ஞாயிறு(26/07/2009) மதியம் சன் டிவியில 'ஆயிரத்தில் ஒருவன்' இசை வெளியீட்டுவிழாவை பாத்துட்ருந்தேன். ஒரு வெப்சைட்ல ஏற்கனவே இந்த படத்தோட பாடல்களை கேட்டுட்டேன். அப்படி ஒண்ணும் சூப்பர்னு சொல்ல முடியாது, ஒண்ணு ரெண்டு நல்லாயிருந்தது. அனேகமா விஷுவலா பாத்தா மத்த பாட்டுலாம்கூட புடிக்கும்னு நெனக்குறேன்.
மேட்டருக்கு வர்றேன். இந்த ப்ரோக்ராம்ல பேசுன பார்த்திபன் மேடையில இருந்த எல்லோரையும்பத்தி பேசிகிட்டே வந்தார். டைரக்டர் ஷங்கர் பத்தி சொல்லும்போது, "ஒருத்தர் 150 கோடி குடுத்தா நான் 20 படம் எடுப்பேன், என்னைவிட ஒரு நல்ல டைரக்டர் 10 படம் எடுப்பார், அவரவிட பெட்டரான டைரக்டர் 5 படம் எடுப்பார். ஆனா இவர்கிட்ட(ஷங்கர்) 150 கோடி குடுத்தா ஒரு படம்தான் எடுக்கமுடியும்னு சொல்லுவார்"னு சொன்னார்.
கேக்கறதுக்கு காமெடியா இருந்தாலும் எனக்கென்னவோ இது ஒரு நல்ல கமெண்ட்னு தோணல. அத்தனைபேர் மத்தியில ஒரு மேடையில ஷங்கர் மாதிரியான ஒரு டைரக்டர கிண்டல் பண்றது - "எனக்கென்னமோ இது சரியாபடலை". தமிழ் இலக்கணத்துல வஞ்சப்புகழ்ச்சி அணின்னு ஒண்ணு இருக்கே, அத யூஸ் பண்ணிட்டாரோ? ஷங்கர் தன்னோட ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜின்னு சமூகத்துக்கு நல்லது நடக்குற மாதிரிதான் படம் எடுக்குறார். விதிவிலக்கு "பாய்ஸ்" (ஷங்கர்-எழுத்தாளர் சுஜாதா காம்பினேஷன்ல வந்த ஒரே ஒரு தரமில்லாத படம்). அந்நியன் படத்த நான் சத்யம் தியேட்டர்லதான் பாத்தேன். அந்த தியேட்டர் குவாலிட்டியும், விறுவிறுன்னு போன படமும் என்னை அப்போ ஒரு முடிவெடுக்கவெச்சுது. இனிமே இந்த மாதிரி சூப்பர் படங்கள ஹைலெவல் தியேட்டர்கள்லதான் பாக்கணும்னு முடிவுபண்ணேன். "சிவாஜி" ரிலீஸான மூணாவது நாள் தேவியிலதான் பாத்தேன்.
சே, சொல்லவந்ததவிட்டுட்டு எதெதையோ சொல்லிகிட்ருக்கேன். பார்த்திபன் பேசுனதுக்கப்புறம் ஷங்கர் பேசுனார். "ஆயிரத்தில் ஒருவன்" படத்தை பத்தி சொல்லிட்டு "150 கோடி குடுத்தா ஒரு படம்தான் எடுப்பேன்னு சொன்னாங்க, ஆனா பத்து படத்த பாத்த திருப்தி அந்த ஒரு படத்துலேயே கிடைக்குற மாதிரி எடுப்பேன்"னு சொன்னார் பாருங்க, இதுதான் ஹைலைட்டே! ஷங்கர் கொஞ்சம் ஓவரா செலவு பண்ணிதான் எடுக்கறார், இல்லைனு சொல்லல. ஆனா அவரோட படங்கள பாத்துட்டு வரும்போது "சே வேஸ்ட்டுடா"ன்னு நமக்கு தோணுதா? முதல்வன் படத்துல வர்ற அர்ஜுன்-ரகுவரன் இண்டர்வியூ சீன் இன்னைக்குகூட ஏதாவது ஒரு சேனல்ல போட்டா நான் கண்டிப்பா சேனல் மாத்தமாட்டேன்.
வித்தியாச விரும்பி பார்த்திபன் அவர்களே, கலாய்க்கறதுன்னா ஆள பாத்து கலாய்ங்க. மைக் கிடைச்சுடுச்சுன்னு காமெடிங்கற பேர்ல யாரையும் என்ன வேணும்னாலும் சொல்லலாம்னா, நான்கூட ஒரு ஸ்டேஜ் ஏறி ரீசன்டா நீங்க எடுத்த/நடிச்ச படங்களபத்தி சொல்லலாம்.
அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்கு அறிவோ தகுதியோ கிடையாது. ஆனா பார்த்திபன் பேசுனத கேட்டதுக்கப்புறம் எனக்கு தோணுனது என்னன்னா, நமக்கு புடிக்குதோ இல்லையோ மேடைன்னு வரும்போது அடுத்தவங்கள விமர்சனம் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறை யோசிச்சுபேசுறது நல்லது.

No comments:
Post a Comment