Wednesday, September 30, 2009

ஈர‌ம்


சில‌ இங்கிலீஷ் த்ரில்ல‌ர் ப‌ட‌ங்க‌ள‌ பாக்கும்போது, சே! தமிழ்ல‌ இந்த‌ மாதிரிலாம் வ‌ராதான்னு தோணும். நம்மாளுங்க‌தான், காத‌ல், நட்பு -‍ இந்த‌ வ‌ட்ட‌த்தை தாண்டி வெளியே வ‌ர‌வேமாட்டேங்க‌றாங்க‌ளே. ஆனா ஈர‌ம் ப‌ட‌த்த‌ பாத்த‌போது உண்மையாவே அச‌ந்துட்டேன். ஒரு ந‌ல்ல‌, வித்தியாச‌மான‌ க‌தையும் திரைக்க‌தையும் இருந்தா போதும், ஸ்டார் வேல்யூ இல்லாத‌ ந‌டிக‌ர்க‌ளை வெச்சே ஒரு த‌ர‌மான‌ ப‌ட‌த்த‌ குடுத்து ஜெயிக்க‌லாம்ங்கற‌துக்கு இந்த‌ ப‌ட‌ம் ஒரு உதார‌ண‌ம்.

ஹீரோவுக்கு இன்ட்ரொட‌க்ஷ‌‌ன் ஸாங் இல்ல‌, ஹீரோயின் கிளாம‌ரா ந‌டிக்க‌ல‌, வில்ல‌ன் 'அவ‌னை தூக்கு, அவ‌ன் இன்னும் 24 ம‌ணி நேர‌த்துல‌ என் கால்ல‌ பொண‌மா விழ‌ணும்'னு ட‌ய‌லாக் விட‌ல‌, வில்ல‌னை சுத்தி எப்ப‌வும் நாலு பேர் நின்னுகிட்டு இல்ல‌, க‌தைக்கு ஒட்டாத‌ காமெடி ட்ராக் இல்ல‌ (ரொம்ப‌வும் ந‌ம்பிக்கையா எடுக்க‌ப்ப‌ட்ட‌ க‌ந்த‌சாமிக்கே வ‌டிவேலு தேவைப்ப‌ட்டார்), ஆபாச‌ம் இல்ல‌, இர‌ட்டை அர்த்த‌ வச‌ன‌ம் இல்ல‌, க்ளைமேக்ஸ்க்கு முன்னாடி ஒரு குத்து ஸாங் இல்ல‌, மார்க்கெட்ல‌ ச‌ண்டைக்காட்சி இல்ல‌, ப‌த்து டாடா சுமோக்க‌ள‌ பாம் வெச்சு வெடிக்க‌வெக்க‌ல‌....இப்ப‌டி ஏக‌ப்ப‌ட்ட‌ 'இல்ல‌'க‌ள் இருக்கு இந்த‌ ப‌ட‌த்துல‌.

ஹீரோயின் சிந்துவோட‌ ம‌ர‌ண‌த்துல‌ ச‌ந்தேக‌ம் இருக்க‌ற‌தால‌ அந்த‌ கேஸை எடுக்க‌றார் சிந்துவோட‌ முன்னாள் காத‌ல‌னும் இந்நாள் காவ‌ல்துறை அதிகாரியுமான‌ ஆதி. இதுக்கு மேல‌ நான் என்ன‌ சொன்னாலும் க‌தைய‌ கொஞ்ச‌மாவ‌து சொல்ல‌வேண்டியிருக்கும். அதுக்க‌ப்புற‌ம் ப‌ட‌ம் பாக்கும்போது சுவார‌ஸ்ய‌ம் கொஞ்ச‌ம் குறைஞ்சுடும், அத‌னால‌ இதோட‌ நிறுத்திக்க‌றேன். ஒருவேளை இந்த‌ ப‌ட‌த்த‌ உங்க‌ளால‌ இப்போ பாக்க‌முடிய‌ல‌ன்னா, டிவியில‌ போடும்போதாவ‌து பாருங்க‌, மிஸ் ப‌ண்ணிடாதீங்க‌.

ப‌ட‌த்தோட‌ பெரிய‌ ப்ளஸ்னு பாத்தா குழ‌ப்ப‌மில்லாத‌ திரைக்க‌தை & ஒளிப்ப‌திவு. வேற‌ சில‌ ப‌திவுக‌ள்ல‌ பாக்கும்போது "டார்க் வாட்ட‌ர்", "யாவ‌ரும் ந‌ல‌ம்" ப‌ட‌ங்க‌ள் இந்த‌ ப‌ட‌த்துக்கு லைட்டான‌ இன்ஸ்பிரேஷ‌ன்னு எழுதியிருந்தாங்க‌. அட‌ப்போங்க‌ப்பா! ர‌சிக்க‌ற‌ மாதிரி ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ரும்போது வ‌ர‌வேற்பீங்க‌ளா, அத‌விட்டுட்டு ச்சும்மா ஏதாவ‌து ஒண்ணு சொல்லிகிட்டு! உங்க‌ளையெல்லாம் "வி"ல‌ ஆர‌ம்பிக்க‌ற‌ மூணு எழுத்து ந‌டிக‌ர் ந‌டிச்ச‌ "வி"ல‌ ஆர‌ம்பிக்க‌ற‌ மூணு எழுத்து ப‌ட‌த்த‌ தொட‌ர்ந்து மூணு த‌ட‌வை பாக்க‌வெக்க‌ணும்....

2 comments:

  1. ஹீரோவுக்கு இன்ட்ரொட‌க்ஷ‌‌ன் ஸாங் இல்ல‌, ஹீரோயின் கிளாம‌ரா ந‌டிக்க‌ல‌, வில்ல‌ன் 'அவ‌னை தூக்கு, அவ‌ன் இன்னும் 24 ம‌ணி நேர‌த்துல‌ என் கால்ல‌ பொண‌மா விழ‌ணும்'னு ட‌ய‌லாக் விட‌ல‌, வில்ல‌னை சுத்தி எப்ப‌வும் நாலு பேர் நின்னுகிட்டு இல்ல‌, க‌தைக்கு ஒட்டாத‌ காமெடி ட்ராக் இல்ல‌ (ரொம்ப‌வும் ந‌ம்பிக்கையா எடுக்க‌ப்ப‌ட்ட‌ க‌ந்த‌சாமிக்கே வ‌டிவேலு தேவைப்ப‌ட்டார்), ஆபாச‌ம் இல்ல‌, இர‌ட்டை அர்த்த‌ வச‌ன‌ம் இல்ல‌, க்ளைமேக்ஸ்க்கு முன்னாடி ஒரு குத்து ஸாங் இல்ல‌, மார்க்கெட்ல‌ ச‌ண்டைக்காட்சி இல்ல‌, ப‌த்து டாடா சுமோக்க‌ள‌ பாம் வெச்சு வெடிக்க‌வெக்க‌ல‌....இப்ப‌டி ஏக‌ப்ப‌ட்ட‌ 'இல்ல‌'க‌ள் இருக்கு இந்த‌ ப‌ட‌த்துல‌.






    ana onu iruku athan kathai epdi

    ReplyDelete