Tuesday, October 20, 2009

கலந்து அடி!


தீபாவ‌ளி எல்லாருக்கும் ந‌ல்ல‌ப‌டியா போச்சா? ஸ்வீட்டெல்லாம் சாப்புட்டு ந‌ல்லா என்சாய் ப‌ண்ணியிருப்பீங்க‌ளே...ந‌ல்லாருங்க‌ப்பு, ந‌ல்லாருங்க‌! ஏன் உன‌க்கு ஸ்டொம‌க் ப‌ர்னிங்னா கேக்க‌றீங்க‌? ஒரு ப‌ண்டிகையும் அதுவுமா உட‌ம்பு ச‌ரியில்லாம‌ 2 இட்லி, கொஞ்ச‌ம் ர‌ச‌ம் சாத‌ம்னு சாப்ட்டு பாருங்க‌, அப்போ தெரியும்.
ச‌ரி, இப்ப‌டி ஓரு தியாக‌த்துக்கு அப்புற‌மும் இந்த‌ ப‌ச்ச‌ம‌ண்ணு க‌ள‌த்துல‌ இற‌ங்கியிருக்குன்னு அப்ரிஷியேட் ப‌ண்ணி என‌க்கு விருதுலாம் எதுவும் குடுக்க‌ வேண்டாம் ப்ளீஸ்...ப்ளீஸ் சொன்னா கேளுங்க‌...ப்ச்...அய்யோ, அட‌ம் புடிப்பீங்க‌ளே! ச‌ரி, அப்புற‌ம் உங்க‌ இஷ்ட‌ம்!
***************************************************************************
நேத்து வி.சிறுத்தைக‌ள் திருமாவ‌ளவ‌னோட‌ பேட்டிய‌ ஜு.வில‌ ப‌டிச்சேன். அதுல‌ என‌க்கு புடிச்ச வ‌ரிக‌ள் "ப‌லியிடுவ‌து ஆடுக‌ளைத்தான், சிங்க‌ங்க‌ளை அல்ல‌" ப்பா...ந‌ல்ல‌ ப‌வ‌ர்ஃபுல்லான‌ வார்த்தைக‌ள். திருமா சார், எங்க‌யாவ‌து இந்த‌ இள‌வ‌ட்ட‌ ந‌டிக‌ர்க‌ள‌ பாத்தீங்க‌ன்னா ஒதுங்கிடுங்க‌. இல்ல‌ன்னா ப‌ஞ்ச் ட‌யலாக் எழுதித‌ர‌ சொல்லி, ப‌ய‌புள்ளைக‌, உங்க‌ள‌ வச‌ன‌கர்த்தாங்க‌ற‌ பேர்ல‌ காமெடிய‌னா ஆக்கிடுவாங்க‌.

***************************************************************************


ந‌டிக‌ர் விவேக்கை ஹீரோவா போட்டு ஆர‌ம்பிச்சா, அந்த‌ ப‌ட‌ங்க‌ளின் தயாரிப்பாள‌ர்க‌ள்லாம் ஏதாவ‌து ஒரு பிர‌ச்னையில‌ மாட்டிக்க‌றாங்க‌ன்னு கிசுகிசு பாணியில‌ "ந‌க்கீர‌ன்" செய்தி வெளியிட்டிருக்கு. அட‌, புவ‌னேஸ்வ‌ரி மேட்ட‌ர்ல‌ விவேக், ட‌வுச‌ர் பாண்டி ரேஞ்சுக்கு பேசுனார் இல்ல‌, அதுக்கான‌ ப‌ழிவாங்க‌ல் இது. இத‌ ப‌டிச்ச‌துல‌ருந்து இனிமே ந‌க்கீர‌ன் வாங்க‌கூடாதுன்னு முடிவு ப‌ண்ணிட்டேன்.


இவ்ளோ கோப‌ம் இருக்க‌ற‌வ‌ங்க‌ எதுக்கு இன்னும் சினிமா நியூஸை போட்டு ப‌த்திரிகை ந‌ட‌த்த‌றாங்க‌. ஏன்னா, த‌மிழ்நாட்டுல‌ துக்ள‌க் மாதிரி ஒண்ணு ரெண்டு ப‌த்திரிகைக‌ள் த‌விர‌ ம‌த்த‌து எல்லாம் சினிமாவ‌ ந‌ம்பிதான் இருக்கு. இவ‌ங்க‌ளுக்கு ஒரு ப‌க்க‌த்துல‌யாவ‌து சினிமா நியூஸை போட்டு ப‌க்க‌த்துலேயே‌ க‌வ‌ர்ச்சியா ஒரு ஹீரோயினோட‌ ஸ்டில் போட்டாதான் மோட்ச‌ம் கிடைக்கும் போல‌!

விவேக்கை வெச்சு இதே டைப் கிசுகிசுவை குமுத‌மும் வெளியிட்டிருக்கு. அட‌ ராமா! இதுல‌ கூட‌வா உங்க‌ ஒத்துமைய‌ காட்டுவீங்க‌? ரொம்ப‌ ஃபீல் ப‌ண்ண‌ வெக்குறீங்க‌...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

***************************************************************************


இய‌க்குன‌ர் பாலா அடுத்த‌து காமெடி ப‌ட‌ம் எடுக்க‌றாராம். ஓ காட், என்னால‌ ந‌ம்ப‌வே முடிய‌ல‌, பாலாவுக்கு ஏதாவ‌து ஆயிடுச்சா? முத‌ல் ப‌ட‌த்துல‌ருந்தே (ஒவ்வொரு ப‌ட‌த்துல‌யும்), க்ளைமேக்ஸ்ல‌ யார‌வ‌து ஒருத்த‌ரை போட்டு த‌ள்ளிகிட்டேதானே இருக்க‌றாரு. இப்போ காமெடின்னா என்ன‌ ப‌ண்ணுவாரு? சே! எப்பேர்ப்ப‌ட்ட‌ இய‌க்குன‌ருக்கு இப்ப‌டி ஒரு த‌ர்ம‌ச‌ங்க‌ட‌ம்!


இந்த‌ மேட்ட‌ருக்கும் மேல‌ இருக்க‌ற‌ ஃபோட்டோக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? ஆங்ங்...ப‌ம்ம‌ல் கே. ச‌ம்ப‌ந்த‌ம்..அட‌ நீங்க‌ வேற‌, நெட்ல‌ தேடி பாத்த‌துல‌ பாலா சிரிக்க‌ற‌ மாதிரி கிடைச்ச‌ ஒரே ஃபோட்டோ இதுதான்!

***************************************************************************

அதென்ன‌டா இந்த‌ ப‌திவுக்கு இப்ப‌டி ஒரு டைட்டில்னு நினைக்காதீங்க‌. ரெண்டு, மூணு மேட்ட‌ர் க‌ல‌ந்து குடுக்குறோம்ல‌, அதான்!

Friday, October 16, 2009

ஐ! தீபாவ‌ளி!


தீபாவ‌ளி வெள்ளிக்கிழ‌மைங்க‌றாங்க‌, இல்ல‌ல்ல‌ ச‌னிக்கிழ‌மைதாங்க‌றாங‌க‌. அட‌ இதுக்கு கூட‌ நீயா நானான்னு வ‌ந்து கோபிதான் க‌ருத்து சொல்ல‌ணுமா? வெள்ளிக்கிழ‌மை தீபாவ‌ளி, அத‌னால‌ ஆஃபிஸ் மூணு நாள் லீவு. ஸோ, ஆஃபிஸ‌ பொருத்த‌வ‌ரைக்கும் நாம‌ வெள்ளிக்கிழ‌மைதான் தீபாவ‌ளி கொண்டாடுறோம்.

அம்மாவை‌ கேட்டா ந‌மக்கு ச‌னிக்கிழ‌மைதான்டா தீபாவ‌ளிங்க‌றாங்க‌. ஸோ, வீட்ல‌ ச‌னிக்கிழ‌மைதான் தீபாவ‌ளி கொண்டாடுறோம். ஏதோ ஒண்ணு ந‌மக்கு லீவு வ‌ருதா, அதுதான் முக்கிய‌ம். என்ன‌தான் செவ‌ன் டாங்கீஸ் வ‌ய‌சு ஆனாலும், லீவுன்னு வ‌ந்தா ம‌ட்டும் ம‌னசு எல்கேஜி பைய‌ன் மாதிரிதான் இருக்குது.
இந்த‌ மாதிரி ப‌ண்டிகை டைம்ல‌ ப‌ஸ்ஸ‌ புடிச்சு நிம்ம‌தியா விண்டோ சீட்ல‌ உக்காந்துகிட்டு ஊருக்கு போனா, உண்மையாவே அது "இண்டியானா ஜோன்ஸ்" ரேஞ்சுக்கு ஒரு அட்வென்ச்ச‌ர்தான்.

பொங்க‌ல் அன்னைக்கு ஊருக்கு போன‌து பெரும் பாடு. மொத‌ல்ல‌ வேள‌ச்சேரில‌ இருந்து ஒரு ப‌ஸ்ஸ‌ புடிச்சு, கோய‌ம்பேடுக்கு போற‌துக்குள்ள‌, வ‌ழியில‌ செம‌ டிராஃபிக். இத்த‌னைக்கும் காலைல‌ 6:30 ம‌ணிக்கே. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ந‌க‌ர்ந்துகிட்டு இருந்த‌ வ‌ண்டி, கோய‌ம்பேடு கிட்ட‌ போகும்போது, என‌க்கு டைய‌ர்டா இருக்குன்னு சொல்லி அந்த‌ டிராஃபிக்க‌ கார‌ண‌ம் காட்டி நின்னுடுச்சு.

ச‌ரி, சிஎம்பிடிக்கு ந‌ட‌ந்தே போய், உள்ள‌ ப‌ஸ்ஸ‌ பாத்தா, ய‌ப்பா....எவ்வ்வ்வ்வ‌ளோ பேர்...அதுக்க‌ப்புற‌ம் ஸ்டாண்டிங்ல‌ போற‌ மாதிரிதான் ஒரு ப‌ஸ் கிடைச்சுது. மேல‌ கிடைக்குற‌ க‌ம்பிய‌ புடிக்கவே வேணாம், இந்த‌ ப‌க்க‌ம் ஒருத்த‌ர் நெருக்குறார், அந்த‌ ப‌க்க‌ம் ஒருத்த‌ர் நெருக்குறார். இந்த‌ மாதிரி கூட்ட‌த்துல‌ அது வ‌ரைக்கும் நான் போன‌தேயில்ல‌. இத‌ ப‌த்தி அப்புற‌ம் ஒரு ப‌திவ‌ (மொக்கைய‌???) போடுறேன்.

ப‌க‌வானே, இன்னைக்கு என்னை அந்த‌ மாதிரி க‌ஷ்ட‌ப்ப‌டுத்தாம‌ இருந்தா, இந்த‌ ச‌ண்டே அன்னைக்கு நான் ஆஃபிஸ்ல‌ ஸிக் லீவ் எடுக்க‌மாட்டேன்...இது ச‌த்திய‌ம்..ச‌த்திய‌ம்...ச‌த்திய‌ம்.
ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், அனைத்து ப‌திவ‌ர்களுக்கும் என‌து இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக‌ள்!

Thursday, October 15, 2009

ஸ்ஸ்ஸ்ஸ்....ஒரே டென்ஸ‌ன‌ப்பா!!!


போன‌ சன்டே ஒரு பேக்க‌ரிக்கு போய் ரெண்டு ப‌ப்ஸை உள்ளே த‌ள்ளிட்டு வ‌ரும்போது வீட்டுக்கு வாங்கிட்டு போக‌லாம்னு ஒரு மிரிண்டா ஹாஃப் லிட்ட‌ர் பாட்டில் கேட்டேன். 25 ரூபாய்னு சொன்னாங்க‌. ரொம்ப‌ நாளாவே தூங்கிட்டிருந்த‌ மூளை திடீர்னு எழுந்திடுச்சு. பாட்டில் வாங்கி எம்ஆர்பி பாத்தா 20 ரூபாய்னு போட்டிருந்த‌து.

"என்ன‌ங்க‌, இதுல‌ 20தான் போட்டிருக்கு, 25 சொல்றீங்க‌ளே"ன்னு கேட்டா, "25தான் சார்"னு ரொம்ப‌வே அல‌ட்சிய‌மா ப‌தில் வ‌ருது. என‌க்கு வேணாம்னு திருப்பி குடுத்துட்டேன். 5 ரூபா சாதார‌ண‌ விஷ‌ய‌மா இருக்க‌லாம். ஆனா இந்த‌ மாதிரி த‌ப்பு செய்ய‌ அவ‌ங்க‌ள‌ தூண்டுற‌தே நாம‌தான். ஒரு ப‌த்து பேர் இல்ல‌ இருப‌து பேர், இதே கார‌ண‌த்த‌ சொல்லி வாங்காம‌ இருந்தா, அவ‌ங்க‌ தானா 20 ரூபாய்க்கு குடுப்பாங்க‌. ஆனா நாம‌ வ‌ற‌ட்டு க‌வுர‌வ‌ம் பாத்து 5 ரூபாதானேன்னு க‌ம்முன்னு வாங்கிட்டு போய்ட்டா அவ‌ங்க‌ இதே த‌ப்பைதான் செய்வாங்க‌. அவ‌சிய‌ம்னா 1000 ரூபாய் செல‌வு ப‌ண்ண‌லாம், அனாவ‌சிய‌மா 1 ரூபாய் கூட‌ செல‌வு ப‌ண்ண‌கூடாது (வுட்டாண்டா ப‌ஞ்ச் ட‌ய‌லாக்!).

5 ரூபாய் எக்ஸ்ட்ராவா வாங்குற‌துலாம் த‌ப்பான்னு கேக்குற‌வ‌ங்க‌ளுக்கு, அந்நிய‌ன் பட‌த்துல‌ வ‌ர்ற‌ ஒரு ட‌ய‌லாக்கை ஞாப‌க‌ப்ப‌டுத்த‌ விரும்ப‌றேன் "த‌ப்பு என்ன‌ ப‌னிய‌ன் சைஸா? ஸ்மால், மீடிய‌ம், லார்ஜ்ன்னு இருக்க‌ற‌துக்கு?"

இது அந்த‌ பேக்க‌ரில‌ ம‌ட்டுமில்ல‌, எவ்ள‌வோ பேர் தின‌மும் வ‌ந்து போற‌ கோய‌ம்பேடு ப‌ஸ் ஸ்டாண்டுல‌யும் இப்ப‌டிதான் எம்ஆர்பிய‌ விட‌ அதிக‌மா வெச்சு விக்க‌றாங்க‌. அங்க‌ வாட‌கை அதிக‌ம்னா ஏன் கடை போடுறீங்க‌? எப்ப‌டியும் இந்த‌ மிடிள் கிளாஸ் கேனை ப‌ய‌லுக‌ வ‌ந்து வாங்குவாங்க‌ன்னுதானே?

இது எல்லாருக்கும் ந‌ட‌க்குதா, இல்ல‌ என‌க்கு ம‌ட்டுமா? எப்ப‌டி க‌ண்டுபுடிக்க‌றாங்க‌ன்னு தெரிய‌ல‌, ஒருவேளை இ.வா.ன்னு நெத்தியில‌ ப்ரிண்ட் ஆகுதோ????

Saturday, October 10, 2009

இங்கிட்டு இருந்து அங்கிட்டு


நைட் ஷிஃப்ட் ஒர்க் முடிச்சிட்டு நாம‌ளே(நான்தேன்!!) தூக்க‌ க‌ல‌க்க‌த்துல‌ போனா, ரோடு க்ராஸ் ப‌ண்ற‌துக்குள்ள‌, ஏதோ எதிரி நாட்டுக்குள்ள‌ நுழைய‌ற‌ மாதிரி பாத்து பாத்து போக‌வேண்டிய‌தாயிருக்குது. சிக்ன‌ல்ல‌ சிக‌ப்பா இருந்தா என்ன‌, ப‌ச்சையா இருந்தா என்ன‌, என் இஷ்ட‌த்துக்குதான் போவேன்னு ஒவ்வொரு வ‌ண்டியும் ப‌ற‌க்க‌ற‌ அழ‌க‌ பாக்க‌ணுமே. என்ன‌வோ இதுக்கு முன்னாடி இந்திய‌ன் ஏர்லைன்ஸ்ல‌ வேலை பாத்த‌ ரேஞ்சுக்கு, என்னா ஒரு வேக‌ம்!


க‌வ‌ர்ன்மெண்ட் ப‌ஸ், பிரைவேட் ப‌ஸ்னு இல்ல‌, டூவீல‌ர்ல‌ போற‌வ‌ங்க‌கூட‌ இப்ப‌டித்தான் போறாங்க‌. ஆட்டோ அண்ண‌ணுங்க‌ள‌ ப‌த்தி சொல்ல‌வே வேண்டிய‌தில்ல‌. த‌க‌வ‌ல் அறியும் உரிமை அடிப்ப‌டையில‌ ஒரு விவ‌ர‌த்த‌ கேக்க‌ணும். சென்னையில‌ ரோடு போட்ட‌போது, இந்த‌ ரோடுக‌ள‌ ஆட்டோ அண்ண‌ணுங்க‌ளுக்கே எழுதிவெச்சிட்டிருப்பாங்க‌ளோ??? இத‌ க‌ண்டிப்பா கேட்டு தெரிஞ்சிக்க‌ணும்.


ஏதோ அப்ப‌டி இப்ப‌டின்னு ந‌ம்ம‌ திற‌மையை முழுசா யூஸ் ப‌ண்ணி இந்த‌ பக்க‌த்துல‌ இருந்து, ந‌டுவுல‌ போய் நின்னுட்டோம்னு வைங்க‌, பாதி ச‌க்ஸ‌ஸ்தான். ஆனா இந்த‌ நேர‌த்துக்குள்ள‌, ந‌ம்ம‌ள‌ தாண்டி போன‌ வ‌ண்டிக‌ள்ள‌ ஒரு டிரைவ‌ராவ‌து ந‌ம்ம‌ளோட‌ குல‌ம், கோத்திர‌ம்லாம் கேக்காம‌லேயே ந‌ம‌க்கு அர்ச்ச‌னை ப‌ண்ணியிருப்பார், "ப‌ர‌தேசி, கொஞ்ச‌மாவ‌து உயிர்மேல‌ ப‌ய‌ம் இருக்குதா பாரு". இதோட‌ ஃப்ர்ஸ்ட் ஹாஃப் முடியுது.


இப்போ செக‌ண்ட் ஹாஃப். ச‌ரி நாம‌தான் ந‌டுவுல‌ வ‌ந்து நின்னுட்டோமே, க்ராஸ் ப‌ண்ணி ட‌க்ன்னு போயிட‌ முடியாது. ந‌ம்ம‌ ட‌க்கு அவ்ளோதான்! 'ச‌ச்சின்' விஜ‌ய் க‌ண‌க்கா ரைட் சைடுல‌ த‌லைய‌ மேல‌ திருப்பி சிக்ன‌ல பாத்தா, ஏதோ அஜித்க்கு ஃபேன் மாதிரி சிக்ன‌லும் 'ரெட்' காட்டிட்டிருக்கும். 'க‌ள‌த்துல‌ இற‌ங்குடா ம‌ச்சி'ன்னு ம‌ன‌சு சொல்லுற‌த‌ கேட்டு லெஃப்ட்ல பாக்காம‌ இற‌ங்குனோம்னு வெச்சுக்குங்க‌, அவ்ளோதான், அங்க‌ எம‌த‌ர்ம‌ன் லாரி டிரைவ‌ராக‌வோ, ப‌ஸ் டிரைவ‌ராகவோ கெட்ட‌ப் மாத்தி வ‌ந்துட்டிருப்பார். பாச‌க்க‌யிறுக்கு ப‌திலா ஸ்டீய‌ரிங்.


ஆனா நாம‌ யாரு? உண்மைய‌ சொன்னா லீவு கிடைக்காதுன்னு தெரிஞ்சு, வ‌ராத‌ வ‌யித்து வ‌லியும் வ‌ந்திருக்குன்னு சொல்லி ந‌ம்ம‌ டேமேஜ‌ருக்கே 'திருநெல்வேலி' மேட்ட‌ர் குடுக்க‌ற‌வ‌ங்க‌ளாச்சே. ஸோ, உஷாரா தூர‌ வ‌ண்டிங்க‌ வ‌ரும்போதே க்ராஸ் ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிட‌வேண்டிய‌து. ஆனா ந‌டுவுல‌ நின்னு பாக்கும்போது தூர‌ வ‌ந்த‌ வ‌ண்டி நாம இற‌ங்கி ந‌ட‌க்க‌ ஆர‌ம்பிச்சிருக்கும்போது கிட்ட‌ வ‌ந்திருக்கும். ச‌டார்ர்ர்ர்ர்னு ப்ரேக் போட்டு நிறுத்துவார், டிரைவ‌ர். அங்க‌ சிக்ன‌ல்ல‌ 'ரெட்' இருந்தாலும் ஏதோ நம்மாலதான் வ‌ண்டிய‌ நிறுத்த‌வேண்டிய‌தாபோச்சுங்க‌ற‌ அள‌வுக்கு ஃபீல் ப‌ண்ணி ந‌ம்ம‌ள‌ பாத்து லிப் மூவ்மெண்ட் குடுப்பார். அத‌ உத்து க‌வ‌னிச்சா தெரியும், அது என்ன‌ன்னா "ப‌ன்னாட‌ கால‌ங்காத்தாலேயே தூங்கி வ‌ழிஞ்சுக்குன்னு போது பார்", ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌வ‌ர்கிட்ட‌ ட‌ய‌லாக் க‌ன்டினியூ ஆகும் "இதெல்லாம் ஒழுங்கா வூடு போய் சேரும்ன்ட்ற‌?"


ஆனா இந்த‌ ட‌ய‌லாக், ரியாக்ஷ‌ன் எல்லாம் ஒன்லி ப‌ச‌ங்க‌கிட்ட‌தான். அதுவே லேடீஸா இருந்தா "ஏம்மா (வாய்ஸ் டோன் ரொம்ப‌வே குறைஞ்சு இருக்கும்), பாத்து போக்கூடாதா, இன்னாமா நீய்ய்". ஹும்ம்ம்ம்ம்......என்ன‌த்த‌ சொல்ல‌....எதுக்கு இதையெல்லாம் எழுதிட்டிருக்கேன்? அட‌, யாருமே ப‌டிக்காம‌ இருந்தாலும், ப‌திவு போட‌ணும்னு க‌ட‌மை ஒண்ணு இருக்குல்லே...விவேக்தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ர்றார் "யாருமே இல்லாத‌ க‌டையில‌ யாருக்குடா....." ஹி...ஹி...


Tuesday, October 06, 2009

இனிமே உம்பேச்சு கா!

குடும்ப‌த்தை முன்னிறுத்தி ந‌ட‌க்க‌ற‌ க‌ட்சின்னு பாத்தா த‌மிழ்நாட்டுல‌ எல்லாக் க‌ட்சியும் ஒரே ப‌ஸ்ல‌ போற‌ வெவ்வேற‌ பய‌ணிங்க‌தான். குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் உட்ப‌ட‌ சில‌ பேர் மேல‌ வ‌ழ‌க்கு போட்ட‌த‌னால‌ அதிமுக‌ கூட்ட‌ணியில‌யிருந்து வில‌க‌ற‌தா அறிவிச்சிருக்காரு டாக்ட‌ர் ராம‌தாஸ்.

எந்த‌ க‌ட்சியில‌யும் உத்த‌ம‌ருங்க‌ இப்போ இல்ல‌தான். ஆனா, அர‌சிய‌ல்லேயே நான் வெறுக்க‌ற‌ ஒரே அருவ‌ருப்பான‌ அர‌சிய‌ல்வியாதி இந்த‌ ஆள்தான்! எந்த‌ க‌ட்சியும் இந்த‌ ஆள‌ கூட்ட‌ணியில‌ சேக்காம‌ இருந்தா அடுத்து வ‌ர்ற‌ தேர்த‌ல்ல‌ இந்தாள் க‌ட்சியோட‌ ல‌ட்ச‌ண‌ம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும். ஏற்க‌ன‌வே 2009 பாராளும‌ன்ற‌த் தேர்த‌ல்ல‌ தோத்த‌துக்கு, ஓட்டு இய‌ந்திர‌ம்தான் கார‌ண‌ம்னு சொல்லிட்டு திரிய‌றாங்க‌. ப‌ழைய‌ சீட்டு முறையே கொண்டு வ‌ர‌ணுமாம்லே! ஏன் வேட்டி, ச‌ட்டை? பேசாம வாழை இலையிலேயே திரிய‌ வேண்டிய‌துதானே?

ஐயோ, இதுக்குமேல‌ நான் எழுத‌ ஆர‌ம்பிச்சா, இன்னும் அநாக‌ரிக‌மாதான் போய்முடியும். அத‌னால‌ இதோட‌ நிறுத்திக்க‌றேன்...

Wednesday, September 30, 2009

ஈர‌ம்


சில‌ இங்கிலீஷ் த்ரில்ல‌ர் ப‌ட‌ங்க‌ள‌ பாக்கும்போது, சே! தமிழ்ல‌ இந்த‌ மாதிரிலாம் வ‌ராதான்னு தோணும். நம்மாளுங்க‌தான், காத‌ல், நட்பு -‍ இந்த‌ வ‌ட்ட‌த்தை தாண்டி வெளியே வ‌ர‌வேமாட்டேங்க‌றாங்க‌ளே. ஆனா ஈர‌ம் ப‌ட‌த்த‌ பாத்த‌போது உண்மையாவே அச‌ந்துட்டேன். ஒரு ந‌ல்ல‌, வித்தியாச‌மான‌ க‌தையும் திரைக்க‌தையும் இருந்தா போதும், ஸ்டார் வேல்யூ இல்லாத‌ ந‌டிக‌ர்க‌ளை வெச்சே ஒரு த‌ர‌மான‌ ப‌ட‌த்த‌ குடுத்து ஜெயிக்க‌லாம்ங்கற‌துக்கு இந்த‌ ப‌ட‌ம் ஒரு உதார‌ண‌ம்.

ஹீரோவுக்கு இன்ட்ரொட‌க்ஷ‌‌ன் ஸாங் இல்ல‌, ஹீரோயின் கிளாம‌ரா ந‌டிக்க‌ல‌, வில்ல‌ன் 'அவ‌னை தூக்கு, அவ‌ன் இன்னும் 24 ம‌ணி நேர‌த்துல‌ என் கால்ல‌ பொண‌மா விழ‌ணும்'னு ட‌ய‌லாக் விட‌ல‌, வில்ல‌னை சுத்தி எப்ப‌வும் நாலு பேர் நின்னுகிட்டு இல்ல‌, க‌தைக்கு ஒட்டாத‌ காமெடி ட்ராக் இல்ல‌ (ரொம்ப‌வும் ந‌ம்பிக்கையா எடுக்க‌ப்ப‌ட்ட‌ க‌ந்த‌சாமிக்கே வ‌டிவேலு தேவைப்ப‌ட்டார்), ஆபாச‌ம் இல்ல‌, இர‌ட்டை அர்த்த‌ வச‌ன‌ம் இல்ல‌, க்ளைமேக்ஸ்க்கு முன்னாடி ஒரு குத்து ஸாங் இல்ல‌, மார்க்கெட்ல‌ ச‌ண்டைக்காட்சி இல்ல‌, ப‌த்து டாடா சுமோக்க‌ள‌ பாம் வெச்சு வெடிக்க‌வெக்க‌ல‌....இப்ப‌டி ஏக‌ப்ப‌ட்ட‌ 'இல்ல‌'க‌ள் இருக்கு இந்த‌ ப‌ட‌த்துல‌.

ஹீரோயின் சிந்துவோட‌ ம‌ர‌ண‌த்துல‌ ச‌ந்தேக‌ம் இருக்க‌ற‌தால‌ அந்த‌ கேஸை எடுக்க‌றார் சிந்துவோட‌ முன்னாள் காத‌ல‌னும் இந்நாள் காவ‌ல்துறை அதிகாரியுமான‌ ஆதி. இதுக்கு மேல‌ நான் என்ன‌ சொன்னாலும் க‌தைய‌ கொஞ்ச‌மாவ‌து சொல்ல‌வேண்டியிருக்கும். அதுக்க‌ப்புற‌ம் ப‌ட‌ம் பாக்கும்போது சுவார‌ஸ்ய‌ம் கொஞ்ச‌ம் குறைஞ்சுடும், அத‌னால‌ இதோட‌ நிறுத்திக்க‌றேன். ஒருவேளை இந்த‌ ப‌ட‌த்த‌ உங்க‌ளால‌ இப்போ பாக்க‌முடிய‌ல‌ன்னா, டிவியில‌ போடும்போதாவ‌து பாருங்க‌, மிஸ் ப‌ண்ணிடாதீங்க‌.

ப‌ட‌த்தோட‌ பெரிய‌ ப்ளஸ்னு பாத்தா குழ‌ப்ப‌மில்லாத‌ திரைக்க‌தை & ஒளிப்ப‌திவு. வேற‌ சில‌ ப‌திவுக‌ள்ல‌ பாக்கும்போது "டார்க் வாட்ட‌ர்", "யாவ‌ரும் ந‌ல‌ம்" ப‌ட‌ங்க‌ள் இந்த‌ ப‌ட‌த்துக்கு லைட்டான‌ இன்ஸ்பிரேஷ‌ன்னு எழுதியிருந்தாங்க‌. அட‌ப்போங்க‌ப்பா! ர‌சிக்க‌ற‌ மாதிரி ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ரும்போது வ‌ர‌வேற்பீங்க‌ளா, அத‌விட்டுட்டு ச்சும்மா ஏதாவ‌து ஒண்ணு சொல்லிகிட்டு! உங்க‌ளையெல்லாம் "வி"ல‌ ஆர‌ம்பிக்க‌ற‌ மூணு எழுத்து ந‌டிக‌ர் ந‌டிச்ச‌ "வி"ல‌ ஆர‌ம்பிக்க‌ற‌ மூணு எழுத்து ப‌ட‌த்த‌ தொட‌ர்ந்து மூணு த‌ட‌வை பாக்க‌வெக்க‌ணும்....

Wednesday, July 29, 2009

ஆயிர‌த்தில் ஒருவ‌ன்


ஞாயிறு(26/07/2009) ம‌திய‌ம் ச‌ன் டிவியில‌ 'ஆயிர‌த்தில் ஒருவ‌ன்' இசை வெளியீட்டுவிழாவை பாத்துட்ருந்தேன். ஒரு வெப்சைட்ல‌ ஏற்க‌ன‌வே இந்த‌ ப‌ட‌த்தோட‌ பாட‌ல்க‌ளை கேட்டுட்டேன். அப்ப‌டி ஒண்ணும் சூப்ப‌ர்னு சொல்ல‌ முடியாது, ஒண்ணு ரெண்டு ந‌ல்லாயிருந்த‌து. அனேக‌மா விஷுவ‌லா பாத்தா ம‌த்த‌ பாட்டுலாம்கூட‌ புடிக்கும்னு நென‌க்குறேன்.

மேட்ட‌ருக்கு வ‌ர்றேன். இந்த‌ ப்ரோக்ராம்ல‌ பேசுன‌ பார்த்திப‌ன் மேடையில‌ இருந்த‌ எல்லோரையும்ப‌த்தி பேசிகிட்டே வ‌ந்தார். டைர‌க்ட‌ர் ஷ‌ங்க‌ர் ப‌த்தி சொல்லும்போது, "ஒருத்த‌ர் 150 கோடி குடுத்தா நான் 20 ப‌ட‌ம் எடுப்பேன், என்னைவிட‌ ஒரு ந‌ல்ல‌ டைர‌க்ட‌ர் 10 ப‌ட‌ம் எடுப்பார், அவ‌ர‌விட‌ பெட்ட‌ரான‌ டைர‌க்ட‌ர் 5 ப‌ட‌ம் எடுப்பார். ஆனா இவ‌ர்கிட்ட‌(ஷ‌ங்க‌ர்) 150 கோடி குடுத்தா ஒரு ப‌ட‌ம்தான் எடுக்க‌முடியும்னு சொல்லுவார்"னு சொன்னார்.

கேக்க‌ற‌துக்கு காமெடியா இருந்தாலும் என‌க்கென்ன‌வோ இது ஒரு ந‌ல்ல‌ க‌மெண்ட்னு தோண‌ல‌. அத்த‌னைபேர் ம‌த்தியில‌ ஒரு மேடையில‌ ஷ‌ங்க‌ர் மாதிரியான‌ ஒரு டைர‌க்ட‌ர‌ கிண்ட‌ல் ப‌ண்ற‌து - "என‌க்கென்ன‌மோ இது ச‌ரியாப‌ட‌லை". த‌மிழ் இல‌க்க‌ண‌த்துல‌ வ‌ஞ்ச‌ப்புக‌ழ்ச்சி அணின்னு ஒண்ணு இருக்கே, அத‌ யூஸ் ப‌ண்ணிட்டாரோ? ஷ‌ங்க‌ர் த‌ன்னோட‌ ஜென்டில்மேன், இந்திய‌ன், முத‌ல்வ‌ன், அந்நிய‌ன், சிவாஜின்னு ச‌மூக‌த்துக்கு ந‌ல்ல‌து ந‌ட‌க்குற‌ மாதிரிதான் ப‌ட‌ம் எடுக்குறார். விதிவில‌க்கு "பாய்ஸ்" (ஷ‌ங்க‌ர்-எழுத்தாள‌ர் சுஜாதா காம்பினேஷ‌ன்ல‌ வ‌ந்த‌ ஒரே ஒரு த‌ர‌மில்லாத‌ பட‌ம்). அந்நிய‌ன் ப‌ட‌த்த‌ நான் ச‌த்ய‌ம் தியேட்ட‌ர்ல‌தான் பாத்தேன். அந்த‌ தியேட்ட‌ர் குவாலிட்டியும், விறுவிறுன்னு போன‌ ப‌ட‌மும் என்னை அப்போ ஒரு முடிவெடுக்க‌வெச்சுது. இனிமே இந்த மாதிரி சூப்ப‌ர் பட‌ங்க‌ள‌ ஹைலெவ‌ல் தியேட்ட‌ர்க‌ள்ல‌தான் பாக்க‌ணும்னு முடிவுப‌ண்ணேன். "சிவாஜி" ரிலீஸான‌ மூணாவ‌து நாள் தேவியில‌தான் பாத்தேன்.

சே, சொல்ல‌வ‌ந்த‌த‌விட்டுட்டு எதெதையோ சொல்லிகிட்ருக்கேன். பார்த்திப‌ன் பேசுன‌துக்க‌ப்புற‌ம் ஷ‌ங்க‌ர் பேசுனார். "ஆயிர‌த்தில் ஒருவ‌ன்" ப‌ட‌த்தை ப‌த்தி சொல்லிட்டு "150 கோடி குடுத்தா ஒரு ப‌ட‌ம்தான் எடுப்பேன்னு சொன்னாங்க‌, ஆனா ப‌த்து ப‌ட‌த்த‌ பாத்த‌ திருப்தி அந்த‌ ஒரு ப‌ட‌த்துலேயே கிடைக்குற‌ மாதிரி எடுப்பேன்"னு சொன்னார் பாருங்க‌, இதுதான் ஹைலைட்டே! ஷ‌ங்க‌ர் கொஞ்ச‌ம் ஓவ‌ரா செல‌வு ப‌ண்ணிதான் எடுக்க‌றார், இல்லைனு சொல்ல‌ல‌. ஆனா அவ‌ரோட‌ ப‌ட‌ங்க‌ள‌ பாத்துட்டு வ‌ரும்போது "சே வேஸ்ட்டுடா"ன்னு ந‌ம‌க்கு தோணுதா? முத‌ல்வ‌ன் ப‌ட‌த்துல‌ வ‌ர்ற‌ அர்ஜுன்-ர‌குவ‌ர‌ன் இண்ட‌ர்வியூ சீன் இன்னைக்குகூட‌ ஏதாவ‌து ஒரு சேன‌ல்ல‌ போட்டா நான் க‌ண்டிப்பா சேன‌ல் மாத்த‌மாட்டேன்.

வித்தியாச‌ விரும்பி பார்த்திப‌ன் அவ‌ர்க‌ளே, க‌லாய்க்க‌ற‌துன்னா ஆள‌ பாத்து க‌லாய்ங்க‌. மைக் கிடைச்சுடுச்சுன்னு காமெடிங்க‌ற‌ பேர்ல‌ யாரையும் என்ன‌ வேணும்னாலும் சொல்ல‌லாம்னா, நான்கூட‌ ஒரு ஸ்டேஜ் ஏறி ரீச‌ன்டா நீங்க‌ எடுத்த‌/ந‌டிச்ச‌ பட‌ங்க‌ள‌ப‌த்தி சொல்ல‌லாம்.

அட்வைஸ் ப‌ண்ற‌ அள‌வுக்கு என‌க்கு அறிவோ த‌குதியோ கிடையாது. ஆனா பார்த்திப‌ன் பேசுன‌த‌ கேட்ட‌துக்க‌ப்புற‌ம் என‌க்கு தோணுன‌து என்ன‌ன்னா, ந‌ம‌க்கு புடிக்குதோ இல்லையோ மேடைன்னு வ‌ரும்போது அடுத்த‌வ‌ங்க‌ள விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ற‌துக்கு முன்னாடி ஒரு முறை யோசிச்சுபேசுற‌து ந‌ல்ல‌து.