Showing posts with label எர்ணாகுள‌ம். Show all posts
Showing posts with label எர்ணாகுள‌ம். Show all posts

Sunday, January 31, 2010

த‌மிழ்ப்ப‌ட‌மும், எர்ணாகுள‌மும்


ப‌ட‌த்துக்கு போய் முத‌ல் சீன்ல‌ சிரிக்க‌ ஆர‌ம்பிச்ச‌வ‌ன், இதோ இப்போ கொஞ்ச‌ நேர‌ம் முன்னாடிதான் வீட்டுக்கு வ‌ந்து சாப்ட்டேன், சாப்பிடும்போதும் சிரிப்பா வ‌ருது. நேத்தே சில‌ ப‌திவ‌ர்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் எழுதியிருந்தாங்க‌, ஆனா அத‌ பாத்த‌வுட‌னே, ந‌ம‌க்கு அந்த‌ சுவார‌ஸ்ய‌ம் போயிட‌க்கூடாதுன்னு ப‌டிக்காம‌ விட்டுட்டேன்.

ப‌ட‌த்துல‌ ஹீரோவோட‌ ஓப்ப‌னிங் சாங் வ‌ரும்போது "இந்த‌ பாட‌லை பாடிய‌வ‌ர் உங்க‌ள் சிவா"ன்னு போட்டுட்டு, அடுத்த‌ ரெண்டே செக‌ண்ட்ல‌ "இந்த‌ பாட‌லை பாடிய‌வ‌ர் உங்க‌ள் சிவா என்று போடும்ப‌டி அவ‌ர் கேட்டுக்கொண்டார்"னு போடுறாங்க‌. அட‌ப்பாவிங்க‌ளா, உங்க‌ கலாய்த்த‌லுக்கு ஒரு அள‌வே இல்லியா! த‌ள‌ப‌தி ர‌சிக‌/ர‌சிகைக‌ள் க‌வ‌னிக்க‌:)) "ஓ ம‌க‌சீயா" பாட்டுல‌ "லாலாக்கு டோல் ட‌ப்பிமா"ன்னு வ‌ரும்போது சிவாவோட‌ ரியாக்ஷ‌ன் பாக்க‌ணுமே, தாங்க‌முடிய‌ல‌டா சாமி! இதுக்கு மேல‌ நான் எதுவும் சொல்ல‌ல‌, ப‌ட‌த்தை பாத்து என்ஜாய் ப‌ண்ணுங்க‌.

நீங்க‌ ப‌ட‌ம் பாக்க‌ற‌தா இருந்தா த‌ய‌வு செய்து விம‌ர்ச‌ன‌ம் ப‌டிச்சுட்டு பாக்காதீங்க‌. நிறைய‌ விஷ‌ய‌ம் தெரிஞ்சுடுச்சுனா, அந்த‌ சுவார‌ஸ்ய‌ம் போயிடும். இந்த‌ ப‌ட‌த்துல‌கூட‌ சில‌ர் குறை க‌ண்டுபுடிக்க‌லாம். அம்மா ச‌மைய‌லையே குறை சொல்ற‌வ‌ங்க‌ நாம‌, அத‌னால‌ யாராவ‌து நெக‌ட்டிவா விம‌ர்சிச்சா க‌ண்டுக்காதீங்க‌.

தியேட்ட‌ர்ல‌ சிரிப்பு ச‌த்த‌த்துல‌ சில‌ வ‌ச‌ன‌ம்லாம் கேக்கவேயில்ல‌, ம‌றுப‌டியும் அடுத்த‌ வார‌ம் போக‌ணும். ந‌ம‌க்கு என்ன‌‌ பிர‌ச்னைன்னாலும், இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் அதெல்லாம் ம‌ற‌ந்துபோற‌ அள‌வுக்கு சிரிக்க‌ வைக்கிறாங்க‌. சும்மா பில்ட‌ப்புக்காக‌ சொல்ல‌ல‌, எவ்வ‌ளோ காமெடி ப‌ட‌ங்க‌ள் பாத்துருக்கேன், ஆனா இப்ப‌டி க‌ண்ணுல‌ த‌ண்ணி வ‌ர்ற‌ அள‌வுக்கு சிரிச்ச‌தில்ல‌:))) ந‌ன்றி "த‌மிழ்ப்ப‌ட‌ம்".

ச‌ரி, எர்ணாகுள‌ம் விஷ‌ய‌த்த‌ முடிச்சிடுறேன்.

எங்கேயுமே ரூம் கிடைக்காம‌ அலைஞ்சு திரிஞ்சு, ஒரு லாட்ஜ்ல‌ ரூம் கிடைச்சுது. ஆட்டோ டிரைவ‌ரே ரிச‌ப்ஷ‌ன்ல‌ போய் விசாரிச்சு ரூம் இருக்குதுன்னு வ‌ந்து சொன்னார். இவ்வ‌ளோ சுத்த‌ன‌துக்கு அவ‌ர் எவ்வ‌ளோ கேட்டார் தெரியுமா, வெறும் 30 ரூபாய். இதுவே ந‌ம்மூரா இருந்திருந்தா மினிம‌ம் 180 இல்ல‌ 200 வாங்கியிருப்பாங்க‌. அவ‌ருக்கு காசோட‌ ஒரு தேங்க்ஸையும் குடுத்துட்டு வ‌ந்தேன்.

லாட்ஜ் ரிச‌ப்ஷ‌ன்ல‌ செக்யூரிட்டி யூனிஃபார்ம்ல‌ ஒருத்த‌ர் உட்கார்ந்திருந்தார். நான் "ரூம் வேணும்"னு சொல்ல‌, அவ‌ர் என்னை கொஞ்ச‌ம் வெயிட் ப‌ண்ண‌ சொல்லிட்டு வேற‌ ஒருத்த‌ர‌ கூட்டிட்டு வ‌ந்தார். அவ‌ருக்கு 60 வ‌ய‌சு இருக்க‌லாம். என‌க்கு எப்ப‌டி பேச‌ற‌துன்னே தெரியல‌. வேற‌ வ‌ழியில்லன்னு கேட்டேன்.

"டூ யூ நோ த‌மில் ஆர் இங்கிலீஷ்?"

ம‌லையாள‌ம் தெரியாதாங்க‌ற‌ மாதிரி அவ‌ர் ம‌லையாள‌த்துல‌யே கேட்டார். நான் "நோ"ன்னு சொன்னேன்.
‌
"ஓகே த‌மில் த‌மில்"னார்.

"ரூம் வேணும், ஒன் டே"
(பேசுன‌ நாலு வார்த்தையில‌ மூணு இங்கிலீஷ் வார்த்தை, வாழ்க‌ த‌மிழ்!)

ப‌க்க‌த்துல‌ இருந்த‌ செக்யூரிட்டிகிட்ட‌ சாவி குடுத்து ரூம் காமிக்க‌சொன்னார். நானும் செக்யூரிட்டி பின்னாடியே போனேன். போகும்போது என‌க்குள்ள‌ ஒரு சின்ன‌ ஈகோ எட்டிப்பாத்துது, சே அவ‌ர்கிட்ட‌ ம‌லையாள‌ம் தெரியாதுன்னுட்டோமே, ம‌ம்முட்டி ந‌டிச்சு எத்த‌னை த‌மிழ் ப‌ட‌ங்க‌ளை பாத்திருக்கோம், அதே ஸ்லாங்ல‌யே அடிச்சுவிட்டிருக்க‌லாமே. மிஸ் ப‌ண்ணிட்டேன், இரு இந்த‌ செக்யூரிட்டிகிட்ட‌ டிரை ப‌ண்ணி பாப்போம்னு முடிவு ப‌ண்ணி, கொஞ்ச‌ம் தைரிய‌த்தை வ‌ர‌வ‌ழைச்சுகிட்டு கேட்டேன்.

"இவ்விட‌ ஓட்ட‌ல் உண்டோ?"

அதுக்கு அவ‌ர் மெயின் ரோட்கிட்ட‌ இருக்குன்னு சொல்லி, ம‌லையாள‌மே தெரியாதுன்னு சொன்னியேன்னு கேட்டார். நாம‌ யாரு, இப்ப‌வும் அச‌ருவோமா?

"கொறைச்சு அறியும்"னேன்

"ஓவ்வ் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம்"ன்னு சொல்லி கிண்ட‌லா ம‌ம்முட்டி மாதிரியே த‌லையாட்டிட்டு போனார். அட‌ச்சே, என்ன‌டா இது ஊரு விட்டு ஊரு வ‌ந்து இப்ப‌டி ப‌ல்பு வாங்குறோமேன்னு ஃபீல் பண்ணி அப்ப‌டியே தூங்கிட்டேன். அப்புற‌ம் அதிகாலை 9:30 ம‌ணிக்கு எழுந்து குளிச்சுட்டு சாப்பிட‌ ஒரு ஓட்ட‌லுக்கு போனேன். டிப‌ன் சாப்ட்ட‌துக்க‌ப்புற‌ம் அந்த‌ வெயிட்ட‌ர் கேட்டார்.

"சார், டீ, காபி?"

செக்யூரிட்டி குடுத்த‌ ப‌ல்பு ஞாப‌க‌த்துக்கு வ‌ர‌, இப்போ பார்றான்னு

"ஒரு சாயா"ன்னேன்.

"ஓ சாயாவோ"ன்னு சொல்லிகிட்டே த‌லையாட்டிகிட்டே போனார். யேய், என்னாங்க‌ய்யா இது ஒரு வார்த்தை பேசி முடிச்சுட்டு எல்லாரும் த‌லையாட்டிகிட்டே இருக்க‌றீங்க‌, இது என்ன‌ கேர‌ளாவோட‌ மேன‌ரிச‌மா?

அதுக்க‌ப்புற‌ம் கேபிஎன் டிராவ‌ல்ஸ்ல‌ சென்னைக்கு புக் ப‌ண்ணிட்டு(எர்ணாகுள‌ம் டூ சென்னை 950 ரூபாய்), போட்டிங் போயிட்டு, ம‌திய‌ம் சாப்பிட‌ வேற‌ ஒரு ஓட்ட‌லுக்கு போனேன். அரிசிலாம் பாத்தா ந‌ல்லா குண்டு குண்டா இருந்த‌து. மைண்ட்ல‌ மோக‌ன்லால், ஜெய‌ராம்லாம் வ‌ந்துட்டு போறாங்க‌. சாத‌ம் போட்டுட்டு கார‌க்குழ‌ம்பு ஊத்திட்டு ப‌க்க‌த்துல‌ ஒரு சைட் டிஷ் வெச்சாங்க‌. சாப்ட்டு பாத்தா ந‌ல்லா இருந்த‌து. அடுத்த‌ வாய் சாப்பிடும்போதுதான் உறைச்சுது, "அட‌ப்பாவிங்க‌ளா! இது மீனா" (அவ‌ங்க‌ இல்ல‌). நான் முட்டை ம‌ட்டும் சாப்பிடுற‌ ப்யூர் வெஜிட்டேரிய‌ன்.

என‌க்கு அதுக்க‌ப்புற‌ம் சாப்பிட‌ பிடிக்க‌ல‌. கை க‌ழுவிட்டு பில்லுக்கு 100 ரூபாய் குடுத்தா, 50 ரூபாய் திருப்பி குடுத்தார். ரெண்டே ரெண்டு வாய் சாத‌த்துக்கு 50 ரூபாய் குடுத்த‌வ‌ன் நான் ஒருத்த‌னாதான் இருப்பேன். அப்புற‌ம் ஒரு ப‌ப்ஸ், கேக்குன்னு உள்ள‌ த‌ள்ளி அப்ப‌டியே ரோட்டோர‌மா சுத்துனா போத்தீஸ், சென்னை சில்க்ஸ் ரேஞ்சுக்கு ஒரு பெரிய‌ டெக்ஸ்டைல் ஷோரூம்.

உள்ள‌ போன‌ப்புற‌ம்தான் தெரிஞ்சுது, ஏன் இப்ப‌ல்லாம் மும்பையை விட்டுட்டு கேர‌ளாவுல‌ இருந்து ஹீரோயின்ஸ இற‌க்கும‌தி ப‌ண்றாங்க‌ன்னு. என‌க்கு அங்க‌யிருந்த‌ ஷ‌ர்ட்ஸ் டிசைன் எதுவும் பிடிக்க‌ல‌. கொஞ்ச‌ நேர‌ம் எல்லாத்தையும் பாத்துட்டு (ஷ‌ர்ட்ஸைத்தான் சொல்றேன்) எதுவும் வாங்காம‌ திரும்பிட்டேன்.

அதுக்க‌ப்புற‌ம்.................என்ன‌து போதுமா? ச‌ரி இதோட‌ மொக்கைய‌ ஸ்டாப் ப‌ண்ணிக்க‌றேன். ப்பா, என்னாவொரு ச‌ந்தோஷ‌ம்! இந்த‌ அனுப‌வ‌த்துல நான் க‌த்துகிட்ட‌து தாய்மொழிய‌யும், இங்கிலீஷை‌யும் வெச்சுகிட்டு இந்தியாவுல‌ ச‌மாளிக்க‌ற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம். அத‌னால‌ உங்க‌ளால‌ முடிஞ்ச‌ அள‌வு நிறைய‌ மொழிக‌ளை க‌த்துக்குங்க‌. நீ க‌த்துக்கிட்டியான்னா கேக்குறீங்க‌? ம‌லையாள‌ம் க‌த்துக்க‌லாம்னுதாங்க‌ நினைக்குறேன். ஆனா நாந்தான் க‌த்துக்குடுப்பேன்னு அசின், பாவ‌னா, ந‌ய‌ன்தாரால்லாம் ச‌ண்டை போட்டுட்டு இருக்காங்க‌. நீங்க‌ளே சொல்லுங்க‌, இப்ப‌டி இருந்தா நான் எப்ப‌டி ம‌லையாள‌ம் க‌த்துக்க‌ற‌து:(

Sunday, January 24, 2010

எர்ணாகுள‌த்தில்‌ ஞான்...

டிஸ்கி: டார்டாய்ஸோ, மார்ட்டீனோ அது உங்க‌ இஷ்ட‌ம், நீங்க‌ எதை வேணும்னாலும் கொளுத்திக்க‌லாம், ஆனா நான் சொல்ல‌விருப்ப‌து ஒரு கொசுவ‌த்தி என்ப‌தை ம‌ட்டும் ச‌ஞ்ச‌ய் ராம‌சாமி/சிங்கானியா போலில்லாம‌ல் ச‌ற்று நினைவில் கொள்க‌:)

தேதிலாம் ஞாப‌க‌ம் இல்ல‌ (இதென்ன‌ கெள‌த‌ம் ப‌ட‌மா, துணி காய‌போட்டாகூட‌ தேதிலாம் போட‌ற‌துக்கு), ஆனா ம‌ணி சுமாரா (அல்ல‌து) சூப்ப‌ரா காலை 10:30

கொஞ்ச‌ நாள் முன்னாடி த‌ம்பிக்கு ஒரு எக்ஸாம் எழுத‌ற‌துக்காக‌ எர்ணாகுள‌ம் போக‌வேண்டியிருந்த‌து. ட்ரெயின் டிக்கெட்லாம் ரிச‌ர்வ் ப‌ண்ணியாச்சு, ப‌ட் வெயிட்டிங் லிஸ்ட்ல‌ இருந்த‌து. ஆனா க‌ரெக்டா அந்த‌ நாள்ல‌ வேறு சில‌ கார‌ண‌ங்க‌ளால‌ அவ‌னால‌ போக‌முடிய‌ல‌. ச‌ரி டிக்கெட்ட‌ கேன்ச‌ல் ப‌ண்ண‌லாம்னு ரிச‌ர்வேஷ‌ன் சென்ட‌ருக்கு நான் போனா, அங்க‌ க‌வுண்ட்ட‌ர்ல‌ இருந்த‌வ‌ர், "சார், வெயிட்டிங் லிஸ்ட்னுலாம் பாக்காதீங்க‌, இதுக்கு க‌ண்டிப்பா சீட் கிடைக்கும்"னார்.

புக் ப‌ண்ண‌து செக‌ண்ட் க்ளாஸ் ஏசி. ம‌ன‌சுக்குள்ள‌ ஒரு சின்ன‌ ஆசை, எப்ப‌வும் வீடு to ஆஃபிஸ், ஆஃபிஸ் to வீடுன்னு இருக்கோமே, நாம‌ போனா என்ன‌? அப்பாகிட்ட‌ சொன்னா அதெல்லாம் த‌ப்புடா, அவ‌ன் பேர்ல‌ ரிச‌ர்வ் ப‌ண்ணிட்டு நீ போக‌கூடாதுன்னார். சில‌ ப‌ல‌ talkக‌ளுக்கு அப்புற‌ம் ச‌ரி போய் தொ(ல்)லைன்னு விட்டுட்டார்.


பூ + நார் 4:00

சென்ட்ர‌ல் வ‌ந்து ட்ரெயின்ல‌ லிஸ்ட் பாத்தா சீட் க‌ன்ஃப‌ர்ம்! ஹேஹேய்! உட‌னே சீட் தேடி ட்ரெயின் உள்ள‌ ஓடிட்டேன். ஃப்ரெண்டுக்கு கால் ப‌ண்ணி சொன்னா, "செக‌ண்ட் க்ளாஸ் ஏசியா? நெறைய‌ ஃபிக‌ரா வ‌ரும், அப்போ செம‌ க‌ட‌லைதான், என்ஜாய் ப‌ண்ணு"ன்னு ப‌ய‌புள்ள‌ ந‌ம்ம‌ ஒட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மாக்குறான். ஆனா நான் அப்ப‌டிப‌ட்ட‌வ‌ன் கிடையாது, அதையெல்லாம் எதிர்பார்த்து நான் போக‌ல(ன்னு சொன்னா ந‌ம்ப‌வா போறீங்க‌..ஹி..ஹி..). உள்ள‌ போய் உக்காந்தா எதிர் சீட்ல‌ ஒரு தாத்தா, அவ‌ரோட‌ பேர‌ன், பேத்தியோட‌ உக்காந்துகிட்டு இருக்க‌றார். ரெண்டும் ச‌ரியான‌ வாண்டுங்க‌! யோவ், நியாயமாயா இதுன்னு ம‌னசுக்குள்ளே பிள்ளையாரை (நானும் பிள்ளையாரும் கொஞ்ச‌ம் க்ளோஸ்) லேசா திட்டிகிட்டே நான் என் பெர்த்ல‌ போய் ப‌டுத்துட்டேன்.

கீழ் பெர்த்ல‌ இருந்த‌ பைய‌ன்கிட்ட‌ டிடிஆர் டிக்கெட் செக் ப‌ண்ண‌ வ‌ந்த‌ப்போ, ஏதாவ‌து ஃபோட்டோ ப்ரூஃப் காட்ட‌ சொல்ல‌, அந்த‌ பைய‌னும் அவ‌ர்கிட்ட‌ டிரைவிங் லைசென்ஸ‌ எடுத்து காமிச்சான். அப்போதான் என‌க்கு கொஞ்ச‌ம் உத‌ற‌ ஆர‌ம்பிச்சுது. உஷாரா நான் த‌ம்பியோட‌ எலெக்ஷ‌ன் ஐடி கார்டையும் எடுத்துட்டுபோயிட்டேன். ஆனா அதுல‌ இருக்க‌ற‌துக்கும் உன‌க்கும் வித்தியாச‌மாயிருக்கேன்னு (அவ‌ன் என்னைவிட‌ கொஞ்ச‌ம் க‌ல‌ர்) சொன்னா என்ன‌ ப‌ண்ற‌து? ஆனா ந‌ல்ல‌வேளை அவ‌ர் கேக்க‌ல‌, டிக்கெட் ம‌ட்டும்தான் செக் ப‌ண்ணார்.(ஆன்லைன்ல‌ ரிச‌ர்வ் ப‌ண்ணாதான் கேப்பாங்க‌ன்னு அப்புற‌ம் ந‌ண்ப‌ர் ஒருத்த‌ர் சொன்னார்).

ந‌டுராத்திரியில‌ ரொம்ப‌ குளிரா இருந்த‌து. ச‌ரி கொஞ்ச‌ நேர‌ம் வெளியே நிப்போம்னு க‌த‌வுகிட்ட‌ வ‌ந்தா ஏற்க‌ன‌வே இன்னொருத்த‌ர் வ‌ந்து நின்னுட்டிருந்தார். அவ‌ர் என்கிட்ட‌ கேட்டார்.

"எத்த‌னை ம‌ணிக்கு சார் எர்ணாகுள‌ம் (அட‌ நாம‌ போற‌ ஊருதான்டோய்!) ரீச் ஆகும்?"

ம்ஹும்..நான் அப்ப‌டியே நாலு நாளைக்கு ஒருத‌ட‌வை எர்ணாகுள‌ம் போய் வ‌ந்துட்டு இருக்க‌றேன், ந‌ம்ம‌ள‌ கேக்குறாரு டீட்டெயிலு‌......ஆனாலும் ந‌ம‌க்குன்னு ஒரு 'கெத்' இருக்குல்ல‌ அத‌ விட‌முடியுமா?

"ஹாஃப் அன் ஹ‌வ‌ர் லேட்டா போகுதுன்னு நினைக்குறேன் (எல்லாம் ந‌ம்ம‌ ர‌யில்வேஸ் மேல‌ இருக்க‌ற‌ ஒரு ந‌ம்பிக்கைதான்), எப்ப‌டியும் ஃபோர் டு ஃபோர் த‌ர்ட்டிக்குள்ள‌ ரீச் ஆயிடும்" (IRCTC வெப்சைட்ல‌ 4:15ன்னு போட்டிருந்துது)

"ஓ, அவ்ளோ நேர‌ம் ஆகுமா?"

"ஆமாங்க‌"
.....பார்றா, நான் சொல்ற‌த‌யும் ஒரு ம‌னுஷ‌ன் ந‌ம்புறாரு.

ம‌றுநாள் கையை...ர்ர்ர்ர்...சாரி....காலை 4:15

ர‌யில்வேஸ்ல‌ ந‌ல்லாவே வேலை செய்யுறாங்க‌ப்பா! ட்ரெயின் க‌ரெக்ட் ட‌ய‌த்துக்கே எர்ணாகுள‌த்தில் ரீச் ஆச்சு. இற‌ங்கி எப்ப‌டி வெளியே போகுற‌துன்னு தெரிய‌ல‌. ந‌ம்ம‌ மேல் மாடியில‌தான் ஆடு குடியிருக்கே, ச‌ரி எல்லாரும் எப்ப‌டி போறாங்க‌ளோ அப்ப‌டியே நாமும் போவோம்னு ஜ‌ன‌ங்க‌ பின்னாடியே போனேன்.

வெளியே போனா ஒரு ப்ரீபெய்டு ஆட்டோ பூத் இருந்த‌து. இப்போதான் மேல் மாடியில‌ ஆடுங்க‌ வெளியே போய், நானே போய் குடியேறி யோசிக்க‌ ஆர‌ம்பிச்சேன், த‌மிழ்ல‌ பேச‌லாமா இல்ல‌ பீட்ட‌ர் விட‌லாமா? அங்க‌ உக்காந்துகிட்டிருக்க‌ற‌வர் பீட்ட‌ர் விட‌ல‌னா அவ‌ர‌ அசிங்க‌ப்ப‌டுத்த‌ற‌ மாதிரி இருக்கும், ச‌ரி வேணாம்னு ('ச‌ரி' - 'வேணாம்'......இது முற‌ண்தொடையா??? என்ன‌து? ர‌ம்பா...........ஹ‌லோ வேணாம், ந‌ம்ம‌ ப்ளாக் கொஞ்ச‌ம் க‌ம‌ர்ஷிய‌ல்னாலும் அனைவ‌ரும் குடும்ப‌த்துட‌ன் ப‌டிக்க‌க்கூடிய‌ ப்ளாக்.....இங்க‌ மானும் ஆடாது, ம‌யிலும் ஆடாது) முடிவு ப‌ண்ணி, த‌மிழ்ல‌யே கேட்டேன்.

"சென்னை ப‌ஸ்லாம் இருக்க‌ற‌ ப‌ஸ் ஸ்டாண்ட் ப‌க்க‌த்துல‌யே ஒரு ஹோட்ட‌லுக்கு போக‌ணும்"

அவ‌ர் உட‌னே பில் போட்டு குடுத்துட்டார். ப‌க்க‌த்துல‌ ஆட்டோவும் ரெடியா இருக்க‌, ஏறி உட்கார்ந்தேன். முத‌ல் முறையா மொழி தெரியாத‌ ஊர்ல‌ என் ப‌ய‌ண‌ம். அந்த‌ ஆட்டோக்கார‌ரும், அப்ப‌டி இப்ப‌டி சுத்தி, ஒரு இட‌த்துல‌ நிறுத்தி "அப்ப‌டி போங்க‌"ங்க‌ற‌ மாதிரி ம‌லையாள‌த்துல‌ ஏதோ சொன்னார். ஓகே, தேங்க்ஸ்னு சொல்லிட்டு கொஞ்ச‌ம் உள்ள‌ ந‌ட‌ந்தா அது ப‌ஸ் ஸ்டாண்ட்!

ப‌ஸ் ஸ்டாண்ட் ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌ ஒரு ஹோட்ட‌லுக்கு போக‌ணும்னு சொன்னா அந்த‌ அறிவுகொழுந்து ப‌ஸ் ஸ்டாண்டுக்கே போற‌துக்கு ஆட்டோவ‌ ஏற்பாடு ப‌ண்ணியிருக்கு. த‌ப்பு என் மேல‌யும் இருக்கு, நான் இன்னும் கொஞ்ச‌ம் புரிய‌ற‌ மாதிரி சொல்லியிருக்க‌ணும். ப‌ஸ் ஸ்டாண்ட்ல‌ சுத்திட்டு வெளியே வ‌ந்து, நான் வ‌ந்த‌ ஆட்டோ இருக்குதான்னு பாத்தேன். அண்ண‌ன் அப்ப‌வே எஸ்ஸாயிட்டிருக்காரு. வேற‌ ஒரு ஆட்டோக்கார‌ரை பார்த்து "ஸ்டே ப‌ண்ண‌ணும், ஏதாவ‌து ஒரு லாட்ஜுக்கு போக‌ணும்"னேன். அவ‌ருக்கு த‌மிழ் தெரியும் போல‌. சிரிச்சுகிட்டே "போலாம் சாரே"ன்னார்.

ஒருவேளை 'லாட்ஜ்'ன்னு சொன்ன‌தால‌ அவ‌ரு ந‌க்க‌லா சிரிச்சாரோன்னு என‌க்கு தோண‌, ம‌னசுக்குள்ளேயே "ஓய் சேட்டா, ஞான் அவ‌ன் இல்லா"ன்னு சொல்லிகிட்டேன். அந்த‌ நேர‌ம் அங்க‌ ஏதோ திருவிழா நேர‌மாம், அத‌னால‌ த‌ங்க‌ற‌துக்கு எங்கேயுமே ரூம் காலி இல்ல‌ன்னு சொல்லிட்டாங்க‌. ரொம்ப‌ நேர‌ம் அலைஞ்சு திரிஞ்சு ஒரு லாட்ஜ்ல‌ ரூம் கிடைச்சுது. அதுக்க‌ப்புற‌ம்........


ப‌ய‌ப்ப‌டாதீங்க‌, பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3ன்னுலாம் இழுக்க‌ மாட்டேன். அடுத்த‌ ப‌திவுல‌ முடிச்சிடுறேன். என்ன‌............அதுக்குள்ள‌ அங்க‌ "அப்பாடா"ன்னு ஒரு பெருமூச்சு............ஒரு டெர‌ராத்தான் இருக்கேனோ????

.