நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
சென்னைல 33வது புத்தக கண்காட்சி தொடங்கிடுச்சு (டிசம்பர் 30, 2009 - ஜனவரி 10, 2010). ஆர்வம் தாங்கல, அதனால ரெண்டாவது நாளான நேத்தே ஒரு விசிட் அடிச்சுட்டேன். இத்தனை வருஷம் காணும் பொங்கல்வரை நடந்த கண்காட்சியை, "சென்னை சங்கமம்" விழாவோடு க்ளாஷ் ஆககூடாதுன்னு ஜனவரி 10தோட முடிச்சிடறாங்க. வாழ்க கனிமொழி!
மதியம் சாப்பிடல, அதனால கண்காட்சி உள்ளே நுழைஞ்சதுமே ஏதாவது ஸ்நாக்ஸ் விக்கறாங்களான்னுதான் பாத்தேன். Sri Krishna Sweets - Food Courtனு ஒரு போர்டு போட்டிருக்க, போய் பார்த்தா....அநியாயம்...ரூபாய் 30, 35 & 50. இந்த மூணு கேட்டகரியில அயிட்டங்கள (சாப்புடற அயிட்டங்கள சொன்னேன்) லிஸ்ட் பண்ணியிருக்காங்க. ரெண்டே ரெண்டு குட்டி பரோட்டா இல்லன்னா சப்பாத்தி 35 ரூபாய். இத சாப்ட்டா சாப்புட்டு கை கழுவறதுக்குள்ள ஜீரணம் ஆயிடும். அதனால நான் ஒரு வெஜ் பிரியாணி வாங்க, அது கொஞ்ச நேரத்துக்கு தாக்குபுடிச்சுது. உள்ளே போய் கொஞ்ச நேரம் கழிச்சு குடிச்ச ஆப்பிள் ஜுஸ் (ரஸ்னா?) இன்னும் நிறைய ஸ்டால்களில் சுத்தறதுக்கு கொஞ்சம் தெம்பு குடுத்தது. அதனால நாட்டாமை என்ன தீர்ப்பு சொல்றார்னா, சும்மா டேஸ்ட் பண்ணணும்னா போய் சாப்புடுங்க, பசியோட போகாதீங்க, பர்ஸ் டர் ஆயிடும், நீங்களும் டரியல் ஆயிடுவீங்க.
எப்பவும் கிழக்கு பதிப்பகம் என்னோட ஃபேவரைட். அதனால அங்க கொஞ்சம் அள்ளிகிட்டு போனதுக்கப்புறம், திருமகள் நிலையத்தில் புக் கவரை பார்த்தவுடனே எனக்கு தோணுனது, "சே இந்த மனுஷன் இன்னும் கொஞ்ச வருஷம் இருந்திருக்கலாம்". ஹும்..என்ன பண்ண......."மூன்று குற்றங்கள்"னு ஒரே புத்தகத்திலேயே மூணு கணேஷ்-வஸந்த் கதைகள். ஒன் ஸ்டோன் த்ரீ மேங்கோஸ். இந்த வருஷம் நான் வாங்கினது இந்த புத்தகங்களைத்தான்.
மூன்று குற்றங்கள் - சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ் - நான் வாங்கியது திருமகள் நிலையம் ஸ்டாலில்
திக்...திக்...திக்! ஒரு ஏப்ரல் புத்திசாலி - இந்திரா செளந்தர்ராஜன் - திருமகள் நிலையம்
மீதி எல்லா புத்தகங்களுமே கிழக்கு பதிப்பகம் (New Horizon Media) ஸ்டாலில் வாங்கினது
இரண்டாம் உலகப் போர் - மருதன்
இந்திரா - ஆர்.முத்துக்குமார்
ஹியூகோ சாவேஸ்: மோதிப்பார் - மருதன்
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும் - முகில்
கே ஜி பி - அடி அல்லது அழி - என்.சொக்கன்
கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு - என்.சொக்கன்
முடிவில் ஒரு திருப்பம் - ஜெஃப்ரி ஆர்ச்சர் - தமிழில்: பவித்ரா
தி.மு.க. உருவானது ஏன்? - மலர்மன்னன்
நீங்க என்னென்ன வாங்கலாம்னு/வாங்கி இருக்கீங்க?
நானும் நேத்து வந்தேன்,..
ReplyDeleteதிரும்பவும் திங்கள்கிழமை போவேன்...
வருகைக்கு நன்றி ஜெட்லி, மறுபடியும் போவீங்களா? உங்கள புத்தகப் பிரியர்னு சொல்றதுக்கு பதில் புத்தக வெறியர்னு சொல்லலாம் போலருக்கே!
ReplyDeleteம்ம்..ம்ம்... :(
ReplyDeleteஜெப்ரி ஆர்ச்சர் நல்லாயிருக்கும் போல...
அப்புறம் ராஜீவ் காந்தி புக் வாங்கலையா ?
முதல் தடவை வந்திருக்கீங்க, நன்றி பின்னோக்கி, ராஜீவ் காந்தி புக் கொஞ்ச நாள் கழிச்சு வாங்கலாம்னு இருக்கேன்
ReplyDeleteஇன்னும் நிறைய வாங்கவேண்டியது இருக்கு. But முதல்ல வாங்குனதுலாம் படிச்சுட்டு, ஒருநாள் கிழக்கு பதிப்பகத்துக்கே போகலாம்னு ஒரு ஐடியா
தலைவரே திருப்பி போறதானா போன் பண்ணுங்க
ReplyDeleteஎனக்கும் கிழக்கு பதிப்பகம் ஃபேவரைட்.Maximum எல்ல புத்தகமும் வாங்கி விடுவேன். ஆனால் இந்த முறை Bangalor-ல் இருப்பதால் முடியவில்லை. நீங்கள் படித்து விட்டு சொல்லுங்கள் எந்த புத்தகம் சிறப்பாக இருந்ததுன்னு.
ReplyDelete//தலைவரே திருப்பி போறதானா போன் பண்ணுங்க//
ReplyDeleteகண்டிப்பா சொல்றேன் தலைவரே, உங்க நம்பரை பதிவுல பாத்து நோட் பண்ணி வெச்சிருக்கேன். அடுத்த வாரம் கால் பண்றேன்:)
வாங்க சுரேஷ், அவசியம் சொல்றேன், எனக்கென்னமோ இரண்டாம் உலகப் போரும், யூதர்களும் பட்டைய கிளப்பும்னு தோணுது
ReplyDeleteநான் இந்திரா படித்து விட்டேன். இப்பொழுது தாயகம் இருக்குற நிலமைக்கு அப்பிடி ஒரு ஆளு தேவை. பக்கத்துல்ல India-ன ஒரு பயம் வேணும்.
ReplyDeleteநன்றி சுரேஷ், நான் இப்போ தலைவரோட "மூன்று குற்றங்கள்" ஆரம்பிச்சிருக்கேன், அனேகமா நாளைக்குள்ள முடிச்சிடுவேன், அடுத்தது "இந்திரா"தான் படிக்கணும்!
ReplyDeleteபுதுவருடத்தில் புதுபொலிவுடன் ஜொலிக்கும் உங்க வலைதளம் அழகாயிருக்கு, வாழ்த்துக்கள்! கூடவே என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாங்கிய புத்தகங்களை படித்து எப்போ எங்களோடு பகிர்ந்துக் கொள்ளப்போறீங்க? வெய்டிங்...
புத்தாண்டு வாழ்த்துகள். உயிர்மையில் கணேஷ் வச்ந்த் தோன்றும் குறுநாவல்களின் தொகுப்பு இருக்கிறது:)
ReplyDeleteநன்றி ப்ரியா, உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ஒரு புக் படிச்சு முடிச்சாச்சு, சனிக்கிழமைக்குள்ள பதிவிட்டுடறேன்:)
ReplyDeleteஉங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் வித்யா, பகிர்ந்தமைக்கு நன்றி, சனிக்கிழமை (09-Jan-2010) மறுபடியும் போகலாம்னு இருக்கேன், அப்போ கண்டிப்பா உயிர்மையில் பாக்குறேன்:)
ReplyDeletegud. continue
ReplyDeleteregards
ram
www.hayyram.blogspot.com
Thanks Ram
ReplyDeleteபோனதுமே சாப்பாடா? ம்ம்
ReplyDeleteஆள் ஊர்ல தான் இருக்கீங்களா? :))
ஹாஹ்ஹா வாங்க மோகன் சார், காலையில சாப்ட்டதுக்கப்புறம், சில வேலைகளால மதியம் டைமுக்கு சாப்பிடமுடியல, அதான் சாயந்தரம் 4 மணிக்கு Book Fair போனவுடனே "வயிற்றுக்கு ஈயப்படும்"ஙகறத follow பண்ணிட்டேன்
ReplyDeleteஊர்லதான் சார் இருக்கேன், ஆணிங்க கொஞ்சம் அதிகமாயிடுச்சு...:(
நிறைய கலெக்ஷன்ஸ் போல. படிச்சிட்டு எல்லாத்துக்கும் விமர்சனம் எழுதணும் பார்த்துக்கோங்க.
ReplyDeleteடெம்ப்ளேட் நல்லாருக்குங்க.
நன்றி விக்கி, கண்டிப்பா எழுதறேன்
ReplyDelete