Thursday, March 11, 2010

முள்ள‌ம்ப‌ன்றித் த‌லைய‌ன் நான்


ஏலே கேசவா ஏன்யா வாரதுக்கு இம்புட்டு நேரம்...


ஹாய் கேத்ரல். ஹவ் ஆர் யூ.

கொளுத்துற வெயில்ல இவ்ளோ முடியை வெச்சுக்கிட்டு பாடாபடுது பயபுள்ள. நல்லா ஒட்ட கட் பண்ணிப்புடுப்பா

லேட்ட‌ஸ்ட் ஸ்டைல்ல‌ க‌ட் ப‌ண்ணுங்க‌, மொத்தமா எல்லாம் கட் பண்ண வேண்டாம். அங்கங்கே அப்படி அப்படி இருந்தாத்தான் லுக்கா இருக்கும். என் கேர்ள் ஃப்ரெண்டுக்குப் பிடிக்கணும்

யப்பா... என்ன வெயில். இதுல ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது. ஆகாசவாணி செய்தி நேரமாச்சே, அந்த ரேடியோவ‌ த‌ட்டுப்பா

பாஸ், இட்ஸ் டூ ஹாட்......ஏஸில டெம்பரேட்சர் கொஞ்சம் கம்மி பண்ணுங்களேன், ஹேய், இந்த ராப் மியூஸிக் நல்லா இருக்குங்க. என்ன ஆல்பம்‌?


ம்..மேஸ்திரிகிட்ட‌ சொல்லியாச்சு, சொசைட்டில‌ லோன் அப்ளை ப‌ண்ணியிருக்கேன்பா, அந்த‌ அமெள‌ண்ட் வ‌ந்தாத்தான் க‌ட‌கால் எடுக்க‌ற‌துக்கே ஆர‌ம்பிக்க‌ணும்

வேற‌ ஜாப் பாத்துட்டிருக்கேன், ஃபினான்ஷிய‌லா செட்டில் ஆக‌ணும், அதுக்க‌ப்புற‌ம்தான் பாஸ் க‌ல்யாண‌ம்லாம்

என்ன‌ப்பா நீ.......பின்னாடிலாம் அப்ப‌டியே விட்டு வெச்சிருக்கியே, இன்னும் கொஞ்ச‌ம் ஒட்ட‌ப்புடி. ப‌ய‌ இன்னும் ரெண்டு வார‌த்துக்கு சீப்பையே எடுக்க‌க்கூடாது

ரொம்ப‌ ஷார்ட்லாம் வேணாம், கொஞ்ச‌ம் மீடிய‌மாவே இருக்க‌ட்டும். சீப்புக்கு கொஞ்ச‌ம் வேலை வைங்க‌ த‌லைவா!

நாலு ரூபாவா? என்ன‌ப்பா, திடீர்னு ரேட்டு அதிகமாக்கிட்ட!

எய்ட்டி? கூல்.........ப‌ட் என்கிட்ட‌ ஹ‌ண்ட்ர‌டாதான் இருக்கு, பர‌வால்ல‌, பேல‌ன்ஸ் நெக்ஸ்ட் டைம் வ‌ரும்போது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.



வீட்டிற்கு வ‌ந்த‌பின்.....

ம்மா, என் த‌லைய‌ பாரும்மா :((

(அப்பாவிட‌ம் கோப‌மாக‌) என்ன‌ங்க‌ இது, த‌லைய‌ இப்ப‌டி குச்சி குச்சியா, முள்ள‌ம்ப‌ன்றித் த‌லைய‌னாட்ட‌ம் ஆக்கிவெச்சிருக்கிங்க‌? கொஞ்ச‌ம் திட்ட‌மா வெட்ட‌ சொல்ல‌க்கூடாது?

ஹாய் மாம், எப்ப‌டியிருக்கு நியூ ஹேர் ஸ்டைல்?!

(என்னிட‌ம் பாச‌மாக‌) என்ன‌டா‌ இது, த‌லைய‌ இப்ப‌டி குச்சி குச்சியா, முள்ள‌ம்ப‌ன்றித் த‌லைய‌னாட்ட‌ம் ஆக்கிவெச்சுருக்க‌? கொஞ்ச‌ம் திட்ட‌மா வெட்ட‌ சொல்ல‌க்கூடாது‌?

(அப்போ அப்பா) ஏய், இதுதாண்டி இப்ப‌ பேஸ‌ன், பேரு ச‌ம்ம‌ர் க‌ட்டிங்!

(இப்போ நான்) ம்மா, இதுதான்மா இப்ப‌ ஃபேஷ‌ன், பேரு ஸ்பைக் க‌ட்டிங்!


டிஸ்கி: இவ‌ர் எழுதிய‌தைப் பார்த்து இதுபோல் நாமும் எழுத‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் தோன்றிய‌பின் அவ‌ரிட‌ம் முறையான‌ அனும‌தி பெற்ற‌ பின்பே எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவு இது. அத‌னால் "நீ காப்பிய‌டித்துவிட்டாய், இது பெருங்குற்ற‌ம்" என்று கூறி, என் மேல் காபிபோஸா (COFEPOSA) ச‌ட்ட‌ப்ப‌டி வ‌ழ‌க்கு தொட‌ர‌ முய‌ற்சிப்ப‌வ‌ர்க‌ளின் வீட்டுக்கு, 'ஜெய‌ம்' ராஜா இய‌க்கிய‌ ப‌ட‌ங்க‌ளின் டிவிடிக்க‌ள் த‌ய‌வு தாட்ச‌ண்ய‌மின்றி அனுப்பிவைக்க‌ப்ப‌டும்.

26 comments:

  1. எங்கள் தலை அஜித் ஹேர்ஸ்டைலை முள்ளம்பன்றி
    என்று போட்டோவை போட்ட ரகுவை கண்டிக்கிறோம்....
    ரகுவுக்கு ராஜா,ரெட்,ஆஞ்சநேயா போன்ற வெற்றி படங்களின்
    டி.வி.டி.களை பார்சல் பண்ணி அனுப்புமாறு அனைவரையும்
    கேட்டு கொள்கிறேன்....!!

    ReplyDelete
  2. கலக்கல் ரகு, கடைசில டிஸ்கியில போட்ட டி.வி.டி குண்ட நினைச்சாதான் பீதி கிளம்புது:))

    ReplyDelete
  3. நல்லாதேன் முடி வெட்டிகிறீக வாழ்த்துக்கள்

    டிஸ்கியில் இருக்கும் அதுகலையெல்லாம் அனுபிராதீகையா..//

    வாங்க வாங்க..

    ReplyDelete
  4. ம் என் பையன் கூட நான் ஒன்று சொல்ல தானாக ஒன்று வெட்டி வருவான் கேட்டால் லேட்டஸ்ட் ஸ்டைல் :)

    ReplyDelete
  5. பதிவு வழக்கம் போல நல்லாருக்குண்ணே.


    ஆனா,ஜெயம் ராஜாவை ஏன் ஓட்றீங்க..? அவர் எடுத்த எல்லாமே தெலுங்கு ரீமேக்ன்னாலும் மக்களால் ஹிட் செய்யப்பட்டதுதானே..!
    ஒன்னும் புரியல..என்னமோ போங்கண்ணே.

    ReplyDelete
  6. முடி வெட்டி இருக்குற ஸடைல் நல்லா தான் இருக்கு

    ReplyDelete
  7. அருமை...அருமை..அருமை...

    ReplyDelete
  8. விக்னேஸ்வரி முன்னாடியே எழுதியிருந்தாக என்றாலும் கூட உங்களுடைய இடுகையை தான் நான் முதலில் படிச்சேன்..

    ReplyDelete
  9. //ச‌ட்ட‌ப்ப‌டி வ‌ழ‌க்கு தொட‌ர‌ முய‌ற்சிப்ப‌வ‌ர்க‌ளின் வீட்டுக்கு, 'ஜெய‌ம்' ராஜா இய‌க்கிய‌ ப‌ட‌ங்க‌ளின் டிவிடிக்க‌ள் த‌ய‌வு தாட்ச‌ண்ய‌மின்றி அனுப்பிவைக்க‌ப்ப‌டும்//.....தமிழ்படத்தில் வரும் நாட்டாமையின் தீர்ப்பு மாதிரி இருக்கு!ஆனா, ஜெயம் ராஜாவின் படங்களுக்கு என்ன? ரீமேக் படங்களுக்காவா?

    ReplyDelete
  10. //ரகுவுக்கு ராஜா,ரெட்,ஆஞ்சநேயா போன்ற வெற்றி படங்களின் டி.வி.டி.களை பார்சல் பண்ணி அனுப்புமாறு//

    ஐயையோ ஜெட்லி, ஏன் இந்த‌ ம‌ர்ட‌ர் வெறி? சொன்னீங்க‌ன்னா ப‌ட‌த்த‌ மாத்திட‌றேன். அத‌விட்டுபுட்டு, ஓ மை காட், நினைச்சாலே உட‌ம்பெல்லாம் ப‌த‌றுது, நீங்க‌ எப்ப‌டித்தான் 'த‌ம்பிக்கு இந்த‌ ஊரா அந்த‌ ஊரா'ன்னுலாம் கே(பா)க்குறீங்க‌ளோ?... :))

    ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, ஹும் அந்த‌ ப‌ய‌ம் இருக்க‌ட்டும்... :))

    ReplyDelete
  11. ஹாஹ்ஹா, ப‌ய‌ப்ப‌டாதிங்க‌ ம‌லிக்கா, ந‌ல்லா வெட்டியிருக்கேன்னு சொன்ன‌தால‌ த‌ப்பிச்சிட்டீங்க‌, அதுக்காக‌வே அனுப்ப‌மாட்டேன்...வ‌ருகைக்கு ந‌ன்றி :)

    ந‌ன்றி ஆண்டாள், விடுங்க‌ வ‌ள‌ர்ற‌ புள்ளைங்க‌ அப்ப‌டிதான் இருக்கும் :)

    ReplyDelete
  12. ந‌ன்றி ராஜு, 'அண்ணே'வா? ர‌குன்னே சொல்ல‌லாம்ங்க‌, நான் உங்க‌ளில் ஒருவ‌ன், ரொம்ப‌வே சாதார‌ணமான‌வ‌ன், எழைக‌ளுக்காக‌, இந்த‌ ச‌மூக‌த்துக்காக‌....ச‌ரி ச‌ரி..நிறுத்திக்க‌றேன்.. :))

    //அவர் எடுத்த எல்லாமே தெலுங்கு ரீமேக்ன்னாலும் மக்களால் ஹிட் செய்யப்பட்டதுதானே//

    நீங்க‌ளே ப‌திலும் சொல்லிட்டீங்க‌...அவ‌ர் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ள் ம‌க்க‌ளால் ஹிட் செய்ய‌ப்ப‌ட்ட‌துன்னாலும், எல்லாமே தெலுங்கு ரீமேக்தானே...லாஜிக்..லாஜிக்.. :))

    ந‌ன்றி சாருஸ்ரீராஜ், அஜித்துக்கு சொல்றீங்க‌ளா? :))

    ReplyDelete
  13. ந‌ன்றி ட‌க்கால்டி, க‌ண்ணு க‌ல‌ங்குது ராசா! :)

    ந‌ன்றி ப்ரியா, இந்த‌ ப‌திவு ஹிட்டானாலும் (ஹி..ஹி..சும்மா சொல்லிக்க‌றேனே) விக்னேஷ்வ‌ரி எழுதின‌தை‌ பாத்து காப்பி அடிச்ச‌துதானே. அதுமாதிரி 'ஜெய‌ம்' ராஜா ப‌ட‌ங்க‌ள் ஹிட்டானாலும் எல்லாமே தெலுங்குல‌ மாட்லாடுன‌து இல்லியா, அதுக்காக‌... :)

    ReplyDelete
  14. ஆஹா!
    அவசரப்பட்டு வந்துட்டோமோ !

    ReplyDelete
  15. //விக்னேஷ்வ‌ரி எழுதின‌தை‌ பாத்து காப்பி அடிச்ச‌துதானே. அதுமாதிரி 'ஜெய‌ம்' ராஜா ப‌ட‌ங்க‌ள் ஹிட்டானாலும் எல்லாமே தெலுங்குல‌ மாட்லாடுன‌து இல்லியா, அதுக்காக‌... :)//.......ஆஹா, என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை:-)

    ReplyDelete
  16. கடைசியா போட்டிருக்குற படம் மாதிரியா ஹேர்கட் பண்ணிட்டு வந்தீங்க. அய்யோ, பாவம் அம்மா.

    ReplyDelete
  17. ஏன் RDX அந்நிய‌ன், என்ன‌ அவ‌ச‌ர‌ம், புரிய‌ல‌

    ReplyDelete
  18. ந‌ன்றி ப்ரியா, ஹி..ஹி..என்ன‌ங்க‌ ப‌ண்ற‌து, அதெல்லாம் தானா வ‌ருது :))

    ந‌ன்றி விக்கி, பொறாமைப்ப‌டாதீங்க‌, வேணும்னா நீங்க‌ளும் இந்த‌ ஹேர்ஸ்டைல் ட்ரை ப‌ண்ணி பாருங்க‌ளேன்... :))

    ReplyDelete
  19. ஆஜர் போட்டுக்கறேன். நான் ரொம்ப லேட்டு. இனி எதாச்சும் சொன்னா எடுபடாது. அப்பறமா வறேனுங்க

    ReplyDelete
  20. ந‌ன்றி அண்ணாம‌லையான், காமெடியா?!

    ந‌ன்றி ம‌ச‌க்க‌வுண்ட‌ன், அட‌ ஏதாச்சும் சொல்லுங்க‌, எடுப‌டுமா, ப‌டாதான்னு சொல்றேன் :)

    ReplyDelete
  21. ரகு..!
    உங்க டிஸ்ப்ளே ஃபோட்டோவைத்தான் மாத்திட்டீங்கன்னு நினைச்சேன். ஆனா, நீங்க ஹேர்கட்டிங்கையும் மாத்திட்டீங்க போலிருக்கே..! எனிவேஸ், வர்றது சம்மர்தான் என்பதால் கட்டிங் அருமையா வந்திருக்கு..!

    -
    DREAMER

    ReplyDelete
  22. //கட்டிங் அருமையா வந்திருக்கு//

    ந‌ன்றி ஹ‌ரீஷ், ஹேர் க‌ட்டிங்னு சொல்ல‌க்கூடாதா, வெறும் க‌ட்டிங்னு சொன்னா ந‌ம்ம‌ள‌ மாதிரி குழ‌ந்தைங்க‌ள‌ த‌ப்பால்ல‌ நினைப்பாங்க‌ :)))

    ReplyDelete
  23. அருமையா எழுதியிருக்கிறீங்க............
    பிடிச்சிருக்கு....

    ReplyDelete
  24. ந‌ன்றி விடிவெள்ளி

    ReplyDelete