நான் சிறுவயதில் வளர்ந்த சூழலே பெண்கள் நிறைந்ததுதான். அதனால் பெண்கள் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை - கமல்ஹாசன்.
கல்லூரியில் படிக்கும்போது, எங்கள் கணிணி பிரிவு தலைவரை பற்றி பெருமையாக குறிப்பிடுகையில் என் நண்பன் ஒரு முறை சொன்னான், "அவருக்கு பொண்ணுங்கன்னாலே புடிக்காதுடா". நான் பதிலுக்கு கேட்டேன், "அப்ப அவரு என்ன இன்னொரு ஆம்பளையை கல்யாணம் பண்ணிப்பாரா?". பெற்றெடுக்க, வளர்க்க, மணம் புரிய, இவன் ஆண்தான் என சமூகத்துக்கு நிரூபிக்கும் பொருட்டு ஒரு பிள்ளை பெற்றுக்கொடுக்க, நோயுற்று படுக்கையில் விழும்போது கவனித்துக் கொள்ள என ஒரு ஆணுக்கு பெண், பிறப்பு முதல் இறப்பு வரை தேவைப்படுகிறாள்.
எனக்கு பிடித்த பெண்கள் என்று சொல்லும்போது என் அம்மா, பாட்டி, அன்னை தெரஸா, கிரண்பேடி, சோனியா காந்தி என்று கண்டிப்பாக சீன் போடமாட்டேன். சினிமாவை பொறுத்தவரை, கொஞ்சம் காஜோல், கொஞ்சம் ராணி முகர்ஜி, எலும்பு கூடு சைஸ் ஆவதற்கு முன் இருந்த கரினா கபூர், என்றும் ஐஸ்வர்யா ராய், நேற்று ஜோதிகா, இன்று தமன்னா (நண்பர் மோகன் பின்னூட்டம் உறுதி...ஹி..ஹி..)..........நாளை ஸ்ருதிஹாசனாக கூட இருக்கலாம். அரசு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி அவர்களுக்கு டெரர் கொடுக்கும்போதும், இந்தியாவே ஒரு சாமியாரை 'சூப்பர் பவர்' ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டிருக்கையில் வெகு அலட்சியமாக அவரை மாமியார் வீட்டுக்கு அனுப்பியபோதும் செல்வி ஜெயலலிதா அசத்தினார். ஆனால் அதற்கு பின்பு மம்மி கொஞ்சம் பம்மிவிட்டார் என்றே சொல்லவேண்டும். அழகையும் தாண்டி, உலக லெவலில் டாப் 30ல் வந்ததற்காக சானியா மிர்ஸாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவரையும், நீ ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்சன், பிரியாணி சாப்பிடலாமா? முஸ்லிம் பெண் இப்படி அரைகுறை ஆடை அணிந்து டென்னிஸ் ஆடலாமா என்று ரூம் போடாமலேயே சிந்தித்து, பல புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்டு ஒரு வழி செய்தனர் நம் அறிஞ்ர் பெருமக்கள்.
என்னைப் பொறுத்தவரை தைரியமான பெண்களையே நான் விரும்புகிறேன் (விரும்புகிறேன் என்பதற்கு தயவுசெய்து காதல் என்ற அர்த்தம் கொள்ளவேண்டாம்). யாரிடமும் பேசாமல் அமைதியாக அடக்கமாக இருக்கும் பெண்களை எனக்கு பிடிப்பதில்லை. ஒரு ஆண் திமிர்பிடித்தவனாக மாறுவதற்கு அல்லது இருக்கும் திமிர் இன்னும் அதிகமாக ஏறுவதில் சத்தியமாக, இந்த அமைதி, அடக்க பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
இந்திரா நூயி பெப்ஸிகோவுக்கு CEOவாக ஆனபோது, "இந்திய பெண்", "இந்திய பெண்" என்றே ஊடகங்கள் குறிப்பிட்டனர். 2008ல், அமெரிக்காவில் லூஸியானா மாகாணத்திற்கு ஆளுநராக பாபி ஜிண்டால் தேர்ந்தெடுக்கப்பட்டபோதோ, பல ஹிட் படங்களை மனோஜ் நைட் ஷியாமளன் கொடுத்தபோதோ "இந்திய ஆண்" என்று குறிப்பிடப்படவில்லை. "இந்தியர்" - அவ்வளவுதான். ஆணும் பெண்ணும் சமம் என்று வாய் கிழிய கத்திக்கொண்டு, நாற்பது பேரை உட்கார வைத்து, நாலு பேரைக் கூப்பிட்டு விவாதம் செய்யும் சேனல்களின் உண்மையான முகம் இதுதான்.
பெண் என்பதால் ஸ்பெஷலாக குறிப்பிடுகிறார்கள், அதிலென்ன தவறு என நீங்கள் கேட்கலாம். ஆம், தவறே அதில்தான் இருக்கிறது. "இந்திரா நூயி பெப்ஸிகோவுக்கு CEOவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், அவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது" என்று சொல்லிவிட்டுப் போகட்டும். எந்த பிரச்னையும் இல்லை. ஏன் "இந்தியப் பெண்" என்று சொல்ல வேண்டும்? After all ஒரு பெண்ணே இந்த அளவிற்கு முன்னேறியுள்ளாரே என்ற கேவலமான எண்ணத்தின் வெளிப்பாடுதான் அது.
உடல் ஊனமுற்றவர்களிடம் சற்று பரிதாபத்துடன் அணுகிப் பாருங்கள். அப்போது தெரியும் அவர்களின் கோபம். பரிதாபத்தை அவர்கள் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை, எதிரியாகத்தான் பார்க்கின்றனர். அவர்களுக்கு தேவை வெறும் அன்பு, பாசம்...அவ்வளவே. ஏறக்குறைய இதே பரிதாப அணுகுமுறைதான் ஊடகங்களுக்கும் பெண்களிடத்தில்.
இணையத்தில் பெண்களுக்கு ஏற்படும் சில அசெளகரியங்களையும் தாண்டி, வலையுலகிலும் பல பதிவர்கள் கொடி கட்டி பறக்கிறார்கள். இங்கு கொடி என்பது துணி காய வைக்கும் கொடியல்ல என்பதை மனதில் ஃபெவிகால் போடாமலேயே பச்சக் என்று ஒட்டிக்கொள்ளவும். கதை, கவிதை, ஓவியம், சமையல் குறிப்புகள், நகைச்சுவை என்று கலந்துகட்டி அடிக்கிறார்கள். என்ன.......சில நேரம் கவிதைகள் (தமிழாயிருந்தாலும்) மட்டும் புரிவதில்லை. சில நேரம் தலைப்பே கூட! புரியாமல் விழித்தால், "நீயெல்லாம் ஒரு தமிழனான்னு கேக்கறாங்கய்யா" என்று அஜித் போல் புலம்பவைத்துவிடுகிறார்கள்..:)
இப்படியெல்லாம் சொல்வதற்காக நான் ஏதோ மகளிரை காக்க வந்த மாணிக் பாட்ஷா, வேலைக்கு செல்லும் பெண்களின் துயர் துடைக்க வந்த வேலு நாயக்கர் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அழகான ஒரு பெண் எதிரே வந்தால், அவளைப் பார்த்து ஒரு 'லுக்' விடும் சாதாரண ஆண் நான். ஆனால் எந்தளவிற்கு ரசிக்கிறேனோ அந்தளவிற்கு மதிக்கவும் செய்கிறேன். இப்படி மதிப்பதாலேயே, "ச்சே, இந்த மாதிரி ஒரு அண்ணன் நமக்கில்லையே" என்று எந்த பெண்ணாவது என்னை அண்ணனாக நினைத்து என் heartஐ hurt செய்தால், அப்பெண்ணுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதோடு, வீட்டிற்கு ஷேர் ஆட்டோவாவது அனுப்பப்படும் என்பதை மீட்டருடன் எச்சரிக்கிறேன்!
டியர் ஆண்ஸ், நமக்கும் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாட ஒரு நாள் (நவம்பர் 19) உள்ளது. அன்று ஒரு பதிவு போட்டு நம் குமுறல்களைக் கொட்டுவோம். அதனால் இப்போதைக்கு, அம்மா, பாட்டி, எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரை என்னை செல்லமாக பார்த்துக் கொண்ட சித்ரா மிஸ், அனைத்து தோழிகள், நான் சைட் அடித்த பெண்கள், என்னை சைட் அடித்த பெண்கள் (அப்படி யாராவது இருந்தால் அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக) என அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்....:)
பெண்கள் நாட்டின் கண்கள்
ReplyDeleteY u are putting actress photos for this article.
ReplyDeleteஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!
ReplyDeleteகட்டுரை நல்லா இருக்கு ரகு.
லேடீஸ் ஸ்பெஷல் போஸ்ட்டா... ம்ம். அசத்துங்க...
ReplyDeleteநல்லாயிருக்கு ரகு...
-
DREAMER
என்னை சைட் அடித்த பெண்கள் (அப்படி யாராவது இருந்தால் அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக) என அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்....:)
ReplyDeleteஇது நல்லாருக்கே!
அல்லோ .. என்ன கிண்டலா? உங்களுக்கும் தமன்னா பிடிக்கும்னா இன்னொரு competitor என எனக்கு கோபம் தானே வரும்!! :))
ReplyDeleteதைரியமான பொண்ணு உங்களுக்கு கிடைக்கட்டும்; வாழ்த்துக்கள்.
On a serious note: பெண்களின் பங்களிப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் மிக மிக அதிகமானது. அற்புதமானது. ஆண்களை விட பெண்கள் பல விதங்களில் சிறந்தவர்களே.
நன்றி ரகு!
ReplyDelete"அழகான பெண் மனதை கலங்கடிப்பவள்!
அறிவான பெண் புத்தியும் சேர்த்து கலங்கடிப்பவள்"... எங்கேயோ கேட்டதிது.
கூடவே நீங்கள் விரும்பும் தைரியமும் இருந்து விட்டால், அப்புறமென்ன.....
அப்படியொரு பெண் கிடைக்க என் வாழ்த்துக்கள் ரகு!
நன்றி அரும்பாவூர், என்ன, விசு படம் பாத்துட்டிருந்திங்களா:))
ReplyDeleteWhat's wrong sunnyravee? They're women too
நன்றி சைவகொத்துப்பரோட்டா, ஹி..ஹி..என்னமோ சொல்றிங்க:)
ReplyDeleteநன்றி ஹரிஷ், நல்லாயிருக்குன்னு எத சொல்றிங்க, பதிவையா, படங்களையா?...;)
முதல் வருகைக்கு நன்றி டக்கால்டி, நீங்க கவுண்டர் ரசிகரா:)
ReplyDeleteநன்றி மோகன், Competitorஆ, ஓ அப்படி போகுதா கதை......இது தமன்னாவுக்கு தெரியுமா?....;)
//ஆண்களை விட பெண்கள் பல விதங்களில் சிறந்தவர்களே//
ஈகோ இல்லாம அழகா சொல்லியிருக்கிங்க, அதுக்காக ஸ்பெஷல் நன்றி:)
வாங்க ப்ரியா, உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி:)
ReplyDelete/* ஒரு ஆண் திமிர்பிடித்தவனாக மாறுவதற்கு அல்லது இருக்கும் திமிர் இன்னும் அதிகமாக ஏறுவதில் சத்தியமாக, இந்த அமைதி, அடக்க பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.*/
ReplyDeletereally nice
என்னைப் பொறுத்தவரை தைரியமான பெண்களையே நான் விரும்புகிறேன் //
ReplyDeleteஎன்னைப் பொறுத்த வரை ஆண்கள் தைரியமான பெண்களை விரும்பி காதலித்து மணந்த பின் அவள் பயந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். இது ஒரு வித ego satisfaction. still பெண்கள் சார்பாக ஒரு ஸ்பெஷல் ஷொட்டு
என்ன.......சில நேரம் கவிதைகள் (தமிழாயிருந்தாலும்) மட்டும் புரிவதில்லை. சில நேரம் தலைப்பே கூட! //
ReplyDeleteNoted.
நேர்மையான அழகான பதிவு.
வாழ்த்துகளுக்கு நன்றி ரகு.
ஆஜர். இப்பத்தான் ஒவ்வொரு ஊடா போய்ட்டிருக்கிறனுங்க. இன்னும் சொந்த பந்தங்கள் எல்லாம் புடிபடலீங்க. அப்பறமா வறனுங்க
ReplyDeleteநன்றி ஆண்டாள்:)
ReplyDelete//அவள் பயந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள்//
நன்றி நாய்க்குட்டி மனசு, கண்டிப்பா நீங்க சொல்றத ஏத்துக்கறேன், இதுபோல இன்னும் பல பேர் இருக்காங்கதான்:( மாறுவதற்கு கொஞ்சம் வருஷம் ஆகலாம். ஆனா கண்டிப்பா மாறிடுவாங்க
நன்றி விக்கி, Notedஆ? ஓகே, ஓகே:)
கண்டிப்பா வாங்க டாக்டர்:)
ஆஹா அங்கேயும் ஒருத்தன் புகுந்துட்டானா ????. கலக்கல் வாழ்த்துக்கள் !
ReplyDeleteநன்றி RDX அந்நியன்:)
ReplyDeletenice post...loved it...
ReplyDeleteநன்றி காவ்யா
ReplyDeleteஎன்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .
ReplyDeleteமீண்டும் வருவான் பனித்துளி !