உள்ளே நுழைஞ்ச முதல் வரிசையிலேயே சேத்தன் பகத் எழுதின புத்தகங்களைத்தான் வெச்சிருந்தாங்க. '2 ஸ்டேட்ஸ்' நல்லாருக்குன்னு நிறைய பேரோட பதிவுகள்ல படிச்சதுனால, அத வாங்கலாம்னு எடுத்து வெச்சுகிட்டேன். அடுத்து 'ஒன் நைட் அட் த கால் சென்டர்'னு அவரோட புக் டைட்டிலே நல்லா இருந்தது. சரி, எப்படி இருக்குதுன்னு கொஞ்ச நேரம் புரட்டி பாத்தேன்.
யப்பா சாமீகளா! இந்தாளு அப்படி என்ன சூப்பரா எழுதறாருன்னு எல்லாரும் தலைல தூக்கிவெச்சுகிட்டு ஆடுறீங்க? இதுக்கு நீங்க 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?"ல ஆடியிருந்தா, அதுல ஜெயிச்சுருக்கலாம். சேத்தன் எழுதறது ரொம்ப எளிமையா புரியற மாதிரி இருக்கு. அதுக்காக அவரை ரொம்பவே கொண்டாடுற மாதிரி எனக்கொரு ஃபீலிங். என்னை கேட்டா, பதிவர்கள் முயற்சி பண்ணாலே சேத்தனைவிட பிரமாதமா எழுதுவாங்க. ஆனா நிறைய பேர் கவிதை வெளியிடுறதோட நிறுத்திடறாங்க:(
விஜய் படம்னா குருவி, வில்லு மாதிரி வித்தியாசமான படங்களாத்தான் இருக்கும். நீங்க விஜய் படம் போயிட்டு 'தாரே ஸமீன் பர்' மாதிரி இல்லையேன்னு சொன்னா, தப்பு விஜய் மேல இல்ல, உங்க மேலதான். சரவண பவன் போயிட்டு "இங்க Egg பிரியாணி கூட இல்ல, இதுக்கு அஞ்சப்பரே போயிருக்கலாம்"னு சொன்னா, அது நம்ம தப்பா இல்ல சரவண பவன் தப்பா?
அதென்னவோ, ஏறக்குறைய (நான் உட்பட) எல்லா பதிவர்களும் எழுதனத படிச்சா, அவங்க எழுதினதுல ஒரு வரியாவது விஜய்யை கிண்டல் பண்ணி எழுதியிருக்காங்க. அவரோட ரூட்ல இருந்து அவர் மாறுவது ரொம்ப கஷ்டம்ங்க. போலிஸ் டிரஸ் போட்டாலும் 'பெல்' பாட்டம்தான் போடுவார். சட்டைல அஞ்சு பட்டன் இல்ல, அம்பது பட்டன் இருந்தாலும் பட்டன் போட மாட்டார். யாருக்கும் புடிக்காட்டியும், பஞ்ச் பஞ்ச்சா அடிப்பார். ஆனாலும் இதையும் மீறி, ரஜினிக்கு அப்புறம் விஜய்யத்தான் பெரும்பாலான குழந்தைகளும், பெண்களும் ரசிக்கறாங்க.
நண்பர் திருமணத்துக்கு போயிட்டு சேலத்துலருந்து வரும்போது, 'சிவகாசி'ன்னு நினைக்குறேன், பஸ்ல போட்டாங்க. என்னால முடியல! பஸ்ஸ விட்டு குதிச்சுடலாம் போல இருந்தது. ஆனா எனக்கு 'போக்கிரி' புடிச்சிருந்தது (க்ளைமேக்ஸ் தவிர்த்து). தவறு விஜய் மேல இல்ல, அவர் தேர்ந்தெடுக்கிற இயக்குனர்கள்தான். என்னதான், அம்மா செண்டிமென்ட், காதலியோட டூயட், வில்லனை பழிவாங்கறதுன்னு ஒரே ப்ளாட் இருந்தாலும், எம்ஜிஆரோட படங்களில் திரைக்கதையும், பாடல்களும் நமக்கு அத மறக்கடிச்சுடும். இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'சிவாஜி' சட்டைய போட்டுகிட்டு, 'ரமணா' பேண்ட்டை போட்டுகிட்டு, 'கந்தசாமி'யா ஒருத்தர் வந்தாரு. அத மறக்கறதுக்குள்ள, 'வேட்டைக்காரனையும்', 'திருப்பாச்சி'யில இருந்து வந்த 'சிவாஜி'யா ஆக்கினா என்னாங்கய்யா அர்த்தம், நாங்க என்ன அத்வானியா? ("அத்வானிக்கு செலக்ட்டிவ் அம்னீஷியா" - நன்றி: நிரந்தர முன்னாள் முதல்வர்.....கிர்ர்ர்ர்ர்ர்....நிரந்தர கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களுக்கு! இதுக்காகல்லாம் ஆட்டோ அனுப்பாதீங்கப்பா, நான் அந்தளவுக்கு வொர்த் இல்ல!)
அதனால நாட்டாமை சொம்புல கொப்புளிச்சுட்டு, குடுமிய கட்டிகிட்டு (அவரோட குடுமியத்தாங்க) என்ன தீர்ப்பு சொல்றாருன்னா, "என்ட்றா கண்ணு, தப்பு விசய் தம்பி மேல இல்ல, இந்த டைரக்டர் பயலுவதான், முன்னல்லாம், இங்கிலீபிஸு படத்த காப்பி அடிச்சாங்க, இப்பல்லாம், தமிழ் படத்தையே காப்பி அடிக்கறாங்க, அதனால அவங்க டைரக்ட் பண்ண படத்தையே அவங்களே அம்பது தடவை பாக்கணும், ஆனா அழக்கூடாது. இத்தான்டா இந்த நாட்டாமையோட தீர்ப்பு! சம்முவம், எட்றா வண்டிய!"
எதுக்கு சேத்தன் பகத்தை பத்தி எழுதிட்டு, விஜய் பத்தி எழுதறேன் தெரியுமா? மேட்டருக்கு வர்றேன் (ஸ்ஸ்ஸ்....இப்பவாவது வந்தியே!). பத்து பேர் படிச்சிட்டு அதுல எட்டு பேர் நல்லா இருக்குன்னு சொல்லி, நாம நல்லா இல்லன்னு சொன்னா, நம்மள ஆட்டத்துல சேத்துக்கமாட்டாங்களோன்னு நாமும் "ஆமா, ஆமா, நல்லா இருந்ததுன்னு" மண்டைய ஆட்டிவெக்குறோம். எனக்கென்னமோ இந்தாளு, "நான் ரொம்ப மண்டைக்காரன்"னு பீத்திக்கற மாதிரி இருக்கு.
விஜய் படமா? அய்யய்யோ செம மொக்கை, தாங்க முடியலடா, கொடுமை - இப்படிலாம் எழுதியே ஆகணும்னு பதிவர்கள் மனசுல பதிஞ்சுட்ட மாதிரி ஒரு ஃபீல். 'வேட்டைக்காரன்'லகூட முதல் பாதியில அனுஷ்கா பாட்டியோட...ஸாரி...அனுஷ்காவின் பாட்டியோட விஜய் வர்ற காமெடி சீன்லாம் நல்லாத்தான் இருந்தது. ஆனா இதை பத்தி நிறைய பேர் எழுதல. காரணம், போன பத்தியில் எழுதன லாஜிக்தான் இதுலயும். "எல்லாரும் விஜய்யை கலாய்ச்சுதான் எழுதுவாங்க. அதனால நாமளும் அப்படியே எழுதிடுவோம்". ஏன் பாஸ்? மத்தவஙக கருத்தையே நாமளும் எழுதறதுக்கு நாம ஏன் எழுதணும்? நமக்குன்னு ஒரு இது இருக்கணும்ல. எது? ஆங்ங்....அஜித் சொல்வாரே 'அது!'
டிஸ்கி: படம் ரிலீசான முதல் நாளே ஓடிப்போய் 'தலைவா'ன்னு கத்தற அளவுக்கு நான் யாருக்கும் ரசிகன் இல்லீங்க. ரஜினி, கமல் புடிக்கும். இப்போ சூர்யா, அவ்ளோதான்!
டிஸ்கியோட மகன்/மகள் டிஸ்கி: விஜய்லாம் நம்ம வூட்டு புள்ளைங்க, நாம கலாய்க்காம வேற யார் கலாய்க்கறது? (அடப்பாவி அப்போ இவ்ளோ நேரம் நீ புழிஞ்சது எல்லாம்????) இப்பகூட பாருங்க, விஜய்யத்தான் நம்ம வூட்டு புள்ளைன்னு சொல்றேன், அந்த 'அறிவு ஜீவி'ய நம்ம வூட்டு (மாப்)புள்ளைன்னு சொல்றதுக்கு மனசே வரல!
டிஸ்கியோட பேரன்/பேத்தி டிஸ்கி: ரொம்ப போரடிச்சுது, அதான் இன்னைக்கொரு வித்தியாசமான மொக்கைய போட்டுட்டு போவோம்னு எழுதிட்டேன். ஹலோ...என்னாதிது? இப்படியா மானிட்டர் மேலயே துப்பறது? ஒரு பேச்சுக்கு 'வித்தியாசம்'னு சொன்னா.........ரொம்பத்தான் கோவம்!
//விஜய் படம்னா குருவி, வில்லு மாதிரி வித்தியாசமான படங்களாத்தான் இருக்கும். நீங்க விஜய் படம் போயிட்டு 'தாரே ஸமீன் பர்' மாதிரி இல்லையேன்னு சொன்னா, தப்பு விஜய் மேல இல்ல, உங்க மேலதான். சரவண பவன் போயிட்டு "இங்க Egg பிரியாணி கூட இல்ல, இதுக்கு அஞ்சப்பரே போயிருக்கலாம்"னு சொன்னா, அது நம்ம தப்பா இல்ல சரவண பவன் தப்பா?//
ReplyDelete//போலிஸ் டிரஸ் போட்டாலும் 'பெல்' பாட்டம்தான் போடுவார். சட்டைல அஞ்சு பட்டன் இல்ல, அம்பது பட்டன் இருந்தாலும் பட்டன் போட மாட்டார். யாருக்கும் புடிக்காட்டியும், பஞ்ச் பஞ்ச்சா அடிப்பார்//
//ஹலோ...என்னாதிது? இப்படியா மானிட்டர் மேலயே துப்பறது? ஒரு பேச்சுக்கு 'வித்தியாசம்'னு சொன்னா.........ரொம்பத்தான் கோவம்!??
HAHAHAHAHAHAHAHAH
//பத்து பேர் படிச்சிட்டு அதுல எட்டு பேர் நல்லா இருக்குன்னு சொல்லி, நாம நல்லா இல்லன்னு சொன்னா, நம்மள ஆட்டத்துல சேத்துக்கமாட்டாங்களோன்னு நாமும் "ஆமா, ஆமா, நல்லா இருந்ததுன்னு" மண்டைய ஆட்டிவெக்குறோம்.//........
ReplyDeleteரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க, நம்ம அதிகபட்சம் அப்படிதான் நடந்துக்கிறோமோ:-?
//விஜய் படமா? அய்யய்யோ செம மொக்கை, தாங்க முடியலடா, கொடுமை - இப்படிலாம் எழுதியே ஆகணும்னு//....
என்னை பொறுத்தவரை யாரு ஒருத்தர் பெரிய அளவில் புகழோடு இருந்தாலும்
அவங்களுக்கு பாசிட்டிவா மட்டுமல்ல நெகட்டிவாகவும் கமென்ட்ஸ் வரும், இப்ப நம்ம இளைய தளபதிக்கும் அப்படிதான்:-)
Thanks for palindrome comment Janani:)
ReplyDeleteவாங்க ப்ரியா, சேத்தன் பகத் விஷயத்துல எனக்கு அப்படித்தான் தோணுது. ஆனா எல்லாத்துலயும்தான்னு சொல்ல முடியல, ரஜினி, சச்சினையெல்லாம் யாருக்குத்தான் புடிக்காது:)
ReplyDeleteஆமா, எஸ்எம்எஸ், ஈமெயில், ப்ளாக்னு எதுல பாத்தாலும் டார்கெட் விஜய்தான். ஆனா அவரும் கொஞ்சம் மாறணும்ங்க. அட்லீஸ்ட் அடுத்த படத்துல சட்டை பட்டனாவது போடணும்:)
\\"எனக்கென்னமோ இந்தாளு, "நான் ரொம்ப மண்டைக்காரன்"னு பீத்திக்கற மாதிரி இருக்கு."//
ReplyDeletes.
\\"எனக்கென்னமோ இந்தாளு, "நான் ரொம்ப மண்டைக்காரன்"னு பீத்திக்கற மாதிரி இருக்கு."//
ReplyDeletenanum apdithan ninachen
//இளைய தளபதியும் சேத்தன் பகத்தும்//
ReplyDeleteஅலிபாபாவும் 40 திருடர்களும்-ங்கிற ரேஞ்சுல ஒரு நல்ல தலைப்பு... சேத்தன் பகத் புத்தகங்கள் எதுவும் நான் படிச்சதில்ல, அதனால அவரோட ரைட்டிங் எப்படின்னு ஜட்ஜ் பண்ண முடியில... ஆனா அவரு பண்ற ரவுசு உண்மையிலேயே ஓவராத்தான் இருக்கு... உணைமயா, இல்ல பப்ளிசிட்டிக்காவான்னு தெரியில... SEE THAT ALL GOEZ WELL-னு அவருக்கு ஒரு WARNING கொடுத்துருவோம்.
அதே மாதிரி விஜய் அவர்கள், எனக்கு அவர் நடிச்ச ப்ரியமுடன் படம் ரொம்ப பிடிச்சிருந்தது.... அதுக்கப்புறம் அவர்கிட்டருந்து பல வெரைட்டி எதிர்பார்த்தேன்... ஆனா எந்த வெரைட்டியும் அவர்கிட்டருந்து ரிலீஸ் ஆகலை... சமீபத்துல என் நண்பன் ஒருத்தன் எனக்கு ஃபோன் பண்ணி நான் இன்னிலருந்து விஜய் ரசிகன் இல்ல, சூர்யா ரசிகன் அப்படின்னு டிக்ளேர் பண்றான்.
ண்ணா... கொஞ்சம் உஷாராருங்கண்ணா... அப்றம் ஒங்க இஷ்டங்கண்ணா...
குறும்பன் ரகு அதென்ன போஸ்டர், குவாண்ட்டம் ஆஃப் ஷூ லேஸ்... படத்தோட போஸ்டர்ல விஜய் நடிச்சிருக்காரா..?
நன்றி மஹா, சேத்தன் பகத்தை விமர்சனம் பண்ணா, கொஞ்சம் எதிர்ப்பு வரும்னு பாத்தேன், பரவால்ல, சேம் ப்ளட்:)
ReplyDelete//அதென்ன போஸ்டர், குவாண்ட்டம் ஆஃப் ஷூ லேஸ்//
ReplyDeleteவாங்க ஹரீஷ், நீங்க DREAMERஆ இல்ல TREMORஆ, என்னா வில்லத்தனம்! தென்னகத்து ஜேம்ஸ் பாண்டா நடிக்கறதுக்கு ஜெய்சங்கருக்கு அப்புறம் நம்ம தளபதிதாங்கறேன், என்னா ஸ்டைலு, என்னா ஸ்மைலு....:)
//Thanks for palindrome comment Janani:)//
ReplyDeleteவிகடகவி அய்யா நீர்... :)))
//"விகடகவி" அய்யா நீர்//
ReplyDeleteநன்றி கார்க்கி, நீங்க வந்ததுக்காக "மேளதாளமே" வாசிக்கலாம் போங்க:)))
எனக்கென்னமோ இந்தாளு, "நான் ரொம்ப மண்டைக்காரன்"னு பீத்திக்கற மாதிரி இருக்கு. //
ReplyDeleteஅதே தாங்க.
அந்த 'அறிவு ஜீவி'ய நம்ம வூட்டு (மாப்)புள்ளைன்னு சொல்றதுக்கு மனசே வரல! //
ஹாஹாஹா. இது டாப்பு.
இப்படியா மானிட்டர் மேலயே துப்பறது? ஒரு பேச்சுக்கு 'வித்தியாசம்'னு சொன்னா.........ரொம்பத்தான் கோவம்! //
படிச்சது குறும்பன் பதிவு தான். :)
//குறும்பன் said...
ReplyDelete//"விகடகவி" அய்யா நீர்//
நன்றி கார்க்கி, நீங்க வந்ததுக்காக "மேளதாளமே" வாசிக்கலாம் போங்க://
”தேருவருதே” என மேளதாளம் வைக்கலாம். எனக்கு எதுக்கு பாஸ்?
நன்றி விக்கி, ஆச்சரியமா இருக்குங்க, இதுவரைக்கும் ஒருத்தர்கூட சேத்தன் பகத்துக்கு சப்போர்ட் பண்ணி பின்னூட்டமே போடல, அப்போ சரியாத்தான் சொல்லிருக்கேனா?....:)
ReplyDeleteமறுபடியும் கார்க்கி! இது என்ன "மாயமா"?
ReplyDeleteசகா நீங்க சென்னையா?
ReplyDelete”மாலா போலாமா” ???
மாலா என்பது ஒரு நலல் தீம் ரெஸ்ட்டாரண்ட் என்பதை அறிக :))
ஆமா சகா, வேளச்சேரி
ReplyDeleteஅந்த ரெஸ்டாரண்ட்டில் நல்ல "மோரு தருமோ"???
ஆமா சேத்தன் பகத் நா யாரு??????????
ReplyDeleteவாங்க பேநா மூடி, உங்கள மாதிரி நல்லவரதான் தேடிகிட்டிருக்கேன்:)
ReplyDeleteha haa haa சௌக்யமா?
ReplyDelete