Saturday, October 10, 2009

இங்கிட்டு இருந்து அங்கிட்டு


நைட் ஷிஃப்ட் ஒர்க் முடிச்சிட்டு நாம‌ளே(நான்தேன்!!) தூக்க‌ க‌ல‌க்க‌த்துல‌ போனா, ரோடு க்ராஸ் ப‌ண்ற‌துக்குள்ள‌, ஏதோ எதிரி நாட்டுக்குள்ள‌ நுழைய‌ற‌ மாதிரி பாத்து பாத்து போக‌வேண்டிய‌தாயிருக்குது. சிக்ன‌ல்ல‌ சிக‌ப்பா இருந்தா என்ன‌, ப‌ச்சையா இருந்தா என்ன‌, என் இஷ்ட‌த்துக்குதான் போவேன்னு ஒவ்வொரு வ‌ண்டியும் ப‌ற‌க்க‌ற‌ அழ‌க‌ பாக்க‌ணுமே. என்ன‌வோ இதுக்கு முன்னாடி இந்திய‌ன் ஏர்லைன்ஸ்ல‌ வேலை பாத்த‌ ரேஞ்சுக்கு, என்னா ஒரு வேக‌ம்!


க‌வ‌ர்ன்மெண்ட் ப‌ஸ், பிரைவேட் ப‌ஸ்னு இல்ல‌, டூவீல‌ர்ல‌ போற‌வ‌ங்க‌கூட‌ இப்ப‌டித்தான் போறாங்க‌. ஆட்டோ அண்ண‌ணுங்க‌ள‌ ப‌த்தி சொல்ல‌வே வேண்டிய‌தில்ல‌. த‌க‌வ‌ல் அறியும் உரிமை அடிப்ப‌டையில‌ ஒரு விவ‌ர‌த்த‌ கேக்க‌ணும். சென்னையில‌ ரோடு போட்ட‌போது, இந்த‌ ரோடுக‌ள‌ ஆட்டோ அண்ண‌ணுங்க‌ளுக்கே எழுதிவெச்சிட்டிருப்பாங்க‌ளோ??? இத‌ க‌ண்டிப்பா கேட்டு தெரிஞ்சிக்க‌ணும்.


ஏதோ அப்ப‌டி இப்ப‌டின்னு ந‌ம்ம‌ திற‌மையை முழுசா யூஸ் ப‌ண்ணி இந்த‌ பக்க‌த்துல‌ இருந்து, ந‌டுவுல‌ போய் நின்னுட்டோம்னு வைங்க‌, பாதி ச‌க்ஸ‌ஸ்தான். ஆனா இந்த‌ நேர‌த்துக்குள்ள‌, ந‌ம்ம‌ள‌ தாண்டி போன‌ வ‌ண்டிக‌ள்ள‌ ஒரு டிரைவ‌ராவ‌து ந‌ம்ம‌ளோட‌ குல‌ம், கோத்திர‌ம்லாம் கேக்காம‌லேயே ந‌ம‌க்கு அர்ச்ச‌னை ப‌ண்ணியிருப்பார், "ப‌ர‌தேசி, கொஞ்ச‌மாவ‌து உயிர்மேல‌ ப‌ய‌ம் இருக்குதா பாரு". இதோட‌ ஃப்ர்ஸ்ட் ஹாஃப் முடியுது.


இப்போ செக‌ண்ட் ஹாஃப். ச‌ரி நாம‌தான் ந‌டுவுல‌ வ‌ந்து நின்னுட்டோமே, க்ராஸ் ப‌ண்ணி ட‌க்ன்னு போயிட‌ முடியாது. ந‌ம்ம‌ ட‌க்கு அவ்ளோதான்! 'ச‌ச்சின்' விஜ‌ய் க‌ண‌க்கா ரைட் சைடுல‌ த‌லைய‌ மேல‌ திருப்பி சிக்ன‌ல பாத்தா, ஏதோ அஜித்க்கு ஃபேன் மாதிரி சிக்ன‌லும் 'ரெட்' காட்டிட்டிருக்கும். 'க‌ள‌த்துல‌ இற‌ங்குடா ம‌ச்சி'ன்னு ம‌ன‌சு சொல்லுற‌த‌ கேட்டு லெஃப்ட்ல பாக்காம‌ இற‌ங்குனோம்னு வெச்சுக்குங்க‌, அவ்ளோதான், அங்க‌ எம‌த‌ர்ம‌ன் லாரி டிரைவ‌ராக‌வோ, ப‌ஸ் டிரைவ‌ராகவோ கெட்ட‌ப் மாத்தி வ‌ந்துட்டிருப்பார். பாச‌க்க‌யிறுக்கு ப‌திலா ஸ்டீய‌ரிங்.


ஆனா நாம‌ யாரு? உண்மைய‌ சொன்னா லீவு கிடைக்காதுன்னு தெரிஞ்சு, வ‌ராத‌ வ‌யித்து வ‌லியும் வ‌ந்திருக்குன்னு சொல்லி ந‌ம்ம‌ டேமேஜ‌ருக்கே 'திருநெல்வேலி' மேட்ட‌ர் குடுக்க‌ற‌வ‌ங்க‌ளாச்சே. ஸோ, உஷாரா தூர‌ வ‌ண்டிங்க‌ வ‌ரும்போதே க்ராஸ் ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிட‌வேண்டிய‌து. ஆனா ந‌டுவுல‌ நின்னு பாக்கும்போது தூர‌ வ‌ந்த‌ வ‌ண்டி நாம இற‌ங்கி ந‌ட‌க்க‌ ஆர‌ம்பிச்சிருக்கும்போது கிட்ட‌ வ‌ந்திருக்கும். ச‌டார்ர்ர்ர்ர்னு ப்ரேக் போட்டு நிறுத்துவார், டிரைவ‌ர். அங்க‌ சிக்ன‌ல்ல‌ 'ரெட்' இருந்தாலும் ஏதோ நம்மாலதான் வ‌ண்டிய‌ நிறுத்த‌வேண்டிய‌தாபோச்சுங்க‌ற‌ அள‌வுக்கு ஃபீல் ப‌ண்ணி ந‌ம்ம‌ள‌ பாத்து லிப் மூவ்மெண்ட் குடுப்பார். அத‌ உத்து க‌வ‌னிச்சா தெரியும், அது என்ன‌ன்னா "ப‌ன்னாட‌ கால‌ங்காத்தாலேயே தூங்கி வ‌ழிஞ்சுக்குன்னு போது பார்", ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌வ‌ர்கிட்ட‌ ட‌ய‌லாக் க‌ன்டினியூ ஆகும் "இதெல்லாம் ஒழுங்கா வூடு போய் சேரும்ன்ட்ற‌?"


ஆனா இந்த‌ ட‌ய‌லாக், ரியாக்ஷ‌ன் எல்லாம் ஒன்லி ப‌ச‌ங்க‌கிட்ட‌தான். அதுவே லேடீஸா இருந்தா "ஏம்மா (வாய்ஸ் டோன் ரொம்ப‌வே குறைஞ்சு இருக்கும்), பாத்து போக்கூடாதா, இன்னாமா நீய்ய்". ஹும்ம்ம்ம்ம்......என்ன‌த்த‌ சொல்ல‌....எதுக்கு இதையெல்லாம் எழுதிட்டிருக்கேன்? அட‌, யாருமே ப‌டிக்காம‌ இருந்தாலும், ப‌திவு போட‌ணும்னு க‌ட‌மை ஒண்ணு இருக்குல்லே...விவேக்தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ர்றார் "யாருமே இல்லாத‌ க‌டையில‌ யாருக்குடா....." ஹி...ஹி...


3 comments:

  1. மிஸ்டர் குறும்பன்,

    உங்க cross-culture புலம்பல் சாதாரண புலம்பல் இல்ல... இது ஒரு மெஞ்ஞான புலம்பல்

    ஹரீஷ் நாராயண்

    ReplyDelete
  2. வெல்க‌ம் Director!!! என்ன‌டா ரொம்ப‌ நாளா காணோமேன்னு பாத்துட்டிருந்தேன், அடிக்க‌டி வாங்க‌:)

    ReplyDelete
  3. enga la mathri youth vandi otratha (1st para)
    kindal pandratha vanmaya kandikrom

    coz vandya erkanave pala eduthula vitu odachi irupom so breakla pidika mudyathu neenga than pathu poganum okkkkkkkkkkk

    ReplyDelete