Friday, July 10, 2009
அடுத்தது என்ன?
பூமாலை வீடியோ, சன் டிவி, பாடல்களுக்காக சன் மியூசிக், படங்களுக்காக கே டிவி, செய்திகளுக்காக சன் நியூஸ், குழந்தைகளுக்காக சுட்டி டிவி, காமெடிக்காக ஆதித்யா, தென்னிந்திய பிராந்திய மொழிகள்ல சேனல்கள், டீடிஎச், எஃப்எம், நியூஸ்பேப்பர்ல தினகரன், தமிழ் முரசு, புக்ல குங்குமம், சினிமால சன் பிக்சர்ஸ்....ம்...அடுத்தது என்ன தெரியுமா? விமான போக்குவரத்து.
யெஸ்...கலாநிதி மாறன் அடுத்து களம் இறங்கப்போறது, விமான போக்குவரத்து. என்னதான் அரசியல் பலம், பணம் இருந்தாலும், பிஸினஸ்ல ஜெயிக்கறதுக்கு தனி டேலன்ட் வேணும். அந்த விஷயத்துல கட்சி பாகுபாடு பாக்காம கண்டிப்பா இவர பாராட்டியே ஆகணும். யோசிச்சு பாருங்க, அதிமுக கூட பெரிய கட்சிதான். இருந்தாலும் அவங்களால மீடியாவுல ஓரளவுக்கு மேல வளரமுடியல. இந்தியாவுல டாப் பணக்காரர்கள்ல ஒருத்தரா வர்றதுக்கு, வெறும் கட்சி ஆதரவு மட்டும் போதாது. திறமையும், புத்திசாலித்தனமும், பணமும் ஒண்ணு சேர்ந்துட்டா சக்சஸ் நிச்சயம்ங்கறதுக்கு ஓர் எடுத்துக்காட்டு இவர்தான்.
என்னைக் கேட்டா, சன் நெட்வொர்க் விமானப் போக்குவரத்துல இறங்கறதுக்கு நான் கைதட்டி வரவேற்பு கொடுப்பேன். இவங்க வந்தாங்கன்னா, சும்மா இருக்கமாட்டாங்க. ரெண்டு ரூபா குடுத்து தினகரன் வாங்கி, ஏதாவது போட்டில கலந்துக்கிட்டா, மதுரை வரைக்கும் ஃப்ரீயா ப்ளேன்ல கூட்டிட்டுபோற மாதிரிலாம் ஒரு ஆஃபர் குடுப்பாங்க. இவங்க பண்ற சில்மிஷத்த பாத்தா மத்தவங்க சும்மா இருப்பாங்களா. அவங்களும் டிக்கெட் விலையை குறைக்கறது, ஆஃபர் குடுக்கறதுன்னு இறஙகுவாங்க. ஸோ, இதுவரைக்கும் பஸ்லயும், ட்ரெயின்லயும் போயிட்டுவந்துட்ருக்கற நாம, சீக்கிரம் ப்ளேன்லயும் போகப்போறோம். நீங்க வேண்ணா பாருங்க, தி.நகர் கடைகள்லயும் இவங்களோட ப்ளேன் டிக்கெட் ஆடித்தள்ளுபடில கெடைச்சாலும் கெடைக்கலாம். ஏதோ ஒண்ணு, நமக்கு நல்லது நடந்தா சரிதான்!
Labels:
அசத்துங்க
Subscribe to:
Post Comments (Atom)
konja nal munadi asia airlines free ticket kuduthathu gnabagam varuthu
ReplyDelete