Sunday, January 24, 2010

எர்ணாகுள‌த்தில்‌ ஞான்...

டிஸ்கி: டார்டாய்ஸோ, மார்ட்டீனோ அது உங்க‌ இஷ்ட‌ம், நீங்க‌ எதை வேணும்னாலும் கொளுத்திக்க‌லாம், ஆனா நான் சொல்ல‌விருப்ப‌து ஒரு கொசுவ‌த்தி என்ப‌தை ம‌ட்டும் ச‌ஞ்ச‌ய் ராம‌சாமி/சிங்கானியா போலில்லாம‌ல் ச‌ற்று நினைவில் கொள்க‌:)

தேதிலாம் ஞாப‌க‌ம் இல்ல‌ (இதென்ன‌ கெள‌த‌ம் ப‌ட‌மா, துணி காய‌போட்டாகூட‌ தேதிலாம் போட‌ற‌துக்கு), ஆனா ம‌ணி சுமாரா (அல்ல‌து) சூப்ப‌ரா காலை 10:30

கொஞ்ச‌ நாள் முன்னாடி த‌ம்பிக்கு ஒரு எக்ஸாம் எழுத‌ற‌துக்காக‌ எர்ணாகுள‌ம் போக‌வேண்டியிருந்த‌து. ட்ரெயின் டிக்கெட்லாம் ரிச‌ர்வ் ப‌ண்ணியாச்சு, ப‌ட் வெயிட்டிங் லிஸ்ட்ல‌ இருந்த‌து. ஆனா க‌ரெக்டா அந்த‌ நாள்ல‌ வேறு சில‌ கார‌ண‌ங்க‌ளால‌ அவ‌னால‌ போக‌முடிய‌ல‌. ச‌ரி டிக்கெட்ட‌ கேன்ச‌ல் ப‌ண்ண‌லாம்னு ரிச‌ர்வேஷ‌ன் சென்ட‌ருக்கு நான் போனா, அங்க‌ க‌வுண்ட்ட‌ர்ல‌ இருந்த‌வ‌ர், "சார், வெயிட்டிங் லிஸ்ட்னுலாம் பாக்காதீங்க‌, இதுக்கு க‌ண்டிப்பா சீட் கிடைக்கும்"னார்.

புக் ப‌ண்ண‌து செக‌ண்ட் க்ளாஸ் ஏசி. ம‌ன‌சுக்குள்ள‌ ஒரு சின்ன‌ ஆசை, எப்ப‌வும் வீடு to ஆஃபிஸ், ஆஃபிஸ் to வீடுன்னு இருக்கோமே, நாம‌ போனா என்ன‌? அப்பாகிட்ட‌ சொன்னா அதெல்லாம் த‌ப்புடா, அவ‌ன் பேர்ல‌ ரிச‌ர்வ் ப‌ண்ணிட்டு நீ போக‌கூடாதுன்னார். சில‌ ப‌ல‌ talkக‌ளுக்கு அப்புற‌ம் ச‌ரி போய் தொ(ல்)லைன்னு விட்டுட்டார்.


பூ + நார் 4:00

சென்ட்ர‌ல் வ‌ந்து ட்ரெயின்ல‌ லிஸ்ட் பாத்தா சீட் க‌ன்ஃப‌ர்ம்! ஹேஹேய்! உட‌னே சீட் தேடி ட்ரெயின் உள்ள‌ ஓடிட்டேன். ஃப்ரெண்டுக்கு கால் ப‌ண்ணி சொன்னா, "செக‌ண்ட் க்ளாஸ் ஏசியா? நெறைய‌ ஃபிக‌ரா வ‌ரும், அப்போ செம‌ க‌ட‌லைதான், என்ஜாய் ப‌ண்ணு"ன்னு ப‌ய‌புள்ள‌ ந‌ம்ம‌ ஒட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மாக்குறான். ஆனா நான் அப்ப‌டிப‌ட்ட‌வ‌ன் கிடையாது, அதையெல்லாம் எதிர்பார்த்து நான் போக‌ல(ன்னு சொன்னா ந‌ம்ப‌வா போறீங்க‌..ஹி..ஹி..). உள்ள‌ போய் உக்காந்தா எதிர் சீட்ல‌ ஒரு தாத்தா, அவ‌ரோட‌ பேர‌ன், பேத்தியோட‌ உக்காந்துகிட்டு இருக்க‌றார். ரெண்டும் ச‌ரியான‌ வாண்டுங்க‌! யோவ், நியாயமாயா இதுன்னு ம‌னசுக்குள்ளே பிள்ளையாரை (நானும் பிள்ளையாரும் கொஞ்ச‌ம் க்ளோஸ்) லேசா திட்டிகிட்டே நான் என் பெர்த்ல‌ போய் ப‌டுத்துட்டேன்.

கீழ் பெர்த்ல‌ இருந்த‌ பைய‌ன்கிட்ட‌ டிடிஆர் டிக்கெட் செக் ப‌ண்ண‌ வ‌ந்த‌ப்போ, ஏதாவ‌து ஃபோட்டோ ப்ரூஃப் காட்ட‌ சொல்ல‌, அந்த‌ பைய‌னும் அவ‌ர்கிட்ட‌ டிரைவிங் லைசென்ஸ‌ எடுத்து காமிச்சான். அப்போதான் என‌க்கு கொஞ்ச‌ம் உத‌ற‌ ஆர‌ம்பிச்சுது. உஷாரா நான் த‌ம்பியோட‌ எலெக்ஷ‌ன் ஐடி கார்டையும் எடுத்துட்டுபோயிட்டேன். ஆனா அதுல‌ இருக்க‌ற‌துக்கும் உன‌க்கும் வித்தியாச‌மாயிருக்கேன்னு (அவ‌ன் என்னைவிட‌ கொஞ்ச‌ம் க‌ல‌ர்) சொன்னா என்ன‌ ப‌ண்ற‌து? ஆனா ந‌ல்ல‌வேளை அவ‌ர் கேக்க‌ல‌, டிக்கெட் ம‌ட்டும்தான் செக் ப‌ண்ணார்.(ஆன்லைன்ல‌ ரிச‌ர்வ் ப‌ண்ணாதான் கேப்பாங்க‌ன்னு அப்புற‌ம் ந‌ண்ப‌ர் ஒருத்த‌ர் சொன்னார்).

ந‌டுராத்திரியில‌ ரொம்ப‌ குளிரா இருந்த‌து. ச‌ரி கொஞ்ச‌ நேர‌ம் வெளியே நிப்போம்னு க‌த‌வுகிட்ட‌ வ‌ந்தா ஏற்க‌ன‌வே இன்னொருத்த‌ர் வ‌ந்து நின்னுட்டிருந்தார். அவ‌ர் என்கிட்ட‌ கேட்டார்.

"எத்த‌னை ம‌ணிக்கு சார் எர்ணாகுள‌ம் (அட‌ நாம‌ போற‌ ஊருதான்டோய்!) ரீச் ஆகும்?"

ம்ஹும்..நான் அப்ப‌டியே நாலு நாளைக்கு ஒருத‌ட‌வை எர்ணாகுள‌ம் போய் வ‌ந்துட்டு இருக்க‌றேன், ந‌ம்ம‌ள‌ கேக்குறாரு டீட்டெயிலு‌......ஆனாலும் ந‌ம‌க்குன்னு ஒரு 'கெத்' இருக்குல்ல‌ அத‌ விட‌முடியுமா?

"ஹாஃப் அன் ஹ‌வ‌ர் லேட்டா போகுதுன்னு நினைக்குறேன் (எல்லாம் ந‌ம்ம‌ ர‌யில்வேஸ் மேல‌ இருக்க‌ற‌ ஒரு ந‌ம்பிக்கைதான்), எப்ப‌டியும் ஃபோர் டு ஃபோர் த‌ர்ட்டிக்குள்ள‌ ரீச் ஆயிடும்" (IRCTC வெப்சைட்ல‌ 4:15ன்னு போட்டிருந்துது)

"ஓ, அவ்ளோ நேர‌ம் ஆகுமா?"

"ஆமாங்க‌"
.....பார்றா, நான் சொல்ற‌த‌யும் ஒரு ம‌னுஷ‌ன் ந‌ம்புறாரு.

ம‌றுநாள் கையை...ர்ர்ர்ர்...சாரி....காலை 4:15

ர‌யில்வேஸ்ல‌ ந‌ல்லாவே வேலை செய்யுறாங்க‌ப்பா! ட்ரெயின் க‌ரெக்ட் ட‌ய‌த்துக்கே எர்ணாகுள‌த்தில் ரீச் ஆச்சு. இற‌ங்கி எப்ப‌டி வெளியே போகுற‌துன்னு தெரிய‌ல‌. ந‌ம்ம‌ மேல் மாடியில‌தான் ஆடு குடியிருக்கே, ச‌ரி எல்லாரும் எப்ப‌டி போறாங்க‌ளோ அப்ப‌டியே நாமும் போவோம்னு ஜ‌ன‌ங்க‌ பின்னாடியே போனேன்.

வெளியே போனா ஒரு ப்ரீபெய்டு ஆட்டோ பூத் இருந்த‌து. இப்போதான் மேல் மாடியில‌ ஆடுங்க‌ வெளியே போய், நானே போய் குடியேறி யோசிக்க‌ ஆர‌ம்பிச்சேன், த‌மிழ்ல‌ பேச‌லாமா இல்ல‌ பீட்ட‌ர் விட‌லாமா? அங்க‌ உக்காந்துகிட்டிருக்க‌ற‌வர் பீட்ட‌ர் விட‌ல‌னா அவ‌ர‌ அசிங்க‌ப்ப‌டுத்த‌ற‌ மாதிரி இருக்கும், ச‌ரி வேணாம்னு ('ச‌ரி' - 'வேணாம்'......இது முற‌ண்தொடையா??? என்ன‌து? ர‌ம்பா...........ஹ‌லோ வேணாம், ந‌ம்ம‌ ப்ளாக் கொஞ்ச‌ம் க‌ம‌ர்ஷிய‌ல்னாலும் அனைவ‌ரும் குடும்ப‌த்துட‌ன் ப‌டிக்க‌க்கூடிய‌ ப்ளாக்.....இங்க‌ மானும் ஆடாது, ம‌யிலும் ஆடாது) முடிவு ப‌ண்ணி, த‌மிழ்ல‌யே கேட்டேன்.

"சென்னை ப‌ஸ்லாம் இருக்க‌ற‌ ப‌ஸ் ஸ்டாண்ட் ப‌க்க‌த்துல‌யே ஒரு ஹோட்ட‌லுக்கு போக‌ணும்"

அவ‌ர் உட‌னே பில் போட்டு குடுத்துட்டார். ப‌க்க‌த்துல‌ ஆட்டோவும் ரெடியா இருக்க‌, ஏறி உட்கார்ந்தேன். முத‌ல் முறையா மொழி தெரியாத‌ ஊர்ல‌ என் ப‌ய‌ண‌ம். அந்த‌ ஆட்டோக்கார‌ரும், அப்ப‌டி இப்ப‌டி சுத்தி, ஒரு இட‌த்துல‌ நிறுத்தி "அப்ப‌டி போங்க‌"ங்க‌ற‌ மாதிரி ம‌லையாள‌த்துல‌ ஏதோ சொன்னார். ஓகே, தேங்க்ஸ்னு சொல்லிட்டு கொஞ்ச‌ம் உள்ள‌ ந‌ட‌ந்தா அது ப‌ஸ் ஸ்டாண்ட்!

ப‌ஸ் ஸ்டாண்ட் ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌ ஒரு ஹோட்ட‌லுக்கு போக‌ணும்னு சொன்னா அந்த‌ அறிவுகொழுந்து ப‌ஸ் ஸ்டாண்டுக்கே போற‌துக்கு ஆட்டோவ‌ ஏற்பாடு ப‌ண்ணியிருக்கு. த‌ப்பு என் மேல‌யும் இருக்கு, நான் இன்னும் கொஞ்ச‌ம் புரிய‌ற‌ மாதிரி சொல்லியிருக்க‌ணும். ப‌ஸ் ஸ்டாண்ட்ல‌ சுத்திட்டு வெளியே வ‌ந்து, நான் வ‌ந்த‌ ஆட்டோ இருக்குதான்னு பாத்தேன். அண்ண‌ன் அப்ப‌வே எஸ்ஸாயிட்டிருக்காரு. வேற‌ ஒரு ஆட்டோக்கார‌ரை பார்த்து "ஸ்டே ப‌ண்ண‌ணும், ஏதாவ‌து ஒரு லாட்ஜுக்கு போக‌ணும்"னேன். அவ‌ருக்கு த‌மிழ் தெரியும் போல‌. சிரிச்சுகிட்டே "போலாம் சாரே"ன்னார்.

ஒருவேளை 'லாட்ஜ்'ன்னு சொன்ன‌தால‌ அவ‌ரு ந‌க்க‌லா சிரிச்சாரோன்னு என‌க்கு தோண‌, ம‌னசுக்குள்ளேயே "ஓய் சேட்டா, ஞான் அவ‌ன் இல்லா"ன்னு சொல்லிகிட்டேன். அந்த‌ நேர‌ம் அங்க‌ ஏதோ திருவிழா நேர‌மாம், அத‌னால‌ த‌ங்க‌ற‌துக்கு எங்கேயுமே ரூம் காலி இல்ல‌ன்னு சொல்லிட்டாங்க‌. ரொம்ப‌ நேர‌ம் அலைஞ்சு திரிஞ்சு ஒரு லாட்ஜ்ல‌ ரூம் கிடைச்சுது. அதுக்க‌ப்புற‌ம்........


ப‌ய‌ப்ப‌டாதீங்க‌, பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3ன்னுலாம் இழுக்க‌ மாட்டேன். அடுத்த‌ ப‌திவுல‌ முடிச்சிடுறேன். என்ன‌............அதுக்குள்ள‌ அங்க‌ "அப்பாடா"ன்னு ஒரு பெருமூச்சு............ஒரு டெர‌ராத்தான் இருக்கேனோ????

.

20 comments:

  1. http://www.blogger.com/profile/08685211260214923281

    நண்பா, ஏற்கனவே நம்மாள் ஒருத்தர் குறும்பு செய்துட்டு இருக்காரு.... இப்ப மேலும் இனியொருத்தரா? வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. //நானும் பிள்ளையாரும் கொஞ்ச‌ம் க்ளோஸ்// meto , nice. There was one palace in Ernakulam , famous for PAINTINGS. Our class boys came out the room after 1 hour , we cant stay there with boys . for our gud time girls nd boys saw the paintings by separately .

    ReplyDelete
  3. //ஃப்ரெண்டுக்கு கால் ப‌ண்ணி சொன்னா, "செக‌ண்ட் க்ளாஸ் ஏசியா? நெறைய‌ ஃபிக‌ரா வ‌ரும், அப்போ செம‌ க‌ட‌லைதான், என்ஜாய் ப‌ண்ணு"ன்னு ப‌ய‌புள்ள‌ ந‌ம்ம‌ ஒட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மாக்குறான். ஆனா நான் அப்ப‌டிப‌ட்ட‌வ‌ன் கிடையாது, அதையெல்லாம் எதிர்பார்த்து நான் போக‌ல(ன்னு சொன்னா ந‌ம்ப‌வா போறீங்க‌..ஹி..ஹி..). உள்ள‌ போய் உக்காந்தா எதிர் சீட்ல‌ ஒரு தாத்தா, அவ‌ரோட‌ பேர‌ன், பேத்தியோட‌ உக்காந்துகிட்டு இருக்க‌றார். ரெண்டும் ச‌ரியான‌ வாண்டுங்க‌!//.........
    ஏமாந்துட்டீங்களே...SMS படத்தில வரும் சிவா மாதிரி ஏதாவ‌து பில்டப்பண்ணி இருக்கலாம்:-)

    //ஒருவேளை 'லாட்ஜ்'ன்னு சொன்ன‌தால‌ அவ‌ரு ந‌க்க‌லா சிரிச்சாரோன்னு என‌க்கு தோண‌, ம‌னசுக்குள்ளேயே "ஓய் சேட்டா, ஞான் அவ‌ன் இல்லா"ன்னு சொல்லிகிட்டேன்//......
    நான் நம்புறேன், நிஜமா நீங்க அவன் இல்ல‌!

    இரண்டு வருடம் முன்னால நான் எர்ணாகுள‌ம் போயிருக்கேன்... நைஸ் ப்ளேஸ்!
    அப்புறம் பார்ட் 2 எப்போ.........???

    ReplyDelete
  4. ernakulam bus stand konjam naala etho vithyasama irukadhu ithanala thaana?

    ReplyDelete
  5. ந‌ன்றி ப‌ழமைபேசி, இதே பெய‌ர்ல‌ இன்னொருத்த‌ர் இருக்காருன்னு ஏற்க‌ன‌வே தெரியும் ந‌ண்பா, இந்த‌ ப‌திவை ப‌டிச்சு பாருங்க‌:)

    http://kurumbugal.blogspot.com/2009/12/blog-post.html

    ReplyDelete
  6. ந‌ன்றி ம‌தார், நீங்க‌ளும் பிள்ளையாருக்கு க்ளோஸ்தானா? அப்ப‌ நீங்க‌ என் ஃப்ரெண்டோட‌ ஃப்ரெண்ட்:)

    நான் அந்த‌ அர‌ண்ம‌னைக்கு போகல‌, ஆமா, பாய்ஸும் கேர்ள்ஸும் த‌னித்த‌னியா போய் பாக்க‌ற‌ அள‌வுக்கு அங்க‌ என்ன‌ அப்ப‌டியொரு பிர‌ச்சினை?

    ReplyDelete
  7. வாங்க‌ ப்ரியா, SMS ப‌ட‌த்துல‌ வ‌ர்ற‌ மாதிரியா? நீங்க‌ வேற‌, நான் அந்த‌ தாத்தாகிட்ட‌ போய்தான் பில்ட‌ப் ப‌ண்ணிருக்க‌ணும்:(

    //நான் நம்புறேன், நிஜமா நீங்க அவன் இல்ல‌!//

    ரொம்ப‌ ந‌ன்றிங்க‌:)

    பார்ட் 2 இந்த‌ வார‌க்க‌டைசியில‌ ரெடியாயிடுங்க‌:) சீக்கிர‌ம் முடிச்சுத்தொலைன்னு சிம்பாலிக்கா சொல்றீங்க‌ளோ!

    ReplyDelete
  8. வாங்க‌ ஏஞ்ச‌ல், ஒய் திஸ் ம‌ர்ட‌ர் வெறி?:)))

    ReplyDelete
  9. வேலையே இல்லாம சும்மாச்சுக்கும் ஒரு ட்ரிப்பா... அதுவும் தம்பி டிக்கெட்டுல. நடத்துங்க.

    நல்லா இருக்கு உங்க நக்கலான நடை.

    ReplyDelete
  10. நல்லா சிரிப்பா எழுதிருக்கீங்க. உங்க blog-ஐ ஏன் இதுவரை தமிழ் மணத்தில் இணைக்க வில்லை? விரைவில் இணைக்கவும். இதன் மூலம் மேலும் பலரை நீங்கள் சென்றடையலாம்..

    ReplyDelete
  11. நகைச்சுவையா உங்களோட பயண அனுபவங்களை விவரிச்சிருக்கீங்க.. படிக்க நல்லா இருந்தது..

    ReplyDelete
  12. ரகு,
    "இவன் யாருக்காகவோ காத்துக்கொண்டிருக்கிறான்" அப்படிங்கிற வசனத்தை பாரதிராஜா ஸ்டைல்ல படிச்சி அதுக்கு விஷ்வலா, நான் கம்ப்யூட்டர்ல, உங்க ப்லாக் விண்டோவை வச்சிக்கிட்டு F5 பட்டன் அழுத்திக்கிட்டிருறதை இமேஜின் பண்ணிப் பாருங்க...

    என்னது..? எதுக்கா...

    ஏதாவது த்ரில்லர் எபிசோடை வெள்ளிக்கிழமை நைட் முடிக்கும்போது ஒரு பயங்கர ட்விஸ்ட் வச்சி, வர்ற மண்டே வரைக்கும் மண்டைய பிச்சிக்க வைப்பாங்க... அந்த மாதிரி, கேரளா... லாட்ஜ்... ரூம்...-னு சொல்லி பயங்கர ட்விஸ்ட்டோட முடிச்சிருக்கீங்க... அடுத்த எபிசோடை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க..

    சே! சே! நான் உங்களை தப்பா நினைக்கலை. உங்களைப் பத்தி நல்லா தெரியும் (நீங்க அவரில்லன்னு) இருந்தாலும், General Knowledgeஐ improve பண்ணிக்கலாமேன்னு "மாணிட்டர் மேல் விழி வைத்து காதிருக்கிறேன்.." (எக்கோ எஃபெக்ட்ல 3 தடவை படிச்சிக்கோங்க)

    ReplyDelete
  13. ந‌ன்றி விக்கி, சும்மா ஒரு நாலு எட்டு பாத்துட்டு வ‌ர‌லாம்னுதான்:)

    ReplyDelete
  14. நன்றி மோகன், இனிமே இணைச்சுடறேன்:)

    ReplyDelete
  15. நன்றி மணிகண்டன்:)

    ReplyDelete
  16. வாங்க ஹரீஷ், அவ்ளோ த்ரில்லிங்காவா இருக்கு? கலாய்க்கலியே........அடுத்த பார்ட் சீக்கிரமே ரெடி பண்ணிடுறேன்:)

    ReplyDelete
  17. என்ன ரகு! காலய்க்கல்லாம் இல்ல ரகு, உண்மையாவே பிடிச்சிருந்தது. அடுத்த பதிவை ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  18. Hi Raghu,

    Ernakulam Trip story is Super and hereafter we call you as ErnaRaghu.

    Thanks,
    Gaju

    ReplyDelete
  19. எங்களையும் கூட்டிக்கிட்டு போன மாதிரியே இருக்குதுங்கோ.

    ReplyDelete
  20. //இற‌ங்கி எப்ப‌டி வெளியே போகுற‌துன்னு தெரிய‌ல‌//

    எல்லோரையும் போல் வாசல்வழியாத்தான் :-))))

    ReplyDelete