Sunday, February 21, 2010

ல‌ட்சுமிகாந்த‌ன் கொலை வ‌ழ‌க்கு - 2

என்ன‌தான் க‌த்திக்குத்து வாங்கினாலும் ல‌ட்சுமிகாந்த‌ன் சாக‌வில்லை. வ‌ழிந்த‌ ர‌த்த‌த்தோடு நேராக‌ மீண்டும் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ந‌ற்குண‌த்தின் வீட்டுக்குச் சென்று ந‌ட‌ந்த‌தைக் கூறினார். த‌ன்னுட‌ன் இருந்த‌ ப்ரூ (Brew) என்னும் ஒரு ஆங்கிலோ இந்திய‌ரை, உட‌ன‌டியாக‌ ல‌ட்சுமிகாந்த‌னை ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்க்குமாறு சொன்னார் ந‌ற்குண‌ம். பொருத்த‌மான‌ பெய‌ர்தான்.

ஆனால் ல‌ட்சுமிகாந்த‌னுக்கு வ‌ழியும் ர‌த்த‌மும் ச‌ரி, கோப‌மும் ச‌ரி, கொஞ்ச‌மும் அட‌ங்க‌வில்லை. அத‌னால் ம‌ருத்துவ‌ம‌னைக்குச் செல்லும் முன் முத‌லில் வேப்பேரி காவ‌ல் நிலைய‌த்திற்குச் சென்று, வ‌டிவேலுவும், 30 வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ இன்னொரு ந‌ப‌ரும் சேர்ந்து த‌ன்னை க‌த்தியால் குத்திவிட்ட‌தாக‌ புகார் செய்துவிட்டுதான் ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்றார். இதில் குறிப்பிட‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒன்று காவ‌ல் நிலைய‌த்துக்கு ரிக்ஷாவில் சென்ற‌ பின் ரிக்ஷாவை விட்டு ல‌ட்சுமிகாந்த‌னால் இற‌ங்க‌க்கூட‌ முடிய‌வில்லை. அத‌னால் அப்போது காவ‌ல் நிலைய‌த்தில் இருந்த‌ இன்ஸ்பெக்ட‌ர் கிருஷ்ண‌ன் ந‌ம்பியார் வெளியே வ‌ந்து, ல‌ட்சுமிகாந்த‌ன் சொல்ல‌ சொல்ல‌, புகாரை அவ‌ரே எழுதிக்கொண்டார்.

அத‌ன் பின் பொது ம‌ருத்துவ‌ம‌னையில், வென்லாக் வார்டில் (Wenlock Ward) ல‌ட்சுமிகாந்த‌ன் அட்மிட் ஆக‌, டாக்ட‌ர் பி.ஆர்.பால‌கிருஷ்ண‌ன் அவ‌ரை பார்த்த‌போது, ஏற‌க்குறைய‌ த‌ன்னுடைய‌ வாழ்வின் முடிவிற்கே ல‌ட்சுமிகாந்த‌ன் வ‌ந்திருந்தார். க‌த்தியால் குத்துப்ப‌ட்ட‌ பின் நிறைய‌ நேர‌ம் தாம‌த‌ப்ப‌டுத்தி வ‌ந்த‌தால், ம‌ருத்துவ‌ர்க‌ளால் காப்பாற்ற‌ முடியவில்லை. ந‌வ‌ம்ப‌ர் 9, 1944 அன்று அதிகாலை 4:15 ம‌ணிக்கு, வ‌ழ‌க்க‌மாக‌ச் சொல்வ‌துபோல், சிகிச்சை ப‌ல‌னின்றி இற‌ந்தார்.

ல‌ட்சுமிகாந்த‌னை வ‌டிவேலுவும், நாக‌லிங்க‌மும் கொன்ற‌து உண்மைதான். ஆனால் இந்த‌ திட்ட‌த்திற்கு பின் ஆரிய‌வீர‌சேன‌ன், ஜெயான‌ந்த‌ம், ராஜாபாத‌ர், ஆறுமுக‌ம் போன்றோரும் இருந்த‌ன‌ர். போலீஸாரின் அதிர‌டியில் முத‌லில் மாட்டிய‌து வ‌டிவேலு. ந‌வ‌ம்ப‌ர் 9ம் தேதிய‌ன்றே வ‌டிவேலுவைக் கைது செய்த‌ன‌ர் போலீஸார். பின்பு ஒவ்வொருவ‌ராக‌ கைது செய்ய‌ப்ப‌ட‌‌, க‌டைசி நேர‌ திருப்ப‌மாக‌ ஜெயான‌ந்த‌ம் அப்ரூவ‌ராக‌ மாறினான். இத‌ன்பின்தான் பெரிய‌ த‌லைக‌ள் உருள‌ ஆர‌ம்பித்த‌ன‌.

ந‌வ‌ம்ப‌ர் 27, 1944 - அசோகா பிலிம்ஸ் அலுவ‌ல‌க‌த்துக்கு போலீஸார் வ‌ந்து என்.எஸ்.கிருஷ்ண‌னை கைது செய்வ‌தாக‌க் கூறின‌ர் போலீஸார். எதுவும் கூற‌வில்லை என்.எஸ்.கே. அமைதியாக‌ அவ‌ர்க‌ளுட‌ன் கிள‌ம்பினார். அதே நேர‌த்தில் மாம்ப‌ல‌த்தில் தியாகராஜ‌ பாக‌வ‌த‌ரும் கைது செய்ய‌ப்ப‌ட்டார். ஆனால் ஸ்ரீராமுலு நாயுடு ம‌ட்டும் ஜ‌ன‌வ‌ரியில்தான் கைது செய்ய‌ப்ப‌ட்டார்.



பாக‌வ‌த‌ரும், என்.எஸ்.கேவும் ஜாமீனில் வெளிவ‌ந்த‌ன‌ர். வெளியே வ‌ந்த‌வுட‌ன் விறுவிறுவென்று ஒப்பந்த‌ம் செய்துகொண்டிருந்த‌ ப‌ட‌ங்க‌ளிலெல்லாம் என்.எஸ்.கே ந‌டித்து முடித்தார். ஜ‌ன‌வ‌ரி 12, 1945 அன்று இருவ‌ரின் ஜாமீனும் ர‌த்தான‌து. உய‌ர்நீதிம‌ன்ற‌ உத்த‌ர‌வுப்ப‌டி, பாக‌வ‌த‌ரும், என்.எஸ்.கேவும் சென்னை ம‌த்திய‌ சிறையில் அடை‌க்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

செஷ‌ன்ஸ் விசார‌ணை ஏப்ர‌ல் 12, 1945 அன்று ஆர‌ம்ப‌மான‌து. ஸ்ரீராமுலு நாயுடு சார்பாக‌ வாதாட‌ பிர‌ப‌ல‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கே.எம்.முன்ஷி ப‌ம்பாயிலிருந்து வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டிருந்தார். அத‌ற்காக‌ முன்ஷிக்கு ஒரு நாளைக்கு ரூ.75,000 கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. பாக‌வ‌த‌ருக்காக‌வும், என்.எஸ்.கேவுக்காக‌வும் வாதாட‌ வி.டி.ர‌ங்க‌சாமி அய்ய‌ங்கார், வி.ராஜ‌கோபால‌ச்சாரி, ரோல‌ண்ட் பிராட‌ல், எஸ்.கோவிந்த‌சாமி நாத‌ன் ஆகியோர் ஆஜ‌ராகி இருந்தார்க‌ள்.

கே.எம்.முன்ஷி வாத‌த் திறமை ஸ்ரீராமுலு நாயுடுவைக் காப்பாற்றிய‌து. ஆம், கொலைத் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌வ‌ம்ப‌ர் 7, 1944 அன்று, ப‌ம்பாய் தாஜ் ம‌கால் ஹோட்ட‌லில் ச‌ர் ஆர்.கே.ச‌ண்முக‌ம் செட்டியாருட‌ன், ஸ்ரீராமுலு நாயுடு த‌ங்கி இருந்த‌தாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ நிரூப‌ண‌ம் ஏற்றுக்கொள்ளப்ப‌ட்டு ஏப்ர‌ல் 20, 1945 அன்று ஸ்ரீராமுலு நாயுடு விடுத‌லை செய்ய‌ப்ப‌ட்டார். இத‌ன்பின் என்.எஸ்.கேவுக்காக‌வும் வாதாட‌ கே.எம்.முன்ஷி நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

ந‌வ‌ம்ப‌ர் 2 முத‌ல் 11 வ‌ரை என்.எஸ்.கே சேல‌ம் ந‌க‌ரில் இருந்த‌தை த‌க்க‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் நிரூபித்தார் முன்ஷி. சேல‌ம் மாட‌ர்ன் தியேட்ட‌ர்ஸில் ப‌ணிபுரிந்த‌ ப‌ல‌ரும் என்.எஸ்.கேவுக்கு சாத‌க‌மாக‌ சாட்சி அளித்த‌ன‌ர். ஆனாலும் நீதிப‌திக‌ள் நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளில் திருப்தி அடைய‌வில்லை. 27 நாட்க‌ள் விசார‌ணை முடிந்த‌பின் மே 5, 1945 அன்று தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

வ‌டிவேலு, நாக‌லிங்க‌ம், ஆரிய‌வீர‌சேன‌ன், ராஜாபாத‌ர் ஆகியோர் கொலை, கொலைக்கான‌ ச‌தி ஆகிய‌வ‌ற்றில் குற்ற‌வாளிக‌ளாக‌த் தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ர், என்.எஸ்.கிருஷ்ண‌ன் - இவ‌ர்க‌ள் இருவ‌ரும் கொலைக்கான‌ ச‌தித் திட்டத்துக்கு உட‌ந்தையாக‌ இருந்த‌ன‌ர் என்று ஒன்ப‌து பேர் அட‌ங்கியிருந்த‌ நீதிப‌திக‌ள் குழுவில் ஆறு பேர் தெரிவித்திருந்த‌தால், ஆயுள் த‌ண்ட‌னை அளிக்க‌ப்ப‌ட்டு இருவ‌ரும் மீண்டும் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

72 கார‌ண‌ங்க‌ளை சுட்டிக்காட்டி ஜுலை 12, 1945 அன்று உய‌ர்நீதிம‌ன்ற‌த்தில் பாக‌வ‌த‌ரும், கிருஷ்ண‌னும் மேல்முறையீடு செய்த‌ன‌ர். மேல்முறையீடு ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்டு அக்டோப‌ர் 22, 1945 அன்று வ‌ழ‌க்கு விசார‌ணைக்கு வ‌ந்த‌து. ஆனாலும் அக்டோப‌ர் 29 அன்று உய‌ர்நீதிம‌ன்ற‌ தீர்ப்பு, செஷ‌ன்ஸ் நீதிம‌ன்ற‌ம் அளித்த‌ ஆயுள் த‌ண்ட‌னையை உறுதி செய்த‌து. இத‌ற்குப்பின் ல‌ண்ட‌ன் ப்ரிவி க‌வுன்சிலில் (Privy Council) பாக‌வ‌த‌ரும், கிருஷ்ண‌னும் அப்பீல் செய்த‌ன‌ர்.




இந்த‌முறை இருவ‌ருக்காக‌வும் வாதாட‌ வ‌ந்த‌வ‌ர் வேலூர் எல்.எத்திராஜ். பாக‌வ‌த‌ரும், கிருஷ்ண‌னும் ல‌ட்சுமிகாந்த‌னின் சில‌ எதிரிக‌ளை ந‌வ‌ம்ப‌ர் 7, 1944 அன்று ஒற்றைவாடை தியேட்ட‌ரில் ச‌ந்தித்து கொலைக்காக‌ ப‌ணம் கொடுத்த‌ன‌ர் என்று பிராசிக்யூஷ‌ன் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌ட்டிருந்த‌து. ஆனால் சாட்சிய‌த்தில், ச‌தித் திட்ட‌ம் தீட்டிய‌ தின‌ம் ந‌வ‌ம்ப‌ர் 7 என்றும், குற்ற‌ப் ப‌த்திரிக்கையில் ந‌வ‌ம்ப‌ர் 8 என்றும் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌தை சுட்டிக் காட்டினார் எத்திராஜ். மேலும் அப்ரூவ‌ரான‌ ஜெயான‌ந்த‌ம் கிட்ட‌த‌ட்ட‌ ஆறு வித‌மான‌ வாக்குமூல‌ம் கொடுத்திருந்தார். அதில் ஒவ்வொன்றும் ம‌ற்றொன்றுக்கு ரொம்ப‌வே முற‌ண்ப‌ட்டிருந்த‌தையும் சுட்டிக் காட்டினார் எத்திராஜ். ச‌தித் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌வ‌ம்ப‌ர் 7 முன்பே, அக்டோப‌ர் 19ம் தேதிய‌ன்று ல‌ட்சுமிகாந்த‌னைக் கொல்ல‌ முய‌ற்சி ந‌ட‌ந்த‌தையும் நிரூபித்தார் எத்திராஜ். இப்ப‌டி ப‌டிப்ப‌டியாக‌ செஷ‌ன்ஸ் கோர்ட் வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இந்த‌ வ‌ழ‌க்கில் விட்டிருந்த‌ நிறைய‌ ஓட்டைக‌ளை எத்திராஜ் த‌ன் திற‌மையால் அடைத்தார்.

தீர்ப்ப‌ளிக்கும் நாள் வ‌ந்த‌து. தீர்ப்பின் சாராம்ச‌ம் இதுதான், "அப்ரூவ‌ர் ஜெயான‌ந்த‌த்தின் வாக்குமூல‌ம் நிரூப‌ண‌மாக‌வில்லை. அத‌னால் ஜெயான‌ந்த‌த்தின் வாக்குமூல‌த்தை வைத்து பார்க்கும்போது தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ரையும், என்.எஸ்.கிருஷ்ண‌னையும் த‌ண்டிப்ப‌து நியாய‌மாகாது". இருவ‌ரும் விடுத‌லை ஆனார்க‌ள். ஏற‌க்குறைய‌ 30 மாத‌ங்க‌ள்.....ஆம், இர‌ண்ட‌ரை வ‌ருட‌ங்க‌ள் சிறையில் க‌ழித்த‌ பிற‌கு!

#சிறையில் இருந்து வ‌ந்த‌ பின்பு பாக‌வ‌த‌ரின் திரையுல‌க‌ வாழ்க்கை ச‌ரிந்து போன‌து. திராவிட‌க் க‌ருத்துக‌ளை ச‌முதாய‌ சீர்திருத்த‌ ப‌ட‌ங்க‌ளாக‌ ம‌க்க‌ள் பார்க்க‌த் தொட‌ங்கிய‌ கால‌ம‌து. பாக‌வ‌த‌ரின் பாட‌ல்க‌ள் நிறைந்த‌ மென் ப‌ட‌ங்க‌ள் எடுப‌டாம‌ல் போன‌து. த‌ன் இறுதிக் கால‌த்தில் ஆண்ட‌வ‌னிட‌‌த்தில் மிகுந்த‌ ப‌க்தி கொண்டு கோயில்க‌ளில் ம‌ட்டுமே பாடி, ஏழ்மையில் மூழ்கி ம‌றைந்தார். த‌ன்னைப் ப‌ற்றிக் குறிப்பிட்டு பாக‌வ‌த‌ர் சொன்ன‌து "என்னைப் போல் வாழ்ந்த‌வ‌னும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்த‌வ‌னும் இல்லை"

#இத‌ற்கு நேர்மாறாக‌ சிறையில் இருந்து வ‌ந்த‌ பின்பு என்.எஸ்.கே ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்து புக‌ழின் உச்சியைத் தொட்டார். என்.எஸ்.கிருஷ்ண‌ன்-டி.ஏ. ம‌துர‌ம் ந‌கைச்சுவை காட்சிக‌ள் இருக்கிற‌தா என்று தெரிந்துகொண்ட‌ பின்பே ப‌ட‌ம் பார்க்கும் அள‌வுக்கு, ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம் பெற்றார் என்.எஸ்.கே.

#சிறையிலிருந்து விடுதலையான‌பின் நிறைய‌ ஊர்க‌ளில் என்.எஸ்.கேவுக்கு விழா எடுத்தார்க‌ள். ஜுலை 30, 1947 அன்று திருவ‌ல்லிக்கேணியில் ந‌ட‌ராஜா க‌ல்விக் க‌ழ‌க‌ம் ந‌ட‌த்திய‌ பொதுக்கூட்ட‌த்தில் ப‌ம்ம‌ல் ச‌ம்பந்த‌ முத‌லியார் என்.எஸ்.கேவுக்கு "க‌லைவாண‌ர்" என்ற‌ ப‌ட்ட‌ம் சூட்டி, "க‌லைவாண‌ர்" என்று பொறிக்க‌ப்ப‌ட்ட‌ வெள்ளிக் கேட‌ய‌த்தையும் அளித்தார்.

23 comments:

  1. உண்மைலயே “க்ரைம்” லேபிளுக்கு பொருத்தமான மேட்டர்தான்.

    வக்கீல்ஸ் வாங்குன காசுக்க வஞ்சகமில்லாம, கிரிமினல்ஸா இருந்தாலும் விடுதலை வாங்கிக் குடுத்துடுவாங்க போலயே..!
    :-)

    ReplyDelete
  2. ரொம்ப அற்புதமா ரெண்டு பதிவுகளும் எழுதிருக்கீங்க. இது போன்ற பதிவுகள் தொடர்ந்து எழுதவும். மிக எளிய நடையில் சுவாரஸ்யமா எழுதிருக்கீங்க. வெளியே வந்ததும் பாகவதர் மற்றும் NSK இருவரும் வாழ்ந்த விதம் ஒப்பிட்டு எழுதியது அழகு.

    ஒரு சின்ன கருத்து: சில இடங்களில் மட்டும் தேவையற்ற details தராமல் செல்லலாம் . படிப்பவர்களுக்கு அவ்ளோ details படிக்கும் ஆர்வம் இருக்குமா தெரியாது இல்லையா?

    சமீபத்தில் நான் ரொம்ப ரசித்த பதிவுகளில் இவற்றை சேர்க்கலாம் !

    ReplyDelete
  3. அப்போல்லாம் முன்ஜாமீன் வசதி இல்லையா??
    ஏன் இரண்டு வருஷம் உள்ளே இருந்தாங்க....
    இப்போலாம் குற்றம் பண்ணவங்க வெளிய தானே
    இருக்காங்க.....???

    ReplyDelete
  4. சுவாரசியமான நடை ரகு. ரொம்பவும் ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
  5. தெரியாத நல்ல தகவல்களை வழங்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. இப்போதுள்ள எத்திராஜ் கல்லூரி -எல்.எத்திராஜ்,என்ற நீங்கள் குறிப்பிட்ட வழக்கறிஞர்-உடையது.என்.எஸ்.கே கொடுத்த பீஸ் .

    ReplyDelete
  7. படிக்க விறுவிறுப்பாக இருந்தது.

    ReplyDelete
  8. ரகு,
    தயவு செஞ்சி இந்த மாதிரி விஷயங்களை நிறைய எழுதுங்க... உங்களுக்கு ஃப்ளோ நல்லா வருது. ரொம்பவும் சுவாரஸ்யமா இருந்தது.

    -
    ட்ரீமர்

    ReplyDelete
  9. இதிலிருந்து என்ன தெரிகிறது? கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தண்டனையடைந்தவனும் மக்கள் நாயகனாக மலரலாம். அவனுக்கு

    எத்திராஜ் தன் தொழிலில் சம்பாத்தித்த பணத்தை வைத்துத்தான் எத்திராஜ் காலேஜ் ஆரம்பித்தார்.

    He was a famous criminal lawyer in those days. He did not become famouse only because of this case. He handled the case, or rather, was given this brief, only because he was already famous.

    ReplyDelete
  10. அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் . மிகவும் ரசனையுடன் தளத்தை வடிவமைத்து இருக்கிறீர்கள்!

    ReplyDelete
  11. ரொம்ப ஹோம் வொர்க் பண்ணி இருப்பிங்க போல

    ReplyDelete
  12. ந‌ன்றி ராஜூ, வேற‌ வ‌ழியில்ல‌ங்க‌, அவ‌ங்க‌ க‌ட‌மை அது!

    ந‌ன்றி மோக‌ன், உங்க‌ க‌ருத்துக்கு ந‌ன்றி, க‌ண்டிப்பா அடுத்த‌ முறை திருத்திருக்க‌றேன்:)

    ReplyDelete
  13. ந‌ன்றி ஜெட்லி, அப்போல்லாம் கொஞ்ச‌ம் நீதி இருந்த‌து போல‌:)

    ந‌ன்றி விக்கி, நீங்க‌ சொன்னா ச‌ரிதான்:)

    ReplyDelete
  14. //நீங்கள் குறிப்பிட்ட வழக்கறிஞர்-உடையது.என்.எஸ்.கே கொடுத்த பீஸ்//
    அப்ப‌டியா? இந்த‌ த‌க‌வ‌ல் இப்போதான் கேள்விப்ப‌ட‌றேன், ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி KASBABY

    ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, உங்க‌ க‌ருத்துக்கு ந‌ன்றி

    ReplyDelete
  15. ந‌ன்றி ஹ‌ரிஷ், நீங்க‌ளே சொல்லிட்டீங்க‌, க‌ண்டிப்பா எழுத‌றேன்:)

    ந‌ன்றி ஜோ, ஒரு சின்ன‌ வேண்டுகோள், ப‌ல‌ரும் வ‌ல‌ம் வ‌ரும் ஒரு பொதுவான‌ த‌ள‌த்தில் யாரையும் ஒருமையில் குறிப்பிட‌வேண்டாமே, ப்ளிஸ்:) "வாஷிங் மெஷின்" என்றொரு வார்த்தையை நாம் அறியும் முன்ன‌ரே அதைப் ப‌ற்றி பாடிய‌வ‌ர் க‌லைவாண‌ர் என்.எஸ்.கே

    ReplyDelete
  16. ந‌ன்றி ப‌னித்துளி ச‌ங்க‌ர், எல்லா புக‌ழும் btemplates.comக்கே:)

    ந‌ன்றி பேநா மூடி, ம்...கொஞ்ச‌ம்:)

    ReplyDelete
  17. ரொம்ப சுவாரஸியமாக‌ இருந்தது... படிக்கும்போது கொஞ்சம்கூட ஆர்வம் குறையவிடாமல் இருக்கு உங்க எழுத்துக்கள்!

    ReplyDelete
  18. "அப்போல்லாம் முன்ஜாமீன் வசதி இல்லையா??"

    ஆம். இல்லை. முன் ஜாமீன் வசதி 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மேலும், முன்பு கொலை வழக்குகளில் பொதுவாக ஜாமீன் வழங்கப்படுவதில்லை. அதிக வழக்குகள் இல்லை என்பதால், லண்டன் பிரிவி கவுன்சில் வரையில் சுமார் மூன்று ஆண்டுகளுக்குள் இந்த வழக்கு நடந்து முடிந்து விட்டதை காணலாம்.

    பிற்காலத்தில் நீதிபதி கிருஷ்ண ஐயர்தான் ‘bail is rule. jail is exception' என்று புதிய குற்றவியல் கொள்கையினை அறிமுகப்படுத்தினார்.

    9 நீதிபதிகள் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். 9 ஜூரர்கர் என்று இருக்க வேண்டும். 1973 சட்டத்திற்கு பின்பு இந்தியாவில் ஜூரர்கள் முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கான முக்கிய காரணமாக இருந்த நானாவதி வழக்கினைப் பற்றி எனது பதிவில் காணலாம்.

    நானாவதி வழக்கினைப் பற்றி சில வருடங்களுக்கு முன்பு எழுதிய பொழுது, லஷ்மிகாந்தன் வழக்கினைப் பற்றி எழுத விரும்பி, எவ்வளவு தேடியும் இந்த வழ்க்கு தீர்ப்பு கிடைக்கவில்லை. எனவே எனது ஆசை நிராசையானது.

    எழுத்தாளர் ரண்டார்கை, குமுதத்திலோ அல்லது புத்தகமாகவோ, இந்த வழக்கினைப் பற்றி எழுதியுள்ளார்.

    முக்கியமாக நான் அறிந்த சுவராசியமான விபரம், பாகவதர் தனது ஹீரோ இமேஜால், வழக்கினை சந்திக்கையில் ம்னரீதியில் பாதிக்கப்பட்டு அதன் பின்ன்ர் எழவேயில்லை. ஆனால் கிருஷ்ணர் வழக்கினையும் வேடிக்கையாகவே எடுத்துக் கொண்டு, நீதிமன்றத்தில் மற்றவர்கள் பேசுவதை மிமிக்ரி செய்து காட்டுவாராம்....வினோதமான மனிதர்.

    நல்ல முயற்சி. ஆதார தகவல்களை வெளியிட்டால், என்னைப் போல மேலும் அறிய விரும்புவரகளுக்கு பலனளிக்கும்.

    ReplyDelete
  19. ந‌ன்றி ப்ரியா, ஊர்ல‌தான் இருக்கிங்க‌ளா?...:)

    ந‌ன்றி பிர‌பு, வ‌ழ‌க்க‌றிஞ‌ராச்சே, அதான் பாய்ண்ட் பாய்ண்ட்டா புட்டு வைக்க‌றிங்க‌. ஜூர‌ர்க‌ள் என்ப‌த‌ற்கு ச‌ரியான‌ த‌மிழ் ப‌த‌ம் தெரியாததால் நீதிப‌தி என்றே குறிப்பிட்டுள்ளேன். த‌வ‌றிருந்தால் ம‌ன்னிக்க‌வும்.

    ReplyDelete
  20. //ஊர்ல‌தான் இருக்கிங்க‌ளா?...:)//...
    கொஞ்சம் உடம்பு சரியில்ல ரகு, அதான்.

    ReplyDelete
  21. ஊர் சுத்தற கெட்ட பழக்கத்துல உங்க கடை மறந்தே போனது.ஆமா!இவ்வளவு சுவாரசியமாக தேதி விலாவரியா வழக்கு நடத்துறீங்களே!எப்படி?

    அது யாரு?கடைல ஒண்டிகிட்டி விவரமா கதை சொல்ல வேண்டாமிங்கிறது:)இதுக்குதான் அஸ்கு,புஸ்கு போடறது.

    ReplyDelete
  22. டேக் கேர் ப்ரியா:)

    ந‌ன்றி ராஜ‌ ந‌ட‌ராஜ‌ன், எல்லாம் புத்த‌க‌த்துல‌ படிச்ச‌துதான்:)

    ReplyDelete
  23. சூப்பர்! இதே மாதிரி நானாவதி கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு இதைப் பத்தியும் எழுதுங்க

    ReplyDelete