விதிகள்:
1. உறவினர்களாக இருக்கக்கூடாது
2. வரிசை முக்கியமில்லை
3. ஒரே துறையில், பிடித்த பல பெண்கள் இருந்தாலும் ஒருவரைத்தான் குறிப்பிடவேண்டும்
4. ப்ரேக் த ரூல்ஸ்....இது சொந்த சரக்கு (நாமல்லாம் எப்போ மத்தவங்க சொல்றத கேக்கறோம் :)))
அன்னை தெரசா, இந்திரா காந்தி, ஐஸ்வர்யா ராய் போன்றோரையெல்லாம் யாருக்குத்தான் பிடிக்காது? மேலும் இவர்களைப் பற்றி நிறைய பேர் எழுதிவிட்டார்கள். அதனால்தான் ப்ரேக் த ரூல்ஸ் :)
ஹேமா
கல்லூரியில் எனக்கு சீனியர். முதலாம் ஆண்டு இளநிலை கணிணி அறிவியல் படிக்கும்போது FORTRAN, COBOL ஆகியவற்றைத் தெரிந்துகொள்வதற்கு முன் நாங்கள் தெரிந்துகொண்ட வார்த்தை FIGURE. ஹேமா - அவ்வ்வ்வளவு ஹோம்லியாக, அழகாக இருப்பார். படிப்பிலும் எப்பொழுதும் 70 சதவீதத்திற்கு குறைந்ததில்லை. கொஞ்ச தூரத்தில் எதிரே வந்தாலும் 'H' வருதுடா, 'H' வருதுடா என்று எங்களுக்குள் சிக்னல்கள் பரிமாறப்படும். அவர் வரும்போது, கண்கள் அவரை பார்க்காததுபோல் வேறெங்கோ பார்த்து, பின்பு எங்களை கடந்து போகும்போது ஓரக்கண்ணால் பார்த்து....ஹும்...சைட் அடிக்கறது ஒரு 'கலை'ங்க. சனிக்கிழமைகளில், கல்லூரிக்கு சில சமயம் தாவணியில் வந்து, கூடவே 'தாவணி பெண் போல் யாரழகு" என்ற பாடல் வரியையும் எங்கள் நினைவுக்கு கொண்டு வருவார். அவ்வளவு அழகாய் இருந்தும் ஒருவரும் ப்ரொபோஸ் பண்ணவில்லை. காரணம், அவர் ஒரு 'போலீஸ்காரன் மகள்'!
கல்லூரி முடித்தபின் ஒரு நாள் கோயிலில், உற்சவர் சன்னதியில் கண் மூடிக் கும்பிட்டு, கண் திறந்தபின் எதிரே பார்த்தால் ஹேமா! "ஹாய் எப்படியிருக்கீங்க" என்று கேட்பதற்கு கூட தைரியம் வரவில்லை. வந்தது ஒரு கவிதைதான்...
தெய்வ தரிசனம் வேண்டி
கோயிலுக்கு வந்தேன்
கிடைத்தது
தேவதையின் தரிசனம்!
இதை கவிதை என்று யாராவது ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஒரு முழு பதிவே கவிதைகளாக வெளியிடப்படும் என்று கொஞ்சூண்டு கடுமையாக எச்சரிக்கிறேன் :)
ஷைலஜா மேம்
கல்லூரி இறுதியாண்டில் எங்களுக்கு Microprocessor சப்ஜெக்ட் எடுக்க வந்த லெக்சரர். லெக்சரர் என்றால் தயவுசெய்து 45, 50 வயதுக்கு மேல் இருக்கும் என்று கற்பனை செய்துவிடாதீர்கள். எங்களை விட வெறும்....வெறும் 3 வயது மட்டுமே மூத்தவர். இவர் பக்கத்தில் தமன்னாவை நிற்கவைத்தால் அப்படியே ட்வின்ஸ் போல இருப்பார்கள். ஆனால் வெறும் அழகுக்காக மட்டும் இவர் என்னை ஈர்க்கவில்லை. மிகப் பொறுப்புடன் வகுப்பெடுத்தார். பெரும்பாலும், வகுப்பில் நான்காவது ரேங்கில் இருந்த என்னை, ஒருமுறை கூப்பிட்டு, "டெஸ்ட்ல உன்னோட பேப்பர் ப்ரசன்டேஷன் நல்லாருக்கு, நீ கண்டிப்பா அண்ணா யூனிவர்சிட்டியில MCA என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுது, கிடைக்கறதுக்கு சான்ஸ் இருக்கு" என்றார். "இல்ல மேம், நீங்க என்னை தப்பா புரிஞ்சுட்ருக்கீங்க, நான் அப்படிப்பட்டவன் இல்ல" என்றேன் சிரித்துக்கொண்டே. "இதனாலதான் நீ இன்னும் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்காம இருக்க" என்றார். என் மேல் எனக்கிருந்த நம்பிக்கையின்மையை உணரவைத்தவர்.
வேண்டுமென்றே அவர் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க, சக மாணவன் ஒருவன் ஒருமுறை "மேம், நீங்க நடத்துறதே புரியல" என்றான். பதிலுக்கு "நீங்க க்ளாஸை கவனிச்சாத்தானே? என்னையே பாத்துட்டிருந்தா?" என்று படாரென்று சொல்லி அவனை ஸ்விட்ச் ஆஃப் செய்தார். Boldness - எனக்கு இவரிடம் மிகவும் பிடித்த ஒன்று. இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன், பார்ப்போம்...
பி.சுசீலா
ஏதாவது பிரச்னை, டென்ஷன் என்றால் நான் உடனடியாக கேட்க விரும்புவது இந்த குயிலின் ஓசையைத்தான். இரவு தூங்கப்போகும் முன் இவர் பாடிய பாடல்களை கேட்டுப்பாருங்கள். மனதுக்கு அப்படியொரு ரிலாக்ஸேஷன் கிடைக்கும். இவர் பாடிய அனைத்து பாடல்களுமே அருமைதான் என்றாலும் "புதிய பறவை" படத்தில் வரும் "உன்னை ஒன்று கேட்பேன்", "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடல்கள் என்னுடைய மோஸ்ட் ஃபேவரைட்.
ஜெயலலிதா
தைரியத்தில் இவரளவுக்கு இணையாக இந்தியாவில் ஒரு பெண் அல்ல, ஆண் அரசியல்வாதி கூட கிடையாது. ஆனால் அந்த தைரியத்தை பெரும்பாலும், உடன்பிறவா சகோதரியை சபாநாயகர் நாற்காலியில் உட்காரவைத்து அழகு பார்ப்பது போன்ற தேவையற்ற வேலைகளுக்குத்தான் செயல்படுத்துகிறார். மழை நீர் சேகரிப்புத் திட்டம், சென்னைக்கு வீராணம் குடிநீர், எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் ஜெயேந்திரரை கைது செய்தது, காட்டுக்கு கோபாலையும், பெட்டியையும் மட்டுமே அனுப்பிய அரசுகள் போலல்லாமல், காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து, வீரப்பனை வீழ்த்தியது, அரசு ஊழியர்களை மிரள வைத்தது என பல விஷயங்கள் இவரின் தைரியத்திற்கும், திறமைக்கும் எடுத்துக்காட்டு.
பிரதமராகும் தகுதியிருந்தும் தன் ஆணவப் போக்காலேயே அதை இழந்து நிற்கிறார். "என் அரசு", "நான் ஆணையிட்டேன்" என்றுதான் பெரும்பாலும் பேச்சில் நிறைந்திருக்கும். இவர் பிரதமர் ஆகியிருந்தால் 11/26க்கு பிறகு கண்டிப்பாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒரு வழி பண்ணியிருப்பார். ஆனால் இன்றுள்ள தலைவர்களோ, இன்னும் கசாபுக்கு பிரியாணி சப்ளை செய்துகொண்டிருக்கின்றனர். எனக்கு ஒரே ஒரு பயம்தான்.....இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டின் தலைநகராக கொடநாடு மாறிவிடுமோ என்று!
ஸ்டெபி கிராப்
குதிரை பின்னல் அணிந்து, இவர் டென்னிஸ் ஆடுவதை பார்க்க வேண்டுமே, கொள்ளை கொள்ளும் அழகு. பேஸ்லைனிலிருந்து இவர் அடிக்கும் ஷாட்டுகள் ஒவ்வொன்றும் 'நச்' ரகம். 1988ல் ஆஸ்திரேலியன் ஓப்பன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், விம்பிள்டன், யுஎஸ் ஓப்பன் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் என்று அனைத்திலும் வெற்றி பெற்று, அந்த வருடத்தை 'கோல்டன் ஸ்லாம்'ஆக கொண்டாடினார். இதை வேறெந்த டென்னிஸ் ப்ளேயராலும் இன்றளவும் சாதிக்கமுடியவில்லை. வெறும் அழகையும், கவர்ச்சியையும் வைத்து டென்னிஸில் டேக் ஆஃப் ஆகி, மாடலிங்கில் லேண்ட் ஆகும் இன்றைய வீராங்கனைகளை(!) விட ஸ்டெபி thousand times better. என்னைக் கேட்டால் துளிகூட முகத்தில் டென்ஷன் இல்லாமல் விளையாடுவதில் இவரொரு லேடி ஸ்டீவ் வாஹ் என்பேன்.
ட்ரூ பேரிமோர் (Drew Barrymore)
இவர் நடித்து இதுவரை நான் இரண்டு படங்கள்தான் பார்த்திருக்கிறேன். Charlie's Angels மற்றும் Charlie's Angels: Full Throttle. ஆனாலும் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டார். கொஞ்சம் பப்ளியாக, குழி விழும் கன்னத்துடன், சுருள் முடியுடன்......ஹும்ம்ம்ம். சமீபத்தில் Whip It என்ற படத்தை தயாரித்து, இயக்கி இருந்தார். ரிசல்ட்டும் பாஸிட்டிவாகவே வந்தது. இவர் நடித்து வேறெந்த படங்களும் நான் பார்க்காததால், இவரின் நடிப்பை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. நடிப்பாங்க முக்கியம்?.......ஹி...ஹி...:)
ஃபரா கான் (Farah Khan)
பெண் இயக்குனர்கள் படமென்றால் பெரும்பாலும் உணர்ச்சி மிகுந்த கதைகளாகவே இருக்கும் (உதா: தீபா மேத்தா, ரேவதி, நந்திதா தாஸ்...) என்ற பிம்பத்தை தூள் தூளாக உடைத்து, ஆண்களுக்கு இணையாக கமர்ஷியல் ஹிட்களையும் கொடுக்க முடியும் என்று Main Hoon Na மற்றும் Om Shanti Om மூலம் நிரூபித்தவர். Om Shanti Om படத்தை குறைந்தபட்சம் 25 தடவையாவது பார்த்திருப்பேன்.ஷாரூக் படமாக இருந்தாலும், தீபிகா படுகோனுக்கும் ச(செ)ம வாய்ப்பு கொடுத்து ஒரே படத்திலேயே அவரை ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டு வந்தவர். சமீபமாக நீண்ட கால நண்பர் ஷாரூக்குடன் ஏதோ மனஸ்தாபம் என்று பேச்சு அடிபடுகிறது. விரைவில் இருவரும் இணைந்தால் இன்னுமொரு பக்காவான வெற்றிப்படத்தை எதிர்பார்க்கலாம்.
'பெப்ஸி' உமா
"மேடம், உங்ககிட்ட பேசணும்னு ரெண்டு வருஷமா ட்ரை பண்றேன் மேடம்" என்ற டயலாக் பிரபலமடைய காரணமாக இருந்தவர். பள்ளியில் படிக்கும்போது (அப்பவேவா என்றெல்லாம் கேட்ககூடாது) வியாழக்கிழமை என்றால், எங்கள் முகத்தில் அப்படியொரு சந்தோஷம் நிறைந்திருக்கும். எனக்கு மிகவும் பிடித்த நிறம் கறுப்பு. அம்மா ஒருமுறை "உமா அடிக்கடி ப்ளாக் ஸாரியிலேயே வர்ற மாதிரி இருக்கு" என்றபோது மனதில் 'நக்ருதனா திரனனா திரனனா நக்ருதனா தினா'.
"மீண்டும் இதே நாள் இதே நேரம் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் உமா" என்பார், அப்படியே தேன் ஒழுகும் பேச்சில். ஒரே கான்செப்ட். ஆனால் பத்து வருடங்களாகியும் நிகழ்ச்சி போரடிக்காமல் போனது. சில வருடங்கள், 'பெப்ஸி' உமாவிற்காகவே 'கோக்' குடிக்காமல் கூட இருந்திருக்கிறேன். ஹி..ஹி...அது விவரம் தெரியாத வயது...ஆனால் உமா மட்டும் தெரிந்தார். இவ்வளவு வருடங்கள் ஆகியும் இன்றும் அழகாகத்தான் இருக்கிறார். இதைச் சொன்னால் "ஐய்ய, உமா இப்ப ஆன்ட்டிடா' என்பார்கள் சிலர். பரவாயில்லை, நான் ஒரு ஆன்ட்டி-ஹீரோவாகவே இருந்துவிட்டு போகிறேன். :)
தமன்னா
ஷைலஜா மேம் போல் இருந்ததால் 'கேடி' படத்தில் முதல் முறை பார்த்தவுடனே பிடித்துவிட்டது. ஆனாலும் படம் ஹிட்டாகாததால் நம் தமிழ் சினிமா குல வழக்கப்படி ராசியில்லாத ஹீரோயின் லிஸ்ட்டில் சேர்ந்தார். பின்பு சில காலம், ஆந்திராவில் மாட்லாடினாலும், 'கல்லூரி'யில் படிக்க வந்து, இப்போது 'அயன்'ஐ பார்த்தவுடன், 'கண்டேன் காதலை' என்று மீண்டும் கலக்க ஆரம்பித்துள்ளார். அடுத்து 'பையா'வையும் சொக்கவைத்துவிடுவார் என்றே நினைக்கிறேன். 'கண்டேன் காதலை' படத்தில் அப்படியே கரீனா கபூரை இமிடேட் செய்திருந்தார் என்று சிலர் குறை கூறினர். இமிடேட் பண்ணுவதற்கு கூட ஒரு டேலண்ட் வேணுங்க.
'கேடி' படத்தில் வில்லியாக வந்தாலும், இவர் காதலித்த கதாபாத்திரத்தின் பெயர் 'ரகு' என்பதை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய விஷயமாக நான் கருதவில்லை. இதை மிகுந்த தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர் நடித்த படங்களின் ஹீரோக்கள் பெயரோ, ஹீரோக்களுடைய கதாபாத்திரங்களின் பெயரோ 'மோகன் குமார்' இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. :))
விக்னேஷ்வரி
இணையத்தில் எனக்கு கிடைத்த முதல் நட்பு. சென்ற வருடம் அக்டோபரில்தான் இவர் பதிவை படிக்க ஆரம்பித்தேன். முதல் முறை படித்த அன்றே, இவர் அதற்கு முன் எழுதிய அனைத்து பதிவுகளையும் படித்து முடித்தேன். நான் ஆரம்பத்தில் எழுதியதையெல்லாம் படித்து பார்த்தால், எனக்கே 'ச்சே' என்றிருக்கிறது. அங்கே யாரோ "இப்ப மட்டும்?"னு கேட்கறது புரியுது, இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன். ஆனால் அப்போதிலிருந்தே பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியவர், ஒரு கட்டத்தில் அவருக்கே சலித்து போனதோ என்னவோ, "ஏங்க எப்பவும் மொக்கையாவே எழுதறீங்க?" என்று உரிமையுடன் கேட்டார். "நான் என்னங்க பண்றது, எழுத ஆரம்பிச்சா ஏதாவது காமெடியாதான் தோணுது. சீரியஸா எழுதணும்னா நீங்க ஏதாவது சொல்லுங்க" என்றேன். "இன்னைக்கு தாதா சாஹேப் பால்கே நினைவு தினம், அவரை பத்தி எழுதுங்க, ஆனா காமெடியா எழுதிடாதீங்க" என்றார். சீரியஸாகவே எழுதினேன். கொஞ்ச நாள் கழித்து வலையில் சுற்றிக்கொண்டிருந்தபோது யதேச்சையாக பார்த்தேன், விகடன் 'குட்பிளாக்ஸ்' லிஸ்ட்டில் அந்த பதிவும் இருந்தது.
புறம் பேசும் சில வழிசல் நபர்களை நாம் திட்டினால்கூட, "சரி விடுங்க, என்னை பத்தி கமெண்ட் அடிக்கறாங்கங்கறதுக்காக அவங்களை கெட்டவங்கன்னு சொல்லமுடியுமா, வேற சிலருக்கு அவங்க நல்லவங்களாகூட இருக்கலாம் இல்லியா" என்றார். கொஞ்சம் 'லைலா'த்தனமாகவே தோன்றியது எனக்கு. என்னதான் வாக்குவாதம் செய்தாலும், கடைசியில் ஜஸ்ட் இக்னோர் இட் என்றே முடித்தார். பத்து நாளைக்கு ஒரு முறை எழுதினாலும் சரி, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எழுதினாலும் சரி, கமெண்ட்டுகளை அள்ளுகிறார் இந்த பிரபல மாஸ் பதிவர். அசத்துங்க அம்மணி! என் நண்பர் தினேஷ் யாரையும் தரக்குறைவாகவோ, மனம் புண்படும்படியாகவோ பேசக்கூடாது என்பார். விக்னேஷ்வரியும் பெரும்பாலும் இதுபோலத்தான் தன் மன உணர்வை வெளிப்படுத்துகிறார். எப்படி என்று தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே சிறந்த நட்புகள் எனக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. கடவுளுக்கு நன்றி! இவரைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம், எழுதுகிறேன் நண்பர்கள் தினத்தன்று :)
எழுதி முடித்த பிறகுதான் தெரிகிறது, இவ்வ்வ்ளோ பெரிய பதிவா என்று. பொறுமையாக படித்த அனைவருக்கும் நன்றி. அங்கங்கே கொஞ்சம் 'ஜொள் ஆறு' ஓடியிருந்தாலும், ஓரளவிற்கு உண்மையாகத்தான் எழுதியுள்ளேன். இத்தொடரை தொடர மேலும் சிலரை அழைக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் எழுதுங்க என்றெல்லாம் சொல்லமாட்டேன். எழுதுங்க என்பேன் உரிமையுடன் :)
விக்னேஷ்வரி
ப்ரியா
மோகன்
ஜெட்லி
சைவகொத்துப்பரோட்டா
ராஜு
உங்க ஷைலஜா மேம் மாதிரி எனக்கும்
ReplyDeleteபள்ளியில் பள்ளியில் ஒரு டீச்சர் ஊக்கம்
அளித்தார்.....இப்போ என்ன பார்த்தா கண்டிப்பா
"என்ன கொடுமை சரவணா இது" என்று கேட்பார்கள்!!
உங்களுக்கும் மோகன் குமார் அண்ணனுக்கும் பலத்த
போட்டி போல...... பையா படம் முதல் ஷோவா??
ட்ரூ பேரிமோர் நடித்த ஒரு படம் இருக்கிறது (பட பெயர் மறந்து விட்டது)
ReplyDeleteஅவரின் நினைவுகள் தப்பி விடும், தந்தையுடன் காரில் ஏற்பட்ட விபத்தில்.
அவரின் நினைவு அதே நாளில் மட்டும் இருக்கும்.
எனக்கு பிடித்த படம், முடிந்தால் பாருங்கள் நண்பா.
தொடர்பதிவுக்கு என்னை அழைத்ததற்கு நன்றி, ஆனால் நான் ஏற்கெனவே இந்த தொடர்பதிவை
எழுதி விட்டேன் நண்பா.
அருமையா எழுதிருக்கீங்க ரகு; ஆமா இதில் மோகன்னு யாரையோ invite பண்ணிருக்கீங்கலே; அது யாரு?
ReplyDeleteநல்ல ஃப்ளோ அண்ணே..!
ReplyDeleteநானே ஒரு அட்டச் சோம்பேறி..!
என்ணயப் போயி கூப்புட்ருக்கீங்களேண்னே..!
உங்க ஜொள்ளு பதிவு முழுக்கத் தெரியுது ;) காலேஜ் சீனியர், லெக்சரர் மேடம், இப்போ தமன்னாவா... ஓகே.
ReplyDeleteஅம்மா, காலாகாலத்துல இந்தப் பையனுக்கு ஒரு பொண்ணைப் பாருங்கம்மா. அலும்பு தாங்கல. ;)
நன்றி ரகு, என்னையும் பிடித்தவர்கள் லிஸ்டில் வைத்திருப்பதற்கு. நெகிழ்ச்சியாக உள்ளது. :)
ரகு பொருமையா படிச்சாச்சி அப்பாடா
ReplyDeleteஆனாலும் நல்ல தேர்வுகள்..
வாழ்த்துக்கள்..
ஹேமாக்கவிதை கவிதைதான்..
சற்று வித்தியாசமான முயற்சிததான் அனைத்து தேர்வுகளும் அருமை . வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeletetamannah பேருக்கு ஒரு ஒட்டு+ கமெண்ட்..
ReplyDeleteபரா கான், ஜெயலலிதா ஒகே.
ReplyDeleteஹேமா, ஷைலஜா மேம்முன்னு ஒழுங்காத்தானே போய்க்கிட்டுஇருந்தது. பின்ன ஏன் இப்படி டிராக் சேஞ் ஆச்சு...
ReplyDeleteஇருந்தாலும் நல்லா இருக்கு
மேம், சீனியர் என்றே (ஜொள்ளு)ஆரம்பித்துவிட்டதா....!
ReplyDelete//விக்னேஷ்வரி said...
அம்மா, காலாகாலத்துல இந்தப் பையனுக்கு ஒரு பொண்ணைப் பாருங்கம்மா. அலும்பு தாங்கல. ;)//..... என்ன சரியா விக்னேஷ்வரி உங்களைப்பற்றி சொல்லி இருக்காங்க.
//'கேடி' படத்தில் வில்லியாக வந்தாலும், இவர் காதலித்த கதாபாத்திரத்தின் பெயர் 'ரகு' என்பதை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய விஷயமாக நான் கருதவில்லை. இதை மிகுந்த தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்./:... இப்போதான் புரியுது ரகு உங்களுக்கு ஏன் தமன்னா பிடிக்கிறது என்று:)
நல்ல தேர்வு ரகு! என்னையும் மாட்டி விட்டுடிங்களே:) விரைவில் எழுத முயற்சி செய்கிறேன். நன்றி!
ரகு,
ReplyDelete//ஹும்...சைட் அடிக்கறது ஒரு 'கலை'ங்க.//
நீங்க ஆர்ட்ஸ்(கலை) காலேஜா..?
வெயிலுக்கு ட்ரூ பெரி"மோர்" பற்றிய பத்தி, ரொம்ப இதமா இருந்தது. நண்பர் சைவக்கொத்துபரோட்டா குறிப்பிட்டிருக்கிற அந்த படம், 50 First Dates. அதையும் பாருங்க... அதே மாதிரி, பெரிமோர், பேபி ஷாலினியைப் போல் குழந்தை நட்சத்திரமாக அசத்திய ஒரு படம் CATS EYE இதையும் பாருங்கள், உங்களுக்கு பெரிமோர் இன்னும் பிடித்துப்போகும்.
//சில வருடங்கள், 'பெப்ஸி' உமாவிற்காகவே 'கோக்' குடிக்காமல் கூட இருந்திருக்கிறேன். ஹி..ஹி...//
பெப்ஸி உமா PEPSICOவோட அன்அஃபிஷியல் அம்பாஸிடர் போலிருக்கே..!
//தெய்வ தரிசனம் வேண்டி
கோயிலுக்கு வந்தேன்
கிடைத்தது
தேவதையின் தரிசனம்!//
ரகு நீங்க கவிதையும் எழுதுவீங்களா..! உங்ககிட்ட இனிமே பாடலும் கேட்டு வாங்கலாம் போலிருக்கே..!
-
DREAMER
நன்றி ஜெட்லி, போட்டியா? ஹுக்கும்....சொல்லிக்கவேண்டியதுதான்....'பையா' முதல் ஷோ இல்ல, வீக் எண்ட்லதான் பாக்கணும்:(
ReplyDeleteநன்றி சைவகொத்துப்பரோட்டா, பரோட்டா போச்சே!
வாங்க மோகன், நமக்கு தெரிஞ்சவர்தான், அ.இ.த ரசிகர் மன்ற தலைவர் அவர் ;))
ReplyDeleteநன்றி ராஜு, நாங்க மட்டும் என்னவாம், சும்மா எழுதுங்கண்ணே
நன்றி விக்கி, Drew Barrymoreஐ விட்டுட்டீங்களே...லெக்சரரை பார்த்து ஜொள்ளு விடல, அவங்க அழகா இருந்தது உண்மை. ஆனா அதையும் தாண்டி அவங்க எடுத்துகிட்ட அக்கறை எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது
ReplyDelete//என்னையும் பிடித்தவர்கள் லிஸ்டில் வைத்திருப்பதற்கு. நெகிழ்ச்சியாக உள்ளது//
என் எழுத்தின் திசை மாறியதற்கு காரணம் நீங்கள், நன்றி மறவேன் :)
நன்றி மலிக்கா மேடம், நீங்களாவது கவிதைன்னு ஒத்துகிட்டீங்களே, ஃப்யூச்சர்ல கவிதை எழுதிடுவேனோன்ற பயத்துனால ஒத்துக்கலியே?...:)
நன்றி சங்கர்
ReplyDeleteநன்றி அண்ணாமலையான், மோகன் சார், இங்க பாருங்க, இன்னொருத்தர் கிளம்பிட்டாரு
நன்றி வித்யா, ஸ்டெபி?
ReplyDeleteநன்றி வங்கக்கடல் மைந்தன், எப்படி சேஞ்ச் ஆச்சு?
//மேம், சீனியர் என்றே (ஜொள்ளு)ஆரம்பித்துவிட்டதா//
ReplyDeleteநன்றி ப்ரியா, யார்கிட்டேயும் பார்ஷியாலிட்டி பாக்ககூடாது இல்லியா?....:)
[//விக்னேஷ்வரி said...
அம்மா, காலாகாலத்துல இந்தப் பையனுக்கு ஒரு பொண்ணைப் பாருங்கம்மா. அலும்பு தாங்கல. ;)//..... என்ன சரியா விக்னேஷ்வரி உங்களைப்பற்றி சொல்லி இருக்காங்க]
அட, அப்பவும் இப்படித்தாங்க இருப்பேன், மே பி பூரிக்கட்டை அடி மாதிரி கொஞ்சம் வீரத்தழும்புகள் இருக்கலாம் :)
//நீங்க ஆர்ட்ஸ்(கலை) காலேஜா..?//
வாங்க ஹரீஷ், யாரு கலை?...;)
//வெயிலுக்கு ட்ரூ பெரி"மோர்" பற்றிய பத்தி//
ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க!
//ரகு நீங்க கவிதையும் எழுதுவீங்களா..! உங்ககிட்ட இனிமே பாடலும் கேட்டு வாங்கலாம் போலிருக்கே..!//
பயப்படாதீங்க, கவிதைகளை பதிவா வெளியிடுற ஐடியாவை ட்ராப் பண்ணிட்டேன்....'அப்பாடா'ன்னு பெருமூச்சு விட்டீங்களா?......இல்ல சொன்ன மாதிரி ஒரு ஃபீல் :)
//tamannah பேருக்கு ஒரு ஒட்டு+ கமெண்ட்..//
ReplyDeleteம்ம்ம் Professor சாரே இப்படியா ??
*****
ஆனந்த தாண்டவம் படத்தில் கூட ஹீரோ பேரு ரகுன்னு தான் நினைக்கிறேன்; ஆனா படத்தில் அவங்க ஒன்னு சேரலையே!!! Hahaha!!
Hero பேர் என்ன நம்ம பேரு வைக்கிறது? நான் எடுக்கும் படத்தில் நானே ஹீரோ; தமன்னா heroine. ஆனா படம் முடிஞ்சு காலையில் விழிப்பு வந்துடுது :))
சில பேர எனக்கும் பிடிச்சிருக்கு ரகு..
ReplyDeleteஆனா ஜெயலலிதாவ இல்ல :))
ஹாஹ்ஹா, வாங்க மோகன், நான் டோட்டல் சரண்டர் யுவர் ஹானர்! :)))
ReplyDeleteநன்றி கார்க்கி, நீங்க வந்ததே மகிழ்ச்சிதான்...எனக்கும் ஒரு அரசியல் தலைவராக ஜெயலலிதாவை முழுமையாக பிடிக்காது, அவரின் தைரியம் மட்டும் :)
ஸ்டெபி,பெப்ஸி உமா,விக்கி என மாஸ் ஹீரோயின்ஸ் எல்லாருக்கும் பிடித்தமே...
ReplyDeleteரகு,
ReplyDeleteநீங்களும் கல்லூரி நாட்கள்ல என்னமாதிரிதானா..!
நன்றி வசந்த், தமன்னாவை மிஸ் பண்ணிட்டீங்க ;)
ReplyDeleteவாங்க டாக்டர், ஹி..ஹி...சேம் ப்ளட் :)
Yours is very different from others,nice.
ReplyDelete"ட்ரூ பேரிமோர் நடித்த ஒரு படம் இருக்கிறது (பட பெயர் மறந்து விட்டது)
அவரின் நினைவுகள் தப்பி விடும், தந்தையுடன் காரில் ஏற்பட்ட விபத்தில்.
அவரின் நினைவு அதே நாளில் மட்டும் இருக்கும்.
எனக்கு பிடித்த படம், முடிந்தால் பாருங்கள் நண்பா."
The movie is "First 50 dates"
Sangamithra
nallaayirukku
ReplyDeleteநன்றி இரசிகை
ReplyDeleteenna nadkuthu enga...
ReplyDeletekeka alu ellanu ninichukitu erukengala..
engala sangamum ungala konja nalla watch panikituthan erukku..ethu sari ella amma....
ethai engal sanga vanmiyaga kondikirthu....
next time ஷைலஜா மேம் apprum tamana mam pathi pesia avlothan neenga apratham katta vendivarum..
haha....super
10listla kondipa oru teacher erukkangapa...enaku entha teacherium pidikathu ellamey sir-aa vantu engala konnutanga...
padiu oru eluthalar enkira payanam pola poikitu erukku..
elimaiayna nadigal..
nandri valga valamudan.
Varuthapadtha vasippor sangam
Complan surya
sir kku aambilainga yaarum impress a illa pola..
ReplyDelete