Wednesday, July 08, 2009
கதை ஒண்ணு க்ளைமேக்ஸ் ரெண்டு
இன்னைக்கு ஒரு கதை எழுதியிருக்கேன். இதுல ரெண்டு க்ளைமேக்ஸ் இருக்கு. உங்களுக்கு எது புடிக்குதோ அதுதான் கதையோட முடிவா நீங்க நெனச்சுக்கலாம்.
மணி இரவு 11:10, அலுவலகம் முடிந்து சந்துரு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான். இரவு வீட்டிற்கு தாமதமாக வருவது, கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிடுவது, பின்பு தொப்பையை வளர்த்துக்கொண்டு சம்பாதிப்பதையெல்லாம் டாக்டரிடம் கொண்டுபோய் கொட்டுவது என்று இவைதான் சாஃப்ட்வேர் பணியில் இருப்பவர்களில் பெரும்பாலோனோரின் அடையாளங்கள். சந்துருவும் அந்த அடையாளங்களில் ஒருவன். ஓல்ட் மஹாபலிபுரம் ரோடில் அவனுடைய பல்சர் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது. தூரத்தில் ஒரு ஏடிஎம் தெரிய, மறுநாள் வீட்டு வாடகை கொடுக்கவேண்டியது ஞாபகம் வந்தது.
செக்யூரிட்டிகூட இல்லாமல் அந்த ஏடிஎம் ஒரு மிகச்சிறிய பாழடையாத பங்களா போன்று காட்சியளித்தது. பணத்தை எடுத்துக்கொண்டு மறுபடி தன் பல்சரை சீற்றமடையச்செய்தான். ஒரு இருபது அடிதான் சென்றிருக்கக்கூடும். சாலை ஓரத்தில் இருவர் பைக்கை நிறுத்திவிட்டு, லிப்ட் கேட்டுக்கொண்டிருந்தனர். "நிற்கலாமா வேண்டாமா" மனம் சற்று தயங்கியது. இந்த நேரத்தில் அதுவும் கையில் பணம் இருக்கும்போது, வேண்டாம் என்று தோன்றவே அவர்களை கடந்து சற்று வேகமாக போக ஆரம்பித்தான்.
இந்த சாலையில் இந்த நேரத்தில் நிற்பது ஒருவேளை நம்ம சாஃப்ட்வேர் சாதியைச் சேர்ந்தவர்களோ என்றெண்ணி வண்டியைத் திருப்பினான். அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து பல்சரின் பல்ஸை தற்காலிகமாக நிறுத்திவைத்தான். இருட்டில் அவர்களின் முகம்கூட சரியாகத் தெரியவில்லை.
"எனி ப்ராப்ளம்?"
"யா, இட்ஸ் ப்ரோக் டவுன். பேக்வீல். கேன் யூ ப்ளீஸ் ஹெல்ப் அஸ்?"
"ஷ்யூர், ஐ'ம் கோயிங் டூ அடையார். கம் வித் மீ. ஐ ட்ராப் போத் ஆஃப் யூ நியர் பை அடையார் பஸ் டெர்மினஸ். யூ கேன் ஃபைன்ட் எ சொல்யூஷன் ஃபார் திஸ் ஓவர் தேர்"
"நோ வீ கேன் ஹாண்டில் திஸ். வீ ஜஸ்ட் வாண்ட் யுவர் மணி, ஏடிஎம் கார்ட் அண்ட் தி பாஸ்வேர்ட் ஆஃப் யுவர் ஏடிஎம் கார்ட்"
"வ்வ்வ்வ்வாட்?"
"உன்கிட்ட இருக்கற காசு, ஏடிஎம் கார்ட், அந்த கார்டோட பாஸ்வேர்ட் வேணும்"
"ஸீ, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு...."
"த பார், நான் ரொம்ப பொறுமைசாலி கெடையாது. சைலன்டா குடுத்துட்டினா, நீ நல்லபடியா வீட்டுக்கு போலாம். முரண்டு பண்ணா, இதோ இவன் இருக்கான் பார்...வெரி டேஞ்சரஸ் ஃபெலோ, கைல கத்தி வேற வெச்சிருக்கான். ஐ'ம் நாட் ரெஸ்பான்ஸிபிள் இஃப் எனிதிங் ஹாப்பன் டூ யூ"
வேறு வழியில்லை, இருப்பதை கொடுத்துவிட்டுதான் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்து பணத்தை எடுத்துக்கொடுத்தான். பர்ஸிலிருந்த ஏடிஎம் கார்டுகளையும் எடுக்க, உதவி கேட்ட அந்த உத்தமபுத்திரன்,
"ஹே எல்லா கார்ட்ஸூம் வேணாம். ஜஸ்ட் ஐசிஐசிஐ கார்ட் மட்டும் குடு. உங்க ஆஃபிஸ்ல எல்லாருக்கும் அங்கதானே அக்கவுண்ட் இருக்கு. எல்லாத்தையும் உங்கிட்டயிருந்து புடுங்கிட்டா பாவம் நீ என்ன பண்ணுவ?"
திருடுற நாய் பாவ புண்ணியம் வேற பாக்குது என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே சந்துரு கார்டை கொடுத்தான்.
"பாஸ்வேர்ட்?"
இதுபோன்ற தருணத்தில் மாட்டிக்கொண்டால் ஏடிஎம் பாஸ்வேர்டை ரிவர்ஸாக சொல்லவும் என்று எப்போதோ வந்திருந்த இமெயில் ஞாபகத்திற்கு வர, "0853" என்றான்.
"குட் நீ கெளம்பலாம்....ஒன் செகண்ட், கிவ் மீ யுவர் மொபைல்"
மொபைலையும் அவனிடம் கொடுத்துவிட்டு, பல்சரை கிளப்பினான்.
க்ளைமாக்ஸ் 1:
வீட்டிற்கு வந்த சந்துரு முதல் வேளையாக பேங்க் கஸ்டமர் கேருக்கு தனது லேண்ட்லைன் ஃபோன் மூலமாக பேசி விவரத்தை சொல்லி அக்கவுண்ட்டை ப்ளாக் பண்ணுமாறு கேட்டுக்கொண்டான். போலிஸுக்கும் கால் செய்து தான் பாஸ்வேர்டை ரிவர்ஸாக சொல்லியதை தெரிவித்துவிட்டு ஃபோனை வைத்தான். இக்கட்டான தருணத்திலும் தான் சாமர்த்தியமாக நடந்துகொண்டதை எண்ணி, நாளை "நமக்கு நாமே" என்கிற திட்டம் போல் நமக்கு நாமே ஒரு ட்ரீட் கொடுக்கவேண்டும் என்று முடிவுசெய்தான். (சரி போதும், அவன் தூங்க வேணாமா? க்ளைமாக்ஸ் 1ஐ இதோட முடிச்சிக்கலாம்).
க்ளைமாக்ஸ் 2:
வீட்டிற்கு வந்த சந்துரு முதல் வேளையாக பேங்க் கஸ்டமர் கேருக்கு தனது லேண்ட்லைன் ஃபோன் மூலமாக பேசி விவரத்தை சொல்லி அக்கவுண்ட்டை ப்ளாக் பண்ணுமாறு கேட்டுக்கொண்டான். போலிஸுக்கும் கால் செய்து தான் பாஸ்வேர்டை ரிவர்ஸாக சொல்லியதை தெரிவித்துவிட்டு ஃபோனை வைத்தான். டேபிளின் மேலிருந்த வாட்டர் பாட்டிலை எடுக்கப்போகும்போது, திடீரென்று மனிஷா கொய்ராலா சிரிக்கும் சத்தம் கேட்டது. அட அதாங்க, டெலிபோன் மணி அடித்தது.
"ஹலோ சந்துரு ஹியர்"
"ஓ உன் பேரு சந்துருவா". மறுபடி அந்த திருட்டு ராஸ்கல்
அவன் தொடர்ந்தான், "நீ என்ன பெரிய புத்திசாலின்னு நெனப்பா? பாஸ்வேர்ட் கேட்டா ரிவர்ஸ்ல சொல்லிட்டு போற, ப்ளடி இடியட்"
சந்துருவுக்கு ஆச்சரியமாக இருந்தது, "ஹே ஸ்டாப் இட், இந்த நம்பர் உனக்கு எப்படி கெடைச்சுது? யூ ராஸ்கல், நான் ஆல்ரெடி போலிஸ்கிட்ட கம்ப்ளைண்ட் குடுத்தாச்சு. அவங்க உன் நம்பர இந்நேரம் ட்ரேஸ் பண்ணியிருப்பாங்க. பீ ரெடி டூ ஸ்டே பிஹைன்ட் த பார்ஸ் மேன்"
அவன், "அட அறிவுகெட்டவனே, உனக்கு சாஃப்ட்வேர் தவிர வேற எதுவுலயும் மூளை வேல செய்யாதா? சொல்றேன் கேட்டுக்கோ, இப்போ நான் கால் பண்றது உன்னோட மொபைல்ல இருந்து, நீதான் "ஹோம்"னு சேவ் பண்ணி வெச்சிருக்கியே. நானும் ஒரு ஐடி ப்ரொஃபஷனல்தான். உன்னோட ஆபிஸ்ல என்னோட ஃப்ரெண்டு ஒருத்தன் ஒர்க் பண்றான். சோ அவனுக்கு எந்த பேங்க்ல அக்கவுண்ட்ங்கறது எனக்கு தெரியும். நீதான் நாய் கழுத்துல தொங்கவிட்ட செயின் மாதிரி ஆபிஸ்விட்டு வெளியே வந்தும் உன் கழுத்துல ஐடி கார்ட தொங்கவிட்டுட்ருந்தியே. அதவெச்சுதான் நீ எந்த ஆபிஸ்னு கண்டுபுடிச்சேன். அப்புறம், இந்த மாதிரி சிச்சுவேஷன்ல மாட்டிகிட்டா ஏடிஎம் கார்ட் பாஸ்வேர்ட ரிவர்ஸ்ல சொல்லுங்கன்னு உனக்கு ஒரு இமெயில் வந்திருந்தா, அது எனக்கு வந்திருக்காதா?"
"ம்...நீ கொஞ்சம் ப்ரில்லியண்டான திருடன்தான். அதுசரி நான் ரிவர்ஸ்லதான் பாஸ்வேர்ட சொன்னேன்னு எப்படி கண்டுபுடிச்ச?"
"ஸீ அது ஒரு ஜென்ரல் சைக்காலஜி. பொதுவா யாரும் ஜீரோல ஸ்டார்ட் பண்ற மாதிரி பாஸ்வேர்ட் வெக்கமாட்டாங்க. நீ "0853"ன்னு சொல்லிட்டுபோனதுக்கப்புறம்தான் எனக்கு அந்த இமெயில் ஸ்ட்ரைக் ஆச்சு. எனிவே, தேங்க்ஸ் மேன்."
"நீ ஒரு ஐடி ப்ரொஃபஷனல்னு சொன்ன. அப்புறம் ஏன் இந்த மாதிரி ஸ்டுப்பிட் ஆக்ட்ல இறங்கற?"
"அது ஒரு 'ஜென்டில்மேன்' ப்ளான். நான் ஒரு இஞ்சினியரிங் காலேஜ் கட்டிட்ருக்கேன். அதுக்கு டொனேஷன் குடுங்கடான்னா எவன் தர்றான்? எல்லாரும் அவுட் ஆஃப் த சிட்டில ஒரு ப்ளாட் வாங்கிப்போடறதுலதான இன்ட்ரஸ்ட் காட்றீங்க. அதனாலதான் இப்படி பண்றேன். அட் த ஸேம் டைம், ஐ டிட்ன்ட் ட்ராப் எவ்ரிதிங் ஃப்ரம் யுவர் அக்கவுண்ட். 25000 எடுத்துகிட்டேன், பேலன்ஸ் 35000 இருக்கு. இப்படித்தான் நான் இதுவரைக்கும் மத்தவங்ககிட்டயிருந்தும் காசு எடுத்திருக்கேன். ஐ ஜஸ்ட் வாண்ட் எ பார்ட் ஆஃப் யுவர் மணி, நாட் எவ்ரிதிங்."
"க்ரேட், நீ நேர்ல வந்து கேட்ருந்தின்னா நானே குடுத்திருப்பேன்"
"எவ்ளோ?"
"ம்...ஒரு...ஒரு...5000"
"இவ்ளோ சொல்லியும்.................உங்கிட்ட அடிச்சதுல தப்பே இல்ல"
Labels:
கதை
Subscribe to:
Post Comments (Atom)
சூப்பர் கதை+க்ளைமேக்ஸ்...
ReplyDeleteநன்றி Mrs.மேனகாசத்யா
ReplyDeleteக்ளைமாக்ஸ் 2:
ReplyDeleteithu than super
ரெண்டாவது தான் கரெக்டு. Good thinking.
ReplyDeleteநன்றி ஏஞ்சல்
ReplyDeleteநன்றி மோகன்