Thursday, October 15, 2009
ஸ்ஸ்ஸ்ஸ்....ஒரே டென்ஸனப்பா!!!
போன சன்டே ஒரு பேக்கரிக்கு போய் ரெண்டு பப்ஸை உள்ளே தள்ளிட்டு வரும்போது வீட்டுக்கு வாங்கிட்டு போகலாம்னு ஒரு மிரிண்டா ஹாஃப் லிட்டர் பாட்டில் கேட்டேன். 25 ரூபாய்னு சொன்னாங்க. ரொம்ப நாளாவே தூங்கிட்டிருந்த மூளை திடீர்னு எழுந்திடுச்சு. பாட்டில் வாங்கி எம்ஆர்பி பாத்தா 20 ரூபாய்னு போட்டிருந்தது.
"என்னங்க, இதுல 20தான் போட்டிருக்கு, 25 சொல்றீங்களே"ன்னு கேட்டா, "25தான் சார்"னு ரொம்பவே அலட்சியமா பதில் வருது. எனக்கு வேணாம்னு திருப்பி குடுத்துட்டேன். 5 ரூபா சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனா இந்த மாதிரி தப்பு செய்ய அவங்கள தூண்டுறதே நாமதான். ஒரு பத்து பேர் இல்ல இருபது பேர், இதே காரணத்த சொல்லி வாங்காம இருந்தா, அவங்க தானா 20 ரூபாய்க்கு குடுப்பாங்க. ஆனா நாம வறட்டு கவுரவம் பாத்து 5 ரூபாதானேன்னு கம்முன்னு வாங்கிட்டு போய்ட்டா அவங்க இதே தப்பைதான் செய்வாங்க. அவசியம்னா 1000 ரூபாய் செலவு பண்ணலாம், அனாவசியமா 1 ரூபாய் கூட செலவு பண்ணகூடாது (வுட்டாண்டா பஞ்ச் டயலாக்!).
5 ரூபாய் எக்ஸ்ட்ராவா வாங்குறதுலாம் தப்பான்னு கேக்குறவங்களுக்கு, அந்நியன் படத்துல வர்ற ஒரு டயலாக்கை ஞாபகப்படுத்த விரும்பறேன் "தப்பு என்ன பனியன் சைஸா? ஸ்மால், மீடியம், லார்ஜ்ன்னு இருக்கறதுக்கு?"
இது அந்த பேக்கரில மட்டுமில்ல, எவ்ளவோ பேர் தினமும் வந்து போற கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுலயும் இப்படிதான் எம்ஆர்பிய விட அதிகமா வெச்சு விக்கறாங்க. அங்க வாடகை அதிகம்னா ஏன் கடை போடுறீங்க? எப்படியும் இந்த மிடிள் கிளாஸ் கேனை பயலுக வந்து வாங்குவாங்கன்னுதானே?
இது எல்லாருக்கும் நடக்குதா, இல்ல எனக்கு மட்டுமா? எப்படி கண்டுபுடிக்கறாங்கன்னு தெரியல, ஒருவேளை இ.வா.ன்னு நெத்தியில ப்ரிண்ட் ஆகுதோ????
Labels:
என்னமோ போங்க
Subscribe to:
Post Comments (Atom)
இது மாதிரி M.R.P க்கு அதிகமா விக்குறதை எதிர்த்து டெல்லில ஒருத்தர் வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கிட்டாரு. ஆனாலும் இவங்க திருந்துற மாதிரி தெரியல.
ReplyDelete//இது மாதிரி M.R.P க்கு அதிகமா விக்குறதை எதிர்த்து டெல்லில ஒருத்தர் வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கிட்டாரு. ஆனாலும் இவங்க திருந்துற மாதிரி தெரியல//
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி விக்கி!
எனக்கு தெரிஞ்ச ஒரே வழி, இந்த மாதிரி விலையை அதிகமா விக்கறவங்ககிட்ட வாங்காம இருக்கறதுதான். அங்கருந்து போனப்புறம் "மோர்" சூப்பர் மார்க்கெட்ல அதே மிரிண்டாவ வாங்கினப்போ 20 ரூபாய்தான் பில் போட்டாங்க.
இவங்க இப்படி இருந்துகிட்டு அப்புறம் "ரிலையன்ஸ்" எங்க வாயில அடிக்கறாங்க, வயித்துல அடிக்கறாங்கன்னு கத்துறதெல்லாம் டூ மச்!
emaravanga iruka varai emathuravungalum irupanga
ReplyDelete