Monday, March 01, 2010

சுஜாதா..க‌ணேஷ்..வ‌ஸ‌ந்த்


த‌லைவ‌ன் இருக்கின்றான்

இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு முன் புத்த‌க க‌ண்காட்சியில் வாங்கிய‌ புத்த‌க‌ங்க‌ளில், அனைத்து சுஜாதா புத்த‌க‌ங்க‌ளையும் சென்ற‌ வார‌ம்தான் படித்து முடித்தேன். எல்லாமே க‌ணேஷ்-வ‌ஸ‌ந்த் க‌தைக‌ள். ஆயிர‌த்தில் இருவ‌ர், மூன்று குற்ற‌ங்க‌ள், இத‌ன் பெய‌ரும் கொலை, நைலான் க‌யிறு, ம‌றுப‌டியும் க‌ணேஷ் & கொலையுதிர் கால‌ம். இவ‌ற்றில் மூன்று குற்ற‌ங்க‌ள் ப‌ற்றி ஏற்க‌ன‌வே எழுதியிருக்கிறேன். ம‌ற்ற‌ க‌தைக‌ள் ப‌ற்றி எழுதினால் ப‌டிக்கும்போது உங்க‌ளுக்கு ச‌ற்று சுவார‌ஸ்ய‌ம் இல்லாம‌ல் போக‌லாம். அதனால் அவைக‌ளைப் பற்றி எழுத‌ப்போவ‌தில்லை. நீங்க‌ள் த்ரில்ல‌ர் விரும்பியாக‌ இருந்தால் க‌ண்டிப்பாக‌ வாசிக்க‌லாம். குறிப்பாக "கொலையுதிர் கால‌ம்" சிம்ப்ளி சூப்ப‌ர்ப்!

என்னைப் பொறுத்த‌வ‌ரை சுஜாதா ஒரு எழுத்து யானை என்றே சொல்வேன். இற‌ந்தாலும், ஆயிர‌ம் பொன் என்ன‌....அவ‌ர் கோடி பொன்னுக்கு ச‌ம‌ம். வி மிஸ் யு சார்:(

Buzzல் கிரிக்கெட்

ஏனோ Google Buzzல் ப‌ய‌ண‌ம் செய்ய‌ ப‌ல‌ருக்கு பிடிக்க‌வில்லை. ப்ரைவ‌ஸி இல்லை, தானாக‌ வ‌ந்து உட்கார்ந்துகொண்ட‌து என்று ப‌ல‌ருக்கும் ச‌ற்று வெறுப்பு. இத‌ற்கு ப‌தில் ட்விட்டுவ‌துதான் பெட்ட‌ர் என்ப‌தும் நிறைய‌ பேருடைய‌ அபிப்ராய‌ம். ஆனால் என‌க்கென்ன‌வோ Buzzதான் வ‌ச‌தியாயிருக்கிற‌து. ப‌ணியிட‌த்தில் உள்நாட்டு ச‌தி செய்து ட்விட்ட‌ரையெல்லாம் ப்ளாக் செய்துவிட்டார்க‌ள். ந‌ம‌க்கு Buzzஸே போதும்:)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக‌ ச‌ச்சின் ஆடிய‌ ருத்ர‌தாண்ட‌வ‌த்தை Cricinfoவில்தான் பார்(ப‌டி)த்தேன். 41வ‌து ஓவ‌ரின்போது ச‌ச்சின் 168ல் இருக்க‌, இன்று ச‌ச்சின் 200 அடிக்க‌க்கூடும் என்று தோன்றிய‌து. 150 அடித்த‌போதே ப‌ல‌பேருக்கு தோன்றியிருக்க‌லாம். இதை "ம‌ன‌சுக்குள்ள‌ ச‌ச்சின் ப‌த்தி ஒண்ணு நினைக்கிறேன், ஆனா அத‌ சொன்னா....வேணாம்பா நான் எதுவும் சொல்ல‌ல‌" என்று நான் Buzzஸ‌, ப‌ய‌ண‌ம் செய்த‌ ந‌ட்புக‌ளிட‌ம் இருந்து "ரகு..... வேண்டாம்" என்று வ‌ந்த‌து. ம்...அந்த‌ ப‌‌ய‌ம் இருக்க‌ட்டும்! 190 வ‌ந்த‌வுட‌ன், இருந்த‌ டென்ஷ‌ன் இன்னும் எகிறிய‌து. எல்லாவ‌ற்றையும் Buzzல் புல‌ம்பிக்கொண்டே இருந்தோம். ஒருவ‌ழியாக‌ ச‌ச்சின் 200 அடிக்க‌, உயிர் திரும்பிய‌து. டிவியில் பார்க்க‌முடியாவிட்டாலும், இப்ப‌டி Buzzல் ப‌ய‌ண‌ம் செய்துகொண்டே ந‌ட்புக‌ளோடு பார்த்த‌தும் த்ரில்லிங்காக‌த்தான் இருந்த‌து:). ச‌ச்சினைப் ப‌ற்றி என‌க்கு மிக‌வும் பிடித்த‌ வாச‌க‌ம் - Commit all your crimes when Sachin is batting, they will go unnoticed because even the Lord is watching!

யாமிருக்க‌ ப‌ய‌மேன்......ஆர‌ம்பிச்சுட்டாங்க‌ய்யா!

என்ன‌தான் ஹிட்டானாலும், குடும்ப‌மே சேர்ந்து கும்மி அடித்துக்கொண்டு பார்த்தாலும், சூப்ப‌ர் சிங்க‌ர் ஜூனிய‌ர் நிக‌ழ்ச்சியை நான் அற‌வே வெறுக்கிறேன். குழ‌ந்தைக‌ள் பாடுவ‌து ர‌சிக்க‌வேண்டிய‌ ஒன்றுதான். அத‌ற்காக‌ ச‌ரியாக‌ பெர்ஃபார்ம் ப‌ண்ணாத‌ குழ‌ந்தைக‌ளை ப‌ல‌ர் ம‌த்தியில் "இப்ப‌டி ப‌ண்ணிருக்க‌ணும், அப்ப‌டி ப‌ண்ணிருக்க‌ணும்" என்று சொல்லி, அவ‌ர்க‌ளுடைய‌ பெற்றோர் அழுவ‌தை ஸ்லோமோஷ‌னில் காண்பிக்கிறார்க‌ள். க‌ண்ணை மூடிக்கொண்டு கேட்டால், ஏதோ ம‌ர்ம‌ தேச‌ம் நாட‌க‌ம்தான் ஒளிப‌ர‌ப்பாகிக் கொண்டிருக்கிற‌தோ என்னும் அள‌வுக்கு, ஒரு திகிலான‌ பிண்ண‌ணி இசை.

தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்பான‌பின், தோல்வியுற்ற‌ குழ‌ந்தை எப்ப‌டி ம‌றுநாள் ப‌ள்ளிக்குச் சென்று இய‌ல்பாக‌ இருக்க‌ முடியும்? ம‌ற்ற‌ பிள்ளைக‌ள் கிண்ட‌ல் செய்யாம‌லா இருப்பார்க‌ள்? இது ம‌ன‌த‌ள‌வில் மிக‌வும் பாதிக்கும் என்றே நினைக்கிறேன். டிய‌ர் பெற்றோர்ஸ், உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கென்று ஒரு திற‌மை இருக்கும், அதைக் க‌ண்ட‌றிந்து அதில் சிற‌ந்த‌வ‌னா/ளாக‌ வ‌ர‌ உத‌வி செய்யுங்க‌ள். உங்க‌ள் ஆசைக‌ளை அவ‌ர்க‌ள் மேல் திணிக்க‌வேண்டாம். "என் பைய‌ன் ந‌ல்ல‌ சிங்க‌ரா வ‌ர‌ணும்னு நினைக்க‌ற‌து தப்பா?" என்று நீங்க‌ள் கேக்க‌லாம். ப‌திலுக்கு அவ‌ர்க‌ளும், "ஏன்பா, எப்ப‌ பாத்தாலும் ஆபிஸுக்கே போறிங்க‌ளே, நீங்க‌ கிரிக்கெட்டரா ஆயிருக்க‌லாம் இல்ல‌, ச‌ரியான‌ போர்பா நீங்க‌" என்று சொன்னால், உங்க‌ளால் என்ன‌ சொல்ல‌ முடியும்?

இதில் புதிதாக‌ "யாமிருக்க‌ ப‌ய‌மேன்" என்றொரு தொட‌ரை ஆர‌ம்பித்திருக்கிறார்க‌ள். Promotional Stillsல் ஒரு பைய‌ன் விபூதி குங்கும‌த்தை நெற்றியில் இட்டுக்கொண்டு விஷால் ரேஞ்சுக்கு முறைத்துக் கொண்டிருக்கிறான். இது எங்கு போய் முடிய‌ப்போகிற‌தோ?:( ஏன் இப்ப‌டி குழ‌ந்தைக‌ளை போட்டு டார்ச்ச‌ர் செய்கிறார்க‌ள்? அவ‌ர்க‌ளுக்கு TRP ரேட்டிங் ம‌ட்டும்தான் முக்கிய‌ம் போல‌. தொலைக்காட்சி தொட‌ர்க‌ளுக்கு உட‌ன‌டி தேவை ஒரு சென்சார் போர்ட். சென்சார் ஆர‌ம்பித்தால், ப‌ல‌ சீரிய‌ல்க‌ளுக்கு "A" ச‌ர்டிபிக்கேட்தான் வ‌ழ‌ங்க‌ வேண்டியிருக்கும்.

விண்ணைத் தாண்டி வ‌ருவாயா............யோசிச்சு சொல்றேன்

என்ன‌து?! அமெரிக்காவின் வ‌ள‌ர்ச்சிக்காக‌ ஓபாமா ஜெய‌ல‌லிதாவை ச‌ந்திக்கிறாரா? இல‌வ‌ச‌ங்க‌ளை நிறுத்திவிட்டு வேலை வாய்ப்புக‌ளை உருவாக்குவோம் என்கிறாரா க‌லைஞ‌ர்? அடுத்த‌ வ‌ருட‌ம் க‌ட்சி ஆர‌ம்பிப்ப‌து உறுதி என்கிறாரா ர‌ஜினி? சிம்பு ப‌ட‌ம் ந‌ல்லாயிருக்கா?

இந்த‌ ப‌ட‌த்திற்காக‌, ஊரில் இருக்கும் ஆஸ்க‌ர் அவார்ட், பாஸ்க‌ர் அவார்ட் என்று அனைத்து அவார்ட்க‌ளையும் சிம்பு வாங்கினாலும் ப‌ர‌வாயில்லை. அவ‌ரின் விர‌ல் வித்தைக‌ளில் ம‌ய‌ங்கி நான் இன்னும் கோமாவிலேயே இருப்ப‌தால் இப்போதைக்கு ப‌ட‌ம் பார்க்க‌க்கூடாது என்றே இருந்தேன். ஆனால் மிக‌ அதிச‌ய‌மாக‌ "ப‌ட‌ம் ந‌ல்லாயிருக்கு" என்று ந‌ட்புக‌ள் ரெக‌ம‌ண்ட் செய்கிறார்க‌ள். பார்க்க‌லாம் என்றே நினைக்கிறேன், பார்த்தே ஆக‌வேண்டும் என்ற‌ல்ல‌. பார்க்க‌ நினைத்தாலும், அது ர‌ஹ்மானின் இசைக்காக‌வும், க‌வுத‌ம் ப‌ட‌ங்க‌ளில் ம‌ன‌தை கொள்ளை அடிக்கும் ஒளிப்ப‌திவிற்காக‌வும்.


நேய‌ர் விருப்ப‌ம்

ச‌மீப‌ நாட்க‌ளில் இந்த‌ பாட‌ல்க‌ளை மிக‌வும் விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

விண்ணைத் தாண்டி வ‌ருவாயா - ஆரோம‌லே - அல்ஃபோன்ஸ்

ஆர‌ம்பிக்கும்போதே "வாவ்" என்று சொல்ல‌வைக்கிற‌து. பாட‌ல் வ‌ரிக‌ள் புரியாவிட்டாலும் கிடாரின் இசையில் ஆர‌ம்பித்து, எப்ப‌டியோ ஈர்த்துவிடுகிறார் ர‌ஹ்மான்:)

கோவா - இதுவ‌ரை இல்லாத‌ உண‌ர்விது - ஆன்ட்ரியா, அஜிஷ்

ந‌டிகை ஆன்ட்ரியாதான்.....எக்ஸ‌ல‌ண்ட் வாய்ஸ், "ஹோஹோஹோ" என்று ஹ‌ம்மிங் செய்யும்போது சொக்க‌வைக்கிறார்.

பையா - துளி துளி - ஹரிச‌ர‌ண், த‌ன்வி

முத‌லில் கேட்கும்போது பாடிய‌து கார்த்திக்கோ என்று நினைத்தேன். அழ‌கான, புரியும்ப‌டியான‌ வார்த்தை உச்ச‌ரிப்புக‌ள். ந‌ம்ம‌ த‌மு ந‌டித்திருக்கும்‌ ப‌ட‌ம். இதிலாவ‌து பெண்க‌ள் ர‌சிக்கும்ப‌டி கார்த்தியை காண்பித்திருப்பார்க‌ள் என்று எல்லாம் வ‌ல்ல‌ (லிங்கு)சாமியை வேண்டிக்கொள்வோம்.

18 comments:

  1. அந்த சின்ன பசங்கள பாடா படுத்துறது எனக்கும் பிடிக்கல,
    சரியா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  2. //என்னைப் பொறுத்த‌வ‌ரை சுஜாதா ஒரு எழுத்து யானை என்றே சொல்வேன். இற‌ந்தாலும், ஆயிர‌ம் பொன் என்ன‌....அவ‌ர் கோடி பொன்னுக்கு ச‌ம‌ம். வி மிஸ் யு சார்:(//.......எஸ்,வி மிஸ் யு சார்.

    தொலைக்காட்சியில் குழந்தைகளின் பங்களிப்பைப் பற்றி சரியா சொல்லி இருக்கீங்க ரகு. அந்தமாதிரி நிகழ்ச்சிகளை பார்க்குப்போது எனக்கும்கூட சில நேரம் ரொமப வருத்தமா இருக்கும். ஆனால் TRP ரேட்டிங் அப்படியென்ற வார்த்தையில் மொத்தமும் அடங்கிவிடுகிறது.

    ReplyDelete
  3. ஆஹா அருமையான பதிவு நண்பரே ! . எழுத்து சிகரம் சுஜாதா பற்றி எழுதி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி !

    ReplyDelete
  4. நான் சீக்கரம் முடித்த ஒரே பெரிய நாவல் கொலையுதிர் கால‌ம்
    தான்....எனக்கும் இப்போ கோவா ஆண்ட்ரியா பாட்டு தான்
    fauvorite !!

    ReplyDelete
  5. எழுத்தாளர். சுஜாதா பத்தின கடைசி வரிகள் ரொம்ப சரி.

    சச்சின் பற்றிய கடைசி வாக்கியமும் ரொம்ப நல்லாருக்கு. :)

    பெற்றோர், குழந்தைகள் ஒப்பீடு அழகு.
    மும்பையில் குழந்தைகள் டி.வி. தொடரில் நடிப்பது தடை செய்யப்பட்டது. சென்னையிலும் தடை செய்யப்பட்டால் நல்லது.

    சிம்பு ப‌ட‌ம் ந‌ல்லாயிருக்கா? //
    அடி தான் விழும், ஓவர் பில்டப் குடுத்தா. போய்ப் பாருங்க, தெரியும்.
    த்ரிஷாவிற்காகவும் படம் பார்க்கலாம் ரகு.

    ஓ, தமனாக்குத் தான் தமுவா... கடவுளே இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதுன்னு தெரில.

    ReplyDelete
  6. {என்ன‌தான் ஹிட்டானாலும், குடும்ப‌மே சேர்ந்து கும்மி அடித்துக்கொண்டு பார்த்தாலும், சூப்ப‌ர் சிங்க‌ர் ஜூனிய‌ர் நிக‌ழ்ச்சியை நான் அற‌வே வெறுக்கிறேன். குழ‌ந்தைக‌ள் பாடுவ‌து ர‌சிக்க‌வேண்டிய‌ ஒன்றுதான். அத‌ற்காக‌ ச‌ரியாக‌ பெர்ஃபார்ம் ப‌ண்ணாத‌ குழ‌ந்தைக‌ளை ப‌ல‌ர் ம‌த்தியில் "இப்ப‌டி ப‌ண்ணிருக்க‌ணும், அப்ப‌டி ப‌ண்ணிருக்க‌ணும்" என்று சொல்லி, அவ‌ர்க‌ளுடைய‌ பெற்றோர் அழுவ‌தை ஸ்லோமோஷ‌னில் காண்பிக்கிறார்க‌ள். க‌ண்ணை மூடிக்கொண்டு கேட்டால், ஏதோ ம‌ர்ம‌ தேச‌ம் நாட‌க‌ம்தான் ஒளிப‌ர‌ப்பாகிக் கொண்டிருக்கிற‌தோ என்னும் அள‌வுக்கு, ஒரு திகிலான‌ பிண்ண‌ணி இசை.

    தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்பான‌பின், தோல்வியுற்ற‌ குழ‌ந்தை எப்ப‌டி ம‌றுநாள் ப‌ள்ளிக்குச் சென்று இய‌ல்பாக‌ இருக்க‌ முடியும்? ம‌ற்ற‌ பிள்ளைக‌ள் கிண்ட‌ல் செய்யாம‌லா இருப்பார்க‌ள்? இது ம‌ன‌த‌ள‌வில் மிக‌வும் பாதிக்கும் என்றே நினைக்கிறேன். டிய‌ர் பெற்றோர்ஸ், உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கென்று ஒரு திற‌மை இருக்கும், அதைக் க‌ண்ட‌றிந்து அதில் சிற‌ந்த‌வ‌னா/ளாக‌ வ‌ர‌ உத‌வி செய்யுங்க‌ள். உங்க‌ள் ஆசைக‌ளை அவ‌ர்க‌ள் மேல் திணிக்க‌வேண்டாம். "என் பைய‌ன் ந‌ல்ல‌ சிங்க‌ரா வ‌ர‌ணும்னு நினைக்க‌ற‌து தப்பா?" என்று நீங்க‌ள் கேக்க‌லாம். ப‌திலுக்கு அவ‌ர்க‌ளும், "ஏன்பா, எப்ப‌ பாத்தாலும் ஆபிஸுக்கே போறிங்க‌ளே, நீங்க‌ கிரிக்கெட்டரா ஆயிருக்க‌லாம் இல்ல‌, ச‌ரியான‌ போர்பா நீங்க‌" என்று சொன்னால், உங்க‌ளால் என்ன‌ சொல்ல‌ முடியும்?
    }

    சரியற்ற பார்வை என்றே கருதுகிறேன்..

    நிகழ்ச்சியில் பாட வரும் குழந்தைகள் பெரும்பாலும் பாட்டில் திறமை இருக்கும் கற்றுக் கொள்ளும் குழந்தைகள்தான்;எனவே அவர்கள் சிறு வயதிலேயே பெர்ஃபார்ம் செய்ய மிகப் பெரிய களமும் அனந்த வைத்தியநாதன் போன்ற தொழில் முறை திறமையாளர்களின் அணுக்கமும் கிடைப்பது சாதாரண விஷயமில்லை.

    இரண்டாவது இன்றைய பிண்ணனி பாடும் இளைய தலைமுறை(30-35 வயது ரேஞ்ச்)பாடகர்களின் திறமையில் 75 சதம் ஜூனியர் சிங்கர்களுக்கு இருக்கிறது;குழந்தைகள் கலக்குகிறார்கள்..

    போட்டி மனப்பான்மை வளர்வதும் நல்லதே;திறன்களைக் கூர்மைப்படுத்திக் கொள்வதில் இளவயதிலேயே கிடைக்கும் ஆர்வம் வாழ்வில் அவர்களைப் பெரிய இடங்களுக்குக் கொண்டு செல்லும்.

    இரண்டாவது ஆயிரக் கணக்கான குழந்தைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர்களைத்தான் நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள்..பாடவே வராத,திறனேயில்லாத குழந்தையைக் கூட்டி வந்து டிவி கேமிராவை முறைக்க வைத்து,பாடு என்று படுத்தினால்தான் நீங்கள் எழுதி இருப்பது சரி !

    பள்ளியில் மற்ற குழந்தைகளுக்கு பங்களிக்கும் குழந்தைகள் ஏற்கனவே ஸ்டார்களாயிருப்பார்களாயிருக்கும் !
    குழந்தைகளின் தோழர்களுடன் அளவளாவிப் பாருங்கள் !

    ReplyDelete
  7. வாங்க‌ டாக்ட‌ர், ஒரு ஸ்மைலியோட‌ முடிச்சுட்டிங்க‌ளே:)

    ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, ம்..கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மாத்தான் இருக்கு:(

    ReplyDelete
  8. ந‌ன்றி ப்ரியா, TRP முக்கிய‌ம்தான், ஆனா அதுக்காக‌ இவ‌ங்க‌ ப‌ண்ற‌து டூ ம‌ச்!

    ந‌ன்றி ப‌னித்துளி ச‌ங்க‌ர், சுஜாதா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்துல‌ நீங்க‌ளும் ஒரு மாண‌வ‌ர் போல‌:)

    ReplyDelete
  9. ந‌ன்றி ஜெட்லி, என‌க்கும் "கொலையுதிர் கால‌ம்" ரொம்ப‌வே புடிச்சிருந்த‌து:)

    ந‌ன்றி விக்கி, சுஜாதாவை விரும்பாத‌வ‌ங்க‌ யார் இருக்கா:)

    குழ‌ந்தைக‌ள் நிக‌ழ்ச்சிக‌ளில் க‌ல‌ந்துகொள்வ‌தை த‌‌டை செய்ய‌ப்ப‌ட‌ணும்னு சொல்ல‌ல‌, ஆனா எதுக்கும் ஒரு லிமிட் இருக்க‌ணும், குழ‌ந்தைக‌ளை ப்ரொஜ‌க்ட் செய்வ‌து எல்லை மீறி போய்ட்டிருக்கு:(

    ஹாஹ்ஹா, உங்க‌ ப‌திவை ந‌ம்பித்தான் ப‌ட‌ம் பாக்க‌போறேன், மொக்கையாயிடுச்சுன்னா, மொத்த‌ செல‌வையும் உங்க‌கிட்ட‌தான் க்ளைம் ப‌ண்ணுவேன்:)

    ReplyDelete
  10. ந‌ன்றி அறிவ‌ன், நீங்க‌ சொல்ற‌தை 80% ஒத்துக்க‌றேன், ஆனா வ‌ர்ற‌ அந்த‌ 20 குழ‌ந்தைக‌ளிலும், நிக‌ழ்ச்சியில‌ ஃபில்ட‌ர் ப‌ண்றாங்க‌ இல்லியா. தேர்வு செய்ய‌ப்ப‌டாத‌ குழ‌ந்தையின் ம‌ன‌நிலையை கொஞ்ச‌ம் நினைச்சு பாருங்க‌. ம‌றுநாள் எப்ப‌டி அந்த‌ குழ‌ந்தையால் எல்லோரையும் இய‌ல்பாக‌ ஃபேஸ் ப‌ண்ண‌முடியும்? இது வெறும் போட்டிதான், இதோடு உல‌கம் முடிய‌ல‌ன்னு நினைச்சா ச‌ந்தோஷ‌ம், ஆனா அதுபோல‌ எத்த‌னை குழ‌ந்தைக‌ள் தோல்விக‌ளை ஈஸியா எடுத்துக்க‌றாங்க‌. குழ‌ந்தைக‌ள் போட்டியில‌ க‌ல‌ந்துக்க‌வே கூடாதுன்னு சொல்ல‌ல‌, ஆனா அவ‌ங்க‌ளை விம‌ர்சிக்கும்போது ப‌க்குவ‌மா கையாள‌ணும், அது இங்கே ந‌ட‌ப்ப‌தில்லை, TRP ம‌ட்டுமே முக்கிய‌மாய்ப‌டுகிற‌து

    ReplyDelete
  11. நிறைய மேட்டர் கலவையா எழுதிருக்கீங்க; Nice.

    ReplyDelete
  12. கமல் லெட்டரு - சூப்பர் மேட்டரு!

    நம்ம சுஜாதா சாரை 'எழுத்து யானை' என்று மேலும் ஒரு பட்டம் கொடுத்து கௌரவித்ததற்கும், அவரது சில புத்தகங்களை பரிந்துரைத்ததற்கும் நன்றி...

    அவரது புத்தகத்தை படித்து முடித்ததும், பின் அட்டையில் இருக்கும் அவரது ஃபோட்டோவை 2 நிமிடம் உற்றுப் பார்த்து மௌன அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். சரியா தப்பா தெரியவில்லை... ஆனால் ஆறுதலாக இருக்கிறது.

    விண்ணைத்தாண்டி வருவாயா.. பார்த்தேன்... உங்களுக்கு LOVE FAILUREனா இந்த படம் ரொம்ப பிடிக்கும். இல்லன்னாலும் பிடிக்கும், காரணம், A.R.ரஹ்மான் மேஜிக் படம் ஃபுல்லா சூப்பரா இருக்கு...

    -
    HARESH NARAYAN

    ReplyDelete
  13. நன்றாக எழுதுகிறீர்கள்!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. ந‌ன்றி மோக‌ன்

    ந‌ன்றி ஹ‌ரிஷ், அவ‌ருக்கு நான் ப‌ட்ட‌ம் குடுக்க‌ற‌தா? நீங்க‌ வேற‌....:) ர‌ஹ்மான் மேஜிக் இருந்தாலும் ய‌ங் சூப்ப‌ர் ஸ்டார் 'ந‌டிச்சிருக்க‌ற‌' ப‌ட‌மாச்சே, அதுக்காக‌வாவ‌து ஒரு த‌ட‌வை பாக்க‌ணும் போல‌!

    ந‌ன்றி ராஜ‌ ந‌ட‌ராஜ‌ன்

    ReplyDelete
  15. எனக்கு 100 ரன் எடுத்த போது சச்சின் 200 ரன் எடுக்க வாய்ப்பு இருப்பதாக தோனியது.அவர் ஆடியவிதம் மற்றும் பிட்சின் தன்மையால் அப்படி தோனியது.

    ReplyDelete
  16. முத‌ற் க‌ருத்துக்கும் வ‌ருகைக்கும் ந‌ன்றி மின்ன‌ல்

    ReplyDelete
  17. ஆஹா அருமையான பதிவு நண்பரே !

    ReplyDelete
  18. //
    விண்ணைத் தாண்டி வ‌ருவாயா............யோசிச்சு சொல்றேன்

    என்ன‌து?! அமெரிக்காவின் வ‌ள‌ர்ச்சிக்காக‌ ஓபாமா ஜெய‌ல‌லிதாவை ச‌ந்திக்கிறாரா? இல‌வ‌ச‌ங்க‌ளை நிறுத்திவிட்டு வேலை வாய்ப்புக‌ளை உருவாக்குவோம் என்கிறாரா க‌லைஞ‌ர்? அடுத்த‌ வ‌ருட‌ம் க‌ட்சி ஆர‌ம்பிப்ப‌து உறுதி என்கிறாரா ர‌ஜினி? சிம்பு ப‌ட‌ம் ந‌ல்லாயிருக்கா?
    //
    :))
    [neenga thotty jeya paarunga.....
    athil simbu pidikkumnu ninaikkuren!aanaal naa simbu rasihai illainga]

    ReplyDelete