாமல் போய் விடுவோம் . உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ . அதை துணிவாக எழுதுங்கள் . வீழ்வதாய் இருந்தாலும் அதில் முதல்வனாய் இருப்போம் .

    ReplyDelete
  13. அருமையான விஷயத்தை அலசியிருக்கிறீங்க ரகு,

    //குறைகளுக்காக மனிதர்களை விட்டு விலக வேண்டும் என்றால் எந்த மனிதனுடனும் நட்பாக கூட இருக்க முடியாது.//
    நண்பர் மோகன் குமார் கூறிய இந்த விஷயத்தை நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  14. ந‌ன்றி ஹ‌ரீஷ், வ‌ய‌துவ‌ர‌ம்பு விஷ‌ய‌த்துல‌ நீங்க‌ சொல்ற‌துக்கு மாற்றுக்க‌ருத்தே இல்ல‌

    //நோட்புக், பென்சில், ஜாமெட்ரி பாக்ஸ்லாம் எடுத்துட்டு எங்கூட தனியா வந்துடு-ன்னு சொல்லிவிட்டானண்ணா//

    எப்ப‌டிலாம் யோசிக்க‌றீங்க‌?!...:))


    ந‌ன்றி விருட்ச‌ம், அவ‌சிய‌ம் எழுதுங்க‌ள்

    ReplyDelete
  15. ந‌ன்றி மோக‌ன், நீங்க‌ சொல்ற‌து உண்மைதான், ஆனா பிரிய‌ற‌துக்காக‌ அவ‌ங்க‌ ரொம்ப‌ வ‌ருத்த‌ப்ப‌ட‌ற‌தும் இல்லைன்னே நினைக்கிறேன்.

    ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, யோசிக்க‌ணுமா? ஓகே ஓகே ;)

    ReplyDelete
  16. ந‌ன்றி ந‌ள‌ன்

    ந‌ன்றி ம‌தார், அதேதான்...

    ReplyDelete
  17. Dear Rajaraman, Thanks for your comments. But I request you not to use these kind of words in public even if you don't like him. He has to decide about his partner. Who are we to say 'this is good, this is bad' to him? I dont' think we've the right to criticize him based on his personal life

    ந‌ன்றி ச‌ரா, கொஞ்ச‌ம் த‌ய‌க்க‌த்துட‌ன்தான் இதை எழுதினேன்...ஆத‌ர‌வுக்கு ந‌ன்றி தோழ‌ர்

    ReplyDelete
  18. ந‌ன்றி அனானி

    ந‌ன்றி ப்ரியா, பெண்க‌ள்கிட்ட‌யிருந்து கொஞ்ச‌ம் எதிர்ப்பு வ‌ரும்னு நினைத்தேன்..ஆனா ரொம்ப‌ இய‌ல்பா ய‌தார்த்த‌த்தைப் புரிஞ்சு வெச்சுருக்கீங்க‌ :)

    ReplyDelete
  19. ந‌ன்றி ச‌ங்க‌ர், ப‌ஞ்ச் ட‌யலாக்லாம் ப‌லமா இருக்கு ;)

    வாங்க‌ டாக்ட‌ர், ஏன் பெய‌ர்ல‌ "I"ய‌ விட்டுட்டீங்க‌, ஏதாவ‌து நியூம‌ரால‌ஜியா?...;)

    ReplyDelete
  20. இதை பத்தி நெறைய யோசிச்சு இருக்கேன்... தூரத்துல இருந்து பாக்கறப்ப பரவாஇல்லனு தோணும். ஆனா சுலபமா ஏத்துக்க முடியல...நாம வளந்த விதம் அப்படின்னு நெனைக்கிறேன். நீங்க சொன்னா மாதிரி காலம் மாற மாற எல்லாமே மாறிட்டு தான் இருக்கு. அப்போ ஒரு வேல நம்ம மனசும் இதை எல்லாம் சாதாரணமா எடுத்துக்கும்னு நெனைக்கிறேன்

    உண்மைய சொல்லணும்னா சில சமயம் இது நல்லதோனு தோணும். எத்தனை divorce பத்தி கேள்வி படறோம். அதுக்கு பதிலா இந்த முறை சரியோன்னு தோணும். ஆனா அத்தனை சுலபம் இல்ல இந்த சமுதாயத்தோட பார்வை மாறும் வரை (சமுதாயம் என்பது என்னையும் சேத்து தான்)

    ReplyDelete
  21. ஒரு ஜெர்மானிய நண்பர் என்னைச் சந்தித்த போது இந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.. இந்தியர்கள் எப்படி பார்க்காமலேயே திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.. அதன் பின் எப்படி காதலோடு வாழ்கிறார்கள் என்று பல கேள்விகளை அடுக்கினார்கள்... நாம் வருவதை ஏற்றுக் கொண்டே பழக்கப் பட்டு விட்டோம்.. இந்தக் கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா..?

    ReplyDelete
  22. ந‌ன்றி அப்பாவி த‌ங்க‌ம‌ணி, உங்க‌ பெய‌ர் ந‌ல்லா இருக்கு :)

    நீங்க‌ சொன்ன‌துபோல் நாம் வ‌ள‌ர்ந்த‌ முறையின் கார‌ண‌மாக‌த்தான் லிவிங் டுகெத‌ர் வாழ்க்கை முறையை ந‌ம்மால் ஏத்துக்க‌முடிய‌ல‌. ஆனால் இந்த‌ முறைதான் எதிர்கால‌த்தில் அதிக‌மா இருக்கும்னு நினைக்கிறேன். அதிக‌ரித்து வ‌ரும் விவாக‌ர‌த்துக‌ளும் அத‌ற்கு ஒரு கார‌ண‌மா இருக்க‌லாம்....

    ReplyDelete
  23. ந‌ன்றி பிர‌காஷ் (எ) சாம‌க்கோட‌ங்கி, ம‌றுப‌டியும் வித்தியாச‌மான பெய‌ர் :)

    //இந்தியர்கள் எப்படி பார்க்காமலேயே திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.. அதன் பின் எப்படி காதலோடு வாழ்கிறார்கள் என்று பல கேள்விகளை அடுக்கினார்கள்//

    வேற‌ வ‌ழி?....‌:)

    ReplyDelete
  24. ந‌ன்றி அப்துல்லா

    ReplyDelete
  25. ஆணும், பெண்ணும் வெருமையான அன்புயிருதல் பிரசனைகள் இருகாது.

    ReplyDelete
  26. நண்பரே புதிய பதிவு எப்பொழுது . மீண்டும் வருவேன் !

    ReplyDelete
  27. வாங்க‌ சங்க‌ர், அடுத்த‌ டெம்ப்ளேட்டா இது ;))

    ReplyDelete
  28. எல்லாம் அவங்கவங்க இஷ்டம் என சொல்பவர்கள், அவர்களின் மகளோ தங்கையோ இக்காரியத்தை செய்தால் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தில் இன்று இல்லை என்பது தான் நடைமுறை உண்மை. இனியும் அந்த மன நிலைக்கு வருவார்களா என்றால் அதுவும் உறுதியாக ஆம் என சொல்ல முடியாது.

    சில காலங்களுக்கு முன் ஏற்றுக் கொள்ளப்படாத காதல் திருமணம் இன்று ஏற்றுக் கொள்ளப்படக் காரணம் அதில் ஒரு நம்பிக்கை, உத்திரவாதம் இருப்பது தான். காதல் திருமணத்தை நீங்கள் சொல்லும் இந்த லிவிங் டு கெதருடன் என்னால் ஒப்பிட முடியவில்லை ரகு. லிவிங் டு கெதருக்கு ஒரு மெச்சூரிட்டி வேண்டும். அப்படியில்லாமல் யார் வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் என்ற நிலை வந்தால் நிச்சயம் அதில் செக்ஸ் ஒரு முக்கியக் காரணமாக இருக்கும். தவிர, போரடிச்சதும் ஆள் மாத்திக்கலாம் என்ற சுதந்திரம் கொஞ்சம் ஆபத்தானதே.

    கமலஹாசனும் திருமணப் பந்தத்தில் இருந்து குழந்தைகள் பெற்று ஒரு மெச்சூரிட்டி லெவலுக்கு வந்த பின்னரே இன்னொருவருடன் சேர்ந்து வாழ்கிறார். அது வேறு.

    இளைஞர்கள் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதை இன்று நீங்கள் ஆதரித்தீர்களானால் இன்னும் 10 வருடங்களில் 10 வயது சிறுவனுக்குக் கூட பள்ளிப்பையில் ஆணுறை வைத்து அனுப்பும் அவலம் வரும்.

    லிவிங் டு கெதர் முற்றிலும் தவறென்பதல்ல என் வாதம். ஆனால் அதிலிருக்கும் சிக்கல்கள் அதிகம். நம்பகத்தன்மை இல்லாத வரையறை இல்லாத உறவு முறைக்குள் ஒருவர் போக வேண்டுமானால் அதில் இருக்கும் ஆபத்துகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். ஆபத்தான நம்பிக்கையில்லாத இது போன்ற வாழ்க்கை முறை நிச்சயம் கலாச்சார சீரழிவு என்பதே என் எண்ணம்.

    ReplyDelete
  29. நடமுறை சிக்கல்களையும் மீறி திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்பவர்களிடையே சில சமயங்களில் நம்பகத்தன்மை இருப்பதில்லை.... இதில் முக்கியமாய் பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கை உத்திரவாதம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? நிச்சயமில்லாத ஒரு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதைவிட முறைபடி நிச்சயித்து திருமணம் புரிந்து வாழலாமே. (மலேசியாவில் 'லிவிங் டுகெதர்' சகஜமான வாழ்வியல் முறையாகிவிட்டாலும் அதில் அவிழ்க்க முடியாத சிக்கல்கள் அப்படியேத்தான் இருக்கின்றன)அப்படி வாழ்ந்த எனது சில நண்பர்கள் கடைசியில் திருமணம் புரிந்துக் கொண்டனர்.

    ReplyDelete
  30. ந‌ன்றி விக்கி, நீங்க‌ள் சொல்லும் ம‌ன‌ப்ப‌க்குவ‌ம் இப்போது வ‌ராது என்ப‌தை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் 20, 25 வ‌ருட‌ங்க‌ளுக்கு பின்பு இந்த‌ ம‌ன‌ப்ப‌க்குவ‌ம் க‌ண்டிப்பாக‌ வ‌ரும் என்றே நினைக்கிறேன்.

    ஒரு கால‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் பார்த்து செய்யும் திரும‌ண‌ம்தான் சிற‌ந்த‌து, காத‌ல் திரும‌ண‌ம் த‌வ‌று என்ற‌ மாயை இருந்த‌து உண்மை. இதை ஏற்றுக்கொள்கிறீர்க‌ளா? அதுபோல‌ இன்று லிவிங் டுகெத‌ர் வாழ்க்கை முறையை த‌வ‌று என்று கூறுப‌வ‌ர்க‌ள், சில‌ கால‌ம் க‌ழித்து அதை ஏற்றுக்கொள்ள‌லாம். இத‌ற்காக‌த்தான் இந்த ஒப்பீடே த‌விர‌ காத‌ல் திரும‌ண‌த்தையும், லிவிங் டுகெத‌ரையும் நான் ஒன்றாக‌ பார்க்க‌வில்லை.

    நீங்க‌ள் கூறிய‌தில் லி.டு.க்கு செக்ஸ் பிராத‌ன‌மாக‌ விள‌ங்குகிற‌து என்ப‌தை நூறு ச‌த‌வீத‌ம் முழுமையாக‌ ஏற்றுக்கொள்கிறேன்.

    ப‌ல‌ ஆண்டுக‌ள் ஒன்றாக‌ வாழ்ந்த‌ பின்ன‌ர்தான் க‌ம‌ல் ச‌ரிகா திரும‌ண‌ம், சிவாஜி அவ‌ர்க‌ளின் முன்னிலையில் ந‌ட‌ந்த‌து. திரும‌ண‌த்தில் க‌ல‌ந்துகொண்ட‌வ‌ர்க‌ளில் முக்கிய‌மான‌ இருவ‌ர் ஸ்ருதிஹாச‌ன் & அக்ஷ‌ரா ஹாச‌ன். ஆக‌வே இப்போதுதான் அவ‌ர் லிவிங் டுகெத‌ர் வாழ்க்கை வாழ்கிறார் என்று சொல்வ‌து த‌வ‌று.

    இங்கு சொல்லியிருப்ப‌து இவ்வாழ்க்கை முறையை நான் ஆத‌ரிக்கிறேனா இல்லையா என்ப‌த‌ல்ல‌. எதிர்கால‌த்தில் இது நிச்ச‌ய‌மாக‌ ந‌ட‌க்கும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும். பொறுத்திருந்து பார்ப்போம் அப்போது ந‌ம் ம‌ன‌நிலை எப்ப‌டியிருக்கிற‌தென்று...

    ReplyDelete
  31. ந‌ன்றி புனிதா, எதிர்கால‌ வாழ்க்கை உத்த‌ர‌வாத‌ம் என்ப‌தில் ஆண் என்ன‌, பெண் என்ன‌? இவ‌ன் சில‌ கால‌ம் திரும‌ண‌ம் செய்யாம‌ல் ஒரு பெண்ணுட‌ன் வாழ்ந்து பிரிந்துவிட்டான் என்று தெரிந்தால் எந்த‌ பெண் ஏற்றுக்கொள்வாள்?

    //நிச்சயமில்லாத ஒரு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதைவிட முறைபடி நிச்சயித்து திருமணம் புரிந்து வாழலாமே//

    நீங்க‌ள் கூறுவ‌து 100% ச‌ரிதான். ஆனால் விவாக‌ர‌த்து வ‌ழ‌க்குக‌ளின் ரேஷியோவை, 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு, இப்போது என‌ ஒப்பிட்டு பாருங்க‌ள். இதுவும் லி.டு.க்கு ஒரு சாத‌க‌மான‌ அடிப்ப‌டை கார‌ண‌ம்.

    திரும‌ண‌ வாழ்க்கை த‌வ‌று என்றோ, லிவிங் டுகெத‌ர் வாழ்க்கை முறைதான் சிற‌ந்த‌து என்றோ வாதிட‌வில்லை. இப்போது அங்கொன்று இங்கொன்றாய் இருக்கும் லி.டு. எதிர்கால‌த்தில் மிக‌ ச‌க‌ஜ‌மாகிவிடும் என்ப‌தே என் க‌ருத்து.

    ReplyDelete
  32. ந‌ன்றி இர‌சிகை :)

    ReplyDelete
  33. I agree with vigneshwari.We have to think about the children.Because of living together ,how many mom and dad for them.
    Sangamithra

    ReplyDelete
  34. ந‌ன்றி மோக‌ன், நீங்க‌ சொல்ற‌து உண்மைதான், ஆனா பிரிய‌ற‌துக்காக‌ அவ‌ங்க‌ ரொம்ப‌ வ‌ருத்த‌ப்ப‌ட‌ற‌தும் இல்லைன்னே நினைக்கிறேன்.//

    எப்பொழுது 'மன முறிவு' ஏற்பட்டதோ அங்கே எதற்கு "மண இணைப்பு" இருவர் இறந்து எதற்காக, யாருக்காக வாழ வேண்டும்??

    சந்தோஷமும், புரிதலும் இல்லைன்னா இரண்டு பேரும் பிரிஞ்சு அவங்கவங்க மகிழ்ச்சியை திரும்பப் பெருவதுதானே முறை - அங்கே எதற்கு வருத்தம் வர வேண்டும்?

    ReplyDelete