Thursday, July 23, 2009
நாடோடிகள்
போன வாரம் சனிக்கிழமை "நாடோடிகள்" படம் பாத்தேன். சமீப காலமா தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் நல்ல காலம் போல. ஒரு சில நல்ல படங்கள் வந்துட்டிருக்கு. சசிகிட்டே தன்னோட காதலியை சேத்துவெக்கச்சொல்லி உதவிகேட்டு வர்றார் அவர் நண்பர். 'என் நண்பனின் நண்பனும் எனக்கு நண்பனே'ன்னு, சசியோட சேர்ந்து 'வஸந்த்&கோ' விஜய்யும், 'கல்லூரி' பரணியும் ஹெல்ப் பண்ணி அந்த நண்பனுக்கு க்ல்யாணம் பண்ணிவெக்குறாங்க. அதுக்கப்புறம் இந்த மூணுபேரோட வாழ்க்கை என்னவாகுதுங்கறதுதான் மீதி கதை.
உண்மையா சொல்றேன், த்ரில்லர் படம்னு சொல்லி ரீசன்டா வந்த தமிழ் படங்கள்லகூட இவ்ளோ த்ரில்லிங் இல்ல. இந்த படத்துல, இடைவேளைக்கு முன்னாடி வர்ற சீன்தான் செம த்ரில்லிங். என்னைக் கேட்டா படத்தோட முதல் பாதியே தடதடன்னு ஓடற ஒரு த்ரில்லர் படம் மாதிரிதான் இருக்குது. இரண்டாம் பாதில மொதல்ல கொஞ்சம் டல் அடிச்சாலும், க்ளைமேக்ஸ்ல மறுபடியும் படம் டாப்கியர்ல எகிறுது. இதுக்கு மேல படத்தபத்தி சொன்னா, நீங்க படம் பாக்கும்போது சுவாரஸ்யம் போயிடும்.
ம்ம்ம்...சசி..இவரோட வாய்ஸ் நல்லாயிருக்கு. ஹீரோவாவும் மனுஷன் பொளந்து கட்றார். 'உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு'ன்னு அடிக்கடி சொல்லும்போது ரசிக்கவெக்குறார். விஜய்யும் சரி, பரணியும் சரி, ரெண்டு பேரும் கெடைச்ச சான்ஸை நல்லா யூஸ் பண்ணியிருக்காங்க. அதுமாதிரி மத்த கேரக்டர்ஸையும் டைரக்டர் பாத்து பாத்து செதுக்கியிருக்கார். ஹீரோயின்ஸ பத்தி சொல்லணும்னா, சசியோட ஜோடியா வர்ற அநன்யா கொஞ்சம் ஜோதிகா ஸ்டைல்ல நடிச்சிருந்தாலும் துறுதுறுன்னு நல்லாவே பண்ணியிருக்காங்க.
இன்னொரு ஹீரோயின் அபிநயா, இந்த படத்த நான் பாக்கபோனதுக்கு காரணமே இந்த பொண்ணுதான். ஒரு புக்ல படிச்சேன், அபிநயாவுக்கு வாய்பேசவும் முடியாது, காதும் கேக்காதுன்னு போட்ருந்தாங்க. அந்த குறையெல்லாம் கொஞ்சம்கூட தெரியாம நடிச்சிருக்காங்க. சென்டிமெண்ட்லாம் இல்ல, சீரியஸாவே சொல்றேன், இவங்களோட தன்னம்பிக்கையை பாக்கும்போது, சே, நாமல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணுச்சு.
ஒருவிதத்துல சசிக்கு இந்த படம் ஹாட்ரிக். சுப்பிரமணியபுரம், பசங்க, இப்போ நாடோடிகள். இப்போதைக்கு கோடம்பாக்கத்துக்கு கெடைச்சிருக்கற தங்க முட்டையிடுற பொன்வாத்து, சந்தேகமேயில்லாம சசிதான்...!
Labels:
சினிமா,
விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment