டிஸ்கி: இந்த பதிவு, நானும் ஆங்கில நாவல்கள்லாம் படிப்பேன்னு சீன் போடுறதுக்காக இல்ல. நான் ரசிச்சு படிச்ச ஒரு நல்ல த்ரில்லரை எல்லோரிடமும் பகிர்ந்துக்கணும், மத்தவங்களும் படிக்கணும்னு ஒரு சின்ன ஆசை, அவ்ளோதான்...................நம்புங்க, நான் கொஞ்சூண்டு நல்லவன்....................நம்பமாட்டீங்களே! இப்படித்தான் சாக்ரடீஸைக்கூட...........சரி சரி, உடனே விண்டோவை க்ளோஸ் பண்ணாதீங்க, மேட்டருக்கு வந்துடறேன்:)
"கண்டேன் காதலை" படம் வந்திருந்த சமயம். ஐநாக்ஸ்ல டிக்கெட் வாங்கிட்டு, படம் ஆரம்பிக்கறதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருந்ததால, 'லேண்ட்மார்க்'ல கொஞ்ச நேரம் சுத்திட்டு வரலாமுன்னு போயிருந்தேன். சில புத்தகங்களை புரட்டிபார்த்துட்டு, ஆங்கில நாவல்கள் இருக்கற பக்கம் போனேன். அதென்னவோ நடிகைகள்கிட்ட "நீங்க ஷுட்டிங் ப்ரேக் டைம்ல என்ன பண்ணுவீங்க"ன்னு கேட்டா, ஸிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், ஏ ஃபார் ஆப்பிள், பீ ஃபார் பால் மாதிரியான ஆங்கில எழுத்தாளர்கள் எழுதுன நாவல்களை படிப்பேன்னுதான் சொல்றாங்க. எனக்கும் ஸிட்னி ஷெல்டன் பேரை பாத்ததுமே, தமன்னா ஒரு கையால தலைமுடியை கோதிகிட்டே ஒரு சின்ன ஸ்மைலோட அவர் எழுதுன நாவலை படிக்கறமாதிரியான ஒரு சீன் மைண்ட்ல வந்தது.
அதனாலதான் வாங்கிட்டேன்னு நினைக்காதீங்க. அங்க பல நாவல்கள் இருந்தாலும் பாத்தவுடனே இத வாங்கித்தான் பாப்போமேங்கற மாதிரி ஒரு டைட்டில் மனசுல பதிஞ்சுது - Are You Afraid of the Dark?
நியூயார்க், டென்வர், பாரிஸ், பெர்லின் இந்த நான்கு நகரத்திலும், நான்கு பேர் விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறார்கள். இதை போலீஸ் விசாரிக்கும்போது நான்கு பேரும் கிங்க்ஸ்லே இண்டர்நேஷனல் கரூப் (KIG - Kingsley International Group) என்னும் ஒரு சர்வதேச நிறுவனத்தில வேலை செய்துகொண்டிருந்தவர்கள் என்பது தெரிய வருகிறது.
இறந்தவர்களில் ஒருவர் ரிச்சர்ட் ஸ்டீவன்ஸ் (Richard Stevens), இவரின் மனைவி டையன் ஸ்டீவன்ஸ் (Diane Stevens). இறந்த ரிச்சர்டின் உடல்கூட கிடைக்காதபடி ஒரு சம்பவம் நடக்க, அதுவரை விபத்தினால்தான் ரிச்சர்ட் இறந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த டையனுக்கு லேசாக சந்தேகம் வர ஆரம்பிக்கிறது.
பாரிஸில் இறந்த மார்க் ஹாரிஸின் (Mark Harris) மனைவி கெல்லி ஹாரிஸ் (Kelly Harris). கெல்லி ஒரு அழகிய மாடலும்கூட. சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தால் கெல்லிக்கு இருளைக் கண்டாலே பயம். தூங்கும்போதும், விளக்கு அணைக்காமல் தூங்கும் பழக்கம் உடைய கெல்லிக்கு மார்க்குடனான திருமணமும், மார்க்கின் அன்பும் அரவணைப்புமே அவளை மெல்ல மெல்ல மாறவைக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியும், மார்க்கின் மரணத்தால அவளை மறுபடியும் இருளைக் கண்டு பயப்படவைக்கிறது.
இதற்கிடையில் நடந்தது விபத்தல்ல, கொலைதான் என்று உறுதி செய்து போலீஸ் துப்பறிய ஆரம்பிக்கிறார்கள். KIGயின் சேர்மன் டேனர் கிங்ஸ்லே (Tanner Kingsley) டையனையும், கெல்லியையும் தன் நிறுவனத்துக்கு வரவழைத்து கொலையாளியை சீக்கிரம் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என்று வாக்குறுதி தருகிறார். கிங்ஸ்லேயை சந்தித்துவிட்டு வரும் டையன், கெல்லியும் தன்னுடைய நிலையில் இருப்பதை தெரிந்துகொள்கிறாள்.
கெல்லிக்கோ டையனிடம் பேசுவதில் ஆர்வம் இல்லை. அதனால் டையனை தவிர்த்துவிட்டு பாரிஸுக்கு கிளம்ப முயற்சிக்கிறாள். ஆனால் அதே சமயம் அவர்கள் இருவரையும் கொலை செய்ய ஒரு முயற்சி நடக்கிறது. அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பித்து, டையனுடைய அபார்ட்மெண்ட்டுக்கு வருகிறார்கள். அங்கும் ஒரு கொலை முயற்சி நடக்க, மீண்டும் தப்பித்து ஓட ஆரம்பிக்கிறார்கள்.
ஏன் இவர்கள் இருவரையும் கொலை செய்ய முயற்சி நடக்கிறது? யாருடைய திட்டப்படி இதெல்லாம் நடக்கிறது? எந்த இடத்திற்கு போனாலும் இவர்கள் இருப்பதை கொலையாளிகள் கண்டுபிடித்து கொலை செய்ய முயற்சிக்கின்றனர், இது எப்படி சாத்தியம்? ஊரைவிட்டு எங்கும் ஓடமுடியாதபடி அவர்களுடைய வங்கி அக்கவுண்ட்டும் முடக்கப்படுகிறது, கையில் இருக்கும் பணத்தை வைத்து எவ்வளவு நாள் சமாளிக்கமுடியும்?
ஒரு கட்டத்தில் யார் இதற்கெல்லாம் காரணம் என்பதை டையனும், கெல்லியும் கண்டுபிடித்துவிட, அந்த நபரிடம் இருந்து எத்தனை நாள்தான் தப்பிக்க முடியும் என்றெண்ணி, ஓடுவதை நிறுத்திவிட்டு மோதத் தயாராகின்றனர். போலீஸிடம் போக முடியாத சூழ்நிலை, துணைக்கு வேறு யாருமில்லை, கையில் எந்தவித ஆயுதமுமில்லை. எப்படி இவ்விரு பெண்களும் ஒரு மலையிடம் மோதி வெற்றி பெறுகிறார்கள்? இருளை எதிர்கொள்ள முடியாமல் பயந்துகொண்டிருக்கும் கெல்லியின் நிலை என்னவானது?
பாதி கதையில அடியாளா வர்ற ஒருவரோட ஃப்ளாஷ்பேக்லாம்தான் கொஞ்சம் போரடிக்குது. மத்தபடி இது ஒரு பக்காவான த்ரில்லர் நாவல்! வில்லன் யாருன்னு முதல்லயே சொல்லிட்டாலும், கதையோட ஃப்ளோ துளிகூட குறையல. நேரமின்மையால, ஒரு நாளைக்கு மூணு இல்ல நாலு அத்தியாயத்துக்கு மேல என்னால படிக்கமுடியாது. ஆனா கடைசி சில பக்கங்கள்ல இருந்த த்ரில்லிங் (ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள்) தூக்கத்தையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு தினமும் இரவு பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரை மணி வரை என்னை படிக்கவெச்சுது. ஆஃபிஸ் விட்டு கிளம்பும்போதே "எப்படா வீட்டுக்கு போய் புக்கை எடுக்க போறோம்"னு மனசுல அலாரம் அடிக்க ஆரம்பிச்சுடும்.
இந்த நாவல் படிச்சு முடிச்சுட்டு விக்கிபீடியால பாத்தா, ஒரு ஸ்ட்ரேஞ்சான விஷயம். நான் முதல் முதலா படிச்ச ஸிட்னி ஷெல்டனோட இந்த நாவல்தான், அவர் எழுதின கடைசி நாவல்:(
தமன்னா போட்டோ அழகு..
ReplyDeleteஒரு வேளை நீங்க படிக்கறது தனக்கு தெரிய வேனான்னு எழுதுனவர் முன்னாடியே போய்ட்டாரோ?
ReplyDeleteHi Boss ,
ReplyDeleteIf Tomorrow comes & Master of the game padinga. They are the master pieces of SS.
ஹாய் ரகு,
ReplyDeleteசொன்னா நம்பமாட்டீங்க, நீங்க சொன்ன அதே காரணத்துக்காகத்தான் நானும் ஒரு 4 வருஷம் முன்னாடி ஒரு சிட்னி ஷெல்டன் நாவல் வாங்கித்தான் படிச்சிப் பாப்போமேன்னு, தேவி தியேட்டர் வாசல்ல(ஹி ஹி, பாதி ரேட்ல வாங்கினதுதான்), THE BEST LAID PLANS-னு ஒரு நாவல் வாங்கி படிச்சேன். செம த்ரில், சேம் ஃபீலிங்க்ஸ்... ஆஃபீஸ் முடிச்சிட்டு எப்படா வீட்டுக்கு போய் புத்தகத்தை திறப்போம்னு ஆவலா இருந்தது.
ம்ம்ம்... நீங்களும் நாளைக்கு பேட்டில "Well, I like Sidney's writings..." அப்படின்னு கொஞ்சம் ஸ்டைலான இங்கிலிஷ்ல சொல்லுங்க...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
சிட்னியின் டெல் மி யுவர் ட்ரீம்ஸ் படியுங்கள் நண்பரே..அதற்கு பின் அன்னியன் படமும் சுஜாதா பற்றிய அபிப்பிராயமும் கொஞ்சம் மாறும்!
ReplyDeleteஉண்மைதான் தல....TELL ME YOUR DREAMS படிச்சா அந்நியன் படத்த காறி துப்பிடுவிங்க......
ReplyDeleteநாவல் செம வேகமா போகும்.....
சாப்டருக்கு சாப்டர் ட்விஸ்ட் தான்....
ONE OF THE UNFORGETTABLE CLASSICS AND SHELDON’S BEST......
Tell me your dreams ரொம்ப பேமஸ் போல..., ரூம்ல ரொம்ப நாளா கிடக்குது... ஆன புரட்டுனது கோட இல்ல...
ReplyDeleteசிட்னி ஷெல்டனின் அனைத்து நாவல்களுமே விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸும், டெல் மீ யுவர் ட்ரீம்ஸ் என்னுடைய பேவரிட்.
ReplyDeleteலேட்டஸ்ட்டாக Mistress of the game பார்த்தேன். ஷெல்டனின் ரசிகை எழுதியது போல. வாங்கனும்.
Sathyarajs' movie 'Makkal En Pakkam' was also "Inspired!!!" by a Sidney Sheldon novel(Rage of Angels)
ReplyDelete- Hidha
For your kind information, "The other side of Me" (his own autobiogaphy) is his last novel..:-)
ReplyDeleteபாதி கதையில அடியாளா வர்ற ஒருவரோட ஃப்ளாஷ்பேக்லாம்தான் கொஞ்சம் போரடிக்குது. மத்தபடி இது ஒரு பக்காவான த்ரில்லர் நாவல்! //
ReplyDeleteஅது தானே சிட்னி ஷெல்டன் நாவல். இன்னும் அவருடைய நாவல்கள் நிறைய வாசிங்க. விடிய விடிய முழிச்சு படிச்சு முடிச்சுடுவீங்க. அவ்ளோ சுவாரசியம்.
என்ன ரகு, ஒரு வார கேப்புல குறும்பன் ரகுவா ஆயாச்சு....
ReplyDeleteபெயருக்கு கீழ பஞ்ச் இல்லைன்னு சொல்றதுக்கே ஒரு பஞ்ச் போட்டு இருக்கீங்க.....
ஏதாவது ஜோசியர் பார்த்திங்களா, ப்ளாகுல பெயர் மாற்றம் செய்தால் சீக்கிரத்தில் பாப்புலர் பதிவர் ஆகலாமுன்னு:-)) அதுசரி உங்க எழுத்துக்களிலே குறும்புகள் இருக்கும்போது எதற்கு தனியாக குறும்பன் என்று வேற...:-)
//"முதல் 'பீட்டர்' நாவல்"//.....
ReplyDeleteடைட்டிலே நல்லா இருக்கு! (அதுசரி,அதென்ன பீட்டர் விடுறதுன்னா?...ரொம்ப நாள் டவுட்டு)
//இந்த நாவல் படிச்சு முடிச்சுட்டு விக்கிபீடியால பாத்தா, ஒரு ஸ்ட்ரேஞ்சான விஷயம். நான் முதல் முதலா படிச்ச ஸிட்னி ஷெல்டனோட இந்த நாவல்தான், அவர் எழுதின கடைசி நாவல்:(//............
இது ஏதோ சிம்பாலிக்கா சொல்ற மாதிரி இல்ல;;-)
நன்றி சென்ஷி
ReplyDeleteநன்றி அண்ணாமலையான், ஏன் பாஸ் என்னை பாத்தா கொலைகாரன் மாதிரியா தெரியுது?!....:)
Thanks Anony, I'm really looking out for "If Tomorrow Comes"
ReplyDeleteநன்றி ஹரீஷ், ஞாபகமிருக்கா? கெமிஸ்ட்ரி...கெமிஸ்ட்ரி....:)
ReplyDelete//நீங்களும் நாளைக்கு பேட்டில "Well, I like Sidney's writings..." அப்படின்னு கொஞ்சம் ஸ்டைலான இங்கிலிஷ்ல சொல்லுங்க//
அதுக்கென்ன சொன்னா போச்சு, ஆனா யாரு கேப்பாங்க:(
நன்றி ரெட்டைவால்'ஸ், நண்பர் ஒருத்தர் சொல்லியிருக்கார் "டெல் மீ யுவர் ட்ரீம்ஸ்" பத்தி, சரி ஃப்ரீயா விடுங்க, நம்ம சுஜாதா சார்:)
ReplyDeleteநன்றி இல்லுமினாட்டி, "டெல் மீ யுவர் ட்ரீம்ஸ்" படிச்சு பாக்கறேன்:)
ReplyDeleteநன்றி ஆனந்த், சீக்கிரம் படிச்சுட்டு சொல்லுங்க:)
ReplyDeleteநன்றி வித்யா, படிச்சுட்டு நீங்களும் பதிவிடுங்க:)
ReplyDelete//'Makkal En Pakkam'//
ReplyDeleteThanks Anony, is it so? I haven't read this so far anywhere!
Thanks Anony, but autobiography is different from novel, right? That's why I mentioned "Are You Afraid of the Dark?" is his last novel:)
நன்றி விக்கி, ஆனா எனக்கு கொஞ்சம் போரடிக்கத்தான் செஞ்சுது.
ReplyDeleteகண்டிப்பா நிறைய வாசிக்கிறேன்:)
நன்றி ப்ரியா, ஹாஹ்ஹா, எனக்கு அதுலல்லாம் அவ்வளவா நம்பிக்கையில்லிங்க, அதுக்காக நம்பிக்கை இருக்கறவங்கள நான் கிண்டல் பண்ணவும் மாட்டேன்
ReplyDeleteச்சும்மா ஒரு சேஞ்சுக்காகத்தான் உண்மையான பெயரையே போட்டுட்டேன்:)
//அதுசரி,அதென்ன பீட்டர் விடுறதுன்னா?...ரொம்ப நாள் டவுட்டு//
ஆங்கிலத்துல பேசறததாங்க பீட்டர் விடுறதுன்னு சொல்லுவோம்
//இது ஏதோ சிம்பாலிக்கா சொல்ற மாதிரி இல்ல//
அப்படியா இருக்கு?
ஷிட்னி ஷெல்டனெல்லாம் படிக்கிற நேரம் கிடைச்சா....நினைக்கவே இனிக்குது.
ReplyDelete