Tuesday, July 14, 2009
ஏன் இந்த அநாகரிகம்?
இன்னைக்கு பஸ்ல வரும்போது பின்னாடி சீட்ல ரெண்டு பசங்க(27 இல்ல 28 வயசு இருக்கும்) பேசிகிட்டுவந்தாங்க. ஒட்டு கேக்கல, யதேச்சையா காதுல விழுந்தது. அவங்கள்ல ஒருத்தர் சொல்றார்.
"நேத்து விஜய் டிவில விஜய் அவார்ட்ஸ் பாத்தியாடா? தசாவதாரம் படத்துக்காக கமல் பெஸ்ட் காமெடியன் அவார்ட் வாங்குனான். சான்ஸே இல்ல, செம டேலன்ட் இல்ல அவனுக்கு"
பேச்சு அவார்ட்ஸ்லயிருந்து, கமலோட படமான "உன்னைப்போல் ஒருவன்" படத்த பத்தி திரும்புச்சு.
"ஏ, அந்தப்படம் 'எ வெட்னஸ்டே'ங்கற இந்திப்படத்தோட ரீமேக்டா, அதுல நஸ்ரூதின்ஷா பண்ண கேரக்டர்லதான் கமல் நடிக்கறான். நஸ்ரூதின்ஷா செம்மையா பண்ணியிருப்பான் தெரியுமா, அவன் அளவுலாம் கமலால நடிக்கமுடியாது...."
இப்படியே அவரோட பேச்சு நீண்டுகிட்டேபோச்சு. எனக்கு ஒண்ணு புரியல. ஏன் நடிகர்கள்னா இவ்ளோ கேவலமா ட்ரீட் பண்றோம்? இதுவே ஒரு டாக்டர அவர் இந்த மாதிரி பேசியிருப்பாரா "அவன் நல்லா ஆப்ரேஷன் பண்ணுவான்டா, அவன் குடுக்கற மாத்திரை சீக்கிரம் வேலை செய்யும்"னு. கண்டிப்பா பேசமாட்டார். ஆனா நடிகர்கள மட்டும் ஏன்?
அவரை மட்டும் நான் குறை சொல்லல. அவரோ, நானோ, நீங்களோ இல்ல. இது எப்பயிருந்தோ தொடருது. நானும் பெரிய உத்தமன்லாம் கெடையாது. எவ்ளவோ நடிகர்கள மரியாதையில்லாம அவன் இவன்லாம் பேசியிருக்கேன். ஆனா ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் எம்ஜிஆர், சிவாஜி உட்பட பழைய நடிகர்கள், கவிஞர் கண்ணதாசன், எம்எஸ்வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்பிபி, மணிரத்னம், எழுத்தாளர் சுஜாதா, ரஜினி, கமல்னு நிறைய பேர மரியாதையோடுதான் குறிப்பிடுறேன். இவங்கள்லாம் பெரிய அளவுல சாதிச்சவங்க. ஜீனியஸ். இவங்களுக்குகூடவா மரியாதை குடுக்கக்கூடாது?
கமல் ஒரு லிவிங் லெஜன்ட். ஒரு சின்ன எக்ஸாம்பிள் சொல்றேன். தசாவதாரம் படத்துக்காக முதல்ல அமெரிக்கால நிறைய கெட்டப் போட்டு டெஸ்ட் பண்ணிட்டிருந்தாங்களாம். அப்போ கே.எஸ். ரவிக்குமார் கேட்ருக்கார் "சார், இவ்ளோ மேக்கப்போட்டு பண்ணணும்னா உங்களுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்குமே, கண்டிப்பா இந்தப் படம் பண்ணணுமா?" அதுக்கு கமல் பதிலுக்கு கேட்ருக்கார், "கஷடப்படாம பண்ணணும்னா நான் எதுக்கு?". இதுக்கு மேலயும் கமல் பத்தி சொல்லணுமா?
என்னை பொருத்தவரைக்கும், இந்த மாதிரி சாதிச்ச, சாதிச்சிட்டிருக்கற மனுஷங்களையெல்லாம் அவன், இவன்னு சொல்றது அநாகரிகமான விஷயம்தான். அவங்கள எங்களுக்கு ரொம்ப புடிக்கும், ஒரு உரிமைலதான் அவன், இவன்னு சொல்றோம்னு சொன்னா அது சப்பைக்கட்டு. நமக்கு பாரதியாரைகூடத்தான் புடிக்குது, அதுக்காக, கவிதைலாம் சூப்பரா எழுதியிருக்கான்னா சொல்றோம். எழுதியிருக்கார்னுதானே சொல்றோம்.....
குறிப்பு: ரெண்டு படம் ஓடிடுச்சுன்னாலே, அடுத்த படத்துல சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கறவங்கலள என்ன வேணும்னாலும் திட்டுங்க, தப்பே இல்ல (சிம்புவையோ விஷாலையோ சொல்லல!).
Labels:
கமல்
Subscribe to:
Post Comments (Atom)
avanukalukku ethuve athikam. It is all because of overbuildup. All are copied matter. Cinema itself copied from western countries. Thats why we are like to see them but not ready to give respect.
ReplyDeletePeople should think this..
ReplyDeletegud post..
// ரெண்டு படம் ஓடிடுச்சுன்னாலே, அடுத்த படத்துல சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கறவங்கலள என்ன வேணும்னாலும் திட்டுங்க, தப்பே இல்ல (சிம்புவையோ விஷாலையோ சொல்லல!).//
:) :) :)
அதே பசங்க கிட்ட உங்களுக்கு புடிச்ச நடிகர் யாருன்னு கேளுங்களேன்.. எங்கள் தலைவர், வாழும் கடவுள், அப்பிடி இப்படின்னு ரொம்ப மரியாதையா பரத் பேரையோ, ஜெய் பேரையோ சொல்லும்... :)
ReplyDelete//Cinema itself copied from western countries//
ReplyDelete"நாயகன்" படம்கூட Godfatherவோட பாதிப்புதான், அதுக்காக "நாயகன்" வேஸ்ட்னு சொல்லமுடியுமா அனானி
//People should think this//
எல்லாரும் கொஞ்சம் thinkனா நல்லாதான் இருக்கும், நன்றி சச்சனா
//எங்கள் தலைவர், வாழும் கடவுள், அப்பிடி இப்படின்னு ரொம்ப மரியாதையா பரத் பேரையோ, ஜெய் பேரையோ சொல்லும்//
ஹாஹ்ஹா நன்றி மணிகண்டன்:)