Thursday, July 16, 2009
முடிவின் ஆரம்பம்!
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கும் அதிமுகவுக்கும் அறிக்கைப்போர் ஆரம்பிச்சாச்சு. இத ஆரம்பிச்ச பெருமை மா.கம்யூ மாநிலத்தலைவர் வரதராஜனுக்கே சேரும். 2009 பாராளுமன்றத் தேர்தல்ல தோல்வி அடைஞ்சதுக்கு அதிமுகவோட அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணம்னு சொல்லி ஒரு திரிய கொளுத்திபோட்டார். இதுக்கு பதிலா செங்கோட்டையன் எந்தெந்த மாநிலத்துலல்லாம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தோல்வி அடைஞ்சதுன்னு ஒரு லிஸ்ட் போட்டு, இதுக்கெல்லாம் கூட அதிமுகதான் காரணமான்னு கேள்வி கேட்டு ஒரு அறிக்கைவிட்டார்.
இதுல கடுப்பான வரதராஜன், நேத்து என்னென்னமோ சமாளிச்சு மறுபடியும் ஒரு அறிக்கைவிட்ருக்கார். போதும் உங்ககூட குப்பை கொட்னது, இப்படியே கொஞ்சம் கொஞ்சமா கழண்டுக்கறோம்ங்கறத மறைமுகமா சொல்லியிருக்கார். பொதுவா, தன்னோட கூட்டணி கட்சி ஜெயிச்சாலே புரட்சித்தலைவியோட டீலிங் ஒரு மார்க்கமாத்தான் இருக்கும். இதுல அந்த கட்சி தோத்துட்டா, அவ்ளோதான். இதுக்கு பக்காவான எக்ஸாம்பிள், பாட்டாளி மக்கள் கட்சி. தேர்தல் முடிஞ்சு கிட்டதட்ட மூணு மாசம் ஆகியும் இதுவரைக்கும் டாக்டர் ராமதாஸுக்கு தன்னை சந்திக்கறதுக்கு அப்பாயின்ட்மென்ட் குடுக்கவேயில்ல.
அனேகமா கூட்டணி முறிவுக்கான ஆரம்பம்தான் இந்த அறிக்கைப்போர்னு நெனக்குறேன். இன்னும் ரெண்டு வருஷத்துல தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வரப்போகுது. அதுக்குள்ள மார்க்ஸிஸ்ட் திமுக கூட்டணிக்கு எப்படியும் வந்துடுவாங்க. "எனக்கு கம்யூனிஸம்தான் பிடிக்கும், கம்யூனிஸ்டுகளை அல்ல"ன்னு சொன்ன முதல்வர் அப்போ என்ன சொல்வார்? "உடன்பிறப்பே, எனக்கு கம்யூனிசம் மாத்திரமல்ல, வரதராஜன் போன்ற பண்பு மிகுந்த சில கம்யூனிஸ்டுகளையும் பிடிக்கும்"னு சொல்வார். ஹும்...போராட்டங்கள்னாலேயே வளர்ந்த ஒரு கட்சி, இன்னைக்கு ஒரு சில சீட்களுக்காக, ரேஸ்ல எப்படியாவது ஜெயிக்கணும்னு ஓடற குதிரை மாதிரி, திமுக அதிமுகன்னு மாறி மாறி சவாரி செஞ்சிட்டிருக்கு. இப்போ இருக்கற நிலைமையை வெச்சு மா.கம்யூனிஸ்ட் கட்சிய பத்தி சிம்பிளா சொல்லணும்னா, "குஷி" படத்துல மும்தாஜ் சொல்லுவாங்களே, அதுதான், "அய்ய்யோ பாவம்"
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment