Sunday, March 14, 2010

'பீட்ட‌ர்' விடுங்க‌, த‌ப்பேயில்ல‌!

"வ‌ண‌க்க‌ம்" - இதை இங்கிலீஷ்ல‌ எப்ப‌டி சொல்ற‌து? PG ப‌டிக்கும்போது என் ந‌ண்ப‌ன் கேட்டான்.

வ‌குப்பிலிருந்த‌ யாருக்குமே தெரிய‌வில்லை. "ஹ‌லோ"தானே என்ற‌ன‌ர் சில‌ர். "ஹுஹும்...'வ‌ண‌க்க‌'த்திற்கு இணையான‌ ஆங்கில‌ வார்த்தை கிடையாது. 'சிர‌ம் தாழ்த்தி வ‌ண‌ங்குகிறோம்' போன்ற‌ ம‌ரியாதையான‌ வ‌ண‌க்க‌த்திற்குத்தான் "Obeisance" என்று கூறுவ‌ர்" என்றான். ம‌றுநாளிலிருந்து நாங்க‌ள் ஒவ்வொருவ‌ரும் வ‌குப்புக்குள் நுழையும்போதே "Hi"க்கு ப‌திலாக‌ "Obeisance" என்றுதான் காலை வ‌ண‌க்க‌ம் சொல்ல‌த் தொட‌ங்கினோம். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய‌ வார்த்தையை அக‌ராதியில் பார்த்து எங்க‌ளுக்கு சொல்லிக்கொடுப்பான். இதை ஏன் இப்போது சொல்கிறேன்? ப‌த்தாம் ம‌ற்றும் ப‌ன்னிர‌ண்டாம் வ‌குப்புத் தேர்வுக‌ள் எப்ப‌டியும் இன்னும் சில‌ வார‌ங்க‌ளில் முடிந்துவிடும். அத‌ற்கு பின் உங்க‌ள் பிள்ளைக‌ளையோ, உங்க‌ளுக்குத் தெரிந்த‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளையோ ஸ்போக்க‌ன் இங்கிலீஷ் கோர்ஸில் சேர‌ச்சொல்லுங்க‌ள். த‌குதி இருந்தும், தான் செய்யும் வேலையில், ஒருவ‌ர் மேலும் வ‌ள‌ர‌ முடியாம‌ல் போவ‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் lack of communication skill. இத‌னால் நானும் ப‌ல‌ தோல்விக‌ளை ச‌ந்தித்திருக்கிறேன்!



நானும் ஒரு ஜீரோதான்


எல்.கே.ஜி முத‌ல் க‌ல்லூரி வ‌ரை நான் ப‌டித்த‌து ஆங்கில‌ வ‌ழிமுறைக் (இங்கிலீஷ் மீடிய‌ம்) க‌ல்விதான். ஆனால் க‌ல்லூரி முடிக்கும்போதுகூட‌, என் எதிரே இருப்ப‌வ‌ர் ஆங்கில‌த்தில் பேசினால், என்னால் புரிந்துகொள்ள‌ முடியுமே த‌விர‌, ப‌தில் கூற‌ ச‌ற்றே த‌டுமாறுவேன். கார‌ண‌ம், ப‌ள்ளியில் ப‌டித்த‌தெல்லாம் புரிந்து கொண்டு ப‌டித்த‌து அல்ல‌. வெறும் ம‌ன‌ப்பாட‌ம். வேலைக்கான‌ என் முத‌ல் நேர்முக‌த் தேர்வில், இது பெரிதாக‌ என்னை பாதிக்க‌வில்லை. வெறும் "Tell about yourself"தான். சுல‌பமாக‌ ச‌மாளித்தேன், வேலை கிடைத்த‌து. ஆனால் வேறு வேலைக்கு முய‌ற்சிக்கும்போது ஒரு நேர்முக‌த் தேர்வில், "Tell me, why do you think you're the right person for this job" என்று என்னை கேட்க‌, ப‌தில் நெஞ்சுக்குள் ம‌ட்டுமே இருந்த‌து. ஏதேதோ த‌ட்டுத் தடுமாறி சொல்லி சமாளித்தேன்.

ஆப்ஷ‌ன் ஏ - ர‌குவுக்கு இந்த‌ வேலை கிடைக்கும், ஆப்ஷ‌ன் பீ - ர‌குவுக்கு இந்த‌ வேலை கிடை‌க்காது என்று எந்த‌ சேன‌லாவ‌து எஸ்எம்எஸ் போட்டி வைத்திருந்தால், ஆப்ஷ‌ன் 'பீ'க்கே நூறு ச‌த‌வீத‌ ஓட்டு கிடைத்திருக்கும். இந்த‌ முடிவு என‌க்கும் தெரிந்திருந்த‌து. அத‌னால் இந்த‌ வேலை கிடைக்காம‌ல் போன‌த‌ற்காக‌ வ‌ருத்த‌ப்ப‌டாம‌ல், முத‌லில் க‌ம்யூனிகேஷ‌ன் ஸ்கில்லை டெவ‌ல‌ப் ப‌ண்ண‌ வேண்டும் என்று முடிவு செய்தேன். என‌க்கு முக்கிய‌ உத‌வியாய் இருந்த‌து "THE HINDU" ப‌த்திரிக்கை. கிரிக்கெட், சினிமா, அர‌சிய‌ல் தொட‌ர்பான‌ நிறைய‌ க‌ட்டுரைக‌ளை ப‌டித்து அக‌ராதி பார்த்து அர்த்த‌ம் புரிந்துகொள்ள‌ துவ‌ங்கினேன். பின்பு நேர்முக‌த் தேர்வுக்கு போகும் முன்பு வீட்டில் க‌ண்ணாடி பார்த்து எப்ப‌டியெல்லாம் பேச‌வேண்டும் என்று ப‌ழ‌கிக்கொண்டேன்.

சினிமாவில் ஐந்து நிமிட‌ங்க‌ளில் ப‌ண‌க்கார‌ராகும் ஹீரோ அல்ல‌வே நான். என‌வே முத‌லில் சில‌ நேர்முக‌த் தேர்வுக‌ளில் என‌க்குத் தோல்வியே கிடைத்த‌து. ஆனால் என்னாலும் ஆங்கில‌த்தில் பேச‌முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையை ம‌ட்டும் ஒவ்வொரு நேர்முக‌த் தேர்வும் கொடுக்க‌த் துவ‌ங்கிய‌து. என்னை தோல்வியுற‌ச் செய்த‌ அனைத்து க‌ம்பெனிக‌ளுக்கும் என‌து ந‌ன்றிக‌ள். சில‌ நாட்க‌ள் க‌ழித்து, "ப‌க‌வான் க‌ண்ணை தொற‌ந்துட்டான்" - வேலை கிடைத்த‌து.


இங்கிலீஷ் தெரியும்..............ஆனா American Accent.......

இரு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் டீம் மாறிய‌போது, அமெரிக்க‌ அண்ண‌ன்க‌ளோடும், அக்காக்க‌ளோடும் பேச‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். முத‌ல் நாள் Conferece Callல் ஒரு Trainer அக்காவுட‌ன் அள‌வ‌ளாவிய‌தில் ஒன்றுமே புரிய‌வில்லை. கிரேஸி மோக‌ன் கேட்டிருந்தால் க‌ண்டிப்பாக‌ "என்ன‌ க‌ண்றாவிடா இது" என்றிருப்பார். பின்பு எங்க‌ள் மேல் இர‌க்க‌ப்ப‌ட்ட‌ அந்த‌ Trainer அக்கா Communicatorரிலேயே முத‌ல் நாள் ட்ரெய்னிங்கை முடித்தார். என் மேல் என‌க்கே எரிச்ச‌ல் வ‌ர‌, ஆன‌து ஆக‌ட்டும் என்று, ம‌றுநாளிலிருந்து அவ‌ரை Callலிலேயே ட்ரெயினிங் த‌ருமாறு கேட்டுக்கொண்டோம். ஆர‌ம்ப‌த்தில் கொஞ்ச‌ம் சிர‌ம‌மாக‌த்தான் இருந்த‌து...

அமெரிக்க‌ ஆங்கில‌த்தை புரிந்துகொள்ள‌, த‌க்க‌ ச‌ம‌ய‌த்தில் என‌க்கு மிக‌வும் உத‌வியாய் இருந்த‌வ‌ர்க‌ள், Harrison Fordம், Bruce Willisம். ஆங்கில‌ப் ப‌ட‌ங்க‌ள் டிவிடி வாங்கி இர‌ண்டு முறை ச‌ப்டைட்டிலுட‌ன் பார்த்து, பின்பு ச‌ப்டைட்டில் இல்லாம‌ல் ஒரு முறை பார்த்து, அவ‌ர்க‌ள் பேசுவ‌தை புரிந்துகொள்ள‌ முய‌ற்சி செய்தேன். இந்த‌ முறை நிஜ‌மாக‌வே ப‌ல‌ன் அளித்த‌து. "ஹாய்டா மச்சி" "Hey Dude" ஆன‌து. "Friend", "Buddy" ஆனான். இன்ற‌ள‌வும் American Accentஐ சுல‌பமாக‌ க‌ற்றுக்கொள்ள‌ நான் என் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரைப்ப‌து, ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ளை முத‌ல் இர‌ண்டு முறை ச‌ப்டைட்டிலுட‌னும், பின்பு ச‌ப்டைட்டில் இல்லாம‌லும் பார்க்க‌ச் சொல்வ‌துதான். முத‌லிர‌ண்டு முறை ச‌ரியாக‌ க‌வ‌னித்திருந்தால், மூன்றாவ‌து முறை பார்க்கும்போது அவ‌ர்க‌ள் பேசுவ‌து க‌ண்டிப்பாக‌ புரியும். என்ன‌....சில‌ ச‌ம‌ய‌ம் கோப‌ம் கொள்ளும்போதோ, எரிச்ச‌ல் அடையும்போதோ அந்த‌ நான்கெழுத்து F*** வார்த்தை சர‌ள‌மாக‌ வ‌ந்து தொலைக்கிற‌து. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ இதை த‌விர்க்க‌ முய‌ன்றுகொண்டிருக்கிறேன்.

நீங்க‌ளாவ‌து.....

என்னுடைய‌ மொழி பிர‌ச்னைக்கு முக்கிய‌ கார‌ண‌ம், ப‌ள்ளியில் ப‌டிக்கும்போதே க‌ம்யூனிகேஷ‌ன் ஸ்கில்லை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ பாட‌த்திட்ட‌த்தில்‌ எந்த‌ வ‌ழியும் இல்லாத‌து. இப்போது நான் சொல்லி, த‌மிழ‌க‌ க‌ல்வி அமைச்ச‌ர் பாட‌த்திட்ட‌த்தில் அதை கொண்டுவ‌ர‌ப் போவ‌தும் இல்லை. அத‌னால் அதைப் ப‌ற்றி எழுதுவ‌து கால‌ விர‌ய‌ம் என்றே நினைக்கிறேன். இப்போதுள்ள‌ சூழ்நிலையில், த‌மிழ்நாட்டில் உள்ள‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் வேலைக்கு சேர‌வேண்டுமென்றால், யாராயிருந்தாலும், ஆங்கில‌ம் மிக‌ மிக‌ அவ‌சிய‌ம். த‌மிழ்நாட்டை தாண்டி வ‌ட‌ இந்தியாவிற்கு போகிறீர்க‌ளா? ஹிந்தி மிக‌ மிக‌. டெல்லியில் வேலை செய்யும்போது அலுவ‌ல‌க‌த்தில் ஆங்கில‌த்தை வைத்து ச‌மாளிக்க‌லாம். ஆனால் Chandni Chowk சென்று காய்க‌றி வாங்கும்போது Can I have 1 kg of potato and 1/2 kg of tomato என்று கேட்டால், ஒரு ஏலிய‌னை விட‌ அதிச‌ய‌ப் பொருளாக‌ பார்க்க‌ப்ப‌டுவீர்க‌ள்.

பிள்ளைக‌ளை க‌ம்யூனிகேஷ‌ன் ஸ்கில் கோர்ஸுக்கு அனுப்பிவிட்டு 'என் க‌ட‌மை முடிந்த‌து' என்று இருந்துவிடாதீர்க‌ள். தின‌மும் ஒரு ம‌ணி நேர‌ம் ஆங்கில‌த்திலேயே அவ‌ர்க‌ளுட‌ன் உரையாடுங்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு கோர்ஸ் ப‌டிப்ப‌து ஒரு க‌ட‌மை என்ப‌து மாறி, பெற்றோருக்கு ச‌ம‌மாக‌ நாமும் ஆங்கில‌த்தில் பேச‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ம் அதிக‌ரிக்கும். இது மெட்ரிகுலேஷ‌ன் மாண‌வ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ளுக்கு அல்ல‌, ஸ்டேட் போர்டில் ப‌டிக்கும் மாண‌வ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ளுக்கு. நானும் ஸ்டேட் போர்டுதான்.

இந்த‌ ப‌திவு வெறும் சுய‌த‌ம்ப‌ட்ட‌த்திற்காக‌ அல்ல‌. த‌ம்ப‌ட்ட‌ம் அடித்துக்கொள்ளும் அள‌விற்கு நான் எல்லாம் அறிந்த‌வ‌னும் அல்ல‌, இன்ற‌ள‌வும் நான் க‌ற்றுக்கொள்வ‌தை நிறுத்த‌வில்லை. சென்ற‌ வார‌ம் கூட‌, "Thank You" என்று சொல்லும்போது நாக்கு, வாய் மேலே ஒட்ட‌க்கூடாது, வாயின் ம‌த்தியிலேயே இருக்க‌வேண்டும் என்று ந‌ட்பிட‌ம் இருந்து க‌ற்றுக்கொண்டேன். ஆனால், வாயின் ம‌த்தியிலேயே நாக்கை வைத்து "ஹேங்க் யூ" என்றே இன்னும் உள‌றிக்கொண்டிருக்கிறேன் :)))

41 comments:

  1. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
     
     
    (Pls ignore if you get this mail already)

    ReplyDelete
  2. ரகு சார்,
    என்ன நினைவிருக்கா, ஹரீஷ் சாரோட ஃப்ரெண்டு. பீட்டரைப் பற்றி நல்லா எழுதியிருக்கீங்க.
    புது ப்ளாக் ஒண்ணு எழுத ஆரம்பிச்சிருக்கேன். நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் வந்துட்டு போங்க.

    http://www.feelheal.blogspot.com/

    நன்றி.

    ReplyDelete
  3. நல்ல கட்டுரைண்ணே..!

    ReplyDelete
  4. ஹ ஹ !!!! ரொம்ப சந்தோசமா இருக்கு !!! நானும் இப்படி தான் சரளமா ஆங்கிலம் பேசினேன் மற்றும் தெலுங்கும் ஹிந்தியும் சரளமா பேச கத்துகிட்டேன் , இதை பரிந்துரை செய்தப்போ பலர் சிரிச்சாங்க .... இப்போ உங்க பதிவை பார்த்ததும் ....... இந்த சுட்டியை என் நண்பர் மற்றும் நண்பிகளுக்கு அனுப்பிவிட்டேன்....

    ReplyDelete
  5. //தின‌மும் ஒரு ம‌ணி நேர‌ம் ஆங்கில‌த்திலேயே அவ‌ர்க‌ளுட‌ன் உரையாடுங்க‌ள். //

    Why this trouble boss?
    If everyone start speaking in English at home, this problem can be resolved easily.
    One generation later, there won't be any concern about lack of communication!

    தெரியாமத்தான் கேக்கறேன். தமிழ்நாட்டில் தமிழரிடம் ஆங்கிலத்தில்தான் பேசணுமா?

    ReplyDelete
  6. உண்மைதான் நண்பா படித்தல் மட்டும் போதாது உரையாடி பலகை வேண்டும்

    ReplyDelete
  7. தூள் மா பின்னிட்ட,

    இந்த f*** என்னைய விட்டும் போக மாட்டேன்குது

    ReplyDelete
  8. நல்ல பதிவு அருமை :)
    எல் கே ஜி - லிருந்து கல்லுரி வரை ஆங்கிலம் வழி முறை படித்த உங்களுக்கே இப்படின்னா , எங்கமாதிரி மாநகராட்சி பள்ளியில் படிச்சவங்க பத்தி நெனைச்சி பாருங்க !!? தினம் தினம் செத்து பொழைக்றோம் ..இதுல ரெண்டு வாட்டி USA (Onsite )போயிட்டு வந்துட்டேன் ...VISA Interview ல உயிர் போய் உயிர் வந்தது :) :) :)

    ReplyDelete
  9. இதே பிரச்சனை எனக்கு ஹிந்தி ரூபத்தில் வந்தது. ஒரு நாளில் நாம் எவ்வளவு சிந்திக்கிரோமோ அவ்வளவையும் ஹிந்தியில் சிந்தித்தேன். கொஞ்ச கொஞ்சமாக வழக்கில் சரி தவறு தெரிந்தது. திருத்திக்கொண்டேன். பிறகு மற்றவர்களிடம் தைரியமாக பேசினேன். வேற்றுமொழில் சிந்திக்கும் போது கூச்சம் இல்லை பயம் இல்லை. தவறை பற்றி கவலை இல்லை. சிறிது காலத்திற்கு பிறகு கனவு கூட ஹிந்தியில் வந்தது.

    ReplyDelete
  10. ரகு,

    வாழ்க டமில்..!

    //இன்ற‌ள‌வும் நான் என் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரைப்ப‌து, ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ளை முத‌ல் இர‌ண்டு முறை ச‌ப்டைட்டிலுட‌னும், பின்பு ச‌ப்டைட்டில் இல்லாம‌லும் பார்க்க‌ச் சொல்வ‌துதான்.//

    இன்னொரு ஆப்ஷனும் சேத்துக்கோங்க... மேஜர் சுந்தர்ராஜன் சார் நடிச்ச படங்களைப் பார்த்தா, அவரே ஒருமுறை ஆங்கிலத்திலும், அடுத்தமுறை அதே வார்த்தையை தமிழிலும் சொல்லித்தருவாரு... அவரு ஒரு ஆக்டி(ங்)வ் அகராதி(dictionary)... (ச்சும்மா)

    நான் 10th படிக்கும்வரை இந்த ஆங்கிலப் பிரச்சினையில் தவித்தேன். பிறகு, சில Girl Friends-டம்(friends only) பேச ஆரம்பித்ததும், ஆங்கிலம் பழகிக்கொண்டேன்...

    நல்ல ஆலோசனை கொடுத்திருக்கீங்க. பயனுள்ள பகிர்வு.

    -
    DREAMER

    ReplyDelete
  11. ஆஹா மிகவும் பயனுள்ள பாதுவு . அருமை நண்பரே .

    ReplyDelete
  12. ரகு என்னது போட்டோ எல்லாம் மாத்தியாச்சு!! இதான் நிஜ ரகுவா?

    கட்டுரை அருமை; கடைசியில் உள்ள Thank You மேட்டர் தான் குழப்பிடுச்சு. சொல்லி பாத்தேன் அது மாதிரி முடியலை :))

    ReplyDelete
  13. Mehar, Send your questionnaire to my e-mail ID. I shall do my best

    டாக்ட‌ர், இத‌ல்லாம் சொல்ல‌ணுமா, க‌ண்டிப்பா வ‌ரேன் :)

    ReplyDelete
  14. ந‌ன்றி ராஜு :)

    ந‌ன்றி ஆழிம‌ழை, ந‌ல்லா சொன்னீங்க‌, நானும் ஹிந்தி க‌த்துக்க‌ பட‌ங்க‌ள்தான் பாக்க‌றேன் :)

    ReplyDelete
  15. ந‌ன்றி அனானி, வீட்டுல‌ எல்லாரும் எப்ப‌வும் ஆங்கில‌ம் பேசினா அப்புற‌ம் யார்கிட்ட‌ங்க‌‌ த‌மிழ் பேச‌ற‌து?

    //தமிழ்நாட்டில் தமிழரிடம் ஆங்கிலத்தில்தான் பேசணுமா?//

    ந‌ல்ல கேள்விதான், ஆனா இத‌ யாருமே உண‌ர‌லியே :( அனானியா கேக்க‌ற‌த‌விட‌ உங்க‌‌ பெய‌ரை போட்டே கேக்க‌லாமே :)

    வாங்க‌ சைவ‌கொத்துப‌ரோட்டா :)

    ReplyDelete
  16. ச‌ரியாத்தான் சொன்னீங்க‌ சிவ‌ச‌ங்க‌ர், ந‌ன்றி :)

    வேண்டாம் Axleration, கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா விட்டுட‌ முய‌ற்சி ப‌ண்ணுங்க‌, வ‌ருகைக்கு ந‌ன்றி :)

    ReplyDelete
  17. ந‌ன்றி கோழிகோபாலு, வேற‌ வ‌ழியில்ல‌ங்க‌, நாம‌ளா த‌ட்டுத் த‌டுமாறி விழுந்து எழுந்தாதான் உண்டு.......அதென்ன‌ங்க‌ இப்ப‌டியொரு வித்தியாச‌மான‌ பேரு :)

    ந‌ன்றி Flutist, க‌ன‌வு கூட‌ ஹிந்தியிலா? வ‌ர்ற‌து யாருங்க‌.... ;)

    ReplyDelete
  18. வாங்க‌ ஹ‌ரீஷ், ப‌த்தாவ‌து ப‌டிக்கும்போதே கேர்ள் ஃப்ரெண்ட்ஸா?! ந‌ல்லா இருங்க‌ய்யா :))

    ந‌ன்றி ம‌ச‌க்க‌வுண்ட‌ன் :)

    ReplyDelete
  19. ந‌ன்றி ச‌ங்க‌ர் :)

    வாங்க‌ மோக‌ன், ஹி..ஹி..போட்டோ பாத்து ப‌யந்துட‌லியே?.....நானும் இன்னும் முய‌ற்சி ப‌ண்ணிட்டுதாங்க‌ இருக்கேன், "ஹாங்க் யூ"ன்னுதான் வ‌ருது :))

    ReplyDelete
  20. பீட்டர் பதிவு நல்லா இருக்கு,,,

    ReplyDelete
  21. என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

    மீண்டும் வருவான் பனித்துளி !

    ReplyDelete
  22. இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

    உணமைதான் ரகு, நம்மூரில் நிறைய ஸ்கூல்ஸ் அப்படிதான் இருக்கு.1st to 12th வரை ஆங்கிலவழி கல்வி பயின்றாலும் நீங்க சொல்லற மாதிரிதான் ஆங்கில சரளமா பேசுவதற்கு நிறைய பேருக்கு தடுமாற்றம் இருக்கு. இன்னொன்னும் நாம மறக்க கூடாது, தாய்மொழியின் accentக்கு பழக்கப்பட்டப்பின் இன்னொரு அந்நிய மொழியின் accent perfect ஆக பேச நிறைய பயிற்சி தேவைதான், அதை சரியா சொல்லி இருக்கிங்க.

    ஆனா என்ன கொடுமைனா... நம் நாட்டில் தான் இப்படி! இங்கு ப்ரான்ஸில் வேலைக்கான இன்டர்வியூ, 90% அவர்கள் தாய் மொழியில் தான் இருக்கும். ஏதோ மிக சில வேலைகளுக்குதான் ஆங்கிலமோ அல்லது வேறுமொழியோ தேவைப்படுகிறது.

    ReplyDelete
  23. Thanks என்பதற்கு சரியான ஃபொனிடிக் சவுண்ட் dzanks. ட்ரை பண்ணுங்க, ஒரு நாள் நிச்சயமா சரியான accent வரும்!

    (என்ன ரகு, போட்டோ எல்லாம் மாத்தியாச்சு!)

    ReplyDelete
  24. ரகு என்னோட தொடர் பதிவுக்கு உங்களை அழைத்திருக்கிறேன்,
    வலைப்பூ பாருங்கள், thodarungal

    ReplyDelete
  25. ட்ரை பண்றேன் சார்.....
    sample...

    r u inside the profile photo...?

    கரெக்ட்ஆ....

    ReplyDelete
  26. ந‌ன்றி நாடோடி :)

    வாங்க‌ ச‌ங்க‌ர், இந்த‌ க‌மெண்ட்ட‌ நிறைய‌ ப‌திவுக‌ள்ல‌ பாக்க‌றேன், இத‌ ஒரு டெம்ப்ளேட்டாவே மாத்திட்டீங்க‌ போல‌ ;)

    ReplyDelete
  27. ந‌ன்றி ப்ரியா, ம்ம்...க‌ரெக்டாதான் சொல்றிங்க‌, இப்ப‌ல்லாம் மெட்ரிக் ப‌ள்ளிக‌ளில் க‌ண்டிப்பா இங்கிலீஷ்ல‌தான் பேச‌ணும்னு ரூல் இருக்கு. ஆனா ஸ்டேட் போர்டுதான் இத‌ப்ப‌த்தி க‌ண்டுக்க‌ற‌ மாதிரியே தெரிய‌ல‌.

    90% வேலை பிரெஞ்சுலேன்னா, வெளிநாடுக‌ள் போகும்போது எப்ப‌டி சமாளிக்க‌றாங்க‌?! ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்குமே!

    //Thanks என்பதற்கு சரியான ஃபொனிடிக் சவுண்ட் dzanks//

    இதென்ன‌ங்க‌ புதுசா?! முய‌ற்சி ப‌ண்றேன், ரொம்ப‌ dzanksங்க‌

    //என்ன ரகு, போட்டோ எல்லாம் மாத்தியாச்சு//

    எத்த‌னை நாள்தாங்க‌ காமெடி பீஸாவே இருக்க‌ற‌து, எல்லாரையும் கொஞ்ச‌ம் ப‌ய‌முறுத்த‌லாமேன்னுதான் மாத்திட்டேன் :)

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. ந‌ன்றி செல்லா, சொல்லிட்டீங்க‌ள்ல‌, க‌ண்டிப்பா எழுத‌றேன் :)

    வாங்க‌ ஜெட்லி, What is your name மாதிரி க‌ஷ்ட‌மான‌ கேள்விக‌ள் கேளுங்க‌, சொல்றேன். இந்த‌ மாதிரி ஈஸியான‌ கேள்விக‌ள்லாம் எதுக்கு? ச‌ரி இருந்தாலும்‌ சொல்றேன், No, I'm outside the profile photo now ஓகேவா?....:))

    ReplyDelete
  30. ஒருவ‌ர் மேலும் வ‌ள‌ர‌ முடியாம‌ல் போவ‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் lack of communication skill. இத‌னால் நானும் ப‌ல‌ தோல்விக‌ளை ச‌ந்தித்திருக்கிறேன் //
    இந்த அவலம் நம் நாட்டில் மட்டும் தான் ரகு.

    சினிமாவில் ஐந்து நிமிட‌ங்க‌ளில் ப‌ண‌க்கார‌ராகும் ஹீரோ அல்ல‌வே நான். என‌வே முத‌லில் சில‌ நேர்முக‌த் தேர்வுக‌ளில் என‌க்குத் தோல்வியே கிடைத்த‌து. ஆனால் என்னாலும் ஆங்கில‌த்தில் பேச‌முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையை ம‌ட்டும் ஒவ்வொரு நேர்முக‌த் தேர்வும் கொடுக்க‌த் துவ‌ங்கிய‌து. என்னை தோல்வியுற‌ச் செய்த‌ அனைத்து க‌ம்பெனிக‌ளுக்கும் என‌து ந‌ன்றிக‌ள். //
    அழகாகத் தொடங்கப்பட்டிருக்கு இந்தப் பத்தி. உங்கள் முயற்சிக்கு என் சல்யூட்.

    அமெரிக்க‌ அண்ண‌ன்க‌ளோடும், அக்காக்க‌ளோடும் பேச‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். //
    அமெரிக்கா பொண்ணுங்கள மட்டும் அக்காவா சொல்லிக்கலாமா.... :)

    ஆங்கில‌ப் ப‌ட‌ங்க‌ள் டிவிடி வாங்கி இர‌ண்டு முறை ச‌ப்டைட்டிலுட‌ன் பார்த்து, பின்பு ச‌ப்டைட்டில் இல்லாம‌ல் ஒரு முறை பார்த்து, அவ‌ர்க‌ள் பேசுவ‌தை புரிந்துகொள்ள‌ முய‌ற்சி செய்தேன். //
    தொடர்ந்த உங்கள் முயற்சிகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    டெல்லியில் வேலை செய்யும்போது அலுவ‌ல‌க‌த்தில் ஆங்கில‌த்தை வைத்து ச‌மாளிக்க‌லாம். ஆனால் Chandni Chowk சென்று காய்க‌றி வாங்கும்போது Can I have 1 kg of potato and 1/2 kg of tomato என்று கேட்டால், ஒரு ஏலிய‌னை விட‌ அதிச‌ய‌ப் பொருளாக‌ பார்க்க‌ப்ப‌டுவீர்க‌ள். //
    ஹாஹாஹா... ரொம்ப சரியா சொன்னீங்க. சாந்தினி சோக் வேண்டாம். டெல்லியின் மெயின் ஏரியாவிலும் இப்படித்தான். நாம் நம் மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட வட இந்தியர்கள் அவர்கள் மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம். வெளிநாட்டில் படித்து வேலை பார்த்து வந்தவர்கள் கூட அலுவலகத்தில் ஹிந்தியில் பேசவே விரும்புகிறார்கள். நம்மவர்கள் அப்படி அல்லவே.

    வாயின் ம‌த்தியிலேயே நாக்கை வைத்து "ஹேங்க் யூ" என்றே இன்னும் உள‌றிக்கொண்டிருக்கிறேன் //
    எதுக்கு இந்தக் கஷ்டமெல்லாம்... “நன்றி” சொல்லுங்க. ஆங் அப்படித் தான். என்னா அழகா சொல்றீங்க. அந்த ”ஃபேங்க் யூ” (ஹிந்தியில் உன்னைத் தூக்கி எறிந்து விடுவேன் என்னும் பொருள்) வெல்லாம் வேண்டாம்பா. :)

    ReplyDelete
  31. //இந்த அவலம் நம் நாட்டில் மட்டும் தான் ரகு//

    வாங்க‌ விக்கி, பார‌த் மாதா கி ஜே! வேறென்ன‌ சொல்ல‌!

    //அமெரிக்கா பொண்ணுங்கள மட்டும் அக்காவா சொல்லிக்கலாமா//

    ச‌ரி இனி அமெரிக்க‌ன் ப்யூட்டின்னே சொல்றேன் :))

    //வெளிநாட்டில் படித்து வேலை பார்த்து வந்தவர்கள் கூட அலுவலகத்தில் ஹிந்தியில் பேசவே விரும்புகிறார்கள். நம்மவர்கள் அப்படி அல்லவே//

    ஒத்துக்க‌றேன், சீன் போடுற‌துல‌ ந‌ம்மாளுங்க‌ள‌ மிஞ்ச‌ முடியாதுதான்

    ஹேங்க் யூ.....ச்சே...ஃபேங்க் யூ..........ர்ர்ர்ர்...ந‌ன்றி விக்கி ;)

    ReplyDelete
  32. எனக்கும் இந்த அனுபவம் இருக்கு.அவசியமான பதிவு

    ReplyDelete
  33. வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ந‌ன்றி மின்ன‌ல்

    ReplyDelete
  34. சூப்பர்ணா..

    u missed onething..In this tech era,wen u chat wit gals via sms u hav more time to think and type in english..Indeed it helped me a lot to improve my comm. skill..

    ReplyDelete
  35. ந‌ன்றி வெற்றி, எப்ப‌டியோ ஒண்ணு, இம்ப்ரூவ் ஆனா ச‌ரி.... நான் க‌ம்யூனிகேஷ‌ன் ஸ்கில்லை சொன்னேன் ;))

    ReplyDelete
  36. அதே அனானிMarch 30, 2010 at 9:39 PM

    //ந‌ன்றி அனானி, வீட்டுல‌ எல்லாரும் எப்ப‌வும் ஆங்கில‌ம் பேசினா அப்புற‌ம் யார்கிட்ட‌ங்க‌‌ த‌மிழ் பேச‌ற‌து?//

    ஒத்துக்கிறோமோ இல்லையோ, அந்த நிலையை நோக்கித்தானே தமிழகம் வீறுநடை போடுகிறது?

    நமது பெற்றோர்களுக்கு பீட்டர் அவ்வளவா வராது. ஆனா நம் குழந்தைகளுக்கு நன்றாக வருமே.

    அலுவல் நிமித்தம் அடிக்கடி சென்னையில் (business class) ஹோட்டல்களில் தங்குவதுண்டு. எனக்கும் கவுண்ட்டருக்கு பின்னால் இருப்பவருக்கும் தமிழ் தெரிந்தாலும் புழங்கும் lingua franca என்னவோ பீட்டர்தான். இதே நிலமைதான் தனியார் வங்கிகளிலும்.

    இந்நிலை வீட்டிற்குள் வர எவ்வளவு காலம் ஆகும்?

    ReplyDelete
  37. ந‌ன்றி அனானி

    ந‌ன்றி இர‌சிகை

    ReplyDelete
  38. you see

    i like

    this article

    very much

    hey am also spoken in english..

    supera eruntchu thaliva....

    v.v.s group
    complan surya

    ReplyDelete