1. மேற்கே ஒரு குற்றம்
2. மீண்டும் ஒரு குற்றம்
3. மேலும் ஒரு குற்றம்
இந்த மூணு கணேஷ்-வசந்த் கதைகளையும் தொகுத்து ஒரே புத்தகமா வெளியிட்டிருக்காங்க, விசா பப்ளிகேஷன்ஸ். புத்தக விலை Rs.130. சத்தியமா குடுக்கற காசு வொர்த். அனேகமா 1980கள்ல இந்த கதைகள் வந்திருக்கலாம், ஆனா இப்போ படிச்சாலும் துளிகூட இன்ட்ரஸ்ட் குறையல. ஒரே ஒரு குறை - முதல் சில பக்கங்களில் நிறைய எழுத்துப்பிழை. ப்ரூஃப்ரீடர்களே, கொஞ்சம் பாத்து பண்ணுங்கப்பா, தலைவர் எழுதினது, அதுக்காகவாவது....
மேற்கே ஒரு குற்றம்
கோர்ட்ல இருக்கும்போது கணேஷ்கிட்ட வந்து, உங்களோட பேசணும்னு ஒரு பொண்ணு சொல்றா. ஆனா இப்போ முடியாது கொஞ்சம் பிஸி, சாயந்தரம் ஆபீஸ்ல வந்து பாருன்னு சொல்லிடறார். சாயந்தரம் ஆபீஸுக்கு வந்தப்புறம், ஆபீஸ்ல வேலை செய்யற பையன் "உங்களுக்காக ஒரு அம்மா வெயிட் பண்ணிகிட்டிருந்தாங்க, நீங்க கூட்டிட்டு வரசொன்னதா ஒருத்தர் வந்து கார்ல கூட்டிட்டு போயிட்டார்"னு சொல்ல, கணேஷுக்கும், வசந்துக்கும் அதிர்ச்சி. மறுநாள் அந்த பொண்ணு விபத்தில் பலின்னு பேப்பர்ல நியூஸ் வருது. அந்த பொண்ணு என்னவோ சொல்ல வந்தா, ஆனா கேக்காம தவிர்த்துட்டோமேன்னு கணேஷுக்கு குற்ற உணர்ச்சி தாக்க, அந்த பொண்ணோட வீட்டுக்கு போய் கணேஷும், வசந்தும் அவஙகம்மாகிட்ட விசாரிக்கறாங்க.
விசாரிக்கும்போது அந்த பொண்ணு கண்டிப்பா கொலைதான் செய்யப்பட்டிருக்கணும்னு ஊர்ஜிதம் ஆகுது. இதுக்கப்புறம் கணேஷ் கொலையாளிக்கு ஒரு சின்ன பொறி வெச்சு ஆரம்பிக்கறார். அது சென்னையில ஆரம்பிச்சு ஜெர்மனிவரை அவங்கள கூட்டிட்டுபோகுது. அதுக்கப்புறம்.........
அடிச்சு சொல்லலாம், இந்த மனுஷன் மட்டும் இங்கிலீஷ்ல நாவல் எழுதியிருந்தா இவரோட எல்லா நாவல்களுமே ஹாலிவுட்ல படமா வந்திருக்கும். ஒரு சின்ன முடிச்சு, அத வெச்சு என்னமா பின்னியிருக்கார்! அதுவும் கணேஷுக்கும் வசந்துக்கும் இடையில நடக்கற கான்வர்சேஷன்....நான் என்னத்த சொல்றது. பயபுள்ள வசந்து அநியாயத்துக்கு குறும்புக்காரன், ஒரு பெண்பித்தன் மாதிரி இருந்தாலும், பெண்களே ரசிக்கற மாதிரி பேசறது வசந்தோட ஸ்பெஷாலிட்டி!
மீண்டும் ஒரு குற்றம்
காலை 10:30 மணிக்கு ஒரு பெரிய மிடில் ஏஜ் பிஸினஸ்மேன் கணேஷுக்கு கால் பண்ணி என்னை கொலை செய்ய சதி பண்ணிட்டிருக்காங்க, உங்கள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்றார். 'க'வும், 'வ'வும் 11:30க்கு அவர் வீட்டுக்கு போனா அவர் கொலை செய்யப்பட்டுகிடக்கிறார். அவர் கல்யாணம் பண்ணிக்க இருந்த ஒரு லேடி மேல சந்தேகம் ஆரம்பிச்சு, அவரோட உறவினர்கள் வரைக்கும் போகுது.
திடீர்னு போலீஸ் அவரோட உறவினர் ஒருத்தரை அரெஸ்ட் பண்ணிடறாங்க. காரணம், அவர் கொலை நடந்த அன்னைக்கு வீட்டுக்கு வந்து, அவசர அவசரமா கிளம்பி போனதுக்கு வாட்ச்மேன் சாட்சி. கொலை நடந்த முன் தினம் இவர், அந்த பிஸினஸ்மேனோட வாக்குவாதம் பண்ணி, சண்டை போடற அளவுக்கு போயிருக்கு. இதெல்லாம் வெச்சு, போலீஸ் அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்க.
ஆனா அவரோ இதெல்லாம் உண்மைதான், ஆனா நான் போகும்போதே அவர் செத்துக்கிடந்தார், அத பாத்தவுடனே போலீஸ்ல சொல்லாததுதான் நான் செஞ்ச தப்புனு புலம்பறார். இங்கேதான் நம்மாளுங்க களத்துல இறங்கி, யாரு உண்மையான கொலையாளின்னு கண்டுபிடிக்கறாங்க. இந்த கதைல யாரு கொலையாளின்னு ஓரளவு guess பண்ணமுடியுது. ஆனாலும் கதையோட ஃப்ளோ நல்லாவே இருக்கு!
மேலும் ஒரு குற்றம்
இந்த கதைய படிச்சு பாருங்க, எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. ஆனா எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரியல. ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்குது கதை. எப்போவும் நட்பாகவே இருக்கற கணேஷும், வசந்தும் இதுல கொஞ்சம் சண்டை போட்டு பிரியற அளவுக்கு போறாங்க. காரணம் கணேஷின் டென்ஷன் அவரோட உடல் நலத்தை பாதிக்க, வசந்தோட சண்டை போட, ஆனாலும் வெகு சீக்கிரம் ஈகோ இல்லாம ரெண்டு பேரும் சீக்கிரம் சேர்ந்துடறாங்க.
அதுக்கப்புறம் டாக்டர் அட்வைஸ்படி கொஞ்ச நாள் வேலையிலயிருந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு முடிவெடுக்கறாங்க. ரெஸ்ட் எடுக்க வேற ஊர் போற இடத்துலயும் ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க ஆரம்பிக்கறாங்க. ம்ம்ம்...இதுக்கு மேல நான் சொல்லகூடாது. படிச்சு பாருங்க, க்ளைமேக்ஸை நீங்க guess பண்ணா, சத்தியமா காலரை தூக்கி விட்டுகிட்டு சொல்லிக்கலாம், "நான் ஒரு ப்ரில்லியண்ட்"னு (ரவுண்ட் நெக் டிஷர்ட் போட்டிருந்தா கழட்டி கங்குலி மாதிரி சுத்திகிட்டே சொல்லிக்கோங்க). அந்தளவுக்கு எதிர்பார்க்காத க்ளைமேக்ஸ்! நீ guess பண்ணியான்னு கேக்குறீங்களா? ம்ம்ம்...யா....பட்...ம்ம்ம்...அது வந்து....ஹி..ஹி..
தலைவர விமர்சனம் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்ல, சித்தாளும் இல்ல. இது எல்லாமே இந்த புத்தத்தை பற்றிய என்னோட கருத்துதான். படிச்சு பாருங்க, நிச்சயமா உங்களுக்கு புடிக்கும்!
எனக்கும் சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும்!நல்லா எழுதியிருக்கீங்க!!!
ReplyDeleteநன்றி ப்ரியா
ReplyDeleteஹாய் ரகு,
ReplyDeleteநானும் இந்த புக்கை படிச்சிருக்கேன். என்னோட ஃபேவரிட் பிக் 3வது கதையான 'மேலும் ஒரு குற்றம்தான்' இந்த கதையோட தனித்தலைப்பு வேற ஏதாவதா இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும். ஒரு வேளை வேற தலைப்பு இருக்கோ என்னமோ தெரியில... ஆனா, கதையை படிச்சதுக்கப்புறம் கூர்க் மலைக்கு ஒரு வெகேஷன் போயிட்டு வந்த மாதிரி இருந்தது உண்மை. மத்த கதைகளைவிட இந்த கதை எனக்கு பிடிச்சதுக்கு காரணம், இது ஒரு சைலண்ட் சைக்கலாஜிக்கல் த்ரில்லரா தலைவர் ப்ரெஸண்ட் பண்ண விதம் ரொம்ப நல்லா இருந்தது. உங்க போஸ்ட் படிச்சி இன்னும் சி(ப)லர் இந்த புத்தகத்தை படிச்சாங்கன்னா... நல்லாயிருக்கும்.
TFS
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
நன்றி ஹரீஷ், நிறைய பேர் படிக்கணும்னுதான் இதபத்தி எழுதறேன், பயபுள்ளைக ஒருத்தரும் கண்டுக்கமாட்டேங்கறாங்க:(
ReplyDeleteரொம்ப நல்லா எழுதிருக்கீங்க ரகு. உங்கள் எழுத்தின் பரிமாணம் மாறுவது மகிழ்ச்சி.
ReplyDeleteஅப்படியே எனக்கும் அந்த புக் வாங்கி கொரியர் பண்ணிடுங்க. :)
நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்...ஊர் வந்து வாங்கிடறேன் கணேஷ்-வசந்த்
ReplyDeleteநன்றி விக்கி, கண்டிப்பா வாங்கி அனுப்பறேன்:)
ReplyDeleteவாங்க வசந்த், அடடா கணேஷ் வரலியா? ஊருக்கு வரும்போது அவரையும் கூட்டிட்டு வாங்க:)
ReplyDeleteசுஜாதாவின் எழுத்துக்கள் யாருக்குத்தான் பிடிக்காது,
ReplyDeleteஇந்த விசயம் புதுசா இருக்கே..புத்தகத்தை வாங்கிட வேண்டியதுதான், நன்றி குறும்பன்
சுஜாதா..... ம்ம்ம்ம் மனுஷன் போயிட்டாரே..:((
ReplyDelete//சுஜாதாவின் எழுத்துக்கள் யாருக்குத்தான் பிடிக்காது//
ReplyDeleteநன்றி பிரதாப், சரியா சொன்னீங்க!
வாங்க கேபிள், நாள் ஆனாலும் இன்னும் இந்த வருத்தம் நிறையபேர்கிட்ட இருக்கத்தான் செய்யுது:(
ReplyDeleteஹும்ம் எப்பவோ லைப்ரரில படிச்சது.. இன்னும் வரிகள் நினைவிருக்கு.. அவர் ஒரு சகாப்த்தம்..:) நன்றி நண்பரே.:) நூற்குறியா தமிழ்மணத்துல போட்ட வசந்துக்கும் நன்றி.
ReplyDeleteஇப்பத்தான் சஞ்சய் வீட்டில் இருந்த்து எடுத்து வந்து படித்தேன். :))
ReplyDeleteநன்றி பலா பட்டறை, நீங்க புண்ணியம் பண்ணவர்:), எப்பவோ படிச்சீட்டீங்க, இந்த புத்தகத்தை படிக்கும்போது, இவ்வளோ நாளா படிக்காம விட்டுட்டோமேன்னு ஃபீல் பண்ணேன்
ReplyDeleteவாங்க மயில், உங்களுக்கு புடிச்சிருந்ததா?
ReplyDelete