Sunday, January 31, 2010

த‌மிழ்ப்ப‌ட‌மும், எர்ணாகுள‌மும்


ப‌ட‌த்துக்கு போய் முத‌ல் சீன்ல‌ சிரிக்க‌ ஆர‌ம்பிச்ச‌வ‌ன், இதோ இப்போ கொஞ்ச‌ நேர‌ம் முன்னாடிதான் வீட்டுக்கு வ‌ந்து சாப்ட்டேன், சாப்பிடும்போதும் சிரிப்பா வ‌ருது. நேத்தே சில‌ ப‌திவ‌ர்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் எழுதியிருந்தாங்க‌, ஆனா அத‌ பாத்த‌வுட‌னே, ந‌ம‌க்கு அந்த‌ சுவார‌ஸ்ய‌ம் போயிட‌க்கூடாதுன்னு ப‌டிக்காம‌ விட்டுட்டேன்.

ப‌ட‌த்துல‌ ஹீரோவோட‌ ஓப்ப‌னிங் சாங் வ‌ரும்போது "இந்த‌ பாட‌லை பாடிய‌வ‌ர் உங்க‌ள் சிவா"ன்னு போட்டுட்டு, அடுத்த‌ ரெண்டே செக‌ண்ட்ல‌ "இந்த‌ பாட‌லை பாடிய‌வ‌ர் உங்க‌ள் சிவா என்று போடும்ப‌டி அவ‌ர் கேட்டுக்கொண்டார்"னு போடுறாங்க‌. அட‌ப்பாவிங்க‌ளா, உங்க‌ கலாய்த்த‌லுக்கு ஒரு அள‌வே இல்லியா! த‌ள‌ப‌தி ர‌சிக‌/ர‌சிகைக‌ள் க‌வ‌னிக்க‌:)) "ஓ ம‌க‌சீயா" பாட்டுல‌ "லாலாக்கு டோல் ட‌ப்பிமா"ன்னு வ‌ரும்போது சிவாவோட‌ ரியாக்ஷ‌ன் பாக்க‌ணுமே, தாங்க‌முடிய‌ல‌டா சாமி! இதுக்கு மேல‌ நான் எதுவும் சொல்ல‌ல‌, ப‌ட‌த்தை பாத்து என்ஜாய் ப‌ண்ணுங்க‌.

நீங்க‌ ப‌ட‌ம் பாக்க‌ற‌தா இருந்தா த‌ய‌வு செய்து விம‌ர்ச‌ன‌ம் ப‌டிச்சுட்டு பாக்காதீங்க‌. நிறைய‌ விஷ‌ய‌ம் தெரிஞ்சுடுச்சுனா, அந்த‌ சுவார‌ஸ்ய‌ம் போயிடும். இந்த‌ ப‌ட‌த்துல‌கூட‌ சில‌ர் குறை க‌ண்டுபுடிக்க‌லாம். அம்மா ச‌மைய‌லையே குறை சொல்ற‌வ‌ங்க‌ நாம‌, அத‌னால‌ யாராவ‌து நெக‌ட்டிவா விம‌ர்சிச்சா க‌ண்டுக்காதீங்க‌.

தியேட்ட‌ர்ல‌ சிரிப்பு ச‌த்த‌த்துல‌ சில‌ வ‌ச‌ன‌ம்லாம் கேக்கவேயில்ல‌, ம‌றுப‌டியும் அடுத்த‌ வார‌ம் போக‌ணும். ந‌ம‌க்கு என்ன‌‌ பிர‌ச்னைன்னாலும், இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் அதெல்லாம் ம‌ற‌ந்துபோற‌ அள‌வுக்கு சிரிக்க‌ வைக்கிறாங்க‌. சும்மா பில்ட‌ப்புக்காக‌ சொல்ல‌ல‌, எவ்வ‌ளோ காமெடி ப‌ட‌ங்க‌ள் பாத்துருக்கேன், ஆனா இப்ப‌டி க‌ண்ணுல‌ த‌ண்ணி வ‌ர்ற‌ அள‌வுக்கு சிரிச்ச‌தில்ல‌:))) ந‌ன்றி "த‌மிழ்ப்ப‌ட‌ம்".

ச‌ரி, எர்ணாகுள‌ம் விஷ‌ய‌த்த‌ முடிச்சிடுறேன்.

எங்கேயுமே ரூம் கிடைக்காம‌ அலைஞ்சு திரிஞ்சு, ஒரு லாட்ஜ்ல‌ ரூம் கிடைச்சுது. ஆட்டோ டிரைவ‌ரே ரிச‌ப்ஷ‌ன்ல‌ போய் விசாரிச்சு ரூம் இருக்குதுன்னு வ‌ந்து சொன்னார். இவ்வ‌ளோ சுத்த‌ன‌துக்கு அவ‌ர் எவ்வ‌ளோ கேட்டார் தெரியுமா, வெறும் 30 ரூபாய். இதுவே ந‌ம்மூரா இருந்திருந்தா மினிம‌ம் 180 இல்ல‌ 200 வாங்கியிருப்பாங்க‌. அவ‌ருக்கு காசோட‌ ஒரு தேங்க்ஸையும் குடுத்துட்டு வ‌ந்தேன்.

லாட்ஜ் ரிச‌ப்ஷ‌ன்ல‌ செக்யூரிட்டி யூனிஃபார்ம்ல‌ ஒருத்த‌ர் உட்கார்ந்திருந்தார். நான் "ரூம் வேணும்"னு சொல்ல‌, அவ‌ர் என்னை கொஞ்ச‌ம் வெயிட் ப‌ண்ண‌ சொல்லிட்டு வேற‌ ஒருத்த‌ர‌ கூட்டிட்டு வ‌ந்தார். அவ‌ருக்கு 60 வ‌ய‌சு இருக்க‌லாம். என‌க்கு எப்ப‌டி பேச‌ற‌துன்னே தெரியல‌. வேற‌ வ‌ழியில்லன்னு கேட்டேன்.

"டூ யூ நோ த‌மில் ஆர் இங்கிலீஷ்?"

ம‌லையாள‌ம் தெரியாதாங்க‌ற‌ மாதிரி அவ‌ர் ம‌லையாள‌த்துல‌யே கேட்டார். நான் "நோ"ன்னு சொன்னேன்.

"ஓகே த‌மில் த‌மில்"னார்.

"ரூம் வேணும், ஒன் டே"
(பேசுன‌ நாலு வார்த்தையில‌ மூணு இங்கிலீஷ் வார்த்தை, வாழ்க‌ த‌மிழ்!)

ப‌க்க‌த்துல‌ இருந்த‌ செக்யூரிட்டிகிட்ட‌ சாவி குடுத்து ரூம் காமிக்க‌சொன்னார். நானும் செக்யூரிட்டி பின்னாடியே போனேன். போகும்போது என‌க்குள்ள‌ ஒரு சின்ன‌ ஈகோ எட்டிப்பாத்துது, சே அவ‌ர்கிட்ட‌ ம‌லையாள‌ம் தெரியாதுன்னுட்டோமே, ம‌ம்முட்டி ந‌டிச்சு எத்த‌னை த‌மிழ் ப‌ட‌ங்க‌ளை பாத்திருக்கோம், அதே ஸ்லாங்ல‌யே அடிச்சுவிட்டிருக்க‌லாமே. மிஸ் ப‌ண்ணிட்டேன், இரு இந்த‌ செக்யூரிட்டிகிட்ட‌ டிரை ப‌ண்ணி பாப்போம்னு முடிவு ப‌ண்ணி, கொஞ்ச‌ம் தைரிய‌த்தை வ‌ர‌வ‌ழைச்சுகிட்டு கேட்டேன்.

"இவ்விட‌ ஓட்ட‌ல் உண்டோ?"

அதுக்கு அவ‌ர் மெயின் ரோட்கிட்ட‌ இருக்குன்னு சொல்லி, ம‌லையாள‌மே தெரியாதுன்னு சொன்னியேன்னு கேட்டார். நாம‌ யாரு, இப்ப‌வும் அச‌ருவோமா?

"கொறைச்சு அறியும்"னேன்

"ஓவ்வ் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம்"ன்னு சொல்லி கிண்ட‌லா ம‌ம்முட்டி மாதிரியே த‌லையாட்டிட்டு போனார். அட‌ச்சே, என்ன‌டா இது ஊரு விட்டு ஊரு வ‌ந்து இப்ப‌டி ப‌ல்பு வாங்குறோமேன்னு ஃபீல் பண்ணி அப்ப‌டியே தூங்கிட்டேன். அப்புற‌ம் அதிகாலை 9:30 ம‌ணிக்கு எழுந்து குளிச்சுட்டு சாப்பிட‌ ஒரு ஓட்ட‌லுக்கு போனேன். டிப‌ன் சாப்ட்ட‌துக்க‌ப்புற‌ம் அந்த‌ வெயிட்ட‌ர் கேட்டார்.

"சார், டீ, காபி?"

செக்யூரிட்டி குடுத்த‌ ப‌ல்பு ஞாப‌க‌த்துக்கு வ‌ர‌, இப்போ பார்றான்னு

"ஒரு சாயா"ன்னேன்.

"ஓ சாயாவோ"ன்னு சொல்லிகிட்டே த‌லையாட்டிகிட்டே போனார். யேய், என்னாங்க‌ய்யா இது ஒரு வார்த்தை பேசி முடிச்சுட்டு எல்லாரும் த‌லையாட்டிகிட்டே இருக்க‌றீங்க‌, இது என்ன‌ கேர‌ளாவோட‌ மேன‌ரிச‌மா?

அதுக்க‌ப்புற‌ம் கேபிஎன் டிராவ‌ல்ஸ்ல‌ சென்னைக்கு புக் ப‌ண்ணிட்டு(எர்ணாகுள‌ம் டூ சென்னை 950 ரூபாய்), போட்டிங் போயிட்டு, ம‌திய‌ம் சாப்பிட‌ வேற‌ ஒரு ஓட்ட‌லுக்கு போனேன். அரிசிலாம் பாத்தா ந‌ல்லா குண்டு குண்டா இருந்த‌து. மைண்ட்ல‌ மோக‌ன்லால், ஜெய‌ராம்லாம் வ‌ந்துட்டு போறாங்க‌. சாத‌ம் போட்டுட்டு கார‌க்குழ‌ம்பு ஊத்திட்டு ப‌க்க‌த்துல‌ ஒரு சைட் டிஷ் வெச்சாங்க‌. சாப்ட்டு பாத்தா ந‌ல்லா இருந்த‌து. அடுத்த‌ வாய் சாப்பிடும்போதுதான் உறைச்சுது, "அட‌ப்பாவிங்க‌ளா! இது மீனா" (அவ‌ங்க‌ இல்ல‌). நான் முட்டை ம‌ட்டும் சாப்பிடுற‌ ப்யூர் வெஜிட்டேரிய‌ன்.

என‌க்கு அதுக்க‌ப்புற‌ம் சாப்பிட‌ பிடிக்க‌ல‌. கை க‌ழுவிட்டு பில்லுக்கு 100 ரூபாய் குடுத்தா, 50 ரூபாய் திருப்பி குடுத்தார். ரெண்டே ரெண்டு வாய் சாத‌த்துக்கு 50 ரூபாய் குடுத்த‌வ‌ன் நான் ஒருத்த‌னாதான் இருப்பேன். அப்புற‌ம் ஒரு ப‌ப்ஸ், கேக்குன்னு உள்ள‌ த‌ள்ளி அப்ப‌டியே ரோட்டோர‌மா சுத்துனா போத்தீஸ், சென்னை சில்க்ஸ் ரேஞ்சுக்கு ஒரு பெரிய‌ டெக்ஸ்டைல் ஷோரூம்.

உள்ள‌ போன‌ப்புற‌ம்தான் தெரிஞ்சுது, ஏன் இப்ப‌ல்லாம் மும்பையை விட்டுட்டு கேர‌ளாவுல‌ இருந்து ஹீரோயின்ஸ இற‌க்கும‌தி ப‌ண்றாங்க‌ன்னு. என‌க்கு அங்க‌யிருந்த‌ ஷ‌ர்ட்ஸ் டிசைன் எதுவும் பிடிக்க‌ல‌. கொஞ்ச‌ நேர‌ம் எல்லாத்தையும் பாத்துட்டு (ஷ‌ர்ட்ஸைத்தான் சொல்றேன்) எதுவும் வாங்காம‌ திரும்பிட்டேன்.

அதுக்க‌ப்புற‌ம்.................என்ன‌து போதுமா? ச‌ரி இதோட‌ மொக்கைய‌ ஸ்டாப் ப‌ண்ணிக்க‌றேன். ப்பா, என்னாவொரு ச‌ந்தோஷ‌ம்! இந்த‌ அனுப‌வ‌த்துல நான் க‌த்துகிட்ட‌து தாய்மொழிய‌யும், இங்கிலீஷை‌யும் வெச்சுகிட்டு இந்தியாவுல‌ ச‌மாளிக்க‌ற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம். அத‌னால‌ உங்க‌ளால‌ முடிஞ்ச‌ அள‌வு நிறைய‌ மொழிக‌ளை க‌த்துக்குங்க‌. நீ க‌த்துக்கிட்டியான்னா கேக்குறீங்க‌? ம‌லையாள‌ம் க‌த்துக்க‌லாம்னுதாங்க‌ நினைக்குறேன். ஆனா நாந்தான் க‌த்துக்குடுப்பேன்னு அசின், பாவ‌னா, ந‌ய‌ன்தாரால்லாம் ச‌ண்டை போட்டுட்டு இருக்காங்க‌. நீங்க‌ளே சொல்லுங்க‌, இப்ப‌டி இருந்தா நான் எப்ப‌டி ம‌லையாள‌ம் க‌த்துக்க‌ற‌து:(

16 comments:

  1. எர்னாகுளம் அனுபவம் நல்லாருக்கு...

    ReplyDelete
  2. கடைசியில் கருத்தெல்லாம் சொல்லி அசதீடீங்க போங்க; சினிமா விமர்சனம் தனியா; பிரயாண அனுபவம் தனியா எழுதி ரெண்டு பதிவு ஒப்பெதிருக்கணும்; இதெல்லாம் தெரியாம இருக்கீங்களே; நீங்க குரும்பனல்ல; அப்பாவி !! :))

    ReplyDelete
  3. // அரிசிலாம் பாத்தா ந‌ல்லா குண்டு குண்டா இருந்த‌து. மைண்ட்ல‌ மோக‌ன்லால், ஜெய‌ராம்லாம் வ‌ந்துட்டு போறாங்க‌ // Ha..ha..!
    The photo of the coconut trees lined backwaters is beautiful! What about your experience of sight-seeing? I expect Part-III of Ernakulam soon. - R. Jagannathan

    ReplyDelete
  4. பின்ன சீக்கிரமாயிட்டு "ஞானும் மலையாளமும்" ன்னு பதிவ கொறச்ச திவசங்களிலே காணாம் பட்டுமோ?.

    ReplyDelete
  5. ந‌ன்றி அண்ணாம‌லையான்

    ReplyDelete
  6. ந‌ன்றி ராஜு

    ReplyDelete
  7. ந‌ன்றி மோக‌ன், த‌மிழ்ப்ப‌ட‌ம் ப‌த்தி நிறைய‌ எழுதினா சில‌ காட்சிக‌ளை சொல்ல‌வேண்டியிருக்கும். பட‌ம் பாக்க‌போற‌வ‌ங்க‌ சுவார‌ஸ்ய‌ம் குறைஞ்சுடும். அதனால‌தான் கொஞ்ச‌மா எழுதினேன்.

    ஹாஹ்ஹா, க‌ருத்தெல்லாம் இல்ல‌ங்க‌, ப‌ல‌ மொழிக‌ள் க‌த்துகிட்டா ந‌ல்ல‌துன்னு தோணுச்சு, அதான் சொன்னேன்:)

    நீங்க‌ ந‌ல்ல‌வ‌ருங்க‌, என்னை அப்பாவின்னு சொல்றீங்க‌, ப்ரெண்ட்ஸுங்க‌ அட‌ப்பாவின்னு சொல்றானுங்க‌, பொறாமை பிடிச்ச‌வ‌னுங்க‌:))

    ReplyDelete
  8. ந‌ன்றி ஜெக‌ன், பார்ட் IIIயாஆஆஆ? படிக்க‌ற‌வ‌ங்க‌ள‌ நினைச்சு என‌க்கே கொஞ்ச‌ம் பாவ‌மா இருக்கு. அத‌னால‌ இதுவே போதுங்க‌:)

    ReplyDelete
  9. ந‌ன்றி சிவா, ப‌றைஞ்சேனே....அசின், பாவ‌னா, ந‌ய‌ன்தாரா - இவ‌ரொக்க‌ விஜாரிச்சால் காணாம்:))

    ReplyDelete
  10. "ரூம் வேணும், ஒன் டே" (பேசுன‌ நாலு வார்த்தையில‌ மூணு இங்கிலீஷ் வார்த்தை, வாழ்க‌ த‌மிழ்!) //
    ஹாஹாஹா

    இது என்ன‌ கேர‌ளாவோட‌ மேன‌ரிச‌மா? //
    ஹாஹாஹா

    கலக்கல் ட்ரிப். மலையாளம் கத்துக்கணும்னா, மலையாளி பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் அப்படித் தான் ஹிந்தி கத்துக்கிட்டேன். :)

    தமிழ்ப் படம் பார்க்க ஆசை தான். ஆனா, 70 கிலோமீட்டர் அந்தப் பக்கத்துல இருக்குற தியேட்டர்ல படம் ஓடுது. :(

    ReplyDelete
  11. ந‌ன்றி விக்கி, சூப்ப‌ர் ஐடியாதான், ஆனா நான் நிறைய‌ மொழிக‌ளை க‌த்துக்க‌ணும்னு நினைக்கிறேனே, என்ன‌ ப‌ண்ற‌து, ஹி...ஹி...;)

    ReplyDelete
  12. (மலபார் போலீஸ் சத்யராஜ் ஸ்டைலில் இந்த பின்னூட்டத்தை படிக்கவும்)

    ரகு சேட்டா,
    நிங்களண்டே போஸ்ட் வளர நண்ணாயிட்டுண்டு... நிங்களண்டே மெசேஜூம் மனசுலாயி... நல்ல வல்லிய ட்ரிப்-ண்டே அனுபவங்களெ போஸ்ட் செஞ்ஞதற்கு நன்டி (நன்றி)

    அடுத்த போஸ்ட்ல தமிழ்(நாட்ல) மீட் செய்யாம்... சாரி செய்யலாம்...

    அன்புடன்
    ஹரீஷ் நாராயண்

    ReplyDelete
  13. //தாய்மொழிய‌யும், இங்கிலீஷை‌யும் வெச்சுகிட்டு இந்தியாவுல‌ ச‌மாளிக்க‌ற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்.//.........

    ரோஜா படத்தில வரமாதிரியே ஒரு மெசேஜ் சொல்லி இருக்கீங்க...

    //கொஞ்ச‌ நேர‌ம் எல்லாத்தையும் பாத்துட்டு (ஷ‌ர்ட்ஸைத்தான் சொல்றேன்) எதுவும் வாங்காம‌ திரும்பிட்டேன்.//.........
    இப்படி சொல்லிட்டா நாங்கெல்லாம் நம்பிடுவோமா:)

    ReplyDelete
  14. ந‌ன்றி ஹரீஷ், ஆனா எதுக்கு தெலுங்குல‌ பின்னூட்ட‌ம் போட்டிருக்கீங்க‌...:)))

    ReplyDelete
  15. ந‌ன்றி ப்ரியா, வேற‌ எப்ப‌டி சொன்னா ந‌ம்புவீங்க‌:))

    ReplyDelete