நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
சென்னைல 33வது புத்தக கண்காட்சி தொடங்கிடுச்சு (டிசம்பர் 30, 2009 - ஜனவரி 10, 2010). ஆர்வம் தாங்கல, அதனால ரெண்டாவது நாளான நேத்தே ஒரு விசிட் அடிச்சுட்டேன். இத்தனை வருஷம் காணும் பொங்கல்வரை நடந்த கண்காட்சியை, "சென்னை சங்கமம்" விழாவோடு க்ளாஷ் ஆககூடாதுன்னு ஜனவரி 10தோட முடிச்சிடறாங்க. வாழ்க கனிமொழி!
மதியம் சாப்பிடல, அதனால கண்காட்சி உள்ளே நுழைஞ்சதுமே ஏதாவது ஸ்நாக்ஸ் விக்கறாங்களான்னுதான் பாத்தேன். Sri Krishna Sweets - Food Courtனு ஒரு போர்டு போட்டிருக்க, போய் பார்த்தா....அநியாயம்...ரூபாய் 30, 35 & 50. இந்த மூணு கேட்டகரியில அயிட்டங்கள (சாப்புடற அயிட்டங்கள சொன்னேன்) லிஸ்ட் பண்ணியிருக்காங்க. ரெண்டே ரெண்டு குட்டி பரோட்டா இல்லன்னா சப்பாத்தி 35 ரூபாய். இத சாப்ட்டா சாப்புட்டு கை கழுவறதுக்குள்ள ஜீரணம் ஆயிடும். அதனால நான் ஒரு வெஜ் பிரியாணி வாங்க, அது கொஞ்ச நேரத்துக்கு தாக்குபுடிச்சுது. உள்ளே போய் கொஞ்ச நேரம் கழிச்சு குடிச்ச ஆப்பிள் ஜுஸ் (ரஸ்னா?) இன்னும் நிறைய ஸ்டால்களில் சுத்தறதுக்கு கொஞ்சம் தெம்பு குடுத்தது. அதனால நாட்டாமை என்ன தீர்ப்பு சொல்றார்னா, சும்மா டேஸ்ட் பண்ணணும்னா போய் சாப்புடுங்க, பசியோட போகாதீங்க, பர்ஸ் டர் ஆயிடும், நீங்களும் டரியல் ஆயிடுவீங்க.

எப்பவும் கிழக்கு பதிப்பகம் என்னோட ஃபேவரைட். அதனால அங்க கொஞ்சம் அள்ளிகிட்டு போனதுக்கப்புறம், திருமகள் நிலையத்தில் புக் கவரை பார்த்தவுடனே எனக்கு தோணுனது, "சே இந்த மனுஷன் இன்னும் கொஞ்ச வருஷம் இருந்திருக்கலாம்". ஹும்..என்ன பண்ண......."மூன்று குற்றங்கள்"னு ஒரே புத்தகத்திலேயே மூணு கணேஷ்-வஸந்த் கதைகள். ஒன் ஸ்டோன் த்ரீ மேங்கோஸ். இந்த வருஷம் நான் வாங்கினது இந்த புத்தகங்களைத்தான்.
மூன்று குற்றங்கள் - சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ் - நான் வாங்கியது திருமகள் நிலையம் ஸ்டாலில்
திக்...திக்...திக்! ஒரு ஏப்ரல் புத்திசாலி - இந்திரா செளந்தர்ராஜன் - திருமகள் நிலையம்
மீதி எல்லா புத்தகங்களுமே கிழக்கு பதிப்பகம் (New Horizon Media) ஸ்டாலில் வாங்கினது
இரண்டாம் உலகப் போர் - மருதன்
இந்திரா - ஆர்.முத்துக்குமார்
ஹியூகோ சாவேஸ்: மோதிப்பார் - மருதன்
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும் - முகில்
கே ஜி பி - அடி அல்லது அழி - என்.சொக்கன்
கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு - என்.சொக்கன்
முடிவில் ஒரு திருப்பம் - ஜெஃப்ரி ஆர்ச்சர் - தமிழில்: பவித்ரா
தி.மு.க. உருவானது ஏன்? - மலர்மன்னன்
நீங்க என்னென்ன வாங்கலாம்னு/வாங்கி இருக்கீங்க?