Friday, April 02, 2010
சங்கம்?....நான் வரமாட்டேன்!
"நீங்க வர்றீங்களா?" என்றார் சக பதிவர்/நண்பர்.
"எப்போ?" என்றேன்.
"சனிக்கிழமை சாயந்தரம்"
"இல்லங்க, நிறைய பேர் வருவாங்க, எனக்கு ஜென்ரலா கூட்டம்னாலே......அதுவுமில்லாம ஐபிஎல் வேற பார்க்கணுமே"
"ஐபிஎல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்......நிறைய பேர் வரட்டுங்க...அதனால என்ன இப்போ? இப்படிலாம் இருந்தீங்கன்னா வேலைக்காவமாட்டீங்க"
"பாஸ், உண்மையா சொல்லுங்க, இது இப்ப கண்டிப்பா அவசியமா?"
"என்ன இப்படி கேக்கறீங்க? நம்ம வெயிட்ட காட்டவேணாம்?"
"அதுக்கு வெயிட் மிஷின்ல நின்னு, வர்ற கார்டை ஃபோட்டோ எடுத்து பதிவுல போடுங்க"
"இதுக்குலாம் ஒண்ணும் குறைச்சல் இல்ல, ஆனா வாங்கன்னா மட்டும், கூட்டம், ஐபிஎல் ஆட்டம்னு சீன் போடுங்க"
"யார் யார் வர்றது?"
சில மூத்த்த்த்த்த பதிவர்களின் பெயரைச் சொன்னார்.
"ஐயையோ, அவங்கள்லாமா வராங்க?"
"ஏன் அவங்க வந்தா உங்களுக்கென்ன ப்ராப்ளம்?"
"இல்ல, நான் கொஞ்சம் ஷை டைப். அவங்கள்லாம் மூத்த பதிவர்கள். நான் இப்பதான் கொஞ்ச நாளா ஏதோ கிறுக்கிட்டிருக்கேன்"
"அதனால என்ன?"
"அவங்கள்லாம் வந்தாங்கன்னா எனக்கு ரொம்பவே கூச்சமா இருக்கும். சகஜமா பேச முடியாது"
"இதெல்லாம் ஓவர் பாஸ், இப்போ என்கிட்ட எப்படி பேசறீங்க?"
"உங்களோட ஃபர்ஸ்ட் டைம் பேசும்போதும் கொஞ்சம் நெர்வஸாதான் இருந்தேன். அப்புறம் கொஞ்சம் பேச பேசதான் கேஷுவலா பேச ஆரம்பிச்சேன்"
"இந்த தனுஷ் டயலாகுக்குலாம் ஒண்ணும் குறைச்சல் இல்ல"
"ஹி..ஹி...கோச்சுக்காதீங்க, நீங்க போயிட்டு வாங்க"
"ஏன் இப்படி ஒதுங்கி ஒதுங்கி போறீங்க? வந்து எல்லாரோடும் மிங்கிள் ஆகுங்க"
"வரலாம்.......ஆனா...."
"சும்மா கூச்சம் அது இதுன்னு மொக்கைய போடாதீங்க. இப்படி கூச்சப்படறீங்களே, நாளைக்கு கல்யாணம் ஆச்சுன்னா வொய்ஃப்கிட்ட பேசுவீங்களா? அட்லீஸ்ட் ஆஃபிஸ்லயாவது லேடீஸ்கிட்ட பேசுவீங்களா?"
"ஹலோ, எனக்கு ரொம்பவும் புடிச்சது காரம் போட்ட வேர்க்'கடலை'தான்"
"ஓ! அப்போ ஃபீமேல் ப்ளாகர்ஸ் வந்தா வருவீங்க இல்ல?"
"தல, ஏன் இப்படி? அவங்கள்லாம் நிறைய பேரு மேரீட், அவங்ககிட்ட கடலை போடுறதுலாம் தப்பு இல்ல?"
"இதெல்லாம் வக்கணையா பேசுங்க...."
"ஹி...ஹி..."
"சரி இந்த பேச்சுலாம் விடுங்க......ஓவர் சீன் வேணாம், சனிக்கிழமை நாம போறோம்"
"ஐயோ, சீன்லாம் இல்லங்க.....(சிறிது யோசனைக்குப் பிறகு) ம்ம்ம்.....சரி.....ஓகே"
"அப்பாடா! எவ்வளோ போராட வேண்டியதா இருக்குது உங்ககிட்ட....சரி, லேட் பண்ணிடாதீங்க, ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி கரெக்ட் டைமுக்கு வந்துடுங்க"
"ஷ்யூர்....ஹலோ...முதல்ல எங்க வரணும்னு சொல்லுங்க"
"ஓ ஸாரி......சங்கம்"
"சங்கமா?"
"ஆமா. சங்கத்துலதான் 25 டிக்கெட் புக் பண்ணியிருக்கேன். நீங்கதான் ஒரு பதிவுல தமன்னா புடிக்கும்னு எழுதியிருந்தீங்களே. அதான் 'பையா' போகலாம்னு டிசைட் பண்ணவுடனே, உங்கள கண்டிப்பா கூப்பிடணும்னு நினைச்சேன்."
"பாஸ், அதுக்காக சங்கமா? சத்யம், ஐநாக்ஸ்னா பரவாயில்ல. அட, திருவான்மியூர் தியாகராஜான்னா கூட ஓகே. சங்கம்லாம் இங்கயிருந்து அநியாயத்துக்கு தூரம். படம் பாத்துட்டு வர்றதுக்கு நைட் ஆயிடும். லேட்டா வந்து ஹவுஸ்ஓனரை வேற டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கும். என்னை விட்ருங்க, நான் வரலை..."
"என்ன கடைசியில இப்படி சொல்றீங்க? தமன்னா பாஸ் த..ம..ன்..னா! வானவில் வரையறவரும் வராரு"
"ஹும்...பரவால்ல தல, என்ன பண்றது...ஐ'ம் ரியலி ஸாரி....தப்பா நினைச்சுக்காதீங்க"
"இவ்ளோ சொல்றேன்......சரி, அப்புறம் உங்க இஷ்டம்"
******************************************************
சங்கம் என்றவுடன் வேறு ஒரு விஷயத்தைப் பற்றி எழுதியிருப்பேன் என்றெண்ணி வந்திருந்தால்....ஹி..ஹி....மன்னியுங்கள்......யு ஆர் இன் த ராங் ப்ளேஸ். அதுதான் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொருவரும் கும்மு கும்மு என்று கும்முகிறார்களே. நான் வேறு எதற்கு? பை த வே, 'நம்' தினத்தை ஏப்ரல் 1 மட்டுமல்ல, 2 மற்றும் 3ம் தேதி வரை கூட கொண்டாடலாமாம். அதற்காகத்தான் இந்த பதிவு ;))
Labels:
சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
ரைட்டு, இந்த மாதம்
ReplyDeleteமுழுவதும் கொண்டாடலாம் :))
m..ரைட்டு.. ரைட்டு..
ReplyDelete2 ம் தேதி முதல் ஆள் நான் தான்.
ReplyDeleteநல்ல twist...கலக்கிட்டீங்க போங்க...
ReplyDeleteOK OK Allright!! Cannot guess this is for April fool :))
ReplyDelete//'நம்' தினத்தை ஏப்ரல் 1 மட்டுமல்ல, 2 மற்றும் 3ம் தேதி வரை கூட கொண்டாடலாமாம்.//........ என்ன ரகு இது?
ReplyDelete//'நம்'//நாமே நம்ம இப்படி சொல்லலாமா? சரி விடுங்க வெறும் மூணு நாளோட நிறுத்திட்டீங்களே!
நாங்கெல்லாம் எப்பவும் அலர்ட்டு:)
நன்றி சைவகொத்துப்பரோட்டா, கொண்டாடிடுவோம் ;))
ReplyDeleteநன்றி கேபிள் சங்கர்
நன்றி மின்னல், போணி நீங்கதானா? :))
நன்றி அனாமிகா
நன்றி தலைவன்
ReplyDeleteநன்றி மோகன்
நன்றி ப்ரியா, சண்டைக்கு வந்துட்டா? அதான் ஒரு சேஃப்டிக்காக ;)
//நாங்கெல்லாம் எப்பவும் அலர்ட்டு// நம்பிட்டேன் :)
ஆஹா , எல்லாம் ஒரு குரூப்பா தான்யா கிளம்பிருக்கானுக, அண்ணா எங்க ஊர்ல கூட ஒரு சங்கம் இருக்குண்ணா.
ReplyDeleteநன்றி அமைச்சரே, அப்புறம் என்ன, சங்கத்துக்கு அமைச்சரா களத்துல இறங்கவேண்டியதுதானே ;)
ReplyDeleteமெட்ராஸ் வெய்யில்ல ரொம்ப தான் மண்டை காஞ்சு போய் அலையுறீங்க.
ReplyDeleteவாங்க விக்கி, ஹி..ஹி..கொஞ்சம் ;)
ReplyDelete:)
ReplyDeletenaan yaemaanthutten!
april 9th........
நன்றி இரசிகை, பரவால்லங்க ஏப்ரல் மாதம் முழுவதுமே கொண்டாடுவோம்..ஹி..ஹி..
ReplyDelete