Sunday, January 10, 2010

சினிமா துணுக்ஸ்!

டிஸ்கி: நாடு முன்னேறுவ‌த‌ற்கோ, நாட்டின் பொருளாதார‌ம் முன்னேறுவ‌த‌ற்கோ இந்த‌ ப‌திவு எந்த‌ ப‌ய‌னும் த‌ராது. இதுல‌ மூணே விஷ‌ய‌ம்தான் இருக்கு, சினிமா, சினிமா & சினிமா!

ஏக‌ப்பட்ட‌ எச்ச‌ரிக்கைக‌ளுக்கு அப்புற‌மும் போன‌ வார‌ம் "வேட்டைக்கார‌ன்" பாக்க‌ போயிருந்தேன். ப‌ட‌த்தை ப‌த்தி ஏற்க‌ன‌வே எல்லாரும் அல‌சி, பிழிஞ்சு, காய‌ப்போட்டு, அய‌ர்ன் ப‌ண்ணி ம‌டிச்சே வெச்சுட்டாங்க‌. இதுல‌ நான் வேற‌ புதுசா என்ன‌த்த‌ சொல்ற‌து. ஆனா ப‌ட‌ம் பாக்கும்போது ந‌ட‌ந்த‌ ஒரு விஷ‌ய‌ம் இன்ட்ர‌ஸ்டிங்!

என்னோட சீட் ப‌க்க‌த்துல‌ ஒரு க‌ண‌வ‌ன் ம‌னைவி அவ‌ங்க‌ குழ‌ந்தைக‌ளோட‌ வ‌ந்திருந்தாங்க‌. குழ‌ந்தைக‌ளுக்கு அஞ்சு இல்ல‌ ஆறு வ‌ய‌சிருக்கும். விஜ‌ய்யோட‌ ஒடி வ‌ர்ற‌ அந்த‌ முத‌ல் சீன்ல‌ என்னா ஒரு கைத்த‌ட்ட‌ல் தெரியுமா? அந்த‌ குழ‌ந்தைங்க‌ இல்லீங்க‌, அவ‌ங்க‌ அம்மா. அவ‌ங்க‌ த‌ட்ட‌ற‌து ப‌த்தாதுன்னு, அவ‌ங்க‌ க‌ண‌வ‌ரை "க‌ம்முன்னு பாக்குறீங்க‌ளே, கைத்த‌ட்டுங்க‌ளேன்"னு சொல்றாங்க‌ (ஒட்டு கேக்க‌ல‌, அவ‌ங்க‌ குர‌ல் அந்த‌ள‌வுக்கு கேட்டுது). ண்ணா, க‌ண்டிப்பா ர‌ஜினிக்கு அப்புற‌ம் நீங்க‌தாணுங்ணா! மாஸ் ஹீரோவேதான், ட‌வுட்டே இல்லீங்ணா!

**************************************

ச‌மீப‌ நாட்க‌ள்ல‌ FM கேக்கும்போது இந்த‌ பாட‌ல்க‌ள் ரொம்ப‌ புடிச்சுபோச்சு.


கோவா - வாலிபா வா வா - இளைய‌ராஜா, எஸ்பிபி & சித்ரா

பாட‌ல் கேக்கும்போதே, பிக்ச‌ரைசேஷ‌ன்ல‌ வெங்க‌ட்பிர‌பு பொள‌ந்துக‌ட்டுவாருன்னு தெரியுது. ரொம்ப‌ நாளைக்க‌ப்புற‌ம் சித்ராவோட‌ வாய்ஸ் கேக்குற‌ மாதிரி ஒரு ஃபீல். மூணு லெஜ‌ன்ட்ஸ் பாடின‌ பாட்டு, கேக்க‌வா வேணும்....சே, கேக்க‌த்தான் வேணும்!

கோவா - கோவா - கிரிஷ், ர‌ஞ்சித், த‌ன்வி, சுசித்ரா, சின்க் ஷோடைம் (என்ன‌ பேரோ!), பாவ் ப‌ண்டி (என்னாங்க‌ய்யா பேர் வெக்குறீங்க‌, ஏதோ பாவ் ப‌ஜ்ஜிங்க‌ற‌ மாதிரி)

முத‌ல் த‌ட‌வை கேக்கும்போது துளியும் புரிய‌ல‌, ஈஸியா சொல்ல‌ணும்னா, இது த‌னுஷ் வ‌கை பாட்டு. கேட்டா புடிக்காது, கேக்க‌ கேக்க‌தான் புடிக்கும்.

அச‌ல் - ஹே துஷ்ய‌ந்தா - சுர்முகி, கும‌ர‌ன்

இப்ப‌வே சொல்றேன், இந்த‌ பாட்டு க‌ண்டிப்பா ஹிட்! ப‌ல்ல‌வி கேக்கும்போதே ஓர‌ள‌வுக்கு புடிச்சிடுச்சு. கார‌ண‌ம், "ஜ‌ப் வி மெட்" ப‌ட‌த்துல‌ க‌ரீனா வீட்டை விட்டு ஓடும்போது ஒரு பாட்டு வ‌ருமே, அதே மாதிரி இருந்த‌து. ச‌ர‌ண‌ம் வ‌ரும்போது, "புதிய‌ ப‌ற‌வை"ல‌ வ‌ர்ற‌ "பார்த்த‌ ஞாப‌க‌ம் இல்லையோ" பாட‌லில் இருந்து "அந்த‌ நீல‌ ந‌திக்க‌ரை ஓர‌ம்" எடுத்திருக்காங்க‌. சாதார‌ண‌மா ரீமிக்ஸ் ப‌ண்ணும்போது மோஸ்ட்லி ப‌ழைய‌ பாட்டை கொத்து ப‌ரோட்டாவா போட்டுட‌றாங்க‌. ஆனா இந்த‌ பாட்டு ரிய‌லி சூப்ப‌ர்ப்! பி.சுசீலா க‌ண்டிப்பா சுர்முகியை பாராட்ட‌வே செய்வாங்க‌!

இந்த‌ பாட்டு கேட்டு முடிச்ச‌ப்புற‌ம் "ஹே துஷ்ய‌ந்தா"வை விட‌ "அந்த‌ நீல‌ ந‌திக்க‌ரை ஓர‌ம்"தான் ஹ‌ம் ப‌ண்ணிகிட்டேயிருக்கேன்!

**************************************

இப்ப‌தான் ரீச‌ன்டா பொங்க‌லுக்கு வ‌ர்ற‌ ப‌ட‌ங்க‌ள் டிரெய்ல‌ர்லாம் பார்த்தேன். அனேகமா எல்லாரோட‌ ஃப‌ர்ஸ்ட் சாய்ஸும் "ஆயிர‌த்தில் ஒருவ‌ன்"தான்.

ஆனா என்னோட‌ சாய்ஸ் "த‌மிழ் ப‌ட‌ம்"தான். இது மாதிரி ஸ்பூஃப் ப‌ட‌ம் த‌மிழுக்கு புதுசுன்னு நினைக்குறேன். இது ந‌ல்லா ஓடுச்சுனா, இந்த‌ ட்ரெண்டில் நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ர‌லாம். ப‌ட‌த்தோட‌ பெரிய‌ ப்ள‌ஸ் நீர‌வ் ஷா. இதுல‌, சிவா "ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட‌ சொல்றாங்க‌"ன்னு கேக்கும்போது, பாஸ்க‌ர், "இனிமே எல்லாம் அப்ப‌டித்தான்"னு சொல்லுவார். அப்போ நாய‌க‌ன் பிஜிஎம் போட‌றாங்க‌ பாருங்க‌, சூப்ப‌ர‌ப்பு!
http://www.youtube.com/watch?v=KgEoIGeKbuw

செக‌ண்ட் சாய்ஸ், க‌ண்டிப்பா, "ஆயிர‌த்தில் ஒருவ‌ன்"தான். ட்ரெயில‌ர் ஆர‌ம்ப‌த்திலேயே ரீமாவும், ஆண்ட்ரியாவும் கெட்ட‌ கெட்ட‌ வார்த்தைக‌ள்ல‌ திட்டிக்க‌றாங்க‌. இதெல்லாம் ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ள்ல‌தான் பார்த்த‌து (கேட்ட‌து!). செல்வ‌ராக‌வ‌ன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு போயிட்டாருங்க‌. கார்த்தியோட‌ வாய்ஸ் மாடுலேஷ‌ன் ப‌ருத்தி வீர‌னை அவ‌ர் இன்னும் ம‌ற‌க்க‌ல‌ன்னு சொல்லுது. ஃப்ரெண்ட்ஸ் சில‌ பேர் "ம‌ம்மி" ப‌ட‌ம் மாதிரி இருக்கும்னு சொல்றாங்க‌. என‌க்கு "இண்டியானா ஜோன்ஸ்"தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது. என்ன‌ வேணும்னாலும் சொல்ல‌லாம், ஆனா செல்வ‌ராகவனுக்காக‌வே இந்த‌ ப‌ட‌ம் பாக்க‌ணும்!
http://www.youtube.com/watch?v=rFG1Ak49agk

லாஸ்ட், "இரும்புக் கோட்டை முர‌ட்டு சிங்க‌ம்". இந்த‌ ப‌ட‌த்தை நான் பாக்க‌ணும்னு நினைக்க‌ற‌துக்கு ரெண்டே கார‌ண‌ங்க‌ள்தான். ஒண்ணு, ரொம்ப‌ வ‌ருஷ‌த்துக்க‌ப்புற‌ம் த‌மிழ்ல‌ ஒரு கெள‌பாய் ப‌ட‌ம். அடுத்த‌து, சிம்புதேவ‌ன். இம்சை அர‌சனை வைத்து கோட்டை க‌ட்டிய‌ சிம்புதேவ‌ன், அறை எண் 305ல் இருந்த‌ க‌ட‌வுளுக்கு ச‌ரியா கோயில் க‌ட்ட‌லைன்னுதான் சொல்ல‌ணும். இந்த‌ சிங்க‌ம் ந‌ல்லாவே க‌ர்ஜிக்கும்னு நினைக்குறேன், பாக்க‌லாம்!
http://www.youtube.com/watch?v=e17PRxFhkaw

**************************************

சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேனே! டைர‌க்ட‌ர் ஷ‌ங்க‌ரும் க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டார், போய் பாருங்க‌ http://www.directorshankaronline.com/

எல்லாருக்கும் அட்வான்ஸ் (இதை த‌மிழ்ல‌ எப்ப‌டி சொல்ற‌து?) பொங்க‌ல் வாழ்த்துக்க‌ள்!


13 comments:

  1. //ஏக‌ப்பட்ட‌ எச்ச‌ரிக்கைக‌ளுக்கு அப்புற‌மும் போன‌ வார‌ம் "வேட்டைக்கார‌ன்" பாக்க‌ போயிருந்தேன்//...
    என்னா தைரியம்;...
    (நானும் பார்த்திட்டேன், நானும் தைரியமான பொன்னுதான்)

    //கேக்க‌வா வேணும்....சே, கேக்க‌த்தான் வேணும்!//...நைஸ், அழகான வரி!

    ReplyDelete
  2. இயல்பான நகைச்சுவைல பின்னுறீங்க..

    ReplyDelete
  3. வாங்க‌ ப்ரியா, உங்க‌ளுக்கும் ரொம்ப‌வே தைரிய‌ம்தான்:)

    ReplyDelete
  4. ந‌ன்றி வினோத்கெள‌த‌ம்

    ReplyDelete
  5. ந‌ன்றி வெற்றி, பேருல‌யே க‌ல‌க்குறீங்க‌:)

    ReplyDelete
  6. ந‌ன்றி வித்யா, உங்க‌ளுக்கும் பொங்க‌ல் ந‌ல்வாழ்த்துக்க‌ள்!

    ReplyDelete
  7. ஹாய் ரகு,
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்... 'தை' அதுவுமா ஏதாவது பண்ணலாமேன்னு தோணிச்சு... நம்ம படத்துக்குத்தான் ப்ளாக் இருக்கு, நமக்கு தனியா ஒரு ப்ளாக் இல்லியே, எழுதலாமான்னு தோணிச்சு... சரின்னு உங்களையெல்லாம் நம்பி எழுத ஆரம்பிச்சிருக்கேன்... நேரம் கிடைக்கும்போது வந்து எட்டிப் பாத்துட்டு போங்க...

    http://hareeshnarayan.blogspot.com

    அன்புடன்
    ஹரீஷ் நாராயண்

    ReplyDelete
  8. வாங்க‌ ஹ‌ரீஷ்‌, உங்க‌ளுக்கும் பொங்க‌ல் வாழ்த்துக்க‌ள்!

    //உங்களையெல்லாம் நம்பி//
    ஏன்? எதுக்காக‌? ஏன் இப்ப‌டில்லாம்?....:)

    //நேரம் கிடைக்கும்போது வந்து எட்டிப் பாத்துட்டு போங்க//
    நேர‌ம் கிடைக்கும்போதா? ரெகுல‌ராவே வ‌ர்றேன்:)

    ReplyDelete
  9. டிஸ்கியே சூப்பருங்க.

    அந்த லேடி தானே கைத்தட்டினாங்க. குழந்தைங்களும், கணவரும் மிரண்டு போய் தானே இருந்தாங்க. இதாங்க விஜய்யாலும், விஜய் ஃபேன்சாலும் வரும் பிரச்சனை.

    கேக்க‌வா வேணும்....சே, கேக்க‌த்தான் வேணும்! //
    இப்போவே கேட்டுர்றேன்.

    நீங்க குடுத்த லிங்கெல்லாம் போய் எல்லா ட்ரெய்லரும் பார்த்தச்சு. தமிழ்நாடு வந்து படங்கள் பார்க்க ஆவலா காத்திட்டிருக்கேன்.
    பொங்கல் வாழ்த்துக்கள் ரகு.

    ReplyDelete
  10. ந‌ன்றி விக்கி

    க‌ரெக்டுதான், அவ‌ங்க‌ளோட‌ க‌ண‌வ‌ர் ரொம்ப‌வே பாவ‌ம்ங்க‌

    ப‌ட‌ங்க‌ள்லாம் பாத்துட்டு சொல்லுங்க‌

    உங்க‌ளுக்கும் பொங்க‌ல் வாழ்த்துக்க‌ள்:)

    ReplyDelete
  11. //ஆனாலும் இதையும் மீறி, ர‌ஜினிக்கு அப்புற‌ம் விஜ‌ய்ய‌த்தான் பெரும்பாலான‌ குழ‌ந்தைக‌ளும், பெண்க‌ளும் ர‌சிக்க‌றாங்க‌.//

    கசப்பான உண்மைங்கோ..

    //முன்ன‌ல்லாம், இங்கிலீபிஸு ப‌ட‌த்த‌ காப்பி அடிச்சாங்க‌, இப்ப‌ல்லாம், த‌மிழ் ப‌ட‌த்தையே காப்பி அடிக்க‌றாங்க‌, //

    நச்

    //ஹ‌லோ...என்னாதிது? இப்ப‌டியா மானிட்ட‌ர் மேல‌யே துப்ப‌ற‌து? //
    நானாவது, என் மானிடர் மேல துப்பரதாவது..?

    thanks.. visit my blog too..

    ReplyDelete
  12. ந‌ன்றி maddy73, க‌ண்டிப்பா வ‌ரேன்:)

    ReplyDelete