கண்ணெதிரே நடந்த இரு சம்பவங்கள். சம்பவங்கள்? விபத்துகள் என்பதே சரி. இந்த விபத்துகளைப் பற்றி எழுதி பதிவுகளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்றை அதிகரித்துக்கொள்வதற்காக எழுதவில்லை. மனதில் தோன்றியதை அப்படியே பதிவிடுகிறேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு......
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில், 'பைக்'கிற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு வரும் வழியில், வெகு நாளாய் சந்தித்திராத நண்பன் ஒருவனை சந்தித்தேன். 'பைக்'கை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். கொஞ்ச தூரத்தில் ஒரு சத்தம். எப்படி சொல்வதென்று தெரியவில்லை. படார் என்றா? டமார் என்றா? சத்தத்தை விட நாங்கள் பார்த்த காட்சி கொடுமையானது. 'பைக்'கில் சென்ற ஒருவர், வண்டி சறுக்கி, உருண்டு புரண்டு சில அடி தள்ளி கீழே விழுந்தார். நாங்கள் இருவரும் அருகில் சென்று பார்க்கும்போது, அங்கு அதற்குள் கூடிவிட்ட நபர்களிடமிருந்து, :(, :(( போன்றவை மட்டுமல்லாமல் வார்த்தை பின்னூட்டங்கள் வரத் தொடங்கியிருந்தது.
'தண்ணிபா, அதான் இவ்ளோ ஃபாஸ்ட்டா வந்துக்குறான்', 'இல்லங்க, நாய் குறுக்க பூந்துடுச்சு, வண்டிய அவனால கண்ட்ரோல் பண்ண முடியல', 'யாராவது 108க்கு கால் பண்ணுங்க'
நான் என் அலைபேசியை எடுப்பதற்குள், ஒருவர் சொன்னார், "பண்ணியாச்சுங்க, இதோ வரேன்னிருக்கறாங்க".
சென்ற வாரம்......
இந்த மாதம் இரவுப் பணியாதலால், விடியற்காலை மூன்று மணிக்கு ஒரு ப்ரேக் எடுக்கலாம் என்றெண்ணி, நானும் நண்பர்களும் ஒரு வாக் போனோம். கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் அருகே சாலைப் பணியாளர்கள் அந்த நேரத்திலும், எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு உணர்த்தும் பொருட்டு, சிவப்பு கோன் ஒன்றை சாலையில் வைத்துவிட்டு, வேலை செய்துகொண்டிருந்தனர். சூடான மசால் வடையை ஒரு கை (வாய்?) பார்க்க டீக்கடைக்கு நாங்கள் சென்றுகொண்டிருக்கையில், பயங்கர சத்தம். ஏனோ இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்த/கேட்ட அந்த விபத்து/சத்தம் மனதில் வந்துபோனது. ஒலிம்பியா என்ட்ரன்ஸ் அருகே செக்யூரிட்டிகள் கூடியிருந்தனர். அருகே சென்று பார்த்தபோது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த சாலைப் பணியாளர் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். கொஞ்சம் மேலும் கீழுமாய் அசைவிலிருந்த அவரின் வயிறு மட்டுமே அவர் உயிரோடு இருப்பதை உறுதிபடுத்தியது. மற்றபடி அவரிடம் எந்த அசைவும் இல்லை.
மீண்டும் பின்னூட்டங்கள். 'ஒரு பொ.போ இடிச்சுட்டு அவன் பாட்டுக்கு போய்ட்டாங்க', 'கார் நம்பரை நோட் பண்ணியாப்பா?', 'ஆள் அவுட்டுன்னு நினைக்குறேன்', 'இவனுங்க ஏன் இந்த டைம்ல வேலை செய்யறானுங்க?'
உடன் வந்திருந்த நண்பர் ஒருவர் துளியும் தாமதமின்றி தன் அலைபேசியை எடுத்து 108க்கு கால் செய்தார் (என்னுடையதை அலுவலகத்தில் கீபோர்ட் பக்கத்திலேயே வைத்துவிட்டேன்). இடம், நண்பரின் பெயர் எல்லாம் கேட்டுக்கொண்டார்கள்.
ஏன் இந்த பதிவு?
மேற்கூறிய இரு விபத்துகளின்போதும், 108க்கு கால் செய்தபின், ஆம்புலன்ஸ் அங்கு வந்து சேர எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 10 நிமிடங்களுக்குள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மருத்துவமனையில் மட்டும் ஆம்புலன்ஸை நிறுத்திவைக்காமல், குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு தலா ஒரு ஆம்புலன்ஸ் என்று எளிதாக இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளும்படி திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். நாங்கள் கிண்டியிலிருந்து கால் செய்தபோது, வண்டி ஆலந்தூரிலிருந்து வருவதாக சேவை மைய அதிகாரி தெரிவித்தார்.
ஆம்புலன்ஸில் வந்தவர்களும், யாரையும் பதற்றமடையவிடாமல், துளியும் மெத்தனமின்றி, மிகுந்த பொறுப்பாகவே செயல்பட்டனர். அவர்கள் அணுகுமுறையை பார்க்கும்போது கை கொடுத்து பாராட்ட வேண்டும் போலிருந்தது எனக்கு. ஆனால் அந்த சூழ்நிலையில் அச்செயல் சரியல்ல என்று தோன்றியதால் கை கொடுக்க நினைத்ததை கைவிடும்படியானது.
பெட்ரோல் விலையை ஏற்றும்போது, காய்கறி விலையை ஏற்றும்போது, சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை காணும்போது என ஒரு நாளில் எவ்வளவோ காரணங்களுக்காக, மாநில அரசையோ, மத்திய அரசையோ குறை கூறுகிறோம். ஆனால் இந்த 108 அவசரச்சேவையை என்றாவது பாராட்டியிருக்கிறோமா? சத்தியமாக நான் இதுவரை யாரிடமும் பாராட்டி சொன்னதில்லை. அப்படி பாராட்டாமல் இருப்பது சற்று உறுத்தலாகவே இருக்கிறது, அதற்காகத்தான் இப்பதிவு.
என்னைக் கேட்டால், நாட்டின் மிகச்சிறந்த திட்டங்களில் (அப்படி உண்மையாகவே நிறைய திட்டங்கள் இருந்தால்) இந்த 108தான் சிறந்தது என்பேன். உயிர் காப்பதைவிட சிறந்தது வேறென்ன இருக்கமுடியும்?
எந்த புண்ணியவான் இந்த திட்டத்திற்கு ஐடியா கொடுத்தார் என்று தெரியவில்லை. அந்த மண்டைக்காரர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டும். மக்களை காப்பது அரசின் கடமைதானே, இதற்கு ஏன் பாராட்ட வேண்டும் என்று கேட்கலாம். தேர்வில் நல்ல மார்க் எடுக்க வேண்டியது ஒரு மகனி/ளின் கடமை. முதல் ரேங்க் வாங்கினால் ஏன் அவர்களுக்கு பரிசு, பாராட்டு எல்லாம்? நான் ஃபர்ஸ்ட் ரேங்க்பா என்று சொன்னவுடன், 'ம்' என்பதற்கும், தட்டிக்கொடுத்து 'வெரிகுட்றா செல்லம்' என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. அரசை குட்ட வேண்டிய விஷயங்களில் கண்டிப்பாக குட்டுவோம், தவறில்லை. ஆனால் தட்டிக்கொடுக்க வேண்டிய விஷயங்களில் நாம் கண்டும் காணாமல் இருப்பது சரியா?
இந்த 108 அவசரச்சேவையில், வெறும் கடமையென நினைக்காமல், மிகுந்த அக்கறையுடன் பணிபுரிந்து கொண்டிருக்கும் அனைவருக்கும், பாராட்டுகள்....பாராட்டுகளைவிட சரியானது.... நன்றிகள்!
பாராட்டுகள் நன்றிகள் அவர்களுக்கு சொல்வது அந்த நேரத்தில் சரியானது இல்லையென்றாலும் சிறிது நேரங்கழித்து அலைபேசியிலாவது தெரிவித்துவிடலாம் உண்மையிலே அவர்கள் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரித்தானவர்களே...
ReplyDeleteஉண்மை தான் ரகு 108 இன் சேவை
ReplyDeleteமிக சிறந்தது.....பல உயிர்களை காப்பாற்றி
இருக்கிறது..... பகிர்வுக்கு நன்றி...
வரவேற்கப்பட வேண்டிய விசயம்தான்.
ReplyDeleteஆமாம்... மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. மிகவும் நல்ல திட்டம். இத்திட்டம் இதே போல் செயல்பட்டால் நல்லது....
ReplyDeleteநல்ல சேவைதான்...பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமிக அவசியமான பதிவு ரகு; 108 பற்றி கேள்வி பட்டிருந்தாலும் இது போல நேரடி அனுபவம் கேட்கும் போது அதன் நம்பக தன்மை மேலும் கூடுகிறது.
ReplyDeleteஆமாம் மொபைலில் இருந்து phone பண்ணும் போது வெறும் 108போட்டால் போய்டுமா? சில மொபைல் connection-ல் மொபைல் தவிர வேறு எண் எனில் 044-போல் முன்னர் வேறு ஏதாவது போடணுமே??விளக்கினால் எனக்கும் பிறருக்கும் உதவும்
உண்மையிலே பாரட்ட வேண்டிய திட்டம் தான் இது. பெரும்பாலான மக்களின் உயிரை உடனடியாக காப்பாற்றுவதில் தனியார் ஆம்புலன்சை விட 108 தான் வேகமாக விரைந்து செயல்படுகிறது.
ReplyDeleteநல்லதொரு பயனுள்ள விஷயத்தை அனைவரும் அறியும்படி பதிவெழுதியதற்கு நன்றி ரகு. அப்படியே இது எங்கெல்லாம் உள்ளது, தமிழகத்தின் கிராமப் பகுதிகளுக்கும் சென்று சேர்ந்துவிட்ட உதவிதானா என்ற தகவல்களையும் சேர்த்து எழுதியிருந்தால் மிகப் பயன்பட்டிருக்கும். முடியுமானால் இன்னும் விபரங்கள் அறிந்து மற்றுமொரு பதிவிடுங்கள்.
ReplyDeleteவர வர ரொம்ப நல்ல, பயனுள்ள பதிவுகள் எழுதுறீங்க. வாழ்த்துகள்.
மொபைல் போனாக இருந்தாலும் 108 மட்டும் call செய்தால் போதும்.
ReplyDeleteநன்றி வசந்த், நீங்கள் சொல்வதும் சரிதான்
ReplyDeleteநன்றி ஜெட்லி
நன்றி சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteநன்றி ராம், செயல்படும் என்றே நம்புவோம்
நன்றி நாடோடி
ReplyDeleteநன்றி மோகன், எந்த மொபைலிலிருந்தும் 108ஐ டயல் செய்தாலே போதும்
நன்றி மதுரைக்காரன்
ReplyDeleteநன்றி விக்கி, அவசியம் எழுதுகிறேன்
நன்றி அனானி, உபயோகமான தகவல்தானே சொல்கிறீர்கள், பெயரை போட்டிருக்கலாமே :)
ReplyDeleteரகு,
ReplyDeleteநல்லவிஷயத்தை நாலுபேரோட பகிர்ந்துக்கிறதுன்னா..! எதுவும் தப்பில்ல..! ('நாயகன்' கமல்ஹாசன் ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்)
அந்த 108 விரைவுப்படைக்கு என் சார்பாகவும் 'பாராட்டுக்கள் & நன்றிகள்'
நம்பரும் ரொம்பவும் கச்சிதமா தேர்வு செஞ்சிருக்காக போல..! கடவுளை வேண்டிக்கிறவங்க, எக்ஸாம்ல பாஸ் ஆகனும்னா 108 தடவை கடவுள் பேரை சீட்டுல எழுதி மாலையா போடுவாங்க. ஏதாவது நினைச்ச காரியம் நடக்கணும்னா 108 தேங்காயை உடைப்பாங்க... இப்படிப்பட்ட ஒரு மங்களகரமான நம்பரை தேர்வு செஞ்சதுக்கும், அந்த மண்டைக்காரருக்கு(உங்க பாஷையில்) பாராட்டுக்கள்!
-
DREAMER
வாங்க ஹரீஷ், இதை தளபதி ஸ்டைல்ல படிங்க :)
ReplyDeleteஏன்?
அடிபட்டவரை காப்பாத்துனாங்க
எத்தனை பேர்?
ஒருத்தர்
யாரு?
108
எப்போ?
போன வாரம்
ஹி..ஹி...சரி இதோட நிறுத்திக்கறேன்
//பெட்ரோல் விலையை ஏற்றும்போது, காய்கறி விலையை ஏற்றும்போது, சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை காணும்போது என ஒரு நாளில் எவ்வளவோ காரணங்களுக்காக, மாநில அரசையோ, மத்திய அரசையோ குறை கூறுகிறோம். ஆனால் இந்த 108 அவசரச்சேவையை என்றாவது பாராட்டியிருக்கிறோமா?//.........
ReplyDeleteஆமா ரகு. குறை சொல்வதை விட்டு விட்டு நல்லதை மனதாற பாராட்ட தெரிந்திருக்க வேண்டும்... பாராட்ட நல்ல மனதும் வேண்டும்!அப்படி பாராட்ட தெரிந்த, நல்ல மனதுள்ள உங்களுக்கு முதல ஒரு சல்யூட்!
இங்கு 18க்கு அழைத்தால்,உடனே வருவார்கள்.இங்கு(France)அது பெரிய விஷயமாக எனக்கு தோன்றவில்லை.காரணம் populationதான்! ஆனால் நம் நாட்டில் இவ்வளவு ஜனத்தொகையில், டிராபிக்கில் இத்தனை சீக்கிரம் என்பது ஆச்சரியமே.
இவ்வளவு விரைவாக செயல்படும் 108க்கு உங்களுடன் சேர்ந்து நானும் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
நன்றி ப்ரியா, இங்குள்ள மக்களிடம் ஒரு நல்ல விஷயம், எவ்வளவு ட்ராஃபிக் இருந்தாலும், ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டால் எல்லோரும் ஒதுங்கி வழி விடுகிறார்கள். ஆம்புலன்ஸ் சீக்கிரம் வர இதுவும் ஒரு காரணம்...
ReplyDeletei
ReplyDeletewho is implument 108 he also great man please at join this
ReplyDeletem.....
ReplyDeletekandippaa!
நன்றி ராஜசேகர்
ReplyDeleteநன்றி இரசிகை