Showing posts with label அர‌சிய‌ல். Show all posts
Showing posts with label அர‌சிய‌ல். Show all posts

Tuesday, October 06, 2009

இனிமே உம்பேச்சு கா!

குடும்ப‌த்தை முன்னிறுத்தி ந‌ட‌க்க‌ற‌ க‌ட்சின்னு பாத்தா த‌மிழ்நாட்டுல‌ எல்லாக் க‌ட்சியும் ஒரே ப‌ஸ்ல‌ போற‌ வெவ்வேற‌ பய‌ணிங்க‌தான். குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் உட்ப‌ட‌ சில‌ பேர் மேல‌ வ‌ழ‌க்கு போட்ட‌த‌னால‌ அதிமுக‌ கூட்ட‌ணியில‌யிருந்து வில‌க‌ற‌தா அறிவிச்சிருக்காரு டாக்ட‌ர் ராம‌தாஸ்.

எந்த‌ க‌ட்சியில‌யும் உத்த‌ம‌ருங்க‌ இப்போ இல்ல‌தான். ஆனா, அர‌சிய‌ல்லேயே நான் வெறுக்க‌ற‌ ஒரே அருவ‌ருப்பான‌ அர‌சிய‌ல்வியாதி இந்த‌ ஆள்தான்! எந்த‌ க‌ட்சியும் இந்த‌ ஆள‌ கூட்ட‌ணியில‌ சேக்காம‌ இருந்தா அடுத்து வ‌ர்ற‌ தேர்த‌ல்ல‌ இந்தாள் க‌ட்சியோட‌ ல‌ட்ச‌ண‌ம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும். ஏற்க‌ன‌வே 2009 பாராளும‌ன்ற‌த் தேர்த‌ல்ல‌ தோத்த‌துக்கு, ஓட்டு இய‌ந்திர‌ம்தான் கார‌ண‌ம்னு சொல்லிட்டு திரிய‌றாங்க‌. ப‌ழைய‌ சீட்டு முறையே கொண்டு வ‌ர‌ணுமாம்லே! ஏன் வேட்டி, ச‌ட்டை? பேசாம வாழை இலையிலேயே திரிய‌ வேண்டிய‌துதானே?

ஐயோ, இதுக்குமேல‌ நான் எழுத‌ ஆர‌ம்பிச்சா, இன்னும் அநாக‌ரிக‌மாதான் போய்முடியும். அத‌னால‌ இதோட‌ நிறுத்திக்க‌றேன்...

Thursday, July 16, 2009

முடிவின் ஆர‌ம்ப‌ம்!


மார்க்ஸிஸ்ட் க‌ம்யூனிஸ்ட்டுக்கும் அதிமுக‌வுக்கும் அறிக்கைப்போர் ஆர‌ம்பிச்சாச்சு. இத‌ ஆரம்பிச்ச‌ பெருமை மா.கம்யூ மாநில‌த்த‌லைவ‌ர் வ‌ர‌த‌ராஜ‌னுக்கே சேரும். 2009 பாராளும‌ன்ற‌த் தேர்த‌ல்ல‌ தோல்வி அடைஞ்ச‌துக்கு அதிமுக‌வோட‌ அணுகுமுறையும் ஒரு முக்கிய‌ கார‌ண‌ம்னு சொல்லி ஒரு திரிய‌ கொளுத்திபோட்டார். இதுக்கு பதிலா செங்கோட்டைய‌ன் எந்தெந்த‌ மாநில‌த்துல‌ல்லாம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தோல்வி அடைஞ்ச‌துன்னு ஒரு லிஸ்ட் போட்டு, இதுக்கெல்லாம் கூட‌ அதிமுக‌தான் கார‌ண‌மான்னு கேள்வி கேட்டு ஒரு அறிக்கைவிட்டார்.

இதுல‌ க‌டுப்பான‌ வ‌ர‌த‌ராஜ‌ன், நேத்து என்னென்ன‌மோ ச‌மாளிச்சு ம‌றுப‌டியும் ஒரு அறிக்கைவிட்ருக்கார். போதும் உங்க‌கூட‌ குப்பை கொட்ன‌து, இப்ப‌டியே கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா க‌ழ‌ண்டுக்க‌றோம்ங்க‌ற‌த‌ ம‌றைமுக‌மா சொல்லியிருக்கார். பொதுவா, த‌ன்னோட‌ கூட்ட‌ணி க‌ட்சி ஜெயிச்சாலே புர‌ட்சித்த‌லைவியோட‌ டீலிங் ஒரு மார்க்க‌மாத்தான் இருக்கும். இதுல‌ அந்த‌ க‌ட்சி தோத்துட்டா, அவ்ளோதான். இதுக்கு ப‌க்காவான எக்ஸாம்பிள், பாட்டாளி ம‌க்க‌ள் க‌ட்சி. தேர்த‌ல் முடிஞ்சு கிட்ட‌த‌ட்ட‌ மூணு மாச‌ம் ஆகியும் இதுவ‌ரைக்கும் டாக்ட‌ர் ராம‌தாஸுக்கு த‌ன்னை ச‌ந்திக்க‌ற‌துக்கு அப்பாயின்ட்மென்ட் குடுக்க‌வேயில்ல‌.

அனேக‌மா கூட்ட‌ணி முறிவுக்கான‌ ஆர‌ம்ப‌ம்தான் இந்த‌ அறிக்கைப்போர்னு நென‌க்குறேன். இன்னும் ரெண்டு வ‌ருஷ‌த்துல‌ த‌மிழ்நாடு ச‌ட்ட‌ச‌பைத் தேர்த‌ல் வ‌ர‌ப்போகுது. அதுக்குள்ள‌ மார்க்ஸிஸ்ட் திமுக‌ கூட்ட‌ணிக்கு எப்ப‌டியும் வ‌ந்துடுவாங்க‌. "என‌க்கு க‌ம்யூனிஸ‌ம்தான் பிடிக்கும், க‌ம்யூனிஸ்டுக‌ளை அல்ல‌"ன்னு சொன்ன‌ முத‌ல்வ‌ர் அப்போ என்ன‌ சொல்வார்? "உட‌ன்பிற‌ப்பே, என‌க்கு க‌ம்யூனிச‌ம் மாத்திர‌ம‌ல்ல‌, வ‌ர‌த‌ராஜ‌ன் போன்ற‌ ப‌ண்பு மிகுந்த‌ சில‌ க‌ம்யூனிஸ்டுக‌ளையும் பிடிக்கும்"னு சொல்வார். ஹும்...போராட்ட‌ங்க‌ள்னாலேயே வ‌ள‌ர்ந்த‌ ஒரு க‌ட்சி, இன்னைக்கு ஒரு சில‌ சீட்க‌ளுக்காக‌, ரேஸ்ல‌ எப்ப‌டியாவ‌து ஜெயிக்க‌ணும்னு ஓட‌ற‌ குதிரை மாதிரி, திமுக‌ அதிமுக‌ன்னு மாறி மாறி ச‌வாரி செஞ்சிட்டிருக்கு. இப்போ இருக்க‌ற‌ நிலைமையை வெச்சு மா.க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிய‌ ப‌த்தி சிம்பிளா சொல்ல‌ணும்னா, "குஷி" ப‌ட‌த்துல‌ மும்தாஜ் சொல்லுவாங்க‌ளே, அதுதான், "அய்ய்யோ பாவ‌ம்"

Saturday, May 16, 2009

தேர்த‌லுக்கு பின்பு...



இந்திய‌ பாராளும‌ன்ற‌த்திற்கான‌ 2009 தேர்த‌ல் முடிவுக‌ள் இன்று அறிவிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. எந்த‌ கூட்ட‌ணிக்கும் மெஜாரிட்டி கிடைக்க‌ப்போவ‌தில்லை என்று க‌ருத்துக்க‌ணிப்புக‌ள் (இத‌ யார்தான் க‌ண்டுபுடிச்சாங்க‌ளோ) கூறுகின்ற‌ன‌.

புதிய‌ அர‌சு அமைப்ப‌த‌ற்கு இதுவ‌ரை டாம் & ஜெர்ரியாக‌ இருந்த‌ க‌ட்சிக‌ளெல்லாம் ஒன்று கூடி கூட்ட‌ணி க‌ட்சிக‌ளின் கூட்ட‌ம் என்று வெளியில் சொல்லிக்கொண்டு உள்ளே ப‌த‌வி பேர‌ம் ந‌ட‌த்திக்கொண்டிருப்ப‌ர். இப்பொழுது உள்ள‌ நிலைமையைப் பார்க்கும்பொழுது மீண்டும் காங்கிர‌ஸ்தான் ஆட்சிக்கு வ‌ரும் என்று தோன்றுகிற‌து.

திமுக‌வை பொறுத்த‌வ‌ரை வ‌ழ‌க்க‌ம்போல் டி.ஆர்.பாலுவையும், த‌யாநிதி மாற‌னையும் ம‌த்திய‌ அமைச்ச‌ர்க‌ளாக்க‌ குட்டி க‌ர‌ண‌ம்...இல்லை..பெரிய‌ க‌ர‌ண‌ம் போட்டாவ‌து ஜெயித்துவிடுவ‌ர். லிஸ்ட்டில் இந்த‌ முறை அழகிரியும் சேரும் வாய்ப்பு இருப்ப‌தால் க‌லைஞ‌ருக்கு க‌டும் த‌லைவ‌லி காத்துக்கொண்டிருக்கிற‌து. ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குத்தான் இத‌ய‌த்தில் இட‌ம், ம‌க‌னாயிற்றே ம‌த்திய‌ அமைச்ச‌ர‌வையிலேயே இட‌ம் வாங்கி கொடுப்பார் அன்புள்ள‌ அப்பா!

ஒரு முன்னாள் முத‌ல்வர் (ப‌ன்னீர் செல்வ‌ம்) த‌ன் க‌ட்சியின் த‌லைமையின் காலில் சாஷ்டாங்க‌மாக‌ விழுவ‌தெல்லாம் இந்தியாவிலேயே அதிமுக‌வில் ம‌ட்டும்தான் ந‌ட‌க்கும். உண்மையில் சொல்ல‌ப்போனால் ஜெ.வுக்கு இருக்கும் துணிச்ச‌ல் இங்கு வேறு எந்த‌ அர‌சிய‌ல்வாதிக்கும் கிடையாது. ஆனால் அவ‌ர் அதை ச‌ரியான‌ முறையில் ப‌ய‌ன்ப‌டுத்தாம‌ல், ம‌க்க‌ளுக்காக‌ க‌ள‌த்தில் இற‌ங்கி போராடாம‌ல், த‌ன் க‌ட்சியின‌ரை காலில் விழும் காமெடிய‌ன்களாக‌ வைத்திருப்ப‌திலேயே கால‌த்தை த‌ள்ளுகிறார். ம‌த்திய‌ அர‌சுக்கு ஆத‌ர‌வு கொடுக்க‌ வேண்டி வ‌ந்தால் இவ‌ர் போட‌ப்போகும் முத‌ல் நிப‌ந்த‌னை "த‌மிழ‌க‌த்தில் ஆட்சியைக் க‌லைக்க‌ வேண்டும்". அட‌ போங்க‌ மேட‌ம் நீங்க‌ளும் உங்க‌ கோரிக்கையும்...கொட‌நாடுவில் ஓய்வெடுக்க‌ த‌யாராகிவிட்டிருப்பீர்க‌ளே!

அவ்வ‌ள‌வுதான்..ர‌த்த‌த்தின் ர‌த்த‌ங்க‌ளுக்கு இன்னும் மூன்று அல்ல‌து நான்கு மாத‌ங்க‌ளுக்கு அம்மாவின் த‌ரிச‌ன‌ம் கிடைக்காது.....